Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இரு விழி காதல் பேச

இரு விழி காதல் பேச 03

இரு விழி காதல் பேச -03

Episode 03



Advertisement

நிறைமதி மிகுந்த பதட்டத்துடன் கைகளை பிசைந்தபடி நின்றிருந்தாள். அவள் எதிரே இளம்பரிதி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இவள் அவனை ஏறெடுத்தும் பாராமல் தலை குனிந்த படி நின்றாள் ஆனால் அவனது பார்வையை அவளால் உணர முடிந்தது.

” ஸோ‌.. மிஸ்.நிறைமதி… இன்னும் எவ்வளவு நேரம் நாம இப்படி நிக்க?? நான் உங்க கூட பேசலாம்னு வந்தேன்… ஆனால் உங்களுக்கு பேச கூட விருப்பம் இல்ல போல… ஓகே அப்ப நாங்க கிளம்பிறது நல்லது…..”

Advertisement

Advertisement

“ஐயோ! இல்ல அப்படிலாம் இல்லங்க… பிளீஸ் நில்லுங்க….”

” ஹேய் ரிலாக்ஸ் … ஏன் இவ்வளவு பதட்டம்?? உங்களுக்கு விருப்பம் இல்லை போலன்னு தான் நினைச்சேன்..”

Advertisement

” அப்படிலாம் இல்லங்க… நாம் பேசலாம்… ஏதோ ஒரு யோசனை… இப்போ பேசலாம்…”

“ஹ்ம்ம்… ஓகே…. நிறைமதி உங்களுக்கு கண்டிப்பா என் மேல் நல்ல எண்ணம் இருக்காதுனு தெரியும்…… வெயிட் பண்ணுங்க நான் பேசி முடிச்சிடுறேன்… ஏன் சொல்கிறேன்னா பொண்டாட்டி இறந்த இரண்டு மாதத்திலே அடுத்த கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டேன்…ஆனால் எனக்கு ஒரு காரணம் இருக்கும்னு மத்தவங்க புரிஞ்சுக்க மாட்டாங்க… நீங்க மட்டுமாவது புரிஞ்சுக்கனும்…  சரியா?”

“ஹ்ம்ம்.. சொல்லுங்க “

” என் பொண்ணு பவமொழி பாத்தீங்களா அவளுக்காக தான்… என்னடா இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிற எல்லோரும் சொல்லும் காரணத்தை தான் நானும் சொல்கிறேனு நினைக்கிலாம்… பலர் இப்போ சிங்கிள் பேரண்டஸ்சா பிள்ளைய வளர்கிறாங்க…ஆனா எனக்கு என் மகளுக்கு எல்லா உறவுகளும் வேண்டும். முக்கியமாக அம்மா அப்படின்ற உறவு கண்டிப்பா வேணும். தாய் இல்லாம தகப்பன்ட்ட வளர்ந்து நல்லபடியா வாழ்ந்த பல பேர் இருக்காங்க. ஆனால் எனக்கு என் பிள்ளைய தனியா வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை இல்ல… என்னோட அம்மா அப்பா இருக்காங்க.. ஆனால் வாழ்க்கை நிலையானது இல்லை தானே… ஏன் எனக்கு கூட நாளைக்கே ஏதும் ஆச்சுன்னா?? என் பிள்ளைக்கு யார் இருப்பா?? அதுக்காக தான் இந்த கல்யாணம்.. இப்போவே பண்ணனும் அவசியம்னு கேட்டா.. பாப்பாக்கு விவரம் பரியுரத்துக்கு முன்பே நீங்க அவ வாழ்க்கையில வந்துட்டா எந்த பிரச்சனையும் வராது இல்லையா…. இப்போ சொல்லுங்க என் மகளுக்கு அம்மா வா வர சம்மதமா?? நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க..” 

‘இவரு ரொம்ப குழப்பமான மனநிலையில இருக்காரு போல.. ஒருவேளை மனைவி இறந்தது இவர் மனதளவில் காயப்படுத்திருக்கம்.. அதனால தான் தனக்கு மனைவி தேடாம தன் மகளுக்கு அம்மாவ தேடறாங்க.. அந்த பாப்பா பாவம் இப்பவே அம்மா இல்லாம இருக்கா.. நாம் இன்னும் அம்மாட்ட கொஞ்சி அடம் பண்றோம்.. இதெல்லாம் அந்த பாப்பா மிஸ் பண்ணாம இருக்கனும்… அதுவுமில்லாம என்னால் வாழ்க்கையில ஒருதற்க்கு மனைவியா வாழ்றது கஷ்டம்… இதோ என் பிள்ளைக்கும் அப்பா வேணும்… கண்டிப்பா இவர் என் பிள்ளைக்கும் நல்ல அப்பாவா இருப்பாரு.. ஆனால் சம்மதம் சொல்லறத்துக்கு முன்ன என்னைப்பற்றி பிள்ளையைபற்றி எல்லாம் சொல்லிடனும்’ என்று மனதில் யோசித்தபடியே நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். இவள் யோசிக்கட்டும் என்று சற்று தள்ளி நின்று அலைபேசியில் பார்வை பதித்தவாறு நின்றுருந்தான் இளம்பரிதி. 

நிறைமதி அவனை நோக்கி வந்தாள். 

“என்ன நிறைமதி யோசிச்சு முடிச்சுடிங்களா? இல்ல இன்னும் டைம் எடுத்து நாளைக்கு சொல்லுறது ஆனாலும் சரி.நான் நம்ம பேரண்ட்ஸ்ட்ட பேசிக்கிறேன்”

“இல்ல நான் யோசித்தேன்… எனக்கு பழமொழி பாப்பாக்கு அம்மா வா வர சம்மதம்”

” ரொம்ப நன்றி நிறைமதி… என்னை தப்பா நினைக்காம பரிஞ்சுகிட்டீங்க.. ரொம்ப நன்றி “

“எனக்கும் உங்க கிட்ட ஒன்னு கேட்கனும்..”

” சொல்லுங்க நிறைமதி “

” உங்களுக்கு தெரியும் இல்ல நான் இப்போ மூன்று மாதம்…. என் பிள்ளைக்கு நீங்க அப்பாவாக இருப்பீர்களா??”

“கண்டிப்பாக நிறைமதி… எனக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்… என் மகளுக்கு அம்மா மட்டும் இல்ல தம்பியோ தங்கையோ சேர்ந்து கிடைச்சா எனக்கு சந்தோஷம் தான்… நானும் இரண்டு பிள்ளைகளுக்கும் நல்ல அப்பாவா இருப்பேன்.. ஐ பிராமிஸ்” 

மனம் நெகிழ்ந்து கண்களில் நீர் துளிர்க்க நின்றாள் நிறைமதி. பின்னர் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு குரலை செறுமி கொண்டாள்.

“எனக்கு இன்னும் சில விஷயங்கள் சொல்லனும்… இது எனக்கு முதல் திருமணம்…. ஆனால் எனக்கு இந்த குழந்தை எப்படின்னா…” 

அதற்கு மேல் பேச முடியாது அவளுக்கு தொண்டையடைத்து கண்ணீர் வழிந்தது.

” நிறைமதி பிளீஸ்… அழாதீங்க…. நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்”

அவள் குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.

” ஆமாம் நிறைமதி எதுவும் சொல்ல வேண்டாம்… நான் உங்கள தப்பா நினைக்க மாட்டேன்… உங்களுக்கு எப்போ என் மேல் முழுமையாக நம்பிக்கை வருதோ… நம்மள இவன் ஐட்ஜ் பண்ண மாட்டான் அப்படினு தோணுதோ அப்போ சொல்லுங்க…சரியா??” 

“ஹ்ம்ம் “

“சரி உங்க நம்பர் சொல்லுங்க சேவ் பண்ணிக்கிறன்” 

 

அவள் எண்ணை சொல்ல அலைபேசியில் பதிந்து அவளுக்கு அழைத்தான்.

” இது என் நம்பர்.சேவ் செஞ்சுக்கோங்க.. இப்போ போகலாமா??”

“ஹ்ம்ம் போகலாம் “

***************************************

” என்ன பரிதி பேசியாச்சா??”

“ஹ்ம்ம் பேசியாச்சு பா.. நீங்க தேதி முடிவு பண்ணுங்க…”

பெற்றோர் நால்வரும் மகிழ்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

” ரொம்ப சந்தோஷம் பரிதி….. நாங்க வரும் போது நாள் பார்த்து மூன்று தேதி முடிவு பண்ணி எடுத்து வந்தோம் …. நீங்க இதுல ஒன்றை முடிவு பண்ணுங்க சம்மந்தி..” என்று மணிமாறன் சுந்தரிடம் ஒரு காகிதத்தை கொடுத்தார். சுந்தரும் அதை வாங்கி தன் குடும்பத்தாரிடம் கலந்து பேசினார்.

” எங்களுக்கு இருபதாம் தேதி சரி வரும்னு தோனுது…. “

“அப்ப சரி அதையே முடிவு பண்ணிடுவோம்… என்ன கோமு சரிதான்?” 

“சரிதான்ங்க கல்யாணம் எங்க வச்சிக்கலாம்?? மண்டபம் கிடைக்குமா?? பதினைந்து நாள் தான் இருக்கு”

” சம்மந்தி நான் ஒன்னு சொல்லலாமா??” விஜயா கோமளவள்ளி யின் பேச்சிற்க்கு இடையில் கேட்டார்.

” அட சொல்லுங்க… என்ன விஷயம்…”

” அது கல்யாணம் சிம்பிளா கோவிலில் வச்சிகளாமா?? மதிக்கு இப்போ தான் உடம்பு கொஞ்சம் பரவாயில்லை… இப்போ மண்டபத்தில் வச்சோம்னா சொந்த பந்தம் எல்லாம் வருவாங்க… அக்கறை காட்டுறேன் என்ற பேர்ல் பிள்ளைகள் வார்த்தைகளால காயப்படுத்துவாங்க…. அதுக்கு கோவிலில் வச்சிட்டோம்னா உண்மையான அக்கறை உள்ள சிலர் மட்டுமே அழைச்சுகளாம்… அவங்க மனசாற வாழ்த்தினா போதும்” என்று கண்ணீரை துடைத்து கொண்டார் விஜயா.

” நீ சொல்றது சரிதான் மா… கோவிலில் வச்சிகளாம்… நான் கோயில் நிர்வாகத்துட்ட பேசி உங்களுக்கு முகூர்த்தம் எப்போ வரும்னு சொல்றேன்… மத்தபடி புடவை துணிமணிகள் என்னைக்கு வாங்கலாம் எல்லாம் வீட்ல கலந்து பேசி ஃபோன் பண்றோம் இப்போ கிளம்பறோம்”  என்று கூறி எழுந்தார் மணிமாறன். அவரைத் தொடர்ந்து அனைவரும் விடைப் பெற்றுக்கொண்டனர்.

இளம்பரிதி தூங்கும் மகளை தோளில் சுமந்தவாரு அனைவரிடம் சொல்லிக் கொண்டு நிறைமதியிடம் ஒற்றை தலையசைப்புடன் விடைப் பெற்றான்

-பேசும்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!