Skip to content
Post Views: 1,623
இரு விழி காதல் பேச
Episode 04
Advertisement
“மதி.. நீ இங்க உட்கார்ந்திரு அம்மா போய் இந்த மாத்திரைலாம் வாங்கி வந்திடுறேன்”
“சரி மா “
Advertisement
Advertisement
நேற்று முதல் சற்று மயக்கம் அதிகமாகியாதால் இன்று காலை நிறைமதியும் விஜயாவும் மருத்துவரை காண வந்திருந்தனர். மருத்துவர் ரத்தழுத்தம் சற்று கூடியிருப்பதாக கடிந்து கொண்டு மாத்திரை எழுதி கொடுத்திருக்க அதை வாங்க விஜயா மருந்தகம் நோக்கிச் செல்ல நிறைமதி அங்குள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
“ஹாய் நிறைமதி ! எப்படி இருக்கறீங்க? என்ன ரெகுலர் செக்கப்பா? “
Advertisement
என்ற குரலைக் கேட்டு நிமிர்ந்தாள் நிறைமதி. அங்கே இளம்பரிதி பவமொழியை தூக்கிக் கொண்டு நின்றிருந்தான். நிறைமதி சட்டென்று எழுந்து கொண்டாள்.
“நான் நல்லாருக்கேன். சும்மா செக்கப்க்கு தான் வந்ததேன். நீங்க? பாப்பாக்கு உடம்பு முடியலையா?”
சற்று பதட்டத்துடன் கேட்டாள் நிறைமதி.
“இல்ல … பவிக்குட்டி நல்லா இருக்கா… தடுப்பூசி போட வந்தோம். அங்க ரொம்ப கூட்டமா இருக்கவும் அழுதா அதான் அப்படியே ஒரு வாக் வந்தேன்… இங்க நீங்க இருந்தீங்க..”
நிறைமதி இப்போது தயக்கத்துடன் அவனை நோக்கி கையை நீட்டினாள்.
“பாப்பாவ நான் தூக்கலாமா?”
“கண்டிப்பா.. இதோ பிடிங்க”
ஒரு பூங்கொத்தை கையில் ஏந்துவது போல் மிக மென்மையாக குழந்தை பவமொழியை தன் கைகளில் வாங்கி மார்போடு அணைத்துக்கொண்டாள். நிறைமதி வெகு நாட்களுக்கு பிறகு குழந்தையை பார்த்து மனதாற புன்னகைத்தாள். மீண்டும் இருக்கையில் அமர்ந்து பவியை தன் மடியில் வைத்துக் கொண்டாள்.
” பாப்பா ரொம்ப அழகா இருக்கா!! அன்னைக்கு என்னால சரியா பாக்க முடியல… நீங்க வீட்டுக்கு போன பின்னே நினைச்சேன்… பாப்பாவ பாக்கலயேனு … இன்னைக்கு இது சர்ப்ரைஸ்தான். எனக்கு குட்டி பேபிஸ்னா ரொம்ப பிடிக்கும் தெரியுமா? “
என்று கேட்டு பதிலை எதிர்பாராமல் மடியில் இருந்த பிள்ளையிடம் மெதுவாக பேசினாள். பிள்ளையும் தன் மழலை மொழியில் தன் தாயாக போகும் நிறைமதிக்கு பதில் சொல்வது போல் அவளைப் பார்த்து சிரித்து சப்தமெழுப்பியது. இளம்பரிதி இவர்கள் இருவரையும் முகத்தில் மிக மெல்லிய புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தான்.
*****************************
” என்ன பரிதி நீ வந்தா நல்லாருக்கும்னு சொல்றேன் … வர மாட்டேனு சொல்றியே?”
” அம்மா!!! புடவை வாங்க நான் எதுக்கு மா? அதோட எனக்கு காலேஜ்ல முக்கியமான கிளாஸ் இருக்கு மா… செமஸ்டர் வரத்துக்குள்ள நான் சிலபஸ் முடிக்க வேண்டாமா?”
புரிந்து கொள்ளாமல் பேசுகிறாரே என்று சற்று ஆதங்கத்துடன் தன் தாயை பாரத்தான் இளம்பரிதி.
” கோமு விடு பரிதி காலேஜ் போகட்டும்… அதான் ரஞ்சனி வரன்னு சொன்னாளே அப்பறம் என்ன?. பரிதி நீ சாப்பிட்டு கிளம்புப்பா… கோமு டிபன் எடுத்து வை…”
மணிமாறனும் இளம்பரிதியும் சாப்பிட அமர்ந்தனர். அவர்களுக்கு பரிமாறிவிட்டு தனக்கும் பரமாறிக் கொண்டு சாப்பிட அமர்ந்தார் கோமளவள்ளி.
” நம்ம கடைக்கு போகிற வழியில் தான் நிறைமதி வீடும் இருக்கு… அதனால ரஞ்சனி வந்ததும் நாங்க கிளம்பி நிறைமதி வீட்டுக்கு போய் அவங்கள அழைச்சுட்டு நம்ம கார்லே கடைக்கு போய்டு வந்துடலாங்க”
” சரி கோமு”
” இல்ல பா வேண்டாம்…. தனி தனி கார்லயே போங்க… ஒரே கார் வேண்டாம்”
” இல்ல பரிதி… அவங்க வீட்டுக்கும் பக்கம் தான் கடை… அதான் எதுக்கு தனி தனியா?”
“மா…. நான் சொல்றேல்ல… தனி தனியா போங்க அவ்வளவுதான். நான் கிளம்புறேன். பவிக்குட்டிய பாத்துக்குங்க”
என்று பாதிச் சாப்பாட்டிலே எழுந்து கை கழுவி தன் இருச்சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு புறப்பட்டான் இளம்பரிதி.
“என்னங்க இவன் இன்னும் இப்படி இருக்கான்?” என்று வருந்தினார் கோமளவள்ளி.
“கோமு… நாம அவன எல்லா விஷயத்திலும் நெருக்க கூடாது… அவனுக்கான நேரத்தை குடுக்கனும். அவனா மனசுல ஏதோ முடிவடுத்து இவ்வுளவு சீக்கரம் இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்கான். கல்யாணம் முடிஞ்சா கொஞ்சம் கொஞ்சமா மாறுவான். அதுவரை அவன் போக்குல விடு…”
“ஹம்ம் நீங்க சொல்றதும் சரிதாங்க…. சரி நீங்க சாப்பிடுங்க நாம கிளம்புவோம்…”
***************************************
” வாங்க சம்மந்தி வாங்க… “
” விஜீ!! சம்மந்தி வந்துட்டாங்க பாரு… மதி இங்கவாம்மா.”
” வாங்க அண்ணா ! வாங்க அண்ணி! வாம்மா ரஞ்சனி! “
“ஹிம்ம் தயாரா இருக்கிங்க போல சம்பந்தி… அப்ப கிளம்பலாமா? எங்க நிறைமதி?”
” வாங்க அத்தை! வாங்க மாமா ! வாங்க அண்ணி !”
“என்னமா மதி தயாராகலயா இன்னும் ?”
” அதுங்க அண்ணி மதிக்கு ரொம்ப நேரம் கடையில உட்கார முடியாதுன்னு வரலன்னு சொல்றா…. பரவால்ல சீக்கரம் வந்துடலானு சொல்லிருக்கேன் இதோ கிளம்பிடுவா… மதி சீக்கிரம்…”
நிறைமதி அதிருப்தியுடன் தன் தாயின் முகத்தை பார்த்து பின் தலையாட்டினாள்.
” அண்ணி நில்லுங்க! அத்தை அண்ணிக்கு முடியலனா வீட்டுல இருக்கட்டுமே! ஆனா தனியா இருப்பாங்களா?”
” அதெல்லாம் இருப்பா மா… பையனுக்கும் மருமகளுக்கும் லீவ் எடுக்க முடியல அதான் நாங்க மட்டும் தயாரா இருக்கோம். இவளும் வரமாட்றா…”
” பரவாயில்ல விடுங்க அத்தை… பவிக்குட்டிக்கும் கடையில ரொம்ப நேரம் இருக்க முடியாது அழ ஆரம்பிச்சுடுவா… நீங்க வீட்ல அவள தனியா பாத்துக்குவீங்களா அண்ணி? நாங்க கடைக்கு போய்ட்டு வந்துடுறோம்?”
” ஓ!! பாத்துக்கலாமே! நீங்க பாப்பாவ குடுங்க நான் பத்திரமா பாத்துப்பேன்.”
” பின்ன என்ன மா ? நாம கிளம்பலாம்… அண்ணியும் பவிக்குட்டியும் பழகிக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்”
” அதுவும் சரிதான் ரஞ்சனி! நம்ம கிளம்பலாம்…. பவியோட பேக் எங்க எடுத்து நிறைமதிட்ட குடு”
“இதோ! அண்ணி இந்தாங்க இதுல பவிக்கு சிப்பர், பால் பவுடர், வெந்நீர் எல்லாம் இருக்கு… வரப்போ பால் குடுத்தோம் ஒரு ஒரு மணி நேரம் கழித்து பால் கலந்து குடுங்க… டையப்பர் , டிரஸ் எல்லாம் இருக்கு பார்த்துகுங்க”
” சரிங்க அண்ணி நான் பார்த்துக்றேன். நீங்க கிளம்புங்க…”
“சரி மதி! கதவ சாத்திக்கோ… பிள்ளைய பத்திரமா பார்த்துக்கோ…. ஏதும் முக்கியமா தேவைப்பட்டா ஃபோன் பண்ணு… நாங்க வரோம்”
” சரி மா ! போய்ட்டு வாங்க “
***************************************
” செல்லக்குட்டி!! நான் யாருன்னு தெரியுதா பவிக்குட்டிக்கு? அழகா சிரிக்கிறீங்க நீங்க… இன்னும் கொஞ்ச நாள் தான்… அப்புறம் அம்மா எப்பவும் உன் கூடதான் இருப்பேன் சரியா? நம்ம ஜாலியா விளையாடலாம்… பாட்டு பாடலாம் ஹம்ம்”
பாலை ஆற்றியபடி கட்டிலில் படுத்திருந்த குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்தாள் நிறைமதி.
” அச்சோ குட்டிமாக்கு தூக்கம் வந்துடுச்சா? இதோ பால் குடிச்சுட்டு தூங்குங்க… “
பவமொழியை மடியில் கிடத்தி சிப்பரில் உள்ள பாலை புகட்டினாள். அதுவும் கண்களை தன் தாயாகிறவளை நோக்கி உருட்டியபடி பாலை பருகியது.
பால் குடித்ததும் பவியை தோளில் போட்டு தட்டி குடுத்து ஏப்பம் வர வைத்தாள். பின் கட்டிலில் கிடத்தி விட்டு நிறைமதி குழந்தையிடம் பேச்சுக் கொடுத்தவாறே அறையிலுள்ள வாஷ்பேசினில் சிப்பரைக் கழுவினாள்.
அதற்குள் குழந்தை தூக்கத்திற்கு சிணுங்க ஆரம்பித்தாள்.
” குட்டிம்மா…. இதோ அம்மா வந்துட்டேன்… தூக்கம் வந்துடுச்சா? அம்மா பாட்டு பாடட்டுமா? சமத்தா தூங்கிடுவிங்களா?”
என்றவாறு பவமொழியை கையில் ஏந்திக்கொண்டாள் பின் தன் தோளில் சாய்த்துக் கொண்டு அந்த அறையில் நடந்தவாறு பாட ஆரம்பித்தாள்.
“ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு…
மண்டலத்தை காட்டியதில்…
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ…
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன்
தூங்குகின்றான் தாலேலோ “
பின் தூங்கிய பிள்ளையை கட்டிலில் கிடத்தி அதன் அருகில் படுத்து நெடுநாளைக்கு பிறகு நிம்மதியான உறக்கத்தை தழுவினாள் நிறைமதி.
அன்று மாலைவரை நிறைமதி பவமொழியுடன் தன் நேரத்தை போக்கினாள். பின் கடைக்கு சென்றவர்கள் திரும்பிய பின் மனதே இல்லாமல் குழந்தைக்கு விடை கொடுத்தாள்.
***********************************
” அழாதிங்கடா பவிக்குட்டி!! அப்பா இங்க தான் இருக்கேன் தூங்குங்க…”
உறங்காமல் சிணுங்கிக் கொண்டேயிருக்கும் மகளை தோளில் போட்டவாறு அறைக்குள் நடைபயின்றான் இளம்பரிதி.
தன் அறைக்கு செல்லும் வழியில் இளம்பரிதயின் அறையில் விளக்கு எரிவதைப் பார்த்து அங்கு வந்தார் கோமளவள்ளி.
” என்ன பரிதி? பவி தூங்கலயா?”
“ஆமாம் மா.. ஏன் இன்னைக்கு ரொம்ப அலைச்சலோ கடைக்கு போகறப்போ? பிள்ளைக்கு உடம்பு வலியா இருக்குமோ?”
” இல்லையே பரிதி… பவி கடைக்கே வரல… நிறைமதி கூட வீட்ல தான் இருந்தா… நாங்க கடைக்கு போய்ட்டு வரப்போ கூட நல்லா தூங்கிட்டுருந்தாளே பவி!!”
” ஓ!!! அங்க தூங்கிட்டு தான் குட்டிக்கு இங்க தூக்கம் வரலயா?. சரிமா… நான் பார்த்துக்கிறேன். நீங்க போய் தூங்குங்க”
“சரிப்பா”
கதைவை சாற்றிவிட்டு அறைக்குள் இரவு விளக்கை ஒளிரவிட்டான். குழந்தையை தோளில் சுமந்தவாரு நடக்க ஆரம்பித்தான்.
” பவிக்குட்டி இன்னைக்கு அம்மாட்ட இருந்ததுனால அப்பாட்ட தூக்கம் வரலயோ? என்ன பண்ணலாம் அம்மாட்ட பேசலாமா?”
என்றவாறு அலைபேசியை எடுத்து நிறைமதிக்கு அழைத்தான்.
” ஹலோ… என்ன இந்த நேரத்தில ஃபோன் ? பாப்பா நல்லாருக்கால்ல?”
” ஹேய் நிறைமதி ரிலாக்ஸ்… ஒன்னுமில்ல…. பவி சிணுங்கிட்டே இருக்கா… இன்னைக்கு ஃபுல்லா உன்ட்ட இருந்தாளா… உன்ன தேடறா போல… அதான் உன் குரல் கேட்டா தூங்குவானு பண்ணுனேன்”
” ஹோ சரிங்க…இன்னைக்கு பாப்பா தூங்க பாட்டு பாடினேன் … இப்போ பாடட்டுமா? அவ தூங்க வாய்ப்பு இருக்கு”
” ஓகே நிறைமதி!! ஒரு நிமிஷம் …. பவிக்குட்டி இதோ அம்மா பாட போறாங்க… கேட்டுட்டே சமத்தா தூங்குவியாம் சரியா?”
என்றாவாறு பிள்ளையை கட்டிலில் படுக்க வைத்து அவள் பக்கத்தில் படுத்துக் கொண்டு அலைபேசியை தன் மகளும் கேட்க்குமாறு வைத்தான்.
“ஆல் செட் நிறைமதி …. இப்போ நீ பாடலாம்”
அவன் கூறிய பிறகுதான் பரிதியும் தன் பாடலை கேட்பான் என்பதை உணர்ந்து சில நொடிகள் அமைதியாய் இருந்தாள்.
” நிறைமதி!!!! லைன்ல இருக்கியா?”
” ஹம்ம் இதோ பாடுறேன்..”
“ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு…
மண்டலத்தை காட்டியதில்…
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ…
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…”
பவமொழியோடு சேர்ந்து அவளது தந்தையும் நிறைமதியின் பாடலில் மயங்கி உறங்கிவிட்டனர். இருவரிடமும் எந்த சத்தமும் வராதால் அவர்கள் உறங்கியதை உணர்ந்து தன் அலைபேசியை அனைத்து மெல்லிய புன்னகையுடன் தானும் உறங்கினாள் நிறைமதி
– பேசும்-
error: Content is protected !!