Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இரு விழி காதல் பேச

இரு விழி காதல் பேச 08

இரு விழி காதல் பேச 08

“நிறைமதி!! ஆர் யூ ஓகே??”



Advertisement

மருத்துவமனையில் ஜானகியின் பேச்சிற்க்கு பதில் ஏதும் பேசாமல் அமைதியாக வந்து காரில் ஏறி இறுக்கமான முகத்துடன் உட்கார்ந்திருக்கும் நிறைமதியை பார்த்து கேட்டான் இளம்பரிதி.

Advertisement

“ஐ அம் ஒகே! நாம வீட்டுக்கு போகலாமா?”

Advertisement

“ஹ்ம்ம் போகலாம்…. ” என்று காரை கிளப்பினான் இளம்பரிதி. சற்று முன் ஜானகி பேசியதைக் கேட்டு மனதுக்குள் வருத்திக் கொண்டிருந்தாள் நிறைமதி. 

*********************************************

Advertisement

“அடிப்பாவி…. என் புள்ளய ஏமாத்தினதுமில்லாம அவன் செத்து அந்த ஈரம் காயும் முன்னே அடுத்தவன புடுச்சதுமில்லாம இப்படி வெக்கமில்லாம சிரிச்சு கூத்தடிக்கிறியே நீயெல்லாம் நல்ல மானமுள்ள பொம்பளயா டீ… சீசீ…” 

 

என்று ஆக்ரோஷமாக வந்து நின்றார் ஜானகி.

ஜானகியை கண்டதும் நிறைமதி யின் முகம் புன்னகை மறைந்து இறுக்கமடைந்தது. 

“என்ன டீ பாக்கிற? உன்னையே சுத்தி சுத்தி வந்தானே என் புள்ள அவன எப்படி ஏமாத்த மனசு வந்துச்சி உனக்கு? அவன் போய் சேர்ந்துட்டான் ஆனா நீ கொஞ்சமாவது வருத்தபட்டியா?? உடனே எவன புடிச்சன்னு தெரியல இப்ப மாசமா இருக்க… அதுக்கும் என் புள்ள தான் காரணம்னு செத்துப் போனவன் மேல பழிய போட்ட… இப்போ அடுத்த ஆள புடிச்சிட்ட போல…. இதெல்லாம் நல்ல குடும்பத்து பொண்ணு செய்ற வேலையா?? இதுக்கு பேரு…..”

” போதும் நிறுத்துங்க…. என்ன பேச்சு இதெல்லாம்?? வயசுக்கு தகுந்த மாதிரி பேசுங்க…. பொது இடத்துல எப்படி பேசனுமுனு தெரியாதா??” என்று ஜானகியின் பேச்சை நிறுத்தி அடிக்குரலில் சீரினான் இளம்பரிதி.

“ஓ…. நிறுத்தனுமா?? இவள பத்தி என்ன தெரியும் உனக்கு?? ஓ…. இப்போ புரியுது உங்க ரெண்டு பேரு கல்யாணத்தக்கு என்ன காரணமுனு… இவ புள்ளக்கு நீ இனிஷியல் குடுப்ப பதிலுக்கு உன் புள்ளக்கு இவ ஆயா வேலை பாக்க போறா… நல்ல டீலிங் பா”

“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாங்க மரியாதை கெட்டுப்போய்டும்…. உங்களுக்கு மரியாதை கொடுத்து நின்னு பேசுறது வேஸ்ட்…. நிறைமதி வா போகலாம்!!” 

என்று நிறைமதியின் கையைப் பிடித்து அங்கிருந்து வெளியேறினான் இளம்பரிதி.

*********************************************

“நிறைமதி! நிறைமதி!”

“ஹான்!! என்னங்க??” தன் யோசனையில் இருந்து வெளியே வந்தாள் நிறைமதி.

“வீட்டுக்கு வந்துட்டோம் பாரு… இறங்கு….” 

“ஹ்ம்ம் சரி….”

இருவரும் வீட்டிற்குள் சென்றதும் கோமளவள்ளி நிறைமதியின் நலத்தை விசாரித்தார்.

“என்னாச்சு மா மதி?? ரொம்ப டல்லா இருக்க?? “

“இல்ல அத்தை… அப்படிலாம் இல்லை “

“சரிம்மா வாங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க…. பரிதி பவிய தொட்டில போட்டுவிட்டு வா..”

“அத்தை நான் கொஞ்சம் லேட்டா சாப்பிடுறேனே…”

“இல்ல நிறைமதி! நீ ஃபர்ஸ்ட் சாப்பிடு அப்பறம் ரெஸ்ட் எடுப்ப…”

வேறு வழியின்றி கடமைக்கு உண்டு எழுந்து அறைக்கு சென்றாள். பின் இளம்பரிதியும் சாப்பிட்டு பவமொழியை தாயின் அறையில் விட்டு அவனின் அறைக்கு வந்தான். நிறைமதி இன்னும் உடைகூட மாற்றாமல் வெறித்த பார்வையுடன் கட்டிலில் அமர்ந்திருந்தாள். பரிதி உடைமாற்றி அவளருகில் வந்து அமர்ந்தான்.

“நிறைமதி… ஏன் இப்படி உட்கார்ந்துருக்க?? போய் டிரஸ் சேன்ஜ் பண்ணு…”

அவனை நிமிர்ந்து பார்த்து , 

“எனக்கு உங்க கூட பேசனும்…. பிளீஸ் நான் சொல்லி முடிச்சிக்கிறேன்…. நீங்க என்னை தப்பா நினைக்க மாட்டீங்க… எனக்கு உங்க மேலே நிறையவே நம்பிக்கை இருக்கு…. எனக்கு மனசு விட்டு பேசனும்…. இதுவரை யார்கிட்டேயும் நான் எல்லாம் பேசல… அப்பா அம்மாட்ட பேச மனசுல தெம்பு இல்லை…. என் பிரண்ட்ஸ் என்னை பரிஞ்சுக்கல…. என்னை விட்டு ஒதிங்கிட்டாங்க… எனக்கு ரொம்ப மனசு பாரமா இருக்கு… உங்க கிட்ட பேசுனா என் மனசுக்கு ரிலீஃபா இருக்கூனு தோணுது… ஸோ பிளீஸ் என்னை தடுக்காதீங்க..” 

என்று குரல் தழுதழுக்க கண்ணீர் திரையிட கேட்டாள்.

“ஹ்ம்ம்….. ஓகே நிறைமதி….. உன விருப்பம்…. ஆனா அழாம சொல்லு பிளீஸ்…” 

“ஹாஸ்பிடல்ல பார்த்தோமே அவுங்க தான் என் ஜானகி அத்தை… அப்பா கூட பிறந்த அக்கா….”

*********************************************

சுந்தரும் ஜானகியும் உடன் பிறந்த அக்கா தம்பி. ஜானகிக்கு தன் தம்பி சுந்தர் மீது மிகுந்த அன்பு. அதனாலே தனக்கு திருமணம் பேசும்போது தன் தந்தையிடம் சென்னையிலே மாப்பிள்ளை பார்க்க சொன்னாள். அப்படி பார்த்து அவர்கள் வீட்டிலிருந்து பதினைந்து நிமிட தொலைவில் இருக்கும் சத்யசீலனை மணந்தார். தன் தம்பிக்கும் அவரே பெண் தேடி விஜயாவை திருமணம் செய்து வைத்தார். தாய் தந்தை இறந்த பின்னும் தம்பிக்கும் பக்க பலமாய் இருந்தார். சுந்தரும் தன் தமக்கை மீது மிகுந்த பாசத்துடனும் மரியாதையுடனும் இருந்தார். ஜானகி சத்யசீலன் தம்பதியருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் வரை குழந்தை பாக்கியம் கிட்டவில்லை.  சுந்தர் திருமண முடிந்தது ஒரு வருடத்தில் சரத்சந்திரன் பிறந்தான். அவனை ஜானகி பாராட்டி சீராட்டி வளர்த்தார். சரத் தன் அம்மாவிடம் வளர்ந்ததை விட அதிகமாக அத்தையிடம் வளர்த்தான். சரத் பிறந்து இரு வருடங்களில் ஜானகி கருவுற்று 

மகனை பெற்றெடுத்தார். அவனுக்கு சூர்யதேவ் என்று பெயர் சூட்டி அன்பை பொழிந்தார். அவன் கேட்டது அனைத்தையும் வாங்கி கொடுத்தார். சூர்யதேவ் மூன்று வயது இருக்கும் போது நிறைமதி பிறந்தாள்.

“தம்பி சுந்தர்… வாழ்த்துகள் பா… பொம்பள பிள்ள பொறந்துருக்கு…. இப்போவே சொல்லிட்டேன் இவ என் வீட்டு மருமக…. சூர்யா தங்கம் இதோ இவ தான் உன் பொண்டாட்டி சரியா… “

“சரி சரி மா… இது என் பாப்பா…. ஜாலி ஜாலி..”

“அக்கா என்ன இது சின்ன பையன்ட்ட போய்….”

“ஏன் சுந்தர்…. சூர்யாக்கு உன் பொண்ண தரமாட்டியா??”

“நான் அப்படி சொல்ல வரல கா… இப்போவே ஏன் இந்த பேச்சு…. பிள்ளைங்க அந்த வயசு வந்தோன பேசி பண்ணுவோம் கா….”

“சரிதான்… எப்போனாலும் இவ என் வீட்டு மருமக தான் “

பிள்ளைகளும் வளர அக்கா தம்பி உறவும் பலமடைந்தது. சூர்யாவுக்கு தன் தாயின் வார்த்தை மனதில் பதிந்ததில் சரத்தை விட மதியின் மேல் மிகுந்த உரிமையுடன் நடந்து கொள்வான். நிறைமதியும் அவள் அத்தை அவளை மருமகள் என்ற அழைப்பினாலும் சூர்யா அவளிடம் காட்டும் உரிமையிலும் ஈர்க்கப்பட்டு சூர்யதேவை விரும்பத்தொடங்கினாள்

*************************************

“என்ன சுந்தர்…. சரத்துக்கு பார்த்த பொண்ணு வைஷ்ணவி வீட்ல சம்மதம் சொல்லிட்டாங்க போல…. ரொம்ப சந்தோஷம் பா…. சீக்கிரம் கல்யாணத்தை ஏற்பாடு பண்ணுங்க…” 

” ஆமா அக்கா…. எல்லோரும் சம்மதம் சொல்லிட்டாங்க… இனி தேதி குறிக்க வேண்டியது தான்… “

“என்ன மருமகளே…. அண்ணன் கல்யாணத்துக்கு ரெடியா?? சரத்துக்கு கல்யாணம் முடிஞ்சு உனக்கும் சூர்யாவுக்கும் நாள் பாக்கலாமா?”

“ஐயோ அத்தை அதுக்குள்ள என்ன அவசரம் எனக்கு இப்போ தான் 24 வயசாவுது… வேலைக்கு இப்போ தான் அப்பளை பண்ணிருக்கேன்… இன்னும் இரண்டு வருஷம் வெயிட் பண்ணுங்க….”

“நீ பி.ஈ முடிச்சு கேட்டா எம்.ஈ படிக்கனும் சொன்ன…. இப்போ எம்.ஈ முடிச்சு வேலைக்கு போகனும் சொல்ற…. என்ன மருமகளே இதெல்லாம்…”

“அக்கா ஒரு இரண்டு வருஷம் தானே…. சூர்யாக்கும் இப்போ 27 தானே ஆகுது…. அவன் ஜாதகப்படி 29 வயசுல தானே கல்யாணம் பண்ண சொன்னாங்க… அப்பறம் என்ன கா…”

“ம்ம் சொன்னாங்க தான்…. ஆனாலும் ஆசை யாரை விட்டது…..”

” அம்மா… இங்க மாமா வீட்ல இருக்கேனு சொல்ல மாட்டியா?? நான் வீட்ல போய் உன்னை தேடி பாத்துட்டு வரேன்.. “

“அச்சோ மறந்துட்டேன் சூர்யா…. சரத் கல்யாண விஷயமா பேச வந்தேன் பா..”

“ஓஓ மாமா என்னாச்சு?? சரத் அத்தான் கல்யாணம் கன்பார்ம் தானே.. “

“ஆமாம் சூர்யா… சீக்கிரம் நாள் குறிக்க வேண்டியது தான்…”

 

“சூப்பர் மாமா…. அத்தான் கல்யாணத்துக்கு ரெடியாக வேண்டியதுதான்…. ஏய் மதி கல்யாணத்துக்கு என்னலாம் வாங்கனும் உனக்குனு இப்போவே லிஸ்ட் போட்டு வை.. அப்பறம் மறந்துட போற… “

” அதெல்லாம் லிஸ்ட் எப்பவோ ரெடி சூர்யாத்தான்.. ஷாப்பிங் போக நான் ரெடி…. நீங்க எப்போ ஃப்ரீனு சொல்லுங்க நாம போய்ட்டு வரலாம்….”

“அடிப்பாவி ஒரு பேச்சுக்கு சொன்னா இப்பவே ரெடிங்குற… மாமா நான் பாவம்… உங்க பொண்ணு சொல்றத பாத்தா என் மொத்த சேவிங்ஸும் கோவிந்தா தான் போல “

“அத்தை பாருங்க அத்தான் என்னை கிண்டல் பண்ணுராங்க….” 

“சூர்யா ஏன் என் மருமகளுக்கு செலவு செய்ய மாட்டியா?? அதெல்லாம் நீ கவல படாதே மதி…. உன் அத்தான் உனக்கு வாங்கி தராம இருப்பானா என்ன?? “

” இப்படி உசுப்பேத்தியே என் பர்ஸ காலி பண்ணிடுங்க அத்தையும் மருமகளும்… என்ன பண்றது சூர்யதேவ் விதி வலியது டா “

 என்று கலகலத்து சிரித்தான் சூர்யதேவ். அவனுடன் அனைவரும் இணைந்து கொண்டனர்.

அந்த வீட்டின் மகிழ்ச்சியை மொத்தமாக மாற்றியமைத்த சரத்சந்திரன் திருமண நாளும் வந்தது.

         -பேசும்-


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!