Skip to content
Post Views: 1,126
இளங்குயில்கள்-3
அதே லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் மர பெஞ்சில் அமர்ந்து தன் போனை நோண்டிக் கொண்டிருந்தாள் யாழினி.
காலையில் பார்த்த சுடிதார் இல்லாமல், ஒரு பிங்க் டாப்ஸ், புளூ ஜீன்ஸ் என சிம்பிளாக இருந்தாள்.
“என்ன மேடம் வந்து ரொம்ப நேரமாச்சா?” என கேட்டபடியே வந்தமர்ந்தான் ப்ரணவ்.
Advertisement
அவனை கண்டவுடன் தன் மொபைலை அணைத்து, பையில் வைத்து விட்டு அவனை பார்த்து புன்னகைத்தபடியே, “ இல்லயே, இப்பதான் ஒரு அரைமணி நேரம் ஆச்சு”.
பதறிப்போய் மணியை பார்க்க, அது சரியாக ஐந்து மணியை காட்ட,
“அட பதறாதப்பா, நான் தான் சீக்கிரமே வந்துட்டேன்” என மெதுவாக கூறினாள்.
Advertisement
“அதான பாத்தேன். எங்க நான் தான் லேட்டா வந்திட்டனோனு?.. போன தடவை அஞ்சு நிமிஷம் லேட்டா வந்ததுக்கு, அஞ்சு நாள் வெச்சு செஞ்சத, அதுக்குள்ள நான் மறந்திடுவனா என்ன?…. இன்னிக்கு அரை மணி நேரம் னா முப்பது நிமிஷம். அப்ப முப்பது நாள்… ஐயோ!” என மயங்கி விழுவது போல் நடிக்க,
Advertisement
“உங்கள”, என அவனை இரண்டு அடி அடித்தவள், அவனை பார்த்து புன்னகைக்க,
அவனும் புன்னகைத்துக் கொண்டே எழுந்து அமர்ந்தவன், தன் கைகளை அவள் கைகளுடன் கோர்த்துக் கொண்டான்.
அவன் அருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் யாழினி….
Advertisement
இருவருக்கும் பழைய நினைவுகள் நெஞ்சினில்..
கல்லூரியில் முதுகலை வணிகவியல், இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான் ப்ரணவ்.
அதே கல்லூரியில் முதல் ஆண்டு இளங்கலை வணிகவியலில் படித்துக்கொண்டிருந்தாள் யாழினி.
கிட்டத்தட்ட முதல் ஆறு மாதங்களில் , இருவரும் ஒரு முறை கூட சந்தித்து கொண்டதில்லை…. அன்று அனைவருக்கும் முதல் வருட செமஸ்டர் தேர்வு முதல் நாள். . . .
தன்னுடைய ரூம் எது? என தேடி அலைந்து கொண்டிருந்தவள் வேகமாக படியில் ஏறும்போது, எதிரே வந்தவனை கவனிக்காமல் அவன் மீது மோத, தீடீரென இந்த மோதலை எதிர்பார்க்காதவன் தடுமாறி கீழே விழ, அவனோடு சேர்ந்து இவளும் கீழே விழுந்து, இருவரும் படிகளில் உருண்டனர்.
சுதாரித்து முதலில் சுவற்றை பிடித்து எழுந்து நின்றவன், அவளுக்கு கை கொடுத்து எழுப்பி விட, அவன் கையை தட்டி விட்டபடி தானே எழுந்தவள்,
“அறிவுகெட்ட முண்டம், கண்ணில்லை உனக்கு பாத்து வர மாட்டியா?,.. என் கையே உடைஞ்சிருச்சு, எப்படி நான் போய் பரிட்சை எழுதுவேன்” என பேசி கொண்டே போனவள்,
“ஏய் ச்சீ, நிறுத்து” என்றவன், சத்தத்தில் தான் நிறுத்தினாள்.
“ எக்ஜாம் னா, நேரங்காலமே வரணும்னு தெரியாதா. ஆடி அசைஞ்சு பெல் அடிச்ச அப்புறம் வந்தா, இப்படி தான் எதிர்ல யாரு வர்றாங்கனு கூட தெரியாம மோதி நீ விழுகறதும் இல்லாம, அவங்களையும் விழுக்காட்ட வேண்டியது, அப்பறம் லப்போ திப்போனு கத்த வேண்டியது, யூஸ்லெஸ்”
“ஹலோ, மைன்ட் யுவர் வேர்ட்ஸ்”
“ அடுத்தவங்களை பாத்து பேசும் போது, நீ உன் வேர்ட்ஸ மைன்ட் பண்ணுணியா” என கேட்க,
பதிலின்றி மவுனமாக நின்றாள்.
“இட்ஸ் ஓகே விடு, ஹால் நம்பர் என்ன?”
“இல்ல நானே பாத்துக்கிறேன்”
“எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை. ஆனா டைம் இப்பவே ஒன்பது ஐம்பத்தியஞ்சு, இன்னும் அஞ்சு நிமிஷத்துல ரூமும்ல இல்லைனா, எக்ஜாம் எழுத முடியாது. ரூம் நம்பர் சொன்னா நான் வழி சொல்லுவேன், நீ சீக்கிரம் ஹாலுக்கு போகலாம்”… என்றவன் மேலும்,
“ஏன் சொல்றேன்னா, இந்த வீணா போன சன்டையால ஆல்ரெடி பத்து நிமிஷம் வீணாயிடுச்சு. நான் கவனிச்சு விலகறதுக்குள்ள நீ மோதிட்ட. அதான் ஒரு சின்ன உதவி. வேண்டாம்னா ஒன்னும் பிரச்சினை இல்லை, நீ மெதுவா தேடி கண்டுபிடிச்சு கிளாஸ்க்கு போய், நாளைக்கான எக்ஜாம் எழுதிக்கோ பை” என்றவன் முன்னே நடக்க ஆரம்பிக்க,
“அது, ஜே பிளாக் 143”,
ஒரு நொடி ஜெர்காகி நின்றவன், திரும்பி பார்த்து “எது?” என்க,
“ரூம் நம்பர் 143” என கூற,
“இங்க வா, இதே புளோர்ல, செகன்ட் கிளாஸ்”
“தேங்ஸ்” என்றவள் முன்னே செல்ல, பின் வந்தவனை திரும்பி பார்த்து விட்டு, “இல்ல நானே போயிடுவேன்” என கூற,
ஒரு புன்சிரிப்புடன் அவளை கடந்து முன்னே சென்று அதே வகுப்பில் நுழைய,
“ஆத்தி!… என்ன நம்ம கிளாஸ்க்கு போறாங்க, ஒருவேளை வாத்தியா இருப்பாங்களோ?.. செத்தேன் இன்னிக்கு.…. ஆனாலும் உனக்கு வாய் கொஞ்சம் அதிகம் தான் யாழு”… என தன்னையே நொந்தபடி வகுப்பறையில் நுழைந்தாள்.
உள்ளே அனைவரும் அமர்ந்திருக்க, இவளும் தன் வரிசை எண் தேடி அமர செல்ல, இருவர் மட்டும் அமரவேண்டிய பெஞ்சில் ஏற்கனவே அமர்ந்திருந்தான் அவன்.
மீண்டும் மீண்டுமா, அதே எண்ணம் இருவருக்கும்.
“அப்ப வாத்தி இல்லியா சந்தோஷம்” என நிம்மதி பெருமூச்சு விட்டபடி அமர, பேராசிரியர் உள்ளே வர சரியாக இருந்தது.
அன்றைய தேர்வை நல்ல முறையில் எழுதியிருந்தாள் யாழினி. இடையிடையே ப்ரணவை காண, அவனோ வெகு சிரத்தையாக எழுதி கொண்டிருந்தான். அடேங்கப்பா பெரிய படிப்ஸ் தான் போல என நினைத்தபடி, தன் வேலையை தொடர்ந்தாள்.
கிட்டத்தட்ட ஆறு தேர்வுகளும் அதே ஹாலில் தான் நடந்தது. அன்றைய நாளுக்கு பிறகு இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. எப்போதாவது பார்த்தால் ஒரு புன்சிரிப்பு அவ்வளவு தான்.
அந்த வருட இறுதியில் ஆண்டு விழாவில் இருவரும் மீண்டும் சந்தித்துக்கொள்ள,
“ஹாய் சூப்பர் சீனியர்^2” என்றால் யாழினி.
“அது என்ன சூப்பர் சீனியர்^2”
“அதுவா சீனியர், நீங்க பிஜி செகன்ட் இயர். எங்க சூப்பர் சீனியர்க்கு சூப்பர் சீனியர் நீங்க அதான் அந்த ஸ்கொயர், எப்படி என் கண்டுபிடிப்பு” என இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொள்ள,
“சகிக்கல”…
“ஏன் சூப்பர் சீனியர்^2? இதுக்கென்ன நல்லா தான இருக்கு”
“அம்மா தாயே நீ என்ன போடா வாடா னு கூட கூப்பிட்டுக்கோ. ஆனா தயவு செஞ்சு இப்படி மட்டும் கூப்டாத”..
“அப்பிடியாடா, சரிடா இனிமே நான் அப்படியே கூப்பிடுறேன்டா, என்னடா” என வார்த்தைக்கு வார்த்தை டா போட,
அவளை தீவிரமாக முறைத்தான் “உன்கிட்ட போய் பேசினேன் பாரு என்ன சொல்லனும்” என கூறி விட்டு செல்ல,
“சீனியர் சீனியர், நில்லுங்க பிளீஸ் இனி சொல்ல மாட்டேன்” என்க,
“என்ன வேணும் உனக்கு”?
“என் பேரு யாழினி”
“ஓ ஓகே அதுக்கு நான் என்ன செய்யனும்”
“நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம். என் பிரன்ட்ஸ் கிட்ட ஒரு ஹாய் சொல்லிட்டு வரலாம் வாங்க” என அழைக்க,
“ஏய் இரு இரு, யார் நீ? நீயே யாருனு எனக்கு தெரியாது. உன் பேரே இப்ப நீ சொல்லி தான் எனக்கு தெரியும். இதுல நான் எதுக்கு உன் ப்ரண்ட்ஸ் கிட்ட வந்து ஹாய் சொல்லனும்?”
“சீனியர் பிரெண்ட்ங்கிறது, எவ்ளோ பெரிய கெத்து தெரியுமா?, என் பிரெண்ட்ஸ்க்கு எல்லாம் இரண்டு மூணு சீனியர் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. எனக்கு தெரிஞ்ச ஒரே சீனியர் நீங்க தான். அதான் சீனியர் உங்க கிட்ட ஹெல்ப் கேட்கிறேன்”.. என கூறினாள்.
“இப்பிடியெல்லாம் யாரு கதை கட்டி விடுறது. என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்?”…
“ஏன் தெரியாது? உங்க பேரு ப்ரணவ், இப்ப பிஜி ஃபைனல் படிக்கிறீங்க. சார்ட்டு அக்கௌன்ட்ஸ்ல, பிரிலிம்ஸ் எழுதி போர்த் பிளேஸ் ல பாசாயிருக்கீங்க, இனி மெயின் எக்சாம்க்கு மும்முரமா பிரிபேர் பண்ணிட்டு இருக்கீங்க. ஆடிட்டர் ஆகனும்னுங்கறது உங்க கனவு. ஒரு அக்கா, ஒரு அண்ணா. உங்க அக்காவுக்கு இப்ப தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு. எல்லா பசங்களும் மாதிரி உங்க அம்மா னா உங்களுக்கு உசிரு. போதுமா, இல்ல இன்னும் வேற ஏதாவது டீடெய்ல் வேணுமா சீனியர்? என் மூச்சு விடாமல் பேசி நிறுத்த,
அவளை இரண்டு நிமிடம் பார்த்தவன், “எதுக்கு என் டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி வெச்சிருக்க?” என் கோபமாய் கேட்க,
“அது வந்து எனக்கு”…… என் ஏதோ கூற வந்தவளை எதுவும் கூற விடாமல் தடுத்து,
“இங்க பாரு மாலினி”
“யாழினி”
“ம்ப்ச், ஏதோ ஒன்னு”
“ஏதோ ஒன்னு எல்லாம் கிடையாது. யாழினி, யூ மஸ்ட் செட் யாழினி”
“ஓகே, ஓகே! யாழினி ரைட்”
“ம்ம், ரைட். இப்ப சொல்லுங்க” என்றவள் மேலே சொல்லுமாறு கையசைக்க,
அவளை பார்த்து தலையசைத்து கொண்டவன், “நீ என்ன டிரை பண்றேன்னு எனக்கு புரியுது. ஆனா எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. இந்த கல்யாணம், கமிட்மெண்ட் இதெல்லாம் எனக்கு ஆகாது. இதுக்கு நான் செட் ஆக மாட்டேன். சாரி”
இவன் என்ன சொல்றான் என புரியாமல் பார்த்தவள், அவனின் கடைசி வரியில் விழுந்து விழுந்து சிரித்தாள்.
“ம்ப்ச், இப்ப நான் என்ன சொல்லிட்டேன் னு நீ இப்படி சிரிக்கிற” என எரிச்சலாக கேட்க,
தன் சிரிப்பை அடக்கியவள், “சீனியர், நான் உங்கள பிரபோஸ் பண்ண டிரை பண்றேன்னு நினைச்சுட்டீங்களா? என்றவள். மீண்டும் சிரிக்க,
அவன் முறைக்க,
“ஐய்யோ, ஐயோ, சீனியர் நான் ***** இந்த பத்திரிகையில ஜூனியரா, பார்ட் டைம் ஜாப் ஜாயின் பண்ணியிருக்கேன். அங்க எனக்கு தந்த முதல் அசைன்ட்மென்ட் தான் இது. அதாவது, எனக்கு தெரிஞ்சவங்கள பத்தின, தெரியாத டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண சொன்னாங்க. அதுக்கு தான் இப்படி என கூறினாள்.
“நிஜமா தான் சொல்றியா?”
“அய்யோ சத்தியமா, நீங்க நம்பலையா? இங்க பாருங்க” என தன் டெம்ப்ரெரி ஐடி கார்டு எடுத்து நீட்ட,
“ஒரு நிமிஷம் நான் பயந்தே போயிட்டேன். ஆமா உனக்கு எதுக்கு இந்த ஜாப் எல்லாம்” என கேட்டவன் அவள் முறைப்பதை கண்டு, “ இல்ல நான் அப்படி சொல்ல வர்ல, ஜனர்லிசம் ல நிறைய டிபார்ட்மெண்ட் இருக்கே, நீ ஏன் மத்தது எடுக்கல னு கேட்டேன்” என்றான்.……
“எனக்கு இது தான் ரொம்ப பிடிச்சிருக்கு, கொஞ்ச நாள் என் ஆசைக்கு இந்த லைன். அப்புறம் உள்ள ஷிப்டாயிடலாம்” என கூற,
“எனிவே, ஆல் த பெஸ்ட் பார் யுவர் பூயூச்சர்” என கூறி கை கொடுக்க,
அவன் கையோடு தன் கை கொடுத்து வாழ்த்து வாங்கியவள், “தேங்ஸ் சீனியர்” என்றாள்.
“உங்களுக்கு காலேஜ் முடிஞ்சுது தான சீனியர்”
“எங்களுக்கு அப்பவே முடிஞ்சுது. இவ்ளோ நாள் பிராஜெக்ட் தான் ஓடிட்டு இருந்தது. இனி வைவா மட்டும் தான்”.
“ஓ, ஓகே, சீனியர் ஏதாவது டவுட்ஸ் இருந்தா உங்கள காண்டாக்ட் பண்ணலாமா?”
“ம்ம் தாராளமா, என் நம்பர் 63*******0” என கூற,
“என்ன சீனியர் நீங்க, இத்தனை கண்டுபிடிச்ச என்னால, உங்க நம்பர் கண்டுபிடிக்க முடியாதா என்ன? ஆல்ரெடி இருக்கு என்கிட்ட, ஒரு மெஸேஜ் பண்றேன் என் நம்பர் ஷேவ் பண்ணிக்கோங்க” என்றவள், தன் எண்ணிலிருந்து ஹாய், என அவனுக்கு தட்டி விட,
“ம்ம் வந்திடுச்சு, நான் ஷேவ் பண்ணிக்கிறேன். ஓகே நான் கிளம்புறேன் பை” என கூறிவிட்டு முன்னால் நடக்க, மீண்டும் ஒரு மெசேஜ் சத்தம்.
யாழினியிடம் இருந்து வந்திருக்க, திறந்து பார்த்தவன் விழிகளில் ஓராயிரம் அதிர்ச்சிகள்.
“உங்கள லவ் பண்றத பத்தி, நான் யோசிக்க கூட இல்ல. ஆனா உங்களை லவ் பண்ணா கூட, நல்ல இருக்கும் போலயே? ஷெல் வீ டிரை அத்தான்?” என, சில பல 💘💘💘காதல் அம்புகளுடன்💘💘 இருந்தது யாழினியின் மெஸேஜ்.
error: Content is protected !!