Skip to content
Post Views: 4,039
“அது அப்படி இல்லை மீனா. கல்யாணம் ஆகி மூணு பிள்ளைகாரன்னு எல்லாருக்கும் தெரியும். தெரிஞ்சும் பொண்ணு கொடுக்க ரெடியா இருக்காங்க. அவன் கூட வாழ்ந்து எவ்வளவு கஷ்டத்தை பார்த்திருப்ப.. இந்தப் பிள்ளைக என்ன வாழ்ந்துட்டாங்க. அந்த வீடு வாசல் சொத்து எல்லாம் உன் பிள்ளைகளுக்கு உரியது. வேற யாரோ ஒருத்தி வந்து உட்காரணுமா? உன் பிள்ளைகளுக்காகவாது யோசிக்க வேண்டும் மீனா” என்றார் தாய்.
விரக்தி சிரிப்பு மீனா இதழ்களில், “பிள்ளைக்காக.. இதை சொல்லியே தான் அம்மா வரிசையா மூணு பிள்ளைக ஆகி போச்சு. சரியில்லாதவன்னு தெரிஞ்ச உடனே தமிழ்ல தூக்கிட்டு நான் தனியா நின்னு இருக்கணும். அதை விட்டுட்டு நானா தேர்ந்தெடுத்த வாழ்க்கை, என் புருஷன திருத்துறேன், சரி பண்ணி வாழ்ந்து காட்டுறேன்னு எல்லார் முன்னாடியும் நின்னு ரொம்ப மோசமா தோத்து போயிட்டேன். சரியில்லாத ஆள திருத்துறது எல்லாம் நம்ம வேலை இல்லன்னு நான் யோசிக்கல. நீங்க எல்லாம் வெளியில நின்னு பாக்குறீங்க. நான் அந்த ஆளோட வாழ்ந்து மூன்று புள்ள பெத்தவ.. அவனெல்லாம் காலத்துக்கும் திருந்த மாட்டான். அன்னைக்கு என் பிள்ளைகளுக்காகவாது நான் வாழ்ந்துட்டேன். இனிமே எல்லாம் ஏதாவது ஒன்னு வந்தா என்னால தாங்கிக்க முடியாதும்மா” வேதனையான குரலில் மீனா சொல்ல,
தாய்க்கு உருகி போனது. “இந்த ஒரு தடவை சரி கட்டி போ மீனா. என் மனசுக்கு எல்லாம் நல்லா நடக்கும்னு தோணுது. அந்த வெண்பா வேற என் தம்பிக்கு வேற ஒரு பொண்ண கட்டி வச்சிருவேன்னு சொல்லிட்டு திரியிறா”
“சுய ஒழுக்கம் இல்லாத ஆம்பள வாழ லாயக்கில்லாதவன். அவனை நினைக்க கூட கூடாது. மூன்று பிள்ளைகள் வச்சிருக்கேன். எனக்கு மத்த ஆம்பளைங்க கிட்ட இருந்து தொந்தரவு வராமையா இருக்கு.. அதை எல்லாம் சமாளிச்சு பிள்ளைகளை வளர்க்கல. காரணம் ஆயிரம் சொல்லலாம். ஆனா, நிஜ வாழ்க்கை வேற…”
Advertisement
“உனக்கு புரியவே இல்லை மீனா. நான் எப்படி உனக்கு புரிய வைப்பேன்” பரமக்கு யோசனை சரியாக இருந்தது ஆனால் தெளிவான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து மகளிடம் சொல்ல தெரியவில்லை.
தாயின் அருகில் வந்த மீனா, தன் ரெண்டு கைகளையும் விரித்தாள்..
“நல்லா பாருங்க, என் கை எப்படி இருக்கு பாரு. என் முகத்தை பாரு. கண்ணுக்கு கீழ பாருங்க. என் உடலை பாருங்க.. இதுதான் நான் ம்மா. இப்படித்தான் என்ன வளர்த்தீங்களா? அந்த மனுசனுக்கு என்னை கல்யாணம் பண்ணி கொடுக்கும் போது நான் இப்படித்தான் இருந்தேனா? என்னை பாத்தீங்களா நொந்து போய் இருக்கேன். நான் எப்படி இருக்கேன் பாருங்க. உருகொலைஞ்சு போய் நிக்கல. அவன் கூட போய் சேர்ந்து வாழுன்னு எப்படிம்மா உங்களால சொல்ல முடிஞ்சுச்சு. ஒரு பொம்பள மூணு பிள்ளைகளை வச்சுட்டு கூலி வேலை பார்த்து வளர்க்கறது ரொம்ப கஷ்டம். தனியா இருந்தா எவ்வளவு பிரச்சனை வரும்னு தெரியும். என்கிட்ட நிலையான வருமானமும் இல்ல பிள்ளைகளை வளர்க்கற அளவுக்கு சொத்தும் கிடையாது அப்படி இருந்தும் நான் தனியாவே நிக்க நினைக்கிறேன்னா? நான் எவ்வளவு பாடு பட்டு இருப்பேன்” கண்ணீரோடு மகள் பேச, வார்த்தை வரவில்லை பரமுக்கு…
Advertisement
அருமை பெருமையாகத்தான் மகளை வளர்த்தார்கள். ஊதா கலர் தாவணி போட்டால் மகளுக்கு அவ்வளவு எடுப்பாக இருக்கும். பள்ளி படிப்பை கூட முடிக்கவில்லை போலீஸ், வாத்தியார் என்று தொடர்ந்து மாப்பிள்ளை வந்துவிட்டது. பார்க்க மீனா அவ்வளவு லட்சணமாக இருப்பாள். அப்போதெல்லாம் மகளின் திருமணம் குறித்து பெற்றோர்களுக்கு அவ்வளவு கனவு. தற்போது ஒரு டிகிரியாவது படிக்க வைத்தால் தான் மரியாதை என்று தான் கல்லூரி அனுப்பியது. அதற்குப் பின் நடந்தது எல்லாம் கனவிலும் நினைக்காதது. பரமேஸ்வரி அமைதியாகி கொண்டார்.
Advertisement
மீனாவும் எதுவும் பேசவில்லை. எப்பவும் போல பிள்ளைகள் வேலை என்று இருந்து கொண்டால் ஆனால் சுறுசுறுப்பு குறைந்து போனது.
அன்று மீனாவுக்கு பேங்க் வேலை இருந்தது. தமிழுக்கு உடல்நிலை சரியில்லை. தொடர்ந்து வயிற்றாலை, வாந்தி.. மகனை மட்டும் பள்ளிக்கு அனுப்பி விட்டு சின்ன மகளை தன்னோடு வைத்துக்கொண்டு பெரிய மகளை தாயிடம் விட்டு கிளம்பி விட்டாள் மீனா.
எலுமிச்சையை பிழிந்து பேத்திக்கு கொடுத்தார் பரமு. ஆனால், தொடர்ந்து வயிற்று போக்கு நிற்காமல் இருக்க, உடை இல்லாமல் மெல்லிய போர்வையை போர்த்தி விட்டு இருந்தார். லேசான உறக்கத்தில் பேத்தி இருக்க, பரமுக்கு போன் வந்தது.
Advertisement
அர்ச்சுனன் மனைவி பிரசவ வலி வந்து ஹாஸ்பிடல் இருக்கிறாள் என்று போன் வந்தது. அவசரமாக செல்ல வேண்டும். ஒரு பார்வையாவது பார்த்து விட்டு வர வேண்டும், இல்லையென்றால் பேச்சு வந்துவிடும். மீனா வருவதற்குள் ஒரு பார்வை பார்த்துவிட்டு வர நினைத்தார். மகளுக்கு போன் செய்ய, எடுக்க வில்லை. மகன் வேற ரெண்டு முறை அழைத்து விட்டான்.
முன்பெல்லாம் மீனா அவசர வேலைக்கு மூன்று பிள்ளைகளையும் அழைத்துச் செல்ல முடியாது என்பதால் அக்கம் பக்கத்தில் சொல்லி வைத்து தமிழை வீட்டில் தான் விட்டு செல்வாள். டிவியை போட்டுவிட்டு உணவு பண்டங்களை கையில் கொடுத்து கதவை லேசாக சாத்தி விட்டு சென்றால் போதும்.. திரும்ப வரும் வரை தமிழ் அசைய மாட்டாள். அவளுக்கு பழக்கம் என்பதால், ஓட்டமாக மருமகளே ஒரு பார்வை பார்த்துவிட்டு வருவோம் என்று நினைத்தார்.
அவசரமாக பரமு வெளியே வர, அப்போதுதான் ஜெகன் வந்து இறங்கினான். பொதுவாக மதிய நேரத்தில் வீட்டுக்கு வரமாட்டான். யோசனையாக பார்த்தவர்,
“தமிழுக்கு உடம்பு சரியில்ல படுக்க போட்டு இருக்கேன். என் சின்ன மருமகள்ல ஹாஸ்பிடல்ல வெச்சிருக்காங்க, ஓட்டமா ஒரு பார்வை பாத்துட்டு வந்துடறேன். தமிழ்ல மட்டும் கொஞ்சம் பாத்து இருக்கீங்களா? நல்லா தூங்குது. எழ மாட்டா, எழுந்தா மட்டும் பார்த்துக்கோங்க” என்றதும், அவர் அவசரம் புரிந்து நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவரை அனுப்பி வைத்தான்.
லேசாக கதவை திறந்து எட்டிப் பார்க்க, தமிழ் நல்ல உறக்கத்தில்.. வெளி வாசலில் சேரை போட்டு அமர்ந்து கொண்டான் ஜெகன். குழந்தை முணங்குவது கேட்க. மெல்ல எட்டி பார்த்தான். திரும்பவும் வயிற்று போக்கு…
அவசரமாக ஓடி சென்று பிள்ளையை தூக்கியவன், சுத்தம் செய்து தூக்கி வந்தான். தமிழ் சுணங்கி போனாள். வீட்டில் கரண்ட் வேற போக, பிள்ளை சிணுங்கியது. அங்கு மீனா வீட்டில் யுபிஸ் இல்லை. ஜெகன் வீட்டில் இருக்க, ஒரு துண்டை எடுத்து பிள்ளையை போர்த்தி கொண்டு தூக்கி போனான்.
மதிய நேரமென்பதால் ஆள் நடமாட்டம் இருந்தது. என்றும் இல்லாத திருநாளாக ஜெகன் பிள்ளையை தூக்கிக் கொண்டு போவதை எல்லோரும் அதிர்ச்சியாக பார்த்தார்கள்.
“அப்படி எல்லாம் மீனா இவனிடம் விட்டு வைக்க மாட்டாளே” என்று பேச,
“அதுவும் மீனாக்கா டிரஸ் இல்லாம எல்லாம் விட மாட்டாங்க” என்றாள் ஒருத்தி.
“நம்ம இவ்வளவு பேர் இருக்க நம்மகிட்ட ஒரு வார்த்தை சொல்லாம ஜெகன் கிட்ட சொல்லிட்டு போக மாட்டான் மீனா. இவையே மீனா வீட்டுக்குள்ள போய் பிள்ளையை தூக்கிட்டு போறான்” என்று பேச, பேச்சின் திசை மாறியது.
“மொத வாங்க, மேல போய் பார்ப்போம். என்னன்னு கேட்போம். ஜெகனும் நம்ம பையன் தானே எதுவும் அவசரப்பட வேணாம்”
“இந்த காலத்துல யாரையும் நம்பக்கூடாது. பொம்பளை பிள்ளை வச்சிருக்கவங்க தான் ஜாக்கிரதையா இருந்துக்கணும். ஊருக்கு உபதேசம் பண்றவங்களத்தான் ஃபர்ஸ்ட் சந்தேக படனும்” என்றவாறு அவரும் மேலே ஏறினார்.
ஜெகன் பிள்ளையை நெஞ்சில் போட்டு படுத்து இருந்தான்.
“ஜெகன், நீ எதுக்கு மீனாப்பிள்ளைய தூக்கிட்டு வந்த?”
“என்னாச்சு” என்றான் ஜெகன்.
“பொம்பள பிள்ளையை டிரஸ் இல்லாம தூக்கிட்டு வரலாமா? மீனா கிட்ட நீங்க கேட்டீங்களா? அவளுக்கு தெரியுமா?” என்றதும் ஜெகனுக்கு கோபம் வந்தது.
“என்ன பேசுறீங்க. வார்த்தையை பார்த்து விடுங்க”
“அப்படி இல்ல தம்பி மீனாப்பிள்ளையை யார்கிட்டயும் விடாது. உங்ககிட்ட அவ்வளவு பழக்கம் கூட கிடையாது. அதான் கேட்டோம்” என்று சொல்லும் போதே,
“மீனா அக்காக்கு போன் பண்ணிட்டேன். வந்துட்டு இருக்காங்களாம். பாப்பாவ தூக்கி வைக்க சொன்னாங்க” என்றவாறு பிள்ளையை தூக்க போனாள் விமலா.
“நீ தொடாதா? பிள்ளை என் கிட்ட தான் இருக்கும். ஆமா, மீனா வீட்டுல இல்லை. குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு நான் தான் தூக்கி வந்து பார்த்து கிட்டேன். தெரியாதவங்க வீட்டுக்குள் நுழைந்து பிள்ளைய தூக்க முடியுமா? மீனாவே வந்து என் கிட்ட வாங்கட்டும்” என்றான் உறுதியாக…
error: Content is protected !!