Skip to content
Post Views: 4,783
உன் காதல் ஒரு வரமாய்…..10
சிவா இடுப்பில் கை வைத்து அவளை முறைத்துக் கொண்டிருக்க அமிர்தாவோ தலையை நிமிர்த்தவேயில்லை.இரவு பத்தரை மணி அமிர்தாவின் விடுதி அருகே உள்ள ஒரு தெரு கடையில் நின்றிருந்தனர் சிவாவும் அமிர்தாவும்.
“இப்ப எதுக்கு நகத்தை கடிக்கிற….கையை எடு…”என்று சிவா சத்தம் போட அமிர்தா கையை எடுத்தாலும் ஏதோ பதற்றத்துடனே இருந்தாள்.இன்னும் இரணடு நாட்களில் அவளின் பரிட்சை அதனால் தான் இந்த பதட்டம்.சிவா பதட்டப்படாதே என்று எவ்வளவோ கூறி பார்த்துவிட்டான்.ஆனால் அதை அவள் கேட்க வேண்டுமே.
“எனக்கு பயமா இருக்கு…அதனால தான் உங்களுக்கு போன் பண்ணிட்டேன்…சாரி…”
Advertisement
“சரி அப்ப பரிட்சை எழுதாத…போ போய் தூங்கு….”என்றுவிட்டு அவன் திரும்பி நடக்க,
“அச்சோ என்ன இப்படி சொல்லுரீங்க….”
“இப்ப நீ தான பயமா இருக்குனு சொன்ன….பயப்படுறவ எதுக்கு எழுனும்…..எழுதவே வேண்டாம்…”என்று அவனும் காட்டமாக கூற அமிர்தாவிற்கு தன் தவறு புரிந்தாலும் என்னவோ ஒரு பயம் மனதை ஆட்டி வைத்தது.சிவாவிற்கு கோபம் தான் இருந்தாலும் அவளின் நிலையும் புரிந்தது.
Advertisement
“அமிர்தா கூல் டென்ஷன் ஆகாத….முதல்ல தடவை எழுதுறல்ல அதனால தான் கொஞ்சம் பயமா இருக்கும்….அடுத்த தடவை எழுதும் போது கொஞ்சம் புரிஞ்சிடும்….”
Advertisement
“என்ன அடுத்த தடவையா….அப்ப நான் இந்த தடவை பாஸ் ஆகமாட்டேனா….”என்று அழுது கொண்டே கேட்க,
“நான் அப்படி சொல்ல வரலை…ஆனா நாம எப்போதும் எல்லாத்துக்கும் தயாரா தான் இருக்கனும் அப்ப தான் வெற்றியோ தோல்வியோ நம்மளை பாதிக்காது…அதனால நீ உன்னால முடிஞ்ச அளவுக்கு முயற்சி செய்….தப்போ சரியோ முயற்சி செஞ்சி தோத்து போ…ஆனா முயற்சி செய்யமா தோத்து போயிடாத….”என்று பொறுமையாக சிவா கூற அமிர்தாவிற்கு இவ்வளவு நேரம் மனதில் இருந்த இறுக்கம் தளர்ந்தது ஒரு புது நம்பிக்கை பிறந்தது.
“நீங்க சொல்லுறது சரிதான்….நான் கண்டிப்பா நல்லா எழுதுவேன்….”என்று அவள் கூற,
Advertisement
“குட்…இப்ப போ…போய் தூங்கு….நேரமாகிடுச்சு….நான் கிளம்புறேன்….”என்றுவிட்டு சிவா கிளம்பிவிட்டான்.சிவா செல்வதையே அமிர்தா பார்த்துக் கொண்டு நிற்க சட்டென்று திரும்பியவன்,
“உன்னை போனு சொன்னேன்….”என்று அழுத்தமாக கூற,
“நீங்க எப்ப பாரு இப்படி தான் இருப்பீங்களா…..உர்ருனு….”திடீரென அவள் கேட்க,ஒரு நொடி திகைத்த முகத்தை மாற்றிவன்,
“ஆமா…நான் இப்படி தான் கிளம்பு….டையம் ஆச்சு…..போ….”என்று விரட்ட,
“போறேன் போறேன்…..எப்ப பாரு விரட்டிக்கிட்டே இருங்க……சரியான கடுவான்….”என்று திட்டிக் கொண்டே அவள் செல்ல சிவாவின் காதுகளில் அவளின் வார்த்தைகள் விழுந்து சிரிப்பை வரழைத்தாலும் முயன்று தன்னை அடக்கிக் கொண்டு நின்றான்.அவனை திட்டிக் கொண்டே அவள் தன் விடுதிக்கு உள்ளே சென்று நுழையும் வரை பார்த்தவன் அதன் பின்னே கிளம்பினான்.
கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு நுழைந்த அமிர்தாவை கண்ட பாரதி,
“என்னடீ போகும் போது அழுதுகிட்டு போன இப்ப மூஞ்சிய இஞ்சி திண்ண குரங்கு போல வச்சிக்கிட்டு வர….என்ன செம டோஸா….”என்று கிண்டல் செய்ய,
“க்கா கிண்டல் பண்ணாதீங்க செம்ம கோவத்துல இருக்கேன்…..”என்று கூறி விட்டு அமர,
“ம்ம்…என்னமோடீமா…..இப்பெல்லாம் உன் முகம் கொஞ்சம் ஜொலிக்குது…..”என்று விடை தெரிந்தே தான் பாரதி கேட்டாள் அவளுக்கு புரிந்தது அமிர்தா சிவாவை விரும்ப தொடங்கிவிட்டாள் என்று.
“அது அதெல்லாம் ஒண்ணுமில்லைக்கா….”என்று தன் முகத்தை மூடி படுக்க,
“ம்ம்ம் புரியுது….புரியுது….சொல்லிட்டியா….”
“என்ன என்ன சொல்லிட்டியா…..”என்று் திக்கி திணறி தான் வார்த்தைகள் வந்தன அவளிடம் இருந்து.
“அம்மு பாப்பா…..உன் காதலை உன் அவர் கிட்ட சொல்லிட்டியா….”என்று பாரதி கேட்ட நொடி படுக்கையில் இருந்து எழுந்தமர்ந்தவள்,
“எ…என்…என்ன காதல் அதெல்லாம் இல்லைக்கா…..”என்று திணற,
“போதும் போதும்….நீ நடிச்சது….சொல்லு சொல்லிட்டியா….”
“ம்ஹம்….இல்லைக்கா….இன்னும் இல்லை…..”
“முதல்ல சொல்லு…அப்புறம் கனவு காணு புரியுதா….”என்று பாரதி கூறிவுடன் அமிர்தாவின் முகம் கூம்ப தொடங்க,
“இந்தா இப்ப எதுக்கு முகத்தை தூக்குற….உன் மனசுல உள்ளதை மறைக்காம அந்த பையன் கிட்ட சொல்லிடு….அது தான் உனக்கு நல்லது…”
“சொல்லனும் தான் ஆனா பயமா இருக்குக்கா….”
“பயந்தவ எதுக்கு காதலிக்கனும்….”
“க்கா எனக்கா நீங்களே இப்படி சொல்லுரீங்க….”
“என்ன சொல்லுறேன்….”
“அது இப்படி அபசகுனமா….”
“எதுடீ அபசகுனம்….லூசு…..நீ அவனை விரும்புற சரி அந்த பையன் உன்னை விரும்புறானா நீ தெரிஞ்சிக்க வேணாமா….அதை தெரிஞ்சிக்க சொன்ன அபசகுனம்னு சொல்லுற…..”என்று பாரதி வெகுண்டு பேச,
“அதெல்லாம் அவருக்கும் என்னை பிடிக்கும்….”என்று அவள் கூற பாரதிக்கு கோபமாக வந்தது.
“எதை வச்சி சொல்லுற….”
“என்கிட்ட மட்டும் தான் சிரிச்சு பேசுறார்….என்னை தனியா பார்க்குக்கு வரக்கூடாது சொல்லுறார்…..இதெல்லாம் காதல் தான….”என்று அவள் குழந்தை போல கூற,பாரதிக்கு இந்த பெண்னை என்ன செய்தால் தகும் தன்னிடம் ஒருவன் அக்கறை காட்டுகிறான் என்றால் அது காதலா?என்று நினைத்தவள் அதைக் கூறவும் செய்தாள்.ஆனால் அதற்கு அமிர்தாவிடம் இருந்து வந்த பதில் வேறாக இருந்தது.
“க்கா என்கிட்ட யாரும் இப்படி இல்ல….அது எப்படி அவரு கூட இருந்தா எங்க அம்மா என் பக்கத்துல இருக்குற மாதிரி இருக்கு….என்னை எப்போ திட்டுனாலும் அதுல ஏதோ ஒரு அக்கறை இருக்குக்கா…..என்னால அதை உணர முடியுது….அதனால தான் சொல்லுறேன்…..அவரும் என்னை விரும்புறாருனு….”
“சரிடி அவரு உன்னை விரும்புறாருனே வச்சுக்குவோம்….அதை அவர் வாயல சொல்ல வச்சிடு….உனக்கும் மனசு தடுமாறம இருக்கும்ல….அன்னைக்கு நீ தான சொன்ன என்னோட விஷயத்துல தலையிடாதனு சொன்னாருன்னு….ஏன் அப்படி சொன்னாரு….”என்று பாரதி எதிர் கேள்வி எழுப்ப அமிர்தாவால் பதிலளிக்க முடியவில்லை.
“என்னடி பதில் சொல்லாம உட்கார்ந்திருக்க….”
“தெரியலை….”
“அதோட அன்னைக்கு யாரோ ஒரு பொண்ணு பேசினதா சொன்ன அது யாருன்னு உன்கிட்ட சொன்னாரா….”என்று கேட்க அமிர்தா தலை இல்லை என்னும் விதமாக ஆடியது.
“இப்ப சொல்லு அவரு உன்னை விரும்புறாரா….”என்று பாரதி கேட்க,அமிர்தாவிடம் பதிலில்லை.மீண்டும் சுனாமி பேரலைகள் போல் மனது கொந்தளிக்க தொடங்கியது.ஒருவேளை பாரதிக்கா சொல்லுவது போல் அவர் என்னை காதலிக்கவில்லை என்றால் அந்த வார்த்தையே அவளை நிலையிழக்க செய்ய கலங்கிய கண்கள் மனஅழுத்தம் தாங்காமல் சொருகியது.அமிர்தாவின் உடல் தள்ளாடுவதைக் கண்ட பாரதி வேகமாக எழுந்து அவளிற்கு குடிக்க தண்ணீர் கொடுத்து அதிலேயே முகத்தை கழுவ செய்தவள் அவளின் அருகில் அமர்ந்து அவள் தலையை தன் தோள்களில் தாங்கி,
“என்ன புள்ள நீ….நான் ஏதோ கேட்க போய்….இப்படி என்னை பயமுறுத்திட்ட….கொஞ்ச நேரம் அப்படியே இரு….”என்றவள் அமிர்தாவின் முதுகை வருடியபடி இருந்தாள்.முழுதாக பத்து நிமிடம் கடந்து தான் அமிர்தா தன்னிலை அடைந்தாள்.
“இப்ப எப்படி புள்ள இருக்கு….”என்று கேட்க
“ம்ம் இப்ப தேவலாம் க்கா….”
“நான் உன்னை எதுவும் கேட்கல் புள்ள….நீ தூங்கு….”என்றுவிட்டு பாரதி எழ அவளின் கை பிடித்த அமிர்தா,
“க்கா…..அவரு என்னை விரும்பலனு சொல்லுரீங்களா….”என்று கேட்க,
“இதுக்கு நான் என்ன பதில் சொல்ல…..”
“உண்மையை மட்டும் சொல்லுங்க…..உங்க மனசுல என்ன தோணுதோ அதை சொல்லுங்க….”என்றுவிட,மீண்டும் அவள் அருகில் அமர்ந்தவள்,
“நிஜமா தெரியலை புள்ள….ஒரு சமயம் நீ சொல்லுறத பார்த்தா உன்னை விரும்புற மாதிரி தான் இருக்கு….இன்னொரு சமயம்…..ம்ஹம் தெரியலை…..”என்றுவிட்டு அமிர்தாவின் முகம் காண,அவளும் ஏதோ யோசிப்பது போல் தான் இருந்தது.
“என்ன புள்ள யோசிக்கிற….சரி அதை விடு நீ என்ன நினைக்கிற…..”
“எனக்கும் தெரியலை….”
“ம்ம்….அதுக்கு தான் சொல்லுறேன்….உன் மனசுல உள்ளத அந்த பையன்கிட்ட சொல்லுனு…..இங்க பாரு அமிர்தா நீ சின்ன குழந்தை இல்லை….நீ விரும்புற சரி அதே போல அந்த பையனும் விரும்புனா சந்தோஷம் தான் ஒருவேளை….”என்றுவிட்டு அவளின் முகம் காண அதில் சொல்லான்ன வேதனை,
“எனக்கு புரியுது புள்ள உன் மனசு ஆனா…..வேணாம் நீ இந்த பரிட்சை முடிஞ்ச உடனே சொல்லிடு…..எனக்கு என்னவோ அது தான் நல்லதுனு தோணுது…..”என்று பாரதி கூற,அமிர்தாவிற்குமே அதுவே சரியெனப்பட்டது மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு அவனுடன் இருப்பதை விட அதை கூறிவிடுவது நல்லது.
“இங்க பாரு அமிர்தா….”என்று அவளின் யோசனையை கலைத்த பாரதி,
“நான்….ஒண்ணு சொல்லுவேன் என்னை தப்பா எடுத்துக்க கூடாது…..”
“ஒருவேளை அவரு என்னை விரும்பலனாலும் நான் உடைஞ்சி போயிடக்கூடாது…..எந்த தப்பான முடிவுக்கும் போகக்கூடாது….அதான…”என்று பாரதி தொடங்கியதை அமிர்தா முடித்து வைக்க,ஆமாம் என்று தலையாட்டிய பாரதி அவளின் பின்னிருந்த அமிர்தாவின் அம்மா படத்தை எடுத்து அதை அவள் கையில் திணித்து,
“இவங்க மேல சத்தியம் பண்ணு….”என்றுவிட,அமிர்தாவின் கைகள் ஆட்டம் கண்டது.
“என்னடி யோசிக்கிற செய்…உங்க அம்மா உன்னை எப்படியெல்லாம் வளர்த்தாங்க….உனக்காக அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டாங்க….அவங்க உன் மேல வச்சிருந்த நம்பிக்கையை வீணாக்கிடாத….ம்ம் செய்….”என்று பாரதி அமிர்தா சத்தியம் செய்யும் வரை விடவில்லை.
“தப்பா எடுத்துக்காதடி எனக்கு நான் செய்யுறது தான் சரினு படுது…..இதுனால நீ உடைஞ்சு போறனு தெரியுது….ஆனா முடியல….”என்றுவிட்டு கண்ணீர் விட அமிர்தாவிற்குமே கஷ்டமாக இருந்தது.தான் செய்வது சரி தவறு என்று பரித்தரியா நிலை தான் இருவருக்கும்.பாரதி என்ன தான் வயதில் அமிர்தாவை விட பெரியவள் என்றாலும் அவளிற்கும் எதுவும் தெரியவில்லை தன்னால் முடிந்த மட்டும் தன் தங்கை போன்றவளை காக்க தான் நினைத்தாள்.
அமிர்தாவின் நிலையும் அதுவே தான் செய்வது சரி தவறு என்று பரித்து பார்க்கமுடியவில்லை.சிவாவை காணும் வரை அலையடிக்கும் மனது அவனைக் கண்டவுடன் அமைதியடைவதை நிறுத்தவும் முடியவில்லை.
“என்ன புள்ள அமைதியா இருக்க…என்னை மன்னிச்சிடுடீ….”
“அய்யோ அக்கா….விடுங்க நீங்க தப்பு செய்யல….நானும் தான்….எனக்கு அவரை பிடிச்சிருக்கு….அவருக்கு என்னை பிடிச்சிருக்கா அது தான் இப்ப கேள்வியே….ஆனா என் உள் மனசு சொல்லுது அவருக்கும் என்னை பிடிக்கும்னு….ஆனா என் மனசு சொன்னதை மட்டும் நம்பிக்கிட்டு இருக்கக் கூடாதில்ல….நான் அவர் கிட்ட பேசுறேன் க்கா….”
“ஒருவேளை அவரு இல்…இல்லைனு சொல்லிட்டா….உடைவேன் தான் அதுக்காக தப்பான வழியை தேர்ந்தெடுக்கமாட்டேன்….”என்று அமிர்தா உறுதியாக கூறியவுடன் பாரதிக்கு மூச்சே வந்தது.உடனே கடவுளுக்கு அமிர்தாவின் காதல் நிறைவேற வேண்டும் என்று வேண்டுதல் வைத்துவிட்டாள்.ஆனால் அனைத்து வரமும் கடவுள் கொடுப்பதில்லையே இதில் அமிர்தாவின் காதல் வரம் கைகூடுமா…
error: Content is protected !!