Skip to content
Post Views: 5,204
உன் காதல் ஒரு வரமாய்……5
தனது அறையில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்த அமிர்தாவையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பாரதி.
“ஏய் புள்ள வந்ததிலிருந்து இப்படி தான் உட்கார்ந்திருக்க என்ன விஷயம் என்ன ஆச்சுனு சொல்லு….”என்று கேட்க அமிர்தா கடையில் நடந்த அனைத்தையும் பாரதியிடம் பகிர்ந்தவள்,
“க்கா….எனக்குனு இருக்குற ஒரே பிடிப்பு இந்த வேலை தான்….இப்ப அதுவும் நிலைக்காது போல….என்ன செய்யறதுனே புரியல….”என்று கூற,
Advertisement
“வேலையை விட்டு உன்னை தூக்கல தான…அவங்க உன்னை எச்சரிச்சு தான அனுப்பியிருக்காங்க…..நீயா ஏன் கற்பனை செஞ்சு பயந்துக்குற….”
“இல்லக்கா….அவங்க என்னை எச்சரிச்ச மாதிரி மட்டும் தெரியல எனக்கு தகவல் சொன்ன மாதிரி தான் இருந்துச்சு….என்னோட வேலை எப்போ வேணா போகலாம் அப்படி தான் சொல்லுற மாதிரி இருந்துச்சு….”என்று அமிர்தா கூற,
“சரிடி இப்ப போகலை தான….போகும் போது பார்த்துக்குகலாம்….”என்று பாரதி கூற,
Advertisement
“க்கா….உனக்கு புரியலை….எனக்கு இந்த வேலை போயிட்டா அடுத்த வேலை உடனே எல்லாம் கிடைக்காது எத்தனை நாள் ஆகுமோ எங்கெல்லாம் அலையுனுமோ…”
Advertisement
“ஏன்டீ புலம்புற….அப்படியெல்லாம் ஆகாது….இனி வேலையில கவனமா இரு….”
“ம்ம்….இனி நான் எல்லாத்திலேயும் கவனமா தான் இருக்கனும்….இந்த வேலை போகறதுக்கு முன்ன நான் வேற வேலை தேடனும்….”என்று தீவிரமாக கூற,
“என்ன வேலை தேடப்போறியா….”
Advertisement
“ம்ம்….வேற வழி….இப்பவே நான் சுதாரிச்சா தான் எனக்கு நல்லது இல்ல ரொம்ப கஷ்டம்….”என்றவள் முகத்தில் ஆயிரம் ஆயிரம் கவலைகள்.சின்ன பெண் தன்தனியாக இந்த உலகத்தில் வாழ்வது அத்தனை சுலபம் இல்லையே எத்தனை இன்னல்களை கடந்து வர வேண்டியிருக்கும் என்று நன்றாக பாரதிக்கு புரிந்தது.திரும்பி அமிர்தா வை பார்த்தாள் கண்கள் மூடி படுத்திருந்தாலும் விழிகள் உள்ளே அங்கும் இங்கும் உருண்டுக் கொண்டு தான் இருந்தன ஏதோ நடுகடலில் தத்தளிப்பவள் போல மனதளவில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.
“இந்தா புள்ள…..எந்திரி….”என்று பாரதி அமிர்தாவின் தோள்களை தொட,
“என்னக்கா….”
“எனக்கு ஒரு யோசனை….”
“என்ன….”
“அது நீ அந்த சிவாவை ஒரு தடவை தேடி பாரேன்….”
“ப்ச் க்கா….எனக்கு நம்பிக்கையில்லை….அந்த குருக்கள் கிட்ட கூட கேட்டு பார்த்துட்டேன்…..அவருக்குமே அவனை பத்தி எந்த தகவலும் தெரியலை…”என்று அமிர்தா கூற,
“இல்லடி ஒரு தடவை முயற்சி பண்ணி பாரு….ஒருவேளை கிடைச்சா….உனக்கு ஏதாவது வழி சொல்லுவார்ல….நீயும் படிச்சு நல்லவேலைக்கு போகலாம்….”என்று பாரதி கூற அமிர்தாவிற்கும் ஆசை தான் ஆனால் அதற்கு அந்த கடுவான் கிடைக்க வேண்டுமே.
“என்னடி யோசனை….ஒரு தடவை முயற்சி பண்ணு கிடைச்சா பேசு….இல்லைனா விடு வேற வேலை பார்த்துக்கலாம்…..நானும் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வைக்குறேன்….”என்று பாரதி கூற அமிர்தாவும் சரியென்று தலையாட்டினாள்.
அடுத்தநாளே காலை வேலைக்கு செல்லும் முன் கோவிலுக்கு சென்று குருக்களிடமும் சிவா பற்றி விசாரித்துவிட்டு அவனை எங்காவது பார்த்தால் தனக்கு கூறும் படி கூறிவிட்டு தான் வந்தாள்.எதற்கு என்று கேட்டவரிடம் என் வேலை விஷயம் என்று கூற அவரும் சரியென்று கூறினார்.ஆனால் ஒரு வாரம் கடந்த நிலையில் அவனை பற்றிய எந்த தகவலும் இல்லை வரவில்லை.
“க்கா….இதெல்லாம் சரிவராதுக்கா….நீங்க ஏதோ ஒரு இடத்துல சொல்லியிருக்கேன்னு சொன்னீங்களே….”என்று அமிர்தா பாரதியிடம் கேட்க,
“சொல்லி வச்சிருக்கேன் புள்ள….ஆனா அவங்க எதுவும் இதுவரை பதில் சொல்ல….”என்று பாரதி கூற அமிர்தாவிற்கு கவலை இன்னும் அதிகம் தான் ஆனது.இப்போதெல்லாம் அவள் வேலையில் கவனமாக இருந்தாலும் ஏனோ மாலதி சாதரணமாக கூப்பிட்டாலும் மனதில் பயம் தான்.
மேலும் ஒரு வாரம் கடந்த நிலையில் ஒரு நாள் மாலை வேளையில் அமிர்தாவிற்கு குருக்களிடம் இருந்து அழைப்பு வந்தது.இன்று சிவாவை பார்த்தாக கூறியவர் அவளை உடனே வரும்படி அழைத்தார்.ஆனால் அமிர்தாவால் அவர் கூறிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை.
“அச்சோ சாமி லேட்டாகிடுச்சா….அவரு போயிட்டாரா….”என்று பதட்டத்துடன் கோவிலுக்குள் வந்து அவள் வினவ,
“எதுக்கு என்னை நீ தேடுற….”என்று அழுத்தமான குரல் ஒன்று அவளின பின் ஒலிக்க திகைத்து திரும்பினாள்.அங்கே தூணில் கைகளை கட்டிக் கொண்டு சிவா நின்றான்.அவனைக் கண்ட நொடி அமிர்தாவின் முகத்தில் ஆயிரம் மத்தாப்புக்கள் அவளையும் மீறி அவள் முகம் பிராகசிப்பதை காட்டிவிட்டது.அதை சிவாவும் கவனித்துவிட முகம் இன்னும் கடின முற்றது.
“வந்துட்டீங்களா….உங்களை தான் இவ்வளவு நாளா தேடிக்கிட்டு இருந்தேன்….”என்றபடி அவள் சிவாவை நெருங்க,அவள் நெருங்கும் முன் அவளை தடுத்து நிறுத்தியவன்,
“என்ன விஷயம்….”
“அது….நீங்க ஏதோ கவர்மெண்ட் எக்ஸாமுக்கு படிக்கிறீங்க தான நானும் பனிரெண்டாவது முடிச்சிருக்கேன் எனக்கு ஏதாவது அந்த மாதிரி படிச்சி வேலைக்கு போக முடியுமா…..நம்ம மாமி தான் சொன்னாங்க…..உங்க கிட்ட கேட்க சொல்லி…..”என்று அவள் படபடவென கூறி முடிக்க,
“அதான பார்த்தேன் சாவித்ரி பொண்ணு தப்பான எதுவும் செய்யமாட்டா….”என்று குருக்கள் கூற,
“என்ன சாமி நீங்க நான் தான் உங்க கிட்ட சொன்னேன் தான….அப்புறமும் என் மேல உங்களுக்கு சந்தேகமா போங்க நான் உங்க கூட பேசமாட்டேன்…..”என்று முகத்தை தூக்க,
“அட மன்னிச்சிக்கமா….நான் தெரியாம பேசிட்டேன்….அது சிவா தான் சந்தேகமா கேட்கவும் எனக்கும் ஒரு சந்தேகம் வந்திடுச்சு….”என்று குருக்கள் விளக்க,சற்று சமாதானம் ஆனாலும் சிவாவை முறைக்க தவறவில்லை அவள்.
“என்ன முறைப்பு….”என்று சிவா கடுகடுவென தான் கேட்டான்.
“உங்களை பத்தி கேட்டா உங்க பின்னாடி வராங்கனு அர்த்தமா….அவ்வளவு எல்லாம் நீங்க இல்லை….”என்று அமிர்தா கூற,சிவா முகத்தில் புன்னகை விரிந்தது.
“ஹலோ நான் உங்களை திட்டுறேன்….ஏதோ அவார்டு கொடுத்த மாதிரி சிரிக்கிறீங்க….”என்று அவள் கேட்க தலையை இடவலமாக ஆட்டியவன்,
“சரி என் கூட வா….”என்று அழைக்க அமிர்தா தயங்கி நின்றாள்.
“என்ன என்கிட்ட படிக்கிறதுக்கு கேட்ட இப்ப தயங்குற…..”என்று அவன் கேட்க,அவனிடம் கேட்டு படிக்க வேண்டும் தான் அதற்காக அவன் கூப்பிடும் இடத்திற்கு செல்லாமா என்று புரியவில்லை.அவள் தயக்கத்தை பார்த்த குருக்கள்,
“போமா…நல்ல பையன் தான்….உன்னை பத்தி எல்லாத்தையும் அவன் கிட்ட சொல்லியிருக்கேன் கண்டிப்பா உதவுவான்…..”என்று அவர் கூறவும் தான் அவனுடன் சென்றாள்.கோவிலுக்கு அருகில் இருந்த பார்க் ஒன்றில் அமர்ந்திருந்தனர் இருவரும்.
“என்ன படிச்சிருக்க….”
“டுவல்த் முடிச்சிருக்கேன்….”
“எப்ப முடிச்ச…..”என்று சிவா கேட்க அமிர்தா விரல்களால் ஐந்து என்று காட்ட,
“ம்ம்ம்….”
“ரொம்ப வருஷம் ஆகிடுச்சா என்னால எழுத முடியாதா….”என்று பதட்டத்துடன் வினவ,
“இல்லை அப்படி இல்லை….உன்னை பத்தி குருக்கள் சொன்னாரு….உனக்கு யாரும் இல்லைனு…..இப்ப எங்க வேலை பார்க்குற….”என்று கேட்க,
“அது xxx துணிக் கடை குடோன்ல தான் வேலை பார்க்குறேன்…..அம்மா அங்க தான் வேலை பார்த்தாங்க அதனால எனக்கு அங்கேயே வேலை கிடைச்சிடுச்சு…”என்று கூற,
“உனக்கு இந்த மாதிரி கவர்மெண்ட் எக்ஸாம் எல்லாம் இருக்குனு தெரியாதா….”
“இல்லை தெரியாது….மாமி சொன்னதுக்கு அப்புறம் தான் தெரியும்…..அதனால தான் உங்க கிட்ட கேட்கலாம்னு தான் உங்களை தேடுனேன் வேற எந்த காரணமும் இல்லை….”என்று அவசரமாக கூற,சிவா புன்முறுவலுடன் ஏதோ வாய் அசைத்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.அவன் வாயசைப்பதை பார்த்து அமிர்தா,
“என்ன….”என்று கேட்க,
“என்ன….”என்றான் அவனும்,
“இல்லை ஏதோ சொன்னீங்க….”
“ஒண்ணுமில்ல….சரி விஷயத்துக்கு வருவோம்…..”என்றவன் எழுந்து நடக்க அவனின் பின்னே அவளும் நடந்தவள் திடீர் என்று அவன் திரும்பிய நேரம் அவன் நெஞ்சில் மோதி நின்றாள்.
“ஏய்….எதுக்கு இப்படி என் பின்னாடியே வர….அங்க உட்காரு….”என்று அவன் கடுகடுக்க,
“இல்லை நீங்க தான் எந்திரிச்சு நடந்தீங்க…அதான்….”என்று அவள் கூறிக் கொண்டே அவனை பார்க்க அவனது முறைப்பில் பழைய இடத்திலேயே அமர்ந்து கொண்டவள்,
“சரியான கடுவான்….கடுவான்….”என்று மனதிற்குள் திட்டிக் கொள்ள,
“இங்க பாரு….நீ டுவல்த் தான் முடிச்சிருக்க….இந்த குலாபிகேஷனுக்கு போஸ்ட் ஆபிஸ் எக்ஸாம் எழுதலாம்….அதுக்கு உன்னோட டென்த்,டுவல்த் சர்டிபிகேட் இருக்கனும்….இருக்கா….”
“அதெல்லாம் பத்திரமா வச்சிருக்கேன்….”
“குட்….முதல்ல நீ தினமும் நீயூஸ் பேப்பர் வாசி அதுல இந்த மாதிரி எக்ஸாமுக்கு விளம்பரம் கொடுப்பாங்க அதை பார்த்து அப்ளை பண்ணி எழுது….இது மத்திய அரசு எக்ஸாம் அதனால பெண்களுக்கு இலவசம் முயற்சி பண்ணு….சரி நான் கிளம்புறேன்….”என்றுவிட்டு சிவா கிளம்ப,அமிர்தாவுக்கு பாதி புரிந்து புரியாத நிலை.
“நில்லுங்க…..நில்லுங்க….”என்று அவள் கத்திக் கொண்டே அவனின் பின்னே ஓட,
“என்ன அதான் சொல்லிட்டேனே….”என்று புருவத்தை ஒற்றை கையால் நீவிக் கொண்டே திரும்ப,
“இல்ல…அது எனக்கு நீங்க சொன்னது பாதி புரியுது பாதி புரியல…”
“என்ன புரியுது புரியல….”
“அது….அது……”
“சீக்கிரம் சொல்லு எனக்கு வேலையிருக்கு….”வல்லென்று விழவும் அமிர்தாவின் முகம் கசங்கி கண்களில் கண்ணீர் இறங்கிவிட்டது.
“ஏய் எதுக்கு இப்ப அழற….”என்று பல்லிடுக்கில் அதற்கும் அவன் திட்டவும்,
“பின்ன இப்படி நீங்க எரிஞ்சு விழுந்தா அழாம என்ன செய்வாங்களாம்…..எனக்கு இப்படி ஒரு எக்ஸாம் இருக்குன்றதே இப்ப தான் தெரியும் இதுல நீயே பார்த்து அப்ளை பண்ணு சொல்லுறீங்க…..எனக்கு எப்படி பண்ணுறதுனு தெரியாது….கொஞ்சம் சொல்லி தரீங்களா….”என்று அழுதபடியே கேட்க,
“இதோ பாரு எனக்கு என்ன வேற வேலை இல்லனு நினைச்சியா…உனக்கு ஏதோ கஷ்டம்னு சொன்னாங்க அதான் உதவி பண்ணலாம் வந்தேன் பாரு என்னை சொல்லனும்….”என்று காய,முகம் கன்றிய அமிர்தா,
“தேங்க்ஸ் நான் பார்த்துக்குறேன்….”என்றுவிட்டு கிளம்பிவிட்டாள்.
“ஏய் நில்லு….”என்று சிவாவின் அழைப்பது கேட்டாலும் நிற்காமல் அவள் செல்ல வேகமாக அவளின் முன் வந்து மறித்த மாதிரி நின்றவன்,
“என்ன திமிறா…கூப்பிட்டுறேன் போயிட்டே இருக்க…”என்று கத்த,
“ஏன் கத்துரீங்க….அதான் நீயே பார்த்துக்கோ சொல்லிட்டீங்களே….அதான் கிளம்பிட்டேன்….”
“எதுவும் தெரியாம எப்படி அப்ளை பண்ணுவ…”என்று கேள்வி கேட்க,
“……”
“உன்னை தான் கேட்குறேன்…..”
“தெரியலை நான் பார்த்துக்குறேன்….”என்றவள் குரலே உள்ளே சென்றிருந்தது.தன் புருவத்தை நீவியபடி,
“சரி உனக்கு எத்தனை மணிக்கு வேலை தினமும் முடியும்….”என்று கேட்கவும் அமிர்தாவின் முகம் பிரகாசிக்க,
“என் மூஞ்சில என்ன இருக்கு எத்தனை மணிக்கு வேலை முடியும்னு சொல்லு….”என்று எரிந்து விழவும்,
“அது ஒன்பது மணி ஆகும்…”
“ஒன்பதா??”என்று யோசித்தவன் பின்,
“சரி நீ ஞாயிறு ப்ரீ தான அன்னைக்கு இந்த இடத்துக்கு வா….பார்க்கலாம்…”என்றுவிட்டு செல்ல,
“ஹலோ…..தேங்க்ஸ்….”என்று அமிர்தாவும் மகிழ்ச்சியில் கத்த,
“ஷ்ஷ்….கத்தாத….யூ ஆர் வெல்கம்…..”என்று சிறு புன்னகையுடன் கூறிவிட்டு செல்ல,அமிர்தாவின் மனதில் அவனின் சிரித்த முகம் ஆழப் பதிந்து போனது அவளை அறியாமல்.புதிய வாழ்வின் தொடக்கம் அவளின் வாழ்வில் அழகாகவே தொடங்க மனதெங்கும் ஆர்பரிக்கும் அலை போல ஆர்பரித்துக் கொண்டது.இது வெறும் சிறிய தொடக்கம் தான் இதில் வெற்றி பெற்றுவிட்டாள் அவளின் வாழ்வு நிச்சயம் மாறிவிடும் அதில் எந்த மாற்றமும் இல்லை.பாலைவனமாக இருந்த தன் வாழ்வு வசந்தமாக மாற கடவுளிடமும்,கடவுளாக மாறிவிட்ட தன் பெற்றோரிடமும் வேண்டுதல் வைத்தாள்.
error: Content is protected !!