Skip to content
Post Views: 5,291
உன் காதல் ஒரு வரமாய்…..7
அமிர்தா அறையில் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருக்க கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே வந்தாள் பாரதி.
“என்னடி எதுக்கு அவசரமா வர சொன்ன….”
“க்கா….இப்ப நான் என்ன பன்றதுனே தெரியலைக்கா….”என்று அமிர்தா கண்களை கசக்க,
Advertisement
“ஓங்கி அரைஞ்சேனா பாரு….இப்ப எதுக்குடீ கண்ணை கசக்குற….முதல்ல விஷயத்தை சொல்லிட்டு அப்புறம் அழு….”என்று பாரதி கத்த,அமிர்தா திருதிருவென முழித்தாள்.
“பின்ன என்னடி…நீ போன் பண்ணி ரொம்ப முக்கியமான விஷயம் சீக்கிரம் வா சொல்லவும் மாடில துணி துவைக்கிறத பாதில விட்டுட்டு வந்திருக்கேன்….நீ என்னடானா அழுகாச்சி படம் காட்டிக்கிட்டு இருக்க….என்ன விஷயம்னு சொல்லு….”
“க்கா சிவா இருக்காரு இல்ல….அவரு எனக்கு எப்படி இந்த எக்ஸாமுக்கு அப்ளை பண்ணும்னு சொல்லி கொடுத்தாரு…..”
Advertisement
“அப்ளைனா….”
Advertisement
“அச்சோ அதன் அக்கா எப்படி பதிவு பண்ணி எழுதனும்னு சொன்னாரு…..”
“ஓஓ….பரிட்சைக்கு பதிவு பண்ணி தான் எழுதனுமா….சரி மேல சொல்லு….”
“ பதிவும் செஞ்சி கொடுத்தாரு….அப்புறம் எக்ஸாமுக்கு எப்படி படிக்கனும் எந்த புக்குல படிக்கனும்னு சொன்னாரு….நானும் அவருக்கிட்ட சரி நான் வாங்கி படிக்கிறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்….அப்புறம்…..அப்புறம்….”
Advertisement
“என்ன சொல்லேன்டீ….அப்புறம் மடப்புறம்முனு சொல்லிக்கிட்டு இருக்க….”
“நான் புத்தக கடைக்கு போய் அவரு சொன்ன புத்தகத்தோட பேரு எல்லாம் சொல்லி எவ்வளவுனு கேட்டா ஐய்யாயிரம் ரூபாய்னு சொல்லுராருக்கா…..இப்ப நான் ஐய்யாயிர ரூபாய்க்கு எங்க போவேன்….பேங்குலேந்து பணம் எடுக்கலாம்னா இப்ப தான் ரூமு வாடகைக்கு மூவயிரம் எடுத்தேன்…..”
“என்னது ஐய்யாயிரம் ரூபாயா….என்னடி சொல்லுர….ஐய்யாயிரம் ரூபாய்க்கு கூடவா புக்கு இருக்கு….”என்று பாரதி வாயை பிளக்க,
“ஆமாக்கா….எனக்கும் அப்படி தான் இருந்தது….ஆனா நாலு புக்கு சேர்த்து ஆயிரம் ரூபாயாம்….ஒண்ணும் மட்டும் கொடுங்கனு கேட்டதுக்கு இதுதெல்லாம் ஒரு செட்டா தான் தருவோம்னு சொல்லிட்டாங்க…..அதோட அந்த சிவா வேற இது மாதிரி இன்னும் ஐஞ்சு செட் புக்ஸ் இருக்கு எல்லாத்தையும் படிக்கனும்மு சொல்லுராரு….இப்ப என்னக்கா பண்ணறது….”
“என்னது இன்னும் அஞ்சு செட் புக்கா…..”என்று பாரதி வாயை பிளக்க,
“அக்கா வாயை பிளக்காத….இப்ப என்ன பண்ணறது சொல்லு….”என்று அமிர்தா கேட்க,
“உனக்கு தான் சம்பளம் வந்திருக்குமேடீ….அதுல வாங்கிக்க….”
“சம்பளம் இன்னும் போடலைக்கா……இன்னும் ஒரு வாரம் ஆகும்னு சொல்லிட்டாங்க…..”
“சரி ஒருவாரம் கழிச்சு அந்த புக்கை வாங்கு….”என்று பாரதி கூற,
“என்னக்கா நீ புரியாம பேசுற….அதுல ஐய்யாயிரம் சாப்பாட்டுக்கு கட்டனும்….மீதிய நான் சேமிச்சு வச்சா தான் அடுத்த மாசம் ரூம் வாடகைக்கும் பணம் இருக்கும்….”என்று அமிர்தா கூற பாரதி என்ன சொல்லுவது என்று தெரியாமல் நின்றாள்.அவளது அளவில் புத்தகம் எல்லாம் நாற்பது,ஐம்பது ரூபாயில் தான் இருக்கும் என்று கணிப்பு.
“என்னக்கா யோசிக்குற….”
“எனக்கு ஒண்ணும் புரியலைடீ….இதெல்லாம் எனக்கு தெரியாது….”என்று பாரதி கூற,அமிர்தாவும் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.
“நீ பேசாம அந்த சிவாக்கிட்டேயே கேளு….”என்று பாரதி கூற அமிர்தாவிற்கும் அதுவே சரியென பட அவனிற்கு போன் செய்துவிட்டாள்.
“சிவாண்ணா உங்க போன்…..”என்று ஆலையில் வேலை செய்பவன் கூற,
ஒரு ராட்ச இயந்திரத்தின் உள்ளே தலையை விட்டுருந்த சிவா உள்ளிருந்தே,
“அடிக்கட்டும் விடு…..”என்று கூறிவிட்டான்.
“என்னக்கா எடுக்கவே மாட்டாங்கிறாரு….”என்று அமிர்தா குறைபட,
“ஏன்டீ உனக்கு வேலை இல்லனா அவருக்கும் வேலையில்லாம இருக்குமா….அவரே போன் பண்ணுவாரு….விடு….சரி நான் போய் துணியை துவைச்சு காயப்போட்டு வரேன்….”என்றுவிட்டு சென்றுவிட்டாள்.
இரவு நேரம் பத்தை நெருங்கும் போது தான் சிவா தனது வேலைகளை முடித்துக் கொண்டு வெளியில் வந்தான்.தனது கைபேசியை பார்த்துக் கொண்டே பேருந்து நிறுத்தம் வர புதிய எண்ணில் இருந்து இரண்டு அழைப்புகள் வந்திருக்கவும்,யாராக இருக்கும் யோசித்துக் கொண்டே அந்த எண்ணிற்கு அழைத்துவிட்டான்.
அமிர்தா காலை வேலைக்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டு அப்போது தான் உறங்க ஆயத்தமாக அவளின் பேசி இசைந்தது.அதை எடுத்து பார்த்தவளுக்கு உள்ளுக்குள் உவகை ஊற்று தன்போல் உருவாக அழைப்பை ஏற்று,
“ஹலோ…..”என்றாள்.
“ஹலோ யாரு….இந்த நம்பர்லேந்து கால் வந்திருச்சு….”என்று சிவா கேட்க,
“ஹலோ நான் அமிர்தா….”என்று தன்னை சுணக்கத்துடன் அறிமுகம் செய்து கொண்டாள்,மனதில் தன் நம்பரை சேமிக்கவில்லையா என்ற எண்ணமும் தோன்றியது.
“எந்த அமிர்தா????”
“ஹலோ இன்னைக்கு காலையில மீட் பண்ணோமே அந்த அமிர்தா…..”என்று சற்று கடுப்புடன் அவள் பதில் கொடுத்தாள்.உள்ளுக்குள் சாருக்கு எத்தனை அமிர்தாவை தெரியுமாம் என்ற கோபமும் இருந்தது.
“ஓஓஓ….நீயா சொல்லு எதுக்கு போன் பண்ண….”
“அது உங்க கிட்ட ஒண்ணு கேட்கனும் அதான்….”
“சீக்கிரம் சொல்லு எனக்கு வேலையிருக்கு…..”என்று மறுபக்கம் காய,
“ப்பா….சரியான கடுவான்….எப்போதும் இப்படி தான் இருப்பாரோ….”என்று இரண்டு நொடிகள் அமிர்தாவின் மூளை யோசனை செய்ய,
“ஹலோ ஹலோ…..” என்று அந்த இரண்டு நெடிகளில் பத்து முறை கூப்பிட மறுபக்கம் பதில் இல்லை என்று தெரியவும்,
“ஏய்ய்….லைன்ல இருக்கியா இல்லையா….”என்று கத்த,
“அச்சோ ஏன் கத்துரீங்க….நான் லைன்ல தான் இருக்கேன்….”
“நீ கனவு கண்டுட்டு போன் பேசுவ அதுவரை நான் பொறுமையா இருக்கனுமா…”என்று அதற்கும் அவன் கத்த,
“இல்ல இல்ல….நான் பேசிக்கிட்டு தான் இருந்தேன்….”
“உனக்கு நீயே பேசிக்கிட்டு இருக்க எனக்கு ஏன் போன் போட்ட….நான் வச்சிடுறேன்….அப்புறம் நீயே பேசிக்க….”
“வச்சிடாதீங்க வச்சிடாதீங்க……”என்றவள் காலையில் நடந்த விஷயங்களை கூறி தன்னால் புத்தகம் வாங்க முடியவில்லை என்று கூற,
“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்….”என்று அவனின் விட்டேத்தியான பதிலில் அமிர்தாவின் மனம் மிகவும் காயப்பட்டது.இவனிடம் கூறினால் ஏதாவது தனக்கு உதவுவான் என்று நினைத்தால் மாறாக தன்னை எள்ளல் செய்வது போல இருந்தது அவனின் பதில்.
“ஹலோ ஹலோ ஏய் என்ன திரும்பியும் கனவுக்கு போயிட்டியா….”என்று மீண்டும் கத்த,
“இல்ல….”
“சரி இதுக்கு தான் போன் பண்ணனா அதுக்கான பதில் இது தான் இந்த மாதிரி கவர்மென்ட் எக்ஸாமுக்கு படிக்கிற புத்தகம் எல்லாம் விலை அதிகமா தான் இருக்கும்…..உன்னால முடிஞ்சா வாங்கு இல்லைன எதாவது லைப்ரெரில இருந்து எடுத்து படிச்சுக்க…என்ன புரிஞ்சுதா….இனி சும்மா எனக்கு போன் பண்ணாத….பை….”என்று கூறிவிட்டு அவன் வைத்துவிட,அமிர்தா முகம் சுண்டி போய் அமர்ந்திருந்தாள்.மனதில் ஏதோ ஒன்று அழுத்தவது போல் ஒரு உணர்வு ஏன் என்று தெரியாமலே கண்களில் கண்ணீர் கட்டியது.
“புள்ள என்ன அழுதுகிட்டு இருக்க….புத்தகம் வாங்கலாம் புள்ள அதுக்கு நீ இப்படியா அழுவ….”என்று கேட்டபடியே அறைக்குள் நுழைந்தாள் பாரதி.
“நான அழல….”என்று முறுக்கிக் கொண்டு அவள் பதில் தந்தாலும் அவளின் முகம் அதை காட்டி கொடுத்தது,
“கண்ணெல்லாம் கலங்கி போயிருக்கு…அழலனு சொல்லுற….சரி சரி படு காலையில சீக்கிரம் போகனும்னு சொன்னல்ல….”
“ம்ம்…..ஆமாக்கா….”என்று கூறிக்கொண்டே கண்களை துடைத்துக் கொண்டு படுத்துவிட்டாள்.ஆனால் தூக்கம் தான் தூரம் போனது மனது ஏதோ சரியில்லாமல் தவித்தது.தந்தை,தாய் இறந்த பின்பு கூட தன்னை தேற்றிக் கொண்டவள் இன்று அந்நிய ஆண் ஒருவனின் ஒதுக்கம் அது ஒதுக்கமா….அவன் உன்னை ஏன் ஒதுக்க வேண்டும்…..முதலில் அவனிற்கு நீ யார்…..என்று மனதில் பல கேள்விகள் வர தொடங்கியது.
“நான் யாரு அவருக்கு….நான் தான் யாரும் இல்லையே…..”என்று வாய்விட்டே புலம்ப,
“என்னடி சொன்ன….”என்று அடுத்த படுக்கையில் இருந்த பாரதி கேட்க,
“ஒ…ஒண்ணுமில்லக்கா….நீங்க தூங்குங்க…”
“உனக்கு ஏதோ ஆகி போச்சு…..போ….”என்று கூறிக் கொண்டே படுத்துவிட்டாள்.
வெகு நேரம் கழித்து தான் அமிர்தாவிற்கு தூக்கம் வந்தது.அடுத்ததடுத்த நாட்கள் நத்தை வேகத்தில் தான் நகர்ந்து அமிர்தாவிற்கு ஏதோ பேருக்கு கடைக்கு சென்றுவந்தாள்.எப்போதும் ஏதோ யோசனையிலேயே இருப்பது போல் இருந்தாள்.பாரதி கூட இரண்டொரு முறை அவளை கேட்டு பார்த்து பின் விட்டுவிட்டாள்.இதற்கு இடையில் சிவா-வை பற்றிய சில விபரங்களும் அவளிற்கு தெரியவந்தது அதுவும் மாமியின் உபயத்தில் அவன் எப்போதும் வேலை வேலை சுற்றுபவன் அதோடு படித்துக் கொண்டும் இருக்கிறான் என்றும் அவன் தங்களுக்கு பல உதவிகள் செய்துள்ளான் என்று அவனின் புகழ் பாடியிருந்தார்.அவர் கூறியதை கேட்டதில் இருந்து அமிர்தாவின் மனதில் சிவா இன்னும் ஊன்றி தான் போனான்.
அன்று தன் வேலைகளை முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தாள்,அப்போது அவளின் கைபேசி இசைக்க,
“இதோ வந்துகிட்டே இருக்கேன் க்கா…”என்று கூறி வைத்துவிட்டாள்.பாரதி தான் அழைத்திருந்தது மாலை நேரமே அழைத்து ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும் சீக்கிரம் வரும்படி கூறினாள் ஆனால் அமிர்தாவிற்கு இன்று வேலை வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் இழுத்துவிட அதனால் மீண்டும் அழைத்து எங்கிருக்கிறாய் என்று கேட்டுவிட்டாள்.அடுத்த பத்தாவது நிமிடம் பாரதியின் முன் நின்றிருந்தாள் அமிர்தா.
“என்னக்கா எதுக்கு இப்ப உடனே வர சொன்ன….”
“அது நமக்கு கீழ் ரூம்ல இருப்பால்ல கீதா…..”
“அய்யோ அவங்களா….ஏன் எதாவது சண்டை போட்டாங்களா….எனக்கு அவங்களை பார்த்தாலே பயம்….” கீதா கொஞ்சம் முசிடு யாரிடமும் ஒட்டமாட்டாள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவள்.அதே சமயம் யாராவது அவளிடம் சீண்டிவிட்டாள் அவர்களை சும்மா விடமாட்டாள் கிழித்து தொங்கவிட்டுவிடுவாள்.அவளின் வாயிற்கு பயந்தே அனைவரும் அவளிடம் சற்று தள்ளி தான் இருப்பர்.
“இவ ஒருத்தி பயத்துக்கு பிறந்தவ….நான் சொல்லுறத முதல்ல கேளுடி….அந்த கீதா அங்க தான் வேலை பார்க்குறா….”
“எங்க….”
“அதான்டி நீ சொன்னியே லை…லைப்னு…..”
“லைப்ரெரியா…..”
“ஆஆ அதான் அதான்…..அங்க தான் வேலை பார்க்குறா….நாம அவகிட்ட பேசி பார்ப்போம்….”
“என்ன கீதா அக்கா கிட்டயா….நான் வரலைப்பா….எனக்கு பயமா இருக்கு….”என்று அமிர்தா நடுங்க,
“நீ இப்படி நடுங்கிட்டே இருந்தனு வை ஒண்ணும் பண்ண முடியாது…..நீ அந்த லைப்….”
“லைப்ரெரி….”
“அதான் அங்க போன தான என்ன சொன்னாங்க…..”
“அது அந்த லைப்ரெரி மெம்பருக்கு மட்டும் தான் புக் எல்லாம் எடுத்துட்டு போக முடியும் சொன்னாங்க…..நான் எப்படி மெம்பர் ஆகறதுனு கேட்டதுக்கு அவங்க என்னை மேலும் கீழும் பார்த்துட்டு பதிலே சொல்லல….அப்புறம் நான் வந்துட்டேன்…..”என்று கூற,
“அதான் இப்ப வா நாம கீதா கிட்ட கேட்போம்….அவ நமக்கு உதவுவா….”
“இல்லக்கா எனக்கு பயமா இருக்கு….அவங்க கொஞ்சம் வெடுக்குனு பேசுவாங்க முடியாதுனு சொல்லிட்டா எனக்கு கஷ்டமா போயிடும்…..”
“ஏன் அந்த சிவா கூட தான் முதல்ல உன்னை திட்டுனான் சொன்ன ஆனா விடாம நீ கேட்ட தான….அதுமாதிரி தான் இதுவும்…..”என்று பாரதி கூறவும் அமிர்தா இன்னும் யோசணையில் இருக்க,
“இந்தா புள்ள நமக்கு அவமானப்படுறது புதுசு இல்லை….அதனால உன் யோசனையை தூக்கி கிடப்புல போடு….இப்ப என் கூட வா…..”என்று அவளை இழுத்துக் கொண்டு போய் கீதாவின் முன் நிறுத்தி அனைத்தையும் பாரதி கூற கீதா அடுத்த நாளே அமிர்தாவை அந்த லைப்ரெரியில் ஒரு மாதத்திற்கு மெம்பராக சேர்த்துவிட்டாள்.
error: Content is protected !!