உயிர் உருகும் காதல் எனதே…..15
உயிர் உருகும் காதல் எனதே…..15
துர்கா மதிய இடைவெளியில் அமர்ந்து வேகமாக உணவை உண்டு கொண்டிருந்தாள்.இன்று வகுப்பில் பாடத்தை முடித்துக் கொண்டு வர நேரம் கடந்துவிட்டது அதனால் தாமாக தான் வந்தாள்.வேகமாக உண்ண புரை ஏறியது அவளிற்கு அதில் அவள் இரும தொடங்க,
“ஏய் பார்த்து பார்த்து…..”என்றவன் குரல் கேட்க,துர்கா வாயில் வைத்த உணவுடன் திரும்ப அங்கு வாயிலில் நின்றிருந்தனர் கற்பகமும்,வீராவும்.அவர்களை பார்த்தவுடன் அவள் எழ,
“உட்காரு நானே வரேன்….”என்று கற்பகம் அவளிடம் வந்தார்.அவரின் பின்னே அவனும் வந்தான்.இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவியபடி நின்றது.இளைத்துவிட்டாள் என்று அவனின் உதடுகள் முணுமுணுக்க,கருத்துட்டாரு என்று அவளின் உதடுகள் முணுமுணுத்து.
Advertisement
“ஏன்டீ இப்படி வேகமாக சாப்புடுற….இந்தா தண்ணிய குடி….”என்று அவளின் தலையை தட்டி அவர் தண்ணீரை கொடுக்க,அதை வாங்கி குடித்தவள்,
“நீங்க எங்க இங்க??…..”என்று கேட்டுக்கொண்டே இருவரையும் பார்க்க,
“உனக்கு தான் எங்களை பத்தி கவலையில்லை…….ஆனா எங்களுக்கு இருக்கு…..”என்று வீரா கூற,துர்கா பதில் பேசவில்லை அவனை பார்த்தபடி இருந்தாள்.
Advertisement
“ஏன்டா இப்படி பேசுற….பாரு புள்ள மூஞ்சே செத்து போச்சு….அவன் பேசினத தப்பா எடுத்துக்காதமா…..கடைக்கு கிளம்பிக்கிட்டு இருந்தான் அவனை பிடிச்சு இழுத்துட்டு வந்தேட்டேன்….அதான் அந்த கோபத்தை உன்கிட்ட காட்டிக்கிட்டு இருக்கான்….”என்றவர் கையில் இருந்த சாப்பாட்டு கேரியரியை திறக்க,
Advertisement
“ஐஐ…..பருப்பு வடை….பாயசாம்….”என்று வீராவை மறந்து சிறுபிள்ளை போல துர்கா குதுகலிக்க அதை ரசித்தபடி நின்றிருந்தான் வீரா.
“இன்னைக்கு உன் மாமாக்கு திதி….அதான் வடை,பாயாசம் எல்லாம் செஞ்சேன்….உனக்கு தான் ரொம்ப பிடிக்குமே அதான் எடுத்துட்டு வந்தேன்….”என்று கூற ஒன்றை எடுத்து தர,துர்காவிற்கு கண்கள் கலங்கிவிட்டது.இரண்டு நாட்கள் என்று அம்மா வீடு வந்தவள் இதோ ஒரு வாரம் கடந்துவிட்டது இன்னும் கணவன் வீடு செல்லவில்லை.வானாதிக்கு உடல் உபாதை படுத்தி வைத்திருக்க அதோட வாசினி வேறு எனக்கு உடம்பு முடியல என்னை வந்து கூட்டிட்டு போ என்று கூறிக்கொண்டிருந்தாள்.
“ஏய் அம்மாக்கே உடம்பு சரியில்லைடி…..கொஞ்சம் பொறுத்துக்க அம்மா உடம்பு சரியானதும் கூட்டிட்டு வரேன்….”என்று துர்கா கூறிவிட,வாசினி வானாதியிடம்,
Advertisement
“அம்மா என்னை வராதனு சொல்லிட்டா உன் பெரிய பொண்ணு…..”என்று கூறிவிட்டாள்.
“என்ன துர்கா இப்படி பேசிட்ட….அவளே மாசமா இருக்கா அவகிட்ட இப்படி பேசியிருக்க….”என்று குறைபட,
“ம்மா சும்மா புரியாம பேசாதீங்க…..உங்களுக்கு பீவர் இருக்கு….அதோட அவளை கூட்டிட்டு வந்து அவளுக்கும் பீவர் வந்துச்சுனா என்ன செய்றது….அதனால தான் உங்களுக்கு சரியானதும் கூப்பிடுறேன்னு சொன்னேன்…..”என்று கூற,வானாதிக்கு துர்கா கூறவருவது புரிந்தாலும் சின்ன மகளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் ஓங்கி இருந்தது.அதை பெரிய மகளிடம் கூற முடியாதே அதனால் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திரிய தொடங்கினார்.அதில் கடுப்பான துர்கா வானாதியிடம்,
“ம்மா உங்களுக்கு உங்க சின்ன பொண்ணை கூட்டிட்டு வரனும் தோணுச்சுனா போங்க இப்பவே கூட்டிட்டு வந்திடுங்க……எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்ல….”என்று கோபமாக கூறிவிட்டு பள்ளிக்கு வந்துவிட்டாள்.என்ன சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் நடந்துகொள்பவரிடம் ஒன்று சொல்லமுடியாது என்று மட்டும் புரிந்தது துர்காவிற்கு.
“என்னடீ யோசனை சாப்பிடுற நேரத்துல…..”என்று கற்பகம் கூற,நிகழ்வுக்கு வந்தவள்,
“இல்ல ஒண்ணுமில்ல….”என்றுவிட்டு சாப்பிட தொடங்க அடுத்த இரண்டு நிமிடங்களில் மதிய இடைவெளி முடிந்துவிட்டதற்கான மணி அடித்துவிட்டது.
“அச்சோ பெல் அடிச்சிடுச்சே…..”என்று கற்பகம் பதற,
“விடுத்த….நான் அப்புறம் சாப்பிட்டுக்குறேன்…..”என்று சாப்பாட்டை அப்படியே மூடி வைத்துவிட்டாள் துர்கா.
“சாப்பிட்டு போகலாம்ல….”என்று வீரா கேட்க,
“இல்ல நேரம் ஆகிடும்…..நீங்க கிளம்புங்க….”என்றுவிட்டாள் துர்கா.கற்பகத்திற்கு மனதே ஆறவில்லை இப்படி பாதி சாப்பாட்டில் மருமகள் எழுந்துவிட்டாளே என்று.
“அத்த இப்ப ஒரு கிளாஸ் முடிஞ்சிட்டா அப்புறம் எனக்கு இரண்டு ப்ரியட் ப்ரீ தான் அப்ப சாப்பிட்டுப்பேன்…..”என்று துர்கா அவரின் எண்ணவோட்டம் புரிந்து கூற,
“சரி நாங்க கிளம்புறோம்….”என்று வீரா கற்பகத்தை பார்க்க,அவரோ துர்காவை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.வேகமாக கைகளை கழுவிட்டு தனக்கான பாட புத்தகங்களை எடுத்துக் கொண்டிருந்தாள்.
“சரிமா பார்த்துக்க நாங்க வரோம்….”என்று அவரும் மனதில்லாமல் கிளம்பினார்.அவருக்கு தெரியும் மருமகள் இப்போது வரமாட்டாள் என்று தெரியுமாதலால்,
“இங்க பாருடீ உன் உடம்பையும் பார்த்துக்கோ…..”என்றுவிட்டு சென்றுவிட்டார்.ஆனால் மகனிடம் புலம்பி தீர்த்துவிட்டார் கற்பகம்.சாப்பிடக்கூட நேரமில்லாமல் ஓடுகிறாளே என்று மனது கிடந்து அடித்துக் கொண்டது.
“ம்மா அவ தான் சொன்னால்ல….இன்னைக்கு கிளாஸ் முடிய கொஞ்சம் நேரம் எடுத்துடுச்சுனு….அப்புறம் ஏன் இப்படி புலம்புறீங்க…..”என்று வீரா வாய் வார்த்தையாக கேட்டாலும் அவன் உள்ளமும் பிசைந்து கொண்டிருந்தது அவன் மட்டுமே அறிவான்.
மாலை தன் பள்ளியிலிருந்து வெளிவரும் போதே வீரா துர்காவிற்காக காத்திருந்தான்.அவனை அந்த இடத்தில் சுத்தமாக எதிர்பார்க்காதவள் திகைத்து நின்றுவிட்டாள்.பின்னே ஒருவாரம் கடந்திருந்தது அவனை கண்டு,பேசி.அன்று மாடியில் பேசியதுடன் சரி இருவருமே பேசிக் கொள்ளவில்லை எங்கே பேசினால் ஏதாவது மீண்டும் பிரிவு பற்றிய பேச்சு வருமோ என்று பயந்தே இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
“எ…..என்ன….நீங்க இங்க…..”என்று திக்கி திணறி கேட்க,
“உன்னை பார்க்க தான் வந்தேன்….வா….”என்றுவிட்டு வண்டியில் ஏற,அவனோ அப்படியே நின்றிருந்தாள்.
“ஏறு….”என்றவன் வண்டியை அவளின் பக்கவாட்டில் நிறுத்த,
“எங்க போறோம்…..”
“சொன்னா தான் வருவியா….”என்று பதில் கேள்வி அவனிடம் இருந்து வர,அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேசாமல் ஏறிவிட்டாள்.அமைதியாக ஒரு பயணம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ள முயலவில்லை.இப்போதும் மனதிற்குள் ஏதோ ஒரு ஓரத்தில் உறுத்தல் இருக்கிறது தான் ஆனாலும் பேசிக்கொள்ளவில்லை.
வண்டியை ஊருக்கு வெளியில் இருக்கும் ஹோட்டலில் நிறுத்தியவன்,
“வா….”என்றுவிட்டு முன்னே நடக்க,அவனை பின் தொடந்து துர்காவும் வந்தாள்.இருவரும் எதிரெதிர் அமர,
“என்ன சாப்பிடுற….”
“இல்ல எனக்கு எதுவும் வேணாம்….”என்று துர்கா கூற அவளை முறைத்துவிட்டு,இருவருக்கும் சேர்த்து மாலை சிற்றுண்டி போல் ஆடர் கொடுத்துவிட,
“எதுக்கு இவ்வளவு சொல்லுறீங்க….”
“எனக்கு பசிக்குது…..”என்றுவிட அதன் பின் துர்கா எதுவும் பேசவில்லை.இனி அவளாக பேசமாட்டாள் என்று புரிந்து,
“அம்மா எப்படி இருக்காங்க….”
“ம்ம்….பீவர் குறைஞ்சிடுச்சு…..ஆனா உடம்பு வலி இன்னும் இருக்குனு சொல்லுறாங்க….”
“டாக்டர் என்ன சொன்னாங்க….இன்னொரு தடவை வேணா கூட்டுட்டு போயிட்டுவாயேன்…..”
“இது வைரல் பீவர் அதனால உடம்பு வலி எல்லாம் இருக்கும்னு முன்னாடியே சொல்லிட்டாங்க….அதுக்கு மருந்து கொடுத்திருக்காங்க….”என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே,பேசியில் அழைப்பு,
“ஹலோ சொல்லும்மா…..”என்று இவள் கூற மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ,
“நான் தான் அவளை வெயிட் பண்ண சொன்னேன் தான அதுக்குள்ள என்ன அவசரம் அவளுக்கு….”என்று துர்கா முகத்தில் கோப ரேகை,
“……….”
“ப்ச் வைங்க….நான் வர லேட்டாகும்…..எதாவது வாங்கிட்டு வரனும்னா எனக்கு மெஸேஜ் பண்ணுங்க…..வைக்கிறேன்….”என்று விட்டு வைத்துவிட,
“என்னாச்சு….”என்றான் வீரா,
“வாசினி வந்திருக்காலாம்…..”
“சரி அதுக்கு எதுக்கு இவ்வளவு கோபப்படுற….”
“இல்ல அம்மாக்கு இப்ப தான் பீவர் விட்டிருக்கு…..இதுல இவ இங்க வந்து இவளுக்கு ஏதாவது வந்துச்சுனா அதனால இரண்டு நாள் கழிச்சு அழைச்சிட்டு வரலாம்னு சொல்லியிருந்தேன்….”என்றவளின் குரலே ஏதோ போல இருக்க,
“முதல்ல சாப்பிடு அப்புறம் பேசலாம்….”என்றுவிட்டான் வீரா.அதற்கு மேலும் மறுக்க முடியவில்லை அமைதியாக அவள் உண்ண,வீராவும் தனக்கானதை உண்டான்.அதற்குள் துர்காவின் கைபேசிக்கு இரண்டு மூன்று மெஸேஜ்கள் வந்துவிட அதை எடுத்து பார்த்தவளின் முகம் இன்னும் கடுகடுவென மாறத்துவங்கியது.
“இப்ப என்ன….”
“ஒண்ணுமில்ல….”என்று பல்லைக்கடித்துக் கொண்டு அவள் கூற,வீரா அவளின் பேசியை பிடுங்கிவிட்டான்.அதில் வந்த மெஸேஜ்களை பார்த்தவனுக்கு கோபம் தான் அத்தனை சாமான்கள் எழுதி அனுப்பியிருந்தார் வானாதி.
“இவ்வளவு எதுக்கு?…..”என்று வீரா கேட்க,துர்கா எதுவும் பதில் கூறவில்லை.
“வாசினிக்காகவா…..”என்றான் அவனாக புரிந்து கொண்டு,
“ஆம்….”என்று அவள் தலையாட்ட,
“இதெல்லாம் மாச சாமான் மாதிரி இருக்கு….இவ்வளவா சாப்பிடுவா…..”
“அவ சாப்பிடுறாளோ இல்லையோ….எங்க அம்மா அவளுக்கு வச்சு ஊட்டிவிட்டுட்டு இருப்பாங்க….”என்றவள் உண்டு முடிக்க,
“இரு பில் பே பண்ணிட்டு வரேன்….”என்றவன் எழுந்து செல்ல,துர்கா தன் பர்சில் இருந்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்தாள்.
“வா கிளம்பலாம்…..”
“ம்ம்….நான் கடைக்கு போகனும்….”
“சரி…..”என்றவன் நேராக தங்கள் கடைக்கு அழைத்து செல்ல துர்கா தன் அனுப்பிய லிஸ்டில் உள்ளதில் பாதி தான் எடுத்துவந்தாள்.
“என்ன பாதி தான் எடுத்துட்டு வர…..மீதி….”
“இப்ப என்கிட்ட இது வாங்க தான் காசு இருக்கு…..”என்றவளை முறைத்தவன் கடை ஆளிடம் கண்னை காட்ட,
“சரி இதை வச்சிட்டு வா…நான் உன்னை கூட்டிட்டு போறேன்….”என்றான் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு,
“இல்ல வேண்டாம் நான் போயிப்பேன்…..”
“உன்னை வான்னு சொன்னேன்….”என்று அழுத்தமாக கூற,
“எல்லாம் இவர் இஷ்டம் தான்…..”என்று முணங்கி கொண்டே வர,
“ஆமா ஆமா என் இஷ்டம் தான்….அம்மா வீட்டுக்கு போய் உட்கார்ந்து கிட்டு இன்னும் வராம இருந்து என் உயிரை வாங்குறா…..”என்று மனதிற்குள் புலம்பிபடி வண்டியை எடுக்க,
“என்ன அதியமா என் கூட வரீங்க…..”என்று கேட்க,
“சும்மா உன் வீடு எப்படி இருக்குனு பார்க்க தான்….”என்று அவனும் நக்கலாகவே கூற,
“வர வர வாய் நல்லா பேசுறாரு….”என்று முணக,
“என்ன பன்றது எல்லாம் சகவாச தோஷம்…..”என்று அதற்கு பதில் வந்தது வீராவிடம் இருந்து.
“அச்சோ சத்தமா பேசிட்டேனா…..”
“ஆமா….”என்றவனின் உடல் சிரிப்பில் குலுங்க,
“சிரிக்காதீங்க….”
“சரி சரி….உன் வீடு வந்திடுச்சு….இறங்கு…..”
“என்ன அதுக்குள்ள வந்துட்டா…..”என்றவள் பார்க்க தன் வீட்டின் முன் வண்டி நிற்பதை உணர்ந்தாள்.
“பராக்கு பார்த்துக்கிட்டே வந்தா இப்படி தான்….”என்றவன் வண்டியை நிறுத்திவிட்டு வர,
“என்ன வரீங்க…..”என்று துர்கா புரியாமல் கேட்க,
“வரவேண்டாமா…..”என்றவனின் எடக்கான பதிலில் துர்கா வாயை மூடிக்கொண்டாள்.வீட்டு வாசலில் வண்டி சத்தம் கேட்டதும் வெளிவந்த வாசினி துர்காவுடன்,வீராவும் வரதைக் கண்டு,
“ம்மா அத்தானும் வராங்க….”என்று கூற,வானாதி அடித்துபிடித்து வாசல் வரை வந்துவிட்டார்.
“வாங்க மாப்பிள்ளை…..”
“வாங்க அத்தான்…..”என்று இருவரும் அழைக்க,
“ம்ம்….”என்றவன் கண்கள் மனைவியை பார்க்க அவளோ முகத்தை வேறு எங்கோ திருப்பிக் கொண்டு நின்றாள்.
“பழிவாங்குறா ராட்சசி…..”என்று மனதிற்குள் முணகி கொள்ள,
“உள்ள வாங்க….”என்றார் வானாதி.அவருக்கு தலையை ஆட்டிவிட்டு அவன் உள்ளே வர,துர்கா வாயை பிளந்தபடி நின்று கொண்டிருந்தாள்.
“க்கா வாயை மூடு ஈ உள்ள போகிட போகுது…..”என்று வாசினி கிண்டல் செய்ய,
“சும்மா இருடீ….”என்று அவளின் கையில் ஒரு அடியை போட்டுவிட்டு உள்ளே செல்ல,
“உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு?…..”என்று வீரா கேட்டுக் கொண்டிருக்க,
“இப்ப பரவாயில்ல மாப்பள…..”என்று கூறிக் கொண்டிருந்தார்.துர்கா இருவரையும் பார்த்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்து கொள்ள,
“சாமான் எல்லாம் நான் ஆள் வச்சு அனுப்பிவிடுறேன்…..”என்று கூற,
“சரி சரி மாப்பள…..”என்று கூற,
“சரி நான் கிளம்புறேன்…..”என்று வீரா எழுந்து கொண்டான்.ஏதோ அவளுடன் இருக்க வேண்டும் போல் இருந்தது என்று வந்துவிட்டான் ஆனால் இவர்களிடம் பேச தெரியவில்லை.
“இருங்க காபி சாப்பிட்டு போகலாம்….”
“இல்ல நானும் துர்காவும் சாப்பிட்டு தான் வந்தோம்…..”என்று கூறிவிட்டு துர்காவின் அறையை பார்க்க முகத்தை துடைத்துக் கொண்டு வெளியில் வந்தாள் அவள்.
“நான் வரேன் பார்த்துக்கோ….”என்றுவிட்டு செல்ல,அவனுடன் பின் சென்றவள்.
“இன்னைக்கு மழை தான் வரும் போல இருக்கு…..”என்று அவனை கிண்டல் செய்து கூற,
“அப்போ குடையோட வெயிட் பண்ணு வரேன்…..”என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு அவனும் சென்றுவிட்டான்.துர்காவிற்கு தான் அவனின் சிரிப்பில் மனம் லயித்திருந்தது.அதுவும் இரவு வரை தான் வீட்டு சாமான்களை ஆள் வைத்து அவன் அனுப்பிவிட அதில் தான் வாங்காத பல சாமான்களை பார்த்தவளுக்கு மீண்டும் கோபம் தலைக்கேற இரவு கணவனுக்கு பேசியில் அழைத்துவிட்டாள்.
இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு மாடியில் நின்றிருந்தவனின் பேசி ஒலியெழுப்ப திரையில் மின்னிய எண்களை பார்த்தவனுக்கு முகத்துடன் அகமும் மலர்ந்தது.விலக வேண்டும் என்று மூளை கூற மனம் இது தான் வேண்டும் என்று அதையே சுற்றி வரும்.
