Skip to content
Post Views: 64
உயிர் உருகும் காதல் எனதே…..3
மூன்று வருடங்கள் கடந்து இன்று,
“ம்மா….இன்னுமா உன் பொண்ணு கிளம்பிக்கிட்டு இருக்கா….சீக்கிரம் கிளம்ப சொல்லு….எனக்கு நேரமாகுது….”என்று டைனிங் டேபிலில் தனக்கான காலை உணவை எடுத்துக் கொண்டே துர்கா கத்த,
“இவளுக்கு வேற வேலை இல்லை….இவ சீக்கிரம் போனா நானும் சீக்கிரம் போகனுமா….எல்லாம் என் தலையெழுத்து….”என்று முணுமுணுவென்று திட்டிக் கொண்டே அறையில் தலைவாரிக் கொண்டிருந்தாள் வாசினி.
Advertisement
“நீ சாப்பிடுமா அவ வந்துடுவா….”என்று வானாதி மகளிற்கு ஒரு தோசையை போட,அவரை முறைத்தவள்,
“இப்படியே அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டே இரு….எனக்கு போதும் சீக்கிரம் உன் சின்ன பொண்ணை சாப்பிட சொல்லு….”என்று துர்கா கூறிவிட்டு செல்ல,
“வந்துட்டேன்…வந்துட்டேன்….ம்மா….எனக்கு தோசை…..”என்று கத்தியபடி வந்து அமர்ந்தாள் வாசினி.
Advertisement
“என்னடீ நீ இன்னும் தலைபின்னாம இருக்க…”என்று வானாதி அவளுக்கு தோசை கொண்டு வந்து கொடுக்க,
Advertisement
“ம்மா அதெல்லாம் இது போதும்….நீ சீக்கிரம் போடு….”என்று வாயில் வைத்துக் கொண்டே கூற,
“நீ காலேஜ்க்கு போற….பேஷன் ஷோக்கு போகல….ஒழுங்கா தலை பின்னி போடு….”என்று துர்கா அறையின் வெளியில் வந்து கத்த,அவளை முறைத்த வாசினி ஏதோ கூற வரும் முன்,
“நான் பின்னி விடுறேன்மா….நீ கிளம்பு போ…”என்று பெரிய மகளை அனுப்ப பார்க்க,அவளோ சட்டமாக அந்த இடத்திலேயை அமர்ந்து கைப்பேசியை பார்க்க துவங்கிவிட்டாள்.இனி கூறினாலும் செல்லமாட்டாள் என்று புரிந்து கொண்டவர் சின்ன மகளின் தலையை வாரி பின்னலிட,
Advertisement
“ம்மா இதெல்லாம் அராஜகம் ம்மா….எனக்கு பிடிச்சமாதிரி கூட நான் இருக்க கூடாதா….”
“வாயை மூடுடி….பார்த்தானா அதுக்கும் கத்துவா….அவ சொல்லுறதுல என்ன தப்பு இருக்கு….”என்றவர் மகளுக்கு தலையை வாரிவிட்டு நகர,
“முடிஞ்சுட்டா கிளம்பு….”என்று அடுத்த உத்திரவு துர்காவிடம் இருந்து வந்தது.வாசினிக்கு மனதிற்குள் அத்தனை ஆத்திரம் ஆனால் எதையும் காட்டிக் கொள்ள முடியவில்லை.ஆனால் வாயிற்குள் திட்டிக் கொண்டே தான் வந்தாள்.துர்கா தன் இருசக்கர வாகனத்தை தயார் நிலையில் வைத்துக் கொண்டு நிற்க,
“வந்துட்டேன்…..ஹாரன் அடிச்சு ஊரை கூட்டாத….”என்றுபடி வண்டியின் பின்புறம் அவள் அமர,
“அதுக்கு நீ சீக்கிரம் கிளம்பனும்….”என்று கூறிக் கொண்டே துர்கா வண்டியை எடுத்தாள்.அதன் பின் இருவரும் பேசிக் கொள்ளவில்லை வாசினிக்கு இவளுடன் பேசி வாங்கி கட்டிக் கொள்ள விருப்பம் இல்லை.அதோடு அவளின் சிந்தனை வேறு ஒன்றில் இருந்தது.வாசினியை அவளின் கல்லூரி வளாகத்தில் இறக்கிவிட்டவள்,
“வரேன் பார்த்து போ….”என்றுவிட்டு துர்கா நகர,எல்லாம் எனக்கு தெரியும் உன் வேலையை பாரு என்று மனதிற்குள் கமெண்ட் கொடுத்தாலும் தலையை ஆட்டி வைத்தாள்.வாசினி இப்போது முதுகலை கணினி அறிவியல் இறுதியாண்டு படித்துக் கொண்டு இருக்கிறாள்.துர்கா பக்கத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக இருக்கிறாள்.அத்துடன் அரசு பள்ளி ஆசிரியர் ஆவதற்கும் தேர்வுகள் எழுதிக் கொண்டு தான் இருக்கிறாள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
“வீரா….வீரா….”என்று இதோடு நூறு முறையேனும் அழைத்திருப்பார் கற்பகம்.ஆனால் தன் அறையில் கிளம்பிக் கொண்டிருந்தவனுக்கு அது காதில் விழுந்தாலும் காதில் விழாதது போலவே தயாராகி கொண்டிருக்க,
“டேய்….உன்னை தான கூப்பிட்டுட்டு இருக்கேன் காதுல வாங்கம நீ பாட்டுக்கு உன் வேலையை பார்த்துக்கிட்டு இருக்க….”என்று அறையின் உள் வந்தே கத்த,
“ச்சு…இப்ப என்னம்மா வேணும் உங்களுக்கு….”என்று கையில் வைத்திருந்த சீப்பை விட்டெறிருந்து விட்டு அறையை விட்டு அவன் வெளியில் வந்தான்.
“என் பேச்சே கேளு அது போதும்….”என்று கற்பகமும் விடாமல் பேச,திரும்பி அவரை முறைத்தவனை கண்டு கொள்ளாமல் நேராக சமையலறைக்கு சென்று மகனிற்கான காலை உணவை எடுத்ததுவந்தார் அவர்.வீராவிற்கு எழுந்து சென்றுவிட தான் தோன்றுகிறது ஆனால் தாய் அதை தாங்கமாட்டார் என்று புரிந்தவன் அமைதியாக அமர்ந்து கொண்டான்.
அவனின் எதிரில் ஒரு கவர் இருக்க அதைக் கண்டவனுக்கு ஆத்திரம் தான் வந்தது.இது கடந்த மூன்று வருடங்களாக நடப்பது தான் தனக்கு இன்னொரு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று எவ்வளவோ கூறி பார்த்துவிட்டான் ஆனால் கற்பகம் கேட்டால் தானே.அவர் மகனிற்காக வரன்கள் தேடிக் கொண்டுவர ஒன்று ஆரம்பத்திலேயே வீரா தடுத்துவிடுவான் இல்லையேல் பெண்ணின் மூலம் நிறுத்திவிடுவான்.
அதுதான் இது நாள் வரை நடந்து கொண்டிருக்க அந்த ரகசியத்தை கற்பகம் கண்டுபிடித்துவிட்டார். அன்றிலிருந்து தாயிக்கும்,மகனிற்கும் சண்டை சச்சரவுகள் தான்.அதுவும் இந்த மூன்று மாதங்களாக வீட்டிற்கு வருவதற்கே எரிச்சலாக இருந்தது வீரபத்திரனுக்கு.
“என்னடா நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ எதோ யோசனையிலேயே இருக்க…”என்று கேட்டபடி அவனின் தட்டில் இட்லியை வைக்க,
“ஒண்ணுமில்ல…”என்றுவிட்டு சாப்பிட தொடங்கிவிட்டான்.
“ஓ….அப்ப இந்த வரனை எப்படி விரட்டி அடிக்கலாம்னு பிளான் போட்டுட்டு இருக்க அப்படி தான….ஆனா பாரு….இந்த தடவை நீ நினைக்கிறது நடக்காது….நான் எல்லாம் பேசிட்டேன்….கிட்ட தட்ட முடிஞ்ச மாதிரி தான்….நீ பொண்ணு போட்டோவை பாரு….”என்று கவரை நீட்ட,அதை கையில் வாங்காமல் அவன் எழுந்து சென்று கொண்டே,
“அதான் நீங்களே பார்த்துட்டீங்களே….அப்புறம் எதுக்கு என்கிட்ட காட்டிக்கிட்டு இருக்கீங்க….”என்றுவிட்டு கை கழுவி விட்டு தன் கடைக்கு புறப்பட,கற்பகத்திற்கு கஷ்டமாக இருந்தது மகனின் இந்த விட்டேத்தியான பதிலில்.
“நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தேறேனா வீரா….”என்று தோய்ந்து போய் அமர்ந்துவிட,கடைக்கு செல்வதற்கு வண்டி சாவியை எடுத்துக் கொண்டிருந்தவன் கைகள் அப்படியே நின்றது.
“ஏன்டா நமக்கு மட்டும் இப்படி நடக்குது…..அந்த மகராசிக்கு நாம என்ன செஞ்சோம்னு இப்படி ஒரு அவமானத்தை கொடுத்துட்டு அவ போயிட்டா….அவ நல்லா தான் இருக்கா….ஆனா நாம இப்படி தினமும் மத்தவங்களோட குத்தல் பேச்சை கேட்டுக்கிட்டு வாழவும் முடியாம சாகவும் முடியாம கிடக்கோம்…..”என்றவரின் குரல் உடைந்துவிட,
“ப்ச்ம்மா….சும்மா எதுக்கெடுத்தாலும் அழாதீங்க….கடைக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன்…..”என்றுவிட்டு அவன் சென்றுவிட்டான்.அவனுக்கு நன்கு தெரியும் தாயை சமாதானப்படுத்த முயன்றால் இன்னும் அழ தான் செய்வார் அதனாலே கிளம்பிவிட்டான்.அவன் சென்ற சற்று நேரத்தில் நர்மதா வந்துவிட்டாள்.வீரபத்திரன் தான் அழைத்து வரும்படி கூறிவிட்டு சென்றிருந்தான்.
மாலை நேரம்,
“துர்கா….கிளம்பலையா…”என்றபடி வந்தார் அவளுடன் பணிபுரியும் மற்றொரு ஆசிரியர்.
“இதோ கிளம்பிக்கிட்டே இருக்கேன்…”என்று கூறிக் கொண்டே தன் கைபை எடுத்துக் கொள்ள,
“ஓ…சரி…”என்றுவிட்டு அவர் நகர்ந்துவிட்டார்.அவர் நகரவும் தான் துர்கா தன் இறுக்கமான முகத்தை சற்று தளர்த்தினாள்.விவாகரத்து ஆனதிலிருந்து அவளின் மனது இறுகி தான் போயிருந்தது.ஒரு பெண் விவாகரத்து பெற்று வந்துவிட்டால் அவளை எந்தளவிற்கு காயப்படுத்த முடியுமோ அந்தளவிற்கு காயப்படுத்தவே சுற்றியிருப்போர் நினைக்கின்றனர்.அது போன்றவர் தான் இப்போது வந்த ஆசிரியரும்.இவர்களை ஒன்றும் செய்ய முடியாது நாம் தான் கடந்து வந்துவிட வேண்டும்.
தன் வண்டியை துர்கா அடைந்த சமயம் கைபேசியில் அழைப்பு வந்தது.அவளின் அன்னை தான் அழைத்திருந்தார்.
“சொல்லுமா….”
“துர்காமா கிளம்பிட்டியா….”
“ம்ம் கிளம்பிட்டேன்….வாசினி வந்துட்டாளா….”என்று விசாரணை போல வந்தது அவளின் கேள்வி.அது வானாதிக்கு பிடிக்கவில்லை போலும்,
“எதுக்குமா அவளை விசாரணை பண்ணிக்கிட்டே இருக்க….அவ உன் தங்கச்சி நியாபகம் வச்சுக்க….”என்று சற்று கடுமையாகவே கூற,
“அது எனக்கும் நியாபகம் இருக்குமா அதனால தான் கேட்டுகுறேன்….வந்துட்டாளா….”என்று மகளும் சற்று காரமாகவே கேட்க,இதற்கு மேல் இவளிடம் பேச முடியாது என்று புரிந்தவர்,
“இன்னும் இல்லமா….வந்துடுவா….”
“என்ன இன்னும் வரலையா….அவளுக்கு இன்னைக்கு மதியமே முடிஞ்சிருக்குமே…..நீங்க போன் பண்ணலையா….”என்று கோபமாக கேட்க,வானாதிக்கு பெரியமகளின் கோபம் புரியவில்லை மாறாக அவள் சின்னவளை ஏதோ அதிகாரம் செய்வது போல தான் தெரிந்தது.
“என்னமா நான் கேட்டுகுறேன் பதிலே காணும்…..சரி இருங்க வரேன்….”என்றுவிட்டு அவரின் பதிலை எதிர்பாராமல் வைத்துவிட்டு தங்கைக்கு அழைத்துவிட்டாள்,ஆனால் அழைப்பு ஏற்கப்படவில்லை.
“ப்ச் இவளோட….”என்று திட்டிக் கொண்டே அன்னைக்கு அழைக்க,அவர் அழைப்பை ஏற்றவுடன்,
“ம்மா அவ எடுக்கவே மாட்டேங்குறா….நீங்க கூப்பிட்டு பாருங்க….எதுக்காக என்னை கூப்பிட்டீங்க…..”என்று பொரிய,
“எதுக்குடீ இவ்வளவு கோபம்….நீ கோபமா பேசிட்டு வச்சதுல நான் எதுக்கு போன் போட்டேன்னே மறந்துட்டேன்…..இரு வரேன்….”என்று ஏதோ தேடுவது போல் தோன்றியது துர்காவிற்கு,இரு நிமடம் கழித்து,
“மளிகை சாமான் லிஸ்ட எங்கையோ வச்சிட்டேன்….அதை வாங்கிட்டு வர சொல்ல தான் உனக்கு போன் போட்டேன்…போ இப்ப அது எங்க இருக்குனு தெரியலை….”என்று அவர் புலம்ப,
“சரி விடுங்க….நான் பார்த்து வாங்கிட்டு வரேன்….மீதியை நாளைக்கு வாங்கிக்கலாம்….”என்றுவிட்டு துர்கா போனை வைத்துவிட்டு மீண்டும் தங்கைக்கு அழைக்கலாமா என்று யோசித்தவள் பின் வேண்டாம் என்றுவிட்டுவிட்டாள்.ஆனால் அவளிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.
வி.ஆர் சூப்பர் மார்கெட் லால்குடியின் மையப்பகுதியில் இயங்கி வருகிறது.ராஜன் இருந்தவரை வெறும் மளிகை கடை போல் தான் இருந்தது வீரா தலையெடுத்து அதை பல்பொருள் அங்காடியாக மாற்றியிருந்தான்.
“ராசண்ணனே….இந்த கணக்கு என்ன இடிக்குது….”என்று தன் அறையில் இருந்து வெளியில் வந்து வீரா கேட்க,அப்போது தான் தன் இரு சக்கர வாகனத்தை அதற்கான இடத்தில் நிறுத்திவிட்டு கடையின் உள்ளே நுழைந்தாள் துர்கா.
“என்ன தம்பி எந்த கணக்கு???”என்ற படி வந்தார் ராசு.
“வேலையை முடிச்சிட்டு உள்ள வாங்க….”என்று விட்டு வேகமாக தன் அறையின் உள்ளே நுழையும் முன்,
“வீரச்சாமி தரிசனம் கிடைச்சிடுச்சு….நல்லாயிருக்கியா….”என்று கேட்டபடி அவனின் அருகில் வந்துவிட்டாள் துர்கா.
“ஏய் இப்படி கூப்படாதனு உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்….”என்றவனின் பார்வை சுற்றுப்புறத்தை நோட்டம் விட,
“அதெல்லாம் யாரும் பார்க்கமாட்டாங்க….நான் கேட்டேன் நீ பதில் சொல்லலை….”என்றாள் அவனை சீண்டும் பொருட்டு,
“உன்னை….”
“ம்ம்….என்னை…..”என்றவள் பொருளை எடுத்துவிட்டு நிமிர,வேகமாக உள்ளே சென்றுவிட்டான் வீரா.அவன் ஓடும் வேகத்தை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் சிரிப்பு பொங்கியது.இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் தான் அன்று தொட்டு பழக்கம் தான்.அதுவும் ஏழாம் பொறுத்தமாக தான் இருக்கும்.பார்க்கும் போதெல்லாம் முட்டிக் கொள்ளும் துர்கா அனைத்திலும் முன் நிற்கும் ரகம் அது விளையாட்டு என்றாலும் சரி சண்டை என்றாலும் சரி.இப்படி தான் ஒருமுறை பள்ளியில் ஏற்பட்ட சண்டையில் துர்கா வீராவின் நண்பர்கள் இருவரை சரமாரியாக அடித்ததும் அல்லாமல் அவர்கள் தங்களை கேலி செய்ததாக கூறி பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்துவிட்டாள் அதிலிருந்து வீராவிற்கும் துர்காவிற்கும் ஆகாவே ஆகாது.
வீரா அவளைக் கண்டால் ஒதுங்கி செல்ல அவளோ சீண்டிவிட்டு தான் செல்வாள் அதில் ஒரு அலாதி சந்தோஷம் கிடைத்தது போல அவளின் முகம் விசிககிக்கும்.பள்ளி முடியும் வரை இது தொடர்ந்தது.பின் கல்லூரி இருவரும் வேறு வேறு வழிகளில் பிரிந்துவிட்டனர்.அதன் பின் இதோ அவரவர் வாழ்வில் அடிபட்ட பின் சந்தித்து கொள்கின்றனர்.இருவருக்கும் ஒருவரை ஒருவர் நன்கு தெரியும் என்பதால் வீரா துர்காவை எதுவும் கூறாமல் செல்கிறான் இல்லையேல் உண்டு இல்லை என்று பார்த்துவிட்டு தான் செல்வான்.ஆனால் துர்கா அப்படியில்லை அவனை பார்க்கும் நேரங்களில் அவனை சீண்டிவிட்டு தான் செல்வாள்.
எப்படி இவளால் எதுவும் நடவாதது போல் இருக்கமுடிகிறது என்று யோசித்தபடி தான் தன் அறையில் அமர்ந்திருந்தான் வீரா.ஆனால் துர்கா அதற்கு எதிர்மறையான மனநிலையில் மலர்ச்சியுடன் தன் வீட்டிற்கு வேண்டிய சாமான்கள் வாங்கிவிட்டு தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள்.ஆனால் அது சற்று நேரம் வரை தான் நீடித்தது வழியில் வாசினியை பார்க்கும் வரை.
error: Content is protected !!