Skip to content
Post Views: 85
உயிர் உருகும் காதல் எனதே…..9
திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தான் வீராவிற்கும்,துர்காவிற்கும் திருமண ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது.இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால் கோவிலில் வைத்துக் கொள்ளலாம் என்று வானாதி கூற கற்பகமும் அதற்கு சம்மதித்துவிட்டார்.அவருக்கு மகனின் திருமணம் நல்ல முறையில் நடந்தால் போதும் என்ற நிலை.
ஆம் வீராவிற்கு திருமணம் என்று உறவுகளுக்கு தெரிந்ததலிருந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சனைகளை தொடங்கியிருக்க.கற்பகம் இவர்களை எப்படி சமாளிப்பது என்று திணறி தான் போனார்.தன் பெரியம்மாவின் நிலையை கண்ட நர்மதாவிற்கு பொறுக்கவில்லை அவள் அனைவரிடமும்,
“வீரா நல்லாயிருக்கனும் நினைக்கிறவங்க மட்டும் கல்யாணத்துக்கு வந்தா போதும்….”என்று நறுக்கென்று கூறிவிட்டாள்.
Advertisement
அதே நிலை தான் துர்காவின் வீட்டிலும்,
“உன் பெண்ணிற்கு இது சரி வருமா….நல்ல வாழ்க்கையே சிதைச்சுட்டு வந்துட்டா….”என்று ஒருசில உறவுகள் கூற,இன்னும் சிலரோ வீராவின் குறையை பெரிதாக கூறி சென்றிருந்திருந்தனர்.
“துர்கா மாதிரி பொண்ணு கிடைக்கிறது எல்லாம் அபூர்வம்….அவங்களுக்கு அவளை தெரியலை அவ்வளவு தான் விடுங்க சம்மந்தி….நீங்க கல்யாண வேலை பாருங்க….நாங்கெல்லாம் உங்க கூட தான் இருக்கோம்…..” என்று வாசினியின் மாமியார் கூறிவிட்டார்.அதன் பின்னரே வானாதிக்கு நிம்மதியே பிறந்தது அத்தோடு ஒரு புது தெம்புடன் தன் மகளின் திருமண வேலையில் மூழ்கிவிட இதோ நல்ல உள்ளங்களின் ஆசியுடன் மணமகன் கோலத்தில் அமர்ந்திருந்தான் வீரபத்திரன்.
Advertisement
மணமேடையில் அமர்ந்திருத வீராவிற்கு மனதில் இன்னும் சஞ்சலம் இருந்து கொண்டு தான் இருந்தது.தான் செய்வது சரியா என்ற கேள்விக்கு இன்றும் பதில் கிடைக்கவில்லை.ஆனால் இதோ திருமணம் வரை இழுத்துக் கொண்டு வந்துவிட்டது விதி.
Advertisement
“வீரா முகத்தை சிரிச்சா மாதிரி வச்சுக்க….”என்று பிரபஞ்சன் மாலையை சரி செய்வது போல கூற,
“ம்ம் சரிண்ணா….”என்றவனின் குரலே சரியில்லை என்று புரிய,
“எதையும் நினைக்காத வீரா….உன் அம்மாவை பாரு….அவங்க முகத்துல இருக்குற சந்தோஷத்தை பாரு….”என்று அவனின் கவனத்தை கற்பகத்தின் திருப்பிவிட்டான் பிரபஞ்சன்.
Advertisement
அங்கு கற்பகம் நர்மதாவுடன் ஏதோ பேசியபடி அங்கும்,இங்கும் அலைந்து கொண்டிருந்தார்.உள்ளத்தில் இருந்த மகிழ்ச்சி முகத்திலும் பிரதிபலித்தது.வீராவிற்கு அதுவரை இருந்த அழுத்தமான மனநிலை சற்று மட்டுப்பட்டிருந்தது.
“பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ….”என்று ஐயர் குரல் கொடுக்க,அரக்கு நிற பட்டில் தங்க பாடர் புடவை அத்தனை அம்பசமாக பொருந்தியிருந்தது துர்காவிற்கு.
வீரா இப்போது துர்காவை தான் பார்த்தான் அவள் முகத்தில் அதீத மகிழ்ச்சியும் இல்லை அதே சமயம் அவனை போல அழுத்தம் இருப்பது போலும் தெரியவில்லை.முகத்தில் அமைதி நிலைகொண்டிருந்தது பார்ப்பவர்களிடம் மெல்லிய புன்னகையுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
துர்கா,வீராவின் பக்கத்தில் அமர தன்னை போல் அவனின் உடல் இறுகி,மனம் நடுங்க தொடங்கியது,மீண்டும் பழைய காலங்கள் கண் முன் வர இப்போது உடலும் நடுங்க தொடங்கிய நேரம் ஒரு மெல்லிய கரம் அவனின் கரங்களுக்குள் நுழைய வீரா அதிர்ந்த நேரம்,
“காம் டவுன் வீரா…..”என்று துர்கா மாலையை சரி செய்வது போல மிக மெல்லிய குரலில் கூற,வீரா திரும்பி அவளை பார்க்அவளோ தன் கண்களை மூடி திறக்க அந்த கண்கள் காட்டும் ஜாலத்தில் வீராவின் வாழ்வும் பிராகாசிக்க தொடங்கியது.அனைவரும் ஆசியுடன் மங்கல நாணை பூட்டி தன் மனைவியாக்கிக் கொண்டான் வீரா.
சடங்குகள் முடிந்து அனைவரும் வீராவின் வீடு வந்து சேர்ந்தனர்.மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்பறையில் அமர வைத்தவர்கள்,
“நர்மதா துர்காவை நல்ல நேரம் முடியறத்துக்குள்ள விளக்கேத்த சொல்லு…..”என்று கற்பகம் கூற,
“சரி….”என்றவள் துர்காவிடம் வந்து,
“துர்கா வா வந்து விளகேத்து…வீரா நீயும் வா….”என்று இருவரையும் சாமியறைக்கு அழைத்து செல்ல,
“இதெல்லாம் நீ சொல்லனுமா நர்மதா துர்காவுக்கு தான் முன்னாடியே தெரிஞ்சிருக்குமே….”என்று கிண்டல் போல வீராவின் அத்தை முறை ஒருவர் கூறவிட,சற்று என்று அந்த இதமான சூழல் மாறிவிட்டது.நர்மதா இதை எதிர்பார்க்கவில்லை அவள் என்ன கூறுவது என்று தடுமாறி நிற்கையில்,
“ஆமா பெரிம்மா….எனக்கு முன்னாடியே தெரியும்….என் வீட்ல கூட நான் தான் விளக்கேத்துவேன்….”என்று துர்கா சிரித்த முகமாக கூற,அதற்கு அந்த அத்தை மீண்டும் ஏதோ கூற வரும் முன்,
“அத்தை….என்ன வேணும் உங்களுக்கு….”என்று வீரா குரலை உயர்த்திவிட்டான்.அவனுக்கு நன்றாக புரிந்தது அவர் வேண்டும் என்று தான் பேசிக் கொண்டிருயிருக்கிறார் என்று.
“அட என்னங்க நீங்க அவங்க நம்ம நல்லதுக்கு தான சொல்லுறாங்க….என்ன பெரிமா நான் சொல்லுறது சரிதான….”என்று துர்கா அவரை மடக்க,அந்த அத்தையாகபட்டவருக்கு மூக்குடைந்த நிலை அதனால் அமைதியாக தலையாட்ட வேண்டிய நிலை.
“வீரா… நீ பேச வேண்டாம் உன் பொண்டாட்டியே பேசிக்குவா….”என்று நர்மதா வீராவின் காதில் கூற,
“அதான் பார்த்துட்டனே….”என்றவனுக்கும் துர்காவை கண்டு ஆச்சிரியம் தான் எப்படி இவளால் அனைத்தையும் எளிதாக கடக்க முடிகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தான்.துர்கா சாமிக்கு விளக்கேத்திவிட்டு கடவுளின் முன் கண்களை மூடி வேண்ட,வீராவும் அவளை போலவே செய்தான்.நர்மதாவிற்கு இருவரையும் பார்த்து கண்கள் கலங்கியது.
“கடவுளே இரண்டு பேரும் இப்படியே இணைஞ்சு சந்தோஷமா இருக்கனும்….”என்று அவளும் வேண்டிக் கொண்டாள்.
அதன் பின் யாரும் எதுவும் பேசவில்லை என்பதை விட அதை வீரா அனுமதிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.அவனின் கோபத்திற்கு பயந்தே அனைவரும் வாழ்த்திவிட்டு சென்றுவிட்டனர்.எஞ்சியிருந்தது வீட்டினர் மட்டுமே வானாதி மகளிடம் வந்தார்.
“துர்காமா….”என்றவரின் குரல் கரகரக்க,அவரை பார்த்து மென்மையாக புன்னகைத்த துர்காவின் முகத்தில் எப்போதும் போல் அமைதியே குடி கொண்டிருந்தது.அதைக் கண்ட வாசினிக்கு பொடு பொடுவென்று வர,
“என்னக்கா அம்மா உன்னை எப்படி பிரியறதுனு அழறாங்க நீ என்னடானா சிரிச்சிக்கிட்டு இருக்க….”என்று நக்கலாக கேட்க,
“நான் எதுக்குடீ அழனும்….நான் என்ன கண்டம் விட்டு கண்டமா போயிட்டேன்….இதோ இருக்குற வீடு எப்ப நினைச்சாலும் அம்மாவை நான் பார்த்துக்கலாம்….அப்புறம் எதுக்காம் அழுகை….”என்று தங்கைக்கு கூறிக் கொண்டே தாயின் அழுகையை துடைக்க,
“ஓ…ஓ…அப்ப எல்லாம் பிளான் பண்ணி தான் கல்யாணம் பண்ணியிருக்க போல….”என்ற வாசினியின் குரல் இப்போது ஓங்கி ஒலித்தது,
“எதுக்குடீ கத்துற….”என்று வானாதி பயத்துடன் சின்ன மகளை அடக்க பார்க்க,
“என்ன சம்மந்தி….”என்றபடி வந்துவிட்டார் நிர்மலா.
“அது நான் அம்மா கூடவே இருக்குற மாதிரி பிளான் பண்ணி தான் கல்யாணம் பண்ணியிருக்கேனாம்…..”என்று துர்கா கூற,வாசினியின் முகம் பயத்தில் வெளிறிவிட்டது.
“இதுல தப்பு என்ன இருக்கு…நீயும் அப்படி தான வாசினி யோசிப்ப…அதே மாதிரி தான் துர்காவும் செஞ்சிருக்கா….”என்று நிர்மலா வாசினி பார்த்து கூறிவிட,
“அதில்ல அத்தை….இவ அடிக்கடி அம்மாவை போய் எப்படி பார்க்க முடியும்….அது…..”என்று வாசினியும் விடுவேன பார் என்று நிற்க,நிர்மாலவிற்கு சற்று கோபம் வர அவர் ஏதோ கூற வரும் முன்,
“அட நீ எதுக்குடீ இவ்வளவு டென்ஷன் ஆகுற…..அதெல்லாம் என் அத்தை கற்பகாம்பாள் பார்த்துப்பாங்க….என்ன அத்த பார்த்துப்பீங்க தான…..”என்றுவேறு தூரத்தில் இருந்தவரிடம் உரக்க கேட்க,அவரோ வேகமாக வானாதியிடம் வந்து,
“நான் பார்த்துக்குறேன் வானாதி….நீ எதுக்கு சங்கட படுற….இங்க இருக்குற வீடு தான….நீங்க உங்க பொண்ணை எப்போ வேணாலும் வந்து பாருங்க…அவளும் வருவா….”என்று மருமகளுக்கு ஒத்து ஊதுவது போல கூற,
“அட என் அத்தைக்கு கற்பூர புத்தி…எப்படி நான் சொன்ன உடனே பத்திக்கிட்டாங்க பாரு….”என்று துர்கா கூற,கற்பகத்திற்கு ஒன்றும் புரியவில்லை அவர் வானாதி கலங்கி நிற்கவும் இதுவாக தான் இருக்கும் என்று நினைத்து ஒன்றை கூறிவிட்டார்.இப்போது துர்கா ஏதோ அவரை பார்த்து கண்ண்டித்து கூறவும் என்னவோ என்று பயந்துவிட்டார்.
“என்ன வானாதி….ஏதாவது பிரச்சனையா….”என்று கேட்க,
“நீங்க வேற உங்க மருமக தான் உங்களை பத்தி பெருமையா சொல்லிக்கிட்டு இருக்கா….அதான் நீங்க வாங்க….”என்றுவிட்டு அவரை நிர்மலா அழைத்து சென்றுவிட்டார்.
“வாசினி எதுக்கு இப்படி பேசுற….நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்….இந்த கல்யாணம் நிச்சயம் ஆனதிலிருந்து இப்படி தான் சொடக்கு சொடக்குனு ஏதாவது பேசிக்கிட்டே இருக்குற….”என்று வானாதி சின்ன மகளிடம் கோபமாக கேட்க,
“அவளுக்கு கொஞ்சம் கோபம் விடும்மா….”என்று துர்கா தங்கைக்காக பேச,
“அதான் நான் சொல்லுறதை யாரும் கேட்கலையே அப்புறம் என்ன….என்னவோ உன் நல்லதுக்கு தான் நான் சொன்னேன்….”என்று நொடித்துக் கொண்டாள் வாசினி.
“வாசினி….”என்று அழைத்தபடி வந்துவிட்டான் சித்தார்த்.நிர்மலா தான் வாசினி பிரச்சனை செய்கிறாள் என்று கூறியிருந்தார்.கேட்டவனுக்கு கோபம் தான் இருந்தும் காட்டிக் கொள்ளாமல் மனைவியிடம் வந்துவிட்டான்.
“போ மாப்பிள்ளை கூப்பிடுறார்….”என்று வானாதி அவளை அனுப்ப,முகத்தை கோணிவிட்டு சென்றுவிட்டாள்.
“துர்காமா….”என்று வானாதி ஏதோ கூற வர,
“ம்மா நான் ஒண்ணும் நினைச்சிக்கல….நீ இதுக்கு எல்லாம் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காத….”என்று கூறிவிட பெற்றவரின் கண்களில் நீர் படலம்.சிறு வயதில் இருந்தே துர்கா தந்தையின் வளர்ப்பு தான் அதனாலே என்னவோ அவள் தன்னிடம் ஒட்டவில்லை என்ற உணர்வு வானாதிக்கு எப்போதும் உண்டு.அதோடு கணவனின் இறப்புக்கு பின் அவரின் இடத்திற்கு துர்கா வந்துவிட்டதால் அவளிடம் இருந்து சற்று தள்ளி தான் இருப்பார்.ஆனால் இனி அதுவும் தன்னுடன் இல்லை என்பதை அவரால் ஏற்க முடியவில்லை.அவரின் நிலை உணர்ந்த துர்கா,
“ப்ச் ம்மா….என்னதிது இப்படி அழுதுகிட்டு….நான் இங்க தான் இருக்கேன்….நம்ம வீட்டு மொட்டை மாடியிலேந்து கூப்பிட்டா ஓடி வந்துட போறேன்….”என்று கூறியவளுக்கும் இப்போது கண்கள் கலங்க துவங்க,இதை தூரத்தில் இருந்து கவனித்த நர்மதா வானாதியிடம் வந்துவிட்டாள்.
“எதுக்காம் அழுகை….நாங்கெல்லாம் இல்ல….சும்மா கண்ணை கசக்கிட்டு….கண்ணை துடைங்க முதல்ல….”என்று ஒரு அதட்டல் போடவும் தான் வானாதி தன்னை சமன் படுத்த முயன்றார்.
“அது நல்ல புள்ளைக்கு அழகு…..துர்கா நீ போய் ரெஸ்ட் எடுமா…..சாய்ந்தரம் கோவிலுக்கு போகனும்….”என்று அவளை அனுப்பியவள்,வானாதியிடம்,
“என்னம்மா நீங்க அவளே இப்ப தான் தன் வாழ்க்கை தொடங்க போறா அவ முன்னாடி கலங்கிட்டு….அவளும் சங்கடபடுறாள்ல…”என்றுவி
“அச்சோ இல்லம்மா….நான்….அப்படி நினைக்கல….”என்றவருக்குமே உள்ளுக்குள் உறுத்தியது தான் தவறு செய்துவிட்டோமே என்று.
“சரி சரி விடுங்க….நைட்டுக்கு ஏற்பாடு பண்ணனும் அது பத்தி பேச தான் நான் வந்தேன்…..”என்று அவரை அடுத்த வேலைகளில் இழுத்துக் கொண்டாள்.
தனக்கு கொடுக்கப்பட்ட அறையில் கலங்கி மனதுடன் அமர்ந்துவிட்டாள் துர்கா.அவளுக்கு இதுவரை இல்லாத கலக்கம் தாய் கலங்கியவுடன் வந்துவிட்டது.தான் சுயநலமாக யோசித்துவிட்டோமோ என்ற எண்ணம் தலைதூக்க மனது அலைகழிய தொடங்கியது.உன் பொருள் எல்லாம் உள்ளே தான் இருக்கிறது என்று நர்மதா கூறியது நினைவில் வர வேகமாக அந்த அறையை நோட்டம் விட,அவளின் கண்களில் சிக்கியது அவளது பெட்டி,அதை திறந்து தன் கைபையின் உள்ளே வைத்திருந்த ஒரு புகைப்படத்தை எடுத்தாள் அது அவளும் அவளின் தந்தையும் இணைந்து எடுத்த படம் எப்போதும் அவளுடன் இருக்கும் ஒரு தைரியம் அது தான்.
“ப்பா நான் தப்பு பண்ணிட்டேனாப்பா….நான் சுயநலமா யோசிட்டேனாப்பா…..நீங்க சொல்லுங்க….”என்று கேட்டுக் கொண்டிருக்க,சரியாக அந்த நேரம் கதவை திறந்து கொண்டு வீரா வந்துவிட அவனின் கண்களில் துர்கா எதையோ வைத்துக் கொண்டு அழும் காட்சி தான் விழுந்தது.ஒரு நிமிடம் அசைவற்று நின்றுவிட்டான் தன் அறை தானே என்று நுழைந்தவனுக்கு உள்ளே துர்காவை கண்டது ஒரு அதிர்ச்சி என்றால் அதுவும் அவள் அழுது கொண்டிருந்தது இன்னும் பயத்தை தான் கொடுத்தது.
error: Content is protected !!