Skip to content
Post Views: 4,153
உறவாக அல்ல உயிராக
அத்தியாயம் – 12
Advertisement
இனியாவின் தவிப்பை பார்த்த பிரகாதீஸ்வரன் கண்டிப்பா வரேன் பொள்ளாட்சிக்கு என்று சொல்ல.
இனியா எல்லார் கிட்டையும் எப்படி சொல்ல என்று யோசித்தவள்.
Advertisement
திருச்செல்வத்திடம் அனைத்தையும் சொல்ல இப்போவேவா , என்ன இனியா .நீ இரு . நான் போறேன் மா.
Advertisement
இல்லப்பா விசயம் ரொம்ப பெருசு. நான் போனாதான் சரியா இருக்கும். இன்னும் மீடியாவுக்கு தெரியல தெரியறதற்க்குள்ள நான். போகனும்.
Advertisement
சரிமா .
இனியா எல்லோர் கிட்டையும் நீங்க சொல்லி புரிய வைங்க.
நான் ப்பிளைட் டிக்கெட் இருக்கானு பாக்குறேன். பிரகாவை பார்த்தவள். அத்தான் நீங்க போய் கிளம்பி வாங்க என்று தன் ரூம் நோக்கி சென்றவள்.
போனில் ப்பிளைட் டிக்கெட் பார்க்க டிக்கெட் இருந்தது. யாருக்கெல்லாம் போட என்று யோசிக்க யார் தன்னுடன் வருவார்கள் என்று தெரியாது. வீட்டில் உள்ள அனைவருக்கும் டிக்கெட் போட்டவள். ரெடியாகி கீழே வர. மொத்த குடும்பமும் இனியா மீது கோபமாக இருந்தது.
கோமதி இனியாவிடம் முதல் முதலில் கல்யாணமான பொண்ணு , மாப்பிள்ளையும் கோவில் போயிட்டு, பாலும் பழமும் சாப்பிடனும் .ஒரு சடங்கும் பண்ணாமல். இப்படி கிளம்பி நிக்குற.
இனியா மா என்றவள் கோமதியிடம் அம்மா நான் பொள்ளாட்சிக்கு போயிட்டு ட்டூ டேசுல வந்துரேன். அப்போ இந்த. சடங்கெல்லாம் பாத்துக்கலாம்.
நிர்மலாவை பார்த்து அத்தை என்கூடா நீங்க பொள்ளாட்சி வர்ரீங்களா. பிரகா அத்தான் வர்ராங்க.
நானா என்ற நிர்மலா கண்டிப்ப வர்ரேன்மா. கல்யாணத்துக்கு வந்த சில உறவு மட்டும் இருக்க. கோமதி நானும் வர்ரேன் என்று சொல்ல.
திருச்செல்வன் கோமதியிடம் . நீ இரு கோமதி இன்னும் சில சொந்த ஆட்கள் இருக்க. வீட்டில் போட்டது போட்ட படியே இருக்குது.
திருமணத்திற்கு வந்த சிலர் கிளம்பாமல் இருந்தனர்.
திருச்செல்வன் சொல்வது சரி என்பதால்.
கோமதி நிர்மலாவிடம் நீங்க போங்க அண்ணி பிள்ளைகளை. பாத்துக்கோங்க.
சரி என்ற நிர்மலாவும், விமல்ராஜ், இனியன் , ப்பிரித்தம் , மீனாட்சி என்று அனைவரும் பொள்ளாட்சிக்கு சென்றனர்.
மீனாட்சி நிர்மலாவிடம் இனியாவையையும் பிரகாவையும் வீட்டுக்கு வந்துட்டு போக சொல்லு என்று கூற.
இவர்கள் கோயம்புத்தூர் வந்தவுடனே அவர்களுக்கான கார்கள் காத்து இருக்க.
குமரன் இனியாவுக்காக தனி கார் கொண்டு வர. இனியாவும் பிரகாதீஸ்வரனும் குமரன் காரில் ஏறி செல்ல .
மற்றவர்கள் இன்னொரு காரில் பொள்ளாட்சி வீட்டுக்கு சென்றனர்.
காரில் செல்லும் போதே அனைத்தையும் கேட்டு கொண்டாள்.
மீனாட்சி ஹாஸ்பெட்டலுக்கு சென்றனர்.
டெலிவரி வார்டு பக்கம் செல்ல.அங்கே ஓரே சத்தமாக இருந்தது.
இனியாவை பார்த்து இன்னும் சத்தம் கூட. அவர்களிடம் உங்க குழந்தை கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும் என்றவள். அனைவரையும் அமைதியாக இருக்க சொன்னவள்.
குமரனை அழைத்து நேற்று இங்கே வேலை பார்த்து அனைவரையும் வரச் சொல் என்றவள். அந்த பெரிய ஹாலில் பிரகாவை ஒரு சேரில் அமர சொன்னவள். நின்று கொண்டு இருக்க. அனைவரும் வந்தவுடன் .
ஒரு பெண் டாக்டரிடம் நேத்து நீங்க தான் டெலிவரி பாத்தீங்க?
ஆமாம் மேம் . நேற்று நைட் சாருன்னு ஒரு பொண்ணுக்கு டெலிவரி பார்த்தேன். 12 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்பறமா 1.30 மணிக்கு ராஜி என்ற பொண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது மேடம் ரெண்டூமே நார்மல் டெலிவரிதான்.
இரண்டு பேரும் ப்பிரி பிளக்கில் தான் இருந்தாங்க. நாங்க காலையில் வந்து பார்த்தா சாரு இல்ல . அவங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை வச்சுட்டு . ராஜிக்கு பிறந்த ஆண் குழந்தையை தூக்கிட்டு போய்ட்டாங்க. நாங்க தேடி பார்த்தோம் அவங்க இல்ல.
சி.சி .டியில் வீடியோவில் பார்த்தோம் சாருவும் அவள் கணவர், குழந்தையும் காலையில் 5 மணிக்கு ராஜிக்கு பிறந்த ஆண். குழந்தையை தூக்கி போறத பார்த்தோம்.
இனியா அவங்க எந்த ஊரு கேட்டீங்களா. இல்ல மேம் சாரு வர்ரப்போ டெலிவரி பெய்ன் அதிகமா இருந்தது. நாங்க பிரசவம் நல்ல படியா நடக்கனுமுன்னு பாத்துட்டு இருந்தோம் மேம் . சாரு கணவர் கிட்ட கேட்டோம். சாரு பேரு மட்டும் தான் சொன்னாரு அட்ரஸ் கேட்ட. காலையில் எழுதி தாரேன் சொன்னாரு என்று சொல்ல.
இனியாவுக்கு கோபம் வர . என்ன வேலை பாக்குறீங்க எல்லோரும் . ஒரு நாள் நான் இல்ல அதுகுள்ள. இது எல்லாம். இது ஹாஸ்பெட்டல இல்ல வேற எதுவுமா.
ஒரு பொண்ணு வந்து டெலிவரியாகி இருக்கு. அவங்க பேரு மட்டும் வாங்கி வச்சு இருக்கீங்க. முதலில் அவங்க அட்ரெஸ் வாங்கனுமுன்னு தெரியாத என்று ஒரு நர்சை பிடித்து திட்டியவள்.
ஹாஸ்பெட்டல் ரூல் தெரியாதா உங்களுக்கு. இது ப்பிரி பிளக் தான் ஆனா, இங்கு யாரு வர்ர போற எல்லா டீடெயில்சும் சரியா இருக்கனும்.
இப்போ அவர்களை எங்கே தேடி போக முடியும். அட்ரஸ் இல்ல . குழந்தையை தூக்கிட்டு போய் இருக்காங்க என்று புலம்ப.
இனியாவின் அருகில் வந்த பிரகா நிதானமா யோசி இனியா. இவங்க சொல்லுற பார்த்த வந்த வங்க குழந்தை கடந்த வல்ல. குழந்தை மாத்தி தூக்கிட்டு போய் இருக்காங்க. ஒரு வேல அவங்களுக்கு பெண் குழந்தை வேண்டாம் என்று நினைத்து. ஆண் குழந்தை தேவையா இருந்துருக்கு மோ. அதனால தூக்கிட்டு போய் இருக்கலாம்.
இனியா குமரனை அழைத்து. சாரு கூட எத்தன பேர் வந்தாங்க.
இரண்டு பேர் தான் மேம் சாரு கணவர், ஒரு சின்ன பெண் 6 ,7 வயது இருக்கும்.
என்ன லாங்குவேஜ் பேசுனாங்க .
மேம் தமிழ் , தெலுங்கு மாதிரி தெரிஞ்சது.
பிரகா குமரனிடம் அந்த சி.சி.டி வீடியோ என் செல்லுக்கு அனுப்புங்க என்று சொல்ல.
குமரன் அனுப்பிய வீடியோவை பார்த்த பிரகா இனியாவை அழைத்து. அவளிடம் சாருவும் அவள் கணவன் அந்த சின்ன பெண் குழந்தையை பள்ளி சீருடை அணிந்து இருக்க அதை சுட்டி காண்பித்தவன். எந்த ஸ்கூலுன்னு பாக்க சொல்லு.
இரண்டு , மூன்று பேரை அழைத்தவள். அந்த சிறுமியை காட்டி. இது எந்த பள்ளி யோட யூனிப்பார்ம் என்று கேட்க. சில பேர் தெரிய வில்லை என்று சொல்ல. ஒரு நர்ஸ் ” மேம் எனக்கு தெரியும் இது சன் சைன் ஸ்கூல் யூனிபார்ம்”.
இனியா அந்த ஸ்கூல் எங்கே இருக்கு?
பொள்ளாட்சி பக்கத்தில் உள்ள ஒரு ஊரின் பெயரை சொன்னவள். அந்த ஊரில் தான் ஸ்கூல் இருக்கு மேம்.
பிரகாதீஸ்வரன் நேரம் பார்க்க மாலை 4 மணி இருக்க. ஸ்கூல் இந்நேரம் விட்டு இருப்பாங்க. எப்படி என்று நினைக்க.
பிரகா அந்த ஸ்கூல் யாருடையது என்று இன்டர் நெட்டில் பார்த்து எல்லா விசயத்தையும் தெரிந்து கொள்ள.
இனியா வா, என்று பிரகா அழைக்க எங்கே அத்தான். அந்த ஸ்கூலுக்கு . எப்படி. ஈமேயில் அனுப்பி இருக்கேன் 5 மணிக்குள்ள போகிறலாம் வா என்று அழைக்க செல்ல.
ஈமேயில் அனுப்பியதுக்கு ரிப்ளே. வர. முக்கியமான விசயம் மீட் பிரின்ஸ் பல் என்று ஈமேல் அனுப்பினான் பிரகா.
உடனே காத்து இருக்கிறோம் என்று மெசேஸ் வர.
சன் சைன் ஸ்கூல் முன் வண்டியை நிறுத்தி விட்டு. அனுமதி கேட்டு பிரின்ஸ்பலை மீட் பண்ணி விசயத்தை சொல்லி வீடியோ காட்டி உதவி கேட்க.
பிரின்ஸ்பல் எங்க ஸ்கூல் பேரு வெளியில் வரகூடாது. அந்த வீடியோ பார்த்து எங்க ஸ்கூல் குழந்தை தான். அச்சிறுமி கழுத்தில் ஐ .டி கார்டை பார்த்தவர் அதை பெரிது பண்ணி அட்ரெஸ் எடுத்து கொடுத்தார்.
இனியாவும் பிரகாவும் அந்த அட்ரெஸ்சை நோக்கி சென்றனர். பிரகா காரில் இருக்க சொல்லி விட்டு அவள் மட்டும் உள்ளே சொல்ல. வீடு மிகவும் அமைதியாக இருந்தது.
சாருவும் அவள் கணவரும் குழந்தையை மாத்தி எடுத்து வந்து விட்டார்கள் . ஆனால் அவர்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
சாருவின் மாமியார் , ஆண் வாரிசு வேண்டும் என்று சொல்லி கொண்டு் இருப்பவர். சாருவிற்கு ஏற்கனவே இரண்டு பெண் பிள்ளைகள் இருக்க. மூன்றாவது முறை கர்ப்பமான முதல் இருந்தேன் . சாருவின் மாமியார் அடுத்தது ஆண் பிறக்க வேண்டும் . இல்லை என்றாள் என் மகனுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று கூறி இருக்க.
பயந்த தம்பதியர் இப்படி ஒரு காரியத்தை செய்தனர்.
விட்டில் உள்ளே வந்த. இனியா வீட்டில் யாரும் இல்லையா? என்று கேட்க.
சத்தம் கேட்டு வந்த சாருவின் கணவர் யார் நீங்க வீட்டுக்குள்ள. வர்ரீங்க. யாரு வேணும் உங்களுக்கு?
குழந்தை என்று சொல்ல.
என்ன குழந்தை என்று சாருவின் கணவன் தடுமாற.
நான் டாக்டர் இனியா மீனாட்சி ஹாஸ்பெட்டல் என்னுடையது என்று கூற.
மேம் சாரி மேம் . சாரிமேம் தெரியாம தப்பு பண்ணிட்டோம். மன்னிச்சிருங்க மேம் என்று கை கூப்ப.
இனியா ஏன் சார் படிச்சவங்க தான நீங்க . ஒரு தாய் கிட்ட இருந்து குழந்தை பிரிக்கிறது பாவம் இல்லையா.
மேம் என் அம்மாவுக்கு பயந்து இப்படி பண்ணிட்டேன் மேம் . என் பொண்டாட்டி சாருவுக்கு இதில் சம்பந்தம் இல்ல .
இனியா குழந்தையைக் கொடுக்க என்று கேட்க.
ஒரு நிமிசம் மேம் என்றவன் தூங்கி கொண்டு இருந்த குழந்தையை இனியாவிடம் கொடுக்க. அப்பொழுது வந்த சாருவின் மாமியார் ஐயோ என் வாரிசு . டேய் யார் கிட்ட குழந்தையை குடுக்குற என்று இனியாவிடம் இருந்த குழந்தையை பிடுக்க வர.
ஒரு அறை விட்டாள் இனியா சாருவின் மாமியாருக்கு. என்ன நீயும் பொம்பள தான . பொண்ணு குழந்தையை வேண்டாம் சொல்லுவிய. அவன் அவன் பிள்ளை இல்லென்னு தவம் கிடக்குறான் . பெண் குழந்தை ஈசியா போச்ச . லட்ச கணக்குல செலவு பண்ணாலும் சிலருக்கு குழந்தை இல்லாமல் கஷ்டபடுறாங்க. கடவுள் உங்களுக்கு மூணு மகா லட்சுமியை கொடுத்து இருக்கார். ஆண் வாரிசு வேணுமா. ஒரு பொண்ணுக்கு குழந்தை ஆண் , பொண்ண உருவாக்குற தன்மை கிடையாது. குழந்தை சுமக்க தான் முடியும் .உன் பையன் கிட்ட தான் இருக்கு அந்த முடிவு. அது தெரியாம உன் பையனுக்கு ரெண்டாம் கல்யாணம் பண்ணி வைப்பிய போலிசீல் பிடிச்சு கொடுத்துருவேன் சாக்கிரதை என்று மிரட்டியவள்.
இனியா குழந்தையை தூங்கி கொண்டு வெளியில் வர. பின் வந்த சாருவின் கணவரிடம் அரை மணி நேரம் கழித்து உங்க குழந்தை வீட்டுக்கு வரும்.
தாங் யு மேம் . ஓகே சாருவ நல்ல பாத்துக்கோங்க. சாரி உங்க அம்மாவை அடிச்சதுக்கு என்றவள். காரில் ஏறி செல்ல.
ஆண் குழந்தையை ராஜியிடம் ஒப்படைத்தவள். அவர்களிடம் இருந்த பெண் குழந்தையை வாங்கி குமரனிடம் சாருவிடம் சேர்த்து விடம் மாறு கூறி.
ராஜி குடும்பத்தாரிடம் எங்க ஹாஸ்பெட்டல நடந்த தப்புக்கு மன்னிப்பு கேட்டுகிறேன்.
ராஜியின் குடும்பத்தார் நாங்க சாக்கிரதையா இருந்தா அவங்க குழந்தையை எடுத்துட்டு போயிருக்க மாட்டாங்க மேம் . சாரி மேம். தாங் யு மேம் என்று சொன்னார்கள்.
இனியா இந்த விசயம் வெளியில் சொல்ல வேண்டாம் என்றவள்.
பிரகாவை அழைத்து கொண்டு வீட்டிற்கு செல்ல.
மொத்த குடும்பமும் இவர்களுக்காக காத்து இருக்க. ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்து உள்ளே அழைத்த மீனாட்சி இருவரையும் குளித்து விட்டு வாருங்கள் தாத்தாவுக்கு கும்பிடலாம் என்று சொல்ல. இருவரும் போய் குளித்து விட்டு வர.
பூஜை அறையில் விளக்கேற்றி வணங்கி . தேவேந்திரன் போட்டோவிற்கு பூக்கள் தூவி வணங்கி விட்டு வர.
மீனாட்சி சிறு விருந்தை தயார் பண்ணி வைத்திருக்க. அனைவரும் உணவு உண்டு முடிக்க மணி 8 ஆக.
பிரகா மேலே உள்ள இனியாவின் அறையில் ஓய்வு எடுப்பதாக கூறி செல்ல.
இனியாவோ மீனாட்சியிடம் ஹாஸ்பெட்டலில் நடந்த கதையை . மீனாட்சியின் மடியில் படத்து கொண்டு சொல்லியபடியே தூங்கிவிட.
நிர்மலாவோ அம்மா இனியா தூங்கிட்ட என்று கூற .
மீனாட்சி நான் என்ன பண்ண. அவ எப்போவும் இப்படித்தான். தூங்குவ கொஞ்ச பொறு அரைமணி நேரத்துல கழித்து எழுந்துடுவா என்று கூற.
சரியாக அரைமணி் நேரம் கழித்து முளித்தவள். எங்கே இருக்குறோம் என்று பார்க்க நம்ம வீட்டில் தான் என்ற நினைத்தவள். அப்போது தான் நினைவு வந்தது இன்று தான் தனக்கு கல்யாணம் ஆனது என்று.
ஐயோ என்று மனதில் புலம்பியவள். போட்டோ எடுக்குரப்போவே அந்த பார்வை. பார்த்தவரு இன்னைக்கு தனியா மாட்டுனா சட்னி தான் என்று நினைக்க.
நிர்மலா மீனாட்சியை பார்த்து தூங்க போங்க என்று அனுப்பிவிட்டு. நீ வா இனியா என்று சமையலரை அழைத்து சென்று. இனியாவின் தலையில் மல்லிகை பூவை தலை நிறைய வைத்தவர். ப்பிளஸ்கில் பால் ஊற்றி குடுத்தவர். நல்ல நேரம் 10 மணிக்கு மேலே தான் என்று சொல்ல.
தலையை ஆட்டிய இனியாவை அனைத்து கொண்டவர். நல்லா இருக்கணும் நீங்க இரண்டு பேரும்.
மேலே போ என்று அனுப்ப.
இனியா ப்பிரித்தம் என்று கேட்க. நிர்மலா அவன் இனியன் கூட தூங்குறான். நான் பாத்துகிறேன்.நீ போம்மா என்று மேலே அனுப்பி வைத்தார்.
இனியாவுக்கு மேலே செல்ல கால்கள் வரவில்லை.ஏதோ ஒரு பயம், படபடப்பு, வெக்கம் எதிர்ப்பார்ப்பு எல்லாம் சேர்ந்து இருக்க. மனதை ஒரு நிலைப்படுத்தி கொண்டு .அவளின் ரூம் சென்று கதவை சாத்தியவள்.
பிரகாதீஸ்வரனை பார்க்க அவன் ரூம்பில் இருப்பதாக தெரியவில்லை. பிரகாவின் பேச்சு குரல் பால்கனியில் இருந்து வர.
மெல்ல நடந்து நடு ரூம்பிற்கு வந்த இனியா பால்கனியில் போனால் பேசிக்கொண்டு இருந்த பிரகாவை பார்க்க.
அவனும் போனை பேசிக்கொண்டே திரும்பி பார்க்க இனியாவை பார்த்தவன் வா என்று கூற.
இனியா போன் பேசிட்டு வாங்க என்று சொல்ல.
பிரகா பால்கனியில் பேசிய வாறு ஒரு கை விரித்து இனியாவை அருகில் அழைக்க.
இனியா சிரித்து கொண்டே பிரகாதீஸ்வரின் கையை பற்றி கொண்டு அவனின் தோளில் சாய்ந்து கொள்ள.
ஒரு கையில் இனியாவை இறுக்கமாக பிடித்து கொண்டான். மறு கையில் போன் பேசிக்கொண்டு இருக்க.
பிரகாவை நிமிர்ந்து அவனின் முகத்தையே பார்க்க.
என்ன வென்று பிரகா கேட்க .
பாக்குறேன் என் அத்தானை .
பாரு , பாரு. என்று பிரகா பேசிகொண்டே இருக்க.
இனியா மனதில் இது நிஜமா இல்லை கனவா. இவர் என் கணவர் என்று பிரகாவை ஆழ்ந்து பார்த்து அவனின் வாசத்தை சுவாசிக்க.
நிமிர்ந்து பார்த்து கொண்டு இருந்தவளை நெற்றியில் முத்தம் மிட்டவன். சரி கணேஷ் எது நாளும் மெசேஜ் அனுப்பு என்று கூறி குட் நைட் என்று போனை வைக்க. போனை பாக்கெட்டில் போட்டவன் இரு கைகலாளும் இனியாவை அணைத்தப்படியே. என்ன டாக்டர் மேடம். நான் பாத்தாலே திரும்பிக்குவ இப்போ கூப்பிட்ட உடனே வந்துட்ட என்ன மேட்டர்.
இனியா அது அப்போ.
எது எப்போ. இன்றைக்கு தான் கல்யாணம் மாச்சு என்று பிரகா கூற.
ஆன. எனக்கு அப்படி தெரியல.
வேற எப்படி தெரியுது.
அது கல்யாணமாகி ரொம்ப வருஷமானது போல இருக்கு.
இனியா பிரகாவிடம் நன்றி அத்தான் என்று சொல்ல.
எதற்கு என்று பிரகா கேட்க.
ஹாஸ்பெட்டல் அப்பறம் ஸ்கூல் என்று கூற.
பிரகா இதுக்கு போய் நன்றி சொல்லுற. இது ஒரு சின்ன உதவி.
உங்களுக்கு இது சின்ன உதவி. ஆனா எனக்கு நீங்க இல்லனா இந்த விசயம் முடிய இரண்டு நாளாவது ஆகி இருக்கும்.
அப்படியா என்ற பிரகா. இனியாவிடம் அப்போ எனக்கு கிப்ட் வேணும் .
என்ன கிப்ட் வேணும் அத்தான்.
நீதான் வேணும் . என்று பிரகா கூற.
அவனின் மார்பில் முகத்தை மறைத்து கொண்டாள்.
பிரகா இனியாவிடம் கிப்ட் தருவீயா . இல்ல நான் எடுத்துகவா என்று கேட்க.
இனியாவிடம் மௌனம் மட்டுமே.
பிரகா மௌனம் சம்மதமா என்று கேட்க. அதற்கும் பதில் இல்லை. இனியாவின் முகத்தை தன்னை நோக்கி திருப்ப.
இனியாவோ கண்களை மூடிபடியே இருக்க. அந்த கண்களுக்கு முத்தமிட்டவன். என்ன பதிலை காணோம். ஹலோ டாக்டர் மேடம் தூங்கிட்டியா.
இனியா சிரிக்க.
அந்த சிரிக்கும் இடத்தை தன் இதழ் கொண்டு மூடியிருந்தான் பிரகா.
இருவருக்கும் முதல் இதழ் முத்தம். பிரகாவின் கை இனியாவின் இடுப்பை தன்னை நோக்கி இழுத்து பிடித்து இருக்க.
இனியாவோ தன் இரு கைகளையும் பிரகாவின் தோளில் வைத்து இருந்தாள்.
ஒரு மோன மான மயங்கி நினைவில் இருவரும் இருக்க.
இனியாவின் அறை கதவு வேகமாக தட்டப்பட.
சத்தம் கேட்டு பிரிந்த இருவரும் கனவுலகில் இருந்து நிஜ உலகத்துக்கு வந்தனர்.
கதவை தட்டிய அந்த கரடி யார்?….
error: Content is protected !!