Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உறவாக அல்ல உயிராக

உறவாக அல்ல உயிராக 4

அத்தியாயம்    4



Advertisement

    அந்த   அரங்கமே   சத்தத்தால்  அதிர்ந்து  கொண்டு  இருந்தது.  சிலர்  லியம், லியம்  என்று  சத்தமிட. சிலர்   பிரகா, பிரகா என்று  சத்தமிட்டு  கொண்டு  இருக்க.

Advertisement

Advertisement

நீயா, நான  என்று  பிரகதீஸ்வரனுக்கும், லியம்  என்ற  வெளிநாட்டுகாரனுக்கும்     (ஹாம்ரெஸ்லிங்)  கைபலு  போட்டி  நடந்து  கொண்டு  இருந்தது.

பீரகதீஸ்வரனை  தெரிந்தவர்கள்   அவனுக்கு  சப்போர்ட்   பண்ண,  லியமை  தெரிந்தவர்கள்   இவனுக்கு  சப்போர்ட்  பண்ண.

Advertisement

இரு  குழுவாக   பிரிந்து. இருவருக்கும்  நடக்கும்   ஹாம்ரெஸ்லிங்கை   பார்த்து  கொண்டு   இருந்தவர்கள்.  இருவருக்கும்   சப்போர்ட்  பண்ண.

பிரகதீஸ்வரின்   பக்கத்தில்   இருந்த.  அவனின்   பி.ஏ   கணேஷ்.  சார்,  சார்,  சூப்பர்   இன்னும்   கொஞ்சம்   தான்  யுவர்   வின்னர்.  என்று  அவனை  எங்கரேஜ்  செய்து   கொண்டு  இருக்க.

பிரகதீஸ்வரனின்  பார்வை,  அவனின்   கைபலுவில்  இருக்க.

லியமின்  பார்வை ,  தன்னை  சுற்றி  உள்ளவர்களை  பார்க்க .  லியம்  லியம். என்று  சிலர்  இவன்  வெற்றி பெற   கூறிக்கொண்டு   இருந்தவர்களை  பார்த்துவிட்டு.  தன்  பலத்தை அனைத்தும் . தன்   கையில்   வைத்து.  கையை   பீரகாவின்   கையில்   காட்ட.  இருவருக்கும் சரியான  போட்டி  நடந்து   கொண்டு   இருந்தது.

இருவரும்   விட்டுக்  கொடுப்பதாக   இல்லை.

பிரகதீஸ்வரன்  மௌனமாக,  தன்  சக்தி  அனைத்தையும்  சேர்த்து  தன்  கைபலுவில்  காட்ட.

லியமால், பிரகதீஸ்வரன்  தந்த  அலுத்தத்தால். லியமின்  கை  கீழே  செல்ல.

லியமினினால்  அவனின்  கை  கீழே  கொஞ்சமாக  சரிவதை கண்டு.  அவனும்  தன்  உடம்பில்  உள்ள  அனைத்து  சக்தியை  கொண்டு  மீண்டும்,  பிரகாவின்  கையை  சாய்க்க  நினைக்க.

விடுவானா   நமது  பீரகதீஸ்வரன்.  அவனுக்கு ” வெற்றி  ஒன்றே  குறிக்கோள்” அவனின்  கீழே  உள்ள  சேரின்  மீது  தன்  காலை  பலமாக ஊன்றி  வைத்து.  தன்பலுவை  கையில்  காட்ட.

இருவரும். சமம்  நிலையில்  போட்டி  நடந்து  கொண்டு  இருக்க.

லியம்மால், பீரகா  குடுத்த  கையில் அழுத்திய  தாக்கத்தால்.  அவனும்  தன்  ஒரு கால் கீழே. ஒரு  கால்  மேலே  என்று   அவர்கள்  அமர்ந்து  இருந்த  சேரின்  மீது. காலை  வைத்து. அழுத்தம்  கூட்டி,  கையின்  பலுவை  கூட்ட.

இருவருக்கும்   போட்டி  வெகு   நேரமாக   நடைபெற்றுக்  கொண்டிருந்தது.  இருவரும்   பல   சாலிகள்.

 ஒரு  நிமிடம்  லியம்.  தன்  பலத்தை  குறைத்து  கையில்  கூட்ட  நினைக்க. அடுத்த   நொடி  பிரகதீஸ்வரன்,  லியமின்  கையை  சாய்த்திருந்தான்.

எல்லோரும், பிரகதீஸ்வரனின்  பெயரை  சொல்லி  கத்த. வெற்றி  பெற்றவனோ. லியமை  பார்த்து  கண்சிமிட்டி  சிரிக்க.

இருவரும்  கட்டியணைத்து  கொண்டனர்.

லியம்,  பீரகதீஸ்வரனுக்கு   வாழ்த்து  சொல்ல  தாங் ,  யு  லியம்  என்று  சொல்லி   விலகியவன். இது   எப்போதும்   இருவருக்கும்   நடக்கும்  விளையாட்டுப்   போட்டி.

சார்,  லேட்டாகியிருச்சு  பார்ட்டிக்கு  என்று கணேஷ் கூற.  அனைவரிடமும்  சொல்லிவிட்டு   கிளம்பினான்   பிரகதீஸ்வரன்.

 அவன்  ப்பாரிஸ்  வந்து  9  மாதங்கள்  ஆகியிருந்த்து . வந்த  வேலை  அனைத்தும்   நேற்றுதான்  முடித்து  இருந்தான்.

இன்று  கடைசியாக  அவன்  கட்டி  கொடுத்த   ட்ரீம்  ஔசை  பார்த்து. விட்டு  போக வர.

இங்கே  இவனுடன்  சேர்ந்து.  வேலை  பார்த்தவன்  தான்  லியம்.

பீரகா, லியமை  பார்த்து  நன்றி   சொல்லி கிளம்ப.

லியம்   அவனை  போட்டிக்கு  அழைக்க  முதலில்  முடியாது  என்றவன்.பின் லியம்  சொன்ன  சொல்லில்.  இருவருக்கும்  நடந்தது  இந்த  போட்டி.

பயமா?  என  லியம்  கேட்க.

பீரகா  எனக்கா?  என்றவன், ஜெயித்துவிட்டான்.

கணேஷ்  காரை  ஓட்டிக்கொண்டு வர.  பக்கத்தில்  அமர்ந்திருந்தான்  பிரகதீஸ்வரன். ” சார். ரூம்க்கு  போய்ட்டு  பார்ட்டிக்கு  கிளம்பலாம்”  என்று  கணேஷ்  கூற.

‘ உம்’  என்று  சொல்லி  கண்ணை  மூடி  சீட்டில்  சாய்ந்து  அமர்ந்தான்.

“கணேஷ்”  பீரகதீஸ்வரனிடம்   சார் , என்ன  ஆச்சு?  ஏன் டல்லா  இருக்கீங்க  என்று கேட்க.

ஒன்னும்  இல்லை என்றவன். யோசனையில்  இருக்க.

கணேஷனே  பேச்சை  தொடர்ந்தான்.  சார்  ” கல்யாணத்தை  பத்தி  யோசிக்கிறிங்கலோ”,  என்று  கேட்க.

டேய்  வண்டிய  பார்த்து  ஓட்டு  என்றவன். இரண்டு  நாள் முன்பு . தன் அம்மா தன்னிடம்  கல்யாணத்தைப்  பற்றிக்  கேட்க  “சரி ”  என்றவன்.

இன்று ஏதோ  மனது  சரியில்லை  என்று  நினைத்தவன்.  மகிழுக்கு  போனில்  அழைக்க   நான்கு,  ஐந்து  ரிங்கில்  எடுத்தவள்.

ஹலோ!   யாரு?  என்று  கேட்க . நான் பீரகதீஸ்வரன் என்று  சொல்ல.

அத்தான், எப்படி  இருக்கீங்க?

ஐ  யம்  ஆல் ரைட்.  யு  மகி  என்று  கேட்க.” ஐ யம்  குட்  அத்தான்”  என்றவள்.

” நீங்க”  எந்த  நாட்டுல  இருக்கீங்க  அத்தான்?

” பாரீஸ்  மகிழ்.”  என்று கூற.

ஹோ,  சூப்பர்  அழகான  ஊர்  அத்தான்.  வேலையெல்லாம்   முடிஞ்சதா?  என்று  மகிழ்  கேட்க.

” எல்லாம்   முடிஞ்சது.  உன்கிட்ட   ஒன்னு  கேட்கனும்  மகிழ்,”   என்று  பீரகதீஸ்வரன்  கூற.

” சொல்லுங்க!  அத்தான்”  என்றாள்  மகிழ்.

உனக்கு  கல்யாணத்துல  சம்மதமா?  என்று கேட்க.

எனக்கு  ஓகேதான்.  உங்களுக்கு?  என்று  கேட்க.

“எனக்கு   ஓகேதான்  மகிழ், கல்யாணம்  இன்னும்  இரண்டு  வாரத்துல வைக்க  சொல்லிட்டேன். உனக்கு  ஓகேவா.?”

எனக்கு  ஒன்னும்  பிரச்சனை  இல்லை.

சரி மகிழ். பாய் என்று  போனை வைத்தான்.

சார்.  என்று  கணேஷ்  காரை  நிறுத்த.

இருவரும்  தங்கி  இருந்த.  இடம் வர.

அவர்கள்  ரூம்பிற்கு  சென்று  பார்ட்டிக்கு  கிளம்பி வர.

பீரகதீஸ்வரனை  நீண்ட  நாள்  கழித்து.  அவனை  புல்  கோட் சூட்டில்  பார்த்த  கணேஷ்.  “அழகன்டா”  என்றே  சொன்னான்  மனதில்.

நீ  ரெடியா  கணேஷ்?  என்று  இருவரும்  பார்ட்டி  நடக்கும்  இடத்துக்கு  சென்றனர்.

இது  ஒரு  சக்சஸ்  பார்ட்டி .

 பாரீஸில்  உள்ள  மிகப்  பெரிய  கோடீஸ்வரனுக்கு,  பீரகதீஸ்வரன். அவர்  நினைத்தது  போல  கனவு   இல்லம்   கட்டிக்  கொடுக்க.  அதனால்  இந்த  பார்ட்டி.

இவர்கள்  வரும்  முன்னே  பார்ட்டி  தொடக்கி  இருக்க.  இவ்விருவரை  வரவேற்று.  பிரகதீஸ்வரனுக்கு   நன்றி   சொல்ல  அதை  ஏற்றவன்.

பார்ட்டியில்   கலந்து  கொள்ள.  எல்லோரும்  மது  அருந்திக்   கொண்டு,  நடனம்  ஆடிக்கொண்டு , பாடிக்கொண்டு  இருக்க,  பிரகதீஸ்வரன்  மது  கிளாஸ்சை  எடுத்து  கொண்டு  கொஞ்ச ,  கொஞ்சமாக   அருந்த.

கணேசனோ   மதுவை  கிளாஸ், கிளாஸ்  குடித்து  உள்ளே  தள்ள.

  “பீரகதீஸ்வரன்”  கணேஷைப். பார்த்து  டேய்  ஓவரா  போகாத.

 சார்  பாரின்  சரக்கு  எப்போ  கிடைக்குமோ. இந்த மாதிரி  பார்ட்டியில் தான்  இப்படி   குடிக்க   முடியும்.

அவனைப்  பார்த்து  சிரித்தவன்.  பார்ட்டியில்  உள்ள  வரை  கவனிக்க.  ஒரு  சிலர்  இவனிடம்  வந்து  பேசிவிட்டு  சென்றனர்.

“கணேஷ்”   பிரகதீஸ்வரிடம்   வந்து சார்  நான்  சொன்னவுடனே  திரும்பி  பாக்காதீங்க  என்று  சொல்லியவன்.   உங்க  எதிர்  பக்கம்  ஒரு ரெட் கலர்  ட்ரெஸ்   போட்ட  பொண்ணு  உங்கள   ரொம்ப  நேரம  பார்த்து சைட்  அடிக்குது.

” எனக்கு  தெரியும்”,  என்றவன்.

” நீ  அதை  கவனிக்காத”   என்று  சொல்லியவன். இன்னும்  அரை  மணிநேரத்தில்  கிளம்பிவிடலாம். என்று  நினைத்து  கொண்டு  இருந்தால்.

 அந்த  ரெட் கலர்    ட்ரெஸ்   போட்ட   பொண்ணு. இந்த  பார்ட்டி  ஏற்பாடு  பண்ண  கோடிஸ்வரரோட  பொண்ணு.

 பீரகதீஸ்வரனிடம்  அந்த  பெண்  மெதுவாக  வந்து  தன்னை   அறிமுகம் படுத்திக்கொண்டு. தன்னுடன்  நடனம்  ஆட  அழைக்க.

பிரகதீஸ்வரன்  மறுக்க.

அவனை  வற்புறுத்தி  அழைத்து  சென்றவள். அவனிடம்  நெருங்கி  நடனம்  ஆட.  இது  இங்கே  சகஜம்,  ஆனால்  பிரகதீஸ்வரனுக்கு  பிடிக்க  வில்லை.  நாகரீகம்   கருதி  அவளுடன் சேர்ந்து நடனம்  ஆட.

 அவளோ  பிரகதீஸ்வரைக்  கட்டி  அணைக்க வர.

சாரி, என்று  அவளைத்  தடுக்க.

 அப்பொண்ணோ   மீண்டும்  அவணை  அணைத்து ஆட.

பிரகதீஸ்வரன் , சாரி  ஐ யம்   எங்கேஜ்  சம்  ஒன்  என்று  கூறி  அப்பெண்ணிடம். இருந்து  விலகி  வர .

 கணேஷனை  பார்த்து  வா  என்று அழைக்க  அவனோ  முழு  போதையில்  இருக்க. அவனை  இழுத்துக்  கொண்டு  காருக்கு  வர.

“சார் , சார்,  இன்னும்  பார்ட்டி   முடியல  வாங்க  போலாம்”  என்று சொல்ல.

” டேய், பார்ட்டி  முடியல  இன்னும்  கொஞ்ச  நேரம்  இருந்த.  அந்த  பொண்ணு  என்னை  லவ்  பண்றேன்னு  சொன்னாலும்  சொல்லுவா  அவ  கண்ணுல  தெரிஞ்சது.  போதும்  வாடா”,  என்று  கூறி  காரை  கிளப்ப.

கணேஷ்  முன்  சீட்டில்  நன்றாக   சாய்ந்து  கொண்டு  சார் ” நீங்க  சோ   லக்கி சார்!  எல்லா  பொண்ணுகளுக்கும்   உங்களைப்  பார்த்தவுடனே  பிடிக்குது.

டேய்!   உளறாத   வாய்  மூடிட்டு  இரு.

அவனோ, பீரகதீஸ்வரனை   பார்த்து  ”  சார்  நான்  மட்டும்   பொண்ணா இருத்தேன்.  உங்க  கிட்ட   வேலைக்கு  சேர்ந்தவுடனே  லவ்  சொல்லி  இருப்பேன்”.

பிரகதீஸ்வரனோ,  கணேஷ்சிடம் ” உனக்கு  ரொம்ப  ஓவர்  போதை  ஏறிடிச்சு  போல”  என்றவன். அவன்  புலம்புவதை  கேட்டு  சிரித்து   கொண்டு  வர.

 கணேஷ்  மீண்டும்  இன்னைக்கு  நீங்க  இன்னும்   ஹான்சமா   இருந்தீங்க  சார்  என்றவன்.  6  அடிக்கு  மேல்  உயரம்,  கருப்பும்  இல்லாமல்,  சிவப்பும்  இல்லாமல் , நடுவில்  பொது  நிறமாக  இருக்க  அதுவும் ஓர்  பேர் அழகு.

” உங்க  நிமிர்  நடை,   உங்க  லுங், சோ  ஹான்சம்  சார்”  என்று  அவனை  வர்ணிக்க.

டேய்!  காவ்யாவுக்கு  போன்  போடவா?  என்று பீரகதீஸ்வரன்  கேட்க.

அய்யையோ  வேண்டாம்  சார்?  வேண்டாம்  என்று  அவனின்  மனைவியை  நினைத்து  பயப்பட.

அது  அந்த  பயம்  இருக்கனும்  என்று  சொல்ல.

 அவர்கள்  தங்கும்  இடம்  வர  பார்க்கிங்கில்  காரை  விட்டவன். கணேஷ்யை  அவனின்  ரூம்மில்  விட்டவன்.” அவனிடம்  நாளை  காலை  10.30   மணிக்கு , இந்தியாவுக்கு  பிளைட்  தூங்கு”.  என்று  சொல்லி  தனது  ரூம்  சென்றான்.

பிரகதீஸ்வரனுக்கு  நீண்ட்  நேரம்  கழித்து  தூங்கம்  வர.  அவனின்  அறை  கதவு  தட்டும்  ஓசையை கேட்டு  எழுந்தவன்.  கதவைத்  திறக்க.  கணேஷ்   கிளம்பி  ரெடியாக   இருக்க.

அவனிடம். தனது  லக்கேஜை  காரில்  ஏற்றச்சொன்னவன்.  10  நிமிடத்தில்  கிளம்பி  கீழே  வர  கார்  விமான  நிலையம்  நோக்கி  சென்றது.

இருவரும்  அனைத்து முடித்து விமானத்தில் ஏறி. இந்தியாவுக்கு வந்தனர்.

கணேஷ்சிடம், பிரகதீஸ்வரன்  நீ  பெங்களுரு  போறியா,  இல்லை உன்  ஊருக்கு  போறியா  என்று  கேட்க.

இல்லை சார்,  ” முதலில், ஆபீஸ். போய்ட்டு  ஒரு சில வேலை இருக்கு  முடிச்சுட்டு.  நான். கிளம்புறேன்’.

பெங்களுரில்  தான்  பிரகதீஸ்வரன் ஹெட்  ஆபீஸ்  இருக்கு.

கணேஷ்சின்  ஊரு  பெங்களுரில் இருந்து  கொஞ்சம்  தூரம் தான். எனவே  வேலை  முடித்து விட்டு. செல்ல  நினைத்தான்.

நீங்க  சார்  என்று  கேட்க.

நான்  என்றவன்   எப்பொழுதும்  போல  தான்  மட்கேரிக்கு  செல்கிறேன்  என்று  சொல்ல.

சார்  அம்மா  கிட்ட  சொல்லிட்டீங்களா?  என்று  கேட்க.

பீரகதீஸ்வரனோ, நான்  போன்  பண்ணாலும்  எங்க  வீட்டுல  யாரும்  இருக்க  மாட்டாங்க.  அம்மாவும்,  அப்பாவும்  ஹாஸ்பெட்டல்  வேலை  பார்த்துட்டு  இருப்பாங்க.

நான்  என்   வீட்டுக்கு போனாலும். யாரும்  இருக்க  மாட்டாங்க   அவங்களுக்கு  அவங்க  வேலை. முக்கியம்  சோ , நான்  மட்கேரிக்கு  போறேன்  என்று  கிளம்பினான்.

பீரகதீஸ்வரின்  கார்  மட்கேரி  நோக்கி  சென்றது. அவனின்  நினைவு  பின்  நோக்கி  சென்றது.

அவனுக்கு   தாய்  தந்தை கூட  இருக்க வேண்டும்  என்று  ஆசை, இருவரும்  டாக்டர் என்பதால்  அவர்கள்  எப்பொழுதும்  ஹாஸ்பெட்டல் தான். பிறகு தான் வீடு.

 நிர்மலாவுக்கும்  பிரகதீஸ்வரனை  சரியாக  கவனிக்க  முடியவில்லை  என்று  (14)   பதினான்கு  வயதில்  அவனை ஹாஸ்டெலில்  சேர்க்க.

அன்றில்  இருந்து  பீரகதீஸ்வரனுக்கு  தனிமை தான் யாரோடும்  சரியாக  பேசியதும் இல்லை, பழகியதும்  இல்லை,  நன்றாக  படிப்பான்.

 தனிமை  விரும்பி ஏற்றான். இயற்கை   ரசிக்க  ஆரம்பித்தான். இயற்கையோடு  வாழப்பழகி  கொண்டான்.

அவனை  அவனே  சந்தோஷமாக  வைத்துக்   கொண்டான்.

அவனை சந்தோஷமாக  வைத்துக்  கொள்ள  என்ன  தனக்கு  வேண்டும். எது  பிடிக்கும்  என்று அறிந்து  கொண்டான்.

நிறைய  பாடல்கள்  கேட்பான்.

அவன்  ஹாஸ்டெல் சேர்ந்த  ஊர்  தான்  மட்கேரி,  அங்கே உள்ள இடங்களில்  தான்  சுற்றி திரிவான்.

பெங்களுரில்  இருந்து  மட்கேரி  மிக  தொலைவில்  உள்ள  ஊர்.

மட்கேரி  மலைகள்  நிறைந்த, அமைதியான ஊர் , பசுமையான இடம். எப்பொழுதும்  மழை  பெய்து  கொண்டே  இருக்கும்,  குளிர் அதிகமாக இருக்கும். எங்கே  பார்த்தாலும்  பச்சை  பசேல் என்று  இருக்கும்.  இந்த  ஊரின்  பக்கத்தில்  ஒரு  மிகப். பெரிய  அருவி  உண்டு.

பீரகதீஸ்வரன்   படித்து  முடித்து,  வேலைக்கு  சென்ற  முதல்   சாம்பத்தியத்தில், மட்கேரியில். ஒரு  இடம் வாங்கி. பின்பு  ஒரு அழகிய  வீட்டையும்  கட்டி,  அவனுக்கு ஓய்வு  கிடைக்கும்  நேரம்  எல்லாம்  இங்கே  வந்து  விடுவான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!