Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

68. சரண்யா கீதா - உளமாற உனதாகிறேன்

உளமாற உனதாகிறேன் – 6

உளமாற உனதாகிறேன் – 6

இருள் சூழ்ந்து இரவினை பிரதிபலித்து கொண்டிருந்தது. ஆனால் அத்திருமண மண்டபமோ பகலினை போன்று ஜொலித்துக் கொண்டிருக்க… கருநீல கோர் சூட்டில் கம்பீரத்தின் மறுஉருவமாக வாசு கீர்த்தனன் நின்ருக்க… அவனருகில் அவனுக்கு பொருத்தமாய் இளநீல பட்டில் அமைதியாய் நின்றிருந்தாள் கண்ணுக்கினியாள். ஆனால் மனதில் மட்டும் அத்தனை போராட்டம்.

வளையாபதியோ வரும் அத்தனை பேரிடமும் ஆர்ப்பாட்டமாக வளவளத்துக் கொண்டிருக்க… வளையாபதியின் துணைவி நான் என்பதை போல் மங்களமும் அனைவரிடமும் இன்முகமாக பேசிக் கொண்டு இருந்தார்.

இதை எல்லாம் பார்த்த இனியாளோ தன் பெற்றோர்கள் எங்கே என்று பார்க்க… அவர்களோ நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருக்க… அதற்கு எதிர்பதமாக பெருமாள் மட்டும் அனைவரிடமும் வளவளத்து கொண்டிருந்தார்.



Advertisement

அதை கண்டவளின் முகம் சட்டென மாறிப் போக… இதில் நீண்ட நேரம் நிற்பது வேறு கால் வலி கொடுக்க… எப்போதடா அனைத்தும் முடியும் என்பது போன்று இருந்தது அவளது பாவணை.

அதை எல்லாம் கண்டும் காணாது அமைதியாக பார்த்திருந்தான் வாசு. அனைத்தும் முடிந்து அவரவர் சென்றுவிட… இனியாளும் உடை மாற்றுவதற்கு அறைக்கு செல்ல… அங்கு அவளின் குடும்பம் நின்றிருக்க… அவர்களை கண்டதும் தானாக அவளின் கண்களில் குளம் கட்டிக் கொண்டது.

“இந்தாடி எல்லாம் முடிஞ்சதுன்னு உன் வாலை ஆட்டாத… எல்லாத்தையும் சுருட்டி வை… நீ வாக்கப்பட்டு போய் இருக்கிறது பெரிய குடும்பம்… ஏதோ என் பையனாலா உனக்கு இந்த அதிர்ஷ்டம்…” என்று ஏதோ அவள் இனி வாழப் போகும் வாழ்க்கையே அவர் மகன் போட்ட பிச்சை தான் என்பதை போல் பேச…

Advertisement

“அட ஆமா அத்தை… கண்டிப்பா நான் அதிர்ஷ்டம் செஞ்சவ தான்… அதுதான் உன் கடைசி பையனுக்கு வாக்கப்படாம தப்பிச்சிட்டேன்…”

Advertisement

“ஏய் என்னடி ரொம்ப ஓவரா பேசுற… நீ பேசுறது பார்த்தா  வேணும்னு வெண்பாவை நீதான் தப்பிக்க வைச்சியா” என்ற தாக்குதலில் ஓர் நொடி நிலைக்குலைந்தாலும்… ஸ்திரமாக நின்றவள்…

“ஆமா நான் தான் தப்பிக்க வைச்சேன்… அதுக்கு என்னங்குறீங்க… உங்க மகன் அவமானப்படுனும்னு அப்படி செஞ்சேன்…”

“அய்யோ… அய்யோ… டேய் சிவம்… இதைக் கேட்டியா… இவச்சொல்றது கேட்டியா… எனக்கு அப்போவே தெரியும்டா… இவதான் ஏதோ பண்ணி இருப்பான்னு…‌ இப்போ பாரு நான் சந்தேகப்பட்டது சரியாப் போச்சு…”

Advertisement

“அட அத்தை அவ நீங்க பேசுறீங்கன்னு வீம்புக்கு பேசுறான்னா… நீங்களும் அதை நம்புறிங்களே” என்ற பிரபாவை முறைத்தவர்…

“ஏய் வாயை மூடுடி… உன் தங்கச்சிக்கு கொடி பிடிக்குறியா…” என்று எகிறிக் கொண்டு வந்தவர்… வாசல் கதவு மீது சாய்ந்து நிற்கும் வாசுவை கண்டதும் அப்படியே வாயை முடிக் கொண்டார். இதில் அவன் பார்வை வேறு அவரையே உறுத்து பார்த்து கொண்டிருக்க தானாக மகன் பின் பதுங்கினார்.

பெருமாளுக்கோ அப்படியொரு ஆத்திரம். தன்னை அவமானபடுத்த வேண்டுமென்றே இனியாள் செய்தது இவை என்று உறுதியாக நம்பியவர்… அதை அவள் வாயால் சொல்லியும் எதுவும் செய்யாத மாமன் மீது கோவம் பெருகியது. தானே அவளை ஏதாவது கேட்கலாம் என்றால் நந்தியாக வாசு வேறு வந்து நிற்க… தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள பெரும்பாடுப் பட்டார் பெருமாள்.

“என்ன சகல இங்கேயே நின்னுட்டு இருந்தா எப்படி… நைட்டு முழுக்க மண்டபத்துக்கு காவலுக்கு இருக்க போறீங்களா… பொண்ணை கூட்டிட்டு காருக்கு வாங்க” என்றவனின் பார்வை இனியா மீது நிலைத்திருக்க… அவளோ முகத்தை திருப்பியிருந்தாள்.

“ஹான்… இதோ வரேன் தம்பி…” என்று பம்மியவர்… இனியாவோடு காருக்கு செல்ல… அவள் பெற்றோர்களும் பின்னே வந்தனர். பிரபா மட்டுமே அறிவுரை கூறிக் கொண்டு வர… அனைத்திற்கும் சரி சரியென்று தலையாட்டியவள்… தாய் பேசாது இருப்பதை நேரம் கடந்தே உணர்ந்தாள்.

வாசகிக்கோ வெண்பாவின் மீது எத்தனை கோபமோ… அதே சரிவிகிதத்தில் கண்ணுக்கினியாளின் மீதும் இருக்க… அமைதியாய் தன் கோவத்தை காட்டினார்.

“அம்மா எதாச்சும் பேசும்மா… ப்ச் அப்பா நீயாச்சும் எதாச்சும் பேசு… கண்டிப்பா இனியாவுக்கு நடந்த எதுலேயும் சம்பந்தம் இருக்காது…” என்ற அக்காவின் வார்த்தைகள் அவள் விழிகளில் நீரை நிறுத்திட…

“விடுக்கா… அவங்க கொஞ்சம் சரியாகட்டும்… சரி நான் போயிட்டு வரேன் மா… போயிட்டு வரேன் பா” என்றவள் விம்மலை அடக்கியபடி வாசுவின் அருகில் உட்கார… காரும் அதன் வழியில் பயணிக்க ஆரம்பித்தது!

•••••••••••

திருமணமே பெரும் களோபரத்தில் நடந்ததால் இன்று எந்த சடங்கும் வேண்டாம் என்று மங்களம் முடிவெடுத்திட… அதனையே இனியாளிடம் கூறிட… மிகவும் ஆசுவாசமாக உணர்ந்தாள் அவள்.

“மேல பர்ஸ்ட் தான் அவனுடைய ரூம் இனியா… நீயே போயிடுவியா இல்ல நான் வரட்டுமா…” என்று கேட்ட மங்களத்திற்கு தானே போய்விடுவதாக தலையாட்டிவிட்டு மேலே நடந்தாள் இனியாள்…

வாய் நிறைய அத்தை… அத்தை… என்று கூப்பிட்டவள் இப்போது அமைதியாக செல்வதை கண்டு… கவலையாக அவளை பார்த்திருந்தார் மங்களம்…. எல்லாம் போக போக சரியாகிடும் என்று தனக்கு தானே கூறிக் கொண்டவர் தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

லேசாக சாற்றியிருந்த கதவை திறந்து உள்நுழைந்தாள் இனியாள். விழிகளை சுழலவிட எங்கும் வாசு இருப்பது போன்று தெரியவில்லை… என்ன செய்வது என்று தெரியாது அமைதியாக சென்று கட்டிலில் அமர… பால்கனியில் இருந்து உள்நுழைந்தான் வாசு.

அவன் வந்ததும் சட்டென்று எழுந்தவளுக்கு என்னவோ காலில் கீறிக் கொள்ள… ‘ஸ்ஸ்’ என்றபடி பாதத்தை பற்றிக் கொண்டு அமர்ந்துவிட்டாள்..

“கையெடு இனியா.. என்னாச்சுன்னு பார்க்குறேன்” என்று வாசுவும் கீழ் அமர்ந்திட… வெகு நெருக்கத்தில் அவன் முகம்…  அதை கண்டதும் தானாக அவளின் உள்ளம் பதற தொடங்கியது!

“அய்யயோ அதெல்லாம் ஒன்னுமில்ல… நான் பார்த்துக்கிறேன்…” என்று எழ முனைந்தவளை கரம் கொண்டு அணைக்கட்டியவன்…

“ஷ்ஷ்… அமைதியா இரு… என்னன்னு பார்க்குறேன்” என்றபடி அவள் பாதம் பற்றி பார்க்க… அணிந்திருந்த கொலுசில் பாதி உடைந்திருந்த மணி அவளின் காலை கிழித்திருந்து…

லேசாய் ரத்தம் கசிந்த இடத்தை பார்த்தவன்…

“அவ்ளோ ஒன்னும் பெரிய அடியில்ல… ஜஸ்ட் சின்ன ஸ்கரட்ச்(scratch) தான்… கொலுசை மட்டும் கழட்டிடலாம்…” என்றதும் நொடி தாமதித்து அவனே அதனை கழட்டினான்.

“ம்ம்… இந்த கொலுசால எவ்வளவு பிரச்சனை…” என்றவனின் வார்த்தையில் சரக்கென்று நிமிர்ந்தவள் அவனை அதிர்ந்து பார்க்க…

“ஹேய்… நான் காலை கிழிச்சதால சொன்னேன்… வேற எதையும் மீன் பண்ணல… ம்ம்”என்றதும் அவளிடம் ஆசுவாசமான மூச்சு.

மெது மெதுவாக அவள் கால்களை பிடித்து விட… அதன் சுகத்தில் ஓர் நொடி விழிகளை மூடியவள்… பின் நிஜம் உணர்ந்து கால்களை இழுத்துக் கொள்ள… அவனும் எதுவும் சொல்லவில்லை.

அதன் பின் இருவரிடத்திலும் அமைதியே நிலவ..‌. வாசுவே தன் பேச்சை தொடங்கினான்.

“என்ன இனியா இப்படியே அமைதியா இருக்க போறீயா… நடந்தது நடந்திடுச்சு… ஸீப்க் அப்…” என்றவனின் வார்த்தையில் அவளிடம் இருந்து விழுந்த முதல் கேள்வியே!

“நெஜமா வெண்பா உங்களை பார்க்க வரலயா…” என்பது தான்.

சத்தியமாய் இந்த கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை. உங்களுக்கு இந்த திருமணத்தில் சம்பந்தமா அல்லது வேறு எதாவது தான் பேசுவாள் என்று நினைத்தாள்… இப்படியொரு கேள்வி அவள் அக்காவின் மீது அவள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்ட… கொஞ்சம் பாவம் தோன்றியது… ஆனால் அதனை விட அந்த கேள்வி அவனை எரிச்சல்படுத்த அமைதியே பதிலாய் தந்தான் வாசு…

“சொல்லுங்க… பேசுன்னு சொல்லிட்டு இப்படி அமைதியா இருந்தா எப்படி…”

“ம்ம்… என்ன சொல்றது… உங்க அக்கா என்னை பார்க்க வரல… போதுமா… பைன்… வேற ஏதாச்சும் கேட்கனுமா…”

“ம்ஹூம்” என்று தலையாட்ட… ஆழ்ந்த பார்வை ஒன்றை அவளை நோக்கி வீசியவன்…

“வேறெதுவும் இல்ல… ம்ம்… இப்போ ரெண்டாவது வருஷம் தானே படிக்குற… பி.ல்(B.L)… சென்னையில… ரைட்”

“ஆமா” என்றவளுக்கோ பதட்டம்… என்னவோ அவனிடம் பேசுவதே பெரும் பதட்டத்தை கொடுத்தது…

“நா… நான்… கொஞ்சம் தூங்கட்டுமா… ரொம்ப டையர்டா இருக்கு…” என்று மென்று முழுங்கியவளை பார்த்து மென்புன்னகை சிந்தியவன்…

“படுத்துக்கோ” என்றதும் சட்டென்று கட்டிலின் ஓரம் சென்றவள் போர்வையை போர்த்தி படுத்துக் கொள்ள‌‌… விடாது அவனின் பார்வை அவளின் மீது நிலைத்தது…

“நானும் பார்க்கிறேன்… இன்னும் எத்தனை நாளுக்கு என்னை தெரியாத மாதிரி நடிக்குறேன்னு…” என்று தனக்கு தானே கூறிக் கொண்டவன்… தன் கைகளில் இருக்கும்  அவள் கொலுசை பார்த்ததும் தலையை கோதிக் கொண்டவனின் மனமெங்கும் உற்சாக சாரல்…

தொடரும்…

 

One thought on “உளமாற உனதாகிறேன் – 6

  • Nantha Dhanvik

    வாசுவுக்கு இனியாவா அப்ப ஏற்கனவே தெரியுமா ? அப்ப இனியாவுக்கும் தெரியுமா எப்படி 💖💖💖💖💖💖💖

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!