Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 25

அத்தியாயம் 25

 

பல்லவி அஞ்சலியுடன் பேசியபடி அமர்ந்திருக்க, லதாவும் அவர்களுடன் வந்து அமர்ந்தார் மூவருக்குமான காபியோடு.

 



Advertisement

அஞ்சலி பள்ளியின் இறுதி வகுப்பில் இருந்தாள். அவளின் அத்தனைக்குமான வழிகாட்டி என்னவோ பல்லவி மட்டும் தான்.

 

தங்கைக்கான ஒவ்வொரு தேவையையும் அதிகத்திற்க்குமே ஈஸ்வர் கவனித்துக் கொண்டான் என்றாலும் அஞ்சலி எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் பல்லவியுடனான பேச்சுவார்த்தைகளுக்கு பின் தான்.

Advertisement

 

Advertisement

அதில் கீர்த்திஸ்வரனுக்குமே மகிழ்ச்சி தான். அத்தனைக்கு அழகாய் வழிநடத்தி சென்றாள் அவளை பல்லவி.

 

“இந்த வாய் மட்டும் தான் ம்மா ஜாஸ்தி. மத்தபடி நல்ல பிளேஸ்க்கு போற டேலேண்ட் எல்லாம் நிறையவே இருக்கு!” என்று அன்னையிடமும் அவளைப் பற்றி கூறி இருந்தான் அவன்.

Advertisement

 

அதை லதா பேச்சுவாக்கில் மகன் கூறினான் என்று பெருமையாய் அவளிடமே கூறினாலும் அந்த பெருமையை எருமையில் ஓட்ட வேண்டிய நிலைக்கு கலாய்த்து தள்ளி விடுவாள்.

 

இப்பொழுதும் அஞ்சலியின் படிப்பிற்கான அட்டவணையை தான் தயாரித்து முடித்தனர் இரண்டு மணி நேரமாய் இருந்து.

 

“இது நான் ஃபால்லோ பண்ணின மெத்தட். ட்ரை பண்ணி பாரு. செட் ஆகலைனா நெக்ஸ்ட் வேற என்னனு பார்க்கலாம்!” என்று சொல்ல, லதாவும் காபியுடன் வந்துவிட்டார்.

 

“லதாம்மா! இப்ப ஏன் மாடி ஏறி வந்திங்க?” பல்லவி கேட்க,

 

“ஆமா ம்மா! அண்ணா பார்த்தா திட்டப் போறாங்க!” என்றாள் அஞ்சலியும்.

 

“அவன் அப்பவே வந்துட்டான் அஞ்சலி. இப்ப தான் அவன் ரூம்ல காபி குடுத்துட்டு இங்க உன் ரூம்க்கு போறேன்னு சொல்லிட்டு தான் வந்தேன்!” என்றவர் அவர்களின் திட்டமிடலை கவனித்தார்.

 

“ஈஸ்வர் அப்பப்ப சொல்லுவான். பல்லவி பெரிய ஆளா வருவான்னு” என்று சொல்ல,

 

“காது தேஞ்சிடும் போல. எப்பவும் பையன் புராணம் தான். அவர் சொல்லிட்டா சாமியே சொன்ன மாதிரி தான் உங்களுக்கு” என்றவள் கிண்டலில் லதா முறைக்க,

 

“போங்க லதாம்மா! ரெண்டு வருஷம் ஓடிடுச்சு. ஒரே ஒரு பார்ட்டைம் ஜாப் கேட்டேனே! வாங்கி தந்தாரா உங்க பையன்?” என தானும் முறைத்தாள்.

 

“அதான் உன்கிட்டயே சொன்னானே படிக்குற வேலையை மட்டும் பாருன்னு!” என்றவர்,

 

“நீ மத்த எல்லா விஷயத்துலயும் பிடிவாதமா இருக்கியே! அதான் அவனும் உனக்கு அந்த வேலை வேண்டாம்னு பிடிவாதமா இருக்கான்!” என்றவருக்கு சில நாட்களாய், 

 

சில நாட்களாய் என்றால் வெகு சில நாட்களாய் தான் ஒரு எண்ணம். விருப்பம் என்று கூட சொல்லலாம். ஆனால் அதனை மகனிடம் பேசவும் ஒரு தயக்கம் என்று தான் அமைதியாய் இருக்கிறார்.

 

எத்தனைக்கு எத்தனை வீட்டில் ஒருத்தியாய் அத்தனை அன்பாய் லதாவையும் அஞ்சலியையும் கவனித்துக் கொள்கிறாளோ அத்தனைக்கு அத்தனை தள்ளியும் தான் இருக்கிறாள் பல்லவி.

 

வீட்டிற்கு வந்தாலுமே டீ, காபி, ஜூஸ் என அதற்கு மேல் எதையும் எடுத்துக் கொள்வது கிடையாது. லதா ஆரம்பத்தில் அதை கண்டு கொண்டவர் இப்போது வரை வற்புறுத்தவும் இல்லை. ஆனால் எப்போதுமே சாப்பிட சொல்லி கேட்காமல் விடவும் மாட்டார். அவள் மறுப்பாள் என தெரிந்தாலும் இத்தனை வருடங்களிலும் கேட்பதை மட்டும் நிறுத்தவே இல்லை அவர்.

 

அதே போல தான் அஞ்சலி ஆசையாய் தனக்கு எடுத்த புது உடையைப் போலவே வேறு வண்ணத்தில் பல்லவிக்கும் எடுத்து வர, அன்னையுடன் ஈஸ்வரிடமும் என இருவரும் இருக்கும் நேரம் அவர்களிடம் காட்டிவிட்டு அடுத்து பல்லவி வரும் போது அவளிடம் கொடுக்க,

 

அதை அஞ்சலிமேல் வைத்துப் பார்த்து, “உனக்கு இந்த கலர் செம்மயா சூட் ஆகுது பாரு அஞ்சலி. எனக்கு இவ்வளவு டார்க் கலர் அவ்ளோ எல்லாம் நல்லாருக்காது. இதை நீ கண்டிப்பா எனக்கு போட்டு போட்டோ எடுத்து அனுப்பனும்!” என்று சொல்லி எந்த விழாவிற்கு போடுவது என்பது வரை சொல்லி அஞ்சலியையும் நம்ப வைத்து விடுவாள் பல்லவி.

 

“படிப்புக்கு தவிர எதுவுமே இங்க இருந்து வாங்கிட கூடாதுன்னு இருக்கல்ல நீ?” என கண்டு கொண்டவறாய் லதா சொல்ல,

 

“லதாம்மா! எப்பவும் எடுக்குற இல்ல கொடுக்குற பக்கத்துல மட்டும் இருந்தா அந்த உறவு என்னைக்காவது சலிச்சிடும். அப்படிப்பட்ட உறவா நம்மளது இருக்கவே கூடாது. இன்னும் ஒரே வருஷம் தான். பல்லவி காலேஜ் முடிக்குறா. ஜாப் ஜாயின் பன்றா. உங்களுக்கு என்னென்ன வேணுமோ பன்றா. அப்படியே நீங்க என்ன குடுத்தாலும் வாங்கிப்பா. அதுவரைக்கும்…” என்றவள் லதாவின் கன்னம் கிள்ளி முத்தம் வைக்க, அங்கேயே தொலைந்து போய்விடுவார் லதாவும். 

 

“அதுக்காக நீ என்ன பார்ட் டைம் வேலை பார்க்காமலா இருக்க? உன் அம்மாக்கு ஸ்டிச்சிங்க்கு ஹெல்ப் பண்ற தானே?“ என முறைத்தாலும்,

 

“அதனால தான் சொல்றேன் லதாம்மா. என் லைஃப் எப்படியோ போக வேண்டியது. ஆனா அம்மா இப்பலாம் என்னை பத்தி அவ்வளவு கவலைப்படுறதே இல்ல. எப்படியும் நான் பொழைச்சுப்பேனாம். அவ்ளோ நம்பிக்கை என் மேல. எனக்கு படிப்புக்குன்னு வீட்டுல எந்த செலவும் இல்லையே! அதையெல்லாம் நீங்க குடுத்துட்டீங்க. ஆனாலும் கைக்கு வேணுமே. அது அந்த வருமானம் மட்டும் தான். அதனால தான் அப்பப்போ ஹெல்ப் பண்ணுவேன். அம்மா கூட விடமாட்டாங்க. நானா தான் எடுத்து பண்ணுவேன். அம்மாக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா நான் படிச்சு முடிக்க போறேன்னு?” என கனவுகள் மின்னும் அவள் பேச்சை ஈஸ்வரும் பலமுறை கேட்டிருக்கிறான்.

 

“உன்னை ஒரு நல்ல இடத்துல வச்சு பாக்கணும் பல்லவி. ரொம்ப நாள் ஆசைனா எனக்கு அது தான்!” என அத்தனை அன்பாய் ஆசையாய் பல்லவியைப் பார்த்து இப்பொழுதும் லதா சொல்ல,

 

“பார்த்தியா! ரெண்டு வருஷமா தான் என்னை தெரியுமே! இதுல பல நாள் ஆசைனு பிட்டு போடுறாங்க என்கிட்ட!” என அஞ்சலியிடம் பல்லவி சொல்லி கிண்டல் செய்ய,

 

“நீங்க வேற அண்ணி! அம்மா இப்பலாம் உங்க புராணம் தான் எப்பவும் வீட்டுல. அப்பா இருந்தா மட்டும் தான் வீடு சைலன்ட்டா இருக்கும். மத்தபடி பல்லவி வந்தா அதை பண்ணுவா இப்படி சொல்லுவான்னு உங்க பைத்தியம் முத்திடுச்சு அம்மாகிட்ட!” என்றாள் அஞ்சலியும்.

 

“அதுக்குன்னு லதாம்மாவை பைத்தியம்னு சொல்லுவியா நீ!” என ஒற்றை விரலைக் காட்டி அவளை மிரட்டிவிட்டு,

 

“எனக்கும் லதாம்மான்னா அவ்ளோ இஷ்டம்!” என கொஞ்சிக் கொண்டாள்.

 

இரண்டு வருடங்கள் சென்றதும் தெரியவில்லை. இப்பொழுது நாட்கள் நகரும் வேகமும் தெரியவில்லை. படிப்பில் அத்தனை பிஸியாகிவிட்டாள் பல்லவி.

 

அஞ்சலிஅவ்வபோது அழைத்து தனக்கான சந்தேகங்களை கேட்டுக் கொள்ள, பத்து நாட்கள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் லதா வீட்டிற்கே லதாவைக் காண வர முடிந்தது அவளுக்கு.

 

ஈஸ்வர் கேட்காமலேயே அவள் வரும் செய்தி, பேசும் செய்தி என எல்லாம் அவன் காதுகளுக்கு வந்து கொண்டு தான் இருந்தது.

 

அதிகமாய் அவளிடம் பேசுவதில்லை. படித்து முடிக்கட்டும் என்ற எண்ணம். ஆனாலும் அன்னையிடம் தெரியும் இந்த சில மாற்றம் ஈஸ்வருக்கு சில நாட்களிலேயே புரிந்துவிட, தானே அன்னையிடம் மட்டும் பேசிவிடுவது என்ற முடிவிற்கு வந்திருந்தான்.

 

மகேஸ்வரன் engum எதற்கும் குடும்பம் என்ற ஒன்றை ஒன்றி இருக்கவே இல்லை இத்தனை நாட்களில்.

 

அது ஒரு பெரிய குறை தான் ஈஸ்வருக்கு. அவனும் தினம்தினம் ஏதேனும் பேச்சைக் கொண்டு தந்தையிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறான்.

 

ஆனாலும் கேட்பதற்கு மட்டுமே பதில் வரும். பின் ஒதுங்கிக் கொள்வார். அதில் அத்தனை வருத்தம் அவனுக்கு.

 

அவரை எண்ணி என்று கூட கூறிட முடியாது. தாய்க்காகவே தான் அவன் வருந்துவதும். திட்டுவது கோபம் கொள்வது என்று இருந்து இப்பொழுது முகம் திருப்பலில் தான் முடிந்திருந்தது.

 

வரதராஜன் இவர்கள் நினைத்ததை போல தொழிலில் இவர்களிடம் இருந்து விலகிக் கொள்ள எல்லாம் இல்லை. எப்போதும் போல தான் வேலையில் சென்று கொண்டிருந்தார். ஆனால் நேரடிப் பேச்சுக்கள் கிடையாது.

 

குடும்ப விஷயத்தை அவர் கூட தொழிலில் கொண்டு வர நினைக்கவில்லை. மகேஸ்வரன் தொழில் ஆரம்பித்த ஆரம்பித்தில் இருந்தே குடும்பத்தை விட்டிருந்தார்.

 

அதுவும் ஆறு மாதங்களுக்கு முன் தான் வராதராஜனை வருடம் கடந்து மீண்டும் பார்க்க முடிந்தது மகேஸ்வரனுக்கு.

 

சாதாரணமாய் பேசி வைக்க, மகேஸ்வரன் தான் தயங்கி விழித்தார்.

 

“நடக்கணும்னு இருந்தது நடந்து முடிஞ்சாச்சு விடு. இப்ப என் பொண்ணு சந்தோஷமா இருக்கா. அவளுக்கு அந்த கல்ச்சுர் பழகிடுச்சு. பிடிச்சிருச்சு. இப்ப இந்தியா கூப்பிட்டாலும் வர மாட்டா. அவ்வளவு தான் மனுஷங்க நாம எல்லாம்!” என்று அவர் சாதாரணமாய் கடந்துவிட, மகேஸ்வரனுக்கு வரதராஜனின் இந்த இலகுத்தன்மையில் கொஞ்சம் நிம்மதி தான்.

 

அதை மகனிடமும் கூறி இருந்தார். “அந்த பொண்ணு உன்கிட்ட இருந்து தப்பிச்சு சந்தோசமா இருக்குதாம். அவங்க அப்பா சொல்லிட்டு போறார். நீயும் என்ன தான் நினைச்சுட்டு இருக்கிறனு பார்ப்போம்!” என்று சொல்லி இருக்க, ஒரு ஏளனப் புன்னகை தான் கீர்த்திஸ்வரனுக்கு.

 

எத்தனை சாதாரணமாய் சொல்கிறார்கள் சந்தோஷமா இருப்பதாய். இதற்கா இரண்டு வருடங்களுக்கு முன் அத்தனை அடாவடித்தனமும் அந்த பெண் செய்தாள்? அவ்வளவு எளிதாய் கடந்து செல்ல கூடிய உறவிற்காகவா அன்று அந்த நிலையில் நின்றாள்? அதில் என்ன அன்பு இருந்துவிட்டதாம்? இப்படி இத்தனை நாட்களுக்குள் மறந்து வாழப் பழகி இருப்பதற்கு என நினைத்தவன் அதனுள் இறங்கி ஆராய மனமின்றி அத்தோடு அவனுமே விட்டுவிட்டான். மறந்தும் விட்டான்.

 

இப்போழுது பல்லவி பற்றி எப்படி பேச வீட்டில் என சில வாரங்களாகவே யோசித்தபடி தான் வலம் வந்திருந்தான்.

 

ஓரளவு மகேஸ்வரனை கணிப்பில் கொண்டு வந்த வரை இதில் அவர் சம்மதம் உடனே கிடைக்கும் என்றெல்லாம் அவன் எதிர்பார்க்கவே இல்லை.

 

இப்பொழுதே பேசி அது பிரச்சனையாகவோ விவாதமாகவோ அவன் விரும்பவில்லை.

 

பல்லவி தான் வாழ்க்கைதுணை தனக்கு என்ற முழு முடிவிற்கு வந்து ஆண்டுகள் கடந்திருக்க, அவளை தன்னவளாய் மாற்றிக் கொள்ளும் வரை அனைத்திலும் பொறுமையாய் செயல்பட தான் அவன் விரும்பினான்.

 

அவளுக்கு தெரியப்படுத்தவும் கூட நினைக்கவில்லை. படிக்கும் பெண்ணிடம் இதைப் பேசி அதுவுமே அவளை பாதித்து விட கூடாதே என்று நினைத்து அவளை அவளாய் வைத்து இன்று வரை தனியே ரசித்து தான் வருகிறான்.

 

எந்தவித பிரச்சனைகளும் இன்றி அவளை தன்னிடம் சேர்த்துக் கொள்ள மட்டுமே முயற்சியை மேற்கொள்ள நினைத்தான். ஆனால் அவனால் நினைக்க மட்டும் தான் முடிந்தது.

 

முதல் முடிவாய் தன் எண்ணத்தை பல்லவி பற்றிய தன் விருப்பத்தை அன்னையிடம் அவன் சேர்ப்பிக்க, அவனின் இந்த வருடக்கணக்கான காத்திருப்பு எல்லாம் அத்தோடு கலைந்து கானல் நீர் ஆகும் நிலை.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!