Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஊர் பேசும் ஓவிய சிலையே

ஊர் பேசும் ஓவிய சிலையே – 10

தயங்கி தயங்கி வாசலில் நின்ற மகளைக் கண்டு எழுந்து வெளியில் சென்றார் கோசலை “என்னடி அம்மா வீட்டுக்கு வந்துட்டு வாசலை அளந்துக்கிட்டு இருக்க உள்ள வா, ஏன் நாங்க வந்து வரிசை வெச்சாதான் உள்ள வருவீங்களோ” என்க சத்தம் கேட்டுக் கந்தசாமியும் தோட்டத்திலிருந்து  பவுனும் வெளியில் வந்தனர்.

 

“வா தெய்வா” என்று கந்தசாமியும் “வாங்க அண்ணி” என்று பவுனும் அழைக்கத் தெய்வானையின் கண்கள் நிறைந்து வழிந்தது.

 



Advertisement

“என்னத்தா? ஏன்டி அழுவுற” என்றார் கோசலை பதட்டமாக, பேத்தியைக் கட்டிக்கொடுக்க போகும் வயதிலும் மகள் கண்ணைக்கசக்கிகொண்டு பிறந்து வீடு வந்தால் பெற்றவர்கள் வயிற்றில் அமிலம் சுரிக்கத்தானே செய்கிறது.

 

உள்ளே நுழைந்தவர்  பெரிய பையிலிருந்து தாம்பாள தட்டை எடுத்துப் பூப்பழம் இனிப்பு வைத்துக் கல்யாண பத்திரிக்கை அதனோடு அனைவருக்கும் உடையும் வைத்துத் தாயிடம் நீட்டினார்.

Advertisement

 

Advertisement

“நான் வாங்கிவந்த வரம் அவ்ளோதான் என் பொறந்தவீட்டை கௌரதையோட கூப்பிட அங்கேயிருந்து யாரும் வரமாட்டாங்கம்மா, என் புள்ள கல்யாணம் நீங்க எல்லாரும் வந்து மனசார வாழ்த்தணும் அவரு வந்து கூப்பிடலைனு நீங்க வராம இருந்துடாதீங்க எனக்குன்னு யார் இருக்கா உங்களவிட்டா” என்றவர் கண்ணீரோடு தட்டை நீட்டிக்கொண்டு நிற்க.

 

‘வாங்கிக்கொள்’ என்றது மனது ‘உனக்கெல்லாம் வெக்கம் மானமே இல்லையா’ என்றது மூளை, என்ன செய்ய என்று தெரியாமல் மருகி நின்றனர் அவர்கள்.

Advertisement

 

“வாங்கிக்க அப்பத்தா ஆயிரம்தான் இருந்தாலும் நம்ம வீட்டு புள்ள விரோதம் எனக்கும் அவருக்குத்தான் எல்லாரும் போயிட்டு வாங்க” என்றான் உள்ளே நுழைந்த சேனாபதி.

 

“என்னையா பேசுற உன்ன விட்டுட்டு எங்களுக்கு என்னையா உறவு வேண்டிக்கிடக்கு” என்றார் கோசலை.

 

“அப்படி சொல்லாத அப்பத்தா பாவம் அத்தை என்ன செஞ்சுச்சு மொதல்ல நீங்கத் தட்டை வாங்குங்க” என்றான் மனதே இல்லாமல் கோசலை வாங்கிக்கொண்டார்.

 

“பெரியவங்க வருவாங்க அத்தை” என்றவன் உள்ளே சென்றுவிட அனைவரிடமும் அமைதி, ஒருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை, அறைக்குள்ளே நின்றிருந்தவன் சிந்தனை முழுதும் பூஜாவின்  வருங்கால கணவன் நிர்மல்  பற்றியே இருந்தது.

 

ஒரு வழக்கின் தகவல் திரட்டலில் அவர்களுடைய மருத்துவமனையின் பெயரும் அடிபட்டது, நிர்மல் அவனுடைய பெற்றோர் இவர்களுக்குத் தொடர்பிருக்கிறதா என்று தெரியவில்லை, இல்லை அந்த மருத்துவமனையில் வேறு யாரேனும் உடந்தையா என்றும் தெரியவில்லை இப்பொழுதுதான் அந்தக் கேஸை தொடங்கியிருக்கிறார்கள் விவரங்கள் சரியாகப் பிடிபடவில்லை.

 

பல வருடமாக ராஜேந்திரனை பார்ப்பதை கூட வெறுத்தவன் அத்தை மகளின் வாழ்வை எண்ணி மாமனை சென்று பார்த்தான் கட்சி அலுவலகத்தில், முழுவதையும் விவரமாகக் கூற முடியாது அவனுடைய பனி அப்படி அவனுடைய வேலையைப் பற்றியும் கூற முடியாது இதுபோல் தெரிந்தவர்மூலம் வந்த தகவல் சதேகம் இருக்கிறது மீண்டும் ஒருமுறை விசாரித்துப் பெண்ணைக் கொடுங்கள் என்று கூறினான்.

 

ராஜேந்திரன் பார்வையே எல்லி நகையாடியது “என்ன என் மக பெரிய ஹாஸ்பிடல் ஓனர் பொண்டாட்டி ஆகப்போறான்னு பொறாமையா” என்றவரை பார்த்தவன் ‘நீயெல்லாம் திருந்தாத ஜென்மம்’ என்று பார்வையாலே உணர்த்திவிட்டு திரும்பிவிட்டான்.

 

நிச்சயம் விசாரித்திருக்க மாட்டார் சரியான ஆதாரம் இல்லாமல் அவர்களை என்ன செய்ய முடியும், அதோடு வீட்டிலோ தெய்வானையிடமோ கூறவும் முடியாது அழுது கரைவார்களே தவிர அவர்களால் ஒன்றும் செய்யவும் முடியாது தனக்கே சரியாகத் தெரியாது போது எதற்குத் தேவையில்லாத ஆணி என்று நினைத்தவன் அதோடு அதை விட்டுவிட்டான்.

 

“வாங்க அண்ணி காலைல இருந்து வாசலையே பார்த்திட்டு இருந்தேன் எப்போ  வருவீங்கன்னு” என்று ஆர்ப்பாட்டமாக வந்தவரை உள்ளே அழைத்துச்சென்றார் கனகம், வந்தது அவரின் ஒரே ஒரு உடன்பிறப்பின் மனைவி.

 

கனகத்தின் அண்ணன் முரளி உடல்நலம் இல்லாமல் ஆறு வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார், முரளி மஞ்சு தம்பதிக்கு ஒரே மகன் ரகுவரன் இப்பொழுது கோயம்பத்தூரில் ஒரு  பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறான், கூட்டு குடும்பமாகக் கனகம் இருந்தபோது அதிகம் அங்கே வரமாட்டார் மஞ்சு.

 

“எப்படி இப்படி ஒரே வீட்ல இருக்கீங்க நம்மால தனியா எதுவும் செஞ்சுக்க முடியாது” என்று எப்பொழுதும் குறைகூறுவார் இன்று  தனியே வீடு பார்த்து வந்துவிட்டோம் என்றதும் நாத்தனாரை பார்க்க நான்கு வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கிறார்.

 

“என்ன கனகம் இப்போ எப்படி இருக்கு” என்றதும் “நிம்மதியா இருக்கு அண்ணி, நான் மட்டும் என்ன புடிச்சா அங்க இருந்தேன் என் பிள்ளைகளுக்குச் செய்யக்கூட அவங்க கையை எதிர்பார்க்கணும்,  இனிமே எனக்குப் பிடிச்ச மாதிரி என் பிள்ளைகளைப் பாக்கலாம்” என்றவர்.

 

“எங்கண்ணி ரகுவை காணும்” என்க.

 

“அவன் காரைப் பார்க் பண்ண போயிருக்கான், ஆமா எங்க அண்ணனைக் காணும்” என்றார் மஞ்சு.

 

“அதையேன் கேக்குறீங்க கல்யாணம் கட்டி புகுந்தவீடு வந்த புதுப்பொண்ணு மாதிரி அம்மா அண்ணான்னு எப்போவும் அவங்க நினைப்புதான், சூரியன் கிழக்கால வருதோ இல்லையோ எந்திரிச்சு அம்மாவீட்டுக்கு போயிடுவார் அங்க அவங்க கையாள ஒரு காபி குடிச்சுட்டு அண்ணனோட தோட்டத்துக்குப் போய்டுறது, இன்னைக்கு நீங்க வரீங்கன்னு காலைலயே கறி எடுத்துக் குடுத்துட்டு போய்ட்டார்  சாப்பிட வந்துடுவார்” என்ற நேரம் ரகுவரன் உள்ளே நுழைந்தான்.

 

“வாப்பா நல்ல இருக்கியா” என்றவர் அவன் கையில் சூடான டீயை வைக்க “நல்லா இருக்கேன்த்த” என்றவன் வீட்டைப் பார்த்துக்கொண்டே சேரில் அமர்ந்தான்.

 

“என்ன கனகம் நாங்க வரோம்னு தெரியாதா யாருக்கும் அண்ணனும் இல்ல உன் பிள்ளைகளும் இல்ல, கார்த்திகா புருஷன் வீட்டில இருக்கான்னு சொல்லலாம் இந்த விழி குட்டிய கூடக் காணும்” என்றார் மஞ்சு.

 

“நான் என்ன செய்ய அண்ணி அவளும் அவங்க அப்பா மாதிரி அந்த வீடே கதின்னு கெடப்பா, தூங்குறதுகூட அங்கதான் நான் சொன்னா கேக்குறதில்ல அவங்க அப்பா வரும்போது அவளையும் கூட்டிட்டு வரச் சொல்லிருக்கேன், கார்த்திகாவும் மாப்பிள்ளையும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க” என்றார் கனகம்.

 

டீயை குடித்துவிட்டு எழுந்த ரகுவரன் “அத்த அந்த வீட்டுக்கு எப்படி போகணும் சொல்லுங்க நான் போய் விழியைக் கூட்டிட்டு அப்படியே மாமாவையும் கூட்டிட்டு வரேன்” என்றான்.

 

“உனக்கு எதுக்குப்பா வீண் சிரமம்”.

 

“அதெல்லாம் ஒண்ணுமில்ல நீங்க ரெண்டு பெரும் பேசிட்டு இருங்க நான் அப்படியே கொஞ்சம் வெளில போயிட்டு வரேன்” என்க “சரி” என்றவர் சேனாவின் வீட்டிற்கு வழியைச் சொன்னார், அவன் இங்கு வந்தே பல வருடம் ஆகிறது விடுமுறைக்கு கனகம் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அண்ணன் வீடு சென்றுவருவார்.

 

“சரித்த நான் போய்க் கூட்டிட்டுவரேன்” என்று அவன் புறப்பட்டுவிட சிறிதுநேரத்தில் கார்த்திகா கணவனுடன் வந்துசேர்ந்தாள், கோசலை பவுனு இருவரும் அவனை மிக மரியாதையாகவே வரவேற்று உபசரித்தனர், விழிக்கு முதலில் அவனிடம் பேசக் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது.

 

“விழியைக் கூட்டிட்டு போலாம்னு வந்தேன் அப்படியே தோட்டத்துக்குப் போய் மாமாவையும் கூட்டிட்டு போலாம்னு… எனக்கு வழி தெரியாது விழி இருந்தா ஈஸி” என்றவன் “எங்க சேனா மாமாவையும் காணும்” என்க.

 

“ராசா ஓசூர் போயிருக்காகச் சாயந்திரம் வந்திடுவாங்க” என்றார் கோசலை.

 

“சரி பாட்டி அவங்ககிட்டயும் சொல்லிடுங்க” என்றவன் வேல்விழியை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றான், அவன் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டிருதாள் அவள், கந்தாசாமியிடம் சிறிது நேரம் பேசியவன் செந்திலயும் அழைத்துக்கொண்டு வீடு சென்றான்.

கெண்டை குடி… மேலூர் கிராமத்தின் சொர்கம் மலை ஏறிச் செல்லும் இடத்தில் தேயிலை தோட்டத்தின் அருகில்  பச்சை பசேலென்று விரிந்துகிடக்கும் பூமி, ரோட்டிலிருந்து  ஒதுங்கிக் கிடக்கும் அந்த இடத்தில் நின்றிருந்தது சேனாவின் ஜீப் கையைக் கட்டிக்கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்தான் அவன் அருகில் அவனையே பார்த்து அமர்ந்திருந்தவள் மெல்ல அவன் கையைச் சுரண்ட அவனிடம் அசைவில்லை.

 

“தேவா…” என்றவள் அவன் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பி “நீங்க ஏன் என்னைப் பார்க்க…” என்றவளின் மீதி வார்த்தைகள் அவனின் இதழ்களுக்குள் சென்று சேர்ந்தது, இடது கை அவள் கழுத்தின் பின்னில் அழுத்தமாகப் பற்றியிருக்க வலக்கை அவளின் உடுப்பை மீறி வெற்றிடையில் பதிந்திருந்தது, அவளுடைய ஏக்கம் அனைத்தும் அந்த ஒற்றை முத்தத்தில் கரைந்து கொண்டிருந்திருந்தது.

 

அவளிலிருந்து  மெல்ல மீண்டவன் அவளின் நெற்றி முட்டி விழிகள் மூடிச் சில நொடிகள் அமைதி காத்தான்  “ஒத்த சொல்லுல உசுரையே ஆட்டம்காண வெச்சுட்ட” என்றவன் “ஏன் இப்படி பண்ண” என்றான் அவள் முகத்தை நிமிர்த்தி.

 

“பார்ட்டி டூ டேய்ஸ் ஆச்சு நீங்க என்ன பாக்க வந்து, கால் கூடப் பேசல  எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா, அதான் சும்மா ஷாக் டிரீட்மென்ட் ஆமா… நான் ப்ரெக்னென்ட் சொன்னா ஹாப்பி ஆகாம ஏன் ஷாக் ஆனீங்க அப்போ நிஜமா ப்ரெக்னென்ட் ஆனா இப்படித்தான் செய்வீங்களா” என்றவளின் காதைப் பிடித்துத் திருகியவன்.

 

“ரௌடி… நான் தொடாமலே புள்ள பெத்துக்க நீ என்ன குந்தி தேவியா ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்னு சொன்னதும் எவ்ளோ பயந்து வந்தேன் வாலு வாலு கொழுப்பு ரொம்ப கூடிருச்சு” என்றவன் அவளை இழுத்து அணைத்தான்.

 

அவனில் சுகமாகப் புதைந்துகொண்டவளின் உச்சியில் நாடி பதித்தவன் “உன்னையே இன்னும் சரியா கொஞ்சலடி புள்ளய  பொறுமையா கொஞ்சிக்குறேன்” என்க.

 

“போலீஸ்… சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் உன்கூடவே இருக்க ஆசையா இருக்கு தேவா” என்றவள் இடைவெளி இல்லாமல் அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.

 

“பண்ணிக்கலாம்” என்றவன் இதழ்கள் சற்றுமுன் மருத்துவமனையில் நடந்த நிகழ்வில் விரிந்தது.

 

“தேவா ஐ ஆம் ப்ரெக்னென்ட்” என்றதும் “வாட்” என்று துள்ளி எழுந்தவன் அடுத்த நொடியே “மயூ என்னாச்சுடா எப்படி! ஏதாவது பிரச்சனையா” என்று அவள் அருகில் மீண்டும் அமர்ந்து அவளைத் தோள் சாய்த்துக்கொண்டான்.

 

“உன் பேபி தான உனக்குத் தெரியாதா” என்றவள் கேள்வியில் அவன் மனம் பலதையும் எண்ணி பதட்டம் கொண்டது ‘கர்ப்பமாக இருக்கிறாளா நான்தான் காரணம் என்று நினைக்கிறாளா யார் இப்படி செய்திருப்பார்கள், என் குட்டிமாவை எப்படி விட்டுவிட்டேன்? அவளுக்கு அநியாயம் நடந்தது எனக்கு எப்படி தெரியாமல் போனது’ என்று சிந்தனையில் உழன்றவன் உடல் இறுகியது.

 

“என்னாச்சு தேவா நம்ம பேபி தானே” என்றவள் கேட்க “ஹ்ம்ம் ஆமாம் நம்ம பேபி தான் டா, சாரி ஏதோ யோசனையில அப்படி கேட்டுட்டேன் சாரி” என்றவன் அவளை அணைத்துக்கொண்டான், முயன்று தன்னை சமன் செய்தான் அவளுக்குத் தெரியக் கூடாது எதுவானாலும் தானே பொறுப்பு என்று.

 

அவன் அணைப்பில் இருந்தவள் “ஏன் தேவா இப்படி இருக்க யாருடி காரணம்னு என்கிட்டே கேட்டுச் சண்டை பிடிக்காம போடா” என்று மனதில் அவனைக் கொஞ்சிக்கொண்டிருந்தாள்.

 

லண்டனில் இருந்தவரை அவனோடு பேசுவதில்லையே தவிர அவளைப் பற்றி அனைத்தும் அவன் அறிவானே, அவனுடைய வீட்டினருடன் பேசுவாள் ஒஸ்கரிடம் தினமும் பேசுவாள் அவளைப் பற்றிய அனைத்தும் அவனை வந்து சேர்ந்துவிடும், பிரச்சனை என்று ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை.

 

இங்கு வந்தபிறகும் தன்னுடைய பார்வையிலே வைத்திருந்தானே, பிறகெப்படி! வீட்டில் அவள் தனியே இருக்கிறாளே அபோழுது மயங்க வைத்து யாரெனும் என்று சிந்தனை ஒருநொடியில் எங்கெங்கோ கடிவாளம் இல்லாமல் சுழன்றது, இத்தனை யோசித்தவன் மூளை எப்பொழுதும் போல அவனை டென்சன் செய்யச் சொல்லியிருப்பாள் என்று யோசிக்கவில்லை, அவளுடைய விஷயம் என்றால் மூளையை விட மனதே அதிகம் வேலை செய்கிறது அவனுக்கு.

 

சிறிது நொடிகள் அமைதியாக இருந்தவனுக்கு மெல்ல மூளைக்குள் வெளிச்சம் பரவ அவளைத் தன்னிலிருந்து நிமர்த்தியவன் “நீ ப்ரெக்னென்ட்டா இருக்க?” என்றான் கேள்வியாகக் குரலும் பார்வையும் மாறியிருந்தது.

 

“ஹ்ம்ம்” என்று ஆடிய தலை “இல்லை” என்றும் ஆடியது, கையைக் கட்டிக்கொண்டு தள்ளி நின்றவன் அவளைக் கூர்ந்து நோக்கப் பெட்ஷீட்டை எடுத்து முகத்தை மறைத்தாள்.

 

“ஏய் சேனா… எப்போ வந்த” என்ற மருத்துவரின் கேள்வியில் “இப்போதான் டாக்டர், எப்படி இருக்கா” என்க.

 

“ஒன்னும் பிரச்னையில்லை சரியாயிடும், இன்னும் எல்லாத்துக்கும் உன்ன பிடிச்சுட்டுதான் தொங்குறாளா” என்றவர் “லண்டன்ல என்ன பண்ண அங்க சேனா இல்லையே” என்றவர் கேள்விக்கு,  அவள் இதழில் புன்னகை விரிந்தது ஆனால் மறந்தும் அவன் புறம் திரும்பவில்லை.

 

“சாப்பிடும்போது ஒழுங்கா பாத்து சாப்பிடு, மேரிக்கு உடம்பு சரியில்லைன்னா புதுசா வந்த குக்கிட்ட உனக்கு முந்திரிப்பருப்பு அலர்ஜினு சொல்லியிருக்க வேண்டாமா” என்க அவரைக் கேள்வியாய் பார்த்தவன் “என்ன சொல்றீங்க டாக்டர்” என்றான் புரியாமல்.

 

“உனக்குத்தான் தெரியுமே சேனா இவளுக்கு முந்திரிப்பருப்பு சாப்பிட கூடாதுன்னு அலர்ஜி இருக்குல்ல, மேரிக்கு உடம்பு சரியில்லாம படுக்கைல இருக்காங்க அவங்களுக்கு பதிலா அவங்க ரிலேஷன் சமைக்க வந்திருக்காங்க வெஜ் குருமாலா அவங்க முந்திரிப்பருப்பு சேர்த்து அரச்சு செய்ய அதைச் சாப்பிட்டு மேடம்கு உடம்புல அங்க அங்க தடிச்சுருச்சு அதோட நல்ல மூச்சு திணறல் உன்கிட்ட சொல்லலையா” என்க.

“உப்ப்” என்று மூச்சை இழுத்துவிட்டவன் அப்படியே அங்கிருந்த சோபாவில் விழுந்தான், விழிகள் அவளைத் துளைக்க ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தவள் “இங்கேயே இருங்க ஆண்ட்டி” என்று டாக்டரைப் பிடித்து நிறுத்தினாள்.

 

அவன் விழிகள் அவளைத் தவிர்த்து வேறெங்கும் செல்லவில்லை உள்ளே நுழைந்த ஒஸ்கர் “கூட்டிட்டு போலாமா” என்றார் டாக்டரிடம்.

 

“ஒரு ஒருமணி நேரம் இருக்கட்டும் அங்கிள் அப்புறம் போலாம்” என்க.

 

“நீங்க வீட்டுக்குப் போங்க கிராண்ட்பா நான் கூட்டிட்டு வரேன்” என்றான் சேனா அவளைப் பார்த்துக்கொண்டே  “இல்ல இல்ல கிராண்ட்பா வெய்ட்… கூட்டிட்டு போங்க”  என்றாள் அவள்.

 

இருவரையும் பார்த்த ஒஸ்கர் “ஓகே… இந்தத் தடவ என்ன பொய் சொன்ன இன்னும் வளரவேயில்ல ஐரிஸ் நீ, என்ன தப்பு செஞ்ச சாரி கேளு சேனாகிட்ட ரெண்டு பெரும் வீடுவந்து சேருங்க” என்றவர் நிற்காமல் சென்றுவிட்டார், ஒருமணிநேரம் அவளை மட்டுமே பார்த்து அமர்ந்திருந்தான் ஆளானப்பட்ட கிரைம் பிரஞ்சையே கதிகலங்க வெச்சுட்டாளே என்று.

 

இறையுண்ட மலைப்பாம்பு அசையாமல் படுத்திருப்பதை போல வளைந்து நெளிந்து கிடந்த மலைப்பாதையில் மின்னி மறையும் நட்சத்திரம்போல ஊர்ந்து வந்துகொண்டிருந்தது சில வாகனங்கள், மனம் நிறைந்தவனின் நெஞ்சில் முகம் பதித்து முழுநிலவின் அழகை ரசித்திருந்தாள் மயூரி.

 

“சாரி” என்றவளின் முகத்தை நிமிர்த்தியவன் “எதுக்கு” என்க.

 

“நான் சும்மா உங்கள டீஸ் பண்ண தான் அப்படி சொன்னேன் நீங்க இவ்ளோலாம் யோசிப்பீங்கன்னு நினைக்குல, சாரி தேனா” என்று முகம் சுருக்க.

 

அவள் வதனத்தை கைகளில் தாங்கியவன் “போதும் விட்டுடு ஆனா இனிமே இப்படி பண்ணாத எதையாவது செய்ய வேண்டியது அப்புறம் தேனா தேனானு பின்னாடியே சுத்த வேண்டியது வாலு வாலு” என்று அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன் “என்னடி வெச்சுருக்க இந்தக் கண்ல உசுர அப்படியே கொத்தி தின்னுது” என்றான் அவள் கன்னத்தில் பர்த்தடம் பதித்து.

 

“என் தேவாவை பூட்டி வெச்சுருக்கேன் பத்திரமா” என்றவளின் இதழ்களில் மீண்டும் தன் அச்சாரத்தை பதித்தான் சத்தம் இல்லாமல் முத்த யுத்தம் நடந்துகொண்டிருக்க, பின்னில் மூங்கில் மரங்கள் காற்றோடு முத்தசண்டையிட்டு சங்கீத குழந்தைகளைப் பிரசவித்தது.

 

மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
நிரஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்

 பௌர்ணமி இரவு
பௌர்ணமி இரவு
பனி விழும் காடு
பனி விழும் காடு
ஒத்தையடி பாதையில்
உன்கூட பொடிநட

 இது போதும்
எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு
இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!