Skip to content
Post Views: 7,457
இரண்டு நாட்கள் என்றவர்களுக்கு நான்காம் நாளே அந்த ரெஜிஸ்டர் கிட்டியது, அதிலிருந்த முகவரியைத் தேடி பயணமானான் அது உண்மையான முகவரியா என்றுகூட தெரியவில்லை, அவர் அங்கே இருக்கிறாரா என்றும் தெரியவில்லை.
முன்பு மிகவும் பின்தங்கிய கிராமமாக இருந்திருக்கும் என்று தோன்றியது இன்னும் நாகரிகம் எட்டாத ஒரு சிறிய கிராமம் அந்த முகவரியைத் தேடி கண்டுபிடித்துச் சென்றுவிட்டான் அங்கு அவரில்லை “அவங்க இங்கேயிருந்து போயி ரொம்ப வருஷம் ஆச்சே” என்றார்கள் சிலர்.
Advertisement
“இவங்களுக்கு பக்கத்து வீட்ல ஒருத்தவங்க இருந்தாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் வேலைக்குப் போவாங்க ஒருவேளை அவங்ககிட்ட கேட்டா தெரியலாம்” என்றார்கள்.
“அவங்க எங்க” என்க.
Advertisement
Advertisement
“அவங்க பொண்ணு கல்யாணம் முடிஞ்சு தேசுப்பள்ளில இருக்கு அவங்க அங்கதான் இருக்காங்க” என்றவர்கள் “சரியா விலாசம் தெரியாது அவங்க போன் நம்பர் இருக்கு விசாரிச்சு போய்ப் பாருங்க” என்று அலைபேசி எண்னை கொடுத்தனர், அதை வைத்து அவர்களுக்கு அழைத்து அவர்களிடம் ஒருமுறை விவரங்களைக் கூறி விலாசம் அறிந்துகொண்டு அங்குச் சென்றான்.
“இத்தனை வருஷம் சென்று வந்திருக்கீங்க எங்களுக்கு எதுவும் பிரச்சனை வருமா” என்றார் பயத்தோடு.
Advertisement
“அப்படிலாம் இல்லம்மா அவங்களுக்கு இப்படியொரு அநியாயம் செஞ்சது யாருன்னு தெரியணும் அதுக்குதான் வந்திருக்கேன், அப்பா யாருன்னு தெரிஞ்சுக்க மயூரிக்கு உரிமை இருக்கே” என்றான் அவன்.
ஆழ மூச்செடுத்தவர் “என் பேரு தாமரை, நானும் இந்தக் கௌரியும் பெரிய வீடுகளுக்கு ஒன்னாதான் வேலைக்குப் போவோம் அவ புருஷன் ஒரு குடிகாரன் எல்லா காசையும் குடிச்சு குடிச்சே அழிச்சுருவான், காசுக்காக என்னவேனா செய்வான் அப்படி இருக்கும்போதுதான் ஒருநாள் அந்தாளு வந்து எலத்தகிரில எஸ்டேட் வீட்ல வேலையிருக்குனு சொன்னான்”.
“அடுத்தநாள் போய்ப் பாக்கணும்னு கௌரி சொல்லிட்டு இருந்தா அந்தக் குடிகாரப்பய கெடச்ச காசை வெச்சு மூக்குமுட்ட குடிச்சுட்டு மட்டையாயிட்டான், காலைல எழுந்துக்கல அதனால நானும் அவ கூடத் தொணைக்கு எலத்தகிரிக்கு போனேன்”.
“அங்க இருந்த ஆளு கதவைத் தொறக்கல எவ்ளோ கூப்பிட்டும் வெளில வரல நாங்க திரும்பி வந்துட்டோம் அடுத்தநாள் கௌரி புருஷன் வந்து அவளைப் போட்டு அடிச்சான் நீ மட்டும் போகவேண்டியதுதானே எதுக்கு அவளைக் கூட்டிட்டு போனேன்னு, அப்புறம் அங்கேயே தங்கற மாதிரி துணிமணிலாம் எடுத்துட்டு போய்ட்டா அவங்களுக்கு புள்ளைங்க கிடையாது இவ அங்க வீட்டு வேலைக்கும் இவன் காவலுக்கு அங்கேயே போய்ட்டாங்க”.
“நாலு மாசத்துக்கு அப்புறம் ஒரு நாள் நடு ராத்திரி வந்து கதவைத் தட்டினா தலைவிரிக்கோலமாய்… தலைல அடிபட்டு, என்னடியாச்சுன்னு நான் பதறிப் போய்க் கேட்டேன் உள்ள வந்து கதவைச் சாத்திட்டு ஒரே அழுகை, அந்தப் பங்களா வீட்ல ஒரு வெள்ளைக்கார பொண்ணை அடைச்சு வெச்சிருந்ததாவும் அதுகூட ஒருத்தன் கட்டாயமா குடும்பம் நடத்துனதாவும், அந்தப் பொண்ணு இப்போ கர்பமா இருக்கு அப்டினு சொன்னா”.
“அந்த ஆள் வெளியூருக்கு போன நேரம் பாத்து இந்தப் பொண்ணை தப்பிக்க வைக்க வெளில கூட்டிட்டு வந்தப்போ கௌரியோட புருஷன் இவளை அடிச்சிருக்கான், முழு போதையில இருந்தவனை இவ பிடிச்சு தள்ளி விடவும் அடிபட்டு மயக்கமாயிட்டான் உசுரை கைல பிடிச்சு ஓடி வரும்போது அந்தப் பொண்ணுமேல ஒரு வண்டியிடிச்சு அடிபட்டிருக்கு, அதனால பக்கத்துல இருந்த ஏதோ ஆசுபத்திரில சேத்துட்டு இவ வந்துட்டா”.
“அந்தப் புள்ளய எப்பவும் மயக்கத்துலயே அந்த ஆள் வெச்சிருந்திருக்கான், என் புருஷன் எண்னை தேடி வருவான் என்னைக் கொன்னுடுவான் அப்படின்னு பயத்துல பொலம்பிகிட்டே இருந்தா, நான்தான் என் சித்தி வீட்டுக்கு அவளை அனுப்பிவெச்சேன், அடுத்தநாள் அவ புருஷன் வந்து கேட்டான் அவ இங்க வரவேயில்லன்னு நான் சாதிச்சுட்டேன்”.
“அந்த ஆள் பெரிய ஒரு கார்ல தான் வந்தான் காரோட கண்ணாடியை இறக்கினப்போ நான் பாத்தேன் தம்பி அந்த முகத்தை” என்றார் அவர்.
“அடையாளம் சொல்லுவீங்களா” என்றான் ஆர்வமாக.
“கண்டிப்பா தம்பி அந்த மாதிரி மொகத்தையெல்லாம் நம்ம ஊர்ல பாத்ததில்லை” என்றார் அவர்.
சில நொடிகள் யோசனையில் இருந்தவன் அலைபேசியில் ஒரு புகைப்படத்தை எடுத்து அவரிடம் காண்பிக்க “இவன்தான் தம்பி இவனேதான் தோலுதான் வெள்ளை வெளங்காதவன்” என்றார்.
நம்பமுடியாமல் அங்கிருந்து எழுந்தவன் உதடுகள் கேள்வியோடு முணுமுணுத்தது “ஜெஸ்டின்” என்று.
“எனக்குக் கௌரியம்மா அட்ரஸ் வேணும் அவங்கள நேர்ல பாத்து பேசினா ஒருவேளை எனக்கு வேண்டிய விவரங்கள் கிடைக்கலாம்” என்றான் அவரிடம், அப்பொழுதும் தாமரைக்கு தயக்கமே.
“நீங்க என்னை நம்பலாம் என்னால அவங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது” என்றான்.
“புரியுது தம்பி அன்னைக்கு ராத்தரிக்கு இங்கேயிருந்து போனவதான் திரும்பி இங்க வரல, அவ புருஷனும் அந்தக் கேடுகெட்டவனும் கொஞ்ச நாள் இங்க எல்லாம் தேடுனானுங்க, எங்களையும் மிரட்டிப் பாத்தானுங்க விவரம் ஒன்னும் கிடைக்கலன்னு அந்த ஆள் திரும்பிப் போய்ட்டான், கௌரி புருஷன் குடிக்க காசில்லாம நாடி நரம்பெல்லாம் அடங்கிப்போய் கடைசில பிச்சை எடுத்தான் அப்படியே ஒத்தைல கிடந்து செத்துப்போனான்”.
“அதுக்கப்புறமும் அவ இங்க வர விரும்பல வருஷமும் ஓடிப் போச்சு, நீங்கப் போய்ப் பாருங்க தம்பி நான் போன் போட்டு விஷயம் சொல்றேன்” என்றவர் அவனை அந்த ஊருக்கு அனுப்பிவைத்தார்.
மயூரியின் புகைப்படத்தையே வெகுநேரம் பார்த்திருந்தார் கௌரி “அப்படியே அவங்க அம்மா மாதிரி” என்றவர் “அந்த ஆள் அங்க அந்தப் பொண்ணை அடைச்சு வெச்சிருக்கறது வேற யாருக்கும் தெரியக்கூடாதுன்னுதான் அன்னைக்கு நானும் தாமரையும் போனப்போ கதவைத் தொறக்கல என் புருஷனுக்கு நிறைய காசும் சரக்கும் குடுத்துட்டான் அவன் சொன்ன எல்லாத்தயும் இந்தக் குடிகார நாய் அப்படியே செஞ்சுச்சு, என்னையுமே அந்த வீட்டில அடைச்சிதான் வெச்சிருந்தாங்க எல்லா பொருளும் வீட்டுக்கே வந்திடும் வெளிலயே போக முடியாது”.
“அந்தப் பொண்ணுக்கு குடுக்குற சாப்பாட்டுல என்னத்தையோ கலந்துதான் குடுப்பான் அது ஒரு பொம்ம மாதிரிதான் இருக்கும் மூணு மாசம் முடிஞ்சப்போ அவன் ஏதோ அவசர வேலையா ஊருக்குப் போகணும்னு போனான் இந்தக் குடிகாரன் எங்களை வீட்டுக்குள்ள வெச்சு பூட்டிட்டு வெளில கிடப்பான் அப்படி ஒருதடவை சாப்பாடு குடுக்க கதவைத் திறந்தப்போதான் அங்கேயிருந்து தப்பிச்சு வந்தோம்”.
“அந்த ஆள் போன அப்புறம் அவன் குடுக்குற மயக்க மருந்தை நான் அந்தப் பொண்ணுக்கு கொடுக்கல நாங்க தப்பிச்சு வரதுக்கு அன்னைக்கு காலைல தான் என்கிட்டே சில விஷயங்களைச் சொன்னுச்சு, அத்தனை நாள் குடுத்த மருந்தே அந்தப் பொண்ணை ஒருமாதிரி மாத்திடுச்சு எனக்கு மருந்து குடு மருந்து குடுன்னு அதுவே கேக்க ஆரம்பிச்சுடுச்சு, உன்னைப் பத்தி உண்மையைச் சொல்லு நீ யாரு உன் வீடு எங்க எல்லாம் சொல்லு மருந்து குடுக்குறேன்னு சொன்னேன், ஏதோ ஞாபகம் இருக்கிறதை சொன்னா அவங்க வீட்டுக்குத் தகவல் குடுக்கலாமேன்னு நெனச்சேன் ஆனா அந்தப் பொண்ணுக்கு நிறைய விஷயம் ஞாபகம் இல்ல இருந்தவரைக்கும் சொன்னுச்சு”.
“அப்பா பெரிய ஆள் நிறைய காசு இருக்கு பெரிய வீடு பிரென்ட் இருக்கா அப்படினு ஒரு பேரு சொன்னுச்சு எனக்கு ஞாபகம் இல்ல, அப்புறம் ராஜான்னு ஏதோ ஒரு பேர் சொன்னுச்சு” என்க.
“ராஜேந்திரனா” என்றான் அவன்.
“இல்ல தம்பி இது வேற”.
“ராஜப்பானா?” என்க.
“ஆமாம் அதேதான் ராஜப்பன் அவரைத்தான் இந்தப் பொண்ணு விரும்பியிருக்கு” என்க.
“வாட்?” என்று கத்திவிட்டான் சேனா.
“என்னாச்சு தம்பி” என்றார் அவர்.
“இல்ல ஒண்ணுமில்ல சொல்லுங்க”.
“அந்த ஆள் ஏற்கனவே கல்யாணம் ஆனவர்போல ஆனா பிள்ளை இல்லயாம், இதுக்கு வீட்ல பாத்த மாப்பிள்ளையாம் இந்த வெள்ளைக்காரன் இதுவும் சம்மதம் சொல்லியிருக்கு ஆனா என்னமோ வெள்ளைத்தோலே பாத்து பாத்து பெருசா இவன்மேல பிடிப்பு வரல, அந்த ராஜப்பன் அரசியல்வாதியாமே அந்த ஆளோட கம்பீரம் நட உடை எல்லாம் பிடிச்சுருச்சாம் அங்க அங்க பாத்து அந்த ஆளுக்கும் இந்தப் பொண்ணு பாக்குறது தெரிஞ்சு அதுமேல ஆசை வந்திருச்சு”.
“கல்யாணம் கட்டிக்குறேன்னு சொல்லியிருக்கன் அந்த அரசியல்வாதி, வீட்ல சொல்லி இந்த வெள்ளைக்காரன்கூட முடிவான கல்யாணத்தை வேண்டாம்னு நிறுத்தணும்னு இந்தப் புள்ள முடிவு பண்ணியிருக்கு அந்த நேரம்பாத்து ராஜப்பன் பொண்டாட்டி பிள்ளை உண்டாயிட்டா பல வருஷமா பிள்ளை இல்லாம இருந்த குடும்பம் அந்தச் சந்தோஷத்துல மூழ்கிடுச்சு”.
“இந்தபொண்ணுக்கிட்ட அந்தாள் நானும் யோசிக்காம ஏதோ தப்பா முடிவெடுத்துட்டேன் நீ எல்லாத்தயும் மறந்துடு எனக்கு என் பொண்டாட்டி பிள்ளை தான் முக்கியம்னு சொல்லிட்டான், இது அவன்கிட்ட சண்டை போட்டு ஒரே பிரச்சனை அந்த நேரம் இந்த வெள்ளைக்காரன் ஊருக்கு வந்திருக்கான் கட்டிக்கப்போறவளை பாக்க”.
“ஏன்னா பல மாசமா இந்தப் பொண்ணு சரியா பேசுறதில்லை, என்னனு நேர்ல பாத்து பேசி அப்படியே கல்யாணத்தை சீக்கிரம் வைக்கச் சொல்ல வந்திருக்கு, ஆனா பொண்டாட்டியா வரப்போறவ இன்னொருத்தன் கிட்ட கல்யாணத்துக்கு கேட்டுச் சண்டை புடிக்குறதை பாத்திருக்கன், அப்படி என்ன நான் கொறஞ்சு போய்ட்டேன் அப்படின்னு ஒரு கோபம்”.
“இந்த வெள்ளைத்தோலுக்காரன் ஒழுங்கா ஒன்னு இந்தப் பொண்ணோட அப்பாகிட்ட போய்ச் சொல்லியிருக்கணும், இல்லையா எனக்கு நீ வேண்டாம்டின்னு சொல்லிட்டு போயிருக்கணும், மனசுல வஞ்சத்தை வெச்சுகிட்டு இருந்திருக்கான் அந்தத் தடவ எல்லார்கிட்டயும் சாதாரணமா பேசி நாலு நாள் இருந்துட்டு ஊருக்குப் போனவன் திரும்பி ரெண்டே வாரத்துல வந்து பொண்ணை தூக்கியிருக்கான்”.
“என்னமோ போங்க தம்பி நல்லா வாழவேண்டிய பொண்ணு அது வாழ்க்கையை அதுவே அழிச்சுகிச்சு, இந்தப் பயலுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை வேண்டாம்னு சொன்ன பொண்ணை எதுக்கு கடத்திட்டு வரணும் சரிதான் போடின்னு விட்டுட்டு போயிருக்கலாம் என்ன பண்ண விதி” என்றார் அவர்.
“உங்களுக்கு நல்லா தெரியுமா இந்த ஆள் தானா” என்றான் மீண்டும் புகைப்படத்தைக் காண்பித்து.
“எப்படி மறக்கத் தம்பி இந்த ஆள்தான் நல்லா ஞாபகம் இருக்கு, இந்தப் பக்கம் யாரும் வெள்ளைக்காரங்க வந்ததில்லை என் வாழ்க்கைல நான் பாத்தது அந்தப் பொண்ணையும் இந்த ஆளையும் தான்” என்றார் திடமாக.
அவரிடம் நன்றி கூறி அங்கிருந்து புறப்பட்டவன் சிந்தை முழுதும் ஜெஸ்டினே, மிராண்டாவும் மயூரியும் வந்தபிறகு இரண்டு முறை மிராண்டாவை பார்க்க வந்து சென்றான் என்ன தைரியத்தில் வந்திருப்பான், மிரண்டாவின் சிகிச்சைக்காக ஜெஸ்டினின் வீட்டிற்குத்தான் அவளை அழைத்துச்சென்றனர்.
இறப்பதற்கு முன் பழைய நினைவு வந்திருக்குமா ஏதாவது சொல்லியிருப்பார்களா… இருக்காது, அப்படியானால் அந்த ஆளுடைய மனைவி என்ற அடையாளத்தோடு எப்படி அடக்கம் செய்திருப்பார்கள், தலைவலி அதிகமாக வழியில் வண்டியை நிறுத்தி ஒரு மாத்திரை வாங்கி போட்டுக்கொண்டான்.
எப்படி இதை மயூரிக்கு சொல்வது என்ற சிந்தனையில் உறக்கம் வரவில்லை இரவு முழுதும், அதிகாலை நான்கு மணிக்கு மயூரியிடமிருந்து அழைப்பு வந்தது, இந்த நேரத்தில் என்ன என்ற பதட்டம் சூழ “குட்டிமா நீ ஓகே தான” என்றான் அழைப்பை ஏற்றவுடன்.
“தேவா கிராண்ட்பா ரொம்ப அவசரமா ஸ்பெய்ன் போயிருக்காரு, ரொம்ப டென்ஷனா இருந்தார் யாருகிட்டயோ பேசிட்டே இருந்தார், அழாத நான் வந்திர்றேன் எதைத்தான் நீ ஒழுங்கா செஞ்சிருக்க அப்படி இப்படின்னு சொன்னாரு என்னைக்கூட கவனிக்கல என்கிட்டே ஒன்னும் சொல்லவும் இல்ல அவர் போய்ட்டார் மறுபடியும் நான் தனியா ஆயிட்டேன் தேவா நீங்க வந்துடுங்க ப்ளீஸ் என் பக்கத்துல இருங்க” என்றவளுக்கு ஆறுதல் கூறி வைத்தவன் அடுத்த அரைமணியில் புறப்பட்டுவிட்டான்.
“என் மேல சத்தயம் தேவா சொல்லுங்க யாரு என் அப்பா” என்றவளின் கதறலுக்கு முன் சொல்லாமல் மறைத்து என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் தோன்றிவிட்டது அவனுக்கு, அவனுடைய உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது இதோடு முடியப்போவதில்லை இதன் தொடர்ச்சி இன்னும் இருக்கிறது என்று.
தன்னுடைய திருமணத்தை ஏன் உடனடியாக நடத்த நினைக்கிறார் கிராண்ட்பா இப்பொழுது எதற்க்காக இவ்வளவு அவசரமாகச் சென்றிருக்கிறார் என்ற குழப்பத்தோடு தாயை பற்றிய செய்திகளும் சேர்ந்து அவளை மொத்தமாகத் தளர்த்திவிட்டது, காய்ச்சலில் கிடக்கிறாள் வந்தவன் வீட்டிற்குக்கூட போகவில்லை அவளுடனே இருக்கிறான்.
அவனுடைய அப்பத்தா கேட்ட நாள் நட்சத்திரம் ஒன்றையும் அவன் அங்கே கேட்கவுமில்லை அதைப் பற்றிக் கவலைப்படவுமில்லை மனதால் என்றோ அவனுடைய மனைவியாகிவிட்டவளுக்கு நாள் எதற்கு நட்சத்த்ரம் எதற்கு.
வாயிலில் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டது தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தார் ஒஸ்கரின் பி.எ சுந்தர்.
error: Content is protected !!