Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஊர் பேசும் ஓவிய சிலையே

ஊர் பேசும் ஓவிய சிலையே – 22

“ராஜப்பன்!… நீலகிரி மந்திரி  ராஜப்பனா” என்றான் சேனா.

 

 

“ஆமாம், என்னோட சொந்த அண்ணன்” என்றார் அவர்.



Advertisement

 

  

“என்னம்மா சொல்லறீங்க! ராஜப்பன் தங்கச்சியா நீங்க ஆனா  உங்களைப்பத்தி யாருமே அங்க எதுவும் பேசினதில்லையே” என்றவனை ஆச்சர்யமாகப் பார்த்தவர் “உனக்கு எப்படிப்பா தெரியும் அவங்கள” என்றவரை தன் பக்கம் திருப்பிய மயூரி.

Advertisement

 

Advertisement

  

“அத்த ராஜப்பானோட தம்பியதான் தெய்வாம்மா கல்யாணம் செஞ்சிருக்காங்க” என்றாள்.

 

Advertisement

  

“சின்ன அண்ணனுக்கும் தெய்வாக்கும் கல்யாணம் நடந்திடுச்சா நல்லா இருக்காங்களா” என்றவர் மீண்டும் “ஆனா உங்களுக்கு எப்படி” என்றார் மீண்டும்.

 

  

“கந்தசாமியும் பவுனும்தான் என்னை எடுத்துட்டு போய் வளத்தவங்க” என்றான் சேனா.

 

  

“என்னைய்யா சொல்ற நம்ம  குடும்பத்துக்குள்ளேயேவா இருந்த, மாமா இதைக் கேட்டிங்களா” என்றவரிடம் அத்தனை பரபரப்பு.

 

 

 “கடவுளே இது  என்ன விளையாட்டு அங்க சுத்தி இங்க சுத்தி எல்லாரும் ஒரே எடத்துல வந்திருக்கோம், பாத்தியா ராஜிம்மா யாரை கொல்லணும்னு அந்தப் பய சுத்திட்டு இருந்தானோ அந்தக் கொழந்தை அவன் கண் முன்னால அந்தக் குடும்பத்திலே வளர்ந்திருக்கு கடவுள் இருக்கான் கடவுள் இருக்கான்” என்றவர் விழிகள் மகனின் புகைப்படத்தில் பதிந்தது.

 

  

 

“நமக்கு எல்லாம் விவசாயம்தான் உன் அப்பனுக்கு ரொம்ப ஆசை கொஞ்ச காலம் போலீஸ்ல இருந்துட்டு ஊரோட வந்து விவசாயம்  பாக்கணும் கொழந்த குட்டின்னு இருக்கணும்னு, எதுவும் நடக்குல ஆசைப்பட்டதை வாழாம பாதிலே போய்ட்டான்” என்று ஆழமூச்செடுத்தவர் “முத்துவோட சேந்து நீதான் இனிமே இது எல்லாத்தயும் பாத்துக்கணும் உன் அப்பாவோட ஆசை” என்றார் வீரய்யா.

  

 

முத்துவேல் சேனாவிடம் “உடம்பு நல்லா இருக்குற வரைக்கும் நான் பாத்துப்பேன் அதுக்கு அப்புறம் நீதான் பாத்துக்கணும் என் மவன் வந்துட்டான் இனிமே எனக்குக் கவலையில்லை,  உன் தங்கச்சி அவ பிள்ளைங்க எல்லாருக்கும் நீதான்யா நிக்கணும் எங்களுக்கு அப்பறம் யாருமில்லாம இருப்பாளேன்னு அப்பப்போ தோணும்,  இனிமே அந்தக் கவலை இல்ல ராகவி எதுனாலும் உன் அண்ணன் இருக்கான் உன் குழந்தைகளுக்குத் தாய்மாமன் இருக்கான்” என்றார் நெகிழ்சியாக.

 

 

அனைவரையும் குன்னூர் வர வேண்டும் என்று அழைத்துவிட்டே இருவரும் திரும்பினர்,  பட்டு நகை என்று மயூரின் கையில் வெள்ளி தாம்பாளத்தில் வைத்து நீட்டினர் வயதில் மூத்தவர்கள் அவர்களை வணங்கி வாங்கிக்கொண்டாள், தோட்டத்தில் விளைந்தது என்று வண்டியை நிறைத்து அனுப்பினார் முத்துவேல்.

 

 

 என்ன நடக்கிறது என்று வாயைப் பிளந்து கேட்டிருந்தனர் குடும்பத்தில் உள்ளவர்கள் “ராஜலக்ஷ்மிக்கு பொறந்தவனா… ஐயோ நம்ம வீட்டு பொண்ணுன்னு தெரியாம போய்டுச்சே எங்கயோ போய் வாழுறான்னு நினைச்சோமே இப்படியொரு காரியத்தைச் செஞ்சிருக்கானே இந்தப் பாவி” என்ற கோசலை.

 

  

“என்னங்க உங்க தங்கச்சசி மவனை பாத்தீங்களா ஏதோ அரசியல் அடிதடின்னு நினைச்சோம் இவன் என்னன்னா சொந்த தங்கச்சி புருஷனை கொன்னுருக்கான் இன்னும் எண்ணலாம் செஞ்சிருக்கானோ”   என்று கணவனின் புகைப்படத்தை பார்த்து புலம்பியவர்  ராஜேந்திரனை திரும்பி பார்த்தார்.

 

  

‘நீயும் உடந்தையா’ என்றது அவர் விழிகள் மருமகனிடம்.

 

  

“இதுல நான் எதுவும் பண்ணல,  அண்ணன் இப்படி ஒன்னு செஞ்சதே எனக்கு தெரியாது போனவ எப்படியோ போகட்டும்னு நான் விட்டுட்டேன் அவளையோ அவ புருஷனையோ கொல்ல நினைக்கல” என்றார் ராஜேந்திரன்.

 

 

 சொந்த அத்தைமகளுக்கு பிறந்த பிள்ளையை சொந்த மகனாக வளர்த்திருக்கிறார் கந்தவேலு,  பவுனை  பார்த்த சேனா “மா எல்லாம் இந்த குடும்ப ரத்தம்தான்” என்றான் அவனை காண்பித்து சிரித்துக்கொண்டே “போயா” என்று சிரித்தார் பவுனும்.

 

  

ராஜப்பனின் மீது வழக்கு தொடர்ந்துவிட்டான் சேனா,  தன் தந்தையின் மரணத்திற்கு மந்திரி ராஜப்பானே காரணம் என்று அவன் திரட்டிய ஆதாரங்களோடு ராஜலக்ஷ்மியின் சாட்சி நின்று பேசியது,  சொந்த தங்கை கணவனை அதுவும் ஒரு போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் வெட்டி கொண்டிருக்கிறார் என்றதோடு சிலை கடத்தல் வழக்கின் முக்கிய புள்ளியாகவும் ராஜப்பன் பெயர் சேர்ந்தது.

 

பல கொலை வழக்குகள் அதன் ஆதாரம் என்று மொத்தமாகப் பூட்டிவிட்டான்,  பதவி பறிக்கப்பட்டு கோர்ட் ஏறி இறங்கிக்கொண்டிருந்தார்  ராஜப்பன்.

 

“குட் ஜாப் சேனா… அன்னைக்கு ராஜப்பானை கண்டிப்பா பிடிப்பேன்னு  நீ சொன்னப்போ கூட இவ்ளோ எதிர்பார்க்கல,  இவன்லாம் வெளிலயே வரக் கூடாது” என்ற சிவசங்கர் “நம்மால என்ன பண்ண முடியுமோ அத்தனையும் செய்ரோம்” என்றார் உறுதியாக.

 

இரண்டு தினங்களாக ஏதோ யோசனையில் இருக்கிறாள் அவன் ஆசை குட்டிமா “ஒய்” என்றவன் அவளைப் பிடித்து முன்னில் நிறுத்தி “என்னாச்சு என் குட்டிமாக்கு” என்க.

 

“தேவா எனக்குப் பாப்பா வேணும்” என்றாள்.

 

அவளையே குறுகுறுவென்று பார்த்தவன்  “ஒரு பத்து நாள் லீவ் போட்டுத் தீயா வேலை செய்றேன் ஏன் கவலை படுற” என்றான் அவளைக் கட்டிக்கொண்டு திருமணம் முடிந்து ஒரு வருடம் முடிந்திருந்தது குழந்தைகளைப் பற்றி இதுவரை எதுவும் யோசிக்கவில்லை,  அவள் இப்படி கேட்டதும் அவனும் குறும்பாகச் சொல்ல.

 

 

 

“அந்தப் பாப்பா இல்ல… நாம ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாமா,  அத்தையும் மாமாவும் உங்கள பார்த்துக்கிட்ட  மாதிரி,  நீங்க என்னைப் பாத்துகிட்ட மாதிரி ஒரு பாப்பாவை நாமளும் பாத்துக்கலாம்,  இங்க வரப் பாப்பா வரும்போது வரட்டும்” என்றாள் அவன் கையை எடுத்துத் தன் மணிவயிற்றில் வைத்துக்கொண்டு.

 

  

“மயுமா சீரியசா சொல்றியா” என்க.

 

  

“ஹ்ம்ம்… எஸ் தேவா உங்களுக்குப் பிடிக்கலையா”  என்றவள் இதழ்களில் இதழ் பதித்தான் அதற்குமேல் பேசவிடாமல்.

 

 

 ஒருவயது  பெண் குழந்தையைத் தத்தெடுத்துக்கொண்டனர் ‘மைத்ரி’ என்று பெயரிட்டனர்,  பேர் வைக்கும் நிகழ்வுக்கு ஊரிலிருந்து மொத்த குடும்பமும் வந்து குவிந்தது குழந்தைக்குத் துணிமணி நகை விளையாட்டுப் பொருட்கள் அங்கு விளைந்த பொருட்ட்கள் என்று வீட்டையே நிறைத்துவிட்டனர்,  ராஜலக்ஷ்மியும் ராஜேந்திரனும்கூட பேசிக்கொண்டனர்.

 

 

 

கார்த்திகாவுக்கு மூன்றாவதும் பெண்ணாகிப்போனது தாயும் மகளும் நொந்து போய் அமர்ந்திருந்தனர், குழந்தைக்குத் தலை நிற்கும் வரை அங்கேயே நின்று மகளையும் குழந்தையையும் நல்ல விதமாகத் தேற்றி கனகம் திரும்பி வரச் செந்தில் மொத்தமாக மனைவியிடமிருந்து விலகி நின்றார்.

 

  

கனகத்தை தனிமை ஆட்டிப்படைத்தது செந்தில் பேசுவதுகூட இல்லை உறவுகள் எல்லாம் ஒன்றாகக் கூடியபோது தான் மட்டும் தனித்து நிற்பதை அறிந்தார், அவர் வந்து ஒருவாரம் சென்ற நிலையில் உடனே அண்ணன் வீட்டிற்கு வரச்சொல்லி செந்திலிடமிருந்து அழைப்பு வந்தது.

 

 

 இவர் சென்று பார்த்தபோது கோபத்தில்  ஜொலித்துக்கொண்டிருந்த  சேனாவை அழுத்திப் பிடித்துத் தன் அணைப்பில் வைத்திருந் தாள் மயூரி,  ஒரு பக்க கன்னம் சிவந்து வீங்கி மூலையில் சுருண்டிருந்தாள் வேல்விழி, மற்றவர்கள் என்ன சொல்ல என்று தெரியாமல் நிற்க.

 

  

“ஐயோ என் பிள்ளையை இப்படி அடிச்சிருக்கானே இவனை யாரும்…” என்ற கனகத்தை “வாயை மூடுங்க” என்றவனின் அதட்டல் அதிர்ச்சியடையவைத்தது.

 

  

“உங்க பொண்ணை பிராத்தல் கேஸ்ல உள்ள தூக்கி வெச்சிருப்பாங்க சக்தி மட்டும் அங்க போகலானா, உங்க அண்ணன் மகன் ரகுவரன்கூட ஹோட்டல்ல தங்க ரூம் போட்டுருக்கா,  மொத தடவையா இல்ல முன்னாடியே போயிருக்காளான்னு கேளுங்க” என்றவனுக்கு அவளைக் கொல்லும் ஆத்திரம்.

 

 

 கனகம் அப்படியே வாயைக் கைக்கொண்டு மூடிக்கொண்டு பின்னில் நகர்ந்தார், அதற்குள் கனகத்தின் அண்ணி வந்து சேர்ந்துவிட்டார்.

 

  

“உன் பொண்ணை சொல்லிக்கொடுத்து அனுப்பினியா என் பையனை மயக்கச் சொல்லி, ஏதோ இருக்குற நெருங்கின சொந்தம் ஒண்ணுதானேன்னு நினச்சு கொஞ்சம் பழகினா என் பையனை வளைச்சுப்போட பாக்குறாளா உன் பொண்ணு” என்றவர் கத்திக்கொண்டிருக்க ரகுவரனின் தாடை கிழிந்தது சேனாவின் அடியில்.

 

  

“உன் அம்மா இப்போ வாயை மூடல மொத்த பல்லும் கொட்டிடும் உனக்கு” என்றான் மீண்டும் கையை ஓங்கி.

 

“என்ன உன் புள்ள யோக்கியன் மாதிரியும் அவ மட்டும் தப்பு பண்ண மாதிரியும் குதிக்குறீங்க ரெண்டும் கூட்டு களவாணிங்கதான், அடுத்து என்னனு பேசி முடிவெடுங்க” என்றவன் “ஒழுங்கா கல்யாணம் செஞ்சுக்குற இல்ல ஆள் கிடைக்காத அத்தனை கேசையும் மொத்தமா உன்மேல பைல் பண்ணிடுவேன்” என்றான்.

  

 

வேறு வழியும் இருக்கவில்லை இதற்குமுன்பும் இரண்டுமுறை அவனுடன் சென்றதாக ஒப்புக்கொண்டாள், எப்படியோ போய்த் தொலையுங்கள் என்று திருமணத்தை நடத்தி வைத்துவிட்டனர் மாமியாருக்கும் மருமகளுக்கும் ஏழாம் பொருத்தம் கடனே என்று ஒரு கணவன்.

 

  

ஓஸ்கருக்கு உடல் நிலை மோசமாகியிருந்தது மிராண்டா இங்கு வரவில்லை என்று சொல்லிவிட்டாள் “எதுவும் வேண்டாம் என்ன தலையெழுத்தோ அப்படி நடக்கட்டும்” என்று கூறிவிட்டாள், படுக்கையில் கிடந்த ஒஸ்கரை பார்க்கக்கூட மிராண்டா வரவில்லை,  வீட்டோடு ஒரு நர்ஸ் வைத்துச் சேனாவும் மயூரியுமே பார்த்துக்கொண்டனர்.

 

  

“எத்தனையோ பேர் வேண்டாம்னு சொல்லியும் கொஞ்சமாவது எனக்காக நின்னது அவர்தான் அவரோட மரணம் நிம்மதியா இருக்கணும் நான் கையெழுத்து போட்டுக் குடுத்திடவா அவர் பொண்ணுக்கு அவர் செய்யட்டும் எனக்கு எதுவும் வேண்டாம்” என்றாள் மயூரி, அவனுக்கும் அது சரி என்று தோன்ற செய்யலாம் என்றிவிட்டான்.

 

 

 ஒஸ்கர்  மிகுந்த குற்றவுணர்ச்சியோடு அதை வாங்கிக்கொண்டார் “முழு மனசோட தரேன் உங்க எந்தச் சொத்தும் எனக்கு வேண்டாம் உங்க மனசுப்படி உங்க மகளுக்குச் செய்ங்க” என்றுவிட்டாள், பங்களா வீட்டை மட்டும் மயூரியின் பெயரில் எழுதிவைத்துவிட்டு மற்ற அனைத்தையும் விற்று மகளின் கடனை அடைந்துவிட்டார்.

 

 

 

இறுதியாக மிராண்டாவிடம் பேசியவர் “ஒரு தகப்பனா நான் ரொம்ப சரியா வாழ்திருக்கேன் என் மகளை எல்லா கஷ்டத்திலும் தாங்கிகிட்டேன் ஆனா ஒரு மகளா நீ எங்கேயும் எனக்காக நிக்கல, உன் அம்மா சாவுக்கு நீ வரல என் பணத்தை கேட்ட ஆனா படுக்கைல கிடக்குற என்னைப் பார்க்கக்கூட நீ வரல,  காலம் மாறும் பிள்ளைக்கு அம்மாவா என் வேதனை உனக்கு நிச்சயம் அப்போ புரியும்”  என்றவர் அதன் பிறகு உயிரோடிருந்த நான்கு மாதமும் மகளிடம் பேசவில்லை.

 

முறைப்படி அனைத்தையும் இவர்களே செய்துவிட்டு சர்ச் பாதர் வழியே மிராண்டாவுக்கு தகவல் மட்டும் சொல்லிவிட்டனர் அவருடைய மரணத்திற்கு பிறகே பங்களா மயூரியின் பெயரில் உள்ளதே தெரிந்தது.

 

 

நான்கு வருடங்களுக்குப் பிறகு சாமாத்தூர் குலதெய்வம் கோவிலில் தடபுடல் விருந்து, உறவுகளின் பேச்சு வம்பு என்று நிறைந்திருந்தது இன்று தேவசேனாபதி ஐரிஸ் மயூரியின் இரட்டை பிள்ளைகள் ஈஷான் ஈகேஷ்க்கு மொட்டை அடித்திருந்தனர்.

 

 

மைத்திரி அவள் வயது பிள்ளைகளுடன் பாட்டுபாவாடை சட்டையில் பட்டாம்பூச்சியாகச் சிறகடித்துக்கொண்டிருந்தாள்,  பூஜாவும் வந்திருந் தாள் கணவன் மற்றும் குழந்தைகளுடன் வேறொரு முக்கிய நிகழ்வும் இருந்ததே,  அவளின் தங்கை பூர்விகாவுக்கு  அவளின் அத்தை ராஜலக்ஷ்மி வாக்கப்பட்ட  வீட்டிலிருந்து வரன் முடிவாகியிருந்தது,  அவர்களின் நிச்சயமும் அங்கே காலை நடந்து முடிந்திருந்தது.

 

 

உறவுகள் இன்னும் பலப்பட்டது சக்தியும் மோனிகாவும் தங்களின் ஒரு வயது மகனுடன் வந்திருந்தனர் உறவுகள் எல்லாம் விசேஷம் முடிந்து கோவிலிலிருந்து அப்படியே சென்றுவிட்டனர்,  வீட்டினர் மட்டும் அந்தப் பெரியவீட்டின் முற்றத்தில் சாப்பாடு வைத்து நிலவைப் பார்த்து அமர்ந்துகொண்டு கதைபேசி உண்டுமுடித்தனர்.

 

 

கனகம் கார்த்திகா விழி மூவரும் மட்டும் தனித்து நின்றனர் அங்கும், மற்றவர்களுடன் பேச விருப்பம் கொண்டாலும் பெரிதாக யாரும் உறவாடுவதில்லை என்ன ஏது அதோடு பேச்சுக்கள் முடிந்துவிடும் அவர்களிடம், கண்முன்னே தாங்கள் இழந்த சொர்க்கத்தை ஏக்கத்தோடு பார்த்து நின்றனர் மூவரும்.

 

காலை முதல் அலைச்சல் வெயில் மயூரி மிகவும் சோர்ந்துவிட்டாள், இப்பொழுதும் புடவை கட்டுவது வசப்படவில்லை அதைப் பற்றிக் கவலையும் இல்லை அவளுக்கு இரண்டு மாமியாரும் போட்டி போட்டுக்கொண்டு பார்த்துக்கொள்கிறார்கள்.

 

 

கருவைச் சுமந்து நின்ற சமயம் கூட ஊரிலிருந்து மாதத்திற்கு இரண்டு முறை வந்துவிடுவார்கள் யாரேனும்,  வீரய்யா தம்பதிகள் பிரசவம் நெருங்க இங்கேயே வந்துவிட்டனர் பேரனின் குழந்தையைக் காணும் ஆவலில், ராஜலக்ஷ்மியும் முத்துவேலும் அடிக்கடி வந்து பார்த்துச் செல்வர்.

 

இரண்டு முறை தங்கையையும் அவள் கணவன் மற்றும் குழந்தையையும் சேனா அவனே சென்று அழைத்து வந்தான் ஒருவாரம் போல இங்குத் தங்கவைத்து பார்த்துப் பார்த்துச் செய்தான்.

 

நிறைவயிறை தாங்கிக்கொண்டு கைநிறைய வளையல்கள் பூட்டி பிராக் அணிந்து நெற்றிவகிட்டில் குங்குமம் தாலிக்கொடி தலையில் மல்லிப்பூ என்று அவளுக்கு அனைத்துமே அத்தனை அழகாக இருக்க, விழியெடுக்காமல் மனைவியை  ரசித்திருப்பான் சேனா.

 

எங்கோ ஒரு மூலையில் யாரும் இல்லாமல் பிறந்த மயூரிக்கும், தந்தையை பறிக்கொடுத்து தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட சேனாவுக்கும்  பிறந்த பிள்ளைகள் சுற்றிலும் சூழ்ந்துநின்ற சொந்தங்களின் கைகளில் தவழ்ந்தது.

 

பத்திய சாப்பாடு லேகியம் என்று கோசலையும் ராஜலக்ஷ்மியும் மயூரியை தேற்றினர் பிள்ளைகள் யாரிடம் இருக்கிறது என்றே தெரியாத அளவுக்கு ஆளாளுக்கு தூக்கி சுமந்தனர், யாரெல்லாம்  இருந்தாலும் தேவா தேவா என்று தன்னை பார்த்துக்கொள்ள அவனையே நாடினாள் பெண். 

 

குளித்து வந்தவளுக்கு இதமாகக் கால் பிடித்துவிட்டான் கணவன் எப்பொழுதும்போல இந்த அன்பான கூட்டிற்குள் தன்னை அழைத்துவந்ததற்கு அவன் கன்னத்தல் முத்தமிட்டு அவள் தேங்க்ஸ் சொல்ல,  அவள் விழிகளில் முத்தமிட்டு தன்வாழ்வில் வந்ததற்கு அவளிடம் நன்றி  சொன்னான் தேவசேனாபதி.

 

  

ஊர் பேசும் ஓவிய சிலை 

அவனுக்கு மட்டும்  உரிமையுள்ளதாக 

அவனிடம்  மட்டும் குழந்தையாக 

அவனின் காதலாக 

என்றும் இதே அன்போடு வாழட்டும்.       

இது என்ன
கனவா நிஜமா இதற்கு
யாரிடம் கேட்பேன் விளக்கம்

 இது என்ன
பகலா இரவா இரவின்
அருகினில் சூரியன்
வெளிச்சம்

 உன்னோடு
இருக்கும் பொன்னான
நிமிடம் எந்நாளும்
தொடர்ந்திட நெஞ்சம்
ஏங்கும்

 விழிகளிலே

 விழிகளிலே
விழிகளிலே புது புது
மயக்கம் யார் தந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!