Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஊர் பேசும் ஓவிய சிலையே

ஊர் பேசும் ஓவிய சிலையே -5.2

மறுநாள் அதிகாலையே தோட்டத்திற்கு சென்றவன் பதினோரு மணிபோலக் காலைச் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்தான் அவனின் கையில் இருந்த காயத்தைப் பார்த்த பவுனு பதறிவிட்டார் “என்னய்யா இப்படி கட்டு போட்டுருக்கு என்னாச்சு” என்க.

“ஒண்ணுமில்லமா சின்ன அடிதான் மருந்து எடுத்தாச்சு” என்றவன் “எங்கம்மா யாரையும் காணும்” என்றபோது வெளியில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது அதைத் தொடர்ந்து மெல்ல வீட்டிற்குள் வந்தார் கோசலை பின்னிலே கந்தசாமியும் வந்தார்.

“எங்கப்பா போனீங்க? அப்பத்தா உடம்பு சரியில்லையா ஏன் ஒருமாதிரி இருக்கீங்க என்கிட்டே சொல்லியிருக்க வேண்டியதுதானே” என்றான்.

“அதுலாம் ஒன்னுமில்ல சாமி” என்றார் கோசலை அவன் யோசனையாகத் தந்தையை பார்க்க “தம்பி கொஞ்சம் பேசணும்” என்றார் அவர், அவனும் அவர் அருகில் சென்று அமர்ந்துகொள்ள ‘எப்படி தொடங்க’ என்றவர் யோசனை செய்துகொண்டிருந்தார்.



Advertisement

“நீ எதுக்குயா வெசனப்படுற அந்த ஈடுபட்ட கழுத செய்றதுக்கு நாம என்ன பண்ணறது” என்ற கோசலை “ஐயா ராசா உன் அக்காக்காரி கையை அறுத்துகிட்டு ஆஸ்பத்திரில கிடக்குறா, காலைல போன் வந்துச்சு அதான் ஒரு எட்டு போய்ப் பாத்துட்டு வரோம்”.

“அவ மாமியா காரி என்னன்னா அந்த ஆட்டம் ஆடுறா பேர புள்ளன்னா அது எங்களுக்கு மட்டுமா உங்களுக்கும் பேர புள்ளைதானே அதுங்களுக்கு செய்ய இவ்ளோ கணக்கு பாக்குறீங்க, நீங்க எதுவும் செய்யமாட்டீங்கன்னா புள்ளைங்க மேல உரிமை இல்லனு இப்போவே சொல்லிட்டு கிளம்புங்க இனிமே பொண்ணையும் பசங்கங்களையும் பாக்க வரக் கூடாது அப்படினு எங்க முன்னாடியே அவ்ளோ நாடகம் போடுறா” என்றவர் புலம்ப அவனுக்குப் புரிந்துவிட்டது, அவர் மட்டுமல்ல குடும்பமே சேர்ந்து நாடகம் ஆடுகிறது என்று.

“என்ன சொல்றாங்க டாக்டர்” என்றான் தந்தையை பார்த்து “பயப்பட ஒண்ணுமில்ல சின்னக் காயம்தான் சாயந்திரம் வீட்டுக்குப் போய்டலாம்” என்றதும் அவன் இதழ்களில் ஏளனப்புன்னகை.

Advertisement

“ஏய்யா சாமி இது என்ன உன் கைல!” என்றார் கோசலை பதறித் தந்தையும் மகனின் கையைப் பிடித்துப் பார்க்க “மச் அது ஒண்ணுமில்ல அப்பத்தா” என்றவன் “நீங்க என்னப்பா சொல்றீங்க” என்க அவர் பரிதாபமாக அவனைப் பார்த்தார்.

Advertisement

“பிரிச்சு குடுத்துடலாம் தம்பி இது சரியா வராது” என்றவர் அர்த்தத்தோடு தாயை பார்க்க “குடுத்துடு ராசா, எங்க கையெழுத்து போடணும் சொல்லு போடுறேன் அவங்கவங்க சோலிய போய்ப் பாக்கட்டும்” என்றவர் “ஆனா இந்த வீட்டில இருந்து ஒரு செங்கல் கூடக் கொடுக்கமாட்டேன் என் காலத்துக்கு அப்புறம் இது உனக்குத்தான்” என்றவர் எழுந்து உள்ளே சென்றார்.

பெருமூச்சொன்று எழ “நீங்கப் போய் ரெஸ்ட் எடுங்கப்பா நான் பாத்துக்குறேன்” என்றவன் வீட்டிற்கு வெளியில் வந்து நின்றான், மதில் சுவர் இல்லாத கடைக்கோடி வீடு வீட்டின் இடது பக்கம் மலையின் பள்ளத்தாக்கு ஆகையால் அங்கு மட்டும் வேலி கட்டப்பட்டிருக்கும், வேலி முழுதும் ஜாதிமல்லி கொடி படர்ந்து கிடக்க அதை ஒட்டிப் பெரிய வாகை மரம் கிளைபரப்பி நின்றது.

வண்டி நிறுத்தும் இடம் தவிர அனைத்தும் பூச்செடிகளும் மரங்களும் பணியில் குளித்து நின்றிருந்தது, வீட்டிற்கு நடந்துவரும் நடைப்பாதை மட்டும் கூழாங்கற்கள் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது ஐந்து படுக்கையறை கொண்ட நீண்டு கிடக்கும் வீடு.

Advertisement

ஒரே குடும்பமாக ஒன்றாக வாழப்போகிறோம் என்ற ஆசையில் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு, பாரம் என்று தெரிந்தாலும் சிலவற்றை விடமுடியாமல் தூக்கி சும்மக்கிறோம் ஒரு கட்டத்தில் அது நம் பயணத்தை முடக்குமானால் அதை இறக்கி வைத்துவிட்டு நம் வழியே போவது சிறந்தது, அந்த நொடி தந்தையின் பார்வை அதைத்தான் உணர்த்தியது, தங்கை என்னும் உறவுக்காக எத்தனையோ இழந்தாயிற்று தங்களை போல மகனும் அந்தச் சூழலில் சிக்குவதை அவர் விரும்பவில்லை போகட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

அன்று மதியமே கார்த்திகாவை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர் ‘மகளைப் பார்த்துக்கொள்கிறோம்’ என்ற கனகாவிடம் மறுத்துவிட்டார் அவளின் மாமியார், முடியாத மகளை அவரிடம் விடாமல் கொண்டு சென்றாளே கொஞ்சமேனும் நம் மீது பயம் இருக்கும் என்றார் மகனிடம், அவனும் மண்டையை நன்றாக ஆட்டிக்கொண்டான் மகளைப் பற்றிய புலம்பலை மாலையே தொடங்கிவிட்டார் கனகா.

சொத்துக்களை பிரிக்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டான் சேனாபதி அந்த வேலைகள் நடந்துகொண்டிருக்க, இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியில் வரவில்லை மயூரி தான் வெளியில் சென்றால் தன்னோடு வருபவர்களுக்கும் ஆபத்து என்பதே அவளை வீட்டில் முடக்கியது.

“மயூக்கா” என்ற சத்தத்தில் திரும்பிப் பார்க்க வேல்விழி வீட்டிற்குள் வந்துகொண்டிருந்தாள் “ஏய் விழி வா வா” என்ற மயூரி “என்ன இவ்ளோ மோர்னிங் வந்திருக்க” என்க.

“செர்ரி ப்ளாஸம் பாக்க போகலாம் அதுக்குதான் உங்கள கூப்பிட்டு போக வந்திருக்கோம்” என்றாள் விழி.

“வந்திருக்கோம்னா?”.

“அண்ணா வந்திருக்கு அங்க வெளில தாத்தா கூடப் பேசிட்டு இருக்காரு” என்க எழுந்து வாசலுக்கு ஓடினாள் மயூரி ஜீப்பில் சாய்ந்துநின்று ஒஸ்கரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான் சேனாபதி, இன்று ஜெர்கின் அணிந்து வந்திருந்தான் காயத்தை மறைக்க.

“டென் மினிட்ஸ் வெயிட் பண்ணு குளிச்சுட்டு வரேன்” என்றவள் கிட்சேன் நோக்கிக் குரல் கொடுத்தாள் “மேரிமா எல்லார்க்கும் குடிக்க எடுங்க” என்றவள் மாடிக்கு ஓடினாள்.

ஒஸ்கரிடம் பேசிக்கொண்டிருந்தவன் விழிகள் வேல்விழியியுடன் நடந்து வந்துகொண்டிருந்தவள் மீது பதிந்தது கடல் நீலத்தில் கிராஸ் கட் பிராக்கின் மேலே வெள்ளை உல்லன் பிரென்ட் ஓபன் ஸ்வெட்டர் அணிந்திருந்தாள் “சீக்கிரம் வந்திருவோம் கொஞ்சம் பேசணும் நீங்க வீட்ல இருங்க கிராண்ட்பா” என்றான் அவரிடம்.

“ஓகேய்” என்றவருக்கு என்னவாக இருக்கும் என்ற யோசனையே, செர்ரி ப்ளாஸம் ரோட்டின் இருமருங்கிலும் பூத்து குலுங்கி பாதை எங்கும் பூ மெத்தை விரித்திருந்தது, வெளிநாட்டில் பார்த்திருந்தாலும் சொந்த மண்ணில் மண் வாசத்தோடு அதை ரசிப்பது வேறு சுகம்தான், வழியெங்கும் சுற்றுலா பயணிகள் மரத்தின் கீழே நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர் பிள்ளைகள் பூக்களை அள்ளிச் சேகரித்துக்கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் அங்கு ஓரமாக நிறுத்தியவன் தோட்டத்திற்கு செல்லும் வழியில் வண்டியைத் திருப்பினான் “எங்க போறோம்” என்றவளுக்கு வேல்விழியே பதில் சொன்னாள் “தோட்டத்துக்குப் போறோம் நீங்கப் பாத்ததில்லையே அங்கேயும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்க ஆர்வமாகிவிட்டது மயூரிக்கு.

தோட்டத்தின் முன்பிலே மரம் கொள்ளா பூக்களோடு நின்றது செர்ரி ப்ளாஸம் “அமேசிங்” என்றாள் விழிகள் விரிய மரத்தையே பார்த்து இறங்கியவள் விழிகள் இன்னும் விரிந்தது முன்னில் விரிந்து கிடந்த தோட்டத்தைப் பார்த்து “மைக்காட்” என்று வேகமாக ஓடி அருகில் நின்று பார்த்து “ஜஸ்ட் வாவ்” என்றவளுக்கு எந்தப் பக்கம் பார்க்க என்றே தெரியவில்லை.

“பூ எடுக்க ஆள் வருவாங்க இப்போ” என்றான் அவளின் பின்னிலே வந்தவன்.

“உள்ள நடந்து போய்ப் பாக்கலாமா” என்று எதிர்பார்ப்போடு அவனிடம் கேட்டு நின்றாள்.

“ஹ்ம்ம்” என்று முன்னில் அவன் கைக்காட்ட மஞ்சள் பூக்களின் நடுவே ஆழ்கடலின் நீலம் போல மிதந்து சென்றாள் மயூரி, புன்சரிப்போடு ரசனையாகப் பார்த்துநின்றான் தேவசேனாபதி.

பூவுக்கெல்லாம்
சிறகு முளைத்தது எந்தன்
தோட்டத்தில் விண்மீன்
எல்லாம் நிலவாய் போனது
எந்தன் வானத்தில் முப்பது
நாளும் முகூர்த்தம் ஆனது
எந்தன் மாதத்தில் முள்ளில்
கூட தேன்துளி கசிந்தது
எந்தன் ராகத்தில்

இது எப்படி
எப்படி நியாயம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!