Skip to content
Post Views: 1,864
நதி 15
மனதை எத்தனை திடப்படுத்திக் கொண்ட போதும் வாணியின் வார்த்தைகள் தந்த தாக்கத்தால் அந்த நேரத்திற்கே உண்டான லேசான அச்சமும் நாணமும் யமுனாவை ஆட்கொள்ள தயக்கத்தோடு தான் அந்த அறைக்குள் வந்திருந்தாள்.
Advertisement
லேசாக சிவந்துவிட்ட முகத்தை மறைக்கும் முயற்சியாய் தலைகுனிந்து உள்ளே வந்தவள் வாணி சொல்லி சென்றது போல கதவடைக்க திரும்ப அவளின் கண்ணில் பட்டார் சகுந்தலா.
அவரின் பார்வையில் இருந்த ஒன்று அவளின் புருவத்தை முடுச்சிட வைத்தாலும், இயல்பான துடுக்குத்தனம் அவளை இயல்பாக்க அவரை புருவம் உயர்த்தி, ‘என்ன..?’ என்றிருந்தாள் தோரணையாய்.
Advertisement
Advertisement
அதில் ஜர்க் ஆனவர் அவசரமாக படுக்கையில் போர்வையை தலையோடு சேர்த்து போர்த்திக்கொண்டு படுத்துவிட புன்னகை அரும்பியது யமுனா முகத்தில்.
அதே மாறா புன்னகையோடு கதவை தாளிட்டு திரும்ப அவளுக்கு நேர் எதிரான முகபாவனையோடு அமர்ந்திருந்தான் தீனா.
Advertisement
புருவங்கள் சுருங்க அவன் அமர்ந்திருந்த விதமே ஏதோ தீவிர யோசனையிலும் குழப்பத்திலும் இருப்பதை சொல்லாமல் சொல்லிவிட்டது யமுனாவிற்கு.
வெளியே நடந்த பேச்சுவார்த்தை தான் அவளுக்கும் தெரிய வந்திருந்ததே..
சொந்தங்கள் கூடி இருக்கும் இடத்தில் ரகசியமாய் பேசும் விசயமே அம்பலமாகிவிடும்.
அப்படி இருக்க வெளிப்படையாய் நடந்த பேச்சுவார்த்தை எப்படி தெரியாமல் போகும்..?
“உன்ற மாமனாருக்கு கிறுக்கு புடுச்சு போச்சுன்னு நினைக்கறேன் கண்ணு. இல்லன்னா இப்புடி ஒரு முடுவு எடுப்பாரா..? என்னமோ போ..” என புலம்பும் சாக்கில் மொத்தமாக ஒப்பித்து விட்டல்லவா சென்றிருந்தனர்.
‘இவர இப்படியே விடக்கூடாதே.. இன்னைக்கு என்ன நாளு..? அதபத்தி யோசிக்காம.. இருங்க வர்றேன்..’ என நினைத்தவள் தனது தயக்கத்தையும், கூச்சத்தையும் ஓரம் கட்டிவிட்டு தனது முந்தானையை அள்ளி எடுத்து இடுப்போடு செருகிக்கொண்டு அவனை வேகமாய் நெருங்கியிருந்தாள்.
வெளியே இருப்பவருக்கு கேட்க கூடாது என்பதால் தனது குரலை தழைத்து,
“யோவ் கண்ணழகா.. நானும் நீங்க மதியம் பண்ணுனத பாத்து என்ன என்னமோ கற்பனை பண்ணிட்டு ரூமுக்குள்ள வந்தா.. என்ன இப்படி இருக்கீங்க..? இதான் உங்க டக்கா..?” என்றாள் கிண்டல் தொனியில்.
அதில் சிந்தை கலைந்து நிமிர்ந்து பார்த்தவன் அவள் தன் முன் நிற்கும் கோலம் கண்டு விசமமாய் ஓர் எண்ணம் தோன்றியது.
அதன் விளைவால், “ஓ.. அப்படியா பாப்பா..! அப்படி என்ன கற்பனை பண்ணி இருந்தீங்கன்னு சொன்னா.. அதை செய்ய வசதியா இருக்கும்..” என சொல்லிக்கொண்டே,
அவள் முந்தானையை சொருகியதால் இறங்கியிருந்த சோலைக்கு இடையே பளிச்சென மின்னிய மெல்லிடையை வளைத்து தன்னருகே இழுத்து நிறுத்த.. லேசாக நடுங்க தொடங்கியது அவளின் உடல்.
அவளின் நிலை அவனுக்கு புரிய, ‘வாலு.. இருடீ, உன்ன என்ன பண்ணறேன்னு பாரு.. எப்ப பாரு.. வம்பா பேசறே..?’ என எண்ணி இன்னும் சிரித்தவன்,
“அட.. சொல்லு பாப்பா..” என சலுகையாய் கொஞ்சி அமர்ந்த வாக்கிலேயே அவளை தன் இரு கால்களால் சிறை செய்து இன்னும் தனக்கு நெருக்கமாக்க,
“அச்சோ.. பா… பால்… ங்க..” என்றாள் தடுமாற்றமாய்.
தன் ஒற்றை கரத்தை மட்டும் அவளிடையிலிருந்து விலக்கி அவளிடமிருந்து செம்பை வாங்கியவன் அருகிருந்த ஜன்னல் திண்டில் வைத்துவிட்டு அந்த கரத்தின் ஆள்காட்டி விரல் கொண்டு அவளின் கன்னத்திலிருந்து காதருகே கோடு வரைய தொடங்கினான்.
அதில் அவளின் மேனி மொத்தமாய் சிலிர்க்க.. கழுத்தோடு ஒட்டியிருந்த குட்டி முடிகள் அனைத்தும் குத்திட்டு நின்றது.
அவளின் முகமோ ரத்தமென சிவந்துவிட கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
அவளின் அவஸ்த்தையும் முகம் காட்டும் வெக்கமும் ஆணாய் அவனை மோகத்துக்குள் ஆழமாய் இழுத்துச்செல்ல, மெல்ல.. அவனின் விரல் அவளின் காது மடல் கடந்து இறங்க தொடங்கியது.
அவசரமாய் தன் கையால் அவனின் விரலோடு கையை இறுக்கிக்கொண்டவனின் விழி மட்டும் இன்னும் இறுக்கமாய் மூடிக்கொண்டிருந்தது உணர்ச்சி வசத்தால்.
“பாப்பா… விடு..” என கரகரத்து வந்த ஆணவனின் குரலில் தயக்கத்தோடு கையை அவள் தளர்த்த,
உரிமையாய் பயணித்த அவனின் கரமோ அவளின் கழுத்தோடு உறவாடிய மஞ்சள் கயிறை ஒற்றை விரல் கொண்டு சுருட்டி வெளியே இழுத்தது.
அதில் வெளி வந்த மாங்கல்யம் அவன் விட்டதும் அவளின் மார்பின் மீது விழுந்து உரச தொடங்கியது.
அதனை கண்டவன் மெல்ல நிமிர்ந்து யமுனாவையும் காண, அவனின் விரல் தீண்டலில் மூடிய விழியை இன்னும் இறுக்கமாக மூடி, லேசாக நடுங்கும் இதழ்களை கட்டுக்குள் கொண்டு வர போராடிக்கொண்டிருந்தாள் முகமெல்லாம் சிவக்க.
அவளின் நிலையும் அந்த மாங்கல்யம் தந்த, ‘அவள் உன்னவள்.. உனக்கானவள்..’ என்ற உணர்வும் உரிமையும் அவனுக்குள் உண்டாக அந்த மாங்கல்யத்தையும் அவளின் முகத்தையும் மாறி மாறி பார்த்தவன்,
அது தொட்டு உறவாடிய இடத்தில் தன் முகம் புதைத்து மாங்கல்யத்தில் முத்தமிட படபடத்து போனாள் பாவை.
எதையோ எதிர்பாத்திருந்தாலும் அவனின் இத்தகு செயலை அவள் எதிர்பார்க்கவே இல்லை.
அவளின் கரங்கள் அவசரமாய் அவனின் பின்னந்தலை கூந்தலை மொத்தமாக இறுக்கி மாங்கல்யம் பதிந்திருந்த இடத்திலிருந்து அவனின் முகத்தை விலக்க முயல,
“ப்ளீஸ்..டீ.. நீ எனக்கே எனக்கானவன்னு என்னை ஃபீல் பண்ண விடு..” என கிறங்கி உச்சரித்தவனின் உதடு இருந்த நிலை மாறாது உரசி செல்ல மொத்தமாய் உருக்குலைந்து நின்றாள் பாவை.
அவளின் உருக்கம் அவனின் கரங்களின் வழி அவனுக்குள் கடத்த மீள முடியா சுழல் ஆணவனை ஆட்கொள்ள துவங்கியது.
கொஞ்சமாக அவளிலிருந்து முகத்தை மட்டும் விலக்கி அவ்விடத்திலேயே தாடை பதித்து பெண்ணவளின் முகம் பார்த்தவனுக்கு அவளின் முகத்தில் தெரிந்த ஒருவித மோக மயக்கநிலை,
அதற்கு மேலும் கட்டுப்படுத்த முடியாத நிலையை அவனுள் உண்டாக்க அவளை வளைத்து பிடித்த பிடி விலகாது அப்படியே கட்டிலில் சரிந்திருந்தான்.
அதுவரை இறுக்கமாய் மூடியிருந்த விழிகள் அவனின் இந்த செயலில் அதிர்ந்து விரிந்து கொள்ள அதில் விழுந்தது அவளவனின் மோகத்தில் மூழ்கி சிவந்திருந்த விழிகள்.
அவனின் விழி காட்டிய புது பாவனையும் சூடான தேகத்தின் வெம்மையும் அவனின் இறுக்கமான அணைப்பும் அவளுள் பயத்தை விதைக்க அவளின் உடலோ நடுக்கத்துவங்கியதோடு வேர்வையிலும் குளிக்க தொடங்கியது.
அவளின் பயம் உணர்ந்தவன், “உன்னை கஷ்டப்படுத்திட மாட்டேன் டீ.. என் மேல நம்பிக்கை இல்லையா..?” என அவளின் காதோடு உதடு உரசி கிசுகிசுக்க,
காதருகே உரசியும் உரசாத அந்த இதழின் ஸ்பரிசத்திலும் நன்றாக பதிந்து மீண்ட அவனின் அடர் மீசையும் கூசி சிலிர்த்தவளின் நிலை தான் திரிசங்கு சொர்க்கமாய் ஆனது.
அத்தோடு விடாமல் காதை தாண்டி பெண்ணவளின் கழுத்தில் முகம் புதைத்தவன் பல் படாமல் இதழ் கொண்டு லேசாக கவ்வி விலக மொத்த தேகமும் ஆட்டம் கண்டது அவளுக்கு.
‘அய்யோ.. என்ன இது..!! இவங்க லேசா இப்படி செஞ்சதுக்கே என்ன என்னமோ ஆகுதே..!
வயித்துக்குள்ள நண்டு பிரண்டுது.. இதயம் வேற.. வெளிய எகிரி குதுச்சு ஓடப்போறேன்னு சொல்லுது.. மூச்சு வேற தாறுமாறா வருது.
இதுக்கே இப்படின்னா.. அவங்க மொத்தமா என்னை எடுத்துக்கும் போது.. மூச்சடச்சு எதாவது ஆகிடுமோ..?’ என நினைத்து அவனை வலுக்கட்டாயமாக அவனின் முகத்தை தன் கரம் கொண்டு நெருங்க விடாமல் தடுக்க முயன்ற படி அவள் போராட,
“ப்ம்ச்.. என்ன தான் டீ உன் பிரச்சனை..? மனுஷன் சும்மா இருந்தாலும் தப்புங்கறே..
சரி தப்பையாவது சரியா செய்வோமுன்னு பாத்தாலும் தடை போடறே..?” என போலியாய் சலித்துக்கொண்டு மீண்டும் அவளிடம் தஞ்சம் புக முயல,
“அச்சோ.. கொஞ்சமிருங்க.. நா.. சொல்றேனே.. அது.. இது.. ஆ.. அண்ணி.. கஷ்டப்பட்டு அலங்காரம் பண்ணியிருக்காங்க.. பாவம் பூ..” என அவனின் வேகத்திற்கு தடையிடும் மார்க்கமாய் லூசுத்தனமாக தேடி பிடித்து காரணத்தை அடுக்க,
“அடீயேய் என் ஆச குள்ளச்சீ.. உன்னை யோசிக்க விட்டா.. இப்படி கிறுக்கு தனமா எதாவது தான் தோனும்..
இந்த அலங்காரமே நம்ம கலைக்க தான்டீ.. என் அரவேக்காடு..
பூ கலையும்.. கசங்கும்..ன்னு ஃபீல் பண்ணற உன்னை முதல்ல கலச்சு அப்புறம் அப்படியே உன்னுள்ள மூழ்கி கசங்கி போக ஆரம்பிச்சா இப்படி நினைக்க மாட்டே..” என்றவன் அவளை பேச விடாமல் இதழணைக்க,
“ம்ம்..” என விடுபட ஆரம்பித்த முனங்கல், பின்.. மோக முனங்கலாய் மாறத்தொடங்கியது.
மோக வாசலில் திறவு கோளாய் ஆரம்பித்த விசயம்.. பாவையவளையும் திறந்து அது உள்ளிழுத்துக்கொள்ள, சுற்றியிருக்கும் உலகம் மொத்தமாய் மறந்து மறைந்து போனது நினைவடுக்கில்.
மெல்ல அடுத்த கட்டத்திற்கு தீனா செல்ல தொடங்கவும் மொத்தமாய் அவர்களுக்கான புது உலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்தனர்.
இருவரும் மெய் மறந்த நிலையில் இருக்க, ‘தட்.. தட்..’ டென ஒலித்த சத்தம் அவர்களின் செவியை எட்டவே இல்லை.
மீண்டும் தொடர்ந்த சத்தத்தில்.. திடுக்கிட்டு விலகிய தீனா யமுனாவை பார்க்க,
லேசாக கசங்க தொடங்கிய புடவையோடு முற்று பெறா தேடலின் மயக்கம் முகத்தில் பிரதிபலிக்க பேந்த விழித்திருந்தாள் தீனாவின் திடீர் விலகலுக்கு காரணம் புரியாது.
அப்போது மீண்டும் கேட்ட அந்த சத்தத்தில் இப்போது யமுனாவும் எழுந்து அமர்ந்து கேள்வியாய் தீனாவை பார்க்க..
உதட்டை பிதுக்கி, ‘தெரியல..’ என சொன்னவன்,
“இரு யாருன்னு பார்க்கறேன்..” என மெல்ல சொல்லி தன்னை நிலைப்படுத்திக்கொண்டு தன்னிடம் விடுபட்ட தனது ஆடையை சரி செய்த படி எழுந்து சென்றான்.
அவன் வருவதற்குள் இன்னும் சில முறை தட்டப்பட்டிருந்தது கதவு.
“வர்றேன்..” என உணர்ச்சிவசத்தால் அடைபட்ட குரலை சரி செய்து சொன்னவன் கதவை திறக்க எரிச்சலோடு நின்றிருந்தார் சகுந்தலா.
அவர் நின்ற நிலை கண்டு குழம்பி அவன் பார்க்க, “தள்ளு..” என்ற படி உள்ளே வந்தவரின் செய்கையில் மொத்தமாய் அதிர்ந்து போனான்.
“சித்தி..!!” என அழைக்க வந்தவனுக்கு குரல் கூட ஒத்துழைக்கவில்லை.
‘சகுந்தலா இப்படி உள்ளே வருவார்..!!’ என எதிர்பார்க்காத யமுனாவும் பதறி படுக்கையிலிருந்து இறங்கி நின்றிருந்தாள்.
அவள் உடலில் அவர் பார்வை பதிந்து மீண்ட இடத்தை கண்டவள், அவசரமாய் தன் உடையை சரி செய்ய அவரின் முகத்தில் ஏளனப்புன்னகை.
அதை கண்டு கொண்ட தீனாவின் முஷ்டி இறுகத்தொடங்கியது கோபத்தால்.
அவன் ஒரு அடி அவரை நோக்கி எடுத்து வைக்க வரவும் அவனை தன் கண்பார்வையால் அடங்கி நிறுத்தியிருந்தாள் யமுனா.
அவளுக்கு முற்றும் முழுதாய் தெரிய வேண்டி இருந்தது.. ‘அவர் எதுவரை செல்வார் என்பதை..’. அதனாலேயே அவனை அடக்கி நிறுத்தியவள்,
‘அப்புறம்.. அவ்வளவு தானா..? இன்னும் இருக்கா..?’ என்றதாய் மிதப்பு பார்வையை பதிலுக்கு சகுந்தலாவை நோக்கி வீச அதை கண்டவரின் முகத்தில் அத்தனை ஆக்ரோஷம்.
“கொஞ்சோங் கூட அறிவே இல்லாத ஜென்மங்க.. வளந்தா மட்டும் போதுமா..?” என ஜாடையாய் பேசியபடி மெத்தை அருகே வந்தவர் சுற்றி முற்றி பார்த்துவிட்டு,
அதன் மீதிருந்த விரிப்பை கையால் இழுத்து உதற அதன் மீதிருந்த பூக்கள் அந்த அறை முழுவதும் சிதறி பரவியது.
error: Content is protected !!