ஜெகதீஷ் கிளம்பிய பிறகு சமையலறைக்கு சென்று தனது மிச்ச வேலையை எல்லாம் யமுனா முடித்து விட்டு கூடத்துக்கு வர சகுந்தலா உர்றென முகத்தை வைத்து அமர்ந்திருந்தார் மகன் தன்னை கண்டு கொள்ளாமல் சென்ற கடுப்பில்.
அதுவரை அவரை சீண்டும் எண்ணம் துளியும் இல்லாமல் இருந்தவளுக்கு அவரின் இந்த பாவனை தூண்டிவிட,
Advertisement
“அத்தே..” என்றாள் பாசமாய்.
‘அய்யோ.. இவ எதுக்கு இத்தன பாசமா இழுக்கறா..?’ என ஜர்க் ஆகி அவர் பார்க்க,
Advertisement
Advertisement
அவரின் பார்வையே அவளுக்கு சிரிப்பை தந்தாலும் அதை மறைத்துக்கொண்டு,
அதான் உங்க சாப்பாட்டுல பேதி மாத்திரை கலந்துட்டேன்..” என அசால்ட்டாக கையை தூசி தட்டுவது போல தட்டிக்கொண்டு யமுனா சொன்ன நொடி,
தனது இடுப்பு வலியையும் மறந்து, “அய்யோ.. பாதகத்தி.. இப்புடி பண்ணிப்புட்டாளே..” என ஓட்டமெடுத்தார் பாத்ரூம் நோக்கி.
அப்போது தான் குளித்துவிட்டு தலையை துவட்டியபடி வந்து கொண்டிருந்த தீனாவை தள்ளி விடுவது போல கடந்து உள்ளே வேகமாய் சென்றவரை கண்டு முதலில் பதறி, பின் குழம்பிப்போய் திரும்பியவன் கண்ணில் நமுட்டு சிரிப்போடு நின்றிருந்த யமுனா பட்டாள்.
‘ஆத்தே..! இந்த பாப்பா ஏதோ வேலைய பாத்துட்டா போலவே..?’ என எண்ணியவன் வேகமாய் அவளருகே வர,
அவன் வரும் காரணம் புரிந்தவள் உதட்டை சுழித்து பழிப்பு காட்டிவிட்டு உள்ளே சென்றிருந்தாள்.
அவள் சமையலறைக்குள் செல்லப்போவதை கண்டவன் அவளின் கையை பற்றி இழுத்துக்கொண்டு உள் அறைக்கு சென்று,
“என்ன பாப்பா செஞ்சே..?” என்றான் பதட்டத்தோடே.
“என்ன செஞ்சேன்..? காலைல எழுந்து குளிச்சு.. சமச்சு.. பரிமாறி..” என வரிசையாய் அவள் விரல் விட்டு எண்ணியபடி சொல்ல,
“ம்ப்ச்.. பாப்பா.. விளையாடாத.. சித்திய என்ன செஞ்சேன்னு கேட்டேன்..?” என்றிட,
“உங்க சித்திய நா என்ன செய்யப்போறேன்..? நா ஒண்ணுமே செய்யலையே..” என்றாள் அசால்ட்டாக.
“நீ ஒண்ணுமே செய்யாம அவங்க ஏன் அப்படி ஓடுனாங்க..?” என கேட்டவனுக்கு குழப்பமே எஞ்சியது.
“அத அவங்ககிட்ட தான் கேட்கனும். இங்கே பாருங்க தயா.. இப்படியெல்லாம் என்னை சந்தேகப்படக்கூடாது.. நா ரொம்ப சமத்தா தான் இருக்கேன்..” என அவள் சொன்னா பாணியே, ‘நா அப்படி இல்லை..’ என்பதை காட்டிவிட,
“பாப்பா….”. என அவன் இழுக்க,
“அய்யோ சாமி.. சத்தியமா நா சாப்பாடு மட்டும் தான் அவங்களுக்கு கொடுத்தேன்..” என அவள் உறுதியாய் சொல்ல,
வேறு வழியின்றி சரியென தலையசைத்து திரும்பியவனுக்கு தெரிய வாய்ப்பில்லை என நினைத்து.. அவனின் முதுகுக்கு பின் நின்று அவள் காட்டிய சைகை அவனுக்கு முன் இருந்த கண்ணாடியில் தெரிந்து விட,
அவளை தன் கரத்தை பின் செலுத்தி இழுத்து தனக்கும் கண்ணாடிக்கும் இடையே நிறுத்தி அழுத்தமாய் அவளை பார்த்தவன்,
“நீ ஒண்ணுமே பண்ணல..?” என அவளின் கண்ணை பார்த்து கறாராக கேட்டிருந்தான்.
அவனின் இந்த திடீர் செய்கையையும் அந்த குரலும் பாவனையும் வேலை செய்யும் இடத்தில் தவறு செய்பவரிடத்தில் அவன் காட்டும் தொனியில் இருக்க,
‘இல்லை..’ என தலையாட்ட வந்தவள், அவனின் அந்த கடினமான பார்வையில், “ஆமா..” என தலையை ஆட்டியிருந்தாள்.
“என்ன செஞ்சே..?” என்றான் அதே பாவனை மாறாது.
“அவங்க சாப்பிட்டதும் அதுல பேதி மாத்தர போட்டிருக்கேன்னு சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.. அவங்க நம்பிட்டாங்க..” என குரல் உள்ளே செல்ல சொன்னவளை கண்டு.. அவளை விட்டு விலகி நின்று தனது கரத்தை மார்புக்கு மத்தியில் கட்டியவன்,
“சோ, நீ என்ன வேணுமின்னாலும் சொல்லு.. நா இப்படி தான் செய்வேன்னு இருப்பே அப்படி தானே..?” என தீனா கேட்க,
நொடியில் கண்ணில் நீர் நிறைந்து விட்டது யமுனாவிற்கு அவனின் இந்த கடுமையில்.
நீ பண்ண வேலையால ஏற்கனவே இடுப்ப புடுச்சுட்டு ரெண்டு நாளா நடக்கறாங்க.. இதுல அவங்க போன வேகத்துக்கு உள்ள இருக்கற ஈரம் வழுக்கி விழுந்தா என்ன ஆகுமுன்னு ஒரு செக்கண்ட் யோசிச்சு பாரு.
நா என்ன பாவம் பண்ணினேனோ எனக்கு தான் அம்மாங்கற உறவு சின்ன வயசுலையே இல்லாம போச்சு.. அதே நிலைமை ஜெகாவுக்கு வேண்டாம்.
நீ அம்பை ஏய்தவங்கள விட்டுட்டு அந்த அம்புக்கு தண்டனை கொடுத்துட்டு இருக்கேன்னு புரியவே மாட்டிங்குது..” என கோபமாக பேசிவிட,
இதுவரையிலும் தன்னிடம் இப்படி பேசியே இராதவனின் முதல் கோபத்தில் யமுனாவின் முகம் மேலும் சுருங்கி போனது.
அத்தோடு கண்ணில் கட்டி நின்ற கண்ணீரும் கன்னத்திற்கு வழிந்து விட, அதை கண்டு மேலும் கோபமே தீனாவிற்கு.
“மூச்… அழுதே மவளே என்ன செய்வேன்னு தெரியாது.. பாத்துக்கோ..* என உதட்டை அழுந்த கடித்த படி மிரட்டலாய் அவன் சொல்ல, அவ்வளவு தான் யமுனா அதிர்ந்து அவனை பார்த்தவள் மெல்ல அவனை விட்டு விலகி பின் நகர்ந்தாள்.
விளையாட்டாய் செய்யும் சிறு செயல் வினையாகி போனால் அதை எண்ணி காலத்துக்கும் வருந்தப்போவதும் அவள் தானே.. என்ற எண்ணம் அவளை சமாதானம் செய்ய விடாமல் அவனை தடுத்தது.
ஆனால் அவளின் அழுகை.. அதோடு அவனை கண்டு அதிர்ந்து பார்த்த அந்த பார்வை.. அதும் அவனை தவிக்க வைக்க,
“யமுனா…” என சொல்லி அவளை நெருங்கி வர,
வேகமாய் அவனை தள்ளிவிட்டவள் அந்த அறையிலிருந்து கண்ணீரை துடைத்தபடி வெளியேறப்போக..
“டேய் பாப்பா..” என்றவனின் குரல் செவில் விழுந்தாலும்.. அவனை பார்க்காமல் வேகமாய் அவள் வெளியேற, தலைமுடியை அழுந்த கோதி தன்னை சமன்படுத்த முயன்றான் தீனா.
இருவருக்கும் இடையே வந்த முதல் ஊடல்.. இதை எப்படி சரி செய்வது என்ற தவிப்பில் தீனா இருக்க,
கண்ணீரோடு வெளிவந்தவளை கண்ட இரு கண்ணிலோ நினைத்ததை சாதித்து விட்ட திருப்தி.