Skip to content
Post Views: 1,569
தீனாவின் வீட்டுக்கு வந்த சக்தியை, “வாங்க மாமா..” என்றழைத்தவன்,
“கூடம் ரொம்ப நீளமா இருக்கறதால அந்த கார்னர்ல பத்தடி தள்ளி கதவோட ஒரு சுவர் வச்சோமுன்னா அது தனி ரூமா மாறிடும்.
Advertisement
உள் ரூம்ல ஜெகா தூங்கறதால அவனை இடம் மாத்தினா சின்ன பையனோட மனசுல கேள்வி நிறைய வரும்.
Advertisement
அது எந்த மாதிரியான எண்ணத்தை கொடுக்குமுன்னு தெரியாதில்லையா மாமா..?
Advertisement
அவன் எப்பவும் போல உள்ள இருக்கற ரூமை யூஸ் பண்ணட்டும். சித்திய ஜெகா கூட உள்ளையே தூங்க சொல்லிக்கலாம்.
Advertisement
இப்ப இருக்கற நிலைமைக்கு நாங்க இங்கே இருந்தாலும், எங்களுக்கு திருப்பூர் தான் சரி வரும் மாமா.
நல்லது கெட்டதுக்குன்னு இங்கே வந்து போகற மாதிரி தான் ஆகும் கொஞ்ச மாசத்துல.. அதுக்கு எதுக்கு பெரிய ரூம்.
இப்ப கட்டற சின்ன ரூமுல நாங்க இருந்துக்கறோம்.. என்ன சொல்றீங்க..?” என தனக்கு தோன்றியதை சொல்ல,
“நல்ல யோசன தான் மாப்ளே.. கிட்டதட்ட முப்பது அடிக்கு மேல இருக்கற இடத்துல பத்தடி மறைக்கறதால பெருசா பிரச்சினை இல்ல தான்.
எதுக்கும் யமுனாகிட்ட ஒத்த வார்த்த கேட்டுக்கோ.. எதுவுன்னாலும் இங்க பொழங்கறது அந்த புள்ள தானே..?” என்றார் அனுபவஸ்தராய்.
யமுனாவிற்கு சக்தியை எதிர்கொள்வதில் இருந்த ஒரு வித தயக்கம்.. அவர் வந்ததும் பார்வையாலோ பேச்சிலோ தங்களை சங்கடப்படுத்தும் விதமான எதுவும் இல்லாது இருந்ததால் சகஜ பாவனைக்கு வந்திருந்தவளும்,
“அண்ணா, நீங்க வர்றதுக்கு முன்னமே என்கிட்ட கேட்டாங்க.. இப்ப இருக்கற சூழ்நிலைக்கு இதான் சரியா வரும். செலவ பத்தியும் யோசிக்கனுமே..!” என்றாள்.
யோசித்த சக்தியைம், “அப்ப சரி மாப்ளே. நீ வண்டி சாவிய கொடு. நா இப்பவே அதுக்கான வேலய ஆரம்பிக்கறேன்..” என்றுவிட்டு கிளம்பினார்.
அவர் சென்றதும் ஆட்கள் வந்தால் அளந்து பார்க்க ஏதுவாக அங்கிருந்த சில பொருட்களை இடம் மாற்றி வைக்க ஆரம்பித்தான் தீனா.
சரியாக அந்த நேரம் அங்கு வந்து சேர்ந்தார் ஜெயசீலன்.
சக்தி வெளியே சென்றதும், ‘இங்கே நிலவரம் என்ன..?’ என காணாமல் மண்டை வெடித்துவிடும் போலாக நைசாக வாணியிடம் கூட சொல்லாமல் வந்திருந்தார் மனிதர்.
வந்தவர் கண்டது தீனாவும் யமுனாவும் சேர்ந்து பொருட்களை எடுத்துக்கொண்டிருப்பதையே..!
அதில் காண்டானவர், “என்ற ஊட்டுல என்னத்த டா பண்றே..?” என்றிருக்க,
டேபிள் என்பதால் யமுனாவும் உதவும் பொருட்டு பிடித்திருக்க, அவரின் குரல் கேட்கும் வரை இருவரும் அவரை கவனிக்கவே இல்லை.
அவர் குரலில் சாவகாசமாக திரும்பி பார்த்தனர் இருவரும்.
அதில் கடுப்பான ஜெயசீலன், மீண்டும் அதையே கேட்க, “எங்களுக்கு தங்க தோதா ரூமெடுக்க ஏற்பாடு பண்ணறோம்..” என தீனா சொல்லிய நொடி அதிர்ந்தவர்,
“என்ன..! என்ற ஊட்டுல என்னைய கேக்காம எப்புடி நீயே இதெல்லாஞ்செய்ய ஆச்சு..?” என கோபத்தோடு பல்லைக்கடித்துக் கொண்டு தீனா அருகே வர, அவரை தீப்பார்வையால் எட்ட நிறுத்தினான் தீனதயாளன்.
பதினெட்டு வயதில் அவன் அவரை எதிர்த்து நின்றிருக்கிறான் தான். அப்போது இந்த திடம் அவனிடம் இல்லையே..!!!
இப்போது அவனால் எதையும் தனித்து நின்று செய்துவிட முடியும்.. என்ற நிலையில், அவனின் பார்வை தீட்சண்யத்தை தாங்க முடியாது திணறி போனவர் அவனை நெருங்காது அதே இடத்தில் நின்றுவிட்டார்.
அப்போதும் அவரால் வாயை அடக்க முடியாமல், “உங்குளுக்கு தங்கறதுக்கொசறம் என்ற ஊட்டுல ஏன்டா இதெல்லா செய்றே..? அதுக்கு உனக்கு என்றா உரிம இருக்கு..?” என்றதும்,
தீனாவை பேசவிடாமல் முந்திக்கொண்ட யமுனா, “என்னோட மாம நாருக்கு வயசாகி போச்சில்லங்க. அதான் அவருக்கு மறதி ஜாஸ்த்தியா போச்சு.
நம்ம சரியா நியாபப்படுத்தினா தெளிவாகிடுவார்..” என தீனாவிடம் சொல்லிவிட்டு ஜெயசீலனிடம் திரும்பியவள்,
“எனதருமை மாம நாரே.. பத்து வருஷத்துக்கு முன்னே இவரு உங்க மகன்னா குடும்ப பொறுப்பை பாத்து நடத்துன்னு சொன்னீங்க தானே..?
அவரும் இத்தன வருஷம் அத தட்டாம செஞ்சு உங்க மகன்னு நிரூபிச்சுட்டார்.
அப்ப உங்க வீட்டுல உங்க மகனுக்கும் உரிமை இருக்கு தானே..?” என கிடுக்குப்பிடி யமுனா போட,
ஒரு நொடி தடுமாறினாலும், “அதுக்குன்னு ஊட்டுக்கு பெரியவனான என்னய கேக்காம எப்புடி இத செய்ய முடுவு எடுக்க ஆச்சு.. அப்போ நா யாரு இங்க..?” என்றார் கோபமாக.
“அதான் மாம நாரே நானும் கேட்கறேன்.. நீங்க யாரு இந்த வீட்டுக்கு..?” என யமுனா அவரை தூண்டிவிட,
அவள் மாம நாரூ என எதற்கு அழைத்து தூண்டிவிட்டு வார்த்தையை வாங்குகிறாள் என்பது தெரியாமல்,
“நாந்தே இந்த குடும்பத்துக்கு தலைவன்.. இது தெரியாம என்ன வளத்தாங்க உங்க ஊட்டுல..?” என்றார் நக்கல் தோணியில்.
அதற்கு கோபப்படாமல், “அச்சோ மாம நாரே.. என்னோட வளப்பு பத்தி பேசறது ஒரு பக்கமிருக்கட்டும்..
நீங்க இந்த வீட்டு குடும்ப தலைவர் சரி தானே..?” எனக்கேட்க,
‘ஆம்..’ என்பான கெத்தான தலையசைப்பு அவரிடம்.
“குடும்ப தலைவர் ன்னா அவரோட பொண்டாட்டி, புள்ளைங்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைய செய்யனுமா இல்லையா..?” எனக்கேட்க,
“ஆமா.. அதுகென்ன கொறஞ்சு போச்சு இப்போ..?” என்றார் ஜெயசீலன்.
“கொறையா இருக்க போயி தானே.. இவரா உங்கள மீறி முடிவெடுத்திருக்காரு.. அதுக்கு நீங்க விடலாமா..?
அப்படி விட்டா தான் உங்கள எல்லாரும் என்னன்னு பேசுவாங்க.. மாமா..?
பாருங்க.. உங்க பின்னாடி வந்தவங்க கூட தெகச்சு நிக்கறத..!!” என,
இதுவரை இருந்த நக்கல் குரல் அல்லாது மிகுந்த மரியாதையோடு அவள் சொல்ல, அவளின் பேச்சை உள் வாங்கியவர் அவசரமாய் திரும்பினார்.
அங்கு சக்தி தீனாவிற்கான அறையை கட்ட வேண்டி அவருக்கு தெரிந்த மேஸ்திரியை கையோடு அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.
‘அடுத்தவர் முன் தன் பிம்பம் சரியாமல் இருக்க என்ன செய்வது..?’ என திகைத்து தடுமாறி நின்றவரை சரியாக அடித்து சாய்த்தாள் யமுனா.
“நா தான் சொன்னேனா இல்லையாங்க..? மாமா அவரே அவர் வாயால என்ற மகன தனியா விடலாம்.. ஆனா என்ற மருமகள கௌரவமா என்ற ஊட்டுல வச்சு வாழ வைப்பேன்னு..
ஏன் சக்தி அண்ணா.. அவர் சொல்லும் போது நீங்களும் அங்கே தானே இருந்தீங்க..?” என சக்தியை துணைக்கு இழுக்க,
யமுனாவின் கண் ஜாடையில் என்னவோ திட்டமிட்டு விட்டது புரிந்து கொண்ட சக்தியும்,
“ஆமாம்மா.. என்னோட மாமாக்கு தங்கமான மனசு.
காதல் கல்யாணமுன்னாலும் உன்னைய எங்கையோ போய் எப்படியோ இருன்னு விட முடியாம தானே.. இங்கையே கூட வச்சு பாத்துக்கனுமுன்னு மாமா துடியா துடுச்சார்.
அப்பவே அவரோட இந்த நல்ல மனசு தெரிஞ்சு தானே என்னோட அக்காள ரெண்டாந்தார இருந்தாலும் பரவாயில்லன்னு நாங்களும் கொடுத்தது..” என சக்தியும் அழகாய் ஒத்து ஊதினார்.
“ஏங்க இப்ப என்ன சொல்லறீங்க..? மாமா நமக்காக காலியா இருக்கற இடத்துல.. தனியா வீடே எடுத்து என்னைய ராணி மாதிரி வாழ வைக்க நினச்சிருக்க, இப்படி சின்ன ரூம எனக்குன்னு ஏற்பாடு செய்ய நினச்சா மாமாக்கு மனசு தாங்குமா.. சொல்லுங்க..?
நீங்க இத்தன வருஷமா சம்பாதிச்சு இவருக்கு கொடுத்திருக்க.. அவரு அவரோட ரத்தத்துக்காக இந்த வேலைய நமக்காக செஞ்சு தரமாட்டாரா..?” என சரியான இடத்திற்கு யமுனா வந்து சேர,
“எதே நா செலவு செய்யறதா..? என்ற கிட்ட ஏ..” ‘ஏது பணம்..’ என சொல்ல வந்தவரை முடிக்க வாடாமல்,
“அட அட, ஜெயசீலனோட இந்த பெருந்தன்ம யாருக்கு வரும்..? நாங்க கூட புள்ள இங்க வராமையே இருக்க.. ஏதோ பிரச்சினையோன்னு நினச்சு பேசியிருக்கோம்..
ஆனா, காதலுச்சு கண்ணாலம் பண்ணிட்டு வந்தாலும்.. மருமவளுக்காக எந்த மாமனாரு இப்புடி செய்வாரு..?!!
ஏப்பா தீனா, அதா உன்ற ஐய்யனே செலவு செஞ்சு.. ஊடு எடுத்து தர்றேன்னு சொல்லும் போது வாங்கிக்காம.. உள்ளார சின்னதா ரூமு எடுத்து என்ன செய்ய போறே..?” என தீனாவிடம் பேசிய மேஸ்திரி,
அதே வேகத்தோடு ஜெயசீலனிடம் திரும்பி, “எப்பா ஜெயசீலா.. நாளக்கே நாளு நல்லா இருக்கு. வெளியே கூலிங் சீட்ட மட்டும் எடுத்து போட்டு.. அங்கன ஊடு எடுத்தா பெருசா அவுக காலத்துக்கும் வாழற மாதிரி கட்டிப்புடலாம்.
ஆளுங்க கைவசம் இருக்கு.. எண்ணி ஒரு மாசத்துல வேலைய முடுச்சு ஒப்படைக்க நானாச்சு..” என அவர் மடமடவென திட்டம் தீட்ட,
‘நானா வந்து சிக்கிட்டேனோ..?’ என திருதிருத்தவர் பின் சுதாரித்து, “அதெல்லாம் செய்ய மாசக்கணக்காவும். அதுவர என்ன செய்ய..?
இப்போதைக்கு அவுக கேட்கற மாறி உள்ளக்கே ரூம போட்டு கொடு.. பெறகால அத பாத்துக்கலாம்..” என வேறு வழியின்றி சொல்ல,
“அப்ப சரி.. வா அளந்து என்ன செலவு ஆகும் என்னன்னு சொல்றேன்.. மண்ணு செங்கல்லுக்குன்னு ஒரு தொகைய கொடுத்தா.. நானே அத இறக்க சொல்லிடுறேன்.
மழையால வேல இல்லாம தான் ஆளுங்க இருக்காங்க. இது ஊட்டுக்குள்ளாற தானே..?
இப்பவே பசங்களுக்கு கூப்பிட்டா வந்திடுவாங்க..” என பேசி கையோடு ஜெயசீலனிடமிருந்து அட்வான்ஸாக ஒரு தொகையை பெற்றுவிட்டே அவருக்கு கீழ் வேலை பார்ப்பவருக்கு அழைத்தார் அந்த மேஸ்திரி.
இதுவரை தீனாவிடமிருந்து வாங்க மட்டுமே செய்தவர்.. முதல் முறையாக அவனுக்காக செலவை செய்ய அவரின் முகத்தில் ஈயாடவில்லை.
“அப்பறம் மாமா.. வேல ரெண்டு நாளக்கி நடக்கும்.. இங்கன மண்ணு சிமெண்ட் ன்னு கசகசப்புல ஏன் நீங்க இருக்கோனும்..?
மேஸ்திரி மொத்த செலவ சொல்லிட்டார் தானே..?
தீனாகிட்ட பணத்த கொடுத்துப்போட்டு ஒரு மூணு நாளக்கி உங்களுக்கு வேணுங்கற துணிய எடுத்துட்டு வாங்க நம்மூட்டுல இருப்பீங்களாம்.
உங்கள விட்டு அக்காள கூட்டியாந்து அவளுக்கும் ஜெகாவுக்குமானத எடுத்துட்டு வந்துடறேன்..” என்ற சக்தி சொன்னதை செய்து விட்டே ஓய்ந்தார்.
ஏற்கனவே யமுனாவின் மீது இருந்த கடுப்பு இப்போது கோபமாய் உருமாறி போனது இந்நிகழ்வால்..
அவர் சக்தியோடு சென்றதும், “ஏய் பாப்பா.. என்னடீ அண்ணனும் தங்கச்சியும் சேர்ந்து இப்படி அவர வச்சு செஞ்சிட்டீங்க..” என கேட்டவனுக்கு அத்தனை சிரிப்பு.
அதிலும் யமுனாவின் பேச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் அவர் விழி பிதுங்கி நின்றதும், சக்தியின் பேச்சும் நினைக்கும் போதெல்லாம் அப்படி ஒரு சிரிப்பு பொங்கியது அவனுக்கு.
அத்தோடு கடைசியாக பணத்தை அவர் கையாலேயே தீனாவிடம் கொடுக்க வைத்ததை எல்லாம் அவனால் நம்பவே முடியவில்லை.
“எப்படி பாப்பா இவ்வளவு புத்திசாலி ஆகிட்டே..?” என கிண்டல் போல கேட்டாலும், அவனுக்கு அவளின் சாமர்த்தியத்தை நினைத்து மெச்சுதாலே இந்த விசயத்தில்.
“அதுவா கண்ணழகா.. சேர்க்கை அப்படி..” என ஒற்றை கண்ணை நளினமாய் அவள் சிமிட்டி சொன்ன பாவனையிலும்.. அவளின் பார்வை வீச்சிலும்.. அர்த்தம் விளங்க,
அந்த சேர்க்கையை இன்னும் பலமாக்கி இருந்தான் அன்றும் விடியலை காணும் வரையிலும்…
விடிந்தாலும் வானம்
இருள்பூச வேண்டும்
மடிமீது சாய்ந்து
கதைபேச வேண்டும்
முடியாத பாா்வை
நீ வீச வேண்டும்
முழு நேரம் என்மேல்
உன் வாசம் வேண்டும்
error: Content is protected !!