Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுள்ளே உன் பிம்பம்

என்னுள்ளே உன் பிம்பம் – இன்ட்ரோ

சில்லென்ற மழை காற்று முகத்தில் வீச, அதை ஒரு சிலிர்ப்போடு ரசித்தாள் நிலா. மழை நின்ற சாலை நிசப்தமாக அதே சமயம் மிகவும் ரம்யமாக இருந்தது. அந்த ஏகாந்த நிலையை களைப்பதுப் போல் ஒரு சத்தம்.

“அம்மாஆஆஆஆ…..”… என்ற அலறளோடு ஒருவன் கீழே விழுந்தான்.

அவன் விழுந்த அடுத்த நொடியில் இன்னொருவனும் அதே அலறளோடு விழுந்தான்.இருவருக்கும் வாயிலிருந்து ரத்தம் கொட்டிக்கொண்டு இருந்தது.தன் பெரிய விழிகளை இன்னும் விரித்து அதிர்ச்சியாக பார்த்தாள் நிலா. அவளை போலவே அந்த பேருந்து நிலையத்தில் இருந்த அனைவரும் உறைந்து பார்த்துக்கொண்டு இருந்தனர்.

இவர்களை அடித்தவனோ இன்னும் அடிக்க கை ஓங்க அவர்கள் பயந்து பின்னால் நகர்த்தனர். அடித்தவனை யார் என்று நிலா பார்க்க,பார்த்த அடுத்த நொடி பயந்துவிட்டாள். அவன் கண்ணில் அவ்வளவு ரௌத்திரம். பார்க்கவே பயமாக இருந்தது.யாரும் நெருங்க முடியாத ஒரு திடம் அவனிடம்.அதற்கு முதல் காரணம் அவனுடைய உடல்.’பத்து பேர் வந்தாலும் ஆசால்ட்டா அடிப்பான் போல..சிக்ஸ் பேக் வச்சி இருப்பானோ.. ஜிம் போவான் போல..’, என்று மனதில் நினைத்துக்கொண்டே அவள் பார்வையை சற்று கீழே இறக்கினாள்.



Advertisement

அவன் வலது கையில் ரத்தம் சிந்திக்கொண்டு இருக்க இடது கையிலோ மது பாட்டில். அதை பார்த்ததும் அவள் முகம் சுலித்தாள்.’ச்ச.. இவன மாதிரி ஆட்கள் இருக்கிறதால தான் ஒயின் ஷாப் நல்லா கல்லா கட்டுது..தூங்கும்போதும் பாட்டில், எழும்போதும் பாட்டிளோட தான் இருப்பானுங்க போல.. எதுவா இருந்த என்ன காலேஜ் போற சின்ன பசங்கள இப்படி ரத்தம் வர அளவு அடிக்கிறான் தண்ணிய போட்டுட்டு’, என்று மனதில் அர்ச்சனை செய்தாள்.

அவள் செல்லும் பேருந்து வர அதில் ஏற போனவள் ஒரு நிமிடம் நின்று அவனை பார்த்து “ரவுடி “, என்று அவள் கோபமாக சொல்ல, அது அவனுக்கு கேட்டு அவன் அதே கோபத்தோடு யார் என்று திரும்பி பார்க்க, அடுத்த நொடி அவனின் கோபம் அனைத்தும் பனித்துளியாய் கரைந்தன.

அவளை கண் இமைக்காமல் பார்த்தான். அவனின் பார்வையை உணர்ந்தவள் முகத்தை திருப்பிக்கொண்டாள். பேருந்து கிளம்பியதும், “ஏஞ்சல்”, என்றான் அந்த வார்த்தையில் தேனை தடவியது போல.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!