ஒரு வாரம் கடந்திருந்தது,.. இந்த ஒரு வாரமும், மூன்று வேளையும் வாய்க்கு ருசியாக அஜய்க்குச் சமைத்துப் போட்டாள் ஸ்மிருதி. இதைத் தவிர இருவருக்கும் இடையில் தேவைக்கு அதிகமான வார்த்தைகள் எதுவும் இல்லாமல் தான் இருந்தது, ஆனால் ஸ்மிருதியின் கோபம் முற்றிலும் தணிந்திருந்தது..
Advertisement
இப்படி போய்க்கொண்டிருந்த நாட்களில் அன்று ஸ்மிருதி மிதுர்ளாவின் வீட்டில் இருந்தாள்.
திகைத்த ஸ்மிருதியோ.. “அது…” என விழித்து, பதில் சொல்ல முடியாமல் மௌனமானாள்…
”என்ன சைலண்ட் ஆகிட்ட? தவறா எதுவும் நான் கேட்கலையே,” என்றாள் அவள் முகம் நோக்கி.
Advertisement
”இல்லக்கா அது… இனிமே தான் பார்க்கணும்,” எனச் சொல்லிச் சமாளித்தவள், “நீங்க மேரேஜ் முடிஞ்சதுமே கன்சீவ் ஆகிட்டிங்களாக்கா, இல்ல நாளாச்சா?” என்றாள் தெரிந்துகொள்ளும் ஆவலில்…
”ஹ்ம்ம்… மேரேஜ் ஆன நெக்ஸ்ட் மன்த் கன்சீவ்னு தெரிஞ்சது. எனக்கு ட்வென்ட்டி ஏஜ்ல மேரேஜ் ஆகிடுச்சு. சோ நான் கன்சீவ்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் என் ஹஸ்பண்ட் ரொம்பப் பயந்தாரு. பிரசவ காலத்துல ரொம்பக் கஷ்டப்படுவேன்னு. அவரை ஒவ்வொரு நாளும் சமாதானம் படுத்துறது தான் எனக்கு இன்னொரு வேலையா இருந்ததுன்னா பார்த்திக்கோயேன்,” என்றவள், “அவர் பயந்த மாதிரி எதுவும் நடக்காம எந்தவித சிரமத்தையும் கொடுக்காம எங்க பொண்ணு இந்த உலகத்துக்கு வந்தா. அன்னைக்கு தான் அவருக்கு ஒன்பது மாதமா ஏற்பட்ட பதற்றம் மொத்தமும் குறைஞ்சது,” என்று புன்னகையோடு கூறினாள் மிதுர்ளா…
”என் ஹஸ்பண்ட் மட்டும் இல்ல, தன் மனைவியை நேசிக்கிற எந்த ஒரு கணவனுக்கும் தன் மனைவியின் பிரசவ காலத்தைப் பற்றிக் கவலையாகத் தான் இருக்கும். அஜய் அண்ணா கூட அப்படித் தானே இருப்பாரு? அவர் மத்தவங்க நலன் மீதே நிறைய அக்கறையைச் செலுத்துவதா விகாஷ் சொல்லி கேட்டிருக்கேன். அப்படி இருக்க தன் மனைவி உன்கிட்டயும் அதிக அன்பைத் தானே வச்சிருப்பாரு? சொல்லு ஸ்மிருதி, உண்மை தானே?” எனக் கேட்க, அவள் பதில் சொல்லத் தெரியாமல் மௌனமானாள்…
அந்நேரம் குக்கர் விசில் அடிக்க, “நான் ஆஃப் பண்ணுறேன்க்கா,” என நகர்ந்து கொண்டாள் அவள்..
ஸ்மிருதிக்கு மிதுர்ளா கூறியது அவள் ஆழ்மனதை வருடிச் சென்றது. ‘அவருக்கு என்னைப் பிடிக்குமா என்ன? என் மேல அக்கறை இருக்கு, அதை என்னால புரிஞ்சுக்க முடியுது. அன்பு?’ என யோசித்தவள், ‘எதுக்காக என் மேல அன்பு வைக்கப் போறாரு? எனக்கு அவர் மீதோ, அவருக்கு என் மீதோ எப்போதும் அன்பு வரவே வராது. நாங்க கணவன் மனைவியாக இருக்கலாம், பட் இல்வாழ்க்கைக்குட்பட்ட கணவன் மனைவியா என்னைக்கும் வாழவே முடியாது. இது தான் மறுமணத்தின் நிதர்சனம்,’ எனத் தனக்குத்தானே முடிவெடுத்துக் கொண்டாள்…
”ஹேய் ஸ்மிருதி, என்ன பகல் கனவா? கனவுல யார் அஜய் அண்ணாவா?” எனச் சீண்டலுடன் கேட்டாள் மிதுர்ளா…
”அதெல்லாம் இல்லைக்கா, நான் வேறொன்றைப் பத்தி யோசிச்சிக்கிட்டு இருந்தேன்,” என்றாள்…
”உனக்கு வயசு ஒரு ட்வென்ட்டித்ரீ இருக்குமா?” என மிதுர்ளா கேட்க, “ஆமாக்கா, ஏன் வயசைப் பத்திலாம் கேட்கிறீங்க?” என்றாள் புரியாத பார்வையோடு…
”ம்ம்ம்… இது தான் கரெக்ட்டான ஏஜ். அண்ணா கிட்ட சொல்லி, பேபிக்கு ப்ளான் பண்ணுங்க. நாட்களைக் கடத்த நினைச்சா, அப்புறம் பின்னாடி வருத்தப்படுவீங்க, சொல்லிட்டேன்,” என்றாள் அக்கறையுடன் கூடிய கிண்டலில்.
’இந்த அக்கா வேற சிசுவேஷன் தெரியாமல் பேசிக்கிட்டு,’ எனத் மனதில் நினைத்தவள், “சரிக்கா அப்போ நானும் போய்ச் சமையல் வேலையைப் பார்க்கிறேன்,” என்றாள்..
”சரி சரி… அப்புறம் அந்த கத்தரிக்காய் பச்சடி, சூப்பர்னு சொல்லி விகாஷும் ஹாசினியும் ஒரே உன்னைப் பத்திப் பாராட்டு மழை தான். மறுபடியும் சமைச்சா, மறக்காம எங்க வீட்டுப் பசங்களுக்கு வந்து கொடுத்துடு. சின்னப் பொண்ணை விட பெரிய பையன் இருக்காரே, ஐயோ அவருக்குக்காவாவது மறக்காமல் வந்து தந்துடு,” என்றாள்…
”அக்கா… உங்களுக்கு ஒரு பொண்ணு மட்டும் தானே, பையன் எங்க இருக்கான்?” என ஸ்மிருதி குழப்பத்துடன் கேட்க, “நான் என் கணவரைத்தான் சொன்னேன். அன்னைக்கு குழந்தை மாதிரி தானே கத்தரிக்காய் பச்சடிக்காக ஹாசினிக்கிட்ட சண்டை போட்டுச் சாப்பிட்டாரு,” என்றாள், அவள் கூறியதை கேட்டு தன் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாத ஸ்மிருதி சத்தமாகச் சிரித்தாள். அவளுடன் சேர்ந்து மிதுர்ளாவும் சிரித்தாள்.
”ஐயோ என்னால முடியலக்கா, இதுக்கு மேல சிரிச்சா என் வயிறு வலிக்க ஆரம்பிச்சிடும் போல. நான் வரேன்,” எனச் சிரிப்புடன் அவளிடம் விடைபெற்றாள்.
அவள் தன் ஃபிளாட்டிற்கு வந்த நேரம் மணி பதினொன்றை காட்டியது. அஜய் வருவதற்கு முன்பே சமைத்து விட எண்ணி, சமையலில் இறங்கினாள். வழக்கம் போல் அன்றும் மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தான் அஜய்…
அவனுக்குப் பரிமாறி முடித்தவள், தண்ணீர் எடுத்து வந்து வைத்தாள். அஜய் சாப்பாட்டில் கைவிட்ட அந்த நேரம் சரியாக அவனின் போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது…
ஸ்விட்ச்சை அணைத்து விட்டு போனை எடுத்தவள், திரையில் ப்ரீத்தி என்று பெயர் வருவதைக் கண்டாள். இத்தனை நாள் ப்ரீத்தி ப்ரீத்தி என அவன் சொல்லி கேட்டவளுக்கு, அவள் யாரென்று தெரிந்துகொள்ள இன்று ஏனோ ஆர்வம் பிறந்தது…
போனை அஜய்யிடம் கொடுத்ததும், அவன் திரையில் வந்த ப்ரீத்தியின் பெயரைக் கண்டுகொண்டு, பாதி சாப்பாட்டில் எழுந்து, தனிமையான இடத்தில் பேசச் சென்றான். ‘இங்கேயே பேசுனா என்னவாம், நான் அப்படி என்னத்த ஒட்டு கேட்டுடப் போறேன்,’ எனச் சாதாரணமாகச் சொல்லிக் கொண்டவள், அவன் வருகைக்காகக் காத்திருந்தாள்…
அடுத்த பத்தாவது நிமிடத்தில் தான், அவன் மீண்டும் வந்து அமர்ந்தான். சாப்பாட்டில் அவனின் கவனம் இருக்க, இங்கு ஸ்மிருதிக்கு ப்ரீத்தியைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருந்தது. தான் கேட்க நினைப்பதைப் கேட்டுவிட எண்ணி, “ப்ரீத்தி யாரு?” என்றாள் மெல்ல…
”ஓஹ்…” என்றவள், ‘எதுக்காகப் பொண்ணைப் பி.ஏ.வா வச்சிருக்காரு, பையணை வச்சிருக்கலாம்ல,’ என மனதில் நினைத்துக் கொண்டாள். ஆனால் அஜய்யைப் பற்றி எதுவும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை…
”இன்னைக்கு வர நான் கொஞ்சம் லேட்டாகும். சோ, நீ சாப்பிட்டுத் தூங்கிடு, எனக்காக வெயிட் பண்ண வேண்டாம்,” வீட்டிலிருந்து கிளம்பும் போதே சொல்லிவிட்டு சென்றான் அஜய்,..
அவன் சென்றதும், தானும் வயிற்றை நிரப்பிவிட்டு, ஒரு குட்டி தூக்கத்தைப் போட்டாள் ஸ்மிருதி. அவள் எழுந்த நேரம் மணி ஆறைக் காட்டியது, ஃப்ரெஷ் ஆனவள், போனில் மூழ்கினாள். அந்த நேரம் வீட்டின் வெளிக்கதவு தட்டப்பட, சென்று திறந்தவள், ஹாசினியைக் கண்டு முகமலர்ந்தாள்…
”நீயாவது வந்தியே, வா எனக்குக் கொஞ்ச நேரம் கம்பெனி கொடு,” என்றாள் அவளை உள்ளே அழைத்து…
”என்ன ஆண்ட்டி, அஜய் அங்கிள் இன்னும் வரலையா?” என்றாள் வீட்டை நோட்டமிட்டபடி…
”எனக்குத் தெரிஞ்சி உன்னோட அப்பா, வேலையை பாதிலயே விட்டுட்டு வீட்டுக்கு ஓடி வந்துட்டாருன்னு நினைக்கிறேன்,” ஸ்மிருதி கிண்டல் செய்ய..
”ஆண்ட்டி உங்களை,” என முறைத்தவள், பின் அவளைக் கிச்சுகிச்சு மூட்டினாள்…
”ஹாசினி,… போதும்டா, ஆண்ட்டி பாவம்ல,” என்றவாறு கூச்சத்தில் சிரித்து விழ “அந்தப் பயம் இருக்கட்டும்,” என்று அவளை விடுவித்தாள், இருவரும் நேரம் போறது தெரியாமல், சிரித்து விளையாடிப் பொழுதைக் கழித்தனர். நேரமாகிவிட்டதை உணர்ந்து ஹாசினியை வீட்டிற்கு அனுப்பி வைத்தாள் ஸ்மிருதி…
இரவு உணவையும் முடித்துவிட்டு, படுக்கைக்கு வந்த நேரம், மணி இரவு பத்தைக் காட்டியிருந்தது. அவனுக்காகப் படுக்கையில் காத்திருந்தவள், வெகுநேரத்திற்கு பிறகு உறங்கி போனாள்…
மறுநாள் வானம் விடியலைத் தழுவியது. உறக்கத்திலிருந்து மீண்ட ஸ்மிருதி, தனதருகில் அஜய் இல்லாததைக் கண்டு, ‘இவர் இன்னும் வரலையா என்ன?’ என்று எண்ணியவள், அறையிலிருந்து வெளியே வந்தவளின் பார்வையில் அஜய் தென்பட்டான்.
பால்கனியில் மேல் சட்டை இல்லாமல் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தான் அவன். அவனை அந்நிலையில் பார்த்தவள், பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள். மறுகணமே ‘மறுபடியும் அவனைப் பார்’ என அவளது உள்ளுணர்வு சொல்வது போல் இருக்க, தலையை உயர்த்தி அவனின் மீது பார்வையைப் பதித்தாள்…
அவனின் விரிந்த மார்பு, அவன் அசைவுக்கு அசைந்து கொடுத்தது. வியர்வைத் துளிகள் மொட்டுகளாய் வழிய, அவனின் கட்டுடலைக் கண்ணிமைக்காமல் ரசித்தாள் அவள். அவன் திரும்பப் போகிற நிலையைக் கண்டவள், தன்னை நிதானத்திற்குக் கொண்டு வந்து, அறைக்குள் மறைந்து கொண்டாள்…
கட்டிலில் அமர்ந்தவளுக்கு இதயம் ஏனோ வேகமாகத் துடித்தது. இதயத்தின் பக்கம் தன் கரத்தினை வைத்து அழுத்தியவள், கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றாள். அந்த நேரம்,
“குட்மார்னிங்,” என்ற அஜய்யின் குரலில் கண்களை வேகமாகத் திறந்தாள்…
மென்புன்னகையுடன்அறையின் வாசல் பகுதியில் நின்ற அஜய்யைக் கண்டு மனம் அலைபாய்ந்தது அவளுக்கு. அவன் மேனியை இப்பொழுது டீஷர்ட் மறைத்திருந்தது. இருந்தாலும் ஏனோ அவன் முகத்தை அவளால் பார்க்க முடியவில்லை. ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது. அது நாணமா சங்கடமா என்று கூட அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை..
”குட் மார்னிங்,” பதிலுக்குச் சொல்லிவிட்டு, அவன் முகம் பார்க்காமல், “நான் டிஃபன் ரெடி பண்ணுறேன்,” எனச் சமையலறைக்கு வேக நடையுடன் சென்று விட்டாள்,..
காலை உணவைப் பரிமாறிவிட்டு, அவன் அலுவலகம் செல்லும் வரையில் அவன் முகம் பாராமலேயே இருந்து கொண்டவள், அவன் சென்றதும் பொத்தென்று படுக்கையில் வந்து விழுந்தாள்…
’என்ன ஆச்சு எனக்கு? நான் ஏன் இப்படி இருக்கேன்? அவரைப் போய் அவருக்கே தெரியாமல் பார்த்து வழியுறேனே இது தப்பில்லையா? இது அவருக்குத் தெரிஞ்சா என்னைப் பற்றி என்ன நினைப்பாரு? சீப்பான பொண்ணுன்னு நினைச்சிட மாட்டாரா? ச்சே… ஏதோ புண்ணியத்துல நான் பார்த்ததை அவர் பார்க்கல. தெய்வமே இதற்கு உனக்குப் பல கோடி நன்றி சொல்லிக்கிறேன்,’ என விட்டத்தைப் பார்த்துச் சொல்லியவள், ‘இனி இது போல நடக்கவே கூடாது, கேர்ஃபுல்லாவே இருக்கணும்,’ எனத் தனக்குத் தானே தைரியமூட்டிக் கொண்டாள்.
மதிய உணவிற்கு வந்த அஜய்யின் முகத்தைப் பார்க்க தடுமாறினாலும், மனதை ஒருநிலை படுத்திக் கொண்டவள்,.. “நைட் என்ன டைம் வந்தீங்க, நீங்க வந்தது எனக்குத் தெரியாது,” என்றாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனிடம்…
”இதை மார்னிங்கே கேட்பேன்னு நினைச்சேன்,” என்றான்…
’காலைல தான் ஏதோ பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்தேனே, இதுல எங்க பேசலாம் முடிஞ்சது,’ என்றாள் மனதினுள்…
”என்ன யோசனை?”
”அதெல்லாம் ஒன்னுமில்ல, அது மார்னிங் கேட்க மறந்துட்டேன் அதான்,” என இழுத்தாள்.
”நைட் ட்வெல்வ் ஓ கிளாக் வந்தேன். நீ நல்லாத் தூங்கிட்டு இருந்த, உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு விட்டுட்டேன்,” என்றான்.
”நைட் பன்னிரெண்டு மணி வரைக்கும் என்ன பண்ணுவீங்க?” என்றவள், அவன் தன்னை உற்றுப் கவனிப்பதை கண்டு..”சாரி, கேட்கணும்னு தோணுச்சு அதான் பட்டுன்னு கேட்டுட்டேன்,” என்றாள்…
புன்னகைத்தவன்… “இன்ஜினியர் **** ஏரியா பில்டிங் கட்ட ப்ளூ பிரிண்ட்டோட வந்திருந்தார், வொர்க் விஷயமா அவர்கிட்ட நிறையப் பேச வேண்டியது இருந்தது, அதான் லேட்டாகிடுச்சு,” என்றான்… “ஓகே ஓகே,” என்றவள் அவனுக்குப் பரிமாறுவதில் கவனம் செலுத்தினாள்….