இரவு படுக்கையில் படுத்த ஸ்மிருதிக்கு, உறக்கம் முற்றிலுமாய் விடுபட்டுப் போனது. இன்று பயத்தினால் அஜய்யைக் கட்டிக்கொண்டது தான் அடிக்கடி நினைவில் வந்து இம்சை செய்தது. கண் மூடினால் அந்த நிகழ்வே கண்முன் வந்து வந்து போக, அவளையும் மீறி அவள் இதழ்களில் புன்னகை.
Advertisement
அன்றைய இரவு பொழுது ஒளிவழியாய் கடக்க, மறுநாள் காலைவேளையும் வழக்கமாகத் தான் ஆரம்பமாகியது, அவன் அலுவலகம் சென்றதும் தன் மதிய சமையல் வேலையும் முடித்தவள், பால்கனியில் நின்று போகும் வருபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவும் அவளுக்கு அழுத்துப்போக, அறைக்கே மீண்டும் வந்தாள்.
வந்தவளுக்கு என்றும் படாத அஜய்யின் அந்தப் புகைப்படம் இன்று கண்களின் பார்வையில் பட்டது. மேஜையின் மீதிருந்து அதனை கையில் எடுத்தவள், அதனை ரசனையுடன் பார்த்தாள்.
Advertisement
தன்னை மறந்து விரல்களால் அவனின் முகத்தை வருடியபடி இருந்தவளிம் இதழில் புன்னகை பூக்க. “ஹேண்ட்சம் அண்ட் ஸ்மார்ட் பாய்,” என அவளின் உதடுகள் இணைந்து சொல்ல, சற்று யோசித்து நாக்கைக் கடித்தவள், ‘நான் எப்போதியிலிருந்து இப்படி மாறினேன்? அவரைப் பார்த்து ரொம்பவும் வழியுறேனோனு தோணுது. ப்ச்… என்ன பண்ணுறது? ரொம்ப நல்லவரா இருக்காரு, அதே சமயம் ஸ்மார்ட்டா, ஹேண்ட்ஸமா… இவரை மாதிரி ஒருத்தரை என் லைஃப்ல நான் பார்த்ததே இல்லை, இப்போதெல்லாம் அவர் கிட்ட நிறைய நேரம் பேசிக்கிட்டு இருக்கணும்னு தோணுது, பட் அவர் தவறா எடுத்துப்பாரோனு தயக்கமாவும் இருக்கு. ஏன் புதுசா இப்படியெல்லாம் தோணுது? அவர் ஒரு சின்ன சிரிப்பு என்னைப் பார்த்து சிரிச்சா கூட உடம்பெல்லாம் சிலிர்த்துப் போகுது. என்கிட்ட அவர் பேசிக்கிட்டே இருக்க மாட்டாரான்னு மனசு கிடந்து தவிக்கிது,’ என வாய்விட்டே சொல்லியவள், “ஒரு வேலை நான் அவரை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேனா?” என யோசித்த நேரம் யஷ்வந்த்தின் முகம் நிழல் போல வந்து போனது.
Advertisement
‘யஷ்வந்த்… அவரை விரும்புன நான் எப்படி இவரை விரும்பலாம்? இல்ல, இதெல்லாம் சரி இல்ல, எனக்கு இப்படியொரு நினைப்பு வந்திருக்கவே கூடாது, இது ரொம்பப் பெரிய தவறு,’ எனப் பதறியவள், அடுத்த கணமே “இது நிஜமாவே தவறு தானா? தவறா இருந்தா எல்லாரும் சேர்ந்து எதற்காக எங்களுக்கு ரீமேரேஜ் பண்ணி வைக்கணும்? அவருக்கு இந்த விஷயம் தெரிந்தா கோபப்படுவாரோ? நிச்சயமா கோபம் தான் படுவார். அவர் அவரோட ஃபர்ஸ்ட் வொய்ஃபை தானே நேசித்திருப்பார், அப்புறம் எப்படி என்னை? ப்ச்… எனக்குள்ள எதற்காக இந்த மாதிரி எண்ணம் எழுந்தது? பல விஷயத்துல அவர் என்னை கவர்ந்து இருக்கிறாரு ஸ் அதனால எனக்குள்ள இப்படி ஒரு எண்ணம் வந்துவிட்டதா? எது எப்படி இருந்தாலும், நான் செய்றது சரியில்லைனு தோணுது.”
Advertisement
”எனக்கு அவர் மேல இப்படியொரு உணர்வு வந்ததுன்னு அவருக்கு எப்போதும் தெரியக் கூடாது. இனி தான் நான் கேர்ஃபுல்லா இருக்கணும், அவர் கிட்டருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கணும்,” என பலவாறாக யோசித்துத் தீர்க்கமான ஒரு முடிவை எடுத்தாள்…
அன்று மதிய உணவிற்கு ஒரு மணிக்கு வர வேண்டிய அஜய், மாலை ஐந்து மணிக்குத் தான் வந்தான். வேலை அதிகமானதால் நேரமாகிவிட்டது எனக் காரணத்தைச் சொல்லியவன், அவள் பரிமாறிய உணவை உண்டுவிட்டு எழுந்தவன்,
சோஃபாவில் அமர்ந்து டீவி பார்த்துக்கொண்டிருந்த ஸ்மிருதியின் அருகில் வந்தான்..
“நான் டெரர்ஸ்க்கு போறேன், நீயும் வரியா?” என்றவன், “நீ அங்கப் போனதில்லைல, வீட்டுக்குள்ளேயே இருக்க, வா போயிட்டு வரலாம்,” என உரிமையாக அழைத்தான்.
படர்ந்து விரிந்து காணப்பட்டது அந்த இடம். மழைக்காலம் என்பதால் ஜில்லென்ற காற்று இருவரையும் வருடிச் சென்றது.
அதன் மையப்பகுதியில் நீச்சல் குளம் ஒன்றுஇருந்தது… ”இந்த ப்ளேஸ்க்கு யாரும் வர மாட்டங்களா?” என்றாள் யாரும் அங்கு இல்லாதது கண்டு…
”ஹாலிடேஸ் அன்னைக்குத் தான் வருவாங்க, மத்த டைம் வெறிச்சோடி தான் கிடக்கும்,” என்றான் அஜய்…
இருவரும் தடுப்பு சுவரின் பக்கம் செல்ல, ஸ்மிருதி கீழ் பகுதியை குனிந்து பார்வையிட்டாள். சுற்றும் முற்றும் இருந்த அனைத்து இடங்களையும் பார்வையால் சுழழவிட்டபடி பார்த்துக் கொண்டிருந்தவள்,.. ”டுமாரோ ஈவ்னிங் என் ஃபிரண்ட்க்கு ரிசப்ஷன், சோ,” என இழுத்தவன், “நீ என்கூட வருவியா?” என்றான் அவ்விடத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த ஸ்மிருதியிடம்…
அவன் சொல்லில், அவன் முகம் பார்த்தவள், “ஹ்ம்ம்… வருவேனே,” என்றாள் மலர்ந்த முகத்துடன்.
”ஓகே…” என்பதோடு நிறுத்திக்கொண்டவனிடம், “உங்களுக்கு என்ன ஏஜ்?” என்றாள் கேள்வியாக…
”இப்போ என் ஏஜ் எதுக்கு?” என காரணத்தைக் கேட்டவன், “ட்வென்ட்டி நைன்,” என்றான் அவள் கேள்விக்குப் பதிலாய்.
”29னா, கிட்டத்தட்ட உங்க ஃபிரண்டுக்கும் அதே ஏஜ் தானே இருக்கும், இப்போ தான் அவருக்கு மேரேஜ் ஆனதா?” என்றாள் குழப்பமாய்…
”இல்ல, டூ இயர்ஸ் முன்னாடி அவனுக்கு மேரேஜ் ஆகிடுச்சு பட் பெங்களூர்ல. அவனோட நேட்டிவ் பெங்களூர் அதனால அங்கே தான் மேரேஜ் பண்ணிருக்கான், இப்போ தான் இங்க வந்திருக்கான், பிரண்ட்ஸ் யாரும் அவனோட மேரேஜ்ல கலந்துக்க முடியல, அதான் இங்க ரிசப்ஷன் அரேன்ஜ் பண்ணிருக்கான்,” என்றான்…
”அண்ணாவும் வருவாரா?” என்றாள் ஸ்மிருதி…
”இல்ல… இவங்க என்னோட காலேஜ் ஃபிரண்ட்ஸ். விஷ்ணுக்கு என் காலேஜ் பிரண்ட்ஸ் பத்தித் தெரியாது, அறிமுகம் ஆகிக்கிறதுக்கான சந்தர்ப்பமும் கிடைக்கல,” என்றான்…
”யூஎஸ்ல,” என்றவன், “என் டேடோட கம்பெல்ல, அவர் விருப்பத்திற்காக அங்க படிப்பை முடிச்சேன்,” என்றான்…
’இவர் அப்பா உயிரோட இல்லைனு, எப்போவோ யாரோ சொல்லி காதுல விழுந்த மாதிரி ஒரு ஞாபகம்,’ என மனதில் நினைத்தவள், மீண்டும் ஏதோ கேட்க வந்த நேரம், “அஜய்… நீங்க இங்க தான் இருக்கீங்களா?” என்ற குரலில் இருவரும் ஒன்றாகக் குரல் வந்த திசையில் திரும்பினர்.
விகாஷ் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். “வாங்க விகாஷ்,” என்றான் அஜய்.
”என்ன டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என அவர்கள் இருவரையும் பார்த்து கேட்டான் விகாஷ்.
”அப்படியெல்லாம் எதுவும் இல்லண்ணா, அது சரி நீங்க என்ன இங்க?” என்றாள் ஸ்மிருதி.
”ஆபிஸ் விட்டு சீக்கிரமே வீட்டுக்கு வந்தா, டெரர்ஸ்க்குத் தான் வருவேன். என்னோட ஃபேவரைட் ப்ளேஸ்னு கூட சொல்லலாம்,” என்றவன், “வீட்டில ஹாசினி எதுக்கோ தையா தக்கான்னு குதிச்சிட்டு இருந்தா, அதான் நைசா நழுவி ஓடி வந்துட்டேன்,” என்றான்.
அதனை கேட்டு சிரித்தவள், “பொண்ணுக்கே இவ்வளவு பயமா, பையனா இருந்தா உங்க பொழப்பு இன்னும் சிரிப்பா சிரிச்சிடும் போலயே,” என்றாள் கிண்டலாக.
”போங்கக்கா, எப்போதும் உங்களுக்கு அதே நினைப்பு தான்,” என்றவள், “சரிக்கா, டயர்டா இருக்கு, நான் கிளம்புறேன். நீங்க ஹாசினியைப் பாருங்க,” என தனது ஃபிளாட்டிற்குள் சென்றாள்.
மறுநாள் அஜய் நண்பனின் வரவேற்பு விழாவிற்கு போவதற்காக அஜய் மற்றும் ஸ்மிருதி இருவரும் தயாராகினர்.
ஸ்மிருதிக்காக ஹாலில் காத்திருந்தான் அஜய். அதே நேரம் அறையிலிருந்து வெளிவந்தாள் ஸ்மிருதி…
மெரூன் கலர் பட்டுப்புடவையில், அதற்கு ஏற்ற ஜாக்கெட்டுடன், லூஸர் ஹேர், கழுத்தில் மாங்கல்யச் சங்கிலியுடன் சேர்ந்து, சிறிய அளவிலான மெரூன் நிறக் கற்கள் பதித்த ஃபேன்சி நெக்லஸ், அதற்கு மேட்சாகத் தோடு, கைகளிலும், கற்கள் பதித்த வளையல்கள் எனச் சிறிது ஒப்பனைகளோடு, அழகியாய் வந்து நின்றாள்…
அவனைப் பார்த்த அஜய்யின் கண்கள் ஒரு நிமிடம் இமைக்க மறந்தது. ஸ்மிருதிக்கும் அவனின் பார்வை உள்ளுக்குள் ஏதோ செய்ய, பார்வையை தாழ்த்திக் கொண்டவள்,..”போலாமா?” என்றாள்,..
தொண்டையை செருமிக் கொண்டு..”ஹ்ம்ம்…” என்றவன், அவளுடன் நடந்தான். வண்டியில் இருவரும் ரிசப்ஷன் நடக்கும் இடத்தை நோக்கி பயணித்தனர்.
”ஃபாரிங்ல படிச்சதா சொன்னீங்களே, அப்படினா அங்க எல்லாரும் ரிச்சா தானே டிரஸ் பண்ணுவாங்க, கோட் சூட் மாதிரி, நீங்க நார்மல் ட்ரஸ்ல வறீங்க?” என தனது சந்தேகத்தை முன்வைத்தாள் ஸ்மிருதி…
”உண்மை தான், பட் இந்தத் தடவை பிரண்ட்ஸ் யாரும் கோட்ல வரக் கூடாது, அது தான் ரூல்,” என்றான்.
”ஏன் அப்படி?” என்றாள் குழப்பமாய்.
”பெருசா ரீசன் எதுவும் இல்ல, கோட்ல வந்தா பிஸ்னஸ் மீட்டிங்க்கு வர்ற மாதிரி இருக்குன்னு வினய் சொன்னான், படிப்பு முடிந்து நாங்க மீட் பண்ணுன நாட்களில் எல்லாம், ஃபேமிலி மேட்டரை விட, பிஸ்னஸை பத்தி தான் அதிகமா பேசுவோம். சோ மறந்தும் பிஸ்னஸைப் பற்றிப் பேசக் கூடாது, அதற்கு நார்மல் ட்ரஸல வரணும்னு சொல்லிட்டான்,” என்றவன், “அண்ட் வினய் யார்னு உனக்குத் தெரியாதுல, அவனும் என்னோட பிரண்ட், அதோட நம்ம கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்ஸோட ஜி.எம்’மும் கூட…” என்றான்…
”ஓஹ்…” என்றவள், “நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் இந்த கன்ஸ்ட்ரக்க்ஷன்ஸ் ஸ்டார்ட் பண்ணீங்களா?”
”இல்ல…. வினய் இப்போ சிக்ஸ் மன்த்ஸா தான் என் கூட ஒன்னாயிருக்கான், என்னால தனியா மேனேஜ் பண்ண முடியலங்குறது ஒரு பக்கம், வினய் சும்மா தான் இருந்தான், என் கூட ஜாயின் பண்றேன்னு கேட்ட போது என்னால அவாய்ட் பண்ண முடியல. சோ அவன் விருப்பத்திற்கேற்ப ஜி.எம். பதவில இருக்கான். அவன் என்கூட சேர்ந்ததுக்கு அப்புறம் எனக்கு ரொம்ப ஹெல்ப்புல்லா இருந்தான். என்னோட பாதி வொர்க் அவனால தான் குயிக்கா முடிஞ்சிருக்கு,” என்றான்…
”உங்களுக்கு எவ்ளோ பிரண்ட்ஸ் இருக்காங்க?”
”டோட்டல் பண்ணி சொல்லணும்னா கொஞ்சம் கஷ்டம் தான்,” என்றவன், “எல்லாரையும் விட வொன் ஆஃப் தி பெஸ்ட் ஃபிரண்ட்னா விஷ்ணுவைத் தான் சொல்லுவேன்,” என்றான் சிலிர்ப்புடன். இதைக் கேட்டு ஸ்மிருதியின் முகத்திலும் மலர்ச்சி..
”ஏன் அண்ணா மட்டும் அவ்வளவு ஸ்பெஷல்?” என்றாள் ஆர்வமாய்.
”என் ஸ்கூல் லைஃப்ல எனக்குக் கிடைச்ச பெஸ்ட் அண்ட் ஃபர்ஸ்ட் பிரண்ட் விஷ்ணு தான். சின்ன வயசுலயே என் மேல நிறைய அக்கறை, பாசம்… ஃபிரென்ஷிப்பையும் தாண்டி ஒரு உறவு இருப்பது போல தோணும். நான் ஹேப்பியா இருக்கேனா கவலையா இருக்கேனான்னு என் முகத்தைப் பார்த்தே கண்டுபிடிச்சிடுவான். கவலையா இருக்கும் நேரத்தில கொஞ்ச நேரத்திலேயே என் மூடை மாத்திச் சிரிக்க வச்சிடுவான். எத்தனையோ துக்க சம்பவம் நடந்திருக்கு, அந்த டைம்ல எனக்குப் பக்கபலமா இருந்து என் கவலையைப் போக்கிருக்கான். அவன்கிட்ட ஏதோ மேஜிக் இருக்குனு தான் எனக்குத் தோணும்,” என்றான்…
”ஓஹ்…” என்றவள், “உங்களுக்கு பிரதர்ஸ், சிஸ்டர்ஸ் லாம் இல்லையா?” என ஸ்மிருதி கேட்க, வியப்புடன், “என்ன கேட்ட நீ?” என்றான்…
”இல்ல,.. உங்களுக்குத் தம்பி தங்கச்சினு யாரும் இல்லையானு கேட்டேன்,” என்றாள் இந்த முறை சிறிது தயக்கத்துடன்…
பதில் சொல்ல முடியாமல் மௌனமானவள், அமைதியாய் வர, “நாம வர வேண்டிய ப்ளேஸ் வந்துடுச்சி,” என்றான் அஜய்.
குனிந்திருந்த அவள் தலையை நிமிர்த்தி அந்த இடத்தைப் பார்த்தாள். ரிசார்ட் போலக் காணப்பட்டது அந்த இடம். மையத்தில் ஒரு பெரிய பில்டிங் இருக்க, அதனைச் சுற்றிப் புல்வெளிகளால் படர்ந்திருந்தது. இருட்டில் அங்கு போடப்பட்டிருந்த வண்ண விளக்குகள் அவ்விடத்திற்கு மேலும் அழகூட்டியது. அதன் ஒரு இடத்தில் ரிசப்ஷன்க்காக மேடை அமைக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தைப் பார்த்தபடியே வண்டியிலிருந்து இறங்கினாள் ஸ்மிருதி….