Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா 23

அத்தியாயம் 23

​நிவிதா கூறியதை கேட்டதிலிருந்து ஸ்மிருதிக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது, விழிகள் நீரைச் சுரந்தது. ‘அவங்க சொன்னது உண்மையா இருக்குமா?’ என நினைக்கத் தோன்றிய அவளின் மனதைச் சிரமப்பட்டு அடக்கியவள்,.. ‘இல்ல… அவர் அப்படிப்பட்டவர் இல்ல, அவங்களுக்குள்ள ஏதாச்சும் பிராப்ளம் இருக்கலாம், அதான் தேவை இல்லாத பழியை அவர் மேல சுமத்திட்டுப் போறாங்க, மறுபடியும் ஒரு தடவை நான் அவரை நிச்சயமா தப்பா நினைக்க மாட்டேன், கண்முன் பார்க்காத எந்த ஒரு விஷயத்தையும் நான் நம்பத் தயாரா இல்ல, அவர் மேல எனக்கு நிறையவே நம்பிக்கை இருக்கு,’ எனத் தீர்க்கமாக யோசித்து, முடிவெடுத்தாள்…



Advertisement

​”ஸ்மிருதி இங்க தனியா என்ன பண்ணுறீங்க?” என ஸ்மிருதியின் அருகில் வந்தாள் சிந்தியா…

​தன்னைச் சமன் செய்துகொண்டு, “ஒன்னுமில்ல,” என்றவள் அவள் கையிலிருந்த குழந்தையை வாங்கிக்கொண்டாள். “இவன் நேம் என்ன?” என கேட்டபடி குழந்தையைக் கொஞ்சினாள் ஸ்மிருதி…

Advertisement

Advertisement

​”வருண்,” என்றாள் சிந்தியா.

அந்நேரம் அஜய்யும் அவர்களினருகில் வந்தான்.

Advertisement

​”என்னடா வொய்ஃபைப் பிரிஞ்சிக் கொஞ்ச நேரம் கூட இருக்க முடியலயா, தேடி வந்துட்ட?” எனக் கிண்டலாகக் கேட்டாள் சிந்தியா.

​சிரித்தவன், “ஆமா… உங்கள நம்பி எப்படி அவள விடுறது? உங்க கேரக்டர் அவளுக்கு ஒட்டிக்கிட்டா எனக்குத் தானே டேஞ்சர்,” என்றான் இவனும் வாரியபடி…

​அவனை செல்லமாக முறைத்த சிந்து.. “உன்னை,” என அடிக்க வந்தவள், “உன் வொய்ப் இருக்கானு விடுறேன்,” என்றாள். இவர்களின் கிண்டலை கண்டு சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டாள் ஸ்மிருதி.

​”ஹ்ம்ம்… உங்க லைஃப் எப்படி போகுது, எல்லாம் ஓகே தானே?” என்றாள் இருவரையும் பார்த்து.

​”அதெல்லாம் ஓகே தான்,” என்றான் அஜய்…

​”ஓகே… அப்போ என் பையனுக்குச் சீக்கிரம் பொண்ணைப் பெத்துக் கொடுக்கச் சொல்லு உன் வொய்ஃப்கிட்ட. ஃபியூச்சர்ல நாம சம்பந்தி ஆகிடலாம்,” என்றாள் சிந்து…

ஸ்மிருதிக்குத் தான் கூச்சமாக இருந்தது, அவள் கன்னங்கள் சிவந்து போனது..

​

​”யாருப்பா சம்மந்தம் பண்ணப் போறது?” என்று கேட்டபடி வந்தான் வினய். அவனுடன் நிவிதாவும் வந்தாள். ஸ்மிருதிக்கு ஏனோ அவளைப் பார்க்கவே பிடிக்கவில்லை, அவளின் புறம் திரும்பாமலேயே இருந்து கொண்டாள்…

​”நானும் அஜய்யும் தான் ஃபியூச்சர்ல சம்மந்தம் பண்ணப் போறோம்,” என்றாள் சிந்தியா.

​”ஏய் சிந்து, உனக்கே இது ஓவரா தெரியல? என்ன முன்னாடியே அப்ளிகேஷன் போட்டு வச்சிக்கிரியா?” என்றான் வினய்.

​”அப்படியும் கூட வச்சிக்கோ,” என்றாள் தோள்களைக் குலுக்கி.

​”அவனுக்குப் பையன் பொறந்தா என்ன பண்ணுவ?” என்றான் வினய்…

​”சிம்பிள்,.. அடுத்த ஒரு வருஷத்திலயோ ரெண்டு வருஷத்துலயோ நான் பொண்ணு பெத்து, அப்புறம் சம்மந்தம் பண்ணிக்குவோமே,” என்றாள் பழிப்பு காட்டியபடி…

​”அது சரி,.. அப்போ நீ ஒரு முடிவோடு தான் இருக்க,” என்றான் வினய்…

​”என்னை விட்டுட்டு என்ன பேச்சு இங்க?” என்றவாறு வந்தாள் ப்ரியா.

​”ஹ்ம்ம்… சிந்து வீட்டுல அவ மாமியாருக்கு மேக்கப் போடனுமாம், உன்னைக் கூப்பிடுறங்களாம்,” என்றான் வினய்…

​”ரியல்லி?” என்றாள் சிந்துவைப் நோக்கிய ப்ரியா.

​”ஏமா மேக்கப் பைத்தியம், சும்மா சொன்னேன். அது சரி என்ன இன்னைக்கு உன் ஃபேஸ்ல உள்ள பிரைட்னஸ் குறையுது,.. மேக்கப் கூடக் கம்மியா இருக்கு,” என்றான் வினய் சந்தேகமாக…

​”ப்ச்… என் ஸ்வீட் ஹார்ட் ஃபாரிங்ல இருக்கான்ல அதான்,” என்றாள் ப்ரியா வாடிய முகத்துடன்…

​”ஓஹ்… ஆமால, இங்க இருக்கிறவங்கள்ல நீ மட்டும் தான் உன் ஹப்பி இல்லாம வந்திருக்க, சோ சேட்,” என்றான் வினய்.

​”போடா,… என்னை வெறுப்பேத்தாத,” என்றாள் ப்ரியா.

​”இங்க என்னடா பண்ணுறீங்க, சாப்பாடு நேரம் வந்துடுச்சு, வாங்க சாப்பிடலாம்,” என்றபடி வந்தான் சந்துரு…

​”இந்த சோத்து மூட்டை இன்னும் திருந்தவே இல்லை,” என்றாள் சிந்தியா…

​”ஏய் யாரைப் பார்த்து சோத்து மூட்டைன்னு சொல்லுற?” எனச் சீறினான் சந்துரு…

​”உன்னை தாண்டா,” என்றாள் சிந்து.

​”போடி குள்ளச்சி, உன்னை அப்புறம் கவனிச்சிக்கிறேன்,” என்ற சந்துரு, “என்னங்கடா, சாப்புடுற டைம்ல இங்க என்ன மீட்டிங்?” என்றான்..

​”ஃபியூச்சர் லைஃப் பத்தி போயிட்டு இருக்கு, சந்து,” என்றாள் நிவி.

​”அப்படியா,” என்றவன், “எனக்குப் ஃபர்ஸ்ட் பேபி பொண்ணா பிறந்துட்டா, அதுவும் நம்ம குரூப்லயே எனக்குத் தான் ஃபர்ஸ்ட் குழந்தை பிறந்தது, சோ அவளை நம்ம குரூப்ல யாருக்கும் கட்டிக் கொடுக்க முடியாது,” என்றவன், “இதுக்காகக் கவலைப்படாதீங்க, இப்போ மறுபடியும் என் வொய்ஃப் கன்சீவா இருக்கா. இப்பவும் பொண்ணா இருந்தா, நான் இந்த வருண் பையனுக்கு மட்டும் கட்டித் தரவே மாட்டேன், என்னைக் கடிச்சி வச்சிட்டான் பொடி பையன்,” என்றான் சந்துரு…

​”எனக்கு ஒன்னும் உன் பொண்ணு மருமகளாகத் தேவை இல்லை, நான் ஆல்ரெடி அஜய் கிட்ட அப்ளிகேஷன் போட்டு வச்சிட்டேன்,” என்றாள் சிந்து வேகமாய்…

​”அடிப்பாவி எவ்வளவு ஃபாஸ்டா இருக்க!” என்றவன், “ஹேய் பிரி, உன் பையன் பொறந்து 4 மன்த் தானே ஆகுது, நாம வேணும்னா ஜாயின்ட் ஆகிக்கலாமா?” என்றான் சந்துரு…

​”நான் இப்போ வாக்குத் தர மாட்டேன்பா, என் பையன் ஃபியூச்சர்ல உன் பொண்ணையே கட்டிக்கிறேனு சொல்லிட்டா எனக்கு நோ அப்ஜெக்ஷன்,” என்றாள் பிரியா…

​”டேய்… இங்க என்னடா நடக்குது, இன்னும் குழந்தைங்க பிறக்கவே இல்ல, அதுக்குள்ள இப்படியா? இருந்தாலும் உங்க கொசுத் தொல்லை தாங்க முடியலப்பா,” என்றான் வினய்…

​”அது சரி,.. நீ எப்போடா குட் நியூஸ் சொல்லப் போற?” என்றான் அஜய்.

​”பார்க்கலாம் டா, இப்போ அதுக்கு என்ன அவசரம்?” என்ற நேரம் ரித்திக் வந்து சேர்ந்தான்…

​”என்னடா…. பஃபே ரெடியா இருக்கு, வரலையா நீங்க?” என்றான் ரித்திக்.

​”சரி வாங்க வாங்க சாப்பிடலாம்,” என்றான் சந்துரு. நண்பர்கள் மொத்தமாய் உணவு உண்ணும் இடத்திற்கு வந்தனர்…

​

​அந்தப் புல்வெளி நிறைந்த பகுதியில் முப்பது பேர் அமர்ந்து உண்ணும் அளவிற்க்கு உணவு மேஜை போடப்பட்டிருந்தது. தங்களுக்கு விருப்பப்பட்ட உணவைச் சாப்பிட்டுக் கொள்ள பஃபே உணவுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

நண்பர்கள் அனைவரும் தங்கள் இணையுடம் சேர்ந்து, விருப்பட்ட உணவைத் தேர்வு செய்து சாப்பிட அமர்ந்தனர்…

​”அஜய் இவர் தான் என் ஹஸ்பண்ட்,” என்றாள் எதிர் திசையில் அமர்ந்திருந்த சிந்தியா தன் கணவரைக் காண்பித்து.

​”தெரியும்… நாங்க இன்ட்ரோ ஆகிட்டோம்,” என்றான் அஜய்.

​”என்ன பாஸ், பொண்ணு மாப்பிள்ளையை விட நீங்களும் உங்க வொய்ஃபும் தான் பிரைட்டா ஒரே கலர்ல ஜொலிக்கிறீங்க, சூப்பர் பாஸ்,” என்றான் சிந்தியாவின் கணவர். ஸ்மிருதிக்குத் தான் இங்கு ஐஸ்கட்டியில் உட்கார்ந்திருப்பது போல ஜிவ்வென்று இருந்தது…

​சிந்தியாவும் அவளின் கணவரும் மாறி மாறி செல்ஃபி எடுத்துக்கொண்டனர். “ஹேய் அஜய்,… எங்களை ஒரு போட்டோ எடு, ஃபுட்டோட சேர்ந்து எடு,” என்றாள் சிந்தியா. அவனும் சம்மதமாகத் தனது போனில் அவர்களைப் புகைப்படம் எடுத்து, வாட்ஸ் அப்பில் சென்ட் பண்ணினான்.

​”அங்க பாருங்க எல்லாருமே போட்டோ எடுத்துக்கிறாங்க, நீங்க ரெண்டு பேரும் மட்டும் என்ன சப்பாட்டுலேயே குறியா இருக்கீங்க?” என்ற சிந்தியா,..​”இரு, நானே உங்களை எடுக்கிறேன், ரெண்டு பேரும் கொஞ்சம் க்ளோசா வாங்க,” என்றாள் சிந்து.

இருவரும் உரசிக்கொள்ளாத வகையில் சிறிது நெருங்கி அமர, “என்னடா, அவ உன்னோட வொய்ஃப் தானே, ஏதோ பக்கத்து வீட்டுக்காரி கூட உட்கார்ந்திருக்க மாதிரி பட்டும் படாம இருக்க? உரிமையா சோல்டர்ல கையப் போடு, இதையெல்லாம் நான் சொல்லனுமா?” என்றாள் சிந்து.

​இங்கு ஸ்மிருதிக்குத் தான் சங்கடமாக இருந்தது. அன்று அஜய்யை அணைத்துக் கொண்டது வேறு அவள் அனுமதி இல்லாமலேயே நினைவில் தோன்ற முகம் குங்குமமாய் சிவந்தது….

​பின்னர் தோளில் கைபோடவில்லை என்றாலும் இருவரின் தோள்களும் உரசிக்கொள்ள, புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்தனர். அந்தப் போட்டோவில் ஸ்மிருதியின் சிவந்த முகத்துடனே பதிவாகியது…

​”இன்னைக்கு ரொம்ப என்ஜாய் பண்ணோம், இந்த மாதிரி ஒரு நாள் மறுபடியும் வருமான்னு கூட எனக்குத் தெரியல. இந்த ப்ளேசை விட்டும் உங்களை விட்டு போக மனசில்லல தான் பட் போய்த் தானே ஆகணும். நாங்க கிளம்புறோம்,” என்றான் அஜய்.

அதே நேரம் மற்றவர்களுடனும் விடைபெற நண்பர்கள் ஒருவருக்கொருவர் கட்டி அணைத்துக்கொண்டு விடைபெற்றனர்.

​ஸ்மிருதிக்கும் அதே உணர்வு தான், சிறிது நேரம் பழகியிருந்தாலும் அவர்கள் அனைவரையும் மிகவும் பிடித்துப் போயிருந்தது. பிரியா, நிவிதா சிந்தியாவுடன் போன் எண்களைப் பரிமாறிக்கொண்டவள், அஜய்யுடன் கிளம்பினாள்.

​

​வீட்டிற்கு வந்ததும் இரவு உடைக்கு மாறி களைப்பில் இருவரும் உறங்கிப் போயினர். நிவிதா சொன்னதை ஒரு பொருட்டாகக் கூட எண்ணாமல், ஸ்மிருதி அதனைப் பற்றிச் சிறிதும் யோசிக்காமல் விட்டுவிட்டாள்.

​இரண்டு நாட்கள் வழக்கம் போலத் தான் கடந்தது. அன்று இரவு ஸ்மிருதி ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். தொண்டை வறண்டு போனதால் நித்திரையிலிருந்து விழித்துக்கொண்டவள், சைடு டேபிளில் இருந்த தண்ணீரைக் குடித்து விட்டு, மீண்டும் படுக்கப் போன நேரம், அப்போது தான் அஜய் படுக்கையில் இல்லாததைக் கண்டு குழம்பினாள்…

​மணியைப் பார்க்க, நள்ளிரவு 2.30 எனக் காட்டியது. ‘இந்த டைம்ல எங்கே போனார்?’ என யோசித்தவள், பாத்ரூமின் கதவின் புறம் திரும்ப, அது வெளிப்பக்கம் பூட்டியிருப்பது தெரிந்தது.

​படுக்கையிலிருந்து எழுந்தவள், அறையை விட்டு வெளியே வர, அஜய் பால்கனியில் நின்று யாருடனோ போனில் உரையாடிக் கொண்டிருந்தது தெரிந்தது. ‘இந்த டைம்ல யார்கிட்ட பேசுறார்?’ என யோசித்தவளுக்கு, மனம் நிவிதா சொன்னதை நோக்கி சென்றது,

​தான் நினைப்பது உண்மையாக இருக்கக் கூடாது என இறைவனிடம் வேண்டிக்கொண்டவள், அவன் பார்வையில் படாத அளவிற்கு, அவன் என்ன பேசுகிறான், யாருடன் பேசுறான் என்பதைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் சிறிது அருகில் சென்று அவன் பேசுவதைக் கேட்கத் தொடங்கினாள்….

​”நான் தான் இருக்கேன்ல நான் எல்லாத்தையும் பார்த்துகிறேன், நீ எதைப் பத்தியும் நினைக்காம ரிலேக்ஸ்டா இரு ப்ரீத்தி,” அவன் பேசிய இந்தச் சொற்களைக் கேட்டு, ஸ்மிருதியின் உடலில் ஒருவித நடுக்கம்…

​’ப்ரீத்தியா, அப்படினா, அவ கிட்டத் தான் பேசுறாரா?’

​”ஓகே…. இந்த விஷயம் யாருக்கும் தெரியாது, தெரியவும் விட மாட்டேன் நான். உனக்கு இதனால எந்தப் பிராப்ளமும் வராது, நான் தான் இருக்கேன்னு சொல்றேன்ல ப்ரீத்தி, பின்ன ஏன் பயப்படுற?” என்றான்…

____________

​”நான் இருக்குற வரைக்கும் உனக்கு எந்தவித அவமானத்தையும் வர விட மாட்டேன், உனக்கு எப்போதும் நான் துணையா இருப்பேன்.”

_____________

​”ஹ்ம்ம்… ஓகே, மார்னிங் ஆபிஸ்ல மீட் பண்ணி, மத்ததை கன்வே பண்ணிக்கலாம், குட் நைட்,” என அவன் பேசி முடித்ததும், ஸ்மிருதி தன்னிடத்தில் வந்து படுத்துக்கொண்டாள்.

ஓரிரு நொடிகளில், ஸ்மிருதி உறங்கிக் கொண்டிருப்பதாய் எண்ணி அஜய்யும் தன்னிடம் படுத்துக்கொண்டான்.

​இங்கு ஸ்மிருதிக்கு கண்களில் நீர் மட்டும் விடாமல் வழிந்து கொண்டே இருந்தது. ‘அவங்க சொன்னது உண்மையா?’ என்பதை நினைக்கும் போதே மனம் வலியில் துடித்தது. அஜய் பேசிய அவ்வார்த்தைகள் தான் அவளின் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதை நினைத்தபடியே அன்றைய உறக்கத்தையும் தொலைத்தாள்.

​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!