Skip to content
Post Views: 1,451
என் ஜீவன் உன்னை சேருமா
Advertisement
அத்தியாயம் -10
Advertisement
Advertisement
அக்னியின் வீட்டிற்கு மாயாவும், உலகநாதனும் காரில் சென்று கொண்டிருந்தனர்..
Advertisement
மாயாவுக்கு குழப்பம், அழுகை என்று ஒன்றும் வரவில்லை அவளுக்கு , அக்னி மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தாள்..
அவருக்கு ஏதாவது பெரிய பிரச்சனை இருக்குமோ அதை என்கிட்ட சொல்லி இருக்கலாமே, ஏன் அத்தான் என்கிட்ட ஒன்னும் சொல்லல,, நான் உங்க மாயா இல்லையா? என்கிட்ட அவங்க பிரச்சனையை சொல்லக்கூடாதா? என்று அவனோடு மனதில் பேசிக் கொண்டு வந்தாள்..
பார்வதிக்கு மகன் ரதிதேவியை நினைத்து அழுததும் மனம் உருகியது, அவனை அணைத்து வீட்டில் உள்ளே அழைத்து வந்துவிட்டார்..
மகன் அழுவதை தாங்க முடியாதவர் அவனை மடிதாங்கி தட்டிக்கொடுத்துக் கொண்டிருக்க..
சரியாக உலக நாதனின் கார் அக்னியின் வீட்டு வாசல் முன்பு வந்து நின்றது..
அவர்கள் வந்தது அக்னிக்கு கோபம் தலைக்கேற,, கோபமாக எழுந்தவனை,, “நீ இரு அக்னி அம்மா பார்த்துக்கிறேன்,, நீ எதுவும் பேசக்கூடாது” என்று வாசலுக்கு வந்தார்..
மாயாவும், உலகநாதனும் வாசலில் நிற்க, மணக்கோலத்தில் மாயாவை பார்த்ததும் பார்வதிக்கு மனவேதனையுடன் மருமகளை கட்டி அணைத்துக்கொண்டவர்…
” சாரி மாயா சாரி எங்களை மன்னிச்சிடு வருத்தப்படாதே” என்றவர்,,, மாயாவை வீட்டில் உள்ளே அழைத்து வர..
பின்னாடி வந்த உலகநாதனை பார்த்த , பார்வதி “உனக்கு என் வீட்டுக்குள்ளே வர அருகதை கிடையாது,, வெளியே போ”… என்றார்..
உலகநாதன் அதிர்ச்சியாகி பார்வதியை பார்க்க,, மாயா பயந்து போனாள் பார்வதியின் கோபத்தில்..
“வெளியே போன்னு சொன்னேன்” என்று பார்வதி உலகநாதனை பார்த்து கத்த…
“ஆன்ட்டி ஏன் அப்பாவை வெளியே போக சொல்றீங்க?”..
” இவன பத்தி உனக்கு தெரியாது மாயா இவனால தான் என் குடும்பமே அழிஞ்சு போச்சு அவன் காத்து கூட என் வீட்டுக்குள்ள படக்கூடாது “”… என்றார்..
உடனே உலகநாதன் வெளியே போக மாயாவும் அவருடன் வெளியே சென்றாள்..
” மாயா நீ ஏன் வெளியே போற உள்ள வாம்மா” என்றார் பார்வதி…
” எனக்கு நீங்க டாடியை பேசறது பிடிக்கல ஆன்ட்டி அப்பா உள்ள வரலன்னா, நானும் வரமாட்டேன்” என்றாள் மாயா..
“மாயா சொன்னா கேளு உன் வாழ்க்கையை மட்டும் நீ பாரு அக்னியோடு உனக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் நீ உள்ள வா,, உன் அப்பன் உள்ள வரக்கூடாது” என்றார் பார்வதி…
” சாரி ஆன்ட்டி என் அப்பா தான் எனக்கு எல்லாம்,,அடுத்தது தான் என் அத்தான்” என்று பார்வதியை பார்த்து மாயா கதரி அழ,,
” மாயா மாயா அழாதடா” என்றார் அவளின் தோளை தட்டி கொடுத்து..
” நான் அழலை ஆன்ட்டி,, அத்தான் ஏன் என்னை விட்டுட்டு வந்தாங்க நான் என்ன தப்பு பண்ணேன்? “என்றதும்..
” நீ ஒன்னும் பண்ணல மாயா,, எல்லாம் உன் அப்பன் பண்ண வேல” என்றதும்..
“ஆன்ட்டி திரும்பவும் என் டாடியை திட்டுறீங்க” என்றாள் மாயா..
“பாத்தீயா உன் பொண்ண பாத்தீயா,, உன்மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கா அந்த பாசத்துக்கு தகுதியானவனா நீ?”..
உலகநாதனுக்கு பயங்கர கோபம் வர..
” என்ன ஓவரா பேசுறீங்க சம்பந்தியம்மா,, உங்க பையன முதல்ல வெளியே வர சொல்லுங்க அவனை.. என் பொண்ணு கழுத்துல தாலி கட்ட சொல்லுங்க அப்புறம் பேசலாம் எல்லாத்தையும்”..
” என் பையன் கண்டிப்பா மாயா கழுத்துல தாலி கட்டுவான் ஆனா நீ இருக்கக் கூடாது கிளம்பு உன் பொண்ணை நான் பார்த்துக்கிறேன் ,, மாயாவை அவன் கண்டிப்பா ஏத்துப்பான்” என்றார் பார்வதி..
” அம்மா” என்று அக்னி வீட்டின் உள்ளே இருந்து கத்த..
” நீ சும்மா இரு அக்னி எனக்கு எல்லாம் தெரியும்” என்றார்..
“என்ன எல்லாரும் பூச்சாண்டி காட்டுறீங்க வர சொல்லுங்க உங்க பையனை வெளிய, கல்யாணத்துக்கு எல்லாம் ஓகே சொல்லிட்டு இப்போ உள்ளே போய் உட்கார்ந்துட்டு இருக்கான்.. உங்க மகன் இப்போ என் பொண்ணு கழுத்துல தாலி கட்டணும், அவன் தாலி கட்டலன்னா இருக்கிற இடம் தெரியாம அவனை அழிச்சுடுவேன்” ..
” என்னடா பண்ணுவ என் பையனை,, என்ன பண்ண முடியும் உன்னால, நீ என்ன வேணா பண்ணு, உன்னால என் பையனை ஒன்னும் பண்ண முடியாது” என்றார் பார்வதி..
‘ பாக்குறீங்களா இப்பவே உங்க பையனை உள்ள தூக்கி வைக்கட்டுமா என்னால,, எல்லாம் முடியும்,,, என் பொண்ணு வாழ்க்கைக் காண்டி சும்மா இருக்கேன்,,..
” டாடி என்ன பேசுறீங்க நீங்க வார்த்தையை விடாதீங்க டாடி” ,,, என்ற மாயா.
பார்வதியிடம் “ஆன்ட்டி என்னாச்சு ஆன்ட்டி அத்தான் ஏன் மண்டபத்தில் இருந்து வந்தாங்க அதுக்கு காரணம் சொல்லுங்க”…
” இதோ நிக்குறானே உன் அப்பன் அவன் கிட்ட கேளு மாயா, அவன் என்ன பண்ணான்னு”..
” டாடி நீங்க என்ன பண்ணீங்க டாடி”.. என்றாள் மாயா.
“நான் ஒன்னும் பண்ணல மாயா”.. என்று உலகநாதன் மகளிடம் சொல்ல…
” டேய் டேய் படுபாவி துடிக்க துடிக்க ஒரு பொண்ணு வாழ்க்கையை அழிச்சிட்டு ஒண்ணுமே பண்ணலன்னு எப்படிடா உன்னால பேச முடியுது”..
“பார்வதி அம்மா நான் அப்படி ஒன்னும் பண்ணல அன்னைக்கு என் நிலைமை அப்படி ‘”.
“என்ன அப்படி ஒரு சூழ்நிலை உங்களுக்கு.. நீங்கதானே என் நாத்தனாரை பொண்ணு பார்க்க வந்தீங்க,, புடிச்சு தானே கல்யாணம் பண்ண மண மேடை வரைக்கும் வந்தீங்க அப்போ ஏன் அவளை கல்யாணம் பண்ணாம விட்டுட்டு போனீங்க?”
” நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ஆனா நான் அன்னைக்கு போலன்னா என்னோட பொண்டாட்டி,, மாயவோட அம்மா பெர்னிலா செத்துப் போயிருப்பாளே”..
” உன் பொண்டாட்டி செத்துருவான்னு நீ போன.. ஆனா நீ போனதால ஒரு பொண்ணு உயிரோட செத்துப்போனத நீ கவனிக்கல”…
” ஐயோ நீங்க சொல்றது எல்லாம் எனக்கு புரியல,, நான் போனா என்ன ரதிதேவிக்கு வேற ஒரு நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ண வேண்டியதுதானே.. எத்தனை கல்யாண , கல்யாணத் தன்னைக்கு நிக்குது,, கல்யாணம் நின்னா,, அடுத்த கல்யாணம் பண்ணிக்குறது இல்லையா,, எல்லாரும் இப்படியா இருக்காங்க” என்றார்..
“ஒரு பொண்ணுக்கு கல்யாணம் நின்னா,, அவளுக்கு கல்யாணத்தை நடத்தி வைத்து விடலாம்,, ஆனா ஒரு பொண்ணு மனசுல ஆசையா வளர்த்துவிட்டுட்டு ஈசியா அவளை வேற பையனை கல்யாணம் பண்ணி வைக்க சொல்றீங்க,,, அதையே நீங்க மாயாக்கு பண்ண வேண்டியதுதானே,, எதுக்கு என் வீட்டு வாசல்ல வந்து நிக்கிறீங்க.. ஏன்னா மாயாவுக்கு அக்னியை பிடிச்சிருக்கு,, அதனால தானே நீங்க இங்க என் வீட்டு வாசலில் வந்து நிக்கிறீங்க,, “..
“”நான் அப்படி ஒன்னும் ரதிதேவிக்கிட்ட பழகல,, “..
“சரி நான் சொல்லுறதுக்கு பதில் சொல்லுங்க,, நீங்க மாயாவோட அம்மாவை விரும்புனீங்களா?”..
“இல்லை” என்றார் உலகநாதன்…
“அப்போ நீங்க மாயாவோட அம்மா பெர்னிலாவை விரும்பல,, அப்போ நீங்க என்ன பண்ணி இருக்கனும்,, ரதிதேவி கழுத்துல தாலி கட்டிட்டு, நீங்க அவளையும் சேர்த்து அழைச்சிட்டு போயி பெர்னிலாவை பார்த்து,, எனக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு, இனி உன் வாழ்க்கையை நீ பாருன்னு சொல்லி இருந்தா, அந்த பொண்ணு விலகியிருப்பா,,..ஆனா நீங்க என் பண்ணுனீங்க,, போன் வந்தவுடனே, என்னை காதலிச்ச பொண்ணு சாக கிடக்குறன்னு , சொல்லிட்டு போயிட்டீங்க, நான் மட்டும் அன்னைக்கு இருந்திருந்தா,, உங்களை போக விடாம தடுத்திருப்பேன்,, என்ன பண்ணுறது அப்போ தான் நிலா எனக்கு பிறந்து இருந்தா,, திடிர்னு கல்யாணம் முடிவு ஆனதால உங்களை நான் பார்க்கலை,,, இல்லைன்னா,, நடக்குறதே அன்னைக்கு வேற” என்றார் பார்வதி,,
“நான் சொல்லுறதை கொஞ்சம் கேளுங்க சம்பந்தி அம்மா.. நான் முதல், முதல்ல வேலை பார்த்தா ஓனரோட பொண்ணு தான் பெர்னிலா,, அவ என்னை விரும்புனா,, எனக்கு அதில் விருப்பம் இல்ல.. அவங்க கிறிஸ்டியன்,, நான் இந்து, அவங்க வசதியா இருக்குறவங்க , நான் கிராமத்தில் இருந்து படிச்சிட்டு வேலைக்கு வந்தவன் மாயாவோட அம்மா கிட்ட நான் நிறைய தடவை சொல்லிட்டேன் உனக்கும் எனக்கும் சரி வராதுன்னு,, ஆனா அவங்க கேட்கல என்னை சுத்தி சுத்தி வந்தாங்க, அதனால தான் நான் என் வீட்டுல சொல்லி ரதிதேவியை பொண்ணு பார்க்க வந்தேன்,, எனக்கு ரதிதேவியை ரொம்ப பிடிச்சது,, உடனே கல்யாணத்துக்கு ஓகே சொல்லி கல்யாணம் வரைக்கும் வந்தேன்..
திடீர்னு என் பிரண்டு போன் பண்ணி பெர்னிலா பாய்சன் சாப்பிட்டா உயிருக்கு போராடிட்டு இருக்கா உன்னை பார்த்தா தான் அவ உயிர் பிழைப்பான்னு சொன்னா,, என்னை என்ன பண்ண சொல்லுறீங்க,, நான் இல்லன்னா ஒரு பொண்ணு செத்துப் போகிற வரைக்கும் இருக்க, அவளுக்காக என்ன பண்ண சொல்றீங்க உடனே எனக்கு போகணுமுன்னு தோணுச்சு ஒரு பொண்ணு உயிர் என் கையில இருக்குறப்போ அவளை காப்பாத்த தோணுச்சு,, உடனே கிளம்பிட்டேன்,, தப்பு தான் நான் பண்ணது தப்பு தான், ஒரு பொண்ணை கல்யாணம் மேடை வரைக்கு கூட்டிட்டு வந்து தாலி கட்டாம போனது, பெரிய தப்பு தான்,, ஒரு பொண்ணோட வாழ்க்கையா?,, இல்ல ஒரு பொண்ணோட உயிரா என்ற சூழ்நிலை,, எனக்கு ஒரு உயிர காப்பாத்துறது தான் பெருசா தெரிஞ்சது, தப்பு தான் என் நிலைமையில் இருந்து யோசிச்சு பாருங்க,, தப்புன்னா அதை நான் ஒத்துக்கிறேன்,”.. என்றார்…
“சரி, அந்த பொண்ணோட உயிர காப்பாத்த போனீங்க,, நீங்க அம்போண்ணு மணமேடையில விட்டு போன அந்த ரதிதேவிக்கு என்னாச்சுன்னு திரும்பி பாத்தீங்களா?”…
“நான்,, நான் ” என்றவர்..
“நான் திரும்ப வந்து அவ வாழ்க்கையை குழப்ப கூடாதுன்னு பார்த்தேன்.. நீங்கள் ரதி தேவிக்கு உங்க சொந்தத்துல யாரையாவது கல்யாணம் பண்ணி வச்சிருப்பீங்கன்னு நான் நெனச்சுட்டு இருந்தேன்.. நான் மறுபடியும் வந்து ரதிதேவியை பார்த்தா அவ புது வாழ்க்கைக்கு ஏதாவது பிரச்சனை வருமோன்னு நெனச்சு பயந்து தான் அவளை பார்க்க வரல.. நீங்க சொல்லுங்க ரதிதேவிக்கு உங்களுக்கு தெரிஞ்ச பையனை கல்யாணம் பண்ணி வச்சிருந்தீங்கன்னா,,நான் வந்து ரவிதேவி நல்லா இருக்காலான்னு பார்த்தா,, அவ வாழ்க்கை ஏதாவது தொந்தரவு வருமோன்னு பயந்து வரல”.. அவர் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல..
தந்தை பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த மாயாவுக்கு ஓரளவுக்கு விசயம் புரிந்தது.. அத்தான் தெரிஞ்சி தான் என் கழுத்துல தாலி கட்டாமல் வந்து இருக்காரு,, அவங்க அத்தை கழுத்துல அப்பா தாலி கட்டாமல் இருந்ததற்கு என் கழுத்துல தாலி கட்டாம பழி வாங்கி இருக்காரு என்று அனைத்து விசயமும் புரிய,,
அப்போ எல்லாம் நடிப்பா? என்றவளுக்கு நிற்கவே முடியவில்லை பக்கத்தில் உள்ள கம்பியை பிடித்து நின்றாள்..
பார்வதிக்கு உலகநாதன் சொல்வது,, அவர் நிலமையில் இருந்து பார்த்தால் அவர் செய்தது சரி என்றே தோன்ற யார் பக்கம் பேசுவது,, நடந்த அனைத்தையும் மாற்ற முடியாது விதியை நினைத்து வருந்தி கொண்டார்… ஆனால் அவர் தாலி கட்டாமல் போனதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…
” இப்போ என்ன சொல்றீங்க உங்க பையனை என் பொண்ணு கழுத்துல தாலி கட்ட சொல்லுங்க”..
அக்னி உள்ளே இருந்து எழுந்து வந்தவன்,, “உன் பொண்ணு கழுத்துல தாலி கட்ட முடியாது, நீங்க கிளம்பலாம்” என்றான்.. மாயாவை பார்க்காது..
மாயா அக்னியை பார்த்தபடியே நின்றாள்..
” அக்னி நீ பண்ணது பெரிய தப்பு மரியாதையா என் பொண்ணு கழுத்துல தாலி கட்டு”..
” முடியாது தாலி கட்ட முடியாது, ஒரு நம்பிக்கை துரோகியோட பொண்ணு கழுத்துல என்னால தாலி கட்ட முடியாது, நீ துரோகினா, உன் பொண்ணும் துரோகியோட பொண்ணு.. அவ கழுத்துல எப்படி நான் தாலி கட்டுவேன்”..
” ஏய் யாருடா துரோகி? “.
” நீ தான் உன்னை நம்பி வந்த பொண்ணை. அம்போன்னு மணமேடையில விட்டுட்டு வந்த நம்பிக்கை துரோகி,, நீதான் என் வாழ்க்கையின் நெனச்சி வந்த என் அத்தை ஆசையை அழிச்ச துரோகி,, நம்பிக்கை துரோகி” என்றான் ஆத்திரமாக…
மாயாவுக்கு அழுகை வந்தது எப்படியாவது தன் தந்தை, அக்னியுடன் சேர்த்து வைத்து விடுவார் என்று நம்பிக்கையோடு வந்தாள், இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்தவள் அக்னியின் பக்கத்தில் வந்து “அத்தான்” என்று அவனின் கையை தொட..
“சீ… என்னை தொடாதே,, என்னை தொட உனக்கு என்ன உரிமை இருக்கு” என்றதும் அந்த நொடியே செத்துவிட்டாள் மாயா,, என்ன! நான் சீ யா! என்றவள்…. பித்து பிடித்தவள் போல் நிற்க…
“டேய் என்னடா சொன்ன என் பொண்ணை” என்று அக்னியின் சட்டையை பிடித்து இருந்தார் உலகநாதன்..
அக்னிக்கும் கோபம் வர,, அவரின் சட்டையை இவன் பிடித்து இருந்தான்,, அக்னியும், உலகநாதன் இரண்டு பேரும் சண்டையிட..
மாயா அக்னியின் வீட்டை விட்டு வெளியில் நடக்க ஆரம்பித்திருந்தாள்..
நான் சீ யா,, நான் சீ யா… அவருக்கு நான் துரோகியோட பொண்ணா? நான் துரோகியோட பொண்ணா? என்று தனியே பேசிக்கொண்டே மாயா செல்ல பார்வதி மாயா தனியே செல்லவும் அவளின் பின் சென்று..
” மாயா மாயா நில்லுடா எங்கேடா போற”…
” நான் சீ யா.. அத்தை? நான் சீ யா நான் துரோகியோட பொண்ணுண்ணு உங்க பையன் சொல்லுறாங்க,” என்று புலம்பியபடியே மாயா கேட்டை தாண்டி தனியே பேசிய படியே வெளியே செல்ல…
” ஐயோ இன்னொரு ரதிதேவியை உருவாக்கிட்டீங்களே கடவுளே” என்று ரோட்டில் அமர்ந்து அழ ஆரம்பித்தார் பார்வதி..
தாய் அழுவதையும்,, மாயா வெளியில் செல்வதை பார்த்த அக்னி,, உலகநாதனின் சட்டையில் வைத்திருந்த அவன் கையை உதறி விட்டு,, பார்வதியிடம் ஓடி வர…
உலகநாதன் மகளிடம் ஓடினார்..
“அம்மா அம்மா, என்னாச்சும்மா” என்று அக்னி வர..
அவனை தள்ளி விட்டவர்,, “போடா போ என் பக்கத்துல வராத,, என் மருமகளை சீ யின்னு சொன்ன உன் வாயால என்னை அம்மான்னு கூப்பிடாதே.. என்னை தொடதே,, எத்தனை தடவை சொன்னேன் வார்த்தை விடாதடான்னு கேட்டீயா,, ஒரு பொம்பள பிள்ளை வாழ்க்கையில விளையாடதேன்னு கேட்டீயா,, தல பாடா அடிச்சு சொன்னேன், பொறுமையா இருன்னு கேட்டீயா,, இப்போ பாரு மாயா தனியா உன் அத்தை ரதிதேவி புலம்புன மாதிரியே அவளும் புலம்புறா ஒரு பொம்பள புள்ளைய தனியா இப்படி புலம்ப விட்டுட்டியே நீ எல்லாம் ஒரு ஆம்பளையாடா போ போ என் கண் முன்னாடி வராத போ” என்று மகனை பார்வதி அடிக்க ஆரம்பித்திருந்தார்..
பார்வதி ரோட்டில் அமர்ந்து அழுவதை பார்த்த நிலாவும் தேவ்வும் அவர் அருகில் வந்து “அம்மா எழுந்துருமா,, என்று அவரை தூக்க…
” என்னை ரோட்டுல நின்னு புலம்ப வச்சுட்டான்டி உன் அண்ணன்” என்று புலம்பிய படியே எழுந்து நின்ற பார்வதி பின்னாடி மாயாவை பார்க்க,,
உலகநாதன் மாயாவை காரில் ஏற்றி செல்வதை பார்த்தவர்..
இனி மகளை உலகநாதன் பார்த்துக் கொள்வார் என்று பார்வதி வீட்டின் உள்ளே நுழைந்தார்..
அக்னியின் கல்யாணம் நின்று மூன்று நாள் ஆகியது..
நான்காவது நாள் அக்னி கம்பெனிக்கு வந்திருந்தார் உலகநாதன்..
அவனைப் பார்த்து எப்படியாவது தன் மகளின் தற்போதையை நிலமையை எடுத்து சொல்லி கல்யாணம் பண்ணி வைத்து விடலாம் என்று பேச வந்திருந்தார்..
ஆனால் அவனிடம் பேசிவிட்டு, அவர் பேச முடியாத சூழ்நிலைக்கு செல்ல போவதை அவர் அறியவில்லை..???.
error: Content is protected !!