Skip to content
Post Views: 1,276
என் ஜீவன் உன்னை சேருமா
Advertisement
அத்தியாயம் – 11
Advertisement
Advertisement
தன் கம்பெனிக்கு வந்து உலகநாதனை பார்த்து அக்னிக்கு ஆத்திரமாக வர…
தன் பி. ஏ பார்த்திபனை அழைத்து “அவரை பார்க்க முடியாதுன்னு போக சொல்லு” என்று சொல்லி அனுப்பினான்..
Advertisement
பார்த்திபன் உலகநாதனிடம் “அக்னி சார் ரொம்ப பிஸி ஒரு மீட்டிங் வேற இருக்கு,, இப்போ சாரை பார்க்க முடியாது நீங்க கிளம்பலாம்” என்று கூற ..
” நான் அக்னியை பார்க்காம போக மாட்டேன் மீட்டிங் முடிஞ்சது சொல்லு,,நான் அப்புறமா வந்து பார்க்கிறேன்” என்று கல் போல வெயிட்டிங் ஹாலில் அமர்ந்திருந்தார் உலகநாதன்..
அக்னி ரூமுக்கு திரும்பி வந்த பார்த்திபனியிடம் “என்ன பார்த்திபா சொன்னீயா?. அந்த ஆள் கிட்ட” என்றான்.
” சார் சொன்னேன் சார். அவர் உங்கள பார்க்காம போக மாட்டேன்னு சட்டமா ஒக்காந்துட்டு இருக்காரு “..
அந்த உலகநாதனை என்று பல்லை கடித்தவன்,, வேகமாக அவர் இருக்கும் வெயிட்டிங் ஹாலிற்க்கு வந்தவன்,, அவன் முன் கோபமாக நிற்க..
உலகநாத அக்னியை பார்த்து மனதில் கோபப்படக்கூடாது,, கோபப்படக்கூடாது என்று மனதில் பேசிக்கொண்டவர்.. அக்னியை பார்த்து “என் பொண்ணை நீ கல்யாணம் பண்ண நான் என்ன பண்ணனும் சொல்லு பண்றேன்” என்றார்..
அவரைப் பார்த்து சிரித்தவன் “நீ தலைகீழா நின்னாலும் நடக்காத விசயத்தை பத்தி பேசிட்டு இருக்க”…
” நான் வேணா என் சொத்தை பூரா உன் பேருல எழுதி வைத்துவிடட்டுமா? “”..
” சொத்தா உன் சொத்து எனக்கு எதுக்கு வேணும்…எங்க அப்பா யார் தெரியுமா? தின உதயம் பத்திரிகையை பற்றி தெரியுமா உனக்கு,,? அந்த பத்திரிக்கையோட உரிமையாளர் யார் தெரியுமா? என் அப்பா? “
என்றதும்.
உலகநாதனுக்கு ஆச்சரியமாக இருந்தது,, அப்படியா என்பது போல் அவனை பார்த்து நிற்க..
” எல்லார் வீட்டிலும் தினமும் படிக்கும் பேப்பர் எங்க பத்திரிகை தின உதயம் தான்,, உலகம் முழுக்க எங்க பிரஸ் இருக்கு மெயின் ப்ரான்ச் என் தம்பி பாத்துக்குறான்.. இப்ப புரியுதா என்னை பத்தி நீ தான் பெரிய பணக்காரன் நாலு கம்பெனி வச்சிருக்கேன்,, சொத்து வச்சிருக்கேன்,, பால் பண்ணை வச்சிருக்கேன் ஓவரா பில்டப் கொடுத்த, உன் ஒரு மாத வருமானம், எனக்கு தினமும் வரும் வருமானத்தை விட கம்மி தான்,, யாருக்கு வேணும் உன் சொத்து,, உன் சொத்து எல்லாம் எனக்கு ஒன்னுமே இல்ல’,, தூசி மாதிரி நீ கிளம்பலாம்”….
” அக்னி ப்ளீஸ் உன்னை கை எடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன், என் பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கோ நான் வேணா விலகி போயிடுறேன்,, மாயா படுற கஷ்டத்தை என்னால பாக்க முடியல,, எனக்கு என் பழைய மாயாவை திருப்பி கொடு ப்ளீஸ்,, அவளை ஏத்துக்கோ” என்று அவன் முன்னாடி கைகூப்பி நிற்க..
” இதே மாதிரிதானாடா அன்னைக்கு ஒரு நாள் உன் வீட்டு வாசல்ல நானும், என் அப்பா தாத்தா, சித்தப்பா நாலு பேரும் வந்து நின்னோம், நீ எங்களை பார்க்க கூட வரல உன் வருங்கால மாமனாரை விட்டு எங்களை நாயை துரத்தி விடுற மாதிரி பேசி அசிங்கப்படுத்தி அனுப்பி விட்டார்,, உன் மாமனார்,, உன்க்கிட்ட அவர் இதை சொல்லலையா? “…..
“என்ன” என்று அதிர்ச்சியானவர் “எப்போ என்னை பார்க்க வந்தீங்க” என்றார் உலகநாதன்..
“நடிக்காதடா ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காத” என்றான் அக்னி..
“சத்தியமா எனக்கு நீங்க வந்தது தெரியாது அக்னி அப்படி தெரிஞ்சு இருந்தா,, நான் அன்னைக்கே பேசி ரதிதேவி வாழ்க்கைக்கு ஒரு முடிவு கட்டி இருப்பேன்”..
” உன்னை நான் நம்ப மாட்டேன்,, என் அத்தை கல்யாணம் நின்னும் ஒரு வாரம் கழிச்சு உன்னை பார்த்து பேச வந்தோம்,, ஆனா உன்னை உன் மாமனார் பார்க்க விடல,, அவர் என்ன பேசினார் தெரியுமா?, அவர் பேசின பேச்செல்லாம் மறந்துட்டு என்னை உன் பொண்ணு மாயாவோட வாழ சொல்லுற” என்றான் கோபமாக..
” அக்னி அவர் என்ன பேசினாருன்னு எனக்கு தெரியாது தப்பா பேசியிருந்தா,, நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்றார்..
” பத்தல இது எனக்கு பத்தல நீ இன்னும் கெஞ்சனும் கதறனும் மாயாவை நெனச்சு துடிக்கணும் அப்புறம் பார்க்கலாம் இப்ப கிளம்பு” என்றான் அக்னி கூலாக..
” அக்னி என் பொண்ண என்னால பாக்க முடியல, நீ இல்லாம அவ கண்டிப்பா வாழ மாட்டா, எப்பையும் அழுதிட்டே இருக்கா,, எனக்கு அவ நல்லா இருந்தா போதும்,, , நான் வேணா உன் கண் முன்னாடி இல்லாம எங்கயாவது ஃபாரின் போயிடவா, அப்போ என் பொண்ணை ஏத்துக்குவியா?” என்றதும்..
“இதுக்கு நான் வேணா தான் வழி சொல்லவா” என்றான் நக்கலாக..
சொல்லு என்பதைப் போல் உலகநாதன் பார்க்க..
” நீ என்ன பண்ணு ஒரு வாரம் மாயாவை என் கெஸ்ட் ஹவுஸ்க்கு அனுப்பு அவளை நல்ல கவனிச்சு அனுப்புறேன் அப்புறமா நார்மல் ஆயிடுவா” என்றவுடன்.
” டேய் யாரைடா கெஸ்ட் ஹவுஸ்க்கு வர சொன்ன? என் பொண்ணையா? என் பொண்ணையா அப்படி சொன்னா”?.. என்று பாய்ந்து வந்து அவனை அடிக்க,,
உலகநாதன் அடிக்கிற அடியை பொறுமையாக வாங்கிக் கொண்டவன் அக்னி..
இரத்தம் வரும் அளவிற்கு அடித்திருந்தார் உலகநாதன் “என் பொண்ணை போய் இப்படி கேட்டுட்டியேடா? என் பொண்ணை இப்படி சொல்ல உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு, ஐயோ”!… என்று தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுது கொண்டு இருந்தார் உலகநாதன்…
அவர் முன்னாடி வந்து சொடக்கு போட்டான் அக்னி,, உலகநாதன் நிமிர்ந்து பார்த்ததும்,,
“நீ உன் பொண்ண கெஸ்ட் ஹவுஸ் வர சொன்னதுக்கே உனக்கு இவ்ளோ கோபம் வருது,, அன்னைக்கு உன் மாமனார் எங்ககிட்ட எப்படி பேசினார் தெரியுமாடா,, நீ பார்க்க ஆண்மகன் போல அழகாய் இருக்கீயாம், உன்னை பார்த்தா எல்லா பொண்ணுக்கு ஆசை வரதான் செய்யுமாம்,, அதனால உங்க ஊருல சின்ன வீடா புடிச்சு வைக்க, என் மருமகனை அப்பப்போ வந்து போக, வர சொல்றேன் எவ்வளவு காசு வேணுமுன்னாலும் கொடுக்குறோம் ஒரு சின்ன வீடா வச்சுட்டு போகட்டுமே,, அப்படின்னு சொன்னாரு , நாங்க எப்படி துடிச்சிருப்போம்,, எங்க பொண்ணு வாழ்க்கையை நெனச்சு.. நீ இப்போ உன் பொண்ணா பத்தி பேசுனதும் துடிக்குறல.. எங்களுக்கு அப்படி தானே இருக்கும்'”. என்று அன்று நடந்ததுக்கு இன்று நியாயம் கேட்க..
” ஐயோ என்னால முடியல நீ உன் வார்தையால என்னை கொல்லாதே,, இன்னும் என்னென்ன நடந்திருக்குமோ எனக்கு ஒன்னும் புரியலையே நடந்ததுக்கெல்லாம் நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் அக்னி” என்று உலகநாதன் கண்ணீரோடு சொல்ல..
” உன் மாமனார் பேசிய பேச்சை கேட்டு நாங்க எவ்வளவு அவமானப்பட்டு ஊருக்கு வந்தோம்,, என் அத்தை நாங்க நல்ல செய்தியோடு வருவோமுன்னு நெனச்சு எங்க முகத்தையே பார்த்துட்டு நின்னுட்டு இருந்தாங்க,,
அவங்க கிட்ட நாங்க பட்ட அவமானத்தை சொல்ல முடியுமா?..
உன் மேல என் அத்தை எவ்வளவு நம்பிக்கை வைச்சிருந்தாங்க தெரியுமா,, நீங்க போய் பேசுனா அவர் கண்டிப்பா திரும்பி வருவாரு. ஏதோ பிரச்சனை ஒரு பொண்ணு தன்னால சாகப் போயிட்டான்னு காப்பாத்த போய் இருப்பாரு,, நீங்க போய் பேசினா அவரு கண்டிப்பா வந்துருவாரு, வந்து என்னை கல்யாணம் பண்ணிப்பாருன்னு சொல்லி எங்களை அனுப்பி வச்சாங்க,, ஆனா நடந்தது என்னன்னு தெரிஞ்சு, அவங்க எப்படி துடிச்சு அழுதாங்க தெரியுமா! உனக்கு,,
அவங்க அழுகுறத பார்க்க முடியாமா நாங்க எப்படி துடிச்சு போய் அழுது இருப்போம்,, பொண்ணு அழுவதை பார்த்து எங்க அய்யப்பா அன்னைக்கு நைட்டே நெஞ்சு வலியில் இறந்து போயிட்டாரு.. என் அய்யம்மா பொண்ணு வாழ்க்கையும் போயி,, புருஷனும் போயி வாழ முடியாம அவதிப்பட்டு புலம்பிக்கிட்டே ஒரு மாசத்திலேயே அவங்களும் செத்து போயிட்டாங்க, இதுக்கு எல்லாம் யாரு பதில் சொல்லுவா,,? யாரு காரணம் நீ, நீ தான் காரணம், இப்போ சொல்லு, நான் உன் பொண்ணை எப்படி ஏத்துப்பேன்,, எப்படி நான் அவ கூட வாழ்வேன்,, நீ என் நிலமையில இருந்தா, என்ன செய்வா? “”.. என்றான் அக்னி வேதனையான குரலில்..
உலகநாதன் எழுந்துவிட்டார் அக்னி ஒவ்வொன்றையும் சொல்ல சொல்ல அவருக்கே தான் செய்த விளைவின் மற்றோரு பக்கம் புரிய,, இனி அவன் பேசுவதை கேட்க என்னால் முடியாது,, அவன் குடும்பம் அனுபவிச்சதை வேதனையை அவன் சொல்வதையே கேட்கவே அவரால் தாங்க முடியவில்லை. இவ்வளவு நடந்தும் எப்படி அக்னி தன் மகளை ஏற்பான்? அவன் ஏற்க மாட்டான்? என்று முடிவு பண்ணியவர்,,.
” உன் குடும்ப பட்ட கஷ்டத்துக்கு முழு பொறுப்பு நான்,, நான் செய்த ஒரு செயல் என்னை மன்னிச்சிரு அக்னி” என்று கைகூப்பி அவனிடம் சொல்லிவிட்டு கிளம்பி விட்டார் மனிதர்,, நடக்க கூட தெம்பு இல்லாமல் அவர் நடந்து சென்றதை பார்த்து நின்றான் அக்னி..
என் குடும்பம் இப்படித்தானே அன்றைக்கு நிலை குலைந்து போயிருக்கும்,,நானும் என் குடும்பமும் எத்தனை நாட்கள் இந்த வேதனை அனுப்பவச்சிருப்போம், என்று மனதில் நினைத்துக் கொண்டவன்..
அக்னிக்கு ஏதோ தன்னை விட்டு பெரிய பாரம் இறங்கியது போல் தோன்றியது.. அனைத்தையும் உலகநாதனின் தலையில் இறக்கி வைத்தது போல் தோன்ற..
மாயாவை நினைத்து கொண்டான்.. அவளை தப்பாக பேசியது அவனுக்கு மனவேதனையை தர.. நான் என் வாயால் உன்னை அப்படி சொல்லி இருக்க கூடாது மாயா,, சாரி சாரிடா என்று வேதனைப்பட்டு தலை கவிழ்ந்து டேபிளில் சாய்ந்து அமர்ந்திருந்தான்..
மாயா வீட்டில் வேலை செய்யும் பெண்,,மாயாவிடம் வந்து “உலகநாதன் சார் அக்னி சாரை பார்த்து பேச போயிருக்கிறார்” என்று கூற..
ஒரு வேலை அக்னி அத்தானுக்கு அப்பாவின் மேலே உள்ள கோபம் போயி சமாதானம் பேசி வருவாரோ என்று மாயா தந்தைக்காக எதிர்பார்ப்போடு ஹாலில் காத்திருக்க அழுது சிவந்த முகத்தோடு தலைக்கவிந்து வந்த தந்தையை பார்த்து விசயம் புரிந்து கொண்டாள்,, அங்கே பெரிய பிரச்சனை நடந்திருக்கிறது என்று.
உலகநாதன் தன் முகத்தையே ஆவலோடு பார்த்த மகளை பார்த்தவருக்கு, அதை தாங்க முடியாமல் மகள் வாழ்க்கையை எண்ணி குலுங்கி அழ..
தந்தை அழுததும் பயந்து போனவள் அவரிடம் ஓடி வந்து “டாடி, என்னாச்சு டாடி?. ஏன் அழுவுறீங்க, அழாதீங்க ” என்று அவளும் அழ..
” என்னால தானே மாயா உன் வாழ்க்கை இப்படி ஆகி போச்சு, நான் தெரியாமல் செய்த ஒரு செயல் ஒரு குடும்பத்தையே அழிச்சிருக்கு அக்னி மேல எந்த தப்பும் இல்லை,, எல்லாத்துக்கும் காரணம் நான், நான் மட்டும்தான்” என்று அவர் மறுபடியும் குழுங்கியழ,,,
“டாடி வேண்டாம் டாடி அழாதீங்க” என்று அவரை சமாதானம் பண்ணி அவர் அறைக்கு அனுப்பி வைத்தவள்…
அக்னியின் கம்பெனிக்கு சென்று இருந்தாள் தந்தை அழுததற்கு நியாயம் கேட்க..
பார்த்திபன் வந்து அக்னியிடம் “சார் மேடம் வந்து இருக்காங்க” என்று கூற..
” அப்பனுக்கும், மகளுக்கும் பதில் சொல்லியே என் உயிர் போகுது,, அவளை பார்க்க முடியாதுன்னு போக சொல்லுடா அவளை, போக சொல்லு அவளை” என்று கத்தினான் அக்னி..
பார்த்திபனுக்கு மாயாவிடம் எப்படி சொல்வது என்று அவள் முன் வந்து தயங்கி நிற்க..
பார்த்திபன் தயங்கி நிற்பதை பார்த்த மாயா,, “பார்க்க முடியாதுன்னு சொன்னாரா?” என்றாள்,,
” ஆமாம், மேம்,, ” என்று பார்த்திபன் கூற..
அக்னியின் அறைக்கு அனுமதியின்றி நுழைந்து இருந்தாள் மாயா..
அக்னி தலைக்கு மேல் கை வைத்து அமர்ந்திருக்க..
அவளைப் பார்த்ததும் “என்னடி உனக்கு வேணும், உனக்கு என்ன பிரச்சனை,,காலையில் உன் அப்பன் வந்தான், இப்ப நீயா?”..
” என்ன சொன்னீங்க என் அப்பாவை? ” என்றாள்..
” நிறைய சொன்னேன் என்னடி அதுக்கு,, உங்க அப்பன் தலைவிதி அதைக்கேட்டு தான் ஆகணும்,,நீ கிளம்பு நான் கோபத்தில் இருக்கேன் போயிடு” என்றான் கடுப்பாக..
” என்ன கோபம் அப்படி உங்களுக்கு வந்தது, உங்க அத்தைக்கு நடந்தது எல்லாம் பெரிய கஷ்டம் தான். அதை நீங்க சரி பண்ணி இருக்கணும் எல்லாத்துக்கும் எங்க அப்பாவை குற்றம் சொல்லாதீங்க”?.. .
” உன்னை கிளம்புன்னு சொன்னேன், பெரிய அப்பனுக்கு நியாயம் கேட்டு வந்துட்டா போடி வேலைய பாத்துட்டு”…
” ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது பொறுமையாவே உங்களுக்கு பேச தெரியாதா” என்றாள்..
” நான் பட்ட கஷ்டம், அனுபவிச்ச வேதனை அப்படி,, நான் இருந்த சூழ்நிலை, அப்படி ..அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது நீ வாய மூடிட்டு கிளம்பு”..
” அப்போ நீங்க எல்லாம் ப்ளான் போட்டு தானே பண்ணீங்க இப்ப இது எதுவுமே நடக்காத மாதிரி பேசுறீங்க”..
” ஏய் ! இவ பெரிய இவ, இவளை பிளான் போட்டு ஏமாத்துறாங்க,, என் லிஸ்ட்டுல நீ இல்லடி,, என் டார்கெட் உங்க அக்கா ரியா தான்,, அவ வேற ஒரு பையன லவ் பண்ணி என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆயிட்டா,, ஆனா நீ வந்து மாட்டிக்கிட்ட எத்தனை தடவை உன்கிட்ட நான் சொன்னேன் உனக்கும் எனக்கும் செட் ஆகாது கேட்டியா நீ,, உன் அப்பன் கேட்டானா? , நீ கேட்டீயா,? கட்டுனா உன்னை தான் கட்டுவேன்னு பிடிவாதமா நின்னு உங்க தலையில நீங்களே மண்ணை வாரி போட்டுக்கிட்டீங்க.. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்,, தவளை தன் வாயால் கெடுமுன்னு சொல்லுவாங்க அதே மாதிரி தான் நீயும் உன் அப்பனும்”
‘பேச்சை மாத்தாதீங்க என் அப்பாவை என்ன சொன்னீங்க அதை முதல்ல சொல்லுங்க? “..
“உன் அப்பன் என்கிட்ட வசமா மாட்டி,, நல்லா வாங்கிகட்டி கிட்டு போனான் உனக்கு என்கிட்ட வாங்கி கட்டிக்கனுமா, முதல்ல கிளம்புடி” என்றான்..
” சொல்லுங்க என் அப்பாவை என்ன சொன்னீங்க,, அவர் என் அம்மா இறந்ததுக்கு கூட இவ்வளவு வேதனைப்பட்டு அழல, இன்னைக்கு அப்படி அழுதாரு,, அப்போ நீங்க என் அப்பா வேதனை படுற மாதிரி ஏதோ பெருசா சொல்லி இருக்கீங்க என்ன சொன்னீங்க, சொல்லுங்க'”?..
மாயா கேட்டதும் அவன் தாடையை பற்றி சொரிந்தவன் ‘சொன்னா நீ வருத்தப்பட்டு அழுவ பரவா இல்லையா”..
” அப்படி என்ன சொன்னீங்க என் அப்பாவை”என்றாள் அதிர்ச்சியான முகத்துடன்….
” உங்கப்பன் ரொம்ப பீல் பண்ணான்,, நான் இல்லாம நீ வாழ மாட்டியாம்,, ரொம்ப வருத்தப்பட்டு அழுதுக்கிட்டே இருக்கியாம்,, உன்னை கல்யாணம் பண்ண அவர் என்ன வேணும்னாலும் செய்வேன்னு சொன்னாரு, நான் முடியாதுன்னு சொன்னேன்,, அதுக்கும் அவர் ஏதேதோ பேசி உன்னை கல்யாணம் பண்ணியே தீரனுமுன்னு என்கிட்ட கேட்டார், அதுக்கு தான் நான் ஒரு வழி சொன்னேன் அவ்வளவுதான”.. என்றான்.
” என்ன சொன்னீங்க என் அப்பாவை பார்த்து”..
” நான் என்ன அப்படி சொன்னேன்னு உன் அப்பன் என் சட்டைய புடிச்சு ரத்த காயம் வர மாதிரி அடிச்சிட்டான்” என்றான் கோபமாக..
” அப்படி என்னதான் சொன்னீங்க சொல்லி தொலைங்க” என்றாள் கோபமாக..
” வேற ஒன்னும் இல்ல,, உன் பொண்ணு நான் இல்லாம இருக்க முடியாதுன்னு சொன்னாரா, அதுக்கு தான் நான் உன்னை ஒரு வாரம், என் கெஸ்டவுசுக்கு உன்னை கூட்டிட்டு வந்து விட சொன்னேன்” என்றதும்..
“என்ன!” என்று அதிர்ந்தவள்.. அதிர்ந்து போய் நிற்க..
” சொன்னது புரியலையா உனக்கு என்றான் அக்னி..
“நீயெல்லாம் ஒரு மனுஷனா என் அப்பாவை பார்த்து கேட்க உனக்கு எப்படி வாய் வந்துச்சு,, உனக்கு வாய் கூசல,, சீ உங்களை போய் நான் இஷ்டப்பட்டேன் பாரு,, என்னை சொல்லணும்” என்று ஆத்திரப்பட்டவள் அவனை அடிக்க பக்கத்தில் வர..
“பக்கத்தில் வராத” என்றான்…
“வருவேன்” என்றவள் அவன் மார்பில் அடித்தாள்..
” நீ எல்லாம் ஒரு மனுஷனா”?.. என்று சொல்லி அக்னியை அடித்தாள்..
” நான் மிருகம் தான் என்னை மிருகமா மாத்தியது உன் அப்பன்”..
” அவர் தெரியாமல் தப்பு செஞ்சாரு,, ஆனா நீங்க என்னை உயிரோடு கொல்லுறீங்க உங்களை என் கடவுள் மாதிரி நினைச்சேனே,, நீங்க தான் எனக்கு எல்லாமுன்னு கனவு கண்டேன் எல்லாம் போச்சு” என்றவள்,, அவனை அடிக்க அவள் அடிப்பதே தடுத்தாமல் அடி என்பது போல் அவன் சிலை போல் இருக்க மாயாவின் போன் ஒலித்தது..
மாயா வீட்டில் வேலை செய்யும் பெண் போன் செய்திருந்தார்.. மாயா போனை எடுத்ததும் “மாயாமா உலகநாதன் அய்யா நெஞ்சு வலி வந்து கீழே விழுந்துட்டாரு நாங்க ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறோம்,, நீங்க வேகமாக வாங்க” என்று போனை வைத்தாள்..
மாயா போனை கையில் வைத்து அப்படியே சிலை போல் நின்று “டாடி டாடி” என்று கண்ணீரோடு புலம்ப..
” என்னடி ஆச்சு உன் அப்பனுக்கு” என்றான் அக்னி..
” அப்பாவுக்கு நெஞ்சு வலியாம் ஹாஸ்பெட்டல் கூட்டிட்டு போறாங்களாம்” என்றாள் திக்கி திணறி…
” அவன் இன்னும் சாகலையா. நான் கூட பொண்ணை பத்தி சொன்னதும் மானஸ்தன் தூக்குல தொங்கிட்டானோன்னு நெனைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டேனன், உன் அப்பன் இன்னும் சாகலையா”?? என்றான் நக்கலாக..
பளார் என்று அக்னியின் கன்னத்தில் அறைந்திருந்தாள் மாயா..
மாயா அடிப்பாள் என்று சத்தியமாக அக்னி நினைக்கவில்லை அவள் அடித்ததும், ஆச்சரியப்பட்டு அவளை “ஏய்” என்று மிரட்ட..
” என்னடா, சொன்னா என்ன சொன்ன என் அப்பாவை சாக சொன்னீயா,, அவர் எதுக்குடா சாகணும்? ஒரு பெண்ணை ஏமாத்தி அழவச்சிருக்கியே நீ சாவு,, நாங்க எதுக்கு சாகணும் என் அப்பா சாகமாட்டார்.. நான் என் அப்பாவை நான் சாக விட மாட்டேன்…
உன் கண்ணு முன்னாடியே நானும் என் அப்பாவும் கம்பீரமாக வந்து நிற்போம்,,
நீ என்னடா என்னை வேண்டாமுன்னு சொல்றது, சீ, போ, தொடாதேன்னு சொல்லுறதுக்கு,, இப்போ நான் சொல்லுறேன் கேட்டுக்கோ எனக்கு நீ வேண்டாம் என்னை சீயின்னு சொன்ன அதே வாயால….
உன்னை என்” என்றவள்..
“விழ வைக்கிறேன் டா..
பெரிய அக்னி இனிமே பார்,,,
இந்த மாயா உலகநாதனை” என்று கத்தி சொன்னவள் தந்தையை பார்க்க ஓடினாள்…
error: Content is protected !!