என் ஜீவன் உன்னை சேருமா 13 2
இரண்டு நாள் கழித்து பேப்பரில் உலகநாதன் மகள் ரியா போலீசில் புகார் அளித்துள்ளார் என்று செய்தி வர..
மாயாவுக்கு ஒன்றும் தெரியவில்லை அவள் ஹாஸ்பெட்டலியே தங்கியதால் வெளியே என்ன நடக்கிறது என்று மாயாவுக்கு ஒன்றும் தெரியவில்லை..
பார்த்திபன் மாயாவுக்கு போன் செய்திருந்தான்..
“சொல்லுங்க அண்ணா” என்றாள் பார்த்திபனின் அழைப்பை பார்த்து..
Advertisement
“இன்னைக்கு பேப்பர் படிச்சியாம்மா” என்றான் பார்த்திபன்..
“எங்கண்ணா நான் அப்பா கூட தான் இருக்கேன் பேப்பர்ல என்ன வந்திருக்கு ணா” என்றாள்..
“நான் ஹாஸ்பிட்டல் வர்ரேன்மா” என்றவன் பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தான்..
Advertisement
“அப்பா எப்படி இருக்காங்கம்மா” என்று கேட்டுக் கொண்டே உலகநாதனை பார்க்க,, உலகநாதன் அமைதியாக தூங்குவது போல் தெரிந்தது..
Advertisement
“இப்ப பரவால்ல அண்ணா, பல்ஸ் நார்மலா தான் இருக்கு இன்னும் கொஞ்ச நாள்ல அப்பா கண்முளிச்சிடுவாரு”.. என்றாள் புன்னகையோடு..
“கொஞ்சம் வெளியே வா மாயா உன் கிட்ட பேசணும்” என்றான் பார்த்திபன்..
வெளிய வந்ததும் அவன் பாக்கெட்டிலிருந்து பேப்பரை எடுத்து மாயாவிடம் நீட்ட..
Advertisement
மாயா பேப்பரை வாங்கி பிரித்து பார்த்தாள்,, அதில் ரியா போலீஸ் புகார் அளித்துள்ளது தெரிந்தது,, தங்கை நடத்தை சரியில்லை, கண்ட ஆடவர்களோடு பேசிக்கொண்டு இருக்கிறாள்.. அதனால் அவளுக்கு தங்கையின் மேல் நம்பிக்கை இல்லை,, தன் தந்தையின் சொத்து எனக்கு வேண்டும் என்று போலீஸில் புகார் அளித்திருப்பதாக செய்தி எழுதியிருந்தது..
அதை படித்தவள் அமைதியாக இருந்தாள், ரியா பண்ணி வச்ச முட்டாள் தனத்தை எண்ணி மனதில் சிரித்துக் கொண்டாள்..
“என் மாயா மேடம் அமைதியா இருக்கீங்கா”..
“அண்ணா மேடம் வேண்டாம் மாயான்னு கூப்பிடுங்க” என்றாள்..
“இல்ல மேடம் உங்களுக்கு கொடுக்கிற மரியாதையின்னு ஒன்னு இருக்குல” என்றான் பார்த்திபன்..
“மரியாதை எல்லாம் ஒன்னும் வேண்டாம், எப்பையும் நான் உங்களுக்கு தங்கைதான்” என்றாள்..
“என்ன பண்ணலாமுன்னு இருக்கீங்க மாயா சொல்லுங்க” என்றான்..
“அண்ணா விலை மதிக்க முடியாத பொக்கிஷம் இங்கே என் பக்கத்தில் இருக்கும்போது, விலை மதிப்பு உள்ள சொத்து எனக்கு எதுக்கு அண்ணா” என்றாள்,
“என் அப்பா ஒருத்தர் எனக்கு போதும் அண்ணா “, நான் அவரை பார்த்துப்பேன். இந்த சொத்து எல்லாம் எனக்கு பெரிய விஷயமே இல்ல அண்ணா எனக்கு அவரோட நிம்மதி தான் முக்கியம்”..
“நீ தைரியமா இருக்குல எனக்கு அது போதும், எல்லாம் உன் இஷ்ட படி நடக்கட்டும், ஏதாவது உதவினா அண்ணாவை கூப்பிடு, எந்த நேரம் இருந்தாலும் பரவாயில்லை அண்ணா வரேன்” என்று சொல்லி கிளம்பினான்..
சரியாக ரியா கணவரோடு வந்து சேர்ந்தாள் ஹாஸ்பிடலுக்கு..
மாயா அமைதியாக இருக்க “என்ன முடிவு பண்ணி இருக்க”?. என்றாள் ரியா..
“நான் என்ன பதில் சொல்லணும் நீ எதிர்பார்க்கிற ரியா, இது நம்ம அப்பா சுயமா சம்பாரிச்ச சொத்து,, அதனால அவர் எழுந்து வந்து தான் முடிவு பண்ணனும் நான் முடிவு பண்ண எனக்கு என்ன இருக்கு” என்றாள் மாயா.
“ஏன் முடிவு பண்ண முடியாதா..
நீ மட்டும் நான் சொல்லுற டாக்குமென்ட்ல சைன் பண்ணு, மத்ததை நான் பாத்துக்குறேன்” என்றாள் ரியா..
“இதை எடுத்தோம் கவுத்தோம்முன்னு முடிவு பண்ண முடியாது ரியா,, கொஞ்சம் பொறுமையா இரு அப்பா எழுந்து வரட்டும், அப்புறமா பேசி முடிவு பண்ணிக்கலாம்” என்றாள் மாயா..
“என்னால முடியாது எனக்கு அப்பா சொத்து எல்லாம் இப்பவே கண்டிப்பா வேணும் நீ சைன் பண்ணு” என்று விடாபிடியாக அவள் நிற்க..
மாயா தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்,,
” மேடம் என்னாச்சு” என்று பார்த்திபன் அருகில் வர…
நீ இன்னும் போகலையா என்பது போல் பார்த்திபனை பார்த்தாள் ரியா..
அவன் வெளியே போகிறான் என்று தெரிந்து தான் ரியா உள்ளே வந்தது..
பார்த்திபன் ரியாவை பார்த்துவிட்டான்,, மாயாவிடம் ஏதாவது பேசி தொல்லை பண்ணுவார்கள் என்று எண்ணி ஓரத்தில் வந்து நின்று கொண்டிருந்தான்..
ரியா பேசியதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சற்று தல்லி நின்றிருந்தவன்.. மாயா தலையில் கைவைத்ததும் என்னவென்று கேட்க வந்து விட்டான்..
” ஒன்னுமில்ல அண்ணா என்னால முடியல” என்றாள் சோர்ந்து போய்..
இருவர் பேசியதை பார்த்து கடுப்பான ரியா,,
“ஆமாம் யாரு இவன் எப்ப பார்த்தாலும் உன் கூடவே இருக்கான்” என்றாள் ரியா கோபமாக..
“ரியா மரியாதையா பேசு இவர் அண்ணா”..
“அண்ணாவா உனக்கு அறிவே இல்லையா யார் யார் கூட பழகணும்னு ஒரு வெவஸ்தை இல்லை” என்றாள் மூஞ்சியை சுலித்தபடி,
“எனக்கு உன்னை விட அதிகமாவே இருக்கு அறிவு”..
“கடைசியா நீ என்ன சொல்ல வர.எனக்கு ஒரு பதில சொல்லு மாயா” என்றாள் ரியா கடும் கோபத்தோடு..
“நான் இப்போ பதில் சொல்லுற சூழ்நிலையில் இல்ல, முதல்ல அப்பா எனக்கு எழுந்து வரணும் அவ்வளவுதான்,, அப்பா வந்தவுடன் கேட்டுக்கோ, என்ன வேணுமுன்னாலும் வாங்கிக்கோ இப்ப என்னை ஆளை விடு” என்றாள் மாயா..
“அவர் எழுந்து எல்லாம் வர மாட்டார்”..
“ரியா வாய மூடு அப்பா வருவார் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” என்றாள் மாயா..
” நான் டாக்டர்கிட்ட கேட்டுட்டேன், டாக்டர் அப்பா பிளைக்குறதுக்கு 20% தான் சான்ஸ் இருக்குன்னு சொல்லிட்டாரு, அதனால எனக்கு அப்பா திரும்பி வருவாருன்னு நம்பிக்கை இல்லை”…
“எனக்கு நம்பிக்கை இருக்கு அப்பா கண்டிப்பா எழுந்து வருவாரு ரெண்டு பெர்ஸன்ட் இருந்தாலே என் அப்பாவை நான் காப்பாத்திடுவேன் 20% இருக்குல்ல கண்டிப்பா எங்க அப்பா எழுந்து வருவார்”…
“அப்போ உனக்கு அப்பா மட்டும்தானே வேணும், அப்போ சொத்தை எனக்கு எழுதி கொடு”..
“ரியா உனக்கு நம்ம நிலமை தெரியலையா கொஞ்சம் பொறுமையா இரு பாத்துக்கலாம் என்றாள்..
“என்னால முடியாது இப்பவே எனக்கு நீ பதில் சொல்லித்தான் ஆகணும்,, ஒன்னு நீ கல்யாணம் பண்ணி என் குடும்பத்தோடு வரணும்,, இல்ல சொத்தை எல்லாம் என் பேருல எழுதணும் இது ஒன்னு தான் எனக்கு வேணும்”….
“சொத்து, சொத்து, உனக்கு சொத்து தானே வேணும் எழுதி தரேன் கிளம்பு” என்றாள் மாயா கோபமாக..
உடனே குஷியானவள் “இன்னும் ரெண்டு நாளுல எல்லாத்தையும் ரெடி பண்ணிருவேன் வந்து சைன் பண்ணி குடு மாயா” என்று சொல்லி சென்றாள்..
மாயாவுக்கு வெறுமையாக இருந்தது. தந்தை வந்துவிட்டார் என்று சந்தோசமாக அவள் இருக்க,,
ரியாவின் செயல் மாயாவுக்கு பிடிக்கவில்லை சொத்து,சொத்து என்று அவள் புலம்புவதை, மாயா வெறுத்தாள்,,
ரியா சொத்து கேட்க வில்லை அவள் பின்னாடி அவள் கணவனும்,கணவனின் விட்டாளுகளும் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டாள்..
மாயாவுக்கு தந்தையை தவிர வேறு எந்த ஒரு விலைமதிப்பான சொத்தின் மேல், எந்த ஆசை இல்லை, இந்த சொத்து எல்லாம் அவளுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. எழுதி கொடுக்க அவள் தயாராகத்தான் இருந்தாள்..
“மாயா நல்லா யோசிச்சியா” என்றான் பார்த்திபன்..
“என்னால முடியல அண்ணா,,
என் அப்பா செத்து பொழச்சு வந்திருக்காரு அதை நினைச்சு நான் சந்தோஷப்பட விடமா, இப்படி சொத்தை கேட்டு வந்து ரியா நின்னா நான் என்ன பண்ண,,
எனக்கு என் அப்பா போதும்,, அவரை நான் பார்த்துப்பேன். என்கிட்ட படிப்பு இருக்கு அமெரிக்கா வேலை இருக்கு சொத்து எல்லாம் எனக்கு பெரிய பிரச்சினையே இல்லை அண்ணா”.. என்றாள்..
“சரி மாயா நான் கிளம்புறேன் அப்பாவ பார்த்துக்கோ”.
“அண்ணா ரொம்ப நன்றி அண்ணா,, நீங்களும் கேசவன் அண்ணாவும் இல்லைன்னா நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பேன் அன்னைக்கு என்று” மாயா நன்றி கூற ..
அப்பாவை பார்த்துக்கோ என்று சென்றுவிட..
அவன் சென்றது அக்னியிடம் தான்,
மாயாவுக்கு அவளின் அக்கா ரியாக்கும் நடந்ததை பற்றி அவன் அக்னியிடம் சொல்ல.. கடும் கோபம்,அவனுக்கு..
“என்ன எல்லாம் சொத்தையும் அவ அக்கா பேர் எழுதி வைக்க போறாளா அவளுக்கு என்ன லூசா பார்த்திபா” என்றான் அக்னி..
” மாயா மேடமை அவங்க அக்கா ரொம்ப கட்டாயப்படுத்துறாங்க, மாயா மேடம் பாவம் என்ன செய்வாங்க” என்றான் பார்த்திபன்..
எக்கேடோ கெட்டு ஒழியட்டும் எனக்கு என்ன என்று அவன் வாய் சொன்னாலும்,, அவனுக்கு மனது கேட்கவில்லை..
“உன் புதிய தங்கைக்கு போன் போடு” என்றான் அக்னி..
“ஏன் உங்க போனில் மேடமை கூப்பிட வேண்டியது தானே”..
“என் போனில் இருந்து கூப்பிட்டா போனை எடுக்க மாட்டா உன் போனை கொடு” என்றான் அக்னி..
“என் போனை எல்லாம் தர முடியாது உங்களுக்கு வேணும்னா உங்க போன்ல இருந்து மாயா மேடம்மை கூப்பிடுங்க, நான் வரேன்” என்று அவன் வேலையை பார்க்க சென்று விட்டான்..
மாயாவுக்கு போன் போடவா வேண்டாமா என்று சிறிது நேரம் பட்டிமன்றம் நடத்தியவன் ஒரு முடிவுக்கு வந்து மாயாவுக்கு போனில் அழைத்தான்…
மாயா அக்னியின் போனை பார்த்து துண்டித்து விட..
மீண்டும் அழைத்தான் மாயாவிற்கு..
மாயா மறுபடியும் போன் வரவும்,, அக்னியின் நம்பரை பிளாக்கில் போட்டு விட்டாள்..
அக்னி மீண்டும் மாயாவுக்கு முயற்சி செய்ய அவன் நம்பர் போகவே இல்லை, தன் நம்பரை பிளாக்கில் போட்டு விட்டாள் என்று அக்னிக்கு கோபம் வர..
மாயா ஒருவரை ஒதுக்கி விட்டால் அவ்வளவுதான், அவரிடம் பேச தனக்கு ஒன்றுமில்லை என்று நினைக்கும் குணம் அவளுடையது,, அதை அறியவில்லை அக்னி.
