Skip to content
Post Views: 2,040
என் ஜீவன் உன்னை சேருமா
அத்தியாயம் -2
Advertisement
Advertisement
அடுத்த நாள் அழகாய் விடிந்தது அக்னிக்கு, நைட் பார்ட்டிக்காக தன்னை இன்று ஸ்பெஷலாக பார்த்து, பார்த்து அழகாய் உடை அணிந்து கொண்டு சென்றான் பார்ட்டிக்கு.
Advertisement
அது ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒரு தளம் முழுவதும் புக் செய்து இருந்தார் உலகநாதன்.
Advertisement
முக்கியமான நபர்களை மட்டும் அழைப்பு இருந்தார் உலகநாதன்.. அவருடைய நண்பர்கள் மட்டுமே. சொந்தகாரர்களை யாரையும் அழைக்கவில்லை, எல்லாம் நண்பர்களே.. ரியாவும் தன் நண்பர்களை அழைத்திருந்தாள்..
அந்த பர்த்டே பார்ட்டி ஹாலிற்க்குள் நுழைந்தான் அக்னி.
சிறிய மேடை போல அமைத்திருக்க, மெல்லிய இசை ஒலித்துக்கொண்டிருந்தது, ஒரு பக்கம் பப்பே முறையில் உணவு பரிமாற ஏற்பாடு செய்து கொண்டிருக்க. வந்த அனைவருக்கும் வெல்கம் டிரிங்ஸ் கொடுக்கப் பட்டு கொண்டிருந்தது..
உலகநாதன் அக்னியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார், தன் மகள் ரியாவை அக்னிக்கு அறிமுகப் படுத்தி வைக்க.
அக்னி பார்ட்டில் ஹாலில் நுழைந்ததும், அவனை எதிர்பார்த்து காத்திருந்த உலகநாதன்.
” ஹாய் அக்னி வெல்கம் வெல்கம்” என்று அவனை கைக்குழுக்கி வரவேற்றவர், உள்ளே அழைத்துச் செல்ல.
உலகநாதன் தன்னை இப்படி கவனிப்பதில் இருந்தே அவரின் எண்ணம் புரிந்தவன் அவரின் இழுப்பிற்கு சென்றான்.
தன் நண்பர்கள் அனைவரிடம் அக்னியை அறிமுகப்படுத்தி வைத்தவர் மகள் ரியாவை தேட..
அவளோ அவள் நண்பர்களிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்..
மகளிடம் வந்தவர் “ரியா பேபி” என்று மகளை அழைக்க.
“டாட்” என்று அவர் அருகில் வந்தவளை பார்த்தான் அக்னி ஆறடி உயரத்தில் உலகநாதன் முக வடிவில் நல்ல நிறமாக இருந்தாள் ரியா..
ரியா ப்ளூ கலர் லாங் பிராக் சீவ் லெஸ், உடை அணிந்து, கையிலும் கழுத்திலும் வைரத்தில் ஆன நகை அணிந்து, நான் உலகநாதனின் மகள் என்ற தோறனையில் அக்னியின் முன் வந்து நின்றாள் ரியா.
“இது என் பொண்ணு ரியா” என்று மகளை அக்னிக்கு அறிமுகம் படுத்தி வைத்தார் உலகநாதன்…
“ஹாய் ஹாப்பி பர்த்தடே” என்று அவன் வாங்கி வந்த தங்க பிரேஸ்லெட்டை ரியாவுக்கு பரிசளித்தான் அக்னி.
அதை வாங்கி கொண்டவள் “தேங்க்யூ ஃபார் கம்மிங்” என்று அவனை பார்த்து சொன்னாள்…
உலகநாதன் அக்னியைப் பற்றி ரியாவிடம் கூற.
“ஓ….” என்று அவர் பேசியதை கேட்டவள் கவனம் இங்கே இல்லாமல் வாசலை வாசலை பார்த்துக் கொண்டிருந்தாள் ரியா.
அக்னிக்கு புரிந்தது அவளின் கவனம் இங்கே இல்லை என்று.
ஒரு ஐந்து நிமிடம் தந்தை பேசியதை கேட்ட ரியா, “நான் என் பிரண்டு கூட இருக்கேன் டாடி” என்று சென்றுவிட்டாள்…
உலகநாதன் அக்னியை பார்த்து “உன்கிட்ட ஒன்னு பேசணும் அக்னி உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு, என்னை சின்ன வயசுல பார்த்த மாதிரியே இருக்க நீ,” என்றவர்.
நேராக விஷயத்துக்கு வந்தார். “உன்னை என் மருமகனாக ஆக்க ஆசைப்படுகிறேன் அக்னி, என் பொண்ணு ரியாவை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா?”.. என்று கேட்க.
இதற்க்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது போல் அக்னியின் மைண்ட் வாய்ஸ் கேட்க.
முதலில் அதிர்ச்சி அடைந்தவன் போல் முகத்தை வைத்தவன், பின்பு ‘”சார் என்ன சொல்றீங்க உங்க பொண்ணையா?”.
“ஆமாம் அக்னி உன்னை மாதிரி ஒரு பையனைத்தான் நான் தேடிட்டு இருந்தேன். என் பொண்ணை கல்யாணம் பண்ண உனக்கு சம்மதமான்னு சொல்லு”..
“முதல்ல உங்க பொண்ணு கிட்ட என்னை கல்யாணதம் பண்ண சம்மதமான்னு கேளுங்க”…
” நான் சொன்னா என் பொண்ணு கேட்பா அக்னி, நீ சரியின்னு சொல்லு” என்றதும்..
“உங்க பொண்ணு ஓகே சொன்னா நான் எங்க அம்மா கிட்ட கேட்டு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்றேன் சார்”. என்றதும்
“சரி அக்னி” என்று இருவரும் பேசிக் கொண்டிருக்க..
“டாட்” என்று ஒருவனை கைகோர்த்து கொண்டு ரியா தன் அருகில் வந்து ஒரு பையனோடு நிற்க,
உலகநாதன் யார் இவன் என்று மகளை பார்த்தார்..
“டாட் ஹி இஸ் ரிஷி, மை லவ்வர்” என்று ரிஷியை தந்தைக்கு அறிமுகம் படுத்தி வைக்க..
ஷாக் அடித்தவர் போல் உலகநாதன் மகளை பார்த்தார்..
“சாரி டாட்” என்றவள் ரிஷியை பற்றிய விஷயங்களை அனைத்தையும் தந்தையிடம் சொல்லி முடிக்க..
மகளின் மீது கோபம் கொண்டவர். “கம் வித் மி” என்று முன்னாடி செல்ல, தந்தையின் பின் சென்றாள் ரியா..
அவளை ஒரு அறைக்கு அழைத்து வந்தவர், “என்ன பண்ணிட்டு இருக்க ரியா?” என்ற மகளின் மீது கோபப்பட…
“சாரி டாட் எனக்கு ரிஷியை ரொம்ப பிடிச்சிருக்கு”.
“அதை இப்பதான் என்கிட்ட சொல்லுற நேரமா ரியா?”..
“சாரி டாட் ரிஷி ரொம்ப பிஸி, மும்பையில் பிஸ்னஸ் பண்ணுறாரு அவர ஒரு பார்ட்டியில மீட் பண்ணினேன் எனக்கு அவரை புடிச்சிருக்கு, நான் தான் என் விருப்பத்தை அவர்கிட்ட சொன்னேன்”…
” நான் இதுக்கு ஒத்துக்கலைன்னா என்ன பண்ணுவா ரியா? “.. என்றார் உலகநாதன்..
” நீங்க கண்டிப்பா ஒத்துக்குவீங்க டாடி அப்படி இல்லன்னா நான் ரிஷியை கண்டிப்பா மேரேஜ் பண்ணிப்பேன்”..
” அப்போ ஒரு முடிவோட தான் இருக்க? “..
” எஸ் டாட்” என்று கூலாக பதில் சொல்ல.
“அவனைப் பார்த்தா நம்ம தமிழ் பேசுற ஆளுங்கள மாதிரி தெரியலையேமா?”..
” எஸ் டாடி ரிஷி மராட்டி மொழி பேசுறவரு, பூர்வீகம் ஒடியா, ஒடியாவும் பேசுவாரு” என்று மகள் கூற..
” ஓ.. ஷிட்…..நான் உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்த்து வைத்திருக்கிறேன் தெரியுமா? ” என்று கோபப்பட்டு புலம்ப..
“டாட் நான் ரிஷியைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன், நாங்க இன்னைக்கு ரிங் மாத்திக்க போறோம், கூடிய சீக்கிரம் மேரேஜ் பண்ண பிளான் பண்ணி இருக்கோம்”…
“ஓ…” என்று மகளை பார்த்தவர் “தாயில்லாத பொண்ணுன்னு உங்கள செல்லம் கொடுத்து வளர்ந்தது தப்பா போச்சு” என்று மிகவும் வருத்தப்பட்டார்..
அவர் வருத்தப்படுவதை கொஞ்சம் கூட காதில் வாங்காதவள். “மம்மி இருந்தாலும் நான் இப்படித்தான் இருப்பேன் டாடி”.. என்ற மகளை..
ஒன்றும் கூற முடியாத தன் நிலமையை யோசித்து பார்த்தவர் “வா போலாம்” என்று வெளியே அழைத்து வந்தார்..
உலகநாதனின் இறுகிய முகத்தை பார்த்தா அக்னி. உன் பொண்ணு என்கிட்ட இருந்து சப்பிச்சிட்டா, உலகநாத் என்று மனதில் சொல்லி சிரித்தான்.
அக்னியிடம் எப்படி சொல்வது என்று உலகநாதன் மருகி நிற்க.
அவரின் கைமிது தன் கையை வைத்த அக்னி.. “இஸ் ஓகே சார் நோ பிராப்ளம் உங்க பொண்ணை பாருங்க அவங்க சந்தோஷம்தான் முக்கியம்” என்று கூற.. அவனின் மேல் உள்ள மதிப்பு இன்னும் கூடியதே தவிர குறையவில்லை…
“சாரி அக்னி” என்று அவனிடம் வருத்தப்பட்டு கூற.
“நோ ப்ராப்ளம் சார்” என்றவன் கிளம்ப பார்க்க..
அக்னி சாப்பிட்டு தான் போகணும் என்று பிடிவாதமாக அவனை நிறுத்தி உண்ண சொல்லி, உணவு இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார்..
ரியாவும், ரிஷியும் மேடையில் பிறந்தநாள் கேக் வெட்டி மோதிரம் மாத்திக்கொண்டு சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்று அறிவித்தனர்.
உலகநாதனின் நண்பர்கள் “என்னடா பொண்ணு கல்யாணத்தை பற்றி ஒன்னுமே எங்ககிட்ட சொல்லவே இல்லையே” என்று வருத்தப்பட்டு கேட்க.
என் பொண்ணு என்கிட்டயே சொல்லல்ல.. என்று மனதில் நினைத்தவர், “சர்ப்ரைஸ்” என்று சிரித்து சமாளித்தார் நண்பர்களிடம்…
திடீரென்று பார்ட்டி ஹாலிற்குள் 10 காலேஜ் படிக்கும் பிள்ளைகள் தோளில் பேக்கோடு பார்ட்டி ஹாலிற்குள் நுழைய…
அக்னி உணவு உண்டு கொண்டே அவர்களை வேடிக்கை பார்த்தான்.
அனைத்து பிள்ளைகளும் மேடைக்கு சென்று ரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல.
வேண்டா வெறுப்பாக சின்ன சிரிப்பை சிரித்து வைத்தாள் அவர்களைப் பார்த்து..
ரியாவை அணைத்த மாயா “பிறந்தநாள் வாழ்த்து அக்கா” என்று வாழ்த்து கூற.
தங்கையை பார்த்து முறைத்தவள் “ஏன் உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் கூட்டிட்டு வந்த? தனியா வர வேண்டியதுதானே?” என்று தங்கையின் காதில் மெதுவாக கூற..
“உனக்கு இப்போ என்ன? என் ப்ரெண்ட்ஸ் நான் கூட்டிட்டு வர்ரேன். அப்பா கூப்பிட்டாரு, நாங்க வந்தோம்”.. என்றாள் தகவல் சொல்வது போல.. உன் பிறந்த நாளுக்கு வர எனக்கே விரும்பம் இல்லை என்று மனதில் நினைத்ததை சொல்ல முடியுமா,,
“சரி கூட்டிட்டு வந்த, பார்ட்டிக்கு எப்படி டிரஸ் பண்ணிட்டு வரணுமுன்னு உனக்கு தெரியாதா? நீயும் இப்படி டிரஸ் பண்ணிட்டு வந்து என்னை கேவலப்படுத்துறீயா, உன் கூட வந்தவங்களை பாரு, லோக்கல் பசங்க மாதிரி, என்னை அசிங்கப்படுத்தவே வந்து இருக்க”..
“நாங்க காலேஜ் கோச்சிங்கில் இருந்து அப்படியே வந்தோம், சாரி வந்தது தப்பு தான், உனக்கு மனதார பிறந்தநாள் வாழ்த்து சொல்ல தான் நாங்க வந்தோம் கிளம்புறோம்”.. கூற.
” ஆமாம், ஆமாம் உங்க ப்ரெண்ட்ஸ் தானே வாழ்த்த வந்தாங்க அங்க பாரு பார்ட்டியை எப்படி வேடிக்கை பாக்குறாங்கன்னு,, என்னை அவமானம் படுத்தவே இந்த பிச்சகார காலேஜ் பசங்களை கூட்டிட்டு வந்தீயா, முதல்ல கிளம்பு”.. என்றவளை பார்த்த மாயா..
“பார்ட்டி என் அப்பா காசுல நடக்குது, என் நண்பர்களை நான் கூட்டிட்டு வருவேன்,என்ஜாய் பண்ணுவேன், சாப்பிடுவேன், உனக்கு அவங்களை பார்க்க பிடிக்கலன்னா கண்ண மூடிக்கோ”….
“வாங்க நம்ம கீழே போகலாம்” என்று தன் நண்பர்களை அனைவரும் அழைத்துக்கொண்டு கீழே சென்றாள் மாயா..
உலகநாதனிடம் சென்றவள் “டாடி” என்று அழைக்க..
“டேய் பாப்பா எப்போ வந்தா?”.. என்றவர் மகளை அணைத்துக்கொண்டார்..
“இப்பதான் வந்தேன் டாடி, நாங்க கிளம்புறோம் டைம் ஆச்சு” என்று கூற..
“டேய் இருடா” என்றவர் அவளுடன் வந்த பிள்ளைகளை நலம் விசாரித்தவர். உண்டு விட்டு செல்லுமாறு என்று அனைவரிடமும் உலகநாதன் கூற.
“இல்ல டாடி டைம் ஆச்சு நாங்க கிளம்புகிறோம் ஹாஸ்டல் கேட்டை மூடிடுவாங்க டாடி” என்றாள் மாயா..
மகளிடம் கோபித்துக் கொண்ட உலகநாதன்.
கேக்கை கட் பண்ணி வந்த பிள்ளைகளுக்கு அனைவரும் கொடுக்க சொன்னவர்..
உணவை பேக் செய்து வந்த அனைத்து பிள்ளைகளிடம் கொடுத்து ஹாஸ்டலில் சென்று உண்ணும் மாறு கூறி அனுப்பினார்..
தன் தந்தையை ஒரு மெச்சுதல் பார்வை பார்த்தவளை அணைத்து விடைகொடுத்தார் மாயாவின் தந்தை உலக நாதன்.
உலகநாதனுக்கு இப்படி ஒரு பொண்ணா என்று அவளை பார்த்த படியே சென்றான் அக்னி..
இரண்டு மாதம் கழித்து அக்னியின் கம்பெனிக்கு வந்திருந்தார் உலகநாதன் தன் மகள் ரியாவின் கல்யாணம் பத்திரிக்கையை கொடுக்க.
வந்த வரை “வாங்க வாங்க” என்று வரவேற்றான் அக்னி.
அவன் வரவேற்பை ஏற்றவர்.
“இன்னும் ஒரு வாரத்தில் என் பொண்ணு ரியாவுக்கு கல்யாணம் நீ கண்டிப்பா உன் குடும்பத்தோடு வரணும் அக்னி” என்று பத்திரிக்கை வைத்தார்.
” கண்டிப்பாக வர்ரேன் சார்” என்று பத்திரிகை வாங்கிக் கொண்டான்.
அக்னியிடம் நீண்ட நேரம் பேசிவிட்டே சென்றார் உலகநாதன்.
அக்னிக்கு இந்த திருமணத்துக்கு செல்ல விருப்பமில்லை மறந்தே விட்டான் கல்யாண தேதியை.
ரியா கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு உலகநாதன் அக்னிக்கு போன் செய்து கண்டிப்பாக திருமணத்துக்கு வர வேண்டும் என்று கூறி.. கல்யாண மண்டபத்தில் லொகேஷனை அவன் போனிற்கு அனுப்பி வைக்க..
ஐயோ இவர் அன்புத் தொல்லை தாங்க முடியவில்லையே என்று நினைத்தவன் கண்டிப்பாக கல்யாணம் போகணும் என்று முடிவு செய்தான்.
ஒயிட் கலர் சட்டையும் ப்ளூ நிற ஜீன்சில், அழகாக பூங்கொத்தோடு கிளம்பினான் அக்னி…
மிகப்பெரிய கல்யாண மண்டபத்தினுள் நுழைந்தான் அக்னி.. கூட்டம் அலைமோத, மராட்டிய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்து கொண்டிருந்தது கூட்டம் அதிகமாக இருக்க திருமணம் முடிந்தவுடன் உலகநாதனை பார்த்துவிட்டு செல்லலாம் என்று காத்திருந்தான் அக்னி…
திருமணம் முடிந்தும் கூட்டம் குறைவதாக இல்லை,,
அக்னியின் நண்பன் போன் செய்ய பேசிவிட்டு வரலாம் என்று வெளியே சென்றான்..
பேசிவிட்டு வந்த பின் பார்க்க திருமணம் முடிந்து அனைவரும் உணவு உண்ண சென்றிருக்க, கூட்டம் கொஞ்சம் குறைந்தது போல் தெரிய,,. உலகநாதனை தேடினான்..
கல்யாண மேடையில் சிறிது கூட்டமே இருக்க உலகநாதன் அவனைப் பார்த்ததும் “வா வா அக்னி” என்று மேடைக்கு அழைத்தார்.. பூங்கத்தோடு மேடை ஏறினான் அக்னி..
மணமக்களுக்கு அறிமுகப்படுத்திய வைத்தார் அக்னியை.. வாங்கி வந்த பூங்கொத்தை இருவரிடம் கொடுத்து “ஹாப்பி மேரேஜ் லைப்” என்று வாழ்த்து கூறினான்..
“தேங்க்யூ ஃபார் கம்மிங்” என்று அக்னியை பார்த்து புன்னகையோடு சொன்னாள் ரியா..
அக்னியை பார்த்து “சாப்பிட்டு போ அக்னி” என்று உலகநாதன் சொல்ல.
“இருக்கட்டும் சார் நான் கிளம்புறேன்” என்றான் அக்னி.
“இருப்பா” என்றவர் யாரையோ தேட, தேடியவர் கண்ணில் பட்டதும் “மாயா, மாயா” அவரின் சின்ன மகளை அழைத்து அவளை அக்னிக்கு அறிமுகம்படுத்தினார்.
“என் சின்ன பொண்ணு மாயா ஐ ஐ டி காலேசில் பைனல் இயர் படிக்குற” என்று அறிமுகம் படுத்திவைக்க..
“ஹலோ மாயா” என்றிருந்தான் அக்னி..
“ஹாய் சார்” என்றாள் மாயா..
“பாப்பா அக்னி நம்ம ஊரு பக்கம் தெரியுமா உனக்கு, அக்னியை சாப்பிட வச்சு அனுப்பி வைடா, நம்ம ஸ்பெஷல் கெஸ்ட் ” என்று கூறி ஒரு நண்பரை மேடைக்கு அழைக்க சென்றுவிட்டார்..
“வாங்க சார்” என்று மாயா அக்னி அழைக்க..
“நீ போய் உன் சொந்தக்காரங்கள பாரு மாயா நான் கிளம்புறேன்” என்று கூற.
“வாங்க சார் நீங்களும் எங்க கெஸ்ட் தான்” என்று மாயா அழைக்க ..
அக்னிக்கு அவளுடன் செல்ல தயக்கமாக இருக்க..
மண்டபத்தில் கூட்டமாக இருப்பதை பார்த்தவனின் கையைப் பிடித்த மாயா உணவு உண்ணும் இடத்திற்கு அக்னியை வேகமாக அழைத்து செல்ல..
தன் கையை பிடித்து இழுத்து போகும் மாயாவை பார்த்து இருந்தான்..
அன்று பர்த்டே பார்ட்டியில் குட்டி பெண்ணாகத் தெரிந்தவள் இன்று தாமரை வண்ண நிறத்தில் பட்டுப் புடவை அணிந்து.. தன் முன் கல்யாண பெண் போல் முழு அலங்காரத்துடன் இருக்கும் பெண்ணை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை அவனால்.
தன் மனதை பெரும் பாடு பட்டு அடக்கி இருந்தான் அக்னி.
அவனின் பக்கத்திலேயே நின்று உண்ண வைத்து கடைசி வரைக்கும் அவனுடன் இருந்து வெளியே அழைத்து தாம்பூலப் பையை அவன் கையில் கொடுத்து, “கல்யாணத்துக்கு வந்ததுக்கு நன்றி சார்” என்று தன் இரண்டு கையை கூப்பி நன்றி சொல்லி அனுப்பி வைத்த மாயாவின் பிம்பத்தை தன் கண்ணீல் நீங்காத இடம் பிடித்து வைத்திருந்தான் அக்னி.
அழகிடி நீ என்று மாயாவை நினைத்து பார்த்தவன், ஏன்டா காலேஜ் படிக்குற பிள்ளையை ரசிக்கிறீயா உனக்கு அறிவு இருக்கா என்று ஒரு மனம் கேட்க.
அழகா இருந்தா ரசிக்கலாம், அதுவும் அவளின் பூசினார் போன்ற உடல்வாகு, உப்பிய பன் கன்னம் குட்டி ஹன்சிகா போன்று இருப்பவளை நினைக்காமல், ரசிக்காமல் இருக்க முடியவில்லை அக்னியால்…..
error: Content is protected !!