Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன் உன்னை சேருமா 22 1

என் ஜீவன் உன்னை சேருமா
அத்தியாயம் -22


Advertisement

Advertisement

Advertisement

   உலகநாதன் ரதிதேவியின்  அருகில் வர…
ரதிதேவிக்கு அவரை அருகில் பார்க்க முடியாமல் குனிந்து கொண்டாள்..

Advertisement

ரதி தன்னை பார்த்து வெட்கப்பட்டு குனித்து  கொள்வதை பார்த்த படியே  பெண்களின் அருகே வந்தார் உலகநாதன்..
சவித்தா  உலகநாதனை பார்த்து, “நீங்க ஏன் சார் பக்கத்தில் வர்ரீங்க, அது தான்  நான்  நேத்தே சொல்லிட்டேனே ரதி அக்காவுக்கு கல்யாணம் பேசி முடிச்சாச்சுன்னு,, இனி இப்படி எல்லாம் பக்கத்தில்  வந்து பேச கூடாது, பார்க்க கூடாது போங்க” என்று சவிதா உலகநாதனை திட்ட..
அவர் அதற்கு சிரிக்க..
இவர் என்ன லூசா நாம திட்டுறது இவருக்கு கேட்கலீயா,,
“ஹலோ சார் கிளம்புங்க, இன்னொரு   முறை என் ரதிக்கா கிட்ட பேச வந்தீங்க அவ்வளவு தான்” என்றாள்..
“நீ சொல்லுறதை  உன் அக்காவை சொல்ல  சொல்லு, நான் போயிடுறேன்”.. என்றார் ரதியை பார்த்தவாரு..
“ரதிக்கா நீ சொல்லு, இனிமே  என்கிட்ட  வந்து பேச கூடாது, எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சுன்னு சொல்லு”.. என்று சவிதா கூற..
அவளோ “சவி… சும்மா இரு,” என்றிருந்தாள்..
உலகநாதன்  இரு பெண்கள் பேசவதை பார்த்து குழுங்கி சிரிக்க..
ரதி அமைதியாக இருக்கவும், சவிதா ரதியை முறைத்து பார்த்தவள்..
“நீ ஏன்க்கா இப்படி அமைதியா  இருக்க, திட்டு அவரை” என்றாள்..
“எங்கே என்னை திட்டுவாளா உன் ரதி  அக்கா, திட்ட சொல்லு பார்ப்போம்”  என்று சவிதாவிடம் மல்லுக்கு நிற்க..
“அக்கா அவரை பார்த்து திட்டுக்கா”.. என்றாள்..
“மாட்டேன் ” என்று ரதி தலையாட்ட..
“பார்த்தீயா!   என் ரதி என்னை திட்டிருவாளா”..
“ஹலோ மிஸ்டர் என்ன ஓவரா பேசுறீங்க, என் ரதி, என் ரதின்னு,, அக்காவுக்கு இன்னும் இரண்டு வாரத்துல கல்யாணம், இப்படி வந்து எங்களை தொந்தரவு பண்ணாதீங்க, அப்புறம் ரதி அக்கா வீட்டுல  சொல்லிருவோம் சாக்கிரதை” என்றாள்..
“அதெல்லாம்  நான் என் ரதி கிட்ட பேசாமல்  இருக்கமாட்டேன், என் ரதி எனக்கு தான்”..என்றதும்..
ரதி உலகநாதனை நிமிர்ந்து   பார்க்க..
 அவரோ  உதட்டை மடித்துக் கொண்டு சிரிப்பை அடக்கிய படியே சவிதாவிடம் பேச..
அந்த வசீகரமான முகத்தை விட்டு ரதியால்   தன் முகத்தை திருப்ப முடியவில்லை.
 உலகநாதன் என் ரதி என்றதும்.. கோபம் கொண்ட சவிதா  “என்னது  உங்களோட ரதியா?”..
“ஆமாம் என் ரதி தான் எனக்கு மட்டும்தான் “..என்றதும் ரதி மீண்டும்  அவரை நிமிர்ந்து பார்க்க,
நிமிர்ந்து பார்த்தவளை   கண்ணடித்தும் சிரித்துக் கொண்டே  சவிதாவிடம் பேச..
ரதி உலகநாதன் கண்ணடித்ததும் வெட்கப்பட்டுக்கொண்டே குனிந்து கொண்டாள்..
ரதி வெட்க படுவதை பார்த்தா சவிதா,,
”  ரதிக்கா உனக்கு என்னாச்சு, ஏன் இப்படி அவரை பார்த்து சிரிக்கிற? அப்போ  இவரை உனக்கு புடிச்சிருக்கா” என்றாள்.
 அவளோ “சும்மா இருளா, நாம  போகலாம்”.. என்று சவியை பிடித்து “வா “என்று வீட்டிற்கு அழைக்க…
” அக்கா உண்மையை  சொல்லு யாரு இவரு? “…
 “அவங்க தான்” என்றாள்  ரதி..
” அவங்க என்ன?.. யாரு இவரு எனக்கு புரியல? ”  என்றாள் சவிதா..
” அதான்  நேத்து என்னை பொண்ணு பாக்க வந்தாங்கல,  அந்த மாப்பிள்ளையே  இவங்க தான்” என்று ரதி கூற..
” என்ன? ” என்ற சவித்தா உலகநாதனை ஆச்சரியமாக பார்த்தாள்..
” என்ன தங்கச்சி சந்தேகம் தீர்ந்ததா, இல்லை  இன்னும் ஏதாவது என்னை திட்டுறதுக்கு ஏதாவது  பாக்கி இருக்கா” என்று கூறி உலகநாதன் சிரிக்க..
” சாரி அண்ணா தெரியாம  திட்டிட்டேன், “..
“ஏன் ரதிக்கா முதலில் நீ என்கிட்ட சொல்லல்ல?” என்று ரதியை அவள் திட்ட…
” நீ எங்கம்மா   ரதியை பேச விட்டீங்க?  என்னை திட்டுவதே வேலையா வச்சுக்கிட்டு இருந்தா ரதி  என்ன பேசுவா? “.
‘ ஐயோ சாரி அண்ணா,  ரதிக்கா ரொம்ப அமைதி ரொம்ப பேச மாட்டாங்க, என் பிரண்டு அதனால தான் இப்படி,, என் ரதி அக்காவை நான் தானே பார்த்துக்கணும்” என்று சொல்லிவிட்டு ரதியை தோள் அணைத்தவள்…
“என்னை  லூசு மாதிரி பேச விட்டு வேடிக்கை பார்த்து  இருக்கே” என்று கூறி ரதியை பார்த்து சிரித்தவள்..
” ரஜினிகாந்த் சூப்பராக இருக்காரு,  உங்க ஜோடி பொருத்தம் சூப்பர்”  என்று இருவரையும் பார்த்து சவித்தா கூற…
 “யாரு ரஜினிகாந்த்?” என்றார் உலகநாதன்,,
” நீங்க தான் ரஜினிகாந்த்” என்றாள் சவித்தா..
“நானா?”..
” ஆமாம் சார் நீங்க பார்க்க  கொஞ்சம் ரஜினிகாந்த் மாதிரியே இருக்கீங்களா அதுதான் உங்களுக்கு நாங்க ரஜினி காந்துன்னு  பேரை வச்சோம்”.. எப்படி என்பது போல் அவள் சிரிக்க..
உனக்கு இது தெரியுமா என்பது போல் ரதியை உலகநாதன் பார்த்தார்…
தெரியும் என்பது போல் கண்களாலே ரதி உலகநாதனிடம் பேச..
இருவரும் பார்வையிலே வார்த்தைகளை பரிமாறிக்கொள்ள..
 இருவரின் பார்வை பரிமாற்றத்தை பார்த்தா சவிதா..
” நான் எதுக்கு நடுவுல கரடி மாதிரி நான் கிளம்புறேன் பாய் ரதிக்கா,, என்றவள்,, உலகநாதனை  பார்த்து ” சீக்கிரம் பேசிட்டு  அனுப்பி வைங்க  என்  அக்காவை” என்றவள் ரதியை  பார்த்து சிரித்து விட்டு செல்ல..
” இரு நானும் வர்ரேன்” என்று ரதி அவளோடு கிளம்ப  பார்க்க..
” ரதி நீ   இரு நான் உன்கிட்ட பேசணும்” என்றார் உலகநாதன்..
 சவியைப் பார்த்து “நீ போமா நான் பேசிட்டு ரதியை கொண்டு வந்து வீட்டில் இறக்கி விடுறேன்” என்றார்..
சவிதா சிரித்துக்கொண்டே கிளம்ப..
” நானும் போறேன்” என்றாள் ரதி.
” உன்கிட்ட பேசணும்  ரதி, வா வந்து வண்டில ஏறு'” என்று  பைக்கை ஸ்டாட் பண்ணி  உலகநாதன்  ஏறி அமர..
 ரதி  மாட்டேன் என்பது போல் நின்று இருக்க.
 “ரதி உன்கிட்ட பேசணும், இங்க நின்னு  பேச முடியாது” என்றவர் ஆட்கள்  வந்து போயிக்கொண்டு இருப்பதை பார்த்து அவர் கூற..
” அம்மா திட்டுவாங்க நான் வீட்டுக்கு போறேன்” என்று மறுபடியும் ரதி கூற..
” ஒரு நிமிஷம்”  என்றவர் சிவப்பிரகாஷை போனில் அழைத்து “உங்கள் தங்கச்சி ஸ்கூல்ல  தான் இருக்கேன் மச்சான்,  அவகிட்ட தனியா பேசணும்  அவளை கூட்டிட்டு போகலாமா?” என்று அனுமதி கேட்க….
 உலகநாதன் நேத்து பேசியதை வைத்தே அவர் குணம் அறிந்தவர்.. இந்த வயதை அவரும் கடந்து வந்தவர் தானே,, என்று நினைத்து..
 உலகநாதன் மேல்  நம்பிக்கை இருக்க..
“கூட்டிட்டு போயிட்டு வாங்க மாப்பிள்ளை” என்று அனுமதி தர..
” ஆனா உங்க தங்கச்சி என் கிட்ட பேச வர மாட்டேங்குற,  அடம் பிடிக்குறாளே”  என்றார் புகார் வாசிப்பது போல..
 அவர் இப்படி  சொன்னதும் தன் கண்களை விரித்து ரதி உலகநாதனை பார்த்தாள்..
” பேசு” என்பது போல் அவளிடம் போனை நீட்ட..
 “மாட்டேன்”என்றாள்..
” உங்க அண்ணா தான்” என்றதும்..
போனை காதிற்கு கொடுக்க.. “பாப்பா” என்று அண்ணனின் குரல் கேட்டதும்..
“அண்ணா” என்றாள்..
” பாப்பா மாப்பிள்ளை கூட பேசிட்டு வா,, உன் மனசுல இருக்குறத அவர் கிட்ட சொல்லு,, அவரை  பத்தியும்  நீ தெரிஞ்சுக்கோ, ” என்று அவர் அண்ணனாக அறிவுரை கூற..
” அண்ணா அம்மா” என்றாள் தன் அம்மாவின் குணம் அறிந்து..
” நான் சொல்லிக்கிறேனன்  பாப்பா நீ பார்த்து போயிட்டு வா'” என்றவர்,,.
‘ மாப்பிள்ளை கிட்ட போனை குடு” என்றார்..
 ரதி  போனை நீட்டவும்..
” சொல்லுங்க மச்சான்” என்றார்..
” மாப்பிள்ளை பாப்பாவை எங்க கூட்டிட்டு போறீங்க”? என்று ஒரு அண்ணனாக அவருக்கு கொஞ்சம் பொறுப்பு இருக்கே..
” ரதிக்கு ஒரு போன் வாங்கி கொடுக்கணும்,,அதுக்காக திருநெல்வேலி கூட்டிட்டு போறேன்,, அப்புறமா கோவிலுக்கு  கூட்டிட்டு போயிட்டு கொண்டு வந்து உங்க வீட்டில் விடுகிறேன்” என்று அவர் கூற..
” சரி மாப்பிள்ளை” என்று ஃபோனை வைத்தார் சிவப்பிரகாஷம்..
 உலகநாதனின்  பொறுப்பான பேச்சும், அவர் தங்கைக்கு போன் வாங்கி கொடுப்பது,  இவை அனைத்தையும் பார்த்து இன்னும் அவரை  பிடித்துப் போனது… தன் தங்கச்சியை  இவர் நல்லா பார்த்துக் கொள்வார் என்று எண்ணம் அவர்  மனதில் தோன்றியது..
” இப்போவவது என் கூட  வருவீங்களா ரதிதேவி,, பர்மிஷன் வாங்கியாச்சு” என்று  அவளை அழைக்க..
” சரி” என்று  உலகநாதன்  பைக் அருகில் வர..
 இருவருக்கும் சொல்ல முடியாத ஒரு உணர்வு…
 அவர் பைக்கில் ஏறு என்பது போல் கண்ணைக்காட்ட..
 “சரி'” என்று தலையாட்டினாள்  ரதி…
 உலகநாதன் பைக்கை ஸ்டாட் பண்ணி “ஏறு ரதி” என்றார்..
 அவளோ  மெல்ல தயங்கியவாரே தன் ஹேண் பேக்கையும், லஞ்ச் பேக்கையும் பிடித்துக் கொண்டு ஏற சிரமப்படுவதை பார்த்தவர்..
 அவளிடமிருந்த  “பேக்கை குடு” என்று வாங்கி வண்டியின் முன் கம்பியில்  மாட்ட,,
 தன் முகத்தை பார்த்து புரிந்து கொண்டு உலகநாதனை தொடாதவாறு பின்னாடி  ஏறி அமர்ந்து கொண்டாள்..
 தன்னவளோடு ஒரு பயணம்,, அதை  ரசித்துக்கொண்டு  பைக்கை வேகமாக திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தார்..
” மெதுவா,  போங்க மச்சான்” என்று ரதி கூறியதும்..
 “என்ன” என்பது போல் சடன் பிரேக் போட்டு வண்டியை உலகநாதன் சாலையோரம் நிப்பாட்டி  இருந்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!