Skip to content
Post Views: 845
அக்னி மனதில் ஆண்களை பற்றி நினைத்துக்கொண்டான் ‘சுகம் கொடுத்து,,சுகத்தை பெற்றுக்கொள்கிறார்கள் ஆண்கள்.. ஆனால் பெண்களுக்கு தான் வலியும், வேதனையும் மிச்சம் போல என்று அவளின் தலையை வருடி விட.. மாயாவின் முணங்கள் மெல்ல மெல்ல குறைந்தது…
மாயா லேசாக கண் திறந்து பார்த்தாள் அக்னியை..
Advertisement
மாயாவின் அருகில் வந்து அவளின் கண்ணோடு கண் கலந்து “சாரிடா என்னால தானே உனக்கு இது எல்லாம் நான் தப்பு பண்ணிட்டேன், நானும் இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கணும்,. என்றவன்..
நான் ரிசப்ஷன் அன்னைக்கு நடந்து கொண்டது பெரிய தப்பு என்னை மன்னித்துவிடு டா” என்று அவளின் கண்ணை பார்த்து மன்னிப்பு கேட்க..
Advertisement
அவளோ மீண்டும் “கை வலிக்குது” என்று முணங்கினாள்..
Advertisement
“டேய் பட்டு” என்று அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்..
Advertisement
அவளிடமிருந்து மீண்டும் “வலிக்குது” என்று முணங்கள் வர..
“நான் தாண்டா எல்லாத்துக்கும் காரணம்,, உன்னை இப்படி கஷ்டப்பட வச்சிருக்கேன்,, நீ எப்படி எல்லாம் கஷ்டப்படுவேன் எனக்கு தெரிஞ்சு இருந்தா , நான் உன் கிட்ட கூட வந்து இருக்க மாட்டேன் மாயா,,.. என்னால தானே உனக்கு எல்லாம்” என்று அவன் புலம்ப..
அவன் புலம்புவதை கேட்டுக்கொண்டே “தண்ணீ” என்றாள்..
அவன் வாங்கி வைத்த ஜூசை எடுத்து மாயாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க கொடுத்தான்….
அவள் கஷ்டப்படுவதை பார்க்க முடியாதவன்..
“அம்மாவை வர சொல்லட்டா”? என்றான்..
“நிலா அண்ணி பாவம்” என்றாள்..
“உங்க அப்பாவை வர சொல்லவா”?..
” வேண்டாம்” என்றவள்..
வலியில் முணங்கியபடி கண்கள் மூடிக்கொள்ள..
“என்னடா பண்ணுது” என்றான்..
” முதுகு வலிக்குது கைவலிக்குது” என்று மாயா சொல்ல..
மெதுவாக முதுகையையும், கையையும் பிடித்து விட்டுக் கொண்டிருந்தான்..
டாக்டர் ஹரி வந்தவர்..
அக்னி மாயாவுக்கு செய்யும் உதவிகளை பார்த்துக் கொண்டவர்.. “குட் அக்னி” என்றவர்..
“மாயா ஆர் யூ ஓகே” என்று கேட்டதும்..
“ஊம்ம்” என்று தலையாட்டி இருந்தாள்.. ” இந்த டிரிப்ஸ் முடிஞ்சதும் நீங்க வீட்டுக்கு போகலாம்,, டென் டேஸ் கழித்து கண்டிப்பாக வரணும் மாயா.. நல்லா சாப்பிடணும் உங்களை நம்பி மூன்று குழந்தைகள் இருக்காங்க, உங்க ஹஸ்பன்ட் வேற இப்படி உங்களுக்கு பக்கபலமா இருந்து உங்களை பார்த்துக்கொள்கிறார்,, கவலைப்பட கூடாது” என்று சொல்லிவிட்டு சென்று விட..
மாயாவைவிட்டு ஒரு இன்ச் கூட நகரவில்லை அக்னி,, மாயாவை பார்த்துக் கொண்டே அமர்ந்து கொண்டான்…
ட்ரிப்ஸ் ஏறி முடிந்ததும்..
அன்று இரவே பீச் ஹவுசிற்கு மாயாவை அழைத்துக் கொண்டு வந்து விட்டான்.
வேலைக்கார பெண்மணியை அழைத்து டாக்டர் சொல்லிய உணவு வகைகளை சொல்லி நாளையிலிருந்து மாயாவுக்கு இதை சமைத்து தரும்படி சொல்லி இருந்தான்.
உலகநாதனும், பார்வதியும் அவனுக்கு போன் செய்தபோது மாயாவுக்கு ஒன்றுமில்லை நன்றாக இருக்கிறாள் என்று சொல்லி.. யாரும் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டான்..
அக்னிக்கும், மாயாவுக்கு ஒரு இணக்கம் வரட்டும், இப்போது தான் இருவரும் சேர்ந்து ஒன்றாக இருக்கிறார்கள், அவர்களுக்குள் நன்றாக புரிதல் வந்து சேர்ந்து இருக்கட்டும் என்று கொஞ்சம் தள்ளி இருந்து கொண்டார் உலகநாதன்..
ஒரு மாதம் எப்படி சென்றது என்று இருவருக்கும் தெரியவில்லை.. இருவருக்கும் அந்த பீச் ஹவுஸ்சை மிகவும் பிடித்து இருந்தது..
உலகநாதன் ரதியோடு வந்து மாயாவின் பீச் ஹவுஸ் வீட்டில் வந்து தங்கி விட்டு மகளை பார்த்து சென்றார்.. ஆமாம் அக்னி மாயாவின் பேரில் இந்த பீச் ஹவுஸை வாங்கி இருந்தான்..
மாயாவுக்கு இது தெரியாது.. உலகநாதன் சொல்லித்தான் மாயாவுக்கு இந்த விசயம் தெரிந்தது..
அக்னியிடம் மாயா “ஏன் என் பெருல வீடு வாங்குனீங்க” என்று கேட்க..
“நீ முதல், முதல்ல இந்த வீடு பிடிச்சு இருக்குன்னு சொன்ன, அதான் வாங்கிட்டேன் அப்பறம் நம்ம பிள்ளைங்க நம்ம சொந்த வீட்டுலதான் பிறக்கனும்” என்றிருந்தான்..
அக்னி மாயாவை பார்த்து கொள்வதை பார்த்த உலகநாதனுக்கு பரம திருப்தி,, மாயாவை அக்னி நன்றாக பார்த்து கொள்வதை பார்த்து விட்டே தள்ளி இருந்துக்கொண்டார்..
மாயா நன்றாக உடல் தேறி வந்திருந்தாள்,, குழந்தைகளும் நன்றாக வளர்ந்து கொண்டு இருந்தனர்..
பார்வதி ஒருமாதம் கழித்து,, நிலாவை அழைத்து சென்று அவர் மாமியார் வீட்டில் விட்டு விட்டு… அக்னியின் வீட்டிற்கு வந்து விட்டார்..
மாமியார் வந்ததும் மாயாவை கையில் பிடிக்க முடியவில்லை ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தாள்.. முகம் ஜொலித்தது..
அக்னி தான் மாயாவை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்..
என்கிட்ட ஒரு வார்த்தைக்கு மேல் பேச மாட்டாள் இப்ப பாரு என் அம்மாகிட்ட வாய் ஓயாமல் பேசுறா.. என்று மாயாவை முறைத்துக்கொண்டே இருந்தான்..
பார்வதி வந்ததும் கொஞ்சம் அவனின் ஆபீஸ் வேலைகளை அக்னி பார்க்க ஆபிஸ் சென்று வந்தான்..
இரவு வந்ததும் மாயா என்ன உண்டாள்,, என்ன செய்தாள் என்று பார்வதியிடம் கேட்டு கொள்வான்..
மாயாவை தினசரி பீச்சுக்கு வாக்கிங் கூட்டி செல்வது அக்னியின் தினசரி வழக்கமாயிற்று….
அவனின் கைகளை கோர்த்து படியே பிள்ளைகளை பற்றி பேசிக்கொண்டு வருவாள் மாயா..
“எனக்கு முதல் குழந்தை உங்க அப்பா பிறப்பாங்க,, இரண்டாவது குழந்தை எங்க அப்பா, மூணாவது எங்க அம்மா பெர்னிலா ” என்று எப்போதும் பிள்ளைகளை பற்றி பேசுவாள்.. அவனோ ஏக்கமாக அவளை காதல் பார்வை பார்ப்பான்..
“என்ன பார்வை இது? அக்னி சார்” என்று அவனை கேலி செய்வாள்..
” ஏன் என் பொண்டாட்டி நான் பார்க்க கூடாதா? ” என்பான்.
” பாருங்க” என்ற கடலை பார்க்க ஆரம்பித்து விடுவாள்..
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து சேர்வார்கள்..
தினமும் இரவில் தூங்கும் முன் அவளுக்கு காலில் சுடுதண்ணி ஒத்தடம் கொடுத்துவிட்டு,, அவளுக்கு தேவையான உதவிகளை செய்வான் அக்னி..
அந்த வகையில் அக்னியை மாயாவுக்கு மிகவும் பிடிக்கும்…
வேண்டுமென்றே சில முறை சில வேலைகளை அவனிடம் சொல்வாள்..
அவனோ அவள் என்ன சொன்னாலும் சிறு முகம் சுழிப்பு இல்லாமல் மாயா சொன்னதை செய்து முடிப்பான்..
மறுநாள் அவனுக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருப்பதால் பார்வதியிடம் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு,
மாயாவிடம் வந்தவன் “சும்மா சும்மா உன் மாமியார் கிட்ட பேசிகிட்டு, நடந்துகிட்டே இருக்காத ஒழுங்கா சாப்பிட்டு மாத்திரை போட்டு ரெஸ்ட் எடு” என்றவன்..
மாயாவை தோள் அணைத்து நெத்தில் முத்தமிட்டவன் “பத்திரம்” என்றவன்.. அவளின் வயிற்றில் உள்ள பிள்ளைகளுக்கு முத்தமிட்டு “அம்மா வை பாத்துக்கோங்க, தொந்தரவு செய்ய கூடாது” என்று சொல்லி விட்டு சென்றான்…
பார்வதி இதை பார்த்து பார்க்காமல் சிரித்துக்கொண்டார்..
அக்னிக்கு மாயாவின் மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறான் என்று தெரிந்து கொண்டவர்..
மாயாவுக்கும் தன் மகன் மீது அளவு கடந்த பாசம் இருக்கிறது என்றும் தெரிந்து கொண்டார்.
அக்னி சென்றதும்..” அத்தே எனக்கு மீன் வேணும், சாப்பிடணும் போல இருக்கு வாங்கிட்டு வந்து தரீங்களா” என்று மருமகள் கேட்டதும்..
வாங்கி வருவதாக சொல்லி,, வேலைக்கார பெண்மணியை அழைத்து,, மருமகளை பார்த்துக்கொள்ளு மாறு சொல்லிவிட்டு பார்வதி டிரைவரோடு மீன் வாங்க சென்றார்.
அவர் சென்ற சில நிமிடங்களில் ரியா மாயாவை பார்க்க வந்திருந்தாள்..
ரியாவை தன் வீட்டில் பார்த்ததும் “ரியா வா வா” என்று சந்தோஷமாக மாயா வீட்டினுள் அழைத்தாள்..
ரியா ஒரு அலட்சிய பார்வையோடு பார்த்துக் கொண்டே மாயாவின் முன் வந்து அமர்ந்தாள்..
“எப்படி இருக்க ரியா? உன் பேபி எங்க” என்று மாயா கேட்டதும்..
” நீயும் உன் அப்பனும் வயிறு எரிஞ்சு பணம் கொடுத்த மாதிரி நான் நாசமா போயிட்டேன்” என்றாள் ரியா..
“என்ன சொல்லுற ரியா, என்னாச்சு பேபி எங்க உன் ஹஸ்பண்ட் எங்கே?”… என்று கேட்டதும்
“எல்லாரும் என்னை விட்டு போயிட்டாங்க பணம், குழந்தை என் புருஷன் எல்லாம் போயிடுச்சு” என்று அவள் கையை விரித்து காண்பிக்க..
“எப்படி?”.. என்றால் மாயா..
” நீ சந்தோஷமா வா பணம் கொடுத்த? ” என்றாள் ரியா..
” ரியா நீ கேட்ட பணத்தை நான் கொடுத்தேனா இல்லையா? அதை நீ சரியா ஹாண்டில் பண்ண தெரியாம தப்பு பண்ணிட்டு என்னை தப்பு சொல்லாதே” என்றவள் தண்ணீர் எடுத்து குடித்து விட்டு அமர்ந்தவள்..
” என்னால முடியல,, உன்கிட்ட பேசி என்ன வருத்திக்க என்னால முடியாது, உனக்கு சேர வேண்டிய பணத்தை நான் ஏற்கனவே கொடுத்துவிட்டேன்.. அதை தொலைச்சிட்டு வந்து என்னையும், அப்பாவையும் குறை சொல்லாதே” என்றாள்..
” சீ….. அவனை என் அப்பன்னு சொல்லாத இத்தனை வயசுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணி இருக்கான் தூ… ” என்று உலகநாதனை ரியா திட்ட..
” ரியா பார்த்து பேசு நம்மள அனாதையா விடாம, அவர்தான் நமக்கு வாழ்க்கை கொடுத்து வளர்த்தாரு,, அவர் வாழ்க்கையே நமக்காக விட்டு கொடுத்து வாழ்ந்தவரு நம்ம அப்பா, அவரை குத்தம் சொல்வீயா நீ”..
” அப்படியே அவர் நமக்காக வாழ்க்கையை விட்டு கொடுத்து வாழ்ந்தாரு, போடி …இப்ப போய் பாரு அவர் புது பொண்டாட்டி கூட ஊர் சுத்திட்டு ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்காரு” என்றாள்…
” ரியா டாடியை பத்தி தப்பா பேசாத,, அவர் இப்பதான் சந்தோஷமா இருக்காரு உனக்கு என்ன பிரச்சனை சொல்லு நான் ஹெல்ப் பண்றேன்…
இல்ல என் ஹஸ்பண்ட் கிட்ட சொல்லி ஹெல்ப் பண்ண சொல்றேன்,, அப்பாவை இனிமே தொந்தரவு பண்ணாத”….
” உன் ஹஸ்பண்டா உன்னை கல்யாணம் பண்ணிட்டானா அந்த அக்னி,, இல்ல கல்யாணமே பண்ணாம பிள்ளை பெத்துக்க போறியா” என்றாள் நக்கலாக..
“வார்த்தையை அளந்து பேசு ரியா” என்றாள் மாயா..
” ஓ…. அக்னியை பேசுனா உனக்கு கோபம் வருதா,, ஊர்றரிய தாலி கட்டினவனே என்னை விட்டுட்டு போயிட்டான்.. இந்த அக்னி எல்லாம் உன்னை கழட்டிவிட எவ்வளவு நாளாகும் நானும் பாக்குறேன் “..
“உனக்கு என்னவோ ஆகிப்போச்சு ரியா உன்கிட்ட பேச எனக்கு விருப்பமில்லை நீ கிளம்பலாம்” என்றாள் மாயா..
” ஓ என்னை வெளியே போக சொல்றியா? நீங்க எல்லாம் பணம், சொத்து எல்லாம் வச்சு கிட்டு சந்தோசமா இருக்கணும் நான் மட்டும் எல்லாத்தையும் இழந்திட்டு கஷ்டப்படணுமா? “…
” கொடுத்த பணத்தை ஒழுங்க வச்சுக்க உனக்கு துப்பில்ல அடுத்தவங்களை பார்த்து பொறாமை படாத” என்று மாயா சொல்லி விட்டு ஓய்வு வரை நோக்கி செல்ல பார்க்க..
” யாரடி பொறாமைப்படுற” என்று ரியா மாயாவின் கையை பிடித்து கேட்க..
” விடு என்னை” என்றாள் மாயா..
” ஏண்டி விடனும் நீ மட்டும் புருஷன், குழந்தை , பீச் ஹவுஸ், என்று சந்தோஷமா வாழ்வ நான் உன் வீட்டை விட்டு வெளியே போகணுமா முடியாது” என்றாள்..
மாயாவுக்கு தலை வலிக்க ஆரம்பித்தது,, ரியாவோடு பேசி ஒரு பிரயோஜனம் இல்லை என்று தெரிந்து கொண்டவள்..
” என்னை விடு” என்று மாயா கூற…
“விட முடியாது எனக்கு பணம் வேணும்,, உன் அப்பனை கேட்டு எனக்கு வாங்கி கொடு”..
” நீ போய் டாடி கிட்ட கேளு” என்றாள்..
” அந்த ஆள் தர மாட்டேன்னு சொல்லிட்டாரு,, எனக்கு பணம் வேணும்” என்று அவள் அடமாக நிற்க..
” நான் ரெஸ்ட் ரூம் போகணும் விடு, என்னை” என்று மாயா சொல்ல …..
” எனக்கு பதில் சொல்லிட்டு போ” என்று அவளை போக விடாமல் ரியா தடுக்க..
ரியா பிடித்து இழுக்க மாயா தடுமாறி மர சோபா முனையில் வயிறு இடித்து கீழே விழுந்தாள்…
அவள் விழுந்த உடனே “அம்மா” என்று கத்த,, ரியா பயந்து போனாள்…
அவள் பணம் கேட்டு வந்தாளே தவிர மாயாவை எதுவும் செய்ய வேண்டும் என்று அவளின் நோக்கமில்லை..
மாயா கீழே விழுந்து கதறியதை பார்த்து பயந்து போன ரியா! வீட்டை விட்டு ஓடி இருந்தாள்…
error: Content is protected !!