Skip to content
Post Views: 1,421
என் ஜீவன் உன்னை சேருமா
அத்தியாயம் – 6
Advertisement
Advertisement
Advertisement
உலகநாதன் வீடு கலகலவென இருந்தது அக்னியின் தங்கையின் குழந்தையும், தம்பியின் குழந்தையும், வந்ததினால். இரு குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருக்க உலகநாதன் தன் வீட்டில் நீண்ட வருடம் கழித்து குழந்தைகளில் சத்தம் கேட்க அவ்விரு பிள்ளைகளை பார்த்து ரசித்து கொண்டிருந்தார்..
இன்று தான் தன் வீடு நிறைந்தது போல் இருந்தது உலகநாதனுக்கு.. அக்னியின் தம்பியின் குழந்தை தத்தி தத்தி நடக்க, நிலாவின் மகளோ மூன்று வயதுக்கு மேல் இருக்க உலகநாதனை “தாத்தா தாத்தா” என்று அழைத்து வீட்டில் உள்ள வற்றை பார்த்து சந்தேகம் கேட்க..
Advertisement
குழந்தையை தூக்கி மடிமீது வைத்துக்கொண்டு பதில் சொல்லிக்கொண்டிருந்தார். அச்சிறு குழந்தையிடம்..
அவருக்கு சிறு வயதில் மாயாவை பார்ப்பது போல் இருந்தது..
பார்வதி உலகநாதன் வீட்டுக்கு வந்தும் சிறிது நேரம் அமர்ந்திருந்தவர்.. கிச்சன் நோக்கி சென்றார் உரிமையாக.
அங்கே 60 வயது மதிக்க தக்க உள்ள ஒரு பெண்மணி சமைத்துக் கொண்டு இருந்தார்.
அவரிடம் இயல்பாக பார்வதி பேச வேலைக்காரப் பெண்மணியும் பேசினார்.. 10 பேருக்கு சிற்றுண்டி தயார் நிலையில் இருக்க அதை பார்த்தவர்.. அப்பெண்ணிடம் பேசினார் அப்பெண்மணி முப்பது வருடமாக இங்கு சமையல் வேலை செய்வதாக கூற பார்வதிக்கு ஆச்சரியம் அப்படியா என்று நன்றாக பேசினார்..
நிலாவும், தேவின் மனைவியும் மாயாவின் அறையில் இருந்தனர்.. மாயாவுக்கு புடவை கட்டி கீழே ஹாலிற்க்கு அழைத்து வர..
மாயாவின் கண்கள் அக்னியை தேடியது, அக்னி வராமல் இருப்பதைக் கண்டு அவளின் முகம் வருந்த.. அதைப் பார்த்த நிலா “இன்னும் 20 டேஸ் தான் அண்ணி, அண்ணா உங்க கூட தான் இருப்பாரு கவலைப்படாதீங்க”.. என்று கூறி பெண்கள் எல்லாரும் சிரித்துக் கொண்டே வர..
உலகநாதனுக்கு ஆச்சரியம் இப்படி ஒரு குடும்பமா? பெண் பார்க்க வந்த இடத்தில் எந்த ஒரு கெத்தும், உரிமையும் காட்டாமல் பாசமாக தன் வீடு போல் நடந்து கொள்ளும் அக்னியின் குடும்பத்தை எப்படி பாராட்டுவது என்றே பார்த்து இருந்தார்..
மாயாவை கீழே அழைத்து வந்து நிலாவும் தேவின் மனைவியும் தங்கள் கணவன்மார்களை அறிமுகப்படுத்தி வைக்க ..
இருவருக்கும் வணக்கம் வைத்தாள் மாயா..
பின்னாடியே பார்வதி வேலைக்கார பெண்மணியோட சிற்றுண்டி எடுத்து வந்து அனைவருக்கும் பரிமாற..
மருமகளை பார்த்து “மாயா சூப்பரா இருக்குடா இந்த புடவையில” என்று அணைத்துக் கொண்டார் மருமகளை.. மாயாவுக்கு தன் கையிலே திருஷ்டி எடுத்தார்….
மாப்பிள்ளையின் அம்மா என்று ஒரு எண்ணம் கூட இல்லாமல் மாயாவை தன் வீட்டு பிள்ளையை போல் பார்க்கும் பார்வதியை பார்த்திருந்தார் உலகநாதன்..
மாயாவை தன்னோடு அமர வைத்துக் கொண்டவர் அவளிடம் இரண்டு தேதிகளை சொல்லி “உனக்கு எது தோதுபடும் மாயா” என்று கேட்க …
” என்கிட்ட ஏன் ஆண்ட்டி கேக்குறீங்க அப்பாகிட்ட கேளுங்க” என்று மாயா சொல்ல…
“இல்லடா உனக்கு பீரியட்ஸ் வர நாளா இருந்த கஷ்டமா இருக்குமே அதனால கேட்டேன்” என்றதும்.
அவர் கேட்டதின் அர்த்தம் புரிந்தவள் ‘”சாரி ஆன்ட்டி” என்று சொல்லி “இன்னும் பத்து நாள் இருக்கு ஆண்ட்டி” என்று கூற..
அவள் சொல்லிய நாள் கணக்கை பார்த்தவர், அடுத்த முகூர்த்த நாளை பார்த்து..
உலகநாதனிடம் “சம்பந்தி வரப்போற இருபத்தி எட்டாம் தேதி நாள் ரொம்ப நல்லா இருக்கு அன்னைக்கே கல்யாணத்தை வச்சுக்கலாமா?”.. என்று கேட்க..
“உங்க இஷ்டம் சம்பந்தி நீங்க என்னைக்கு சொல்றீங்களா அப்படியே செய்திடலாம்” என்றார் உலகநாதன்..
இருகுடும்பமும் பேசி கல்யாண தேதி நாள் ரிசப்ஷன் என்று அனைத்தையுப் முடிவு எடுக்க..
“உனக்கு ஓகேவாடா” என்று மாயாவை கேட்டார் பார்வதி..
” கல்யாணம் 28 தேதி ஓகே தான் ஆண்ட்டி, ஆனால் 27ஆம் தேதி சர்ச்சில் வைத்து சின்னதா ஒரு ரிங் மாத்திக்கலாமா?” என்று பயந்து கொண்டே பார்வதியை பார்த்து கேட்க ..
“அதுக்கு என்னடா பெருசாவே பண்ணிடலாம் அன்னைக்கு நைட்டு ரிஷப்ஷன் வச்சுக்கலாம் என்ன சம்பந்தி” என்று உலகநாதனே பார்த்து கேட்க …
“ஆம் சம்பந்தி நல்ல படியா பண்ணிடலாம்” என்றார்..
அக்னியின் குடும்பம் உலகநாதனிடமும், மாயாவிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப..
நிலா மாயாவை பார்த்து “வர்ரோம் அண்ணி” என்று சொல்லி கிளம்ப..
பார்வதி மகள் நிலாவிடம் “அவ உன்னோட சின்ன பொண்ணு மாயாயின்னு கூப்பிடு” என்று சொல்ல..
“ம்மா அண்ணா காலையிலேயே என் ரூம் வந்து மாயாவை அண்ணியின்னு மரியாதையா கூப்பிடனும் என்று சொல்லிட்டு தான் போனாரு” என்று நிலா கூற..
“ஆமாம்மா என்கிட்டயும் வந்து மாயாவை அண்ணியின்னு தான் கூப்பிடனுமுன்னு சொன்னாரு” என்று தேவ்வும் கூற..
அப்படியா என்பது போல் மகனையும் மகளையும் பார்த்தவர் சரிதான் என்று சிரித்துக் கொண்டார் மகனே எண்ணி…
பார்வதி உலகநாதனிடம் “வரும் வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் முகூர்த்தப்பட்டு எடுக்கலாம் சம்பந்தி வந்திருங்க” என்று சொல்லிவிட்டு செல்ல…
மாயாவுக்கு அக்னி வரவில்லையே என்று வருத்தம்..
ஆனால் அக்னியின் குடும்பத்தை அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது….
அக்னி குடும்பம் புடவை எடுக்க வெள்ளி கிழமை காலையிலே காஞ்சிபுரம் செல்ல கிளம்பி கொண்டிருக்க பார்வதியின் சத்தம் கேட்டு கீழே வந்தாள் நிலா..
“ஏன்மா இப்படி கத்துற”. என்று மாடியில் இருந்து இறங்கி வந்தாள் நிலா..
“பாருடி, இவனை பொண்ணு பாக்குறப்பவும் இவன் வரல. இப்ப முகூர்த்தப்பட்டு எடுக்கவும் வர மாட்டேன்னு சொல்றான் என்ன நினைச்சுட்டு இருக்கான் இவன்.”?..
“அம்மா எனக்கு ஒரு மீட்டிங் இருக்குமா அதனால தான் நான் சொல்றேன்”.. என்றான் அக்னி..
“மீட்டிங் இருக்குன்னு சாக்கு எல்லாம் சொல்லாதடா” என்றார் பார்வதி கோபமாக..
“ஏன்ணா” என்று நிலா அண்ணனை பார்க்க..
” இல்ல நிலா முக்கியமான ஒரு பிசினஸ் மீட்டிங் இருக்கு நான் கண்டிப்பா அங்க இருக்கனும்”.
நிலா பார்வதி முகத்தை பார்த்தாள்..
“இவன் சொல்றத நீ வேணா நம்பு,, நான் நம்ப மாட்டேன்? அந்த பார்த்திபன் இருக்கானே அவன் பார்க்க சொல்லிவிட்டு இவன் வர வேண்டியதுதானே..
இவன் என்ன தான் மனசுல நினைச்சிட்டு இருக்கான்னு எனக்கு தெரியலடி, இவனை பார்த்தா கல்யாணம் பண்ற மாப்பிள்ளை மாதிரி இருக்கான் யாருக்கோ கல்யாணம் மாதிரி நடந்துக்கிறான், பொண்ணு பாக்குற போற அன்னைக்கும் இவன் வரல. இவன் வரலன்னு அந்த பிள்ள மாயா மூஞ்ச நீ பாத்தியா அந்தப் பிள்ளை எவ்ளோ வருத்தப்பட்டுச்சு..
இப்ப முகூர்த்த புடவை எடுக்கவும் வரமாட்டேங்குறான், சம்பந்தி என்ன நினைப்பாரு” இன்று புலம்பியபடியே பார்வதி தன் குடும்பத்தோடு கிளம்பினார்..
இவர்களுக்கு முன்பே மாயாவும், உலகநாதனும் இவர்கள் சொல்லியே கடை வாசலில் நின்று இருக்க..
அக்னியின் குடும்பத்தை பார்த்தா மாயா சிரித்து அவரிடம் பேச கண்கள் என்னவோ அக்னியை தான் தேடியது..
அவன் வரவில்லை என்று தெரிந்ததும் முகம் வாடிபோனது மாயாவுக்கு..
பார்வதி உலகநாதனிடம் “உங்க மூத்த பொண்ணு வரலையா சம்பந்தி” என்று கூற…
“மூத்த பொண்ணுக்கு கொஞ்சம் கோபம் அதனால வரல..”
ஏன் என்று கேட்க வாய்வரை வந்த வார்த்தையை,, சரி அவர்கள் குடும்ப விஷயம் என்று அமைதியாக இருந்தார் பார்வதி…
உலகநாதனின் மூத்த மகள் பயங்கரமாக உலகநாதனிடம் சண்டையிட்டு இருந்தாள்.. என்கிட்ட கேட்காம நீங்க எப்படி என் தங்கச்சிக்கு கல்யாணம் முடிவு பண்ணலாம்,, எங்க வீட்டுகாரர் சொந்தத்துல ஒரு பையன் இருக்கான், நாங்க அவனைத் தான் மாயாவுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு இருந்தேன்.. இப்படி பண்ணிட்டீங்களே கல்யாணத்தை நிப்பாட்டுங்க” என்று ரியா சண்டையிட…
“உனக்கு விருப்பம் இருந்தா, மாயா கல்யாணத்துக்கு வா இல்லனா வராத, என் பொண்ணு கல்யாணம் என் இஷ்டபடிதான் நடக்கும்” என்று உலகநாதன் போனை வைத்திருந்தார்..
இந்த கல்யாணத்துக்கு நடக்கிறதுக்குள்ள ஆயிரம் தடைகள் வருகிறது என்று புலம்பி அப்படியே இருந்தார் மனிதர்..
பார்வதி மாயாவை அழைத்துக் கொண்டு முகூர்த்தப்பட்டு எடுக்கும் செக்சனுக்கு சென்றார்.
மாயாவின் முகம் வாடி இருப்பதை பார்த்த பார்வதி “அவன் கண்டிப்பா வருவான் நீ வருத்தப்படாத மாயா” என்று ஆறுதல் சொல்ல..
நிலா போன் போட்டு அண்ணனை திட்டி இருந்தாள்.
” என்ன நிலா கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே உங்க அண்ணிக்கு சப்போர்டா” என்று தங்கையை வம்பு பண்ணினான் அக்னி…
“போண்ணா உன்னை எப்படி தேடுனாங்க தெரியுமா மாயா, நீ வரலன்னு தெரிஞ்சு அவங்க முகம் வாடி போச்சு”..
” எனக்கு என்ன தெரியும் நிலா புடவையை பற்றி.. நீங்க தான் எல்லாரும் இருக்கீங்க தானே, நீங்க எல்லாரும் சேர்ந்து அவளுக்கு எடுத்து குடுங்க”
என்று போனை வைத்தான்.
பார்வதி மருமகளை விட்டு நகரவே இல்லை புத்தம் புது டிசைன், இப்போ உள்ள லேட்டஸ்ட் மாடல் என்று அனைத்து வகை பட்டுப் புடவையும் மருமகளுக்கு எடுத்துக்காட்ட சொன்னார்..
மாயாவுக்கு புடவை பற்றி அவ்வளவு தெரியவில்லை,,
பார்வதி ஒவ்வொறு பட்டுப் புடவையின் பெயரைச் சொல்லி. மருமகளுக்கு எடுத்துக்காட்டி செலக்ட் பண்ணி கொண்டு இருந்தார்…
மாயாவுகக்கு பிடித்த கலரை கேட்டு தெரிந்து கொண்டவர்.. அவளுக்கு பிடித்தமான கலரில் சேலைகள் எடுத்தார்.. ரிஷப்ஷன் சேலை, பொண்அழைப்பு சேலை,, துணை பட்டு என்று அனைத்தைதுக்கும் மாயாவின் மேல் வைத்து அவளுக்கு பிடித்திருக்கிறதா என்று பலமுறை கேட்டு அவள் மேலே வைத்து கட்டி பார்த்த பின்பே வாங்கியவர்..
கடைசியில் முகூர்த்த பட்டு மட்டும். “உன்னுடைய சாய்ஸ் மாயா நீயே செலக்ட் பண்ணு , உனக்கு எது புடிச்சிருக்கோ அதை செலக்ட் பண்ணு, கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு நீ உனக்குன்னு ஆசை இருக்கும்ல, அதனால நீயே செலக்ட் பண்ணு” என்று மருமகளுக்கு தனிமை கொடுத்து தனக்கும் தன் மகள், மருமகளுக்கு புடவை எடுக்க பக்கத்தில் வேற பிரிவுக்கு சென்றார்..
மாயாவுக்கு குழப்பமாக இருந்தது.. பார்வதி எடுத்து கொடுத்து அனைத்து புடவையுமே நன்றாக இருக்க, அதில் ஏதாவது ஒரு புடவை கல்யாணத்துக்கு செலக்ட் பண்ண சொல்லி இருக்கலாமே என்று தோன்ற எல்லா புடவைகளையும் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள்…
மாயாவின் பக்கத்தில் இருவர் பேசியதை கேட்டாள் .. “உனக்கு இது நல்லா இருக்கும் ஹனி” என்று கல்யாணம் ஆக போற மாப்பிள்ளையும் பொண்ணும் தங்களுக்குள் ரகசியமாக பேசி சிரித்துக் கொண்டு புடவையை செலக்ட் பண்ண..
மாயா அவர்களையே பார்த்திருந்தாள்..
இருவரின் முகத்திலும் அத்தனை சந்தோஷம்,, “இது ஓகேவா இது புடிச்சிருக்கா” என்று அந்த மாப்பிள்ளை அந்த பெண்ணின் தோள் மீது புடவையை வைத்து காட்டி செலக்ட் பண்ணி கொடுக்க…
மாயா அப்பொழுது தான் சுற்றி பார்த்தால் அந்த கடையை..
அந்த இடம் முழுக்க கல்யாண பொண்ணுக்கு முகூர்த்த பட்டு எடுக்கும் பிரிவு.. அனைவரும் குடும்பம் குடும்பமாக ஜோடி ஜோடியாக வந்து தங்கள் திருமண நாளுக்காக புடவையை தன் வருங்கால துணையோடு செலக்ட் பண்ணிக் கொண்டிருக்க…
ஏன் அக்னி வரவில்லை, ஒருவேளை என்னை அவருக்கு பிடிக்கவில்லையோ.. நல்லா தானே பேசினார் அன்று. பின்பு ஏன் பொண்ணு பார்க்க வரவில்லை என்று மனதில் ஏதேதோ தோன்ற..
பார்வதியை நிமிர்ந்து பார்த்தாள் அவர் மகளுக்கும், மருமகளுக்கும் புடவை தோளில் வைத்து அவர்களுக்கு புடவையை செலக்ட் பண்ணிக் கொண்டிருக்க..
தந்தையை தேடினாள். அவர் தேவ்வும், நிலா கணவரோடு ஆண்கள் அனைவருக்கும் உடை எடுக்க வென மேல் தளத்திற்கு செல்ல.. இவர் அக்னிக்கும் சேர்ந்து உடை எடுக்க வேண்டும் என்று மேல் தளத்துக்கு அவர்களோடு சென்று இருந்தார்..
மாயாவுக்கு ஏதோ தான் மட்டும் தனியே இருப்பது போல் தோன்ற புடவையை பார்த்தபடியே அமர்ந்து இருந்தவளுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் எதுவும் பிடிக்காமல், தன் அன்னை இருந்தாள் எப்படி இருக்கும் என்று தோன்ற கண்கள் கலங்குவது போலா இருந்தது..
திடீர் என்று பக்கத்தில் ஏதோ சத்தம் ஒலிக்க என்னவென்று நிமிர்ந்து பார்த்தாள் மாயா… ஒரு கல்யாணம் ஆகப் போற ஜோடி கல்யாணபுடவையை அந்த கல்யாணம் பண்ணிக்குற போற பெண்ணிமேலே புடவையை வைத்து, மாப்பிள்ளையோட ஜோடியா நிக்க வைத்து போட்டோ எடுக்க,, அவர்களின் உறவுகள் சேர்ந்து சிரிக்க.. ஒரே சத்தம் கைதட்டல் சிரிப்பு சத்தமாக இருந்தது.. அவர்களை பார்த்தாள் மாயா..
அந்த பொண்ணும் மாப்பிள்ளை இருவரும் ஜோடியாக நின்று போட்டோ எடுக்க.. உறவுகள் கேலியில் அப்பெண் அழகாய் வெட்கப்பட்டு சிரிக்க..
அதை பார்த்த மாயாவுக்கு மனதில் ஏதோ பாரம் ஏறுவது போல் தோன்ற. தனக்கு மட்டும் ஏன் இப்படி என்று மாயாவுக்கு கண் கலங்குவது போல் இருக்க, உடனே ஓய்வு அறை நோக்கி செல்ல பார்த்தவளின் கையை யாரோ பிடித்து கொள்ள.
யார் என்று நிமிர்ந்து பார்த்தாள்..
அவள் கலங்குவதற்கு காரண கர்த்தாவான அக்னியே அவள் முன் நிற்க.
மாயாவுக்கு அக்னியை பார்த்ததும் ஒரு கேவலோடு அழுகை வர..
“என்னடா “?.. என்றவன்..
அவளை தோள் அணைத்தவாறு உடைமாற்றும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்..
அவளோ குலுங்கி அழ பக்கத்தில் இருந்த ஒரு உடைமாற்றும் அறைக்கு அவளை இழுத்துக் கொண்டு வந்தான்.
மாயாவோ சத்தமில்லாமல் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு குலுங்கி அழ..
இவளை எப்படி சமாதானம் பண்ணுவது என்று அக்னி யோசித்தபடியே அவளை அணைத்திருந்தான்..
அவளோ சிறிது நேரம் அழுதவள் கண்களை துடைத்துக் கொண்டு அக்னியிடமிருந்து விலக பார்க்க..
அவளை விலக முடியாதபடி அணைத்து பிடித்து வைத்துக் கொண்டான்..
” போங்க நீங்க, வரமாட்டேன் தானே சொன்னீங்க இப்போ ஏன் வந்தீங்க போங்க” என்றாள் கோபமாக..
“எங்கே போக அதான் உன்கிட்ட வசமா வந்து சிக்கிட்டேனே இனி போக முடியுமா” என்றான் அணைப்பை கூட்டி..
” ஏன் பொண்ணு பார்க்க வரல” என்றாள் மூக்கை உறிஞ்சியபடியே..
” உன்னைத்தான் நிறைய தடவை பார்த்தாச்சே எத்தனை வாட்டி தான் பொண்ணை பார்க்கிறது”..
” உங்களுக்கு என்னை பிடிக்கல அதுதான் சாக்கு சொல்றீங்க”..
” மாயா” என்றான் கோபமாக..
” எனக்கு எல்லாம் தெரியும்” என்றாள் கோபமாக அவனிடமிருந்து விலக முற்பட..
” என்ன தெரியும் இன்ஜினியரிங் அம்மாக்கு” என்றான்…
” எல்லாம் தெரியும், நீங்க ஏதோ வேண்டா வெறுப்பா என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்க” என்று சொல்லி முடிப்பதற்குள்..
அவளைத் தூக்கி தன் முன் வைத்து இதழோடு இதழ் சேர்த்திருந்தான் அக்னி ..
மாயாவின் கண்கள் அக்னியை பார்த்து விரிந்து கொள்ள.
அவன் கண்களில் தெரிந்த அவளின் மேல் உள்ள காதலை கண்டவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்..
நீண்ட நெடிய முத்தம் இனி என்னிடம் கேட்பாயா என் மீது விருப்பம் இல்லை என்று என்பது போல் இருந்தது அவனுடைய முத்தம்..
மாயாவிற்கு என்ன நடக்குது என்றே தெரியவில்லை விருப்பமில்லாமல இப்படி ஒரு முத்தம் கொடுக்க முடியும் அந்த மாதிரி இருந்தது அவனுடைய முத்தம்..
மாயாவுக்கு மூச்சு விட சிரமமாக இருக்க அவரிடமிருந்து விலக பார்த்தவளை..
தன் மூச்சு காற்றை அவளுக்கு கொடுத்தவன்.. உன்னை விடமாட்டேன் என்பது போல் தன்னோடு வைத்துக் கொண்டு முத்த யுத்தம் நடத்த.
மாயாவுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் முடியவில்லை தோய்ந்து போய் அவனின் மேலே சாய்ந்தவளை.. அக்னி மெல்ல அவளின் இதழுக்கு விடுதலை அளித்தான்….
அவனை எதிர்கொள்ள முடியாமல் அவனை கழுத்தோடு கட்டிக் கொண்டாள் மாயா..
அவள் முதுகை தடவி கொடுத்தவன் “இனிமே என்னை பிடிக்கவில்லை என்று கேட்பியா”‘.. என்றான்..
அவனை அணைத்தவாறே “மாட்டேன்” என்று முணங்க..
“போலாமா மாயா” என்றான்..
“உம்ம்” என்றவள் அவனை விட்டு விலக..
அவளை மீண்டும் அணைத்தவன் கலைந்திருந்த முடியை சரி செய்து “சாரிடா பேபி” என்றான்..
“நான் ஒன்னும் பேபி இல்ல” என்பது போல் மாயா திரும்பிக் கொள்ள..
அவளை மெல்ல திருப்பி தன்னை பார்க்க வைத்தவன்.. “என்னை தேடுனியா” என்று அவளை தன்னோடு சாய்த்து வைத்துக் கொண்டான்..
“ம்ம்ம்” என்றவள் கண்கள் கலங்க..
“மாயா” என்றான் மறுபடியும் கோபமாக..
“அழமாட்டேன்” என்றவளை.. தோள் அணைத்துக்கொண்டவன்..
“வா போலாம்” என்று வெளியில் இருவரும் வர..
மாயா அக்னியின் கையோடு கைகோர்த்துபடியே அவன் புஜத்தில் தலை சாய்த்து பேசிக்கொண்டே வர..
அக்னி அவள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டு வந்தான்…
அக்னியின் குடும்பம் இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து பேசிக்கொண்டு வருவதை பார்த்து…
அசந்து போய் நிற்க..
அக்னி தன் குடுப்பத்தை பார்த்து மாயாவின் கையை விட..
ஏன் என்பது போல் பார்த்த மாயா மீண்டும் அவனின் கையை கோர்த்து கொள்ள…
நிலா அண்ணணை வாய் பிளந்து பார்த்தாள்.. என் அண்ணணா இது என்று.. பார்வதி மகனை ஆச்சரியமாக பார்த்து நிற்க..
“மா, என்னை கிள்ளு ” என்றாள் நிலா..
“ஏன்டி” என்று பார்வதி கேட்க..
“என் கண்ணையே என்னால நம்ப முடியல மா”.. என்றாள் நிலா…
“எனக்கும் அப்படி தாண்டி இருக்கு.. இவன் என் பையன் அக்னி தானா”…
“அவனே தான்” என்று தேவ்வும் சிரிக்க..
தன் குடும்பத்தை பார்த்து முறைத்தவன்..
” போங்க உங்களுக்கு தேவையானதை வாங்குங்க” என்றவன்..
மாயாவை பார்க்க..
அவள் முகூர்த்தம் பட்டு இருக்கும் இடத்தை காண்பிக்க..
“வா போலாம்” என்று மாயா அழைத்து சென்றான்..
error: Content is protected !!