Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ.. 9

பகுதி 9

எப்போதும் வேலைக்கு வரும் நேரத்திற்கு கிளம்பிய சந்தீப்பிடம் வந்த மலர்விழி, “என்னங்க, சின்னத்தான் குழந்தைய கூட்டிட்டு இங்கே வீட்டுக்கு தான் வரல. 



Advertisement

அட்லிஸ்ட் நானாவது நேர்ல போய்‌ பையன பார்த்தா தானே நல்லாயிருக்கும்.

முகுந்தை கைக்குழந்தையா தூக்கிட்டு பாரின் போனாரு. இப்போ அவனுக்கு வயசு மூணு ஆக போகுது. 

Advertisement

Advertisement

அங்கே போய் பார்க்க தான் நம்மளால முடியல. இப்போ வந்தவனையும் பார்க்கலைன்னா சரியில்லைங்க..” என்றிட,

“நீ சொல்லறதும் சரி தான். ஆனா அப்பாக்கு.. நா அவன் கூட பார்ட்டனரா ஜாயின் ஆனதே பிடிக்கல. 

Advertisement

இதுக்கும் நா ஒத்த ரூபா போடல. வெறும் வொர்க்கிங் பார்ட்னர் தான்.

அதுக்கே வீட்டுல என்னை என்னவெல்லாம் பேசினார். எனக்கு ஓகே.. அவர்‌ பேசறது கேட்டுக்குவேன். 

ஆனா நீ அவங்கள பார்க்க போறது தெரிஞ்சா.. கண்டிப்பா அப்பா எதாவது சொல்வாரு. அதான்‌ யோசனையா இருக்கு..” என்ற சந்தீப்பை முறைத்தவள்,

“ஆமா.. அவரு இல்லைன்னா மட்டும் மனுஷங்கள அப்படியே பாராட்டி தள்ளிடுவாரு. எதாவது சொல்லிட போறேன். 

நீங்க சின்னத்தானுக்கு செஞ்ச வேலைய பணம் கொடுத்தா.. இங்கே செஞ்சு கொடுக்க ஆளா கிடைக்காது..? 

ஆனா‌ எதுக்காக அவரு உங்கள விடாம பிடிச்சாரு..? 

அதே மாதிரி அவர் இந்த ஊர்ல தான் வந்து கம்பெனி வைக்கனும்.. அப்படின்னு‌ எதாவது அவசியம் இருக்கா சொல்லுங்க..?

ஏன்‌ இங்கே ஆரம்பிக்கனும்..? அவருக்கும், குழந்தைக்கும் உறவா நாம இருப்போமுங்கற நம்பிக்கையில தானே இங்கே வந்திருக்கார்.

அப்போ அவரோட அந்த நம்பிக்கையை நம்ம காப்பாத்த வேணாமா..? 

அதுக்காகவாவது நா போய் குழந்தைய பார்க்கனுங்க..” என்றாள் உறுதியாக. 

அவளின்‌ பேச்சை கேட்ட சந்தீப்புக்கு ரியான் இங்கு வர முடிவெடுத்ததற்கு பின்னால் இருக்கும் காரணம் இது தானா..? என்ற எண்ணம் வர,

“மலர் நீ சொல்லறது சரி தான். விடு வர்றத பார்த்துக்கலாம். 

நீ கிளம்பியிரு.. நா போய்‌ பசங்கள ஸ்கூல்ல விட்டுட்டு வந்து உன்னை கூட்டிட்டு போறேன்..” என்றவன், 

சொன்னது போலவே மலர்விழியை கையோடு அழைத்து வர, அவளோ.. முதல் முறை வெறும் கையோடு போக கூடாது.. என சொன்னதால், கடைக்கு சென்று வர கொஞ்சம் தாமதம் ஆகியிருந்தது.

‘எப்படியும் காலையிலேயே வர தாமதமாகும்.. என ரியானுக்கு தகவல் சொல்லிவிட்டதால், அவன் தங்கள் அலுவலக அறையில் தான் இருப்பான்‌..’ என நினைத்து அதற்கேற்ப அங்கு வந்தவர்களுக்கு ரியான் சம்யுக்தாவின் கோலம் கண்ணில் பட அவசரமாக அவர்களுக்கு உதவி செய்தனர்.

“ஜஸ்ட் ஸ்கிட்டிங்..” என ரியான் சொன்னாலும், 

‘தவறி விழுக என்ன கீழே இருக்கும்..? அதுவும் இருவரும் விழுமளவுக்கு..?’ என்ற சந்தேகம் தோன்றினாலும், 

சம்யுக்தா பற்றி வேண்டுமானால் தெரியாது.. ஆனால், ரியானை சிறு வயது முதலே தெரியும்.. என்பதால் அதை அப்படியே ஏற்றுக்கொண்ட சந்தீப்,

“அடி எதுவும் படலையே..?” என இருவரையும் மாறி மாறி பார்த்து கேட்க, ‘இல்லை..’ எனும் விதமாய் தலையசைத்த சம்யுக்தா நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

ரியானும், ‘இல்லை..’ என தலையசைத்திருக்க, 

‘இருவருக்கும் எதுவும் ஆகவில்லை..’ என்ற ஆசுவாச பெருமூச்சை வெளிவிட்டான் சந்தீப்.

அங்கு சில நொடி நிசப்தத்தை, “சின்னத்தான், முகுந்த் எங்கே..?” என்ற மலர்விழியின் பேச்சு கலைக்க,

‘மேலே..’ என்பதாய் கையை காட்டியவன், 

சம்யுக்தாவிடம் திரும்பி அவளின் லேப்டாப்பை நகர்த்தி வைத்தவன், அவளின் தவறை சுட்டி காட்டி.. அதை எப்படி சரி செய்வது என விளக்கியவன், 

“ஃபினிஷ் திஸ்.. அண்ட் செண்ட் இட் மை மெயில்..” எனச்சொல்லி தனது மெயில் ஐடியையும் குறித்து கொடுத்துவிட்டு, சந்தீப்பையும் மலரையும் அழைத்து கொண்டு.. அந்த அறையை விட்டு வெளியேறினான்.

ரியானின் விளக்கத்தை கேட்ட பிறகே, அவன் தன்னிடம் அப்போது என்ன‌ சொல்ல தன்னருகில் வந்தான்.. என்பது தெளிவாகிட, 

“அச்சோ.. அவசரப்பட்டுட்டோமோ..!” என்று ஒரு மனம் சொல்ல, 

அவளின்‌ பெண் மனமோ, “நீ பண்ணது தப்பில்லை. இந்த இடத்துல நீயில்ல.. யாரா இருந்தாலும் இப்படி தான் ரியாக்ட் பண்ணியிருப்பாங்க..” என்றிட,

“எப்படின்னாலும் இதுல என்னோட சைட் தான் தப்பு அதிகம். அவர் வந்ததும் கண்டிப்பா சாரி கேட்கனும்..” என்று சொல்லிக்கொண்டவள், 

அவன் சொன்ன திருத்தங்களை சிறிது நேரத்தில் செய்து முடித்து அவனின் மெயிலுக்கும் அனுப்பி வைத்தாள்.

*****

ரியான்.. சந்தீப், மலர்விழியோடு அந்த அறைக்கு வர அதுவரை வாயிலில் காவலாக இருந்தவர் அவசரமாக எழுந்து நின்றார்.

அவரிடம் அமருமாறு சைகை காட்டியவன் மெல்ல அந்த அறையை திறந்து உள்ளே நுழைந்தான்.

குழந்தை நல்ல உறக்கத்தில் இருக்க, அவனை நெருங்கிய மலர்விழியின் விழிகள் கலங்கி விடுவேனோ..? என பயம் காட்டியது.

பிறந்த உடன் அனுபவிக்க வேண்டிய வலியா அந்த பிஞ்சு அனுபவித்தது. 

அவனை மீட்க போராடிய போராட்டமும்.. அப்போது ரியானின் நிலையும், மனக்கண்ணில் உலா வருவதை தடுக்க முடியவில்லை மலர்விழியால். 

தன் கண்ணீர் திடமான ரியானின்‌ இப்போதைய நிலையை பாதிக்கும்.. என்பதால் முயன்று அதை தடுத்த மலர், 

மெத்தையில் முகுந்துக்கு அருகே அமர்ந்து அவனின் முடியை கோதி விட தூக்கத்திலேயே சிரித்தான் பிள்ளை.

அதில் அவனின் வலது கன்னத்தில் லேசாக குழி விழ, “அட இங்கே பாருங்களேன்.. வலது பக்கம் குழி விழுது. நல்ல அதிர்ஷ்டக்காரன் தான்..” என்றாள் மெல்லிய குரலில்.

“ஆமா ம்மா.. அவனுக்கு அதிர்ஷ்டம் இருக்க போய் தான்.. அப்படிப்பட்ட விபத்துல இருந்து உயிரோட மீண்டு வந்திருக்கான்..” என்ற ரியானின் குரலில் இருந்தது பெருமிதமா..? அல்லது வேதனையா..? என்பதை பிரித்தறிய முடியவில்லை மற்ற இருவராலும்.

அவனின் வார்த்தையால் உண்டான அழுத்தமான சூழலை நீடிக்க விரும்பாத சந்தீப், 

“தூங்கற கொழந்தைய கொஞ்சக்கூடாது.. கண்ணு பட்டு போகுமுன்னு பக்கம் பக்கமா எனக்கு அட்வைஸ் பண்ணிட்டு.. இப்போ நீயே அப்படி பண்ணறே..?” என்றவன்‌, 

அதோடு நிறுத்தாமல் சனிபகவான் அவன் நாவில் நர்த்தனமாடிவிட்டார் போலும்..

“இப்படி தான் டா, இந்த பொம்பளைங்க. எந்த ஒரு‌ ரூல் போட்டாலும்.. அது அவங்க போட்டதா இருந்தாலும் சரி.. இல்ல நம்ம போட்ட ரூலா இருந்தாலும் சரி.. அவங்களுக்கு எப்பவும் ‘ப்ரேக் த ரூல்..’ தான்.‌

ஆனா.. அதுவே, தப்பித்தவறி நம்ம மட்டும் மாத்தி பண்ணிட்டோம்.. சோலி முடுஞ்சது..” என்று சொல்லி, 

ஏதோ பெரிதாக காமெடி பண்ணிவிட்ட பாவனையில் வாய் விட்டு சிரித்தபடி ரியானை பார்க்க.. 

அவனோ, ‘அய்யோ.. பாவமே..’ என்ற பாவனையோடு சிரிப்பை அடக்கி கொண்டு நின்றிருந்தான்.

அவனின் பாவனையில், ‘இவன் லுக்கே சரியில்லயே..? என்னவா இருக்கும்..?’ என்று யோசித்தபடி‌ திரும்பியவன் அதிர்ந்து நின்றான்‌ மலர்விழி நின்றிருந்த கோலம் கண்டு.

‘அச்சோ.. இவ இருக்கற மறந்து தொலச்சுட்டையே‌ சந்தீப்..! இவ இதை வச்சே மாசக்கணக்கா ஓட்டுவாளே..’ என்று‌ ஜர்க் ஆனவன், 

“ஆனா ரியான்.. இப்ப நா சொன்னது எல்லாமே மத்த பொண்ணுங்களுக்கு தான். 

என்னோட வெஃய்ப் இருக்காளே.. சுத்த தங்கம்டா. 

நா ஒரு‌ கோடு‌ போட்டு, அதுலையே நில்லுன்னு சொன்னா.. அதை அப்படியே ஃபாலோ பண்ணுவான்னா பாத்துக்கோ..! இல்லடா மலரூ..‌?” என்று அந்தர் பல்ட்டி அடிக்க,

“நீங்க இன்னும் கொஞ்சம் பெட்டரா ட்ரை‌ பண்ணியிருக்கலாம்..” என்று கேலியாக சந்தீப்பின்‌ மானத்தை கப்பலில் ஏற்றினாள்‌ அவனின் தர்மபத்தினி.

இருவரின் சம்பாஷனையையும் கேட்டவனுக்கு அவர்களின் பேச்சில் சிரிப்பு வராவிட்டாலும்.. இறுதியில் மலர் சொன்னதற்கு.. சந்தீப்பின்‌ முகம் போன‌ போக்கில் வாய் விட்டு நகைக்க துவங்கினான்.

அவனின் அந்த சிரிப்பை வாஞ்சையுடன் பார்த்திருந்தனர் தம்பதிகள் இருவரும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!