Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ 1.1

சம்யுக்தாவின் செய்கை அனைத்தையும், அதே மாறாத சிரிப்போடு பார்த்திருந்த இனியாளின் முகத்தை பார்த்த தனத்திற்கு நிம்மதியாக இருந்தது.

இப்போது இருக்கும் இதே மகிழ்ச்சி.. எப்போதும் அவள் முகத்தில் மீண்டும் தொலைந்து போகாமல் நிலைத்திருக்க வேண்டுமே..?! என்ற எண்ணமும் இடையில் எழாமல் இல்லை.



Advertisement

“என்னம்மா, இப்படி பாத்துட்டு இருக்கீங்க..?” என தனத்திடம் கேட்டாலும், அவருக்கான பதத்தில் குடிக்க டீயை போட்டுக்கொண்டிருந்தது அவளின் கரங்கள்.

“எல்லா வேலையும் நீயே செய்யனுமாடா..? அந்த குட்டி கழுதைய கூடமாட எதாவது செஞ்சு கொடுக்க சொல்ல வேண்டியது தானே..?” என குறைபட்டுக்கொண்ட தனத்திடம்,

Advertisement

Advertisement

“அவ இன்னும் சின்ன பொண்ணு தானே.. போக போக மெல்ல கத்துக்கட்டும்..” என்றாள் இனியாள் மென்மையாக.

“என்ன சின்ன புள்ள..? காலேஜ் முடுச்சிட்டா. கேம்பஸ்ல செலக்ட் ஆகி, இன்னைக்கு வேலைக்கு போக போறா. 

Advertisement

ஆனா பாரு, கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம.. குழந்தைக்கு சமமா விளையாண்டுட்டு இருக்கா. எல்லாமே நீ கொடுக்கற செல்லம் தான்..” என்று கடிந்து கொள்ள, 

“விடுங்கம்மா. அவ பொறுப்பில்லாத பொண்ணு இல்ல. நம்மகிட்ட மட்டும் தான் இப்படி விளையாடிட்டு இருக்கா..” என தங்கைக்காக பரிந்து வந்தாள் இனியாள்.

“என்னமோ போ. நீ தான் அவள மெச்சிக்கனும்..” என சலித்தாலும், 

அவருக்கும் தன் மகளைப் பற்றி தெரியும் என்பதால், பேச்சு வாக்கிலேயே இனியாள் கொடுத்த டீயை அருந்தி முடித்தவர், டாக்டரின் பரிந்துரைப்படி.. தனது நடைபயிற்சிக்காக வீட்டிலிருந்து வெளியேறினார்.

“என்னக்கா.. தாய் கிழவி வாக்கிங் போயிடுச்சா..?” என கேட்டவாரே, தலையை துவட்டி கொண்டு வந்த சம்யுக்தாயை கண்டிப்போடு பார்த்தவள்,

“சம்யும்மா.. தப்புடா.. அம்மாவ அப்படி சொல்லாதே. நீ கூப்பிடறத பார்த்தா வெண்பாவும் அதை செய்வா.. ஒழுங்கா அம்மான்னு சொல்லு..” என பெரியவளாய் சின்னவளின் தவறை எடுத்துரைக்க,

“ஈஈஈஈ.. ஜாரீ.. ம்மீ வாக்கிங் போயாச்சா..?” என்றாள் உடனடியாக. 

“ம்ம், இப்ப தான் டீ குடுச்சிட்டு கிளம்பினாங்க..” என்ற பதிலில் கடுப்பானவள்.

“எதுக்கு டீ கொடுத்த நீ..? டாக்டர் காலைல அவங்க வாக்கிங் போயிட்டு வந்த அப்புறம் தான் கஞ்சி கொடுக்க சொல்லியிருக்காங்க. 

பிபி கண்ட்ரோலுக்கு வந்து, கொஞ்சம் உடம்பு சரியானதும் பழையபடி டீ ன்னு ஆரம்பிச்சிட்டீங்களா ரெண்டு பேரும்..” என கோபத்தை காட்ட,

“டாக்டர் சொன்னாங்க தான். ஆனா, அம்மாவால காலைல டீ குடிக்காம இருக்க முடியாது சம்யூ. 

அவங்க பலவருஷ பழக்கத்தை சட்டுன்னு மாத்த சொன்னா முடியாது இல்லையா..?” என தனத்தை நன்கு உணர்ந்தவளாக பேச.

“ஆனா அக்கா, அவங்க ஹெல்த்..” என ஆரம்பித்த சம்யுக்தாவை தடுத்த இனியாள், 

“நா கொடுத்தது ஒரு சிப் அளவு தான்டா. அது பெருசா பாதிக்காது..” என முடித்தவள், 

“சரி அதவிடு. இன்னைக்கு நீ வேலைக்கு கிளம்பனுமே..? எத்தன மணிக்கு கிளம்பனும்…?” என பேச்சை மாற்ற,

“இன்னைக்கு பஸ்ட் டேங்கறதால பத்துக்கு மேல வரச்சொன்னாங்க அக்கா.

நீ எப்பவும் போல பொட்டிக் கிளம்பு. இன்னும் உன்னோட செல்லப்பொண்ணுக்கு திருப்பள்ளியெழுச்சி ஆகல. 

நா அந்த வாண்டை ரெடி பண்ணிட்டு, அம்மாவையும் கூட்டிட்டு கோவில் போயிட்டுவந்து அங்கே விட்டுட்டு போறேன்..” என்றாள் பொறுப்பாக.

‘சரியென.’ தலையசைத்தவள், “சம்யூ உன்னோட செலவுக்கு கொடுத்த பணம் இருக்கா..?” என்றாள் அக்கறையாக.

“அதெல்லாம் இருக்கு அக்கா.. தேவைப்பட்டா உன்கிட்ட கேட்கறேன்..” என‌ச் சென்னதும், 

“சரிடா. எதுக்கும் கொஞ்சம் எடுத்து டிரெஸ்ஸிங் டேபிள் மேல வச்சிட்டு போறேன். 

பாப்பாவ வேற கூட்டிட்டு போறே. அதையும் எடுத்துக்கோ..” என்றுவிட்டு, 

சமைத்த எல்லாவற்றையும் அதனதன் பாத்திரத்தில் மாற்றி போட்டு கழுவ வேண்டியதை சிங்க்கிள் போட,

“செம ஸ்மார்ட் அண்ட் ஃஸ்பீட் அக்கா நீ…! அதெப்படி அம்மாக்கும் குட்டிக்கும் புளி, காரம் குறைச்சு தனியா, நமக்கு தனியான்னு சமைச்சாலும் சட்டுன்னு பினிஷ் பண்ணிடறே…? கிரேட்..” என்றாள் மெச்சுதலாக.

“எல்லோரு உன் மாதிரி பேடு கேளா இருப்பாளா..? வெம்பா அம்மா பெஸ்ட்..” என்று சமையல் அறை வாயிலில் கேட்ட வெண்பாவின் மழலைக்குரலில், அவளிடம் அக்கா தங்கை இருவரின் கவனமும் திரும்பியது.

“வாடீ சிலுப்பீ.. வடுஞ்ச ஜொல்லு கூட போகாம வந்து நின்னுட்டு, நா பேட் கேர்ளா..? நீ தான்டீ பேட் பேட் பேட் கேர்ள்..” என சம்யுக்தா சொன்ன நொடி,

“நோ… நோ… நா குட்டு கேள்.. அம்மா நா குட்டு கேள் தானே..? இவ தானே பேடு…” என‌ சொல்லியபடி அழுக தயாராக,

“போச்சு ஆரம்பிச்சிட்டா இவ நாடகத்தை..” என சம்யுக்தா சொல்ல,

“அம்மா…” என வெண்பா தேம்ப,

“இல்லடா. சித்தி உன்கிட்ட விளையாடறா. நீ தான் எங்க சமத்து சக்கரகட்டியாச்சே…!” என அவளை அள்ளி அணைத்து கொஞ்ச,

தாயின் தோளில் இருந்தபடி, சம்யுக்தாவை கண்டு.. கண் சிமிட்டி வம்பிழுத்தாள் வெண்பா.

“பாத்தீயா அக்கா, இந்த வாண்டோட சேட்டைய. நீ தூக்கி கொஞ்சுனதும் என்ன பாத்து ஒழுங்கு காட்டி.. கண்ணடிக்கறா..!” என்றவள்,

“ஏய், வாடி போய் குளிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வரலாம்..” என அழைக்க,

“நோ.. அம்மா தான் குளிச்சா… வைக்கனும். நீ இப்பிதி இப்பிதி தேப்பே..” என தனது கையை அழுத்தி தனது உடலில் தேய்த்து காட்ட,

“அப்புடி தேச்சாலும் அழுக்கு போக மாட்டிங்குதே அழுக்கி.. நா என்ன செய்ய..?” என நக்கலாக சம்யுக்தா சொல்லி வம்பிழுக்க, 

“போ.. நீ குளிச்சா வேணாம். அம்மா தான்..” என்றாள் குழந்தை இன்னும் பிடிவாதமாய்.

“இன்னைக்கு இவளையும் கோவிலுக்கு கூட்டிட்டு போயி, வேல கிடச்சதுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்கலாமுன்னு நினைச்சேன்.. 

அவ என்ன நம்பி குளிக்க கூட வரமாட்டாளாம். இனி, நா ஏன் செய்ய போறேன்…?

நீயாச்சு உன் பொண்ணாச்சு..” என்றவிட்டு முகத்தை திருப்பிய சம்யுக்தாவின் உக்தி நன்றாக அதன் வேலையை காட்ட,

“அம்மா வேணா. சித்தா குளிச்சா..” என நொடியில் மின்னும் கண்களுடன் தன்னிடம் தாவிய சிறுமலரை அள்ளிக்கொண்ட சம்யுக்தாவும், கிச்சு கிச்சு மூட்டியபடி பாத்ரூமுக்குள் அழைத்து சென்றாள்.

அவர்களின் சிரிப்பு சத்தம் அந்த அறையை தாண்டி கேட்க, இரு‌ புறமும் தலையை ஆட்டி புன்னகைத்த இனியாளோ, சமைத்த பாத்திரங்களை கழுவிவிட்டு.. உடை மாற்ற சென்றவள், மறக்காமல்.. தனது மகளுக்கான உடையையும் பெட்டின் மீது எடுத்து வைத்தாள்.

நிம்மதியாக சிரிப்போடு இருக்கும் இந்த குடும்பத்தின் நிம்மதி இனி வரும் காலத்தில் நிலைக்குமா..?! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!