Skip to content
Post Views: 7,161
பகுதி 15
சபேசன் சம்யுக்தாவை அழைத்து வந்தவர் அந்த டீமிலுள்ள மற்றவர்களுக்கு அவளை அறிமுகம் செய்துவிட்டு,
Advertisement
“சம்யுக்தா.. இது உங்க டெஸ்க். உங்க திங்க்ஸ் வச்சிட்டு என்னோட கேபின் வாங்க..” என அதிகாரமாய் சொல்லிவிட்டு வேகமாய் அங்கிருந்து சென்றார்.
சம்யுக்தாவும் அவர் சொன்னபடி செய்துவிட்டு அறைக்கு செல்ல,
Advertisement
Advertisement
“இடியட், இப்படி தான் ஆடி அசஞ்சு வந்து நிற்பியா..?
இது எவ்வளவு பெரிய ப்ராஜெக்ட்.. இப்படி நிறுத்தி நிதானமா நீ வந்தா என்ன அர்த்தம்..?” என்று கத்த,
Advertisement
“சார்.. நீங்க சொன்ன மாதிரி வச்சிட்டு உடனே வந்துட்டேன்..” என சம்யுக்தா சொன்ன எந்த பதிலையும் ஏற்க சபேசன் தயாராக இல்லை.. என்பது அடுத்தடுத்து அவரின் பேச்சில் புரிந்துவிட அமைதியாக நின்றாள் சம்யுக்தா.
“லிசன்.. இங்கே எம்டிய கைக்குள்ள போட்டுக்கிட்டாலும் என்னைய மீறி ஒண்ணும் கிழிக்க முடியாது.
போ.. போய் இதை லன்ச் டைமுக்குள்ள முடுச்சு எனக்கு அனுப்பு..” என்றான் அதிகாரமாய்.
அவர் கொடுத்ததை பெற்றுக்கொண்டு தனது இருக்கைக்கு வந்த சம்யுக்தாவிற்கு.. அவரின் பேச்சு “ஏன்.. எதற்கு.. எதனால்..” என்ற பல கேள்வி எழுந்தாலும்..
இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே இருக்கும் நிலையில் மற்றதை பற்றி யோசிக்க கூட அவகாசம் இல்லாமல் வேலையில் மூழ்க வேண்டி இருந்தது.
அவளுக்கு இடையில் ஏற்பட்ட சந்தேகத்தை கேட்கவென இரு முறை அவரிடம் சென்று நின்று..
அவனின் பார்வையிலும், அவசியமற்ற சில பல திட்டுக்களை வாங்கி வந்த பின்னரே.. ஓரளவு அவளுக்கு புரிந்தது..
‘அவனுக்கு ரியான் தனக்கு பரிந்து பேசியது மட்டுமல்ல.. தான் அந்த டீமிலேயே சேர்வது பிடிக்கவில்லை.. என்பது..’
“அது என்ன புதுசா வேலைக்கு வந்தா எங்களால செய்ய முடியாதா..?” என்ற வீம்பு தலை தூக்க,
அதன் பிறகு அவனிடம் சென்று நிற்காமல்.. முடிந்தவரை அவளாகவே அதை செய்ய ஆரம்பித்தாள்.
அவளுக்கு வரும் பகுதி பற்றி ரியான் தெளிவாக சொல்லி அனுப்பியிருக்க, மிகவும் புத்திசாலியான அவளுக்கு அதை பற்றிக்கொண்டு தனது வேலையை முடிப்பது அவ்வளவு கடினமாக இருந்திருக்காது தான்.
ஆனால் அதில் பல குழப்பங்கள் அவளுக்கு எழுந்து கொண்டே இருக்க.. முடிக்க முடியாது திணறித்தான் போனாள்.
சபேசன் கொடுத்த நேரக்கெடுவுக்குள் அதை முடிப்பது சாத்தியமே இல்லை.. என்பது அவருக்கே தெரிந்தும், ‘அதை முடிக்கவில்லை..’ என அனைவரின் மத்தியிலும் வைத்து பேசிவிட சம்யுக்தாவிற்கு மிகவும் அவமானமாகி போனது.
அவளின் நிலை புரிந்த சிலரும்.. அவளுக்கு உதவ முடியாமல்.. அவர்கள் வேலையை முடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்க சம்யுக்தாவிற்காக வருந்த மட்டுமே முடிந்தது அவர்களால்.
“சம்யுக்தா லன்ச் டைம் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு. ஷட்டவுன் பண்ணிட்டு வாங்க..” என அந்த டீமிலிருந்த பெண் அழைக்க,
அந்த நேரம் பார்த்து அங்கு வந்த சபேசன், “என்ன மாலதி..?” என்றான் விசாரணை தொனியில்.
“இல்ல.. லன்ச்சுக்கு சம்யுக்தாவ கூப்பிட்டேன்..” என அவர் மென்று விழுங்க,
“ஓ. கொடுத்த வேலை முடுஞ்சதா ..?” என்றான் சம்யுக்தாவை கண்டு எள்ளலாக.
“இல்ல சார்..” என்ற சம்யுக்தாவின் மீதிருந்த பார்வையை மாலதி புறம் திரும்பி,
“மாலதி.. உங்க வேலை என்னவோ அதை மட்டும் பார்த்தா நல்லது..” என சூசகமாக மிரட்ட,
“சாரி சார்..” என்றவர்,
சம்யுக்தாவின் புறம் பார்வையை திருப்ப கூட பயந்து அங்கிருந்து விரைந்தார்.
சம்யுக்தாவை மீண்டும் ஒரு பார்வை பார்த்துவிட்டு.. அவ்விடம் விட்டு நகர்ந்தான் சபேசன்.
அந்த பார்வையில் இருந்தது என்னவோ..?
யாருமற்ற இடத்தில்.. தனது வேலையில் மூழ்கியிருந்தவளுக்கு தனது போன் ஒலிப்பது கூட கருத்தில் பதியவே இல்லை.
இரு முறை ஒலித்து ஓய்ந்த பின் அங்கு வந்த செக்யூரிட்டி ஒருவர்,
“மேடம், சார் உங்கள கால் பண்ண சொன்னார்..” என்றிட,
முதலில் புரியாமல் விழித்தவள் பின் ‘அது ரியானாக இருக்குமோ..?’ என்ற எண்ணத்தில் தனது போனை எடுக்க.. அவனின் விடுபட்ட அழைப்பே, ‘அது அவன் தான்..’ என்பதை தெளிவாக்கியது.
லேசாக விரிந்த புன்னகையுடன் அவனுக்கு அழைக்க,
அழைப்பை ஏற்றதும், “பேபி.. சாப்பிட போகாம இன்னும் என்ன வேலை பார்க்கறே..?” என்றான் அக்கறையாக.
“நீங்க எல்லாம் என்ன.. பாஸ்..?! வேலை பாருன்னு சொன்னா ஓகே.. ஏன் வேலை பார்க்கறேன்னு கேட்டா எப்படி..?” என்றாள் இலகுவான குரலில்.
“மணி என்ன தெரியுமா..? சாப்பிடாம கூட வேலை பார்த்து.. என் கம்பெனிய முதல் இடத்துக்கு கொண்டு போகனுமுன்னு புதுசா எதாவது முடிவு எடுத்திருக்கீயா.. என்ன..?” என்றான் கிண்டலாக.
“அப்படியெல்லாம் இன்னும் யோசிக்கலையே. நீங்க சொன்னதும் தான் அப்படி செஞ்சா என்னன்னு தோனுது.. பாஸ்..” என்றாள் அவளும் அவனுக்கு சளைக்காமல்.
“அப்படி முடிவெடுத்து.. வேலை பார்க்கறது ஒரு பக்கம் இருக்கட்டும்.
முதல்ல போய் சாப்பிட்டு வந்து எதுவானாலும் செய்.. இப்ப முதல்ல ஷட்டவுன் பண்ணு..” என்றான் கராராய்.
அவனிடம் சபேசன் பற்றி சொல்ல தயங்கி.. இப்போது இவன் சொன்னதை செய்தால்.. அவனிடம் வாங்கி கட்ட வேண்டி வருமே.. என்ற தவிப்போடு அவள் விழிக்க,
“பேபி.. ஈஸ் எனி ப்ராப்ளம்..?” என்றான் மானிட்டரில் தெரிந்த அவளின் முகபாவனையை அவதானித்தபடி.
“நோ.. நோ.. நத்திங் பாஸ்..” என அவள் அவசரமாக சொன்ன பாணியிலும் முகத்தில் தெரிந்த பதட்டத்திலுமே ஏதோ தவறாக பட,
“ம்ம்.. ஓகே..” என்றவன் தன் முன் இருந்த சிசிடிவியில்.. அவள் அங்கு சென்றது முதல்.. நடந்த அனைத்தையும் பார்க்க துவங்கினான்.
****
முகுந்தை சாப்பிட வைக்கவென டேபிளில் ரியான் அமர்த்த அவன் விளையாட்டாய் சிசிடிவி பதிவை ஓட விட்டிருந்தான்.
‘எப்படியாவது சாப்பிட்டால் போதும்..’ என ரியானும் அங்கு நடப்பதை கண்காணித்தபடியே அவனுக்கு ஊட்டிக்கொண்டிருந்தான்.
அப்படி பார்த்துக்கொண்டிருக்க.. முகுந்த், “ப்பா.. பேபி..” என்றான் ஒரு குறிப்பிட்ட இடத்தை காட்டி..
அதில் சம்யுக்தா தனியாக அமர்ந்து இன்னும் வேலை பார்ப்பது தெரிய அவளுக்கு அழைத்திருந்தான்.
அவளின் பேச்சில் இருந்த தயக்கத்தில் அதை மட்டும் முழு ஸ்கிரீனிலும் ஓட விட்டவனுக்கு ‘ஏதோ சரியில்லை..’ என்பது புரிய,
அவள் அங்கு சென்றது முதல் நடந்ததை பார்த்தவனுக்கு ஓரளவு சூழ்நிலை புரிந்தது.
ஏன்.. அவனும் புதிதாக ஐடி துறையில் சேர்ந்து, அடுத்த அடுத்த கட்டத்திற்கு சென்றவன் தானே..
அங்கே நடப்பது தெரியாதா என்ன..?
முகுந்த் சாப்பிட்டு முடித்ததும் தனது போனை எடுத்து, “சந்தீப்.. எனக்கு சில டீட்டைல்ஸ் எல்லாம் வேணும்..” என எனக்கு தேவையானதை சொல்லி முடிக்க,
“இப்ப எதுக்குடா இது..?” என்ற சந்தீப்பிடம்,
“நீ அதை ஃபிப்டீன் மினிட்ஸ்ல கலெக்ட் பண்ணிட்டு கேபின் வா.. சொல்றேன்..” என்றவன் அவனின் உணவை உண்ண துவங்கினான்.
“எது.. கால் மணி நேரத்துலையா..?!” என மலைத்த போதும்,
‘ரியான் தேவையில்லாமல் எதையும் செய்ய மாட்டான்..’ என்பதை மனதில் கொண்டு,
அவன் கேட்ட தகவல்களை சேகரிக்க ஆரம்பித்ததுமே.. அவன் கேட்டதற்கான காரணம் புரிய ஆரம்பித்தது சந்தீப்புக்கு.
பதினைந்து கடந்து.. இருபது நிமிடங்கள் ஆன போது ரியானின் முன் நின்ற சந்தீப்பிற்கு குற்ற உணர்வாகி போனது.. தான் கவனிக்காமல் விட்ட விசயங்களை நினைத்து.
“நா கேட்டது..” என ரியான் கை நீட்ட,
ஒரு கோப்பை அவனிடம் கொடுத்ததும் அதை சரி பார்த்த ரியான், “லெட்ஸ் கோ..” என தனது ஆடையை சரி செய்தபடி கம்பீரமாக வெளியேறினான் அந்த அறையை விட்டு.
error: Content is protected !!