Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ … 28.1

‘திருமணநாள் கொண்டாட்டம்..’ என்று மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டிருக்க, வந்திருந்தவர்கள் சிலரின் பேச்சு.. அங்கு புதிதான கதையாய் உலாவ ஆரம்பித்தது.

அதிலும் அழகிய பிங்க் வர்ண பார்ட்டி கவுனில் வலம் வந்து கொண்டிருந்த சம்யுக்தாவை கண்ட பின் அவர்களின் கதை ஊர்ஜிதமான ஒன்றானது.



Advertisement

அதாவது ரியானும்.. இனியாளும்.. திருமணம் முடித்து, குழந்தை பிறந்த பின் பிரிந்து.. இப்போது மறுபடியும் சேர்ந்திருப்பதாகவும், 

சம்யுக்தா வந்தது முதல் ரியானின் ஸ்பெஷல் கவனிப்பு அவரின் மச்சினி என்பதாலும் தானாம்..!!!

Advertisement

Advertisement

இதை கேட்டு ஒரு புறம் சிரிப்பு வந்த போதும், அதுவே எல்லாரின் எண்ணமாக இருக்க, ‘அதை மாற்றி.. மற்றவரின் வாய்க்கு அவலாக ஏன் மாற வேண்டும்..?’ என்று, 

சிறு புன்னகையை மட்டும் விசயமறிந்தவர்கள் அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டு அமைதியாகி போக, 

Advertisement

அன்று பார்ட்டி முடியும் போது இது அவர்களின் ஐந்தாவது திருமண நாள்.. என மற்றவர்களால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒருவழியாக எல்லாம் முடிந்து நேரம் பத்தை கடந்த பிறகே எல்லாரும் கிளம்ப முடிந்தது. 

சந்தீப் முதலிலேயே ரியானை இனியாளோடு புறப்படச்சொல்ல, 

“இப்போ எங்களுக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் முடுஞ்சு, மூனு வயசு தாண்டி பிள்ளைங்க இருக்காங்கன்னு எல்லாம் நம்பிட்டு இருக்காங்க.

இப்ப போய்  நான் பஸ்ட் நைட் கொண்டாட போறேன்னு போனா எப்படி இருக்கும்..? செம காமெடியா இருக்காது..?”  என லேசாக கலாய்த்தபடி சொல்ல, 

சந்தீப்புக்கும், ‘இந்த கதையால இப்படி ஒரு சிக்கலா..!’ என மானசீகமாக நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது.

வேறு வழியின்றிபோக.. வந்திருந்தவர்கள் எல்லாம் கிளம்பும் வரை பொறுத்திருக்க வேண்டியது தான்.. என்ற முடிவோடு இருந்து கொண்டனர் ஏனையவர்களும்.

விருந்து அழைப்புக்கென வந்திருந்த எல்லாரும் கிளம்ப, எஞ்சிய மூன்று குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே என்ற நிலையில், சந்தீப் மலரோடு ரியான் வீடு வர எத்தனிக்க வேண்டாமென மறுத்தவனிடம்,

“சின்னத்தான் புள்ளைங்களையாவது நாங்க கூட்டிட்டு போறோம்..” என மலர் சொன்னதும், 

இனியாளின் கண்ணில் தெரிந்த மறுப்பை கண்டு கொண்ட ரியான்.. இதமாகவே மறுத்துவிட்டு, அவரவர் வீட்டிற்கு கிளம்ப சொன்னவன்,

சம்யுக்தாவையும், தனத்தையும் அவர்களோடு அழைத்து வந்த போதும், அவர்களையும் அவர்களின் வீட்டின் முன் இறக்கி விட்டுவிட்டே தங்களின் இல்லம் வந்து சேர்ந்தனர். 

அவர்கள் இல்லம் வரும் போது குழந்தைகள் இருவரும் உறங்க ஆரம்பித்திருக்க ஆளுக்கு ஒருவராய் தூக்கி வந்து மெத்தையில் படுக்க வைத்துவிட்டு,

“அம்மூ.. நீ ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டு மேக்கப் ரிமூவ் பண்ணு.. வந்திடுறேன்..” என்றவன், 

தனது கோட்டை மட்டும் கழட்டி போட்டுவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.

இதுவரை தோன்றாத ஒருவித பதட்டம் மீண்டும் அவளுள் ஒட்டிக்கொள்ள உடை மாற்ற தயங்கி அப்படியே நின்றிருந்தாள் ரியான் திரும்பி வரும் வரை.

“என்ன அம்மு.. அப்படியே நிற்கறே..?” என கேட்டபடி வந்தவனின் கையிலிருந்ததை கேள்வியாக அவள் பார்க்க,

“குட்டீஸ் ரெண்டு பேரும் விளையாட்டு குஷில எங்கே சாப்பிட்டாங்க..? 

அதான் பால் எடுத்துட்டு வந்தேன்..” என சொன்னபடியே,

ஒரு டம்ளாரை எடுத்து இனியாளிடம் நீட்டி, “வெண்பாக்கு கொடு..” என்றுவிட்டு,

“கண்ணா.. இந்தாங்க..” என நேக்காக பாலை முகுந்தை சாப்பிட வைத்தான். 

‘அவனுக்கு தோன்றியது.. ஏன் எனக்கு தோன்றவில்லை..?’ என்ற ஆராய்ச்சியோடு அவனையே பார்த்திருந்தாள் அவனின் மனையாள்.

முகுந்த் குடித்து முடித்ததும், அவனை தூக்கி சென்று பாத்ரூம் போக வைத்து திரும்பும் போது அவனின் உடையை தளர்த்தி.. வேறு உடைக்கு மெத்தையிலேயே மாற்றி.. என அவனின் அடுத்த அடுத்த செயல்களை வாயை பிளக்காத குறையாய் பார்க்க மட்டுமே முடிந்தது இனியாவாள்.

இத்தனையையும் செய்துவிட்டு.. கவனத்தை இனியாள் புறம் அவன் திருப்ப திருதிருவென விழித்தாள் அவள்.

“என்னாச்சு.. பால கைல வச்சுட்டு.. நீ தூங்கிட்டையா..?” என கிண்டலாக கேட்க,

‘இல்லை.. ஆமா..’ என எல்லா பக்கமும் தலையாட்டியவளிடமிருந்து சிரிப்போடு பாலை வாங்கியவன் மகளுக்கு கொடுக்க, அவளோ முரண்ட துவங்கினாள்.

“பட்டுக்குட்டி இல்ல.. செல்லமில்ல.. சமத்தா குடிங்க குட்டிம்மா..” என கொஞ்சி.. கெஞ்சி.. அதை எப்படியோ குடிக்க வைத்து, அவளையும் அதே போல செய்து வந்தவனை கண்டு பிரமித்து போனாள் அவள்.

‘இவரையா தப்பா நினைச்சோம்..! இவனுக்கு எதுக்கு புள்ள..? ன்னு எத்தனை அலட்சியமா சொன்னேன். 

தாயுமானவனா.. அவனோட இந்த குணத்துக்கு ஈடு என்ன இருக்கு..!’ என அவனையே விழியகற்றாமல் பார்த்திருந்தவளின் பார்வை புரிந்தாலும் கண்டு கொள்ளாமல், 

மகளுக்கும் இலகுவான உடையை மாற்றி சிணுங்கிய அவளை தட்டி கொடுத்து தூங்க வைத்தவன், அதன் பிறகே தன்னை கவனிக்க ஆரம்பித்தான்.

அதுவரை இனியாளும் எதுவும் செய்யாமல் இருக்க, “நீ இங்கே ரெப்ரஷ் ஆகிக்கோ.. நா பக்கத்து ரூம்ல ஆகிக்கிறேன்..” என்றவன் டவலோடு அடுத்த அறைக்கு செல்ல, 

இதுவரை இருந்த பதட்டம் நீங்கி, ‘இப்படிப்பட்டவன் என் கணவன்.. எனக்கு என் உணர்வுக்கு மதிப்பளிப்பான்..’ என்ற எண்ணம் கொடுத்த நிமிர்வில் அவளும் தயாராக துவங்கினாள்.

அரைமணி நேரம் கழித்து தலையில் ஈரம் சொட்ட இரவுடையில் வந்தவன்.. பிள்ளைகளின் அருகே சென்று படுக்க, 

அவனின் மகளோ அவனின் ஸ்பரிசம் உணர்ந்தது போல, “ப்பா..” என்ற படி அவனின் நெஞ்சின் மீதேறி படுத்திருந்தாள்.

என்ன தான் எல்லாவற்றையும் எதிர் கொண்டு தான் ஆகவேண்டும்.. என நினைத்த போதும், 

அவன் முன் புடவை உடுத்தி கொண்டு நிற்க தயங்கி சுடிதாரை அணிந்து வந்தவள், அவனின் மீது படுத்திருந்த மகளை கண்டு லேசான பொறாமை எழுந்தது.

அவனின்‌ ஒரு புறம் மகன், மற்றைய புறத்தில் மகள் உருண்டு படுத்திருக்க இமை மூடி கிடந்தான் ரியான்.

“அச்சோ.. அசதில தூங்கிட்டாங்க போலவே..? தலை இன்னும் ஈரமா வச்சிட்டு படுத்தா.. என்ன ஆகறது..? 

மத்தவங்களுக்கு மட்டும் பார்ப்பாரு.. அவரை பார்த்துக்க மாட்டாரா..?” என மெல்லிய குரலில் சலித்துக் கொண்டே, 

ஒரு துண்டோடு அவனருகே வந்து மெத்தையில் அமர்ந்தவள், 

மெதுவாக அவனின் தலையை துவட்ட, ‘எப்படி திரும்பினான்..!’ என சுதாரிக்கும் முன், 

அவளின் மடியில் அவன் தலை இருந்தது மகளை நோக்காக பிடிந்திருந்தபடியே..

ஒரு நொடி ஜர்க் ஆகி அதிர்ந்து அவனை பார்த்தவள், பின் மெல்லிய இதழ் விரிப்போடு அவனின் தலையை துவட்டி முடித்தாள்.

ஈரம் காய்ந்ததும்.. ‘எப்படி அவனை எழுப்ப..? துண்டை காய வைக்க வேண்டுமே..!’ என அவள் நினைக்கும் போதே, 

விழி திறந்தவன், “தேங்க்ஸ்..” என்றான் ஆழ்ந்த குரலில்.

‘அடப்பாவி..! அப்போ தூங்கலயா..?’ என அவள் அதிர்ந்து பார்க்க, 

இரு கண்ணையும் ஒன்றாக சிமிட்டி இதழ் விரிய ஒரு‌புன்னகையை தந்துவிட்டு தலையணைக்கு தலையை மாற்ற,

‘அடக்கேடி..!’ என மனதுக்குள் செல்லமாக வைது கொண்டாள் தன் மன்னவனை.

துண்டை உலர போட்டுவிட்டு வந்தவள், ‘இப்போது எங்கு படுக்க..?’ என்ற சந்தேகத்தோடு மெத்தை அருகே தயங்கி நிற்க, 

அவளின் வரவை அறிந்தது போல அவளின் கரத்தை பற்றி இழுத்தவன், மகளை வாகாய் மறுபக்க மார்பில் கிடத்திவிட்டு அவ்விடத்தை மனையாளுக்கு தந்திருந்தான்.

மகன் ஒரு புறம், மனையாள் ஒரு புறம், தன் மீது மகள்.. என படுத்திருந்தவனின் உள்ளம் அத்தனை நிறைவாய் இருந்தது. 

“பாப்பாவ எவ்வளவு நேரம் மேல படுக்க வைப்பீங்க..! அவளை கீழ படுக்க வைக்கலாமே..?” என மெல்லிய குரலில் இனியாள் கேட்க..

“எப்போ.. எனக்கு மகன் பிறந்தான்னு அவனை போட்டோல பார்த்தேனோ.. அப்ப இருந்து இது என்னோட ஆசை.. 

ஒரு நாளாவது அவனை என் மேல வச்சு.. ஆசையா அணைச்சிட்டு படுக்கனுமுன்னு..

அவனை நான் நேர்ல பார்த்ததே.. ஐசீயூல உயிருக்கு ஆபத்தான நிலைமையில தான்.. திரும்ப வருவானா..? ன்னு தெரியாம நான் தவிச்ச தவிப்பு..

அப்படி அவனை மீட்டு கொண்டு வந்துட்டாலும் ஒரு கண்ணாடி பாத்திரத்தை விட மென்மையா அவனை கையாள வேண்டிய நிலை.. 

இப்பவும் அவனுக்கு கம்பர்ட்டான ப்ளேஸ்ல தான் அவனால தூங்க முடியும்.. இல்லைன்னா அவனுக்கு பேக் பெயின் வந்திடும்.

என்னோடு ரொம்ப வருஷ கனவை நிறைவேத்தவே அந்த கடவுள் எனக்கு ஒரு மகளை கொடுத்திருக்காரு.. 

அதை தவற விட என்னால முடியாது..” என்றவன், 

குரலின் வழி தெரிந்த வலி.. அவளையும் தாக்க, 

அவனை நெருங்கி அணைத்திருந்தாள் தாயின் பரிவோடு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!