Skip to content
Post Views: 8,106
“மினிமம் ஆறு மாசத்துல இருந்து ஒரு வருஷம் புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்தா தான் ‘ரெசிடென்சி’ அப்பளை பண்ண முடியுமாம் நிலாம்மா… என்ன பண்ணலாம் சொல்லு” நல்லவன் போல அவளிடம் கேட்டான் கோவர்த்தன்.
அவன் நோக்கம் புரியாதவளா அவள்!?
“அப்போ இங்க எனக்கு ரெசிடென்சி வேண்டாம். நான் மனசு மாறிடலாம்ன்னு இருக்கேன்” அவள் அப்படி சொன்னதும், அவன் வெளிறிய முகத்துடன், “என்ன மாற போற?” என்றான்.
Advertisement
“பேசாம இந்தியாக்கே போயிடலாம்ன்னு தோணுது. வேற ஏதோ ஒரு நாட்டுல வந்து உட்காந்துருக்குறதுக்கு நம்ம நாட்டுலயே ஒரு மூலைல செட்டில் ஆகிடலாம், இல்ல? என் கம்பெனில நார்த் இந்தியா பிரான்ச்’க்கு ட்ரான்ஸ்பர் கேட்டா கண்டிப்பா கிடைக்கும். மும்பைக்கோ டெல்லிக்கோ போய் செட்டில் ஆகிடலாம்” கடந்த ஒரு வாரத்தில் முறைத்துக்கொண்டு மட்டுமே இருந்தவள், மிக நீண்ட வசனங்கள் பேச, இதற்கு இவள் பேசாமலே இருந்திருக்கலாம் என்று நொந்தான் நாயகன்.
Advertisement
“எப்போ இருந்து இப்படி தோணுது?” முகத்தில் ஒன்றும் காட்டாமல் அவன் கேட்க, “ஜஸ்ட் வன் வீக்’கா தான்” என்றாள் தோள் குலுக்கி.
Advertisement
“அப்போ மேடம் என்னை என்ன செய்றதா உத்தேசம்?” முகத்தை உர்ரென வைத்திருந்தவனை பார்க்கவே சிரிப்பு வந்தது அவளுக்கு. அவனுக்கு முகத்தை காட்டாமல் சமாளித்து, “உங்களுக்கும் எனக்கும் என்ன இருக்கு? ரெசிடென்சி’க்கு தான் நான் கல்யாணம் செஞ்சேன். அதுவே வேண்டாம்ன்னு ஆகிடுச்சு, அப்புறம் எதுக்கு உங்களோட இருக்கணும்?” என்றாள்.
Advertisement
“ஓஹோ! அப்போ ‘எனக்கு உங்கக்கூட இருக்கணும்’ன்னு சொன்னதெல்லாம் பொய்! இல்லையா?” என்றான்.
“ஜஸ்ட் மூட் ஸ்விங்ஸ்’ல பேசுறதெல்லாம் பெரிய விஷயமா எடுத்துப்பீங்களா கோ?” அவள் கேட்டதும், எழுந்துவிட்டான் கோவர்த்தன்.
“வாட்!? ஜஸ்ட் மூட் ஸ்விங்க்ஸா? உங்க போதைக்கு நாங்க ஊறுகாவா என்ன?” என்று எகிறியவன், “உன் மனச தொட்டு சொல்லு, நீ என்னை லவ் பண்ணல?” என்றான்.
சாவதானமாய் கட்டிலில் அமர்ந்தவள், “ஒரு பொண்ணு சிரிச்சு பேசுனா லவ்ன்னு சொல்லுவீங்களா டாக்டர்? ஒரு சைகேட்ரிஸ்ட் நீங்களே, இப்படி பீகெவ் பண்ணுனா உங்ககிட்ட வர பேஷண்ட்ஸ எப்படி நீங்க கியூர் பண்ண முடியும்!?” என்றாள்.
சுர்ரென மண்டைக்கு ஏறியது அவனுக்கு.
“விளையாடாத வாணிலா, எனக்கு கோவம் வருது” எச்சரிக்கை போல அவன் சொல்ல, “இதுல கோவப்பட என்ன இருக்கு டாக்டர்? ப்ராக்டிக்கலா பேசுங்க” என்று அசட்டையாய் சொன்னாள்.
கண்ணை இறுக மூடி நின்றவன், சில நொடிகளில் கண் திறந்து, “கடைசியா கேக்குறேன். எனக்கு பொண்டாட்டியா கடைசி வரைக்கும் இருக்க முடியுமா முடியாதா?” என்று கேட்க, அவன் கேட்ட விதம் அவளுக்குள் சில்லென்று இறங்கினாலும், ஒருபக்கமாய் உதட்டை சுளித்து, “நோ!!!” என்றாள் நிர்தாட்சண்யமாய்.
தலையை அழுந்த கோதிக்கொண்டே ஜன்னல் அருகே சென்று நின்றுக்கொண்டான் கோவர்த்தன். அவனுக்கு அவள் விளையாடுகிறாள் என்று ஒருபுறம் தோன்றினாலும், அவள் நடவடிக்கைகள் அப்படி முழுதாக நினைக்க முடியவில்லை. மண்டை காய்ந்தது. தலையை பிய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது. நிமிடத்திற்கு நிமிடம் அவனுக்கு இரத்தவோட்டம் மூளைக்கு ஏறுவதை போல இருக்க, டக்கென பாக்கெட்டில் இருந்து ஃபோனை எடுத்தவன், கால் செய்தான்.
மறுமுனையில் எடுக்கப்பட்டதும், “ஹலோ, ஐ’ம் டாக்டர் கோ! ஐ நீட் டு கன்சல்ட் அவர் சீஃப் சைகேட்ரிஸ்ட் மிஸ்டர் ஷிஷாங் அஸ் சூன் அஸ் பாசிபிள்” என்று பேச, அங்கே என்ன சொல்லப்பட்டதோ,
“அப்கோர்ஸ்… ஐ’யம் அ சைகேட்ரிஸ்ட், டஸ் இட் மீன், ஐ ஷுட் நாட் ஹேவ் எனி சைகலோஜிகள் ப்ராப்ளம்?” (நான் மனோதத்துவ மருத்துவன் தான், அதுக்காக எனக்கு எந்த மனரீதியான பிரச்சனைகளும் வரகூடாதுன்னு அர்த்தமா?) என்று கத்த, இவன் இப்படி செய்வான் என்று அறியாத பெண்ணவள் அவசரமாய் அவனிடம் வந்து தடுத்தாள்.
“என்ன பண்றீங்க நீங்க? கட் தி கால், கேன்ஸல் தி அப்பாயின்மென்ட்” என்று சொல்ல, அவளை முறைத்துக்கொண்டு, “ஐ நீட் அன் அப்பாயின்மென்ட் ரைட் டுடே” என்று போனில் சொன்னவன் போனை பேக்கெட்டில் வைத்துக்கொண்டு வெளியே போக திரும்பினான்.
“ஹே கோ! நில்லுங்க…” அவனை இழுத்துப்பிடிக்கப்பார்த்தாள். அவன் விடாப்பிடியாய் அங்கிருந்து போகவே முயல, முன்னே சென்று அவனை கட்டிக்கொண்டவள், “என்ன இப்படி கோவம் வருது உங்களுக்கு?” என்று கேட்க, “விடு என்னை! விடு வாணிலா” என்றான் கடுகடுவென.
“என்ன வாணிலா? நிலா, நிலாம்மா, நிலாக்குட்டி எல்லாம் எங்க போச்சு?” திமிரும் அவனை அணைத்துக்கொண்டே கொஞ்சலாய் அவள் கேள்வி கேட்க, “வாணிலா, யூ ஆர் டெஸ்டிங் மை பேஷன்ஸ்! என்னை போக விடு” என்று சொன்னதும், “ஏய் என்ன நீ ரொம்ப துள்ளுற? பொண்டாட்டி சொன்னா கேட்கணும்ன்னு தெரியாதா?” என்றாள்.
அவன் திமிறல் அடங்கியது. அவள் கண்களை நேராக பார்த்தவன், “உனக்கு மனசுல விண்ணை தாண்டி வருவாயா ஜெஸ்சி’ன்னு நினைப்பா?” என்றான் கடுப்பாய்.
முகம் சுருக்கி, “ஏன்?” என்று கேட்க, “பைத்தியக்காரி மாறி மாத்தி மாத்தி பேசிட்டு இருக்க? உனக்கு நான் குடுத்த கவுன்சிலிங் பத்தாது போல. இன்னும் நாலு சிட்டிங் தேவைப்படும். ஒழுங்கா கிளம்பி என்னோட ஹாஸ்பிடல் வா” என கையை பிடித்து இழுத்தான்.
அவனிடம் இருந்து கையை இழுத்துக்கொண்டவள், “ஐயோ நான் சும்மா விளையாடுனேன் கோ!” என்றாள்.
“என் மனசும் வாழ்க்கையும் உனக்கு விளையாட்டா என்ன?” இதை கேட்ட அவனிடம் விளையாட்டில்லை. தலைகுனிந்தாள் அவள்.
“உன்னை நான் காதலிக்குறேன்னு சொன்னதுக்காக நீ என்னை டேக் இட் ஃபார் கிராண்டட்’டா எடுத்துப்பியா என்ன?” என்று கேட்டவன், “நீ என்னை காதலிக்குறேன்னு சொல்லி நான் உன்னை இப்படி சுத்தல்ல விட்டா, வுட் இட் பி ஃபன் டு வாட்ச்? (பார்க்க விளையாட்டா இருக்குமா?)” என்றான். அவளிடம் பதிலில்லை. மேலும் மேலும் கேட்க தோன்றினாலும் அமைதியாய் சென்று பால்கனியில் நின்றுக்கொண்டான் கோவர்த்தன்.
வானம் இருட்டிக்கொண்டிருந்தது. மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிய, வேடிக்கை பார்த்தபடி நின்றுவிட்டான். சற்று நேரம் பொறுத்த வாணிலா, மெல்ல நடந்து சென்று அவனை பின்னோடு கட்டிக்கொள்ள, அவன் எதுவும் சொல்லவில்லை, செய்யவுமில்லை.
அவளே பேசினாள்.
“எனக்கு கல்யாணம்ன்னு நினைச்சாலே அலர்ஜியா இருந்துச்சு. புகுந்த வீட்டு ஆளுங்க கூட பழக முடியும்ன்னே தோனல. அதுலயும் உன் பேமிலி ரொம்பவே பெருசு. உன்னை பிடிச்சாலும், என்னால அதை முழுசா ஒத்துக்க முடியாம பயமா இருந்துச்சு” மெல்லிய குரலில் அவள் சொல்ல,
“தெரியும்!” என்று நிறுத்தினான் அவன்.
“நீ எனக்காக யோசிச்சு இதெல்லாம் அன்னைக்கு சொன்னப்போ இதை விட பெட்டரா யாரு கிடைப்பான்னு ரொம்ப சந்தோசப்பட்டேன்! உனக்காக என் பயத்தை மாத்திக்கனும்ன்னு முடிவு பண்ணேன்” அவள் சொல்லும்போதே,
“இவனை நிம்மதியா இருக்க விடாம சுத்தல்ல விடனும்ன்னும் முடிவு பண்ணிருக்க?” என்று கேட்க, “ஏய், சும்மா அதே சொல்லாத! அன்னைக்கு நீ என்ன செஞ்சிருந்தாலும் நான் ஒண்ணுமே சொல்லிருக்க மாட்டேன், ஐ வாஸ் ஃபுல்லி ப்ரிபேர்ட் ஃபார் ஆர் லைஃப். ஆனா நீ அப்படி அம்மா நொம்மான்னு சொல்லிட்டு போனதுல தான் கோவம் வந்துச்சு. பொண்ணு நானே ஓகே சொல்றேன், இவன் ஸீன் போடுறான் பாரேன்னு!” அவள் சொல்ல, அவன் பேசவில்லை.
“என்னை அப்செட் பண்ண உன்னை டீஸ் பண்ணலாம்ன்னு சும்மா இப்படி பேசுனேன். அதுக்குன்னு உடனே குதிக்குற?” என்றவள், “என்ன பெரிய சைகேட்ரிஸ்ட்டோ? பொண்டாட்டி மனச கூட படிக்க தெரியல!” என்றாள் சீண்டும் விதமாய்.
சட்டென திரும்பியவன் அவளை முறைக்க, அந்நேரம் பலமான சத்தத்தோடு இடி இடித்ததில், அவன் நெஞ்சிலேயே வந்து விழுந்தாள் வாணிலா. எதிர்ப்பாராத சத்தத்தில் நெஞ்சுக்கூடு படபடவென அடித்துக்கொள்ள, சில நொடிகள் பிடித்தது, அவள் சமநிலை அடைய!
சமநிலை அடைந்தபின்னும் அவன் நெஞ்சை விட்டு வஞ்சிக்கு விலக தான் மனமில்லை. இன்னும் வாகாக சாய்ந்து கட்டிக்கொண்டு நின்றாள். அவளை மொத்தமாய் தன் நீண்ட கரங்களுக்குள் அடக்கிக்கொண்டு நின்றவனுக்கோ, ‘சீக்கிரம் ஊருக்கு போய், இவள் கழுத்தில் தாலியை கட்டிவிட வேண்டும்’ என்று தான் தோன்றியது.
என்னதான் பட்டபடிப்பு படித்து, மேலை கலாச்சாரங்களை ஆதரித்து, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி, காய்ந்த ரொட்டிகளை தின்றாலும், தாலி கட்டாத கையெழுத்து மட்டும் போடும் திருமணம், பெண்கள் மனதில் திருமணமாக பதிவதே இல்லை என்று எண்ணி சிரித்தான் அவன்.
error: Content is protected !!