Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Yendi Unnai Pidikkuthu

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 7

குறிப்பு:- இந்த கதையின் அப்டேட் செவ்வாய் மற்றும் வியாழன் அன்று பதிவிடுவேன் தோழமைகளே!!

 

பிடித்தம் 7

வெற்றிவேல் வண்டியில் சென்றுக் கொண்டிருந்த போது சற்று தொலைவில் ஒருவன் கையை நீட்டி வண்டியை நிறுத்துமாறு செய்கை செய்தான். சட்டென்று வெற்றிவேலின் கூர்பார்வை சுற்றத்தை அலசி ஆராய சற்று தொலைவில் மாலினி நிற்க முடியாமல் பிருந்தாவின் தோளை பற்றியபடி நின்றுக் கொண்டிருப்பது தெரியவும் சட்டென்று வண்டியின் வேகத்தை கூட்டி வண்டியை நிறுத்த முயற்சித்தவனின் அருகே சென்று வண்டியை நிறுத்தினான்.



Advertisement

 

வண்டியை நிறுத்த முயற்சித்தவனோ குழப்பத்துடன் இவனை பார்த்தான். மிதமான வேகத்தில் வந்துக் கொண்டிருந்த வண்டி வேகம் எடுக்கவும் நிற்க போவதில்லை என்ற எண்ணத்தில் அவன் கை ஆட்டுவதை நிறுத்தி சற்று தள்ளி நின்ற போது அதே  வண்டி அவன் அருகில் வந்து நின்றால் அவனும் தான் என்ன நினைப்பான்!

 

Advertisement

அவனது பார்வையை கண்டுக்கொள்ளாத வெற்றிவேல் படபடத்த மனதை வெளிய காட்டிக் கொள்ளாமல் சாதாரண குரலில், “என்னாச்சு?” என்று வினவினான்.

Advertisement

 

அவன், “என் பிரெண்ட் கீழே விழுந்து காலில் அடி பட்டிருச்சு.. கொஞ்சம் லிப்ட் தர முடியுமா சார்? வீடு பக்கம் தான்.. அவளால் நடக்க முடியலை” என்றதும் வெற்றிவேல் கீழே இறங்கிவிட்டான்.

 

Advertisement

வண்டியை நிறுத்தியவன் இவனை யோசனையுடன் பார்க்க, இவனோ வேகமாக மாலினி அருகே சென்று கீழே குத்தாங்காலிட்டு அமர்ந்து அவளது காலை ஆராய்ந்தான்.

 

வண்டியை நிறுத்தியவன், “நீங்க டாக்டரா சார்? நல்லதா போச்சு” என்று கூற,

 

வெற்றிவேல் மாலினியின் பாதத்தை தொடாமல் ஆராய்ந்தபடி, “இல்லை.. ஆனா பஸ்ட் ஏய்ட் பண்ணத் தெரியும்” என்றான்.

 

வண்டியை நிறுத்தியவன், “லிப்ட் தர முடிந்தால் தாங்க.. வேண்டாத வேலை பார்க்காதீங்க” என்று கறாராக கூற,

 

நண்பர்களில் இன்னொருவன், “ஆமா.. முடிஞ்சா லிப்ட் தாங்க இல்லை கிளம்புங்க” என்றான்.

 

வேற்று ஆள் ஒருவன் தங்கள் தோழியை நெருங்குவதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் வெற்றிவேலை கிளப்புவதில் முனைப்பாக இருந்தனர்.

 

வெற்றிவேல் ஒற்றை விரலால் மாலினியின் பாதத்தில் ஒவ்வொரு இடமாக தொட, ஒருசில இடத்தில் அவள் கண்களை மூடியபடி சன்னமாக அலறினாள்.

 

வண்டியை நிறுத்தியவன் கோபத்துடன், “ஹலோ உன்னை கிளம்ப சொன்னோம்” என்றான்.

 

வெற்றிவேல் அவனை ஏற இறங்க பார்த்தான். அவனோ ஒல்லியான உடல் வாகில் பள்ளி மாணவனை போல் இருந்தான்.

 

அவன் வெற்றிவேலிடம், “என்ன லுக்கு?” என்று மிரட்ட,

 

சிரிப்பை அடக்கிய வெற்றிவேல், “நான் ஹெல்ப் தான் பண்றேன்” என்றான்.

 

அவனோ, “நீ ஆணியே பிடுங்க வேணாம்.. தெரியாம வண்டியை நிறுத்திட்டேன்.. நீ முதல்ல கிளம்பு” என்று கூற,

[the_ad id=”6605″]

அன்று யாழினியின் கல்லூரியில் மாலினிக்கு அதரவாக பேசியவன் சட்டென்று வெற்றிவேலின் தோளில் கைவைத்து தள்ள வர, அதை யூகித்த வெற்றிவேல் அவன் தன்னை நெருங்கும் முன் எழுந்து நின்று அவனை தீர்க்கமாக பார்த்தான். அப்பொழுதும் அவன் சண்டைக்கு வர மற்றொருவன் அவனை தடுத்து பிடித்தான்.

 

பிருந்தாவின் தோளில் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்த மாலினி வலியில் பல்லை கடித்துக் கொண்டு, “பிரச்சனை வேணாம்.. சிவா மூர்த்திக்கு போன் பண்ணு” என்றாள்.

 

வண்டியை நிறுத்தியவன், “கிருஷ்ணா சேகர் ரெண்டு பேருக்குமே போன் போக மாட்டிக்குது” என்றான்.

 

வெற்றிவேல், “நான் சென்னையில் இருந்து வரேன்.. என் பிரெண்ட் கல்யாணத்திற்காக தான் வந்திருக்கிறேன்.. நாளைக்கு தான் கல்யாணம்.. அனேகமா நீங்களும் அந்த கல்யாணத்திற்கு தான் வந்திருப்பீங்க னு நினைக்கிறேன்.. என்னை நீங்க நம்பலாம்” என்றான்.

 

வெற்றிவேல் தனது அடையாளத்தை கூற விரும்பவில்லை. தன் அடையாளத்தை கூறாமல் மாலினிக்கு தன்னை அடையாளம் தெரிகிறதா? குறைந்தது தன்னை பார்த்த  ஞாபகமாவது அவளுக்கு இருக்கிறதா என்பதை அறிய விரும்பியதால் தனது அடையாளத்தை அவன் கூறவில்லை. கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராஜசேகர் தற்போது இங்கே இல்லாதது கூட நல்லது என்றே அவனுக்கு தோன்றியது. ஏனெனில் அவர்களுக்கு இவனை நன்றாக அடையாளம் தெரியுமே!

 

 

வெற்றிவேல் கூறியதை கேட்ட பிறகும் அவர்கள் இவனை சிறு சந்தேகத்துடன் பார்க்க,

 

வெற்றிவேல் கைபேசியில் நண்பனை அழைத்தான்.

 

அழைப்பை எடுத்த நண்பன், “எங்க டா இருக்கிற? வழி தவற வழியே இல்லையே!” என்றான்.

 

“நான் இங்கே ஒரு தென்னந் தோப்பில் இருக்கிறேன் டா………………”

 

“அங்கே எதுக்கு டா போன?”

 

“இம்சை.. என்னை பேச விடு.. இங்கே ஒருத்தருக்கு ஹெல்ப் பண்ண வண்டியை நிறுத்தினேன்.. இங்கே சுளுக்கு எடுக்கும் ஒரு வயசான ஆயா இருக்கு னு சொல்லுவியே! அந்த ஆயா இப்பவும் இருக்குதா?”

 

“அதுக்கென்ன கேடு? நல்லா இருக்குது.. யாருக்கு என்ன?”

 

“இங்கே ஒரு பொண்ணுக்கு கால் சுளுக்கி இருக்குது டா…………..”

 

“கிராமத்து பொண்ணுக்கு தெரியாத வைத்தியமா?”

 

“இவங்க வெளியூர் டா”

 

“பார் டா! பொண்ணு எப்படி டா?” என்று அவன் கிண்டலாக வினவ,

 

சற்று குரலை தாழ்த்திய வெற்றிவேல் பல்லை கடித்துக் கொண்டு, “மாப்பிள்ளை னு பார்க்காம எலும்பை எண்ணிடுவேன்” என்று எச்சரிக்க,

 

இவனது கோபக் குரலில் சுதாரித்த நண்பன், “அந்த ஆயா வீடு கோவில் பக்கம் தான் இருக்குது” என்று ஆரம்பித்து வழியை சொன்னான்.

 

நண்பனிடம் பேசி முடித்த வெற்றிவேல், “இவங்க காலில் சுளுக்கு தான் ஏற்பட்டு இருக்குது………….”

 

அன்று மாலினிக்கு உதவியவன், “நீ தான் டாக்டர் இல்லையே! மூடிட்டு உன் வேலையை மட்டும் பார்.. எங்க பிரெண்ட்டை நாங்க பார்த்துக்கிறோம்” என்றான்.

 

மாலினியின் முகத்தில் அவளது வலி தெரிய, அவளை தூக்கி செல்லத் துடித்த மனதை அடக்க பெரும்பாடு பட்ட வெற்றிவேல் இப்போது பேசியவனை முறைத்தான்.

 

வண்டியை நிறுத்தியவன் மாலினியிடம், “என்ன பண்ண மாலினி?” என்று வினவினான்.

 

அப்பொழுது தான் நிமிர்ந்து வெற்றிவேலின் முகத்தை பார்த்தவள் யோசனையுடன், “நாம.. இதுக்கு முன்னாடி சந்தித்து இருக்கிறோமா?” என்று வினவினாள்.

 

அவளுக்கு தன்னை அடையாளம் தெரியவில்லை என்பதில் மனம் வருந்தினாலும், தன்னை முற்றிலுமாக அவள் மறக்கவில்லை என்பதை நினைத்து மனதை தேற்றிக் கொண்டவன் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டி, “ஒரு முறை சந்தித்து பேசி இருக்கிறோம்” என்றான்.

 

கால் வலியில் மேலே யோசிக்க முடியாமல் அவள் நண்பர்களிடம், “நானும் பிருந்தாவும் இவருடன் அந்த ஆயா வீட்டிற்கு போறோம்.. நீங்க பின்னாடியே வாங்க” என்றவள் வெற்றிவேலை பார்த்து வழியை கேட்க போக, அவளது எண்ணம் அறிந்து அவனே வழியை வண்டியை நிறுத்தியவனிடம் கூறினான்.

 

மாலினி கஷ்டப்பட்டு ஒற்றை காலில் நொண்டியடித்து வெற்றிவேலின் வண்டி அருகே வந்தாள்.

 

வெற்றிவேல் முன்பக்க கதவை திறந்து விட்டபடி, “முன்னாடி உட்கார்ந்தா காலை நீட்டிக்க வசதியா இருக்கும்” என்று கூற, அவளும் முன் இருக்கையில் அமர்ந்தாள்.

 

பிருந்தா பின்னாடி ஏற, வண்டியை நிறுத்தியவனும் சேர்ந்து ஏறிக் கொண்டான்.

 

வண்டியை நிறுத்தியவன் நண்பர்களை பார்த்து, “அங்க போயிட்டு போன் பண்றேன்” என்றான்.

 

இவர்களின் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு செய்கையை மனதினுள் மெச்சியபடி வெற்றிவேல் வண்டியை கிளப்பினான்.

 

வெற்றிவேல், “நல்ல பிரெண்ட்ஸ்.. இப்படி தான் அலர்ட்டா இருக்கணும்” என்றான்.

 

பிருந்தா தாழ்ந்த குரலில் அருகில் இருந்தவனிடம், “இந்தாளு நல்லவரா கெட்டவரா டா?”

 

“நல்லவரா தான் தெரியுது.. மாலினிக்கு ஏற்கனவே அறிமுகம் வேற இருக்குதே! இவர் மேல் சந்தேகம் இருந்தா அவ வர சம்மதித்து இருக்க மாட்டா”

 

“அதுவும் சரி தான் ஆனா இவரை எங்கே எப்போ பார்த்திருப்பா?”

 

“எனக்கென்ன தெரியும்?”

 

பிருந்தா, “சார் நீங்க எங்கே எப்போ மாலினியை மீட் பண்ணீங்க?”

 

“எதுக்கு கேட்கிறீங்க?”

 

“ஒரு ஜெனரல் நாலேஜ்க்கு தான்”

 

“உங்களுக்கு இருக்கிற ஜெனரல் நாலேஜ்ஜே போதும்”

 

பிருந்தா அருகில் இருந்தவன் சத்தமின்றி சிரிக்க பிருந்தா வெற்றிவேலை முறைத்தாள்.

 

இப்பொழுது மாலினி, “எப்போ மீட் பண்ணோம்?” என்று வினவ,

 

“நீங்களே யோசிச்சு சொல்லுங்க” என்று வெற்றிவேல் கூற,

 

பிருந்தா, “அதை நீங்க சொன்னா என்னவாம்?”

 

“அதை உங்க பிரெண்ட் சொன்னா என்ன?”

 

“அவளுக்கு தான் ஞாபகம் இல்லையே!”

[the_ad id=”6605″]

“வலி போனதும் யோசிச்சா ஞாபகம் வந்திட போகுது”

 

“அப்பவும் நியாபகம் வரலைனா?”

 

“ஆல்வேஸ் பீ பாசிட்டிவ்” என்றபோது அந்த ஆயாவின் வீடு வந்திருந்தது. அது சிறிய ஓட்டு வீடு.

 

பிருந்தாவின் உதவியுடன் மாலினி உள்ளே செல்ல வெற்றிவேலும் அவளது தோழனும் வெளியே நின்றனர்.

 

மாலினியின் காலை ஆராய்ந்த அந்த வயாதான மூதாட்டி, “ஒண்ணுமில்லை தாயீ.. சின்ன சுளுக்குத் தான்.. கண்ணை மூடி எதையாவது யோசி தாயீ.. நான் சுளுவா சுளுக்கை எடுத்துப்புடுறேன்” என்றார்.

 

கண்ணை மூடிய மாலினியின் சிந்தனை முழுவதும் வெற்றிவேலை பற்றி தான் இருந்தது. அவனது குரல் இயல்பாக இருப்பது போல் இருந்தாலும் அவளைப் பார்க்கும் போது மட்டும் அவன் கண்ணில் ஏதோ ஒரு வித்யாசம் இருக்கிறதோ என்று குழம்பினாள். வலியை பொறுத்துக் கொண்டு அவனை எங்கே எப்போது சந்தித்தோம் என்று தீவிரமாக யோசிக்க முயற்சித்தாள்.

 

இவர்கள் வந்த ஐந்து நிமிடத்தில் கிருஷ்ணமூர்த்தியும் ராஜசேகரும் அங்கே வந்தனர்.

 

வெற்றிவேலை பார்த்ததும் புன்னகையுடன், “வெற்றி அண்ணா நீங்க தானா!” என்று கிருஷ்ணமூர்த்தியும், “வெற்றி சார் நீங்க தானா!” என்று ராஜசேகரும் ஒரே நேரத்தில் கூறியபடி இருசக்கர வண்டியில் இருந்து இறங்கினர். வெற்றிவேல் அவர்களை பார்த்து புன்னகைத்தான்.

 

வண்டியில் வந்த நண்பன், “உங்களுக்கு இவரை தெரியுமா?” என்று வினவ,

 

கிருஷ்ணமூர்த்தி வெற்றிவேலுடன் கையை குலுக்கியபடி, “வெற்றி அண்ணா டேரரான ACP.. மச்சானோட, அதான் அக்காவை கட்டிக்க போற மச்சானோட க்ளோஸ் பிரெண்ட்”

 

மற்றவன், “சாரி சார்.. உங்களை தேவை இல்லாம சந்தே……………….”

 

வெற்றிவேல், “நீங்க செய்தது தான் சரி.. உங்கள் சந்தேகமும் எச்சரிக்கை உணர்வும் கோபமும் நியாயமானது தான்”

 

மற்றவன், “முதல்லேயே நீங்க ஒரு போலீஸ் னு சொல்லி இருக்கலாமே சார்?”

 

“தேவை இல்லாம என் அடையாளத்தை நான் உபயோகப்படுத்துவது இல்லை”

 

அப்பொழுதும் மற்றவன் விடாமல், “அட்லீஸ்ட் கிருஷ்ணாக்கு தெரியும் னு சொல்லி இருக்கலாமே?”

 

அவனை அழுத்தத்துடன் பார்த்த வெற்றிவேல், “போலீஸ்காரனுக்கே என்குவரியா?” என்று வினவ,

 

அவன் சிறு திணறலுடன், “அப்படி இல்லை சார்” என்றான்.

 

வெற்றிவேல் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராஜசேகரை பார்த்து, “மாலினிக்கு என்னை சரியா அடையாளம் தெரியலை.. மீட் பண்ணி இருக்கிறோமா? எங்கே? எப்போ? னு கேட்டாங்க.. நான் அவங்களையே யோசிச்சு சொல்ல சொல்லி இருக்கிறேன்.. ஸோ நீங்க என்னை தெரிந்தது போல் காட்டிக்காதீங்க” என்றவன் மற்றவனை பார்க்க அவன் தனது கையால் வாயை மூடினான்.

 

கிருஷ்ணமூர்த்தி, “ஓகே ணா.. இனி நாங்க பார்த்துக்கிறோம்.. நீங்க கிளம்புங்க” என்றான்.

 

வெற்றிவேல், “மாலினி வந்ததும் கிளம்புறேன்” என்று கூற, கிருஷ்ணமூர்த்தி சிறு யோசனையுடன் பார்த்தான்.

 

அப்பொழுது மாலினியும் பிருந்தாவும் வெளியே வந்தனர்.

 

வெற்றிவேலை பார்த்து மென்னகைத்த மாலினி கிருஷ்ணமூர்த்தியை பார்த்து, “வந்துட்டியா! ஆயா செம்ம டாக்டர் டா.. ஆனா ஃபீஸ்(FEES) வேணாம் னு சொல்லிட்டாங்க” என்று சிறு வருத்தம் கலந்த ஆச்சரியத்துடன் கூறினாள்.

 

கிருஷ்ணமூர்த்தி மென்னகையுடன், “இது சென்னை இல்லை னு உனக்கு அடிக்கடி ஞாபகப் படுத்த வேண்டியது இருக்குது” என்றான்.

 

மாலினியின் காலை ஆராய்ந்த வெற்றிவேல், “இப்போ ஓகே யா?” என்று வினவினான்.

 

அவள் மென்னகையுடன், “யா.. இட்ஸ் கான்.. போயிந்தே!” என்றபடி காலை ஆட்டிக் காட்டினாள்.

 

அவளது செய்கையை அணுஅணுவாக ரசித்தவன் அதை கண்ணில் காட்டாமல் இருக்க பெரும்பாடு பட்டான்.

 

மாலினி மென்னகையுடன் வெற்றிவேலிடம், “தேங்க்ஸ்” என்றாள்.

 

வெற்றிவேல், “தேங்க்ஸ் சொல்ற அளவிற்கு நான் பெருசா எதுவும் செய்யலை”

 

“நான் ப்ராக்சரோனு நினைத்தேன்.. நீங்க பார்த்ததும் சுளுக்கு னு கண்டு பிடிச்சிட்டீங்களே! நீங்க தானே இங்கே கூட்டிட்டு வந்ததும்” என்றவள், “நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க?” என்று வினவினாள்.

 

வெற்றிவேல் புன்னகைக்கவும் அவள், “வேலையை தானே கேட்கிறேன்”

 

அப்பொழுதும் வெற்றிவேல் மென்னகையுடன், “நான் யாருன்னு கண்டுபிடித்தால் அது தானா தெரிஞ்சுட்டு போகுது”  என்றான்.

 

மாலினி அவனை முறைக்க, அவன் விரிந்த புன்னகையுடன், “நாளைக்கு கல்யாணத்தில் பார்க்கலாம்” என்றான்.

 

பின் மற்றவர்களை பார்த்து, “பை கைஸ்” என்று சொல்லிவிட்டி கிளம்பினான்.

 

ராஜசேகர் கிருஷ்ணமூர்த்தி காதில், “சிஸ்டர் கிட்ட வெற்றி சார் ஏன் விளையாடுறார்?” என்று முணுமுணுப்பாக வினவ,

 

அவனும், “எனக்கும் அந்த சந்தேகம் இருக்குது.. கத்தரிக்கா முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகணும்! பார்க்கலாம்” என்று முணுமுணுத்தான்.

 

“அப்பப்போ நீ ஒரு விவசாயி னு நிரூபிக்கிற டா”

 

“என்னோட வேர் அது தானே!”

 

மாலினி யோசனையில் இருக்க, பிருந்தா, “கிளம்பலாமா? பசிக்குது” என்று கூற,

[the_ad id=”6605″]

அவர்களுடன் வண்டியில் வந்தவன் பிருந்தாவை பார்த்து கிண்டலாக சிரிக்க,

 

பிருந்தா, “ஏன் உனக்கு மட்டும் பசிக்கலையா?”

 

“பசிக்குது தான் ஆனா…………”

 

“ஆனாங்கிற பேச்சே இல்லை.. உனக்கும் பசிக்குது.. அவ்ளோ தான்.. என்னை கிண்டல் பண்ண கொன்னுடுவேன்”

 

கிருஷ்ணமூர்த்தி, “வாயாடாம வாங்க.. வீட்டுக்கு போகலாம்” என்றபடி அழைத்துச் சென்றான்.

 

————————————————————————————————————————————————-

————————————————————————————————————————————————-

 

புகழ்வேந்தனின் அனுமதி பெற்று அவன் அறையினுள் சென்ற சதீஷ், “கன்க்ராட்ஸ் பாஸ்” என்றான் மகிழ்ச்சியுடன்.

 

புகழ்வேந்தன் மென்னகையுடன், “தேங்க்ஸ்” என்றான்.

 

“சொன்னபடி சாதிச்சிட்டீங்க பாஸ்”

 

“எப்பவும் நம் மேல் நமக்கு நம்பிக்கை வேண்டும்.. அதே மாதிரி சும்மா எதையும் சொல்லிடக் கூடாது.. சொன்னா! சொன்னதை செய்யணும்”

 

சதீஷ் அமைதியாக தலையை ஆட்டினான்.

 

இந்த வருடத்தின் ‘சிறந்த தொழிலதிபர்’ விருதை புகழ்வேந்தன் பெற்றிருந்தான். சில காலமாக இந்த விருதை தொடர்ந்து கிருபாகரன் பெற்றுக் கொண்டிருக்க போன முறை ‘சிறந்த இளம் தொழிலதிபர்’ விருதை பெற்றிருந்த புகழ்வேந்தன் விருதை பெற்றுக் கொண்டு மேடையில் பேசியபோது ‘அடுத்த முறை சிறந்த தொழிலதிபர் விருதை பெறுவேன்’ என்று கூறியிருந்தான். சொன்னது போல் இந்த முறை அந்த விருதை பெற்றுவிட்டான்.

 

இரண்டு நொடிகள் மௌனமாக இருந்த சதீஷ், “பாஸ் இன்னொரு விஷயம்” என்றான்.

 

புகழ்வேந்தன் ‘என்ன?’ என்பது போல் பார்க்கவும் சதீஷ், “ராகுல் தங்கைக்கும் மனோஜுக்கும் மரேஜ் பிக்ஸ் ஆகியிருக்குது” என்றான்.

 

கண்களை சுருக்கியபடி, “அபிஸியல் நியூஸ்ஸா?” என்று கேட்ட புகழ்வேந்தனின் குரல் ‘அப்படி இருக்காதே!’ என்று சொல்லாமல் சொல்ல, சதீஷ் எப்பொழுதும் போல் புகழ்வேந்தனின் கணிப்பில் இப்பொழுதும் ஆச்சரியமானான்.

 

சதீஷ், “நோ பாஸ்.. ராகுல் வீட்டில் வேலை செய்யும் ஆள் ஒருத்தன் இப்போ நம்ம ஆள்” என்றதும் புகழ்வேந்தன் புன்னகைத்தான். புகழ்வேந்தனின் புன்னகையில் சதீஷ் அகம் மகிழ்ந்தான் ஏனெனில் அந்த புன்னகை சதீஷிற்கு கிடைத்த பாராட்டு.

 

இது தான் சதீஷ்.. புகழ்வேந்தன் எள் எனும் முன் எண்ணையாக இருப்பவன். புகழ்வேந்தனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சில நேரங்களில் சதீஷ் திணறினாலும் புகழ்வேந்தனின் வெற்றிக்கு சதீஷும் ஒரு காரணம். அதை புகழ்வேந்தனும் உணர்ந்து தான் இருந்தான். மற்றவர்களிடம் எட்டி நின்று எல்லைக்கோட்டை வகுத்து பழகும் புகழ்வேந்தன் சதீஷிடம் மட்டும் வெகு சில நேரங்களில் எல்லைக் கோட்டை கடப்பதுண்டு. சதீஷிற்கு புகழ்வேந்தனிடம் விசுவாசத்தை மீறி தனி பக்தி என்றே கூறலாம்.

 

சதீஷ், “பாஸ் இந்த நியூஸ் அபிஸியல் இல்லை னு எப்படி சொன்னீங்க?”

 

புகழ்வேந்தன், “நீ என்ன நினைக்கிற? இந்த கல்யாணம் நடக்குமா?”

 

“இல்லை பாஸ்.. மனோஜ் பற்றி தெரியாது ஆனா மித்ராணி நிச்சயம் விட மாட்டா”

 

“மாட்டாங்க சொல்லணும்” என்று புகழ்வேந்தன் அழுத்தத்துடன் கூற சதீஷ் புரியாமல் பார்த்தபடி ‘சரி’ என்று தலையை ஆட்டினான்.

 

இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்த புகழ்வேந்தன், “வருங்கால முதலாளிக்கு மரியாதையை கொடுப்பது தானே முறை” என்றான்.

 

“பாஸ்!!!!!” என்று சதீஷ் பெரிதும் அதிர்ந்தான்.

 

புகழ்வேந்தன் அதை கண்டுக்கொள்ளாமல், “உனக்கு எப்படி மித்ராணி பற்றி தெரியும்?”

 

“அது பாஸ்..” என்று இழுத்த சதீஷிடம் அதிர்ச்சியுடன் சிறு பதற்றம் தொற்றிக் கொண்டது.

 

புகழ்வேந்தன், “ரெண்டு நாளா என்னிடம் நீ சொல்ல முயற்சிக்கும் விஷயம் இது தானே! உன் வைஃப் நிவேதாவின் நெருங்கிய தோழி மித்ராணி”

 

“பாஸ்!!!”

 

“மித்ராணி பற்றி டிடேல்ஸ் கலெக்ட் பண்ணப்ப தெரிஞ்சுது” என்றவன், “நீ இங்கே வேலை செய்வது மித்ராணிக்கு தெரியுமா?”

 

“தெரியாது பாஸ்.. அவ..ங்க நிவேதா கிட்ட கேட்டது இல்லை.. நிவேதாவை நேரிடையா எடுத்தது அவ..ங்க தான்.. எங்க கல்யாணம் நடந்த முறையில் நிவேதா மேல இன்னும் கோபத்தில் தான் இருப்பதாக சொன்னா.. நிவேதா ஒரு ரிலாக்ஸ்சேஷனுக்காக வேலை வேணும் னு கேட்கவும் வேலை கொடுத்து இருக்காங்க”

 

“உன் அம்மா இன்னும் மாறவே இல்லை!” என்று அவன் கேட்டதில் மறை பொருளாக ‘நீ உன் அம்மாவை அடக்க மாட்டியா?’ என்ற கேள்வி அடங்கி இருந்தது.

 

அதை புரிந்துக் கொண்டவனாக சதீஷ், “நான் சொன்னா அம்மா கேட்பது இல்லை பாஸ்.. தனிக் குடுத்தனம் போகலாம் னு சொன்னால் நிவேதா கேட்பது இல்லை” என்றான்.

 

“உனக்காக நிவேதா அமைதியா இருக்கிறாங்க.. என்னைக்காவது போலீஸ்காரனுக்கு விஷயம் தெரிந்துது! உன் அம்மாவை உள்ள தள்ளி லாடம் கட்டிருவான்”

 

சதீஷ் பதில் சொல்வதறியாது சிறு பயத்துடன் எச்சிலை விழுங்கினான். புகழ்வேந்தன் குறிப்பிட்ட ‘போலீஸ்காரன்’ வேறு யாருமில்லை, ACP வெற்றிவேல் தான். ஆம் வெற்றிவேலின் மூத்த தங்கை தான் நிவேதா.

 

சிறு பெருமூச்சை வெளியிட்ட புகழ்வேந்தன், “ஆல்ரைட்.. அது உன் பெர்சனல்.. லீவ் இட்” என்றான்.

 

சதீஷ், “நிவேதா வேலை விஷயத்தில் கிருபாகரன் எப்படி ஒன்னும் சொல்லலை னு தெரியலை பாஸ்”

 

“கார்மென்ட் விஷயத்தில் இப்பலாம் அவன் ரொம்ப தலையிடுறது இல்லை.. அதுவும் மித்ராணி விஷயம் என்றால் கொஞ்சம் எட்டி தான் நிற்கிறான்” என்றவனின் உடல் கிருபாகரனை நினைத்ததும் இறுகியது.

 

‘கிருபாகரா பாஸ் உனக்கு ஸ்கெட்ச் போட்டு கட்டம் கட்டிட்டார் போல.. ஆனா இதில் நடுவில் தேவையில்லாம அந்த சண்டிராணி மாட்டுறது தான்!!!!!’ என்று மனதினுள் நினைத்த சதீஷ் சிறு தயக்கத்துடன், “பாஸ்” என்று அழைக்க,

 

புகழ்வேந்தன் உணர்ச்சியை சட்டென்று இயல்பிற்கு கொண்டு வந்து, “ஆல்ரைட்.. வேலையை பார்” என்றான்.

 

சதீஷ் மீண்டும் தயக்கத்துடன், “பாஸ்” என்று அழைத்தான்.

 

புகழ்வேந்தன் அவனை பார்த்ததும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “வேறு ஒருத்தனை காதலிக்கும் பெண்…..” என்று இழுத்து நிறுத்த,

 

புகழ்வேந்தன் இறுகிய குரலில், “என் டார்கெட் கிருபாகரன்” என்றான்.

 

“ஆனா இது ஏன் பாஸ்?”

 

“பெத்தவங்க செய்த பாவம் பிள்ளைகளை தானே சேரும்!”

 

சதீஷ் குழம்பியவனாக, “புரியலை பாஸ்”

 

“லீவ் இட்” என்றான்.

 

புகழ்வேந்தனின் இந்த குரலை மீறியிராத சதீஷ் முதல் முறையாக பேசினான்.

 

சதீஷ், “பெண் பாவம் பொல்லாதது பாஸ்.. அது உங்களுக்கு வேண்டாம்.. பண வசதி இல்லாத எத்தனையோ பசங்களை படிக்க வைக்கிறீங்க.. முதியோர் இல்லம் நடத்துறீங்க.. இன்னும் வெளியே தெரியாம நிறைய நல்லது செய்றீங்க.. உங்களோட புண்ணியம் எல்லாமே இந்த ஒரு விஷயத்தில் அடி பட்டு போகும் பாஸ்.. வேணாமே ப்ளீஸ்” என்று கெஞ்சும் குரலில் கூறினான்.

 

‘முடிச்சிட்டியா? கிளம்பு’ என்பது போல் புகழ்வேந்தன் பார்க்க,

 

“உங்கள் கோபம் கிருபாகரன் மீது தானே! ஏன் மித்ராணியை……..”

 

“சதீஷ்!”

 

“சாரி பாஸ்.. ஆனா என்னால் சொல்லாம இருக்க முடியலை.. நீங்களா இப்படி னு என்னால் இன்னும் ஜீரணிக்க முடியலை”

 

பெருமூச்சை வெளியிட்ட புகழ்வேந்தன், “சில விஷயத்தில் பாவ புண்ணியம் பார்க்க முடியாது சதீஷ்.. அது மாதிரியான விஷயம் தான் இதுவும்.. என் டார்கெட் மித்ராணி இல்லை.. ஆனா கிருபாகரன் பசங்களால் அவ இதனுள் வந்துட்டா.. இனி யார் நினைத்தாலும் இதை மாற்ற முடியாது.. மனோஜோ பிரசாத்தோ! யாருடன் மித்ராணி கல்யாணம் முடிவானாலும் அவளோட கல்யாணம் என்னுடன் தான்.. அதற்கான வேலையில் நான் இறங்கி ரெண்டு நாளாகுது”

 

“இது உங்க வாழ்க்கையும் தானே பாஸ்!” என்றவனின் குரல் ‘நான் சொல்வதை புரிந்துக் கொள்ளேன்! புரிந்துக் கொண்டு உன் முடிவை மாற்றிவிடேன்!’ என்று கெஞ்சியது.

 

“உன் பாஸ் மேல் அவ்ளோ தான் நம்பிக்கையா?” என்று உதட்டோர புன்னகையுடன் வினவ,

 

சதீஷ், “பாஸ் இந்த மஞ்சள் கயிறு மஜிக் அது இது னு வொர்க் அவுட் ஆகும் னு நினைச்சீங்க னா அதை இப்பவே அழிச்சிருங்க”

 

வாய்விட்டு சிரித்த புகழ்வேந்தன், “எந்த இரேசரை வச்சு அழிக்கணும்?”

 

“பாஸ் இது விளையாட்டு இல்லை”

 

புகழ்வேந்தன் பார்த்த பார்வையில் சதீஷ் தடுமாற்றத்துடன், “சாரி பாஸ்.. நான் அதிகமா பேசுறதா……………”

 

“எனக்கு உன் மேல் கோபம் இல்லை சதீஷ்.. ஆனா நீ என்ன தான் முயற்சி செய்தாலும் என் முடிவில் மாற்றம் இல்லை.. ஸோ உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணாத”

 

“பாஸ்” என்று சதீஷ் தவிப்புடன் இழுத்து நிறுத்த,

 

புகழ்வேந்தன், “சரி சொல்லு.. மித்ராணி பத்தி என்ன சொல்ல வந்த?”

 

“அவ” என்று ஆரம்பித்தவன் புகழ்வேந்தனின் பார்வையில், “அவங்க பார்க்க தான் பூ மாதிரி இருப்பாங்க பாஸ் ஆனா அவங்க ஒரு சுனாமி”

 

புகழ்வேந்தன் மென்னகையுடன், “அனுபவம் போல!”

 

“ஆமா பாஸ்.. எங்க கல்யாணம் விஷயம் தெரிந்ததும் வச்சு செஞ்சாங்க.. நல்ல வேளை போனில் தான் கிழிச்சாங்க.. நேரில் வந்து இருந்தால் அடிச்சு கூட இருப்பாங்க.. இப்போ பார்த்தா கூட அடி விழ வாய்ப்பு இருக்குது”

 

“அப்போ எங்க கல்யாண வரவேற்பில் உனக்கு அடி நிச்சயம்” என்றவன் கால் மேல் கால் போட்டு புன்னகையுடன் அமர்ந்தபடி, “ஸோ என் லைஃப் ஹாட் அண்ட் ஸ்பைஸியா சுவாரசியமா போகும் னு சொல்ற!” என்று கூறி கண் சிமிட்டினான்.

 

புகழ்வேந்தனின் இந்த புன்னகை முகத்தையும் கண் சிமிட்டலையும் சதீஷ் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவனுக்கு இந்த புகழ்வேந்தன் புதிதாக வித்யாசமாக தெரிந்தான். அதுவும் புகழ்வேந்தனின் முகத்தில் தனி தேஜஸ் தெரிவது போல் தோன்றியது அவனுக்கு.

  

 

இதயம் இணைய காத்திருப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!