Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Yendi Unnai Pidikkuthu

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 11

பிடித்தம் 11

அடுத்த நாள் நடந்த நண்பனின் கல்யாணத்தில் வெற்றிவேலின் கவனம் சிறிதும் இல்லை. அவனது கவனம் முழுவதும் அவனது தேவதையிடம் தான் இருந்தது. அதுவும் அவளை முதல் முறை புடவையில் பார்க்கவும் அவனது இதயம் வேகமாக தாளமிட ஆரம்பித்தது.

 

வெற்றிவேலின் பார்வை தன்னை தொடர்வதை உணர்ந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் மாலினி சுற்றிக் கொண்டிருந்தாள்.



Advertisement

 

முகூர்த்ததிற்கு சிறிது நேரம் முன் மாலினியின் தந்தை அருணாசலமும் தாய் புஷ்பாவும் மண்டபத்தினுள் நுழைந்தனர். மாலினி மகிழ்ச்சியுடன் ஓடிச் சென்று தந்தையை கட்டிக் கொண்டாள்.

 

Advertisement

புன்னகையுடன் மகளை அரவணைத்த அருணாச்சலம், “என்ன டா நல்ல என்ஜாய் பண்ணியா?”

Advertisement

 

“ஹ்ம்ம்.. செம்மையா என்ஜாய் பண்ணேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறியவள் பின் முகத்தை சிறிது சுருக்கியபடி, “ஆனா உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்” என்றவள் அன்னையை ஓரப்பார்வை பார்த்தபடி, “உன் டார்லிங்கை கூட கொஞ்சமே கொஞ்சம் மிஸ் பண்ணேன்” என்றாள்.

 

Advertisement

புஷ்பா அமைதியாக இருக்கவும் மாலினி சிறு ஆச்சரியத்துடன், “என்ன அருணா! இந்த மூணு நாளில் உன் லவ்வை கொட்டி மொத்த பெர்பார்மன்ஸ் போட்டு என்னை மறக்கடிச்சிட்டியா?”

 

புஷ்பா பட்டென்று அவள் தோளில் அடி போட்டு, “என்ன பேச்சுடி இது?” என்று கூற,

 

மாலினி வாய்விட்டு சிரித்தபடி, “அருண்ஸ் உன் பெர்பார்மன்ஸ் பத்தலை போலவே! உன் டார்லிங்கு என்னை யாரு னு தெரியுது” என்று மீண்டும் அன்னையை கிண்டல் செய்ய, அருணாச்சலம் ரசித்து சிரிக்க, புஷ்பா முறைத்தார்.

 

அப்பொழுது அங்கே அவசரமாக வந்த கிருஷ்ணமூர்த்தி, “வாங்க பா.. வாங்க மா” என்றான்.

 

புஷ்பா புன்னகையுடன் தலை அசைக்க, அருணாச்சலம் புன்னகையுடன், “முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சு.. நீ அங்கே போய் ஆக வேண்டியதை பார்” என்றதும்

 

மாலினியை பார்த்து, “பார்த்துக்கோ” என்றவன் தோழியின் பெற்றோரிடம் சிறு தலை அசைப்புடன் விடை பெற்று மேடை நோக்கி விரைந்தான்.

 

மாலினி, “ஓகே பா.. நீங்க பார்த்து உட்காருங்க.. நானும் அங்கே போறேன்” என்றுவிட்டு மேடை அருகே சென்றாள்.

 

தான் வந்ததும் தன் பின்னாடியே வந்த தோழியை கிருஷ்ணமூர்த்தி முறைக்க, மாலினி உதட்டின் மீது விரலை வைத்து கண்ணை உருட்டி, ‘அமைதியா வேலையை பார்’ என்று மிரட்டினாள்.

 

[the_ad id=”6605″]

 

வெற்றிவேல் மாலினியின் அணைத்து செய்கைகளையும் கண்கள் எனும் படவி(நிழற்படக் கருவி) கொண்டு படம் பிடித்து நெஞ்சம் எனும் பெட்டகத்தில் சேகரித்தான்.

 

கல்யாணம் நல்லபடியாக முடிந்து நண்பர்களுடன் சேர்ந்து தோழனின் அக்காவை சிறிது நேரம் கிண்டல் செய்து கலாட்டா செய்துவிட்டு பெற்றோர் பக்கம் திரும்பிய மாலினி சிறிது அதிர்ந்தாள். ஏனெனில் ஓரிடத்தில் நின்றபடி வெற்றிவேல் அருணாச்சலத்திடம் புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்தான்.

 

மாலினி வேகமாக பெற்றோரை நோக்கி செல்ல, பாதி வழியில் அவளுக்கு எதிரே வந்த வெற்றிவேல் பிறர் அறியாமல் லேசாக கண்ணடித்துவிட்டே அவளைக் கடந்தான். அவன் கண்ணடித்ததும் அரை நொடி நடையின் வேகத்தை குறைத்த மாலினி பின் அவனை முறைத்துவிட்டு தந்தையிடம் சென்றாள்.

 

அருணாச்சலம், “என்ன டா! எதுக்கு இவ்ளோ வேகமா வர?”

 

“அது.. ACP என்ன பேசினார்?”

 

மகளுக்கு ACPயை நன்றாக தெரிந்திருப்பதையும் ‘சார்’ என்று அழைக்காமல் ACP என்று மட்டும் அவள் கூறியதை மனதில் குறித்துக் கொண்ட அருணாச்சலம், “ஏன் டா?” என்று வினவினார்.

 

“சொல்லு பா” என்றாள் சிறு பதற்றத்துடன்.

 

மகளின் கையை பற்றிய அருணாச்சலம், “இப்போ எதுக்கு இவ்ளோ டென்ஷன்?”

 

“அது.. நான் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லணும்.. ஆனா அதை நாளைக்கு நம்ம வீட்டுக்கு போய் பேசிக்கலாம் னு நினைச்சேன்”

 

“அவ்ளோ தானே! நாளைக்கு நம்ம வீட்டுக்கு போனதும் பேசிக்கலாம்” என்று அவர் இலகுவாக கூற,

 

“அது இல்லை பா.. அது..” என்று சிறு தவிப்புடன் இழுத்து நிறுத்த,

 

மகளின் தவிப்பில் கணவரை முறைத்த புஷ்பா அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தபடி மாலினியை பார்த்து, “மாலு இங்கே வந்து உட்கார்” என்றார் கனிவான குரலில்.

 

அவள் அன்னை அருகே அமர்ந்ததும் அவள் கையை பற்றியவர், “ரிலாக்ஸ் டா” என்றார். அருணாச்சலம் மகளுக்கு மறுபுறம் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.

 

மூச்சை இழுத்து விட்ட மாலினி அன்னையை பார்க்க, அவர், “இப்போ சொல்லு அந்த முக்கியமான விஷயத்தை”

 

“நேத்து ACP என்னிடம் ப்ரொபோஸ் பண்ணார் மா.. எனக்கு செம ஷாக்.. உடனே நான் என் மனதில் அப்படி ஒரு எண்ணம் இல்லை னு சொன்னேன்.. அவர் அப்பா பார்த்திருக்கும் மாப்பிள்ளை அவரா இருந்தால் எனக்கு ஓகே யா னு கேட்டார்.. நான் அதை அப்போ பார்த்துக்கலாம் னு சொன்னேன்”

 

“ஏன் அப்படி சொன்ன?”

 

“அப்படி தான் சொல்ல தோனுச்சு”

 

“சரி நான் இப்போ கேட்கிறேன்.. நாங்க பார்த்திருக்கிற மாப்பிள்ளை அவரா இருந்தால் உன் முடிவு என்ன?”

 

“மா!!!” என்று மாலினி சிறிது அதிர,

 

அருணாச்சலம், “புஷ்பா!” என்றார் சிறிது கண்டன குரலில்.

 

[the_ad id=”6605″]

 

கணவரை கண்ணசைவில் அடக்கிய புஷ்பா மாலினியிடம் பார்வையை பதித்து, “சொல்லு டா” என்றார்.

 

“இப்போ அவர் அதை பத்தி தான் பேசினாரா மா?”

 

“ஆமா” என்றவர், “நீ என்ன நினைக்கிற?”

 

“தெரியலையே மா!” என்றவள் தந்தையின் தோளில் சாய்ந்தபடி அவரை பார்த்து, “எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்குது பா” என்றாள்.

 

புஷ்பா கணவரை அர்த்தப் பார்வை பார்த்தார்.

 

அருணாச்சலம் கனிவான குரலில், “என்ன குழப்பம் டா?”

 

“அவர் என்னை நாலு வருஷமா காதலிக்கிறார் பா.. அது போக நேத்து பேசிய போது கடைசியா ‘நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்.. நீ என்னை மறுத்தாலும் என் மனதிலும் வாழ்க்கையிலும் மனைவியா நீ மட்டுமே இருப்ப னு சொன்னார்.. அப்போ அவர் கண்ணில் தெரிந்த காதலும் உறுதியும், அந்த வார்த்தைகளும் என்னை கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுது.. ஆனா என் மனதில் அவர் மேல் காதல்-லாம் இல்லை”

 

“ஹ்ம்ம்.. அவர் மீது காதல் இல்லைனாலும் அவரோட காதலின் ஆழம் உன்னை டிஸ்டர்ப் பண்ணுது.. கொஞ்ச நாள் ப்ரீயா விடு.. அப்பவும் உன் மனதில் அவரை பற்றிய எண்ணம் இருந்தால் அவரிடம் நான் பேசுறேன்”

 

“ஹ்ம்ம்” என்று தலையை ஆட்டியவள் யோசனையுடன் தந்தையை பார்த்து, “நீ அவரிடம் என்ன சொன்ன?”

 

அருணாச்சலம் புன்னகைக்கவும் அவள், “சொல்லு பா” என்றாள்.

 

அவர் மாறாத புன்னகையுடன், “உன் விருப்பம் தான் என் விருப்பம் டா” என்றார்.

 

மாலினி விடாமல், “அது எனக்கு தெரியும்.. உன் விருப்பம் என்ன னு தான் கேட்கிறேன்” என்றாள்.

 

“நாம நாளைக்கு வீட்டுக்கு போய் பேசலாம் டா.. இப்போ உன் பிரெண்ட்ஸ் உனக்காக வெயிட் பண்றாங்க பாரு” என்று அவர் பேச்சை மாற்ற,

 

தந்தை தோளில் இருந்து சற்று விலகியவள் அழுத்தமான பார்வையுடன், “அப்போ உனக்கு இதில் விருப்பம் இல்லை” என்றாள். பின், “அப்போ எனக்கும் இதில் விருப்பம் இல்லை” என்று பட்டென்று தெளிவான குரலில் கூறினாள்.

 

அருணாச்சலம் அவசரமாக, “அப்படி இல்லை டா.. இதில் உன் விருப்பம் தான் முக்கியம்.. வாழபோறது நீ.. ஸோ நீ உனக்காக முடிவு எடுக்கனுமே தவிர வேறு யாருக்காகவும் இல்லை”

 

மாலினி முறைப்புடன், “இந்த மூர்த்தியும் இப்படி தான் சொன்னான்” என்று கூறி அவன் பேசியதை கூறினாள்.

 

அருணாச்சலம், “அவன் சரியா தானே சொல்லி இருக்கிறான்”

 

மாலினி முறைக்கவும் அருணாச்சலம் மென்னகையுடன், “வெற்றிவேல் தவறானவர் இல்லையே டா.. ஸோ உன் விருப்பம் தான் இதில்………”

 

“அப்போ நீ ஏன் வேண்டாம் னு நினைக்கிற?”

 

“அது வேற டா”

 

“அந்த அது தான் என்ன னு கேட்கிறேன்.. சொல்லு” என்று அவள் கறார் குரலில் கூற,

 

[the_ad id=”6605″]

 

அருணாச்சலம் மென்னகையுடன், “வீட்டில் னா தெளிவா நிதானமா பேசலாம் னு தான் நாளைக்கு பேசிக்கலாம் நினைத்தேன்.. ஆனா உன் தவிப்பை பார்த்ததும் அம்மா இங்கேயே பேசிட்டா.. உன் தவிப்பை பார்த்த பிறகு அப்பாவும் அமைதியா இருந்திருக்க மாட்டேன்.. அம்மா பேசலானா நானே பேசியிருப்பேன்..” என்றவர் வெற்றிவேல் அவரிடம் பேசியதை பற்றி கூறத் தொடங்கினார்.

 

நண்பன் அருகே மேடையில் நின்றிருந்த வெற்றிவேல் நண்பன் தாலி கட்டியதும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி, “கன்க்ராட்ஸ் மச்சி” என்று வாழ்த்திவன், “சரி டா.. நான் கீழே இருக்கிறேன்” என்றபடி நகர பார்க்க,

 

நண்பன், “என்ன அவசரம் டா! இங்கேயே இரு” என்று கூற,

 

வெற்றிவேல் அவன் காதில், “என் மாமனாரை பார்த்து பொண்ணு கேட்டுட்டு வரேன்” என்று கூற, நண்பன் அதிர்ச்சியுடன் இவனை பார்க்க இவனோ விரிந்த புன்னகையுடன், “நீ உன் ஆளை கவனி நான் என் ஆளோட அப்பாவை கவனிக்கிறேன்” என்றுவிட்டு கீழே இறங்கினான்.

 

‘இவன் நிஜமா தான் சொல்றானா? யாரைச் சொல்றான்?’ என்று அதிர்ச்சியுடன் குழம்பியவனை அடுத்து யோசிக்கவிடாமல் கல்யாண சம்பிரதாயங்கள் இழுத்துக் கொள்ள நண்பனை மறந்தவனாக தன்னவளுடன் மகிழ்ச்சியுடன் இணைந்து செயல் பட்டான்.

 

அருணாச்சலத்திடம் சென்ற வெற்றிவேல் புன்னகையுடன், “ஹாய் சார்.. எப்படி இருக்கிறீங்க? என்னை தெரியுதா?” என்று வினவினான்.

 

புன்னகையுடன் எழுந்து அவனுடன் கை குலுக்கிய அருணாச்சலம், “உங்களை மறக்க முடியுமா சார்! நான் நல்லா இருக்கிறேன்.. நீங்க எப்படி இருக்கிறீங்க?” என்று வினவியவர் மனைவியிடம், “சார்.. ACP வெற்றிவேல்.. மாலு பஸ்ட் இயர் படிச்சப்ப அந்த கிருஷ்ணா விஷயத்தில் ஹெல்ப் பண்ணவர்” என்றார்.

 

புஷ்பா கையெடுத்து கும்பிட்டபடி, “வணக்கம் சார்.. ரொம்ப தேங்க்ஸ்.. இன்னைக்கு தான் உங்களை பார்க்க முடிந்தது.. அதான் லேட்டா தேங்க்ஸ் சொல்றேன்” என்றார்.

 

பதிலுக்கு கையெடுத்து கும்பிட்டு, “வணக்கம் மா” என்றவன், “தேங்க்ஸ்யெல்லாம் வேணாம்.. நான் என் கடமையை தான் செய்தேன்” என்றான்.

 

“அது உங்க பெருந்தன்மை” என்று புஷ்பா கூற, மென்னகையை பதிலாக தந்தான்.

 

அருணாச்சலம், “கிருஷ்ணா சொன்ன அத்தை பைய்யன் மாப்பிள்ளை தானா! இவர் தான் உங்க பிரெண்ட் ஆ?”

 

“ஆமா.. நல்ல நியாபகம் வச்சிருக்கிறீங்களே!” என்றவன், “உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்றான். இந்த முறை கவனமாக ‘சார்’ என்ற வார்த்தையை தவிர்த்தான்.

 

அருணாச்சலம் சிறு யோசனையுடன், “சொல்லுங்க” என்றார்.

 

“நான் மாலினியை விரும்புறேன்.. நான் அவளை நல்லா பார்த்துப்பேன்.. என்னை உங்க வீட்டு மருமகனா ஏத்துப்பீங்களா?” என்று நேரிடையாக விஷயத்தை கூறினான்.

 

அருணாச்சலம் அமைதியாக இருக்கவும் அவன், “என்ன ஃப்ரீஸ் ஆகிட்டீங்க?”

 

“நான் இதை எதிர்பார்க்கலை” என்று அவர் கூற, அவனுக்கு நேற்று இதே வார்த்தைகளை மாலினி கூறியது நினைவிற்கு வர, அவனது உதட்டில் குறுநகை பூத்தது.

 

அவன், “ஏன் போலீஸ்காரன் காதலிக்க கூடாதா?”

 

 

[the_ad id=”6605″]

 

இயல்பிற்கு திரும்பி இருந்த அருணாச்சலம், “நான் அப்படி சொல்லலை.. ஆனா மன்னிச்சிடுங்க.. எனக்கு இதில் விருப்பம் இல்லை” என்றார்.

 

அவன் அவரை சிறு அதிர்ச்சியுடன் பார்த்தான். மாலினியின் மறுப்பைக் எதிர்பார்த்தவன் அருணாச்சலத்தின் மறுப்பை எதிர்பார்க்கவில்லை. அவர் யோசித்து சொல்வதாக சொல்வார் என்று எதிர்பார்த்தானே தவிர எடுத்ததும் இப்படி மறுப்பை சொல்லுவார் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

 

அவன், “என்னை பற்றி என் குடும்பத்தை பற்றி தெரியாது னு யோசிக்கிறீங்களா? கல்யாண மாப்பிள்ளை என் நண்பன் தானே.. அவனோட பரென்ட்ஸ் கிட்ட……….”

 

“நீங்க சொல்றது செகண்ட் ஸ்டெப்.. அதாவது உங்களை மருமகனாக்க விரும்பினால் தான் உங்களை பற்றி விசாரிக்கணும்?”

 

“ஓ!” என்றவன், “காரணம் தெரிந்துக்கலாமா?” என்றபோது காவலதிகாரியின் கம்பீரம் அவனிடம் வந்திருந்தது.

 

“அது” என்று அவர் சிறிது தயங்க,

 

அவன், “என் வேலையா?” என்று வினவினான்.

 

அவர் ஆச்சரியமாக பார்க்க, அவன், “உங்க பொண்ணுக்கு நீங்க வேற மாப்பிள்ளை பார்க்கலை.. என் மேல் உங்களுக்கு நல்ல அபிப்பிராயம் தான்.. ஸோ எடுத்ததும் மறுப்பதற்கான காரணம் என் வேலையா தானே இருக்கணும்!”

 

“சாரி சார்” என்று அவர் வருத்தத்துடன் கூற,

 

“விடுங்க.. இதில் சாரி சொல்ல என்ன இருக்குது?” என்றவன், “இந்த சார் வேணாம்” என்றான்.

 

அவர் யோசனையுடன் அவனை பார்க்க, அவன், “ஊரையே காவல் காக்கிற நான் என் மனைவியை காக்க மாட்டேனா?”

 

“என் மகள் மீது நான் உயிரையே வைத்திருக்கிறேன்…………”

 

“நீங்க உங்க உயிரை அவள் மீது வைத்து இருக்கலாம்.. ஆனா என் உயிரே அவ தான்”

 

“ப்ளீஸ் சார்.. இது வேணாம்.. விட்டுடுங்க சார்”

 

“சார் வேணாம் சொன்னேனே!”

 

“இல்லை அது சரிப்படாது”

 

“நான் சரி படுத்துறேன்” என்று அவன் உறுதியுடன் கூற, அவர் சிறு கலவரத்துடன் அவனை பார்த்தார்.

 

அவன் மென்னகையுடன், “மாலினி என்னை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொன்னாலும் இது தான் உங்க பதிலா?”

 

“அது” என்று அவர் திணற,

 

அவன், “ஸோ.. மாலினி விருப்பம் தான் உங்கள் விருப்பம்.. அவள் விருப்பம் நானாக இருந்தால், உங்கள் மருமகன் நான் தான் சரியா?” என்றான் புன்னகையுடன்.

 

அவர் பதில் சொல்வதறியாது பார்க்க, அவன் விரிந்த புன்னகையுடன், “ஓகே மாமா சென்னையில் மீட் பண்ணலாம்” என்று கூறி விடை பெற்றான்.

 

இதை சொல்லி முடித்த அருணாச்சலம், “அவர் பேச்சில் இருந்தே அவர் உன் மேல் கொண்ட காதல் எனக்கு புரியுது.. உனக்கே தெரியும் நான் காதலுக்கு எதிரி இல்லை.. ஆனா எனக்கு நீ ரொம்ப முக்கியம் டா.. வெற்றிவேல் எதற்கும் அஞ்சாத நேர்மையான அதிகாரி.. அவரோட எதிரிகளால் உனக்கு ஏதாவது ஆகிட கூடாது னு நான் பயப்படுறேன்.. அதான் வேணாம் னு சொன்னேன்.. ஆனா உனக்கு அவரை…………..”

 

“இனி அந்த பேச்சுக்கே இடம் இல்லை.. உனக்கு வேணாம் னா எனக்கும் வேணாம்” என்றவள் அன்னையை பார்த்து, “நீ எதுவும் சொல்லலையே மா?” என்று கேட்டாள்.

 

“எனக்கும் அந்த பயம் இருக்குது தான் ஆனா காதல் அதற்கெல்லாம் அப்பாற்பட்டது டா.. ஆறிலும் சாவு நூறிலும் சாவு னு சொல்லுவாங்க.. விதியை யாராலும் மாத்த முடியாது.. என்னை பொறுத்தவரை அவர் வேலையை காட்டி மறுப்பு சொல்றதில் எனக்கு உடன்பாடு இல்லை.. இறுதி முடிவு உன்னோடது தான்”

 

“அப்பா முடிவு தான் என்னோட முடிவு”

 

அருணாச்சலம், “குட்டிமா.. உனக்கு பிடித்து இருந்தால் எனக்கு ஓகே தான் டா”

 

“ACP காதல் என்னை டிஸ்டர்ப் செஞ்சது தான்..  ஆனா உன்னை வருத்தி ஓகே சொல்ற அளவுக்கு எனக்கு அவர் மேல் பீலிங்ஸ் இல்லை” என்றவள், “நான் அவர் கிட்ட பேசிட்டு வரேன்..” என்றுவிட்டு வெற்றிவேலை தேடிச் சென்றாள்.

 

மாலினி தன்னை தேடுவதை பார்த்த வெற்றிவேல் அவள் முன் வந்தான்.

 

[the_ad id=”6605″]

 

அவள் பேச வாய் திறக்கும் முன் அவன், “வெளியே போய் பேசலாமா?” என்றான்.

 

அவள் பதில் சொல்லாமல் வெளியே செல்ல திரும்ப, ‘மேடம் செம கோபத்தில் இருக்காங்க போலவே!’ என்று மனதினுள் நினைத்தபடி அவளை பின் தொடர்ந்தான்.

 

வெளியே சென்று ஒரு மரத்தின் அருகே நின்றவள் கோபத்துடன், “என்ன நினைச்சிட்டு இருக்குறீங்க? என்னமோ போட்டு வாங்க நீ கிரிமினல் இல்லை.. அது இது னு சொல்லிட்டு இப்போ என்ன செய்துட்டு இருக்கிறீங்க?”

 

அவன் அமைதியாக அவளை பார்த்து புருவம் மட்டும் உயர்த்த, அவள் அதே கோபத்துடன், “இப்படி பார்த்தா? நீங்க அப்படி செய்யலை னு அர்த்தமா? என்னிடம் அப்பா ஓகே சொன்னா எனக்கு ஓகே யா கேட்டுட்டு, என் அப்பா கிட்ட நான் ஓகே சொன்னா அவருக்கு ஓகே யா னு கேட்டு இருக்கிறீங்க.. இதுக்கு என்ன அர்த்தம்? இது போட்டு வாங்குறது இல்லாம வேறு என்ன?”

 

அவன் அப்பொழுதும் அமைதியாக அவள் முகத்தையே பார்த்தபடி நிற்க அவள் அதிகரித்த கோபத்துடன், “பதில் சொல்லுங்க ACP.. நீங்க செஞ்சதுக்கு பெயர் என்ன? ஏன் இப்படி பண்றீங்க?” என்று ஆவேசமாக வினவ,

 

அவனோ ஆழ்ந்த குரலில், “மானு ஐ லவ் யூ” என்றான்.

 

ஒரு நொடி அசைவற்று நின்றவள் பின் முறைப்புடன், “என் அப்பாவுக்கு விருப்பம் இல்லாததை நான் செய்ய மாட்டேன்.. பை” என்று கூறி திரும்பி செல்ல,

 

“ஓய்!” என்று அழைத்த வெற்றிவேல் அவள் திரும்பியதும், “ஸ்டில் ஐ லவ் யூ மானு” என்றான் வசீகர புன்னகையுடன்.

 

காதலை சொல்லும் போது மட்டும் தனித்து தெரியும் அவனது குரலின் மென்மை அவளுள் என்னவோ செய்தாலும் வெளியே அவனை முறைத்துவிட்டு சென்றுவிட்டாள்.

—————————————————————————————————————————————————

பிரசாத் ராகுலை கைபேசியில் அழைத்தான். முன்தினம் இருந்த மனநிலையில் அவனிடம் பேசுவது சரி வராது என்ற எண்ணத்தில் இன்று தான் நண்பனை அழைத்தான்.

 

அழைப்பை எடுத்த ராகுல் மகிழ்ச்சியான குரலில், “சொல்லு டா மச்சான்” என்றான்.

 

அவன் சில நேரங்களில் ‘மச்சான்’ என்று அழைப்பான் தான் என்றாலும் இன்று அதில் தனி உரிமை இருப்பது போல் தோன்றியது.

 

பிரசாத், “சாரி டா.. எனக்கு இப்போ கல்யாணம் பண்ற எண்ணம் இல்லை”

 

“ஏன் டா?” என்ற கேள்வி சற்று சுருதி இறங்கி வந்தது.

 

“ச்ச்.. நான் இன்னும் பிஸ்னஸ்ஸில் ஸ்டேபிள் ஆகணும் னு நினைக்கிறேன்” என்றவன், “ப்ளீஸ் டா.. உன் அப்பாவிடம் சொல்லி புரியவை டா.. என் அப்பாவை பத்தி உனக்கே நல்லா தெரியும்.. நீங்க திரும்ப அவரிடம் பேசினா என்னை டார்ச்சர் பண்ணுவார்.. உன் தங்கைக்கு வேறு மாப்பிள்ளை பாருங்க.. சாரி டா.. தேவை இல்லாம உங்களை குழப்பிட்டேன்.. இது இப்படி ஆகும் னு நான் எதிர்பார்க்கலை”

 

“பரவா இல்லை.. விடு டா.. நான் பேசிக்கிறேன்..” என்றவன், “திரும்ப கேட்கிறேன் னு தப்பா நினைக்காத டா.. இப்போ ஜஸ்ட் பேசி வச்சிட்டு ஒரு வருஷம் கழிச்சு கல்யாணத்தை வச்சிக்கலாமா?”

 

“இல்லை டா.. நீங்க வேற மாப்பிள்ளை பாருங்க”

 

“ஏன் டா? உன்னை விட எனக்கு மனசு இல்லை..”

 

“அது எப்படி டா! மனோக்கு பேசிட்டு நான்.. இல்லை டா அது சரி வராது” என்று இவன் பூசி முழுக,

 

ராகுல், “ரோஷினி கிட்ட இன்னும் எதுவும் சொல்லலை டா.. அவ பிரெண்ட்ஸ் கூட டூர் போயிருக்கா.. இன்னைக்கு தான் வரா.. ஸோ சொல்லும் போதே உன்னை தான் மாப்பிள்ளையா சொல்லுவோம்.. ஸோ அதை பத்தி நீ கவலைப் படாதே” என்றான்.

 

பதில் சொல்வதறியாது பிரசாத் திணற, சரியாக அந்த நேரத்தில் ராகுலிற்கு மற்றொரு எண்ணில் முக்கியமான அழைப்பு வரவும் அவன், “முக்கியமான போன் வருது டா.. கொஞ்ச நேரத்தில் நானே உன்னை கூப்பிடுறேன்.. யோசிச்சு நல்ல முடிவா சொல்லு டா” என்று அவசரமாக பேசியவன் அழைப்பைத் துண்டித்தான்.

 

‘இருக்கிற பிரச்சனை பத்தாதுன்னு இவன் வேற படுத்துறானே! இவனை எப்படி சமாளிக்க!’ என்று எரிச்சலுடனும் இயலாமை தந்த கோபத்துடனும் பிரசாத் அமர்ந்திருந்தான்.

 

 இதயம் இணைய காத்திருப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!