Skip to content
Post Views: 8,240
மறுநாள் அங்கேயே இருந்துவிட்டு அதற்க்கு அடுத்தநாள் அனைவரும் கடலூர் திரும்பினர், ராஜேஷ் வேலைக்குப் போக வேண்டும் என்று அதிகாலையே கிளம்பி வந்துவிட்டனர்.
“இன்னைக்கு வீட்டுக்குச் சாமான் வாங்கிக்கலாமா” என்றாள் துளசி வெற்றியிடம்.
Advertisement
Advertisement
“சரி போலாம் அக்காவையும் கூப்டுக்கலாம்” என்றான் அவள் மறுதொன்றும் கூறவில்லை, அங்கிருந்த பெரிய கடைக்கே அழைத்துச்சென்றாள் வெண்மதி.
Advertisement
Advertisement
தயாரித்துவைத்திருந்த லிஸ்ட் பார்த்து அதை அனைத்தயும் வாங்கிக்கொண்டாள் துளசி, கடைக்குச் சென்றபிறகு வேறுசில பொருட்களும் தேவை என்று தோன்றியது ஆனால் எங்கு வைக்க… இடமில்லையே தேவையான மளிகை பொருட்களும் வாங்கிக்கொண்டு ஆட்டோவில் வீடு வந்துவிட்டனர்.
அதையெல்லாம் அடுக்கி வைக்கவே அவளுக்கு அன்று இரவுவரை ஆகிவிட்டது மறுநாளிலிருந்து மெடிக்கல் திறக்கப் போவதாக வெற்றி கூறியிருந்தான், அதிகாலையே எழுந்துவிட்டாள் துளசி குளித்துப் பொங்கல் சாம்பார் வைத்துத் துணி துவைத்து வீட்டை ஒதுங்கவைத்து என்று அணைத்து வேலைகளையும் முடித்துவிட்டாள்.
ஆயிற்று மணி எட்டு இன்னும் அவன் எழுந்துகொள்ளவில்லை அழைக்க வேண்டுமா எதுவும் சொல்லுவானா என்ற சந்தேகம் இருக்க அமைதியாக இருந்தாள், பத்து நிமிடங்கள் கடந்து அவனை எழுப்பினாள்.
“மணி ஆயிடுச்சு மெடிக்கல் போகவேண்டாமா” என்க.
எழுந்து மணி பார்த்தவன் “எட்டு மணிக்கே தொறந்து வெச்சு என்ன பண்ண போற யார் வருவாங்க இவ்ளோ காலைல, எனக்குத் தெரியும் எப்போ போகணும்னு தூங்கும்போது என்ன தொல்லை பண்ணாத எனக்குப் பிடிக்காது” என்றான்.
அப்படியே தலையைப் பிடித்துச் சுவற்றில் இடிக்கத் தோன்றியது அவளுக்கு ‘ஏன் காலை எழுந்து தயாராகி கொஞ்சம் சீக்கிரம் திறந்தால் வேண்டாம் என்று சொல்லுகிறார்களா ஊரில் இருப்போர், எட்டுமணிக்கும் எழாமல் இருக்கிறானே இப்படி தூங்கினால் எப்படி புத்தனுர்ச்சியாக இருக்கும்’ என்று எண்ணியவள் அமைதியாகி கிட்சேன் சென்று டி வைத்துக் குடித்து பொங்கலும் உண்டுவிட்டு ஹாலில் வந்து அமர்ந்துகொண்டாள்.
இவனுக்கெல்லாம் காத்திருந்தால் சரியாகவராது என்று புரிந்துபோனது அவளுக்கு, குளித்து உடைமாற்றி அவன் வந்தபோது பத்து மணி.
“மொதல்ல டி குடு” என்றவன் பொறுமையாக அதைக் குடித்து முடித்தான், பிறகு டிவியில் தேடி தேடி அவனுக்குப் பிடித்தமாதிரி ஒரு படத்தை வைத்துவிட்டு “சாப்பிட கொண்டுவா” என்றான்.
அதற்க்கே அரைமணிநேரம் சென்றிருந்தது பதினோரு மணிக்குச் சாப்பிட்டு முடித்து அதன் பிறகும் பத்து நிமிடம் கடந்தே சென்றான், எல்லோரும் வாழ்க்கையில் முன்னேற எப்படியெல்லாம் ஓடி ஓடி வேலை செய்கிறார்கள் இவன் என்ன இப்படி இருக்கிறான் என்றுதான் தோன்றியது.
என்ன செய்ய என்று தெரியவில்லை துளசிக்கு, தனிமை வாட்டியது என்றால் வெற்றியுடன் இருப்பது முள் முனையில் நிற்பதை போல அவளுக்கு முடியவில்லை.
ஏக்கங்கள் வலிகள் வேதனை அத்தனையும் உள்ளுக்குள் கொட்டிக்கிடந்தது சொல்லி அழ ஆள் இல்லை தோள் சாய்க்க யாரும் இல்லை, ஒற்றை ஜன்னல் அவளின் தோழியாகிவிட்டது யாரிடமும் சொல்லமுடியா வழிகளை எல்லாம் அதனிடம் சொன்னாள் கண்ணீர் சிந்தினாள்.
மூச்சுமுட்டம் அந்த இருட்டறையிலிருந்து விடுதலை வேண்டி வேலைக்குச் செல்ல முடிவெடுத்தால் துளசி அவனிடம் கேட்கப் “போ வீட்டில சும்மாதானே இருக்க” என்றான்.
அன்று பொருட்கள் வாங்க சென்ற அந்தக் கடையிலே பில்லிங் செக்ட்ஷனில் வேலைக்குச் சேர்ந்துவிட்டாள்
எந்த முன்னேற்றமுமின்றி மாதம் இரண்டு கடந்திருந்ததது திருமணம் முடிந்து, காலையிலே பரபரப்பாகச் சமையல் செய்துகொண்டிருந்தாள் துளசி, வேலைக்குச் செல்வதால் காலை மற்றும் மத்திய உணவைச் சமைத்து வைத்துவிடுவாள், பிறகு மாலை ஆறு மணிக்கே வருவாள்.
இரவுக்கு சமையல், துணி துவைப்பது, மாவரைப்பது, பாத்திரம் கழுவுவது அனைத்தும் அப்பொழுதே, சாப்பிட்ட தட்டைக்கூட எடுத்து அந்த பக்கம் வைக்க மாட்டான் வெற்றி, இந்த இருட்டுக்குள் அடைந்துகிடந்து மூச்சு முட்டுவதற்கு இடுப்பொடிய வேலை செய்வது தேவலாம் போல இருந்ததது அவளுக்கு.
அன்று மாமியாரும் மாமனாரும் வருகிறார்கள் ஆகையால் காரக்குழம்போடு ரசமும் தயிரும் கூடுதலாக முட்டைகோஸ் பொரியலோடு வாழைக்காய் வறுவலும் செய்துவைத்தாள்.
இவர்களுக்கானால் ஒரு குழம்பு ஒரு பொரியல் மட்டுமே, இனி வந்தவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்ற பேச்சு வேண்டாம் என்று எண்ணியவன் அனைத்தையும் சமைத்து அடுக்கிவைத்து அடுப்படியை சுத்தமாகத் துடைத்து வைத்து விட்டுச் சென்றாள்.
“ஆறு வருஷமா இங்க இருக்கீங்களே அடுப்பும் இருக்கு கொஞ்சமா சாமான் வாங்கியிருந்தா இங்கேயே சமைச்சிருக்கலாமே, உங்க அம்மா வரும்போதும் இங்கேயே சமைச்சு சாப்பிட்டு இருக்கலாம் அக்கா வீட்டுக்கு மூணு வேலையும் போய் ஏன் சாப்பிடணும்” என்று கேட்டிருந்தாள் ஒருநாள் அவனிடம்.
“அக்கா ஒத்துக்காது… அங்கேயே வந்து சாப்பிடுங்கன்னு சொல்லிடுச்சு அதனால அங்கதான் சாப்பிடுவாங்க” என்றான்.
இது என்ன மனநிலை என்று அவளுக்குப் புரியவில்லை சாதாரணமாகப் பெண்பிள்ளையை கட்டிக்கொடுத்த வீட்டில் இப்படி சாப்பிட தாய்மார்கள் அதிகம் போகமாட்டார்கள், அதோடு மகனுக்கென்று வீடு இருக்க அங்கு அடுப்பும் இருக்க மாதத்தில் ஒரு முறை வந்து தங்கும்போதாவது மகனுக்கு வீட்டு சாப்பாடு செய்து கொடுக்க ஆசை படுவார்கள்.
இவர்களானால் மூன்று நேரமும் மகள் வீட்டில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு இங்கு வந்து படுத்துக்கொள்கிறார்கள் வெற்றிக்கு ஹோட்டல் சாப்பாடுதான், தாய்தந்தை வரும்போது மட்டும் மதிய உணவை அக்காவின் வீட்டில் உண்ணுவான் துளசிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை ஒரு தாயால் மகன் ஹோட்டலில் சாப்பிடும்போதும் எந்த உறுத்தலும் இல்லாமல் எப்படி மகள் வீட்டில் சாப்பிட முடிகிறது என்று.
மதியம்போல வந்தவர்கள் நேரே மகள் வீட்டிற்கு சென்று கொண்டுவந்த திண்பண்டங்களை கொடுத்துவிட்டு மகன் வீட்டிற்கு வந்தனர், வெற்றி வீட்டிலிருந்தான் கைகால் கழுகி சாப்பிட அமர்ந்தார்கள் நல்லா சமைக்குறாளே நல்லா இருக்கு எல்லாமே என்று பாராட்டு பத்திரம்வேறு.
துளசி வந்தபோது அனைவரும் நல்ல உறக்கம், பெட்ரூம் கதவை அடைத்துவிட்டு உள்ளே இருவரும் உறங்கிக்கொண்டிருந்தனர் துளசி தலையில் அடித்துக்கொண்டாள் தன் மடத்தனத்தை நொந்துகொண்டு.
அவர்கள் வருவது தெரியும்தானே துணியை எடுத்து வெளியில் வைத்திருக்க வேண்டும் என்று காலம் கடந்து யோசனை சென்றது வேறு வழியில்லை கூந்தலை அவிழ்த்துக் கொண்டையாக மேலே வைத்துக் காட்டியவள் கிட்சேன் செல்லச் சாப்பிட்ட அனைத்தும் அப்படியே இருந்தது.
சாதம் வைத்திருந்த சட்டியிலிருந்து கரண்டியை கூட எடுக்கவில்லை அப்படியே மூடி வைத்திருந்தனர், குழம்பும் மீதமான பொரியலும் அனைத்தும் கெட்டு போயிருந்ததது அடிக்கும் வெயிலுக்கு காலைச் சமைத்து வைத்தது எப்படி இருக்கும்.
அனைத்தையும் எடுத்துச் சுத்தப்படுத்தி கழுவி வைத்தாள் மடிக்க நேரம் இல்லாமல் காலை எடுத்துவந்து ஹாலின் மூலையில் சேரில் போட்டு வைத்திருந்த துணியைப் பார்த்ததும் நிம்மதியானது, வெற்றி பேனுக்கு கீழே நீட்டிப் படுத்திருந்தான் ஹாலில் அவனைத் தொல்லை செய்யாமல் அவளுடைய துணியை எடுத்துச்சென்று குளித்துவந்தாள்.
விளக்குவைத்து கும்பிட்டு மீண்டும் கிட்சேன் புகுந்தாள், வீட்டிலானல் சாந்தா இந்த நேரம் தூங்கவிட மாட்டார் பொதுவாகவே அவர்கள் வீட்டில் யாருமே மதியம் தூங்குவதில்லை எப்பொழுதாவது உடல் நிலை சரியில்லை என்று படுத்திருந்தால் கூடச் சரியாக விளக்குவைக்கும் நேரம் சாந்த்தா எழுப்பி விட்டுவிடுவார்.
“கொஞ்சநேரம் அப்படியே சாஞ்சு ஒக்காரு இந்த நேரம் தூங்கினா வீட்டில எப்படி லட்சுமி வாசம் செய்வா” என்பார், இங்கானல் மூன்றுபேரும் நல்ல உறக்கம் அவள் இரவுணவு என்ன செய்யலாம் என்ற யோசனையில் ஆழ்ந்திருக்க ஒவ்வொருவராக எழுந்து வந்தனர்.
தேநீர் அருந்தும் இடைவெளியில் மகனும் தந்தையும் தீவிரமாக விவாதித்தனர் புதிய பைக் வாங்குவதை பற்றி, அதில் அவள் புரிந்துகொண்டது இப்பொழுது அவன் வைத்திருப்பது அவன் அக்காவின் கணவன் ராஜேஷின் பழைய பைக்.
சீருக்கென்று சாந்தா பணமாகக் கொடுத்திருக்க வீட்டிற்கு தேவையான அனைத்தும் வாங்கிவிட்டார்கள் ‘இவ்வளவு போதும்’ என்று அவர்களே முடிவு செய்துவிட்டார்கள் ஒரு கிரைண்டர் கூட வாங்கமுடியவில்லை அவளால், வெறும் மளிகை பொருட்களும் கொஞ்சம் பாத்திரமும் இதுதான் சீர் பணத்தில் வாங்கியது.
மீதி பணத்தில் அவனுக்குப் புதிய வண்டி வாங்க போகிறார்கள் ஒரு மனிதாபிமானத்திற்கு கூட அவளிடம் கேட்கவுமில்லை சொல்லவுமில்லை.
“நாளைக்கே போய்ப் புக் பண்ணிடலாம்” என்றார் விஸ்வநாதன்.
“சரி” என்றவன் மெடிகளுக்கு கிளம்பி சென்றான், அப்பொழுதே நேரம் ஏழரையை தொட்டு நின்றது.
அங்கேயே நின்றிருப்பவளை பார்த்த விஜயலக்ஷ்மி “வேற பொருள் ஒன்னும் வாங்க முடியாது அதனால அவனுக்குப் பைக் வாங்கிக்கலாம் அதும் சீர் தான” என்க.
“என்னமோ செய்து தொலையுங்கள்” என்று தலையை ஆட்டியவள் அடுத்தநாளுக்கு தேவையான காய்களை எடுத்து நறுக்க தொடங்கினாள், சிறிது நேரத்தில் அவள் பின்னே நிழலாடத் திரும்பிப் பார்த்தாள் துளசி.
“நாங்க பெரியவ வீட்டுக்குப் போயிட்டு வரோம்” என்றார்கள் இருவரும்.
அவள் விழிகள் தன்னாலே கடிகாரத்தை பார்த்தது ‘இந்த நேரத்திலா!’ என்று கேட்டே விட்டாள் அவள்.
“எப்போவும் போறதுதான்” என்றவர்கள் கிளம்பி சென்றுவிட்டனர், இப்பொழுது போனால் எப்பொழுது வருவார்கள் இவர்களுக்கு நேரத்தோடு உறங்கும் வழக்கமே இல்லையே இவர்கள் வரும்வரைக்கும் நான் முழித்திருக்கவேண்டுமா.
மதியம் அங்குச் சென்றுவிட்டுத்தானே இங்கு வந்தார்கள் இப்பொழுது என்ன மீண்டும்….
அவங்க பொண்ணு வீடு அவங்க போறாங்க உனக்கென்ன….
எனக்கென்ன நேரத்தோட போய்ட்டா வரலாம்ல… என்று பலவாறான சிந்தனை, ஏனோ புதிதாக ஒன்றும் சமைக்க தோன்றவில்லை கிச்சடி செய்துவைத்துவிட்டாள் காலைக்கு அடை செய்யலாம் என்று அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டாள்.
ஒன்பது… பத்து… பத்தரை… என்று நேரம் கடந்தது ஹாலிலே ஒரு மூலையில் தன்னையறிமால் உறங்கிவிட்டாள், அரைமணிநேரம் சென்று வந்துசேர்ந்தனர்… வெற்றியும் அவர்களுடனே வந்தான் மெடிக்களிலிருந்து நேரே அக்காவின் வீடு சென்றிருக்கிறான் அங்கு அனைவரும் ஒன்றாக நேரம் செலவழித்துவிட்டு வருகிறார்கள் என்று அவர்கள் பேச்சிலே புரிந்தது.
உணவு எடுத்துவைக்க “நீ சாப்பிட்டியா” என்றார் மாமியார்.
“ஹ்ம்ம்” என்றவள் அவர்கள் உண்டு முடிக்கும் வரை அமைதியாக அமர்ந்துகொண்டாள், பிறகு அனைத்தையும் கழுகி வைத்துவிட்டு பாயை போட்டுக்கொண்டு படுத்துவிட்டாள்.
“துளசி நாங்க படம் பாக்க போறோம் நீயும் பாக்குறியா” என்றான் வெற்றி.
‘மனுஷ ஜென்மங்களா நீங்க’ என்று எண்ணியவள் “இல்ல இப்போவே லேட் எனக்கு வேலைக்குப் போகணும்” என்றவள் சுவரோடு ஒட்டிப் படுத்துக்கொண்டாள், லைட் வெளிச்சம் டிவி சத்தம் ஒன்றும் செய்யமுடியவில்லை உடல் அசதியில் கொஞ்சம் நேரத்தில் உறக்கம் தழுவிக்கொண்டது.
காலை ஏழுமணிக்கு அவள் அடுப்படியில் மும்முரமாக வேலை செய்துகொண்டிருக்க மாமனாரும் மாமியாரும் கணவனும் எழுந்தனர் பல்துலக்கி வரத் தேநீர் கிடைத்தது மருமகள் கையால், குடித்துவிட்டு போன் பார்க்க அமர்ந்துவிட்டனர்.
அணைத்து வேலைகளையும் அவள் முடிக்கும் வரைகூட மாமியார் அந்த அக்கம் எட்டி பார்க்கவிலை காற்றுப்புகாத அடுப்படியில் நின்று சமைத்தது அவளுக்கு வேர்த்துக்கொட்டி உடையெல்லாம் நனைந்துவிட்டது அப்படியே எப்படி வேலைக்குச் செல்ல… மீண்டும் ஒருமுறை மேல்கழுகி உடை மாற்றி உணவுண்டு மதியத்திற்கு தேவையானதை எடுத்துக்கொண்டவள்.
“அத்த”என்றாள் விஜயலட்சுமியை பார்த்து.
“என்னம்மா” என்று வந்த மாமியாரிடம் “அடை சுட்டு இதுல வெச்சுருக்கேன் காரச்சட்னி இதுல இருக்கு, மதியத்துக்கு சாதம் மோர் குழம்பு, பருப்பு துவையல், சேனை வறுவல் அவரைக்காய் மசாலா இருக்கு” என்று ஒவ்வொரு பாத்திரத்தையும் திறந்து காண்பிக்க.
“ஹ்ம்ம்… ஹ்ம்ம்…” என்று அனைத்தையும் கூர்மையாகப் பார்த்துக்கொண்டார் மாமியார்.
“நான் வேலைக்குக் கிளம்புறேன் அத்த நேரம் ஆச்சு” என்றவள் மாமனாரிடமும் சொல்லிக்கொண்டு வெற்றியை ஒரு முறை நிமிர்ந்து பார்த்துவிட்டு நடந்தாள்.
வீட்டிலேயே வெட்டியாகத்தான் அமர்ந்திருக்கிறான் அவளை ஒருநாள் கூடக் கொண்டுசென்று விட்டதில்லை நான்கு கிலோமீட்டர் மட்டுமே, அக்கறை இருந்தால் தினமுமே அவளைக் கொண்டு சென்று விடலாம் அதையெல்லாம் அவனிடம் எதிர்பார்க்க முடியுமா, ஆனால் துளசிக்கு மனதிற்கு நிம்மதியே வண்டியில் அவனுடன் பயணம் செய்ய வேண்டாம் உரசல் வேண்டாம் அவன் தொடுதல் இல்லாமல் தனியாக இருப்பது அவளுக்கு அவ்வளவு மனநிம்மதி.
அன்றும் அதேதேயேதான் செய்தார்கள், அடுத்தநாள் விடுமுறை அன்றும் அதேதான் காலை உணவை முடித்தவர்கள் பதினோரு மணிக்கு மகள் வீட்டிற்கு சென்றுவிட்டனர் மதியம் மூன்று மணிக்கு வெற்றியும் அவர்களுடனே வீட்டிற்கு வந்தான் சாப்பிட.
இரண்டுமணிக்கே அக்காவின் வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள் இங்கு ஒருத்தி தனியாக இருப்பதை பற்றி அவர்களுக்குக் கவலையில்லை அப்பொழுதுதான் அவளுக்குப் புரிந்தது அவர்கள் எப்பொழுதுமே அப்படிதான் என்று.
மாலையும் அதேதான் ஏழுமணிக்கு சென்றுவிட்டு இரவு பதினோரு மணிக்கு வந்தனர், விஜயலட்சமி இருந்த இடத்திலிருந்து அசைவதில்லை ஒரு டி க்ளாஸ் கூடக் கழுகி வைக்கமாட்டார்.
விஸ்வநாதனும் விஜயலட்சுமியும் இங்கு வரும் நாட்களில் வெண்மதி தவறாமல் சூப்பர் மார்க்கெட், சந்தை, ஹோட்டல் சினிமா அனைத்திற்கும் போவாள், துவரம்பருப்பு அந்தக் கடையில்தான் நன்றாக இருக்கும் என்று பருப்பு வகைகள் மட்டுமே வாங்க நான்கு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் சூப்பர் மார்க்கெட் போவாள்.
அவர்கள் தங்கியிருக்கும் நான்கு ஐந்து நாட்களும் தினமும் ஒரு இடத்திற்கு சென்றுவருவார்கள் மூன்று வேலை சாப்பாடும் துளசியிடம், சாப்பிட தூங்க மட்டுமே இங்கே மற்றபடி எப்பொழுதும் அங்கேதான்.
மறுநாள் துளசி வேளையில் இருக்க அலைபேசி அடித்தது எடுத்துப் பார்க்க வெண்மதி தான் அழைத்திருதாள் “சொல்லுங்க” என்றாள் துளசி.
“எங்கேயிருக்க துளசி” என்றாள் அவள்.
“கடைல” என்றாள் இவள்.
“ஓஹ்…” என்றவள் “நான் தான் சொன்னன்ல அவளா இருக்காதுன்னு அவ கடைல இருக்கா” என்று யாரிடமோ சொல்வது கேட்டது. “என்னாச்சு” என்றாள் துளசி இந்தப்பக்கம்.
“இல்ல நாங்க எல்லாரும் சினிமாக்கு போகலாம்னு வந்தோம் அப்போ நதியாதான் சொன்னா நீ யார்கூடவோ பைக்ல ஏறிப் போறேன்னு, அதான் கேட்டேன்” என்க துளசியின் முகம் கோபத்தில் ஜொலிக்க கடைக்கு வெளியில் வெற்றியின் பைக் வந்து நின்றது.
உள்ளே வந்தவன் பில்லிங்கில் அவள் அமர்ந்திருப்பதை பார்த்தான் கோபத்தில் அவள் வெடிக்க காத்திருப்பதையும் “ஏய் நதி அவ இங்கதான் இருக்கா சும்மா ஏதாவது சொல்லாத” என்றான் மெதுவாக அலைபேசியில்.
அவனை அத்தனை வெறுப்போடு துளசி பார்த்துநிற்க “இப்போ எதுக்கு இவ்ளோ டென்சன் ஆகுற உன்னைப் பத்தி எங்க எங்க யாருக்குமே சரியா தெரியாதுல அவ அவ்ளோ உறுதியா சொன்னா நீதான்னு அதான் எல்லாரும் கொஞ்சம் பதறிட்டாங்க, அப்படிலாம் இருக்காது துளசி அப்படியில்லன்னு நான் சொன்னேன் அவ நம்பள அதான் நானே நேர்ல வந்தேன்” என்றவனை எந்த உணர்வும் இல்லாமல் பார்த்துநின்றாள் துளசி.
அவன் திரும்பிப்போகும்வரை அதே பார்வையோடு நின்றாள் அவன் சென்றபிறகு பாத்ரூம் போக வேண்டும் என்று கூறி சென்றவள் அழுகையை கட்டுப்படுத்த முகத்தில் தண்ணீரை அடித்து அடித்துக் கழுவினாள்.
அடுத்த இரண்டு நாட்களும் அவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை, அவனும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை மூன்றாம் நாள் காலை “சாயந்திரம் சினிமாக்கு போலாம் பசங்க கேக்குறாங்களாம் அக்கா கூப்டுச்சு கொஞ்சம் சீக்கிரம் வா” என்றவனை திரும்பிப் பார்த்தவள்.
“உங்களுக்குக் கொஞ்சம் கூட உறுத்தல… உங்க அக்கா பொண்ணு பண்ணினது தப்புனு தோணல அவ சொன்னான்னு சந்தேகப்பட்டு என்னைக் கண்காணிக்க நீங்க வந்தது தப்புனு தோணல” என்க.
“என்ன தப்பு? நீ எங்கவீட்டுக்கு வந்து ரெண்டுமாசம்தான் முடிஞ்சிருக்கு உன்னைப்பத்தி எங்களுக்குப் பெருசா எதுவும் தெரியாதில்ல அவ அவ்ளோ உறுதியா சொன்னப்போ உன்மேல தப்பிருக்காதுன்னு புரியவெக்கத்தான் நான் வந்தேன் நீ என்னையே தப்பு சொல்ற” என்றவனை ‘என்ன ஜென்மம் இவன்’ என்று பார்த்துநின்றவள்.
“அது நான் இல்லனு தெரிஞ்ச அப்புறமாவது அவ என்கிட்டே சாரி கேட்டாளா இல்ல நீங்களாவது கேக்க சொன்னீங்களா” என்க.
“அவ சின்னப் பொண்ணு தெரியாம சொன்னதுக்கு உன்கிட்ட மன்னிப்பு வேற கேட்கணுமா, அவங்க அதை அப்போவே மறந்துட்டாங்க நீதான் மனசுலயே வெச்சுட்டு சுத்துற உன்னைமாதிரி வன்மம்மெல்லாம் எங்க வீட்டாளுங்களுக்கு தெரியாது அவ சாதாரணமா சொன்னா அப்போவே அதை மறந்துட்டா” என்றவனை பார்த்தவள்.
இவனிடம் போய் இத்தனை நேரம் பேசினாயே என்று தன்னையே கேவலமாகத் திட்டிக்கொண்டு பையை எடுத்துக்கொண்டு கிளம்ப தயாரானாள்.
“சாயந்திரம் வருவியா மாட்டியா” என்றான் அவன்.
“இல்ல” என்றவள் நடந்து விடக் கோபமாக அவளைப் பார்த்துநின்றான் வெற்றி.
“திமிர் பிடிச்சவ வரலைனா போடி” என்று உள்ளே சென்றான் அவளுக்கு அழைக்கவுமில்லை போகாமல் காத்திருக்கவுமில்லை, அக்கா குடும்பத்துடன் சினிமா ஹோட்டல் என்று சென்றுவிட்டு பாதி இரவில் வந்து படுக்கையில் விழுந்தான்.
error: Content is protected !!