Skip to content
Post Views: 2,784

இடுக்கி…
தற்போது சுபா தங்கி இருக்கும் வீடு இடுக்கியில் இருந்து அரை மணி நேரத்தில் இருக்கும் இடம் ஆகும்…. அந்த இடம் சுற்றி மலைகள் சூழ்ந்து உள்ள ஒரு பசுமை நிறைந்த கிராமம் ஆகும்….
Advertisement
இரண்டு மணிநேரம் கழிந்து தூங்கி எழுந்த ஆரவ் மீண்டும் அர்ஜுனன் போட்டோ பார்த்து “வீ மிஸ் யூ ப்பா… நீங்க திரும்பியும் எங்க கூட வருவிங்களா… எல்லாரும் இனிமே நீங்க வர மாட்டீங்கனு சொல்றாங்க…. ஆனா நானும் அம்மாவும் நீங்க வருவீங்கனு நம்புறோம்…. சீக்கிரம் எங்க கிட்ட வாங்க ப்பா… ” என்று அழுதவாறே பேசிக் கொண்டி இருந்தான்….
Advertisement
அப்போது மீண்டும் வீட்டுக்கு வந்து இருந்தாள் சுபா…. அவள் முகம் எதோ யோசிப்பதை போல் இருந்தது…
Advertisement
அவள் வருவதை பார்த்து கையில் இருந்த போட்டோவை மறைத்து வைத்து விட்டு அவளிடம் சென்று “ம்மா என்ன ஆச்சு… உங்க முகம் ஏன் சோகமா இருக்கு… ” என்று அவளின் மடியில் தலை வைத்து தூங்கியாவாரு கேட்டான் ஆரவ்…
Advertisement
“ஒன்னும் இல்ல தம்பி அம்மாக்கு கொஞ்சம் தலை வலியா இருக்கு… அது தான் கொஞ்ச நேரம் தூங்கிட்டு திரும்பியும் அங்க போகலாம்னு வந்தேன்….. ” என்று ஆரவ் தலையை கோதியாவாரு கூறினாள் சுபா….
அதை கேட்டு அவள் மேல் இருந்து எழுந்து “அம்மா நீ தூங்கு நான் டீ போட்டு கொண்டு வரேன்” என்று கூறினான்…
அவனை கை பிடித்து தடுத்து “தம்பி உட்காரு அது எல்லாம் வேண்டாம்…. வேற யோசனை….. உனக்கு ரேவதி நியாபகம் இருக்காங்களா….” என்று அவனை பார்த்தாவாறே கேட்டாள் சுபா….
அவன் “ஆம்” என்று தலை அசைத்தான்…. “அவங்களை இங்க நாட்டியாலயால பாத்தேன்… அவங்க என்கூட பேச ட்ரை பண்ணாங்க… நான் பேசாம வந்துட்டேன்… அது இல்லாம மாஸ்டர் பாட்டி ஒரு விஷயம் சொன்னாங்க…. அந்த யோசனை வேற…. ” என்று தயக்கமாக கூறினாள்…..
“பாட்டி என்ன சொன்னாங்க ம்மா…. அந்த லேடி உன்னை ஹர்ட் பண்ற மாதிரி பேசுனாங்களா….????” என்று வேகமாக கேட்டான் ஆரவ்…
“அவங்க என்கிட்ட மன்னிப்பு கேட்க தான் ட்ரை பண்ணாங்க…. பட் நான் பேசல…. நான் பாட்டி கிட்ட பேசிட்டு வெளிய வர அப்ப தான் பேசுனாங்க… நான் வண்டி எடுத்துட்டு வந்துட்டேன்… அது பிரச்சனை இல்ல… பாட்டி என்ன சொன்னாங்கனா நெஸ்ட் வீக் நிறைய பேர் நம்ம நாட்டியாலயா எடுத்து நடத்துற போட்டிக்கு பேர் குடுத்து இருக்காங்களாம் .. ஐ மீன் ரெஜிஸ்டர் பண்ணி இருக்காங்க…
நேம் லிஸ்ட் பாத்தேன்… அதுல பாப்பா பேரும் கார்த்தி குட்டி பேரும் இருந்தது…. அவங்க படிக்குற ஸ்கூல்… நம்ம ஊர் பேர் போட்டு தான் இருந்தது…. ஒரு வேல அவங்க வந்தா நம்ம ரெண்டு பேரையும் பாத்தாங்கனா உன்னை என்கிட்ட இருந்து கூட்டிட்டு போய்டுவாங்களா தம்பி ” என்று சோகமாக கண் கலங்கியவாரு கேட்டாள்….
“அம்மா நான் யார் வந்து கூப்பிட்டாலும் உன்ன விட்டு போக மாட்டேன் ம்மா…. எனக்கு நீ மட்டும் போதும் ம்மா… ” என்று கூறி அவளை அணைத்து கொண்டான் ஆரவ்…..
சுபாவும் அவனை நெற்றியில் முத்தமிட்டு அணைத்து கொண்டாள்…. இருவரும் சிறிது நேரம் அப்படியே இருந்தனர்… சுபா மதியம் சமைக்க செல்லும் போது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது….
சுபாவை இருக்க கூறிவிட்டு ஆரவ் சென்று கதவை திறந்தான்….. அங்கே இருந்தவர்களை பார்த்து அப்படியே நின்று விட்டான்…. அவனிடம் “தம்பி யாரு வந்து இருக்கா???” என்று கேட்டு கொண்டே வந்த சுபாவும் வந்தவர்களை பார்த்து அதிர்ந்து நின்றுவிட்டாள்…..
************************************************
மதுரை….
அங்கிருக்கும் ஒரு ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஒரு சிறிய காபி ஷாப்பில் இரண்டு பேர் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்…. அங்கு ஒரு 12 வயது மதிக்கதக்க ஒரு சிறுமியும் அமர்ந்து இருந்தாள்…. அவள் அங்கிருக்கும் ஒரு ஆடவன் கையை இறுக்கமாக பிடித்து அமர்ந்து இருந்தாள்….
“பயப்படாத ரித்து மா சீக்கிரம் அங்கிள் கிட்ட பேசிட்டு வீட்டுக்கு போகலாம்” என்று கூறிவிட்டு எதிரில் இருந்தவனிடம் ” சார் எனக்கு ஒன்னுமே புரியல… ரெண்டு வருஷமா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு.. நான் யாருன்னே எனக்கு தெரியல…. எனக்கு இந்த இடத்துல ஒட்டவே இல்ல ரெண்டு வருஷமா… என்னை பத்தி நான் தெரிஞ்சிக்க எடுக்குற முயற்சி எல்லாம் யாரோ எனக்கு முன்னாடியே அந்த ஆதாரத்தை இல்லாம பண்ணிடுறாங்க ” என்று இறுக்கமாக கூறினான் அவன்….
” எனக்கும் உங்களை முதல் தடவ பாக்குற அப்ப எங்கயோ பார்த்த பீல்… அப்புறம் தான் எனக்கு உங்களை ஏற்காடுல பாத்த ஞாபாகம் வந்தது….. ஆனால் உங்க கிட்ட பேச எனக்கு வாய்ப்பே கிடைக்கல… பேசவும் முடியல… என்னால என் பதவியை யூஸ் பண்ணி கூட ஒன்னும் பண்ண முடியல…. பட் உங்களை இன்னிக்கு பாப்பேன்னு பேசுவேன்னு நினைக்கவே இல்ல… தேங்க் காட்…. ” என்று கூறிவிட்டு “எப்படி உங்களை தனியா விட்டாங்க… இன்னிக்கே எல்லாத்தையும் பேசனும்…. எப்பயோ அவங்களை அர்ரெஸ்ட் பண்ற சான்ஸ் கிடைச்சும்… எல்லாத்தையும் உங்க மேல இருக்குறதுனால அர்ரெஸ்ட் பண்ண முடியாம போயிடிச்சு….. பட் இப்ப எல்லாமே அவங்க தான் பண்ணாங்கனு ஆதாரம் கிடைச்சி இருக்கு… இனிமே ஈஸியா அர்ரெஸ்ட் பண்ணலாம்…. இன்னிக்கு நீங்க வராம இருந்தா கண்டிப்பா இன்னும் ஒன் வீக்ல உங்களை பார்த்து இருப்பேன்…. ” என்று நீளமாக பேசி முடித்தான்…. அவன் அதிவீரபாண்டியன் ( நம் தேவதூதன் )….
“சார் எனக்கு ஆரம்பத்துல இருந்தே ஒரு கனவு வருது… முன்னாடி எல்லாம் ஒரு பொண்ணு என்னை விட்டு கார்ல போறா…. நான் எதோ ஒரு வீட்டு மாடில நின்னு ‘அம்மு’னு சத்தமா கத்துறேன்…. அப்போ மழை வேகமாக அதிகமா பெய்யுது… ஆனா அந்த கார் போயிடுது…. அதுக்கு அப்பறம் அந்த கனவு முடிஞ்சி போயிடுது….அந்த கனவுல அந்த பொண்ணு முகம் தெரியல…ஆனா அந்த கனவுல அந்த பொண்ணு மாசமா இருக்கா… இப்போ ஒரு ஆறு மாசமா அந்த பொண்ணோட முகம் எனக்கு தெரியுது சார்…. நான் அதை வரஞ்சி யார் கிட்டயோ குடுத்து விசாரிக்க முயற்சி செஞ்சா அந்த வரஞ்சது காணாம போயிடுது சார் என்று கூறி முடித்தான்…. “அவன் தற்போதைய பெயர் லிங்கம்…. ஆனால் அவன் நம் அர்ஜுனன் ஆவான்….
முதலில் அர்ஜுனனுக்கு என்ன ஆனது???? அர்ஜுனன் எப்படி மதுரையில்???? அர்ஜுனன் எவ்வாறு லிங்கமாக மாறினான்…. யார் அந்த அவர்கள்????? அவனோடு இருக்கும் அந்த 12 வயது பெண் குழந்தை யார்????? அதிக்கு எப்படி அர்ஜுனனை தெரியும்….?????
**************************************************
மெய்யனூர்…..
சிவனேஸ் மீண்டும் நிரவி கார்த்திகா முன் நின்று “கேரளா போறிங்களா இல்லையா????” என்று கேட்டான்….
கார்த்திகா நிரவியை பார்த்து நின்று இருந்தாள்… நிரவியோ தீவிர யோசனைக்கு பின் கேரளாவில் நடைபெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ள சம்மதித்து இருந்தாள்…..
“நான் போறேன் ஆனா என்கூட யாரும் வரக்கூடாது…. கார்த்தி க்கா மட்டும் வரட்டும்… அது தான் டான்ஸ் மாஸ்டர் எங்க கூட வராங்க இல்ல…. ” என்று பெரிய மனுஷியாக கூறினாள் நிரவிகா…..
அதை கேட்டு சிவனேஸ் முடியவே முடியாது என மறுத்து விட்டான்…. “உனக்கு இப்போ ஏழு வயசு தான் ஆகுது நிரவி… பெரிய பொண்ணு மாதிரி பேசாத….. உன்கூட நானும் என்கூட ஜனனிமா இல்லனா அத்தைங்க மூனு பேருல யாரோ ஒருத்தர் வருவாங்க …. ஆனா தனியா அனுப்ப மாட்டேன்” என்று தீர்மானமாக கூறிவிட்டான் சிவனேஸ்….
நிரவியும் சிணுங்கி கொண்டே சரி என கூறிவிட்டாள்….
கேரளா செல்லும் போது இவர்கள் சுபா மற்றும் ஆரவை சந்திப்பார்களா?????…. தற்போது சுபாவின் வீட்டுக்கு வந்து இருக்கும் அந்த நபர்கள் யார்??????
( அனைத்து கேள்விக்கும் அடுத்த பதிவில் இருந்து பதில் சொல்ல ஆரம்பித்து விடுவேன் மக்காஸ் )
error: Content is protected !!