Skip to content
Post Views: 1,881

மீண்டும் மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்ட பயந்த சுபா “யாரு… யாரு கதவு தட்டுறது….” என்று கேட்டுக்கொண்டே ஹாலிற்கு வந்தாள்…
Advertisement
ஆரவும் முழித்து இருக்க “ம்மா வேணாம்… நான் திறக்குறேன்” என்று கூறி முன்னே சென்றான்…. “வேண்டாம் தம்பி நீயும் போக வேண்டாம் நானும் போக வேண்டாம்… அம்மாவுக்கு பயமா இருக்கு….” என்று பயத்துடன் கூறினாள்…
Advertisement
Advertisement
“ம்மா எதுக்கு பயப்படுறீங்க… யாரா இருந்தாலும் நாம பாத்துக்கலாம்…. பயப்படாம இருங்க…. நீங்க இங்கயே இருங்க நான் போய் திறக்குறேன்…” என்று தைரியமாக கூறி முன் சென்றான்….
பக்கத்தில் அலங்காரதிற்கு வைத்து இருந்த பிலவர் வாஷை( flower vase) எடுத்து கையில் வைத்து கொண்டு தான் கதவை திறந்தான்…
Advertisement
அங்கு நின்று இருந்த அர்ஜுனனை பார்த்த ஆரவ் கையில் வைத்து இருந்த பிலவர் வாஷைகீழே போட்டுவிட்டு “அப்பா” என்று கத்திக் கொண்டே அவனை கட்டிக்கொண்டான்…
சுபா முதலில் ஆரவ் கீழே போட்ட பிலவர் வாஷை பார்த்து பதறியவள் ஆரவ் அப்பா என்று கத்தியதும் அங்கேயே அமர்ந்து முட்டியில் முகம் புதைத்து அழுக ஆரம்பித்துவிட்டாள்…
ஆரவை தூக்கிக் கொண்டு ரித்திகாவின் கையை பிடித்து கொண்டு உள்ளே வந்த அர்ஜுனன் அங்கு அழுது கொண்டு இருந்த சுபாவை பார்த்து உள்ளம் எல்லாம் வலித்தது அவனுக்கு…
இரண்டு வருடத்திற்கு பிறகு அவளை பார்த்ததை நினைத்து சந்தோசப்படுவதா இல்லை இரண்டு வருட பிரிவை நினைத்து வருத்தப்படுவதா என்று தெரியாமல் அங்கேயே நின்றுவிட்டான்…
தன் கழுத்தை கட்டிக் கொண்டு அழுகும் ஆரவை தானும் இறுக்கமாக அணைத்த அர்ஜுனன் அவன் நெற்றி முகம் என அனைத்து இடத்திலும் முத்தமிட்டு மீண்டும் தன்னுடன் அணைத்து கொண்டான்..
ஆரவ் கொஞ்சம் கொஞ்சமாக சமாதானம் ஆக அவனை கீழே இறக்கிவிட்டு சுபாவை நோக்கி நடந்தான்… மெதுவாக அவள் முன் மண்டியிட்ட அர்ஜுனன் அவள் காலில் அப்படியே முகத்தை புதைத்து அழுதுவிட்டான்….
அவன் காலை தொட்டவுடன் சுபா சத்தமாக அழுதுவிட்டாள்… அவன் கண்களில் இருந்து கொட்டியா கண்ணீர் அவள் காலை நனைத்தது…. இருவரும் வீட்டினர் வரும் வரையிலும் அதே நிலையில் தான் இருந்தனர்…
கதவும் திறந்து தான் இருந்தது…. இரண்டு வருடங்கள் கழித்து தன் தங்கையை காண வேகமா வாணன் வர்ணன் இருவரும் வந்தனர்… ஆனால் அங்கு நடந்து கொண்டு இருப்பதை பார்த்து சிலையாக நின்றுவிட்டனர்….
முகுந்தன் தான் அங்கு அழுது கொண்டு இருக்கு ஆரவை பார்த்து அவன் அருகில் சென்று அவனை சமாதானம் படுத்தினான்… பின் மெதுவாக அர்ஜுனன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்தான்…. அவன் தொட்டதில் நினைவு மீண்ட அர்ஜுனன் சுபாவை நோக்கி “அம்மு” என்று காற்றாகி போன குரலில் அழைத்தான்…..
அவளும் கண்களில் கண்ணீர் வடிய அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்… அவளின் கண்களை பார்த்து கொண்டே நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான்….. அவனின் அந்த ஒற்றை முத்தம் சொன்னது அவனின் பிரிவின் ஏக்கத்தை…..
அர்ஜுனன் ஞாபாகம் வந்தவனாய் “ரித்திம்மா” என்று அழைத்தான்…. ஆனால் அவள் வரவில்லை… ஹாலில் தேடினான் எங்கும் அவளை காணவில்லை… ரித்திம்மா எங்க இருக்க…. டேய் ரித்தி…. என்று அழைத்து கொண்டே அவளை தேட ஆரம்பித்தான்….
அவளோ வெளியில் ஒரு ஓரத்தில் பயந்து அழுது கொண்டு இருந்தாள்…. ஒரே நேரத்தில் அவள் இத்தனை பேரை எல்லாம் பார்த்தது இல்லை…. வீட்டில் அதிகம் அங்கு வேலை செய்யும் பாட்டியுடன் தான் இருப்பாள்… அர்ஜுனன் வந்து பிறகு அவனுடன் இருப்பாள்… கேரளாவில் இருந்த போதும் அதிகமாக யாருடனும் பேசவில்லை…
மதுரையில் இருந்த போதும் அர்ஜுனன் அதி வீட்டில் தங்காமல் ரித்திகாவுடன் தனியாக தான் தங்கினான்… இப்போது வீடு முழுக்க ஆட்கள் அதிகமாக இருப்பது அர்ஜுனன் அவளை கவனிக்காமல் அழுது கொண்டு இருப்பது எல்லாம் அவளையே அறியாமல் பயம் வந்து அழுக ஆரம்பித்து இருந்தாள்…. இப்போது அர்ஜுனன் அழைப்பது கூட அவளுக்கு கேட்கவில்லை….
அவளை காணாமல் வெளியே தேட வந்த அர்ஜுனன் அவள் அழுவதை பார்த்து வேகமாக அவள் அருகில் சென்றான்…. “ரித்திம்மா என்ன ஆச்சு… டேய் அப்பாவை பாரு” என்று அழைத்தான்…
அவளும் அப்பா என்று அழைத்து கொண்டே அவனை அணைத்து கொண்டாள்… அவள் உடல் எல்லாம் பயத்தில் நடுங்கியது…. அவளை அணைத்த போது அர்ஜுனன் அதை உணர்ந்தான்….
“டேய் எதுக்கு பயப்படுற… நான் வரப்பயே உன்கிட்ட சொல்லி தானு கூட்டிட்டு வந்தேன்… பயப்படக் கூடாது…. அப்பா இருக்கேன்” என்று கூறி முதுகை தடவிக் கொடுத்தான்….
கொஞ்சம் கொஞ்சமாக அவளின் நடுக்கம் நின்றது…. அவளை அழைத்து கொண்டு சுபாவின் நின்றவன் “இவளும் நமக்கு இனிமே பொண்ணு தான்… இந்த ரெண்டு வருஷத்துல நான் நல்லா இருக்கேன்னா இவளும் ஒரு காரணம்…. இந்த ரெண்டு வருஷமும் இவளை என் சொந்த பொண்ணா தான் வளர்த்தேன்… நீயும் அவளை அப்படி தான் நினைப்பேன்னு நினைச்சு கூட்டிட்டு வந்துட்டேன்.. இப்போ உன் முடிவு தான் அம்மு” என்று கூறினான்…
அவள் எதுவும் கூறாமல் ரித்திகாவை அணைத்து கொண்டாள்…. இதை அனைத்தையும் ஒரு ஜோடி கண்கள் அழுது கொண்டே பார்த்து கொண்டு இருந்தது…. அது வேறு யாருமில்லை…. அது நிரவி குட்டி தான்…
சுபா அர்ஜுன் இருவரும் வேண்டுமென்றே எல்லாம் அவளை கவனிக்காமல் இல்லை…. அவர்களுக்கு அவளை கவனிக்க நேரம் இல்லை… ஆனால் நிரவியின் மனதில் ஒரு காயமாக இது பதிந்துவிட்டது….
சுபாவும் அப்போது தன் அண்ணன்களைப் பார்த்தாள்…. இருவரையும் பார்த்தவுடன் வேகமாக சென்று இருவரையும் அணைத்து கொண்டு அழுக ஆரம்பித்துவிட்டாள்….
இருவர் கண்ணிலும் கண்ணீர் இறங்கியது…. மற்றவர்கள் அனைவரும் இதை கண்ணீருடன் பார்த்து கொண்டு இருந்தனர்….
வந்த அனைவரும் அர்ஜுன் சுபா இருவரிடமும் இந்த இரண்டு வருட பிரிவை பேசி தீர்த்தனர்…. இப்போது வரை இருவருக்கும் நிரவியின் ஞாபாகம் வரவே இல்லை…
அவளும் அழுது அழுது சசியின் தோளில் தூங்கி இருந்தாள்…. சிவனேஸிடம் அவளை கொடுத்துவிட்டு அர்ஜுனனிடம் மட்டும் பேசி விட்டு மீண்டும் அவளை தன் தோளில் போட்டு கொண்டான்…
அவன் யாரும் கவனிக்காதவாரு அவளை தூக்கி கொண்டு தான் வந்த காரில் தூங்க வைத்துவிட்டு சிவனேஸை காரில் இருக்க கூறிவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்றான்….
யாரும் நடந்து முடிந்ததை பற்றி பேசவில்லை…. முகுந்தன் அப்போது எல்லார் முன் நின்று அனைவரையும் பார்த்து “என்னை எல்லாரும் மன்னிக்கனும்…. ” என்று கூறினான்…
வாணன் அவனிடம் “நீ ஏன்டா மன்னிப்பு கேட்குற… என்ன ஆச்சு…” என்று கேட்டான்…
“அது அண்ணா… உங்க கிட்ட ஒரு பெரிய உண்மைய மறச்சிட்டேன்…. ஆனா வேணும்னு உங்க கிட்ட மறைக்கல…. உங்களை எல்லாம் கஷ்டப்படுத்தனும்னு நினைக்கல அண்ணா… மறைக்க வேண்டிய சூழ்நிலை… அந்த நேரத்துல எனக்கு வேற வழி இல்ல ண்ணா….” என்று கூறினான்…
“நீ என்னடா மறைக்க போற… அப்படி என்ன மறைச்ச…” என்று வர்ணன் கேட்டான்….
சுபாவை ஒரு பார்வை பார்த்த முகுந்தன் “அண்ணா சுபாவை கேரளா அனுப்பி வெச்சதே நான் தான்… மாசத்துல ஒரு நாள் வந்து பார்த்துட்டு தான் போவேன்…” என்று தயக்கமாக கூறினான்….
அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தனர்…. சுபா அவன் அருகில் வந்து நின்று “அண்ணனை யாரும் திட்டாதிங்க…. நான் தான் யார்கிட்டயும் சொல்லக்கூடாதுனு என் மேல சத்தியம் வாங்கிட்டேன்…. அந்த நேரத்துல என்ன பண்றதுனு எனக்கு தெரியல…. அது தான் அப்படி பண்ணிட்டேன்… ஆனாலும் அண்ணன் என்னை பாக்க வரும் போதும் எப்பவும் வீட்டுல சொல்லட்டா னு தான் கேட்பாங்க… நான் தான் வேணாம்னு சொல்லுவேன்” என்று கூறினாள்….
இருவரையும் யாராலும் தப்பு சொல்ல முடியவில்லை…. வாணன் தான் முகுந்தனிடம் “விடு முகுந்தா…. நீ என்ன பண்ணுவ…. அதை பத்தி பேசாத” என்று கூறிவிட்டான்….
அர்ஜுனன் மடியில் ஒரு பக்கம் ரித்தி உறங்கிக் கொண்டு இருக்க மறு பக்கம் ஆரவ் உறங்கிக் கொண்டு இருந்தான்…. அதை பார்த்த சசிக்கு கோவம் தான் வந்தது…. இன்னும் நிரவியின் ஞாபகம் இருவருக்குமே வரவில்லை என….
குழந்தைகள் அனைவரும் ஒவ்வாருவர் மடியில் தூங்கி இருக்க அனைத்து குழந்தைகளையும் பார்த்த பின்பு தான் அர்ஜுனனுக்கு நிரவியின் ஞாபாகம் வந்தது…
அனைவரையும் பார்த்து “நிரவி எங்க” என்று கேட்டான்….
சசியை தவிர மற்ற அனைவரும் பதறி தேட அவன் மட்டும் அமைதியாக அமர்ந்து இருந்தான்…. “சசி பாப்பா எங்க….” என்று முகுந்தன் கேட்டான்….
“அத்தான் இப்போ தான் இவங்களுக்கு அவ ஞாபகம் வருதா…. அவ அப்பா அம்மானு சொன்னதுலாம் காதுல வாங்காம இருந்துட்டு இப்போ ஏன் கேட்கனும்…. அவ இப்போ அம்மா அப்பா நம்மல எப்போ பாப்பாங்கனு அழுதுட்டே தூங்கிட்டா…. அவ தூங்குறா கார்ல கூட சிவா இருக்கான்….” என்று கூறினான்…
அர்ஜுனன் தன் மடியில் தூங்கிய இருவரையும் தலையணையில் படுக்க வைத்து விட்டு வெளியே காருக்கு சென்றான்….
அங்கு சிவனேஸ் மடியில் அழுத விழிகளுடன் தூங்கிக் கொண்டு இருந்தாள் அவனின் பெண்ணரசி…. அவளை சிவாவிடம் இருந்து தூக்கி அவள் நெற்றியில் அழுத்தமாக முதட்டமிட்டு தன் நெஞ்சோடு அணைத்து கொண்டான்… இது எதுவும் தெரியாமல் நிரவி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்….
உள்ளே முகுந்தன் சசியிடம் “டேய் ஏன்டா இப்படி பேசுற” என்று கேட்டான்…
“பின்ன என்ன அத்தான்…. அவ சின்ன பொண்ணு தானு… அவ கொஞ்ச நாளா ரெண்டு பேரையும் ரொம்ப தேடுனா…. அன்னிக்கு நாங்க மதுரை போனப்ப பாக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு… பாப்பா எப்படி அழுதா தெரியுமா… ஆனா இவரு அந்த பொண்ணோட பார்க் வந்தாரு அப்போ கூட எங்களை பாக்கல…. பாப்பா அதை பாத்து அழுது அழுது அவளுக்கு காயச்சல் வந்துருச்சு…. அவ ஒன்னும் நம்மள மாதிரி பெரியவ ஒன்னும் இல்ல அத்தான் அவ குழந்தை…. அவளுக்கு என்ன புரியும் அப்பாவுக்கு அம்மாவுக்கு நம்மள பிடிக்கல போலனு எத்தனை நாள் அழுது இருக்கா தெரியுமா… இப்போ கூட ரெண்டு பேரும் பாக்கலனு சசிப்பா என்னை அம்மா அப்பா அண்ணாவுக்கு என்னை பிடிக்கலயா அது தான் என்கூட பேச மாட்டிங்குறாங்களானு அழுவுறா… அவகிட்ட நான் என்ன சொல்ல முடியும்… நாம வந்து இப்போ ரெண்டு மணி நேரம் ஆகி இருக்குமா… இப்போ தான் அண்ணாவுக்கு அவ ஞாபாகம் வருது… ஆனா மேடமுக்கு இன்னும் பொண்ணு நியாபகம் வரல… அவ என்ன தப்பு பண்ணா….” என்று நீளமாக பேசினான்….
அதை கேட்ட சுபா அழ நிரவியை தூக்கி கொண்டு வந்த அர்ஜுனனும் அதை கேட்டு சிலையாக நின்றுவிட்டான்…
“போய் சிவாவ கேளுங்க இல்லனா கார்த்திகாவை எழுப்பி கேளுங்க த்தான்… பாப்பா எவ்வளவு கஷ்டப்பட்டானு… இந்த ரெண்டு வருஷத்துல சின்ன புள்ள கேட்க கூடாத பேச்சு எல்லாம் கேட்டு இருக்கு தெரியுமா… அவ படிக்குற ஸ்கூல்ல எல்லாம் நம்ம சொந்தம் மட்டும் படிக்கலயே…. அவகிட்ட நிறைய பேரு உன்னை உன் அப்பா அம்மாவுக்கு பிடிக்கல போல அது தான் எல்லாரும் விட்டுட்டு போயிட்டாங்க அப்டினு என்னமோ பேசி இருக்காங்க…. அவ எத்தனை அழுது இருக்கா தெரியுமா…. ஆனா இவங்களுக்கு அவ ஞாபகமே வரல….” என்று கோவமாக கூறினான்…
அர்ஜுனன் சுபா இருவரும் எதுவுமே பேசவில்லை… இருவரும் கலங்கி நின்றுவிட்டனர்….
error: Content is protected !!