Skip to content
Post Views: 2,624

கர்ணன் சுப்ரியா கல்யாணம் நல்லபடியாக கோலகாலமாக நடைபெற்றது…. சடங்குகள் எல்லாம் நல்லபடியாக நடைபெற்று உறவினர்கள் எல்லாம் வீட்டுக்கு சென்றபின் முக்கிய சொந்தங்களுடன் அனைவரும் வீட்டுக்கு சென்றனர்….
சுபா வீட்டுக்கு வந்தவுடன் ஒதுங்கிகொண்டாள்…. மித்ராவும் குழந்தையுடன் இருப்பதால் அவளும் முன்வரவில்லை…. நந்தினி மீண்டும் முகத்தை தூக்க ஆரம்பித்து இருந்தாள்…. எனவே தான் இருவரும் ஒதுங்கிகொண்டனர்… நந்தினி தான் அனைத்தும் பார்த்துக்கொண்டாள் வீட்டில்…
Advertisement
சுபா நந்தினியுடன் இன்னும் சரியாக பேசவில்லை… நந்தினி பேசினால் பேசுவாள் அவ்வளவு தான்… இரவு சடங்கும் நந்தினி தான் ஏற்பாடு செய்தாள்…. தன்சிகா அழுதுக்கொண்டே இருந்ததால் சுபாவும் மித்ராவும் அவளை பார்த்து கொண்டு இருந்தனர்….
கர்ணன் அறையில் கர்ணன் கட்டிலில் அமர்ந்து இருக்க சுப்ரியா மெதுவாக உள்ளே வந்து கதவை தாலிட்டு விட்டு மெதுவாக கர்ணனை நோக்கி நகர்ந்தாள்….
Advertisement
Advertisement
இருவரும் காதலை ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொள்ளவில்லை…. ஆனால் இருவருக்குமே இருவரின் காதலும் தெரியும்…. இருவரும் வாய் விட்டு காதலை சொல்லவில்லை….
Advertisement
சுபா காட்டிய போட்டோ ஒரே நிறத்தில் உடை அணிந்து இருந்ததால் பிரியாவின் அடத்தில் எடுத்த போட்டோ அது….
தன்னை நோக்கி வந்தவளை ரசித்தவாறு அமர்ந்து இருந்தான்…அவனின் பார்வையை உணர்ந்து கன்னம் சிவக்க நடந்து வந்தாள் சுப்ரியா… பாலை நீட்டியவுடன் வாங்கி வைத்தவன் அவளை கட்டிலில் அமர வைத்துவிட்டு சட்டை பாக்கெட்டில் இருந்து மோதிர டப்பாவை எடுத்து அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து “உன்னோட காதல் உணர்ந்தும் எனக்குள்ள காதல் வந்தும் நான் என்னோட காதலை உன்கிட்ட சொல்லவே இல்ல…. என்னோட செயல்ல நீ உணர்ந்தாலும் நான் சொல்லணும்ல…. என்னோட முதல் காதலும் நீ தான் கடைசி காதலும் நீ தான்… எப்படி என் மனசுக்குள்ள வந்தனு எனக்கு தெரியல…. ஆனா வந்துட்ட…. ஐ லவ் யூ ரியாம்மா… ஐ லவ் யூ ஆல்வேஸ்…” என்று தன் ஒட்டுமொத்த காதலையும் கண்ணில் தேக்கி வைத்து அவளை பார்த்து கூறினான்…
அவளோ அவனையே விழி ஆகலாமல் பார்த்து கொண்டு இருந்தாள்… பின் அவளும் அவன் முன் மண்டியிட்டு அமர்ந்து “லவ் யூ மாமா” என்று அவனை அணைத்து கொண்டாள்… இருவருக்கும் முதல் அணைப்பு… கர்ணனும் அவளை இறுக்கி அணைத்து கொண்டான்…
அவள் போட்டு வந்த நகைகள் அவனுக்கு குத்த அவள் சென்று இரவு உடை அணிந்து வந்தாள்… இரவுடையில் அவன் அணிவித்த தாலியை தவிர்த்து வேறு எந்த ஆபரணமும் இன்றி தேவதை போல் கன்னம் சிவந்து நடந்து வந்தவளை கண் எடுக்காமல் பார்த்தான்….
“அச்சோ மாமா ஏன் இப்படி பாக்குறீங்க…” என்று மெதுவாக கேட்டாள்…
“இத்தனை நாள் மறைஞ்சி நின்னு உனக்கு தெரியாம பாத்தேன்…. இனிமே நேரடியா பாக்கலாம்ல…. அது தான் பாக்குறேன் என் பொண்டாட்டிய” என்று கண் அடித்தவாரு கூறினான்…
அவளை தன் பக்கம் அமர வைத்து அவள் கையை தன் கைக்குள் வைத்து “உன் கிட்ட ஒன்னு கேட்கனும் ரியா ம்மா… கேட்கலாம் தானே…” என்று அவளின் கண்ணை பார்த்து கேட்டான்
“கேளுங்க மாமா… ஆனா உங்க மேல எப்படி லவ் வந்ததுனு கேட்காதீங்க… அது எனக்கே தெரியல” என்று கூறினாள்…
“அது இல்லடா ம்மா… அண்ணி அன்னிக்கு எனக்கு பொண்ணு பாக்க போறேன்னு சொன்ன அப்ப.. நான் பேச போனதை ஏன் தடுத்த… ஒருவேள அண்ணி வேற பொண்ணை பார்த்து இருந்தா என்ன பண்ணி இருப்ப…. ” என்று வருத்தமாக கேட்டான்…
“அது அக்கா ஒன்னு சொல்லி அதை எனக்கு எதிர்க்க முடியாது மாமா…. எனக்கு அக்கானா ரொம்ப இஷ்டம்… என்னைய விட அக்கானா தா ரொம்ப இஷ்டம்…. அது தான் வேணாம்னு சொன்னேன்… ஆனா அக்கா இப்படி பண்ணுவாங்கனு நான் எதிர் பாக்கவே இல்ல மாமா…. ஆனா அக்கா வேற பொண்ணு பாத்து இருந்தா கடைசி வர உங்களை நினைச்சிட்டே இருந்து இருப்பேன்…”என்று கண் கலங்கியவாறு கூறினாள்…
“சரி விடுடா மா இனிமே அதை பத்தி பேச வேண்டாம்… இன்னிக்கே எல்லாம் நடக்கனும்னு இல்ல டா… வா தூங்கலாம்” என்று கூறி அவளை தன் நெஞ்சில் போட்டு தட்டி குடுத்தவாரு அவனும் தூங்கிவிட்டான்…
சசி அறையில் மித்ரா தன்சிகாவை தூங்க வைத்து கொண்டு இருந்தாள்… சசி அவர்கள் இருவரையுமே பார்த்து கொண்டு கட்டிலில் படுத்து இருந்தான்….
தன்சி பாப்பா தூங்கியவுடன் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு ஒரு பக்கம் சுற்றி தலையணை வைத்துவிட்டு பாப்பாவிற்கு அடுத்த பக்கம் இருந்த சசியின் அருகில் வந்தாள் மித்ரா…..
“என்ன ஆச்சு ஏன் ரொம்ப அமைதியா தெரியுறீங்க… எத போட்டு குழப்பிட்டு இருக்கீங்க” என்று சசியிடம் கேட்டாள்….
“இல்ல நவா மண்டபத்துல நல்லா தானு நீயும் சுபாவும் இருந்திங்க… ஏன் வீட்டுக்கு வந்ததும் ஒதுங்கிட்டீங்க…. பாப்பாவை சாக்கு சொல்லாதீங்க எனக்கு தெரியும்… யாரோ எதோ சொன்னாங்களா…. நீங்க ரெண்டு பேரும் ஆரத்தி எடுப்பிங்கனு பிரியா ரொம்ப எதிர்பாத்தா போல… அக்கா எடுக்கவும் மூஞ்சி மாறிடிச்சு… அப்புறம் உங்களயே தான் பாத்துட்டு இருந்தா என்ன ஆச்சு… திரும்பியும் நந்தினி அக்கா எதோ பேசுனாங்களா….” என்று கேட்டான்…
“அவங்க எதுவும் பேசல… ஆனா அவங்க முகம் ஒரு மாதிரி ஆச்சு…. ஒவ்வொன்னும் செய்யுற அப்ப அவங்களை வேணும்னே ஒதுக்கி வெச்சு பண்ண மாதிரி… நாங்களும் கவனிச்சோம்… அர்ஜுன் அத்தானும் கவனிச்சு இருப்பாங்க போல… எங்க ரெண்டு பேர் கிட்டயும் வந்து சொன்னாரு… வீட்டுல எதுவும் செய்யாதீங்க…. அக்காவே எல்லாம் பாக்கட்டும்னு… அது தான் நானும் சுபாவும் ஒதுங்கிட்டோம்…. அது மட்டும் இல்லாம ஜனனியும் சொன்னா….” என்று கூறினாள்…
மீண்டும் அவனை பேசவிடாமல் “வேற எதுவும் பேசாதீங்க….. காலைல இருந்து அலைச்சலா இருக்கும் தூங்கலாம் ” என்று கூறிவிட்டு அவனை தலையை கோதி தூங்க வைத்துவிட்டு அவளும் பாப்பாவிற்கு மறுபக்கம் தலையணையை எடுத்து விட்டு படுத்து கொண்டாள்….
அர்ஜுனன் அறை…
ஆரவ் நிரவி கட்டிலில் தூங்கி இருக்க அர்ஜுனன் சுபா இருவரும் குட்டி அறையில் அமர்ந்து இருந்தனர்… எப்போதும் அர்ஜுனன் மீது தான் சுபா சாய்ந்து இருப்பாள்.. அதே போன்று தற்போதும் சாய்ந்து அமர்ந்து இருக்க… கையை பின்னோக்கி செலுத்தி அவனின் முடியை கோதி கொண்டு இருந்தாள்… அவனும் அவளின் தோளில் தலை வைத்து அமர்ந்து இருந்தான்…..
அவனின் முகம் கசங்கி இருந்தது…. அவனுக்கு நந்தினி திருந்துவாள் என்றே தோணவில்லை….. மண்டபத்தில் அனைத்தும் அவளை கேட்டு தான் செய்ய வேண்டும் என்று நினைத்தாள்… சுபா ஜனனி நவா மூவரும் எதோ வேலை அவளை கேட்காமல் செய்தால் அவர்களையே மூவரையும் முறைத்தாவாறே இருப்பாள்..
அவள் எதோ பிரச்சனை செய்வாள் என நினைத்து தான் அர்ஜுனன் மூவரையும் ஒதுங்கி நிற்க சொல்லிவிட்டான்….
அவள் ஏன் இப்படி மாறினாள் என்று அர்ஜுனன் சுபாவிடம் எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பான்… சுபா தான் சரியாகிடுவாங்க என்று கூறி சமாதானம் படுத்துவாள்….
தற்போதும் அப்படி தான் கூறிக்கொண்டு இருந்தாள்… “இங்க பாரு மாமா… அவங்க மாறிட்டாங்க… இனிமே அவங்க திரும்பியும் பழைய மாதிரி ஆகுறது எல்லாம் ரொம்ப கஷ்டம்… அது இல்லாம உன்னை யாரு சொத்தை பிரிக்க சொன்னது…. அவங்களுக்கு இந்த வீடு வேணும்… ஆனா நீ அதுக்கான பணத்தை அவங்களுக்கு குடுத்துட்டு இந்த வீட்டை வாங்கிட்ட…. அந்த கோவம் அவங்களுக்கு… வயலும் நீ பிரிச்சி தர முடியாது… அதுக்கு பதில் நகையா தரேன்னு சொல்லி தந்துட்ட…. அண்ணாவும் நீ பிரிக்குறத பாத்து அவரும் சொத்தை பிரிச்சி எழுதிட்டாரு….
அவங்களுக்கு எல்லாமே அவங்க தான் முதல்ல இருக்கனும்னு நினைக்குறாங்க…. அப்படி நினைக்க வைக்குறாங்க… அத்தனை தடவ நீங்களும் அண்ணாவும் சொன்னிங்க…. அவங்க பேசுறதை விட்டாங்களா… இல்லல…. விடுங்க மாமா… அவங்க பட்டா தான் திருந்தவாங்க…
நீங்க கவலை படாதீங்க…. உங்க முகம் ஒரு நொடி கசங்கி போனாலும் சத்தியமா என்னால பாக்க முடியல மாமா…. ப்ளீஸ் எத பத்தியும் யோசிக்காம இருங்க ப்ளீஸ்” என்று அவன் பக்கம் திரும்பி எக்கி அவனின் நெற்றியில் முத்தமிட்டாள்….
அவனும் அவளை விட்டு விலகி அவள் மடியில் படுத்து அவளின் கையை எடுத்து தன் தலை மீது வைத்தான்…. அவளும் புரிந்து கொண்டு தலையை தடவி கொடுத்தாள்….
அவனோ “அம்மு எதோ பாட்டு பாடேன்… கேட்டுட்டே தூங்குறேன் கொஞ்ச நேரம்… அப்புறம் அங்க போய் பெட்ல படுக்கலாம் …..” என்று கேட்டான்…. அவன் கேட்டு கொண்டு இருக்கும் போதே ஆரவும் நிரவி குட்டியும் எழுந்து வந்து இருந்தனர்… நிரவி குட்டி அர்ஜுனன் நெஞ்சில் படுக்க ஆரவ் அர்ஜுனன் அருகில் அவனை அணைத்து கொண்டு சுபாவின் மடியில் படுத்தான்….. அவளும் சிரித்து விட்டு பாட ஆரம்பித்தாள்
ஆராரோ ஆரீராரோ
அம்புலிக்கு நேரிவரோ
தாயான தாய் இவரோ
தங்கரத தேரிவரோ
மூச்சுப்பட்டா
நோகுமுன்னு மூச்சடக்கி
முத்தமிட்டேன் நிழலு பட்டா
நோகுமுன்னு நிலவடங்க
முத்தமிட்டேன்
தூங்கா மணி
விளக்கே தூங்காம
தூங்கு கண்ணே ஆச
அகல் விளக்கே அசையாம
தூங்கு கண்ணே
ஆராரோ ஆரீராரோ
ஆரீரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ
ஆரீரோ ஆரீராரோ
error: Content is protected !!