Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ ( இரண்டாம் பாகம் )

ஓசை ❤️ 7 ( இரண்டாம் பாகம் )

அன்று இரவு நிம்மதியாய் அனைவரும் உறங்கி இருக்க ஒருவர் மட்டும் கோவமாக தூங்காமல் இருந்தார்… அது கிரிஜாவை தவிர்த்து வேறு யாராக இருக்க முடியும்… கடைசி வேளையில் தன் மகன் தன்னை அழைப்பான் என நம்பினார்…

இல்லை என்றால் நந்தினி எதாவது செய்து தன்னை வர வைத்து விடுவாள் என…. ஆனால் எதுவும் நடக்கவில்லை.. நந்தினி அழைத்து என்னால் எதுவும் செய்ய முடியவில்லை… யாரும் என் பேச்சை கேட்கவில்லை… என்று கூறி வைத்துவிட்டாள்….



Advertisement

அப்போது இருந்தே கோவத்திப் தான் இருந்தார் கிரிஜா….

Advertisement

அடுத்த நாள் காலை அனைத்தும் நன்றாக சென்று கொண்டு இருந்தது… முதலில் சுபாவும் மித்ராவும் வேலை செய்து கொண்டு இருக்க பிரியாவும் வந்து சேர்ந்தாள்….

Advertisement

அவளை போய் உட்கார சொன்னனர் சுபாவும் மித்ராவும்… ஆனால் அவள் கேட்கவில்லை…. சுபா அவளை இழுத்து கொண்டு போய் கர்ணன் அருகில் அமர வைத்துவிட்டு அவனிடம் “உன் பொண்டாட்டியை பத்திரமா பாத்துக்கோ… நாங்க வேலை முடிக்குற வரை அவ எழுந்திரிக்க கூடாது” என்று கூறி உள்ளே சென்று விட்டாள்….

Advertisement

காலை உணவு முடித்து விட்டு அனைவரும் பேசிக்கொண்டு இருந்தனர்… சுபா மேலே சென்று துணி மடித்து வைத்து வருகிறேன் என்று கூறிவிட்டு மேலே சென்றாள்…

மேலே சென்றவள் துணி மடித்து கொண்டே தன் மாமனுக்காக பாட்டு பாடி கொண்டு இருந்தாள்

இந்த மாமனோட மனசு

மல்லியப்பூ போலே பொன்னானது

இந்த வண்ண மயில் அதனால்

எண்ணியது போலே பூச்சூடுது

குத்தால குளுமையும்

கூடி வருது

சந்தோஷ நெனப்பொரு

கோடி வருது

சொல்ல வார்த்தை ஏதும் இல்லை

மாமனோட

ஹே மாமனோட மனசு

மல்லியப்பூ போலே பொன்னானது

அப்போது அர்ஜுனன் எதோ எடுப்பதற்காக அறைக்கு வந்தான்… இவள் பாடி கொண்டு இருப்பதை கேட்டு அப்படியே நின்று விட்டான்… சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தவன் பின்பு மெதுவாக அவள்  பின் சென்று அணைத்து கொண்டான்…

முதலில் பயந்தவள் அவளின் மாமனின் வாசம் உணர்ந்து நன்றாக அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்…

“என்ன அம்மு… காலைல நான் எழுறதுக்கு முன்னாடியே எழுந்து போயிட்ட… நேத்து நைட் லேட்டா தானு தூங்குனோம்…. ஏன் சீக்கிரம் எழுந்த அப்புறம் பாட்டு எல்லாம் பலமா இருக்கு….” என்று அவளின் தோளில் தன் தாடையை பதித்தவாரு கேட்டான்….

“அச்சோ மாமா… லேட்டா எழுந்து… வீட்டுல யாரு வேலை எல்லாம் பாப்பா…  மித்ராவும் பாப்பா வெச்சு இருக்கா… அவ எப்படி எல்லா வேலையும் செய்வா… பாத்தா எனக்கு முன்னாடி எழுந்து எல்லாம் பண்ணிட்டு இருந்தா போக சொன்னா கூட போகல… “என்று கூறி “அப்புறம் என் மாமாவுக்காக நான் பாடம யார் பாடுவா” என்று கேட்டாள் …

“சரி விடு அம்மு… அப்டியே மாமனை கொஞ்சம் கவனி” என்று உச்சியில் முத்தமிட்டு கேட்டான்….

அவளோ அவன் பக்கம் திரும்பி அவன் நெஞ்சில் முத்தமிட்டு விட்டு அப்படியே சாய்ந்து கொண்டாள்…. அதற்குள் கீழே இருந்து வாணன் அழைத்ததால் அர்ஜுனன் மனமே இன்றி அவளை பிரிந்து அவளின் இதழை களவாடி விட்டு தான் சென்றான்….

அவன் சென்ற பின்பும் வெட்கத்தோடு நின்று இருந்தவள் தன் தோளை யாரோ தொட்டு கூப்பிடும் போது தான் சுயநினைவு வந்தாள்….

தன்னை யார் அழைக்கிறார்கள் என்று திரும்பி பார்த்தவள் தன்னையே கேலி புன்னகையுடன் பார்த்து கொண்டு இருந்த மித்ரா, ஜனனி, கண்மணி,  பிரியா நால்வரை பார்த்ததும் முகத்தை மூடி நின்று விட்டாள்…. அவளை சிறிது நேரம் ஓட்டி கொண்டு இருந்தவர்கள் கீழே செல்லலாம் என்று நினைத்து வெளியேறும் போது கீழே சத்தம் கேட்டு வேகமாக ஐவரும்  கீழே ஓடினர்…

அங்கு கிரிஜா கோவமாக கத்தி கொண்டு இருந்தார்… ஆண்கள் அனைவரும் கோவமாக பாத்து கொண்டு இருக்க நந்தினி யாருக்கு வந்த விருந்தோ என ஓரமாக நின்று இருந்தாள்….

பாலா அவரை அடித்தே துரத்தி இருந்தார்…. அவர் பேச்சை கேட்டு அனைவரும் அவரை ச்சீ என நினைத்தனர்…. காலையில் இருந்த சந்தோசத்தை மொத்தமாக துடைத்து எரிந்து விட்டு சென்று இருந்தார்…

நந்தினி இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நின்று இருந்தாள்…. அவளை பார்த்து வாணன் வெறுத்தே விட்டான்… அனைவரையும் அன்பால் ஆழ்ந்த நந்தினி இவள் இல்லை… தற்போது பணம் பணம் என அதிலேயே மூழ்கிவிட்டாள்… அனைத்தும் கிரிஜாவின் போதனையே….

பின் குழந்தைகள் தான் அனைவரையும் திசை திருப்பி இருந்தனர்…. ஆனால் காலையில் இருந்த சந்தோசம் கொஞ்சம் கம்மி தான் ஆகி இருந்தது…

அந்த நாள் நல்ல நாள் இல்லை அதனால் தான் கர்ணன் சுப்ரியா மறுவீட்டு விருந்து அடுத்த நாள் ஏற்பாடு செய்து இருந்தனர்….

அந்த நாள் அனைவரும் அர்ஜுனன் வீட்டிலேயே தங்கினர்….

வாணன் நந்தினியுடன் பேசுவதையே நிறுத்தி இருந்தான்… அவளும் பேச முற்படுகிறாள்… ஆனால் வாணன் பேசுவதே இல்லை… அது மட்டுமின்றி அவன் மொட்டை மாடியில் தான் உறங்குகிறான்….

வர்ணன் இருக்கும் அறையில்

அருனேஷ் தூங்கி கொண்டு இருந்தான்…  ஜனனி அவனை தூங்க வைத்து கொண்டு இருக்க வர்ணன் கார்த்திகாவை தன்னோடு அணைத்து படுத்து இருந்தான்…

ஒரு வாரமாக ஜனனி கொஞ்சம் கோவமாகவும் மனது ஒருநிலையில் இல்லாமல் தான் இருந்தாள்…

வர்ணன் என்ன கேட்டும் அவனிடம் சொல்ல மறுத்துவிட்டாள்… ஆனால் இன்று கேட்டே தீருவேன் என்ற ரீதியில் அமர்ந்து இருந்தான் வர்ணன்…

அவளும் தயங்கி கொண்டே அருனேஷை தொட்டிலில் படுக்க வைத்து விட்டு வந்தாள்…. அவளை தன் அருகில் அமர வைத்தவன் “என்ன தான் ஆச்சு ஜானு… ஏன் ஒரு வாரமா நீ ஒழுங்காவே இல்ல… உன்னை யாரோ எதோ சொன்னாங்களா… என்ன ஆச்சு”… என்று கோவமாகவே கேட்டான்….

“அது மாமா.. ஒன்னும்…” என்று கூறவந்தவளை தடுத்து “உண்மைய மட்டும் தான் கேட்டேன் ஜனனி” என்று கோவமாக கூறினான்..

அவனை அணைத்து கொண்டு கூற ஆரம்பித்தாள்… “மாமா உங்க அண்ணி இத்தனை நாள் எல்லார் கிட்டயும் திமிரா நடந்தாலும் என்கிட்ட ஒழுங்கா தான் இருந்தாங்க… ஆனா ரெண்டு வாரமா என்னையும் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க… அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாம அங்கயும் இங்கயும் போயிட்டு போயிட்டு வரதுனால வேலை சரியா செய்ய முடியல…. நானும் என்னால முடிஞ்ச அளவு செஞ்சி வெச்சிட்டு தான் போறேன்… ஆனா அவங்க அவங்களோட சித்தி பேச்சை கேட்டு இப்போ எல்லாம் திட்டிட்டே இருக்காங்க…

நானும் அமைதியா போயிடலாம்னு ஒரு வாரம் இருந்தேன்… ஆனா சொத்தை வெச்சு திட்டுறாங்க மாமா… அவங்களுக்கு அண்ணா சொத்து பிரிச்சு தந்தாங்கள… ஆனா எனக்கு அவங்களை விட சொத்து கம்மியா இருக்குனு… அதை கூட விட்ருவேன் ஆனா அவங்களுக்கு பிரச்சனைனா அண்ணன் தம்பி மூனு பேர் இருக்காங்களாம் ஆனா எனக்கு யாரும் இல்லையாம்…. அப்பாவுக்கு உடம்பு சரி இல்லனு சொல்லிட்டு நான் எங்க வீட்டுக்கு போய் சும்மா உட்காந்து இருக்கேன்னு குத்தி காட்டிட்டே இருக்காங்க…” என்று அவனின் நெஞ்சில் சாய்ந்து அழுதவாறே கூறினாள்…

இதை கேட்டு வாணனுக்கு உடம்பு இறுகி கோவமாக நந்தினியிடம் சண்டையிட சென்றவனை “ப்ளீஸ் ப்ளீஸ் மாமா எதுவும் கேட்காதீங்க.. அம்மாவும் அப்பாவும் இங்க தான் இருக்காங்க…. தெரிஞ்சா கஷ்டப்படுவாங்க… எதுவும் கேட்காத மாமா… நீ இப்படி பண்ணுவேன்னு தான் நான் உன்கிட்ட சொல்லல…  ப்ளீஸ் எதுவும் பண்ணாத” என்று கூறி அவனை படுக்க வைத்து அவனின் நெஞ்சில் சாய்ந்து அழுதவாறே உறங்கிவிட்டாள்…

வாணனும் சிறிது நேரம் யோசித்தவன் எதோ ஒரு முடிவை எடுத்துவிட்டு தன்னை அணைத்து உறங்கும் மனைவியை பார்த்துவிட்டு அவள் உச்சியில் முத்தமிட்டுவிட்டு அவனும் உறங்கிவிட்டான்…

அர்ஜுனன் அறை…

எப்போதும் போல் அவர்களின் தனி அறையில் இருவரும் அமர்ந்து இருக்க அர்ஜுனன் அவள் மடியில் படுத்து இருந்தான்…. இன்று அவள் முகம் யோசனையில் இருக்க சிறிது நேரம் அமைதியாய் இருந்தவன் அவளை தன் முகம் பார்க்க செய்து “அம்மு என்ன பிரச்சனை… ஏன் யோசனைலயே இருக்க” என்று கேட்டான்…

“அது மாமா… ஜனனி ஒரு வாரமா சரியாவே இல்ல… கொஞ்சம் கோவமா வருத்தமாவே தான் இருக்கா… கேட்டா சொல்ல மாட்டிங்குறா…. ஆனா நந்தினி அண்ணி அவளை குத்தி காட்டி பேசிட்டு இருந்தாங்க… அப்போ அவளுக்கு தெரியாம கேட்டேன்…. அவளை விட இவங்க கிட்ட பிறந்த வீட்டுல இருந்து சொத்து வந்து இருக்கு… எனக்கு அண்ணன் தம்பி மூனு பேர் இருக்காங்க உனக்கு யார் இருக்கா அப்டினு… ஜனனி அழுதுட்டு நின்னுட்டு இருக்கா… அவ பேசுனா பேசிடுவா… ஆனா எனக்கு தெரிஞ்சி இப்போ அவ பேசாம இருக்க காரணம் அவங்க அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாதது…. முக்கியமா குடும்பம் பிரியமா இருக்க தான் பேசாம இருக்கா… அவளை இப்படி நான் பாத்ததே இல்ல மாமா” என்று சோகமான குரலில் கூறினாள்….

“நீ ஜனனி கிட்ட சொல்லு அம்மு… இனிமே அவங்க எதோ பேசுனாங்களோ திருப்பி திட்ட சொல்லு… அவளுக்கு அண்ணன் தம்பி நாங்க இருக்கோம்னு சொல்லு அழுகாம இருக்க சொல்லு” என்று கூறினான்…. அவளும் சரி என்று தலை ஆட்டினாள்

சிறிது நேரம் அமைதியாக இருக்க அர்ஜுனனே அதை கலைத்தான்…. “அம்மு ஒரு பாட்டு பாடேன்….” என்று கேட்டான்

அவளும் போலியாக முறைத்தாள்…. பின் அவளே பாட ஆரம்பித்தாள்….

உன்னாலே எந்நாளும்

என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம்

என் மூச்சில் சேருதே

உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி

என் கண்கள் ஓரம் நீா்த்துளி

உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!