Skip to content
Post Views: 903

Advertisement
Advertisement
Advertisement
டெல்லி
அறைக்கு சென்ற நிரவி முதல் வேலையாக ரியாஸுக்கு தான் ஊருக்கு அழைத்து செல்ல அர்ஜுனன் வந்துள்ளதாக செய்தி அனுப்பினான்… ஆனால் அவன் வேலையாக இருந்ததால் கவனிக்கவில்லை… மதியம் வரை கவனிக்கவில்லை… அவளுக்கு கஷ்டமாக இருந்தது… மதியம் ஒரு மணிகே உணவை உண்டு விட்டு ஊருக்கு செல்ல தயாராகி அறையில் அமர்ந்து இருந்தாள்… ஆனால் அவள் முகம் வாட்டமாக இருந்தது… ஆஷா அவளை பார்த்து “என்ன ஆச்சு பாப்பா ஏன் முகம் இப்படி இருக்கு… திருவிழா முடிச்சிட்டு விஷேஷம் முடிச்சிட்டு இங்க தானு வர போற…. விசேஷத்துக்கு நாங்களும் தானு வர போறோம்… ரியாஸ் கிட்ட நான் சொல்லிடுறேன்… நீ கவலைப்படாம கிளம்பு… அண்ணா அங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க… வா கிளம்பலாம்…” என்று அழைத்து கொண்டு கீழே சென்றார்…
Advertisement
அர்ஜுனன் அங்கு தயாராகி இருக்க நிரவியிடம் குட்டிமா கிளம்பலாமா என்று கேட்டார்… அவளும் சோகமாக தலையசைத்தாள்.. அப்துல் கார் எடுக்க அர்ஜுனன் அவர் அருகில் அமர ஆஷாவும் நிரவியும் பின்னால் அமர்ந்து கொண்டனர்…
விமான நிலையம் அடைந்து இருக்க விமான அறிவிப்பு வர இன்னும் பத்து நிமிடமே மிச்சம் இருந்தது… நிரவி போனை பார்த்தவாறு ஆஷாவின் தோளில் சாய்ந்து இருந்தாள்… அப்போது தான் அவசர அவசரமாக ரியாஸ் ஓடி வந்தான்… கால் மணி நேரம் முன்பு தான் செய்தி வந்த அறிகுறியை பார்த்தான்.. பார்த்ததும் செய்து கொண்டு இருந்த வேலையை தனக்கு கீழ் வேலை பார்ப்பவரிடம் கூறிவிட்டு வேக வேகமாக விமான நிலையம் ஓடி வந்து இருந்தான்…
ரியாஸ் வந்ததை முதலில் அப்துல் தான் பார்த்தார்… உடனடியாக அதை அர்ஜுனனிடம் தான் காட்டினார்… அவரும் அதை ஆச்சர்யமாய் பார்த்தார்.. நிரவி இன்னும் அவனை பார்க்கவில்லை… வேகமாக ஓடி வந்தவன் நேராக அவள் முன் தான் நின்றான்…
அவனை பார்த்ததும் எழுந்து நின்றாள்… அவனோ “வா என்கூட” என்று கூறி கொஞ்சம் தள்ளி அழைத்து வந்தான்… அவளும் அவன் பின்னால் செல்ல கொஞ்சம் தள்ளி நின்ற ரியாஸ் “பாப்பு ம்மா நீ ஓகே தானு… உனக்கு ஊருக்கு போக பிடிக்கலனா சொல்லிடு… நான் மாமா கிட்ட பேசுறேன்… உன் விருப்பம் தான்… சொல்லு ஊருக்கு போறியா இல்லையா” என்று கேட்டான்..
“இல்லை மாமு நான் ஊருக்கு போறேன்… எனக்கு என்ன பயம் என் ஊருக்கு போக… ரெண்டு வருஷமா திருவிழாக்கு போகல தான்… ஆனா அய்யனாரோட ஆசி எனக்கு எப்பவும் கிடைக்கும்… நீ கவலைப்படாத… நான் அங்க சூப்பரா இருப்பேன்… நீங்க இல்லாம ஒரு வாரம் தான் இருப்பேன்.. பங்சனுக்கு நீங்க வந்துருவிங்க… எனக்கு என்ன கவலை.. நான் முன்ன இருந்த நிரவி இல்லை.. ஐபிஎஸ் ஆபீஸர் ரியாஸோட ட்ரைனிங் நான் எதுக்கும் கவலைப்பட மாட்டேன்… வருங்கால கலெக்டர்… தைரியமா இருப்பேன் மாமு.. யூ டோன்ட் பீல்…” என்று தைரியமாக கூறினாள்..
“ஓகே ஓகே நீ கவலைப்படுவியோனு தான் கொஞ்சம் பாசமா பேசுனேன்… மத்தபடி பாசம் எல்லாம் இல்லை… போய் அங்க உன் சேட்டை செய்யாம ஒழுங்கா ஒர்கவுட் பண்ற குட்டச்சி… ஒருவாரம் ஜாலியா இருப்பேன் இம்சை…” என்று கூறி கொண்டே மூவர் இருக்கும் இடத்திற்கு ஓடினான்… நிரவியோ டேய் என சத்தமிட்டு கொண்டு அவனை விரட்ட இருவரும் ஆஷாவை சுற்றி கொண்டு ஓடினர்…
அப்துல் தான் “பாப்பா அவன் கிடக்குறான்.. மாமா உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்…” என்று கூறி அவளை அணைத்து கொண்டார்… அப்போது விமான அறிவிப்பும் வர அர்ஜுனன் நிரவிகா இருவரும் விமானம் ஏறினர்…
அவர்கள் சென்ற விமானம் கோவையில் தரையிறங்க இரண்டு வருடம் கழித்து தமிழ்நாட்டு மண்ணில் கால் வைக்கிறாள்… அவர்களை அழைத்து செல்ல சசி வந்து இருக்க “சசிப்பா” என்று அழைத்து கொண்டே ஓடி சென்று அவரை கட்டிக்கொண்டாள்…
அர்ஜுனனுக்கு தன் மகள் தன்னை இவ்வாறு அணைக்கவில்லையே என்ற ஏக்கம் இருந்தாலும் தான் செய்த செயல் அவளை கஷ்டப்படுத்தி இருக்கும் என அறிந்து அமைதியாக இருவரின் பாசப்பிணைப்பை பார்த்து கொண்டு இருந்தான்… இருவரும் சந்தித்து இரண்டு வாரம் தான் ஆகி இருந்தாலும் என்னவோ சந்தித்து பல வருடங்கள் ஆகி இருப்பதை போல் பாச மழையை பொலிந்து கொண்டு இருந்தனர்….
ஐந்து நிமிட கொஞ்சலுக்கு பின் சசி தான் நிரவிம்மா வா வீட்டுக்கு போய் பேசிக்கலாம்… அண்ணா நீங்களும் வாங்க… என்று நீராவியின் பேக்கை வாங்கி கொண்டு சென்றான்… நிரவியும் சிறுபிள்ளை போல அவன் கையை பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள்… அர்ஜுனனும் இருவரையும் ரசித்து கொண்டு பின் சென்றான்…
அய்யனார்புரம்
மூவரும் வீட்டிற்குள் வர “அக்கா” என அழைத்து கொண்டே சசி கர்ணன் பிள்ளைகள் மூவரும் அவளை அணைத்து கொண்டனர்… அவளும் மூவரையும் கொஞ்சி விட்டு நிமிர்ந்து பார்க்க சுப அவள் அருகில் வந்து அவள் நெற்றியில் முத்தமிட்டாள்… நிரவி அதை மறுக்கவெல்லாம் இல்லை அமைதியாய் ஏற்று கொண்டாள்… அதன் பின் வீட்டினரிடம் பேசி கொண்டு இருந்த போது சசி தான் “குட்டிமா உன் போன் எங்க… அங்க ஒருத்தன் புல் கோவத்துல இருக்கான்… அவன் கிட்ட பேசிட்டு…. எனக்கு போன் பண்ணி திட்டுறான்” என்று சிரித்து கொண்டே கூறினான்….
அதன்பின் தான் “ஐயோ அந்த தபரா மண்டையன் வேற கத்துவானே…” என்று சத்தமாக புலம்பி கொண்டே ரியாஸுக்கு அழைத்தாள்…. அவன் இரண்டு முறை வேண்டும் என்றே எடுக்காமல் இருக்க இவளுக்கு கோவம் வந்து விட்டது… இவளும் கோவமாக ஆஷாவிற்கு அழைத்து “அத்தம்மா அவன் வீட்டுக்கு வந்தானா மறந்து போய் போன் பண்ணி அவனுக்கு சொல்லல… அதுக்கு ஓவரா பண்றான்… இப்போ போன் பண்ணா எடுக்க மாட்டிங்குறான்… வீட்டுல இருந்தா போன் குடுங்க அந்த தபரா மண்டையன் கிட்ட” என்று கோவமாக கூறினாள்…
“குட்டிமா அவன் இன்னும் வீட்டுக்கு வரல… ஏன் உனக்கு டென்ஷன்.. அவன் வந்தா நான் பேசிக்குறேன்… நீ ரெஸ்ட் எடு… இந்த பையன் சொன்னானு வாக்கிங் போக காலைல எந்திரிக்காதா.. ஒரு வாரம் ஜாலியா என்ஜாய் பண்ணு… சாப்பிட்டு தூங்கு டா… இங்க இவன் கிட்ட நான் பேசிக்குறேன்…” என்று கூறி வைத்து விட்டார்…
இருந்தும் யாருக்கோ அவள் யாருக்கோ அழைக்க அந்த பக்கம் எடுத்ததும் “சோட்டி தும் இஸ் சமாய் கியோன் போன் கர் ரஹீ ஹோ???” (இந்த நேரத்துக்கு ஏன் டா கால் பண்ணி இருக்க) என்று குரல் கேட்டது
அதற்கு இவளோ “நஹி பாய் அப்க்கா தோஸ்த் போன் கா ஜவாப் கியோன் நஹின் டீ ரஹா ஹை ? … முஜே பாத்தா ஹை வாஹ் தும்ஹாரே சாத் ஹோக உசே போன் கராணே கே லியே ககன… குட் நைட் பாய்…” (ஒன்னும் இல்லை அண்ணா… உங்க பிரென்ட் போன் எடுக்கல… அவன் உங்க கூட தான் இருக்கான்னு தெரியும்… ஒழுங்கா போன் எடுக்க சொல்லுங்க… குட் நைட் அண்ணா) என்று ஹிந்தியில் கூறிவிட்டு போன் வைத்தாள்…
அவள் வைத்த இரண்டு நிமிடத்தில் அவளுக்கு அழைப்பு வர கேலி சிரிப்புடன் அழைப்பை ஏற்றாள்…. இவள் எடுத்ததும் “ஹே பாகல்(பைத்தியம்)… உன் பாயிக்கு ஏன்டி போன் பண்ண… அவன் எனக்கு போன் பண்ணி கத்துறான்… நான் வீட்டுக்கு தான் கிளம்பிட்டு இருந்தேன்… வீட்டுக்கு போய் பேசிக்கலாம் அப்படினு இருந்தேன்…. இவனுக்கு மட்டும் தான் பண்ணியா… இல்ல உன் அத்தைக்கும் பண்ணி வெச்சு இருக்கியா” என்று கேட்டான்..
அவளோ ஆமா அத்தைக்கும் தான் பண்ணி இருக்கேன்… என்ன உனக்கு போன் பண்ண மறந்துட்டேன்.. அது தான் சசிப்பா சொன்னதும் உனக்கு போன் பண்ணேன்ல… நீ தான் பெரிய இவன் மாதிரி பண்ண.. அது தான் என் பாயிக்கு போன் பண்ணேன்… நான் உன்மேல கோவமா இருக்கேன் போடா என்று கூறி வைத்து விட்டாள்…
அங்கு டெல்லியில் ரியாஸோ நியாயப்படி நாம தான் கோவப்படனும்.. “இந்த குட்டச்சி நமக்கு முன்னாடி கோவமா பேசி தப்பிச்சிட்டா..” என்று சிரித்து கொண்டே தன் பைக்கில் ஏறும் போது அவனை உரசியபடி ஒரு ஜீப் வந்து நின்றது… அதை பார்த்து சிரித்த ரியாஸ் அவன் சோட்டி போன் பண்ணா வந்துருவான் இவன் வேற.. அவளையே சமாளிக்க முடியல இதுல இவனை வேற சமாளிக்கனுமா… என்று நினைத்து கொண்டு மானசீகமாக தலையில் அடித்து கொண்டான்..
“போன் பண்ணா எடுக்க மாட்டியா டா” என்று அவன் ஹிந்தியில் கேட்டான்… அதற்கு ரியாஸோ “டேய் பாகல் நியாயமா நான் தான் கோவப்படனும்” என்று ஹிந்தியில் கூறி நடந்த அனைத்தையும் கூறினான்… அதை கேட்டு சிரித்த அவன் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பிவிட்டான்…. இவனும் வீட்டிற்கு சென்றுவிட்டான்.. அங்கு ஆஷாவும் அப்துலும் அவனை திட்ட அவர்களை சமாளித்து விட்டு அறைக்கு சென்றவன் “ராட்சசி”என்று நிரவியை திட்டி விட்டு உறங்கிவிட்டான்….
அங்கு வீட்டில் அனைவருக்கும் ஓரளவு ஹிந்தி தெரியும் என்பதால் நிரவியின் சேட்டையை ரசித்து கொண்டு தான் இருந்தனர்… நிரவிக்கு தூக்கம் வருவது போல் இருக்க கொட்டாவி விட்டு கொண்டே இருந்தாள்… அதை கவனித்த சுபா “குட்டிமா போய் பிரெஷ் ஆகிட்டு வா சாப்பிட்டு தூங்கலாம்… என்று கூறி அறைக்கு அனுப்பி வைத்தாள்… அப்போது தான் சிவனேஸ் வீட்டிற்குள் வர அவனை பார்த்து சிரித்து விட்டு அறைக்கு சென்றுவிட்டாள்…
அவனுக்கு தான் கொஞ்சம் குற்றவுணர்வாக இருந்தது…. இருந்தும் தன்னை மீட்டு கொண்டு தன் மனைவி எங்கு என்று தான் தேடினான்… அவளோ நந்தினி சோபாவில் அமர்ந்து இருக்க அவருக்கு கீழ் கால் நீட்டி அமர்ந்து தலையை அவர் மடி மேல் வைத்து கொண்டு அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்… அவனை பார்த்ததும் எழுந்து நிற்க பார்க்க வேகமாக அவள் அருகில் வந்து கை தாங்கலாக நிற்க வைத்தான்…… “ரிதும்மா எத்தனை தடவை சொல்றது வேகமா எழுந்துக்காத…” என்று கேட்டு அவளை நந்தினியின் அருகில் அமர வைத்தான்…. “உன்னை யாரு கீழ உட்கார சொன்னது…. இப்போ எழுந்துக்க கஷ்டமா இருக்குல” என்று கேட்டான்…
“ஐயோ மாமா… மேல உட்கார எனக்கு கஷ்டமா இருக்கு… கால் நீட்டி உட்காந்தா தான் நல்லா இருக்கு… இது ஒரு எக்சர்சைஸ் தான்… போய் முதல்ல குளிச்சிட்டு வாங்க” என்று அவனை அனுப்பிவிட்டாள் ரித்திகா… அவனும் சிரித்து கொண்டே மேல் ஏறி சென்றான்….
அவன் மேலே செல்லும் போது தான் நிரவி ப்ரெஷாகி விட்டு கீழே வர அவள் அறையில் இருந்து வெளியில் வந்து ரித்திகாவின் அறையை கடக்க இருவரும் நேருக்கு நேர் பார்த்து கொண்டனர்… நிரவியோ எந்த வித தயக்கமும் இன்றி “நல்லா இருக்கீங்களா மாமா….” என்று கேட்டாள்…
“நான் நல்லா இருக்கேன் குட்டி… நீ எப்படி இருக்க உன் ஸ்டடிஸ் எப்படி போகுது…” என்று பாசமாக கேட்டான்…
அவளும் “நான் நல்லா இருக்கேன் மாமா… ஸ்டடிஸ் நல்லா போகுது… நீங்க ப்ரெஷாகி கீழ வாங்க… நானும் கீழ போறேன்…..” என்று கூறி கீழே சென்றுவிட்டாள்… சிவா அவள் போவதை பார்த்து கொண்டு இருந்தவன் தானும் குளித்து விட்டு கீழே சென்றான்…
வர்ணன் குடும்பம் மட்டும் நாளை வருகிறது… மற்றவர்கள் எல்லாம் அர்ஜுனன் வீட்டில் தான் இருந்தனர்… செண்பகம் பாட்டி அனைவருக்கும் உருண்டை சோறு கொடுத்தார்… நீண்ட நாள் கழித்து இவ்வாறு சாப்பிடுவதால் அனைவரும் சந்தோசமாக சாப்பிட்டு கொண்டு இருந்தனர்…
ஆரவ் தன் மேற்படிப்பிற்காக ஜெர்மனி சென்று இருந்தான்… திருவிழா போது மட்டும் தான் இந்தியா வருவான்… இந்த முறை படிப்பை முடித்து விட்டு நாளை ஊருக்கு வருகிறான்…. முகுந்தன் குடும்பம் அவர்கள் வீட்டிற்கு கிளம்பி இருக்க வாணன் நந்தினி இருவரும் அவர்கள் அறைக்கு சென்றுவிட்டனர்…
இப்போது இருக்கும் வீட்டிலேயே பிள்ளைகளுக்காக மொட்டை மாடியில் மேலும் நான்கு அறைகள் கட்டி இருந்தனர்.. அதற்கு மேல் மொட்டை மாடி போட்டு விட்டனர்… அர்ஜுனன் சுபா தங்கள் ஆஸ்தான அறையில் அமர்ந்து இருக்க அர்ஜுனன் அங்கு நிரவி எப்படி உள்ளாள் என கூறி கொண்டு இருந்தார்… “அம்மு நம்ம குட்டிமா எவளோ சந்தோசமா இருக்கா தெரியுமா… அவ அவளா இருக்கா… அவளை தாங்க அங்க மூனு பேர் இருக்காங்க… அவ கேட்குறதுக்கு முன்னாடி வாங்கி தர ஆஷா அப்துல் இருக்காங்க… அவளை தைரியமா எல்லாத்தையும் செய்ய சொல்றதுக்கு அவளை கண்டிக்குற இடத்துல கண்டிக்குறதுக்கு ரியாஸ் இருக்கான்… அவ அங்க மகாராணியா இருக்கா…” என்று சந்தோசமாக கூறினான்….
“குட்டிமா சந்தோசமா இருந்தாலே போதும் மாமா… எனக்கு அதை தவிர வேற எதுவும் வேண்டாம்” என கூறியவள் இன்னொரு விஷயத்தை கேட்க தயங்கினாள்… அவள் முகத்தை பார்த்த அர்ஜுனன் “என்ன அம்மு என்ன விஷயம் கேட்க தயங்குற… என்கிட்ட என்ன தயக்கம் என்னனு சொல்லு” என்று கேட்டான்…
“மாமா சின்ன அண்ணா கார்த்திக்கு வெளிய மாப்பிளை பாக்குறாரு… ஒரு இடம் சரி வர மாதிரி இருக்குனு சொன்னாரு… எனக்கு கார்த்தியை ஆரவுக்கு கேட்க ரொம்ப நாளா ஆசை… ஆனா இப்போ கேட்க தயக்கமா இருக்கு….” என்று தன் விருப்பத்தை கூறினாள்….
அர்ஜுனனோ “திருவிழா முடிஞ்சு பேசிக்கலாம் அம்மு… இப்போ வா தூங்கலாம்…” என்று கூறி அவளை அணைத்து கொண்டு உறங்க ஆரம்பித்து இருந்தான்.. எத்தனை வருடம் ஆனாலும் சுபா அவன் பனியனை பிடித்து தான் உறங்கி கொண்டு இருக்கிறாள்… இருவரின் காதலும் குறைவு இல்லாமல் தான் இருக்கிறது…
error: Content is protected !!