Skip to content
Post Views: 2,791
அத்தியாயம் 29
கண்ணம்மை கர்ப்பமாக இருந்தாள். ஐந்தாம் மாதம் மருந்து குடிக்கும் நிகழ்ச்சி, செட்டிநாட்டு முறைப் படியான சீமந்தம் நச்சாந்துபட்டியில் சிறப்பாக செய்திருந்தார்கள். இப்பொழுது ஒன்பதாம் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தாள். பிரசவத்திற்கு கதிரை பிரிந்து வர முடியாது என்று கூறியதால், அவளது பெற்றோர்கள் தூத்துகுடி வந்து உடன் இருக்கிறார்கள். கண்ணம்மைக்கு ஹிந்தி சீரியல்களில் வர மாதிரி, வளைகாப்பு செய்யனும் என்று ஆசை. அதற்காக தான் அனைவரயும் தூத்துக்குடி அழைத்திருந்தனர்.
Advertisement
வீட்டின் முன்புறம் வண்ண வண்ண விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப பட்டிருந்தது.
ஒரு நாள் முன்பே அனைவரும் வந்துவிட்டனர். ஜே .. ஜே.. என்று இருந்தது அவர்கள் வீடு பேச்சு சத்தமும் கலாட்டாவுமாக.
Advertisement
Advertisement
“வளைகாப்பு என்றால் வளையல் போட வேண்டும் .. அவ்வளவு தானே” என்றார் தெய்வா.
“‘கோத் பாராய்’ அப்படி தான் சொல்லுவாங்க அத்தை. அப்படினா மாசமா இருக்க பெண்ணின் மடியில் எல்லாரும் பரிசு பொருள் வைத்து ஆசிர்வதிச்சு அவள் மடியை நிரப்பனும்னு அர்த்தம்.” என்று விளக்கம் கூறினாள் கண்ணம்மை.
Advertisement
“ஓ.. அப்புறம்” என்றாள் ஆர்வமாக வள்ளிமயில்.
“நிறைய இனிப்பு வகைகள் பலகாரம் எல்லாம் செய்து தட்ல அடுக்கி வைக்கணும்”
“கொஞ்சம் ஸ்வீட் நாங்க வாங்கிட்டு வந்திருக்கோம்.. ஆனால் என்ன என்ன ஸ்வீட் வைக்கணும்னு சொல்லு கண்ணா.. போய் வாங்கிட்டு வந்துடலாம்” என்றார் சாலா.
“அது கடையில எல்லாம் வாங்க கூடாது அத்தை, ஹிந்தி சீரியலில் எல்லாம் பொறக்க போற குழந்தைக்காக குழந்தையோட பாட்டி, பெரியம்மா, அத்தை எல்லாரும் ஆசையாக அவங்களே பலகாரம் செய்வார்கள்” என்று முதல் குண்டை போட்டாள்.
“ஆங்.. “ என்று வள்ளியும் தெய்வாவும் வாயை பிளந்தார்.
சாலா தான், “ அதுக்கு என்ன கண்ணா.. நாங்க இத்தனை பேரு இருக்கோம்ல… செஞ்சிடுலாம்” என்றார்.
“சரி.. என்ன என்ன செய்யனும்னு சொல்லு கண்ணா… ஆரம்பிச்சிடலாம்” என்றார் அன்னம்.
“ஏழு வகை ஸ்வீட் செஞ்சா போதும் அத்தை.. சாப்பாடு எல்லாம் வெளியே சொல்லியாச்சு”
“ அப்ப சரி.. இனிப்பு தானே.. பண்ணிடலாம்” என்றார் முருகம்மை ஆச்சி.
“ரசகுல்லா, குலாப் ஜாமுன்,மோத்திச்சூர் லட்டு, ஜிலேபி, பாதுஷா, தூத் பேடா, சந்திரகலா.. இது போதும்.. அப்புறம் வேற வேணா நீங்க சேர்த்து செஞ்சுக்கலாம், அது உங்க பிரியம்” என்றாள் கண்ணம்மை.
அணைத்து பெண்களும் ஆ என்று அவளையே பார்த்திருந்தனர். இவர்களை சங்கடமாக பார்த்தார் முத்து ஆச்சி.
“ஏம்மா ஸ்வீட் கடை ஆரம்பிக்க போறியா…? எனக்கு நீ சொன்ன இதை எல்லாம் சாப்பிட தான் தெரியும்” என்றாள் நல்லம்மை.
லிஸ்ட் கேட்ட சாலாவிற்கே தலை சுத்தியது.
“இதுயெல்லாம் எங்களுக்கு பண்ண தெரியாதே… இதுல குலாப் ஜாமுன் வேணா செய்வோம்” என்றார் அன்னம் கவலையாக. மாசமா இருக்கும் பொண்ணு கேட்டு எப்படி செய்து கொடுக்காமல் இருப்பது என்று வருத்தமாக இருந்தது அனைவருக்கும்.
கண்ணம்மை பாவமாக முகத்தை வைக்கவும், கதிர் “ஏன் கண்ணு கவலை படற.. நான் இருக்கேன்.. இப்ப பாரு” என்று அனைவரயும் அழைத்தான்.
“பெரியம்மா,மம்மி ,பெரியம்மம்மி, உங்க மம்மி, அன்னும்மா, பெரிய அண்ணி, சின்ன அண்ணி, ஏழு பேரு கணக்கு. எல்லாரும் அவங்க அவங்க கணவர்மார்களை கூட்டிட்டு வந்து நில்லுங்க” என்றான்.
அனைவரும் ஜோடிகளாக நிற்கவும், ஒரு கண்ணாடி ஜாடியில் இனிப்பு பெயர்களை எழுதி போட்டிருந்தான். “ஆளுக்கொரு சீட்டை எடுங்க.. அவங்க அவங்களுக்கு வந்திருக்க இனிப்பை அவங்க செய்யனும். இது ஜோடிகள் இனிப்புகள் போட்டி” என்று ஒரு போட்டியை அறிவித்து, ஆளுக்கொரு ஸ்வீட் செய்யும் வேலையையும் தலையில் கட்டி விட்டான்.
“அப்புறம் பாலுவும் சுப்புவும் நல்ல நல்ல கேம்ஸ் எல்லாம் யோசிச்சு ஏற்பாடு பண்ணிடுங்க”
வரிசையாக அனைவருக்கும் வேலைகளை கூறிக்கொண்டிருந்தான்.
“அப்ப நாங்க..” என்றாள் விசாகா ஆர்வமாக.
“விசாம்மா.. நீ குழந்தைகளை எல்லாம் பார்த்துக்கோ.. அப்புறம் எல்லார் செய்ற ஸ்வீட்களையும் டேஸ்ட் பாத்து தட்ல அடுக்கி வைக்கிறது உன் வேலை..
நம்ம டாக்டர் எல்லாரையும் மேர்பார்வை பார்க்கட்டும்.. அவன் சொன்னா மட்டும் தான் எல்லாரும் கேட்டுப்பாங்க”
அனைவரும் நீ என்ன பண்ண போற என்று அவனை பார்த்தனர்.
“என் பொண்டாட்டி டிவி பார்க்கறேன்னு சொன்னா.. ஹிந்தி சீரியல் பார்க்காம அவளை பார்த்துக்கனும்” என்றான் குறும்பாக.
அட்டகாசமாய் தயாராகியது அனைத்து இனிப்பு வகைகளும். இவைகளோடு முருகம்மை ஆச்சி கை முறுக்கும் மாவுருண்டயும் செய்து வைத்துவிட்டார்..
மகளின் சேட்டைகளை கோவப்படாமல் ரசித்து கொண்டாடும் குடும்பத்தை பார்த்து நெகிழ்ந்துவிட்டனர் முத்து ஆச்சியும் அவர் கணவரும்.
நல்லம்மை வள்ளிமயிலின் குடும்பத்தினரையும் அழைத்திருதார்கள்.
.
நல்லமையின் அத்தை அங்கயற்கண்ணி, முருகம்மை ஆச்சியிடம்” நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும் அப்படின்றத்துக்கு உதாரணமா இருக்கு உங்க வீடு.. நல்ல தங்கமான பிள்ளைகள் எல்லாரும்.. இப்படியே ஒத்துமையா வாழனும்” என்றார் ஆத்மார்த்தமாக.
வள்ளிமயிலின் பெற்றோர்களும் மனதார வாழ்த்திவிட்டு சென்றனர்.
விழா சிறப்பாக முடிந்து அனைவரும் மாலை ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
“டாக்டரு.. எப்படி நம்ம தங்கச்சி சமையல் எல்லாம்?” என்று கதிர் கேட்டதற்கு,
“அடுத்து எல்லாரும் அங்க நம்ம வீட்டுக்கு வாங்க.. விருந்து சாப்பிட்டு சொல்லுங்க.. எங்க சமையலை” என்றான் முத்து.
“விசாம்மா.. எப்படி இருக்கு டா வேலை எல்லாம்?” என்றார் ராஜா.
“மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு சித்தப்பா..”
“ஆமா மாமா.. நான் அந்த பக்கம் போனா.. ஆச்சி வீட்டுக்காரர்.. ஆச்சி வீட்டுக்காரர்.. அப்படி தான் கூப்பிடுவாங்க..டாக்டர் அப்படி கூட சொல்றது இல்லை..அங்கே அன்பாலே ஆட்சி செய்றா நம்ம விசா ஆச்சி..” என்றான் முத்து கருப்பன்.
மனைவியின் வெற்றியில் அத்தனை பெருமை அவன் குரலில்.
“அப்புறம் உங்க எல்லார்கிட்டயும் ஒரு விசயம் சொல்லனும் என்று விசாகா இல்லம் ஆரம்பிப்பது பற்றி தெரிவித்தாள். அதில் அனைவரும் தங்கள் பங்கை செய்ய வேண்டும் என்றும் கூறினாள்.”
“போலீஸ்காரரே… உங்க தங்கச்சி வயலும் வாழ்வும்னு ஒரு பக்கம் இருக்கு. உங்க மச்சான்.. கருணை இல்லமேன்னு ஒரு பக்கம் பாட்டு பாடிட்டு இருக்காரு.. நீங்க அஞ்சு பேரும் வேற தாய் மாமா ஆகனும்னு கனவு கண்டுட்டு இருக்கீங்க.. எப்படி போலீஸ்க்காரரே சாத்தியம்?” என்றாள் தனது வழக்கமான ஸ்பீக்கர் குரலில்.
“நம்மள மாதிரி இருக்கறவங்கல நம்பிடலாம் கண்ணு.. இவங்க ரெண்டு பேரும் அமுக்கினி மாதிரி இருந்திட்டுக்கு காதல் கல்யாணம் பண்ணவங்க..தாய் மாமாவா ஒரே சமயத்துல இரட்டை பிள்ளையை பெத்து டபுள் ப்ரோமோஷன் கொடுப்பாங்க.. பாரு ” என்றான் கதிர்.
“எப்பவும் விளையாட்டு தான்.. எவ்வளவு முக்கிய விஷயம் சொல்றாங்க” என்று கண்டித்தார் ராஜா.
“ நாங்க எல்லாரும் உங்க பின்னாடி இருந்து உதவி செய்வோம் முத்து.. நல்ல விசயம்.. “ என்றார் அருண்.
அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
error: Content is protected !!