Skip to content
Post Views: 1,984
கருப்பன் ஆட்டம் 25
அமுதா மயிலை அடித்த பிறகு அய்யனாருடன் அறையில் இருந்து வெளியே சென்று இருந்தார்.
Advertisement
எந்த ஒரு விஷயத்தையும் அவ்வளவு சுலபமாக எடுத்து கடந்து செல்லும் மனப்பக்குவம் மலர்விழிக்கு இல்லை. ஒரு விஷயம் தனக்கு எதிராக தவறாக தோன்றினாள் அதனைப் பற்றி நினைத்து நினைத்து உள்ளுக்குள் புழுங்கி போகும் குணம் கொண்ட மலருக்கு அமுதா பேசிய இந்த வார்த்தைகள் அனைத்தும் தன் மனம் முழுவதும் நிறைந்து கணத்து நிற்கும் பாறாங்கல்லால் மாறிப்போனது.
Advertisement
இரவு நேரம் உணவைக் கூட செய்யாமல் அமுதா கோபமாக ஓரிடத்தில் அமர்ந்து விட, அதனை கவனித்த அய்யனார் தானே சென்று அந்த ஊரில் இருக்கும் சிறிய கடையில் தனக்கும் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் சேர்த்து உணவுகளை வாங்கி வந்து வீட்டில் வைத்தவன் தனக்கு வேண்டியவற்றை எடுத்து சாப்பிட்டு விட்டு மயிலின் அறைக்கு வெளியே நின்று மயிலிடம்,
Advertisement
“மயிலு சாப்பாடு வாங்கியாந்துருக்கேன், நீயும் அந்த பிள்ளையும் சாப்புடுங்க போடுங்க…!” என்று கூறினான்.
Advertisement
“அப்படியா…! என்ன சாப்பாடுண்ணே வாங்கிட்டு வந்த…!”
“கடையில எல்லாம் முடிஞ்சு போச்சாம் கடைசியா இருந்த ப்ரோட்டாவ வாங்கிட்டு வந்தேன்”.
“ஓ சூப்பர்ண்ணே….! நானே உன்ன வாங்கிட்டு வர சொல்லலாம்னு நெனச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள நீயே வாங்கிட்டு வந்துட்ட, ஒன் ஆத்தா செய்ற சோத்த சாப்டு சாப்டு நாக்கு செத்து போச்சு…!” என்றாள் மயில்.
‘இத்தனை அடி வாங்கியும் வாய் கொழுப்பு மட்டும் குறையுதா பாரு…!” என்று கூறிய அமுதா தனக்கு அருகில் கிடந்த தொடப்பத்தை எடுத்து அந்த அறையின் வாசலில் வீசினார்.
அது வந்த வேகத்தை வைத்து வாயை மூடிக்கொண்ட மயில் அய்யனாரிடம் “அண்ணே இப்போதைக்கு நான் வெளியே வந்து புரோட்டாவை எடுக்க முடியாது,
எல்லா பொட்டணத்தையும் கொண்டாந்து இங்க வெச்சிடு”
“அதுல அம்மாவுக்கும் இருக்குடி!”
“ஒரு நாளைக்கு உங்க ஆத்தா சாப்பிடலான்னா ஒன்னும் கொறஞ்சு போயிடாது கொண்டு வந்து வையி” என்றால் மயில்.
அவள் அவ்வாறு கூறவும் தன் தங்கையை நினைத்து புன்னகைத்துக் கொண்டு அறையில் இருந்து வெளியில் சென்ற அய்யனார்…மயிலுக்கும் மலருக்குமான உணவினை இரு தட்டில் போட்டு எடுத்து வந்து மயிலிடம் கொடுத்தவன்,
“நீயும் சாப்பிடு அந்த பிள்ளையும் சாப்புட வையி…!” என்று கூறி அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
அய்யனார் அறையில் இருந்து சென்ற நொடி தனது கையில் இருந்த மற்றொரு உணவு தட்டை மலரின் முன்பு நீட்டிய மயில்,
“இந்தாடி மலரு, எங்க ஊரு பன் ப்ரோட்டா சூப்பரா இருக்கும்…! இந்தா ட்ரை பண்ணி பாரு….!” என்று அந்த தட்டை மலரின் கையில் திணித்தாள்.
வெறுமனே அதனை தன் கை கொண்டு பற்றிய மலர் மீண்டும் அதே நிலையில் அமர்ந்து விட, அதனை கவனித்த மயிலோ ‘ம்ம்கூம் இவள சாப்பிட வச்சிட்டு நம்ம சாப்பிடலாம்னு பார்த்தா இன்னைக்கு நம்ம பட்டினியாக கிடக்கணும் போலயே…! அதுவரைக்கும் நம்ம வயிறு தாங்காது…!
எங்க ஆத்தா கிட்ட அடி வாங்குறதுக்காவது சாப்பிட்டு தெம்பா இருக்க வேணாம்…!’ என்று நினைத்துக் கொண்டவள் தன் தட்டில் உள்ள பன் புரோட்டாக்களை பொறுமையாக பிய்த்து போட்டு அருகில் இருந்த சால்னாவை ஊற்றி முக்கி நன்றாக குழப்பி ஒரு கட்டு கட்டி கொண்டிருந்தாள்.
முழுதாக ஐந்து புரோட்டாவை சாப்பிட்டு முடித்திருந்த மயில் அப்பொழுதும் ஒரு இடத்தை வெறித்துக் கொண்டு உணவினை சாப்பிடாமல் அமர்ந்திருக்கும் மலரை பார்த்தவள்,
இவள இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது என்று நினைத்துக் கொண்டு அவள் கையில் உள்ள தட்டை வாங்கி அதில் உள்ள புரோட்டாவை தானே பிடித்து சால்னாவை தொட்டு மலருக்கு ஓட்டினாள்.
அவள் ஊட்ட ஆரம்பிக்கும் பொழுதே வேண்டாம் என்று மலர் தடுக்க அவள் சொல் பேச்சைக் கேட்காமல் வம்படியாக அவளை மிரட்டி திட்டி என ஒரு புரோட்டாவை முழுதாக சாப்பிட வைத்திருந்தால் மயில்.
தன்னுடைய வீட்டில் இருந்து அடக்கப்பட்ட கோபத்தோடு வீட்டில் இருந்து வெளியேறி இருந்தான் கருப்பன்.
அதனைப் பார்த்த பொண்ணுத்தாயோ “ஐயா…கதிரு சாப்பிட்டு போயா…!” என்று அழைத்தார்.
அவர் அழைத்ததில் பற்றி எறிந்த கோபத்தில் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன்
“இல்லம்மா நீ சாப்பிடு நான் வரேன்..!” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி தன்னுடைய மண் வீட்டிற்கு வந்திருந்தான்.
போகும் தன் மகனையே ஆழ்ந்த பார்வை பார்த்த பொண்ணுத்தாயி மனதிற்குள்ளோ ‘அம்மா என்ன செஞ்சாலும் உன் நல்லதுக்கா தான் சாமி இருக்கும். நம்மளுக்கு அந்த மெட்ராஸ்காரப் புள்ள வேணாம்யா..!” என்று நினைத்துக் கொண்டார்.
மண் வீட்டிற்கு வந்த கருப்பன் தருமனுக்கு போனில் அழைத்தான். எதிர்முனையில் போனை அட்டென்ட் செய்த தர்மன்,
“சொல்றா மச்சான்…! என்ன புதுசா என் மேல பாசம் எல்லாம் வந்திருக்கு…! என்னைக்குமே எனக்கு கூப்பிட மாட்டியே இன்னைக்கு என்னமோ அதிசயமா கூப்பிட்டு இருக்க…?” என்று கேட்டான்.
அதற்கு கருப்பனோ “என் வாய் கெளராம ஒழுக்கமா வேகமா வீடு வந்து சேர்ற வழிய பாரு…!”என்றான் கடுப்பாக.
“ஏன் மச்சான் இவ்வளவு காட்டமா இருக்க…?”
“அந்த கேள்வி ம** எல்லாம் அங்கேயே இருந்து கேட்டுட்டு இருக்காம வீட்டுக்கு வா
சொல்றேன்”
“சரிடா மச்சான்… இப்ப தான் பஸ் கிளம்பி இருக்கு… ஒம்போதரை பஸ் வர லேட் ஆகும் போல…, வந்து சேர்ந்துட்றேன். எப்படியும் நைட்டு 10 மணிக்குள்ள வந்துருவேன்டா” என்று கூறி அழைப்பை துண்டித்து இருந்தான் தர்மன்.
தனது வீட்டில் படுத்திருந்த கருப்பன் நினைவு முழுவதும் மலர்விழியே நிறைந்திருந்தாள்.
தன் அம்மா பேசிய பேச்சு மலர்விழியை சென்று அடைந்திருக்கும்.., அவள் அதனை எப்படி ஏற்றுக் கொள்வாள்…? என்று நினைவு அவன் மனம் முழுவதும் வியாபித்து இருந்தது.
மணி இரவு 9. 15 என காட்டியது. அது கிராமம் என்பதால் அனைத்து மக்களும் எட்டு மணிக்குள்ளாகவே வீட்டிற்குள் நுழைந்து விடுவர், ஒன்பது மணி என்னும் பொழுது அனைவரும் உறங்கிப் போயிருந்தனர்.
வாங்கிய அடியின் விளைவாக மயிலும் ஒரு கால்பால் மாத்திரையை போட்டுவிட்டு உறங்கிவிட, கண்ணில் சிறிதளவும் உறக்கம் என்பது இல்லாமல் வெகு நேரம் படுத்து இருந்த மலர்விழிக்கு அமுதாவின் பேச்சு ஜீரணிக்க தக்க விஷயமாக இல்லை.
‘தான் வீட்டில் இருந்து எந்த சூழ்நிலையில் கிளம்பினோம்…! எந்த மனநிலையில் தான் அந்த முடிவை எடுத்தோம்…! என்பது தனக்குத் தெரியும்.
ஆனால் அவர்கள் வீட்டில் வந்த இருந்ததனால் தான் அவர்கள் இவ்வாறு பேசுவதற்கு வேண்டிய சூழ்நிலை என்பதும் அவளுக்கு புரிந்தது.
இனிமேலும் இங்கு இருந்து அவர்களுக்கு மன கஷ்டத்தை கொடுக்க வேண்டாம்…!’ என்று நினைத்தவளாக தனது பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டவள்,
உடலில் ஆங்காங்கே ரத்தம் கட்டி இருந்த காயங்களோடு உறங்கிக் கொண்டிருக்கும் தன் தோழியை பார்த்தவள்
‘என்னாலதான மயிலு உனக்கு இந்த நெலமை, என்ன மன்னிச்சிடு புள்ள, இனிமேலும் நான் இங்க இருந்தா அது சரியா வராது…!’ என்று நினைத்தவளாக அவளைப் பார்த்து தன்னால் இவளுக்கும் பிரச்சனை பாவம் எவ்ளோ அடி வாங்கிட்டா என்று நினைத்து ஒரு சொட்டு கண்ணீரை வெளியேற்றிவிட்டு தெளிந்த உறுதியான மனதோடு வீட்டில் இருந்து வெளியேறி இருந்தால் மலர்.
அவள் அந்த ஊரின் பேருந்து நிலையத்தில் காத்திருக்க, அங்கு அன்றைய நாளின் அந்த ஊருக்கு வரும் கடைசி பேருந்தாக வந்த நின்ற பேருந்தில் தர்மன் கீழிறங்கினான்.
அதில் ஏறுவதற்கு காத்திருந்த மலர்விழியை பார்த்தவன்
‘என்ன இந்த புள்ள இங்க நிக்குது…? அதுவும் இந்த நேரத்துல தனியாக வேற வந்திருக்கு..?’ என்று நினைத்தவனாக மலரின் அருகில் சென்றவன்,
“ஏய் என்ன புள்ள இந்த நேரத்தில் இங்கே வந்து இருக்க..?” என்று கேட்டான்.
தர்மன் தன்னை கண்டு கொண்டதும் பதறிய மலர்விழியோ “இல்லண்ணே அம்மாவுக்கு உடம்பு முடியலன்னு கேள்விப்பட்டேன். அதான் ஊருக்கு போறேன்..!” என்று கூறியவள் வலி நிறைந்த உள்ளம் கலங்கி கண்களில் இருந்து கண்ணீரும் எட்டிப் பார்க்க,
“அட என்னத்தா நீயி…! அம்மாவுக்கு உடம்பு முடியலன்னா அதுக்காக இப்பிடி நட்ட நடு ராத்திரிக்கா ஊரை விட்டு கிளம்புவ…!”
‘இந்த நேரத்துல எப்படி உன்னைய தனியா ஊருக்கு போக விட்டா இந்த கூறுகெட்ட சிறுக்கி…!’ என்று மயிலை பற்றி நினைத்தவன்
“ நாளைக்கு காலையில ஊருக்கு போய்க்கலாம். இப்ப வாத்தா நான் கொண்டு போய் மயிலு வீட்ல விட்டுட்டு போறேன்….!”என்று கூறினான் தர்மன்.
“இல்லண்ணே நான் அவங்க வீட்டுக்கு போகல….!” என்றால் மலர் வெளிவராத குரலில்,
“என்னம்மா சொல்ற…?” என்று அவள் கூறியது புரியாமல் கேட்டான் தர்மன்.
“அண்ணே இன்னைக்கு ரொம்ப பெரிய பிரச்சனை நடந்துருச்சுண்ணே, இதுக்கு அப்புறம் அவங்க வீட்டுக்குள்ளயும் இந்த ஊருக்குள்ளயும் நான் வர்றது சரியா வராதுண்ணே…! அது கருப்பு மாமாவுக்கும் தான் பிரச்சனையாக வரும்.
அதனால இனிமே நான் இங்க இருக்க மாட்டேண்ணே…! நான் ஊருக்கே போறேண்ணே…!” என்று கூறினாள் மலர்.
“ஏய் என்ன புள்ள நீயி கிறுக்குத்தனமா பேசிட்டு இருக்க…! ஊருக்குள்ள அப்படி என்ன நடந்துச்சு…?” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பஸ் கிளம்ப தயாராக இருக்க,
“அண்ணே பஸ் கெளம்புது நான் கெளம்புறேண்ணே…!” என்ற அவள் நகர,
“முதல்ல எனக்கு பதில சொல்லு அதுக்கப்புறம் நானே கூட உன்கூட வந்து ஒன்ன கொண்டு போய் விட்டுட்டு வரேன்…” என்றான் தர்மன்.
அதன் பிறகு பஸ்ஸும் கிளம்பி விட, “அண்ணா நான் உங்க கூட இங்க நிண்டு பேசினா பாக்குற யாரும் நம்ம ரெண்டு பேரும் தப்பா சொல்லிட மாட்டாங்களே…!” என்று ஊர் மக்களின் பேச்சுகளை அறிந்தவளாக பயந்தவாறு கேட்டாள் மலர்.
“ஏய் என்ன பேசிட்டு இருக்க, என் தங்கச்சி கூட நான் நிண்டு பேசும்போது எவன் என்ன சொல்லி புடுவியான்…? அப்பிடி எதாவது பேசுனா…, பேசுன நாக்கை இழுத்து வச்சு ஓட்ட நறுக்கி புட மாட்டேன்…!”
அவன் அவ்வாறு கூறவும் தனக்கும் கருப்பனுக்கும் இடையில் மலர்ந்த, இந்த இரண்டு நாள் கூட முழுமை பெறாத காதலைப் பற்றியும், அதனை ஊர் மக்கள் தவறாக திரித்து பேசியதும்,
கருப்பன் அம்மா வந்து அமுதாவிடம் மயிலை பெண் கேட்டது , அமுதாவின் பேச்சும், பின் மயில் தன் அம்மாவிடம் தர்மனை காதலிப்பதாக கூறியது என அனைத்தையும் அவனிடம் கூறினால் மலர்.
“என்னத்தா சொல்ற…! இன்னைக்கு ஒரு நாளைக்குள்ள இம்புட்டு விஷயமா நடந்து போச்சு…!”
‘அதனாலதான் அப்பத கருப்பன் போன போட்டு எப்ப வருவேன்னு அக்கறையா கேட்டானா…!’ என்று நினைத்தவனாக,
“ஊர் காட்டு பயலுக பொழுது போகாம அப்படித்தான் பேசுவாய்ங்க அதுக்கா போயி வயசுபுள்ள நீயி இந்த நேரத்துலயா தனியா ஊர விட்டு கிளம்புவ…!
நீ வாத்தா நான் இருக்கேன். இந்த அண்ணன் வீட்டில் தங்க வைக்கிறேன்…!” என்று கூறி மலர் வேண்டாம் என்று கூறியும் மலரை கைப்பிடித்து அழைத்துக் கொண்டு மீண்டும் ஊருக்குள் சென்றான் தர்மன்.
தூரத்திலிருந்தே மலர் மயிலின் வீட்டிலிருந்து கிளம்பியதையும், அவள் பேருந்து நிலையத்திற்கு வங்திருந்ததையும், அவளுடன் சேர்ந்து பயணித்து, ஒரு கட்டத்தில் அவளை கடத்திக் கொண்டு சென்று போய் ஆசை தீர அனுபவிக்கலாம்…! என்று காத்திருந்த ஒரு கொடூர மிருகத்திற்கு தர்மன் மலரை அழைத்து சென்றது அத்தனை கடுப்பாக இருந்தது.
கருப்பன் ஆட்டம் தொடரும்…
💝கருப்பனின் காரிகையவள்💝💝💝
error: Content is protected !!