Skip to content
Post Views: 3,680
கற்பனை 12
Advertisement
திருமணம் முடிந்து அடுத்தடுத்து வரும் சடங்குகளை பெரிய ஈடுபாடு என்று எதுவும் இல்லாமலே செய்து கொண்டிருந்தான் சாகேத். கடமைக்கு அனைவரும் தங்களையே பார்க்கிறார்கள் என்பதற்காகவே முகத்தை சிரித்தபடிக்கு வைத்திருக்கும் சாகேத்தின் மனம் அங்கிருந்த எவருக்கும் புரியவில்லை. ஜான்வி கூட அவன் சாதாணமாகிவிட்டான் என்று தான் நினைத்துக்கொண்டிருந்ததாள் .
Advertisement
இது தானே ஆரம்பம். ஜான்வியின் திருமணத்திற்கு வாழ்த்தவென்று விநீதன் கூட பெங்களூரிலிருந்து வந்திருந்தான். ஜான்வியின் கண்கள் அவனையும் குறிப்பெடுக்கத் தவறவில்லை. அன்று பாரில் ஜான்வி பேசிவிட்டு வந்தபிறகு வினீதனின் மனம் கொஞ்சமாய் சரியில்லை.இரண்டு முழு வருஷங்கள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள்.துக்கங்களை தவிர சுகங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த பிணைப்புக்காகத்தான் என்று மீண்டும் பலமுறை தனக்குத்தானே சொல்லிக்கொண்டே தான் அவன் வந்தது .
Advertisement
இங்கே ஜான்வி முழு சந்தோஷத்துடன் திருமண உறவில் லயித்திருப்பதைப் பாத்து விநீதன் குழம்பிப்போனான். அவளது சிரிப்பு விநீதனுக்குள் ஆச்சர்யத்துடன் ஒவ்வாமையையும் ஒருங்கே கொடுத்தது. தன்னை விடுத்து இவனிடம் என்ன இருக்கிறது என இந்தப் பெண் விரும்பித் திருமணம் செய்து கொள்கிறாள் என்ற கேள்வி அவனுள் எழவே, உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்தது போல் உணர்வு.
Advertisement
பொதுவாகவே, அன்பு பாசம் என்று பகிர்ந்து இறுதிவரை ஒன்றாக பயணம் செய்யவென நமக்கென ஒரு துணையை நமக்கே நமக்காக கொடுக்கும் உறவு அமைப்பு திருமணம் .இது தான் இந்தியாவின் கட்டமைப்பும் கூட. அப்படியிருக்கும் பொழுது வேறு எதையோ பிடித்துக்கொண்டு “வயிற்றுக்கு சோறு போல தேவைக்கு ஆண்பெண் உறவு “என்று பினாத்திக்கொண்டு திருமணமற்ற முறையற்ற வாழ்க்கை வாழும் பொழுது ஆணும் பெண்ணும் பல வருஷங்கள் சேர்ந்து வாழும் பொழுது ஒருவர் மேல் ஒருவருக்கு உரிமை உணர்வு தோன்றாமல் போகாது. இதில் ஆன்-பெண் இருவரில் எவருக்கு பாதிப்பு அதிகம் என்று எப்படி சொல்ல முடியும்?
திருமண உறவு தோல்வியில் முடியும்,என்னால் திருமணத்திற்க்கான பொறுப்புகளை சுமக்க முடியாது என்றெல்லாம் தோன்றும் மாய தோற்றத்தில் பயந்து ஈர்ப்பை விடமுடியாமல் பிடித்துக்கொண்டு சுற்றுவது லீ(லி )வ் இன் கலாச்சாரம் என்பேன் நான்.
எதுவோ ஒன்று உடைவது போல் விநீதனுக்கு ஏற்படும் உணர்வு என்னவென்று இப்போது புரிந்திருக்கும். அடுத்து ஜான்வி,அவள் விநீதனுடன் இருந்த நாட்கள்,அது அவள் சாகேத்துடன் கழிக்க விரும்பிய தருணங்கள்.ஆனாலும், சாகேத்துடனான திருமண உறவில் வெற்றி இருக்குமா என்ற சந்தேகத்திலும், எப்போதோ காதலித்தேன் ..இப்போது அவனுடன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று தான் அவள் இங்கு அமர்ந்திருக்கிறாளே தவிர, அவளும் கூட லிவ் இன் பற்றி இன்னொருமுறை யோசிக்க நேரிடலாம்..
திருமண சடங்குகள் முடிந்ததும் திருமண மண்டபத்திலேயே பதிவு செய்யவும் ஏற்பாடாகி இருந்தது. இருபக்க உறவுகளும் புடை சூழ மணமக்கள் தங்கள் திருமணத்தை பதிவும் செய்துவிட்டார்கள். மாலை நல்ல நேரம் பார்த்து மணமக்கள் சாகேத்தின் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்கள். நரேனும் சாருவும் சாகேத்தை விட்டு அகலவில்லை.
சாகேத்தை காலையிலிருந்து நரேன் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறன்.அவனது சோர்ந்த முகத்தை பார்த்தவனுக்கு இன்னமும் சாகேத் திருமகளின் நினைவில் இப்படி இருக்கிறானோ என்று தோன்றியது. ஜான்வி பற்றி அவன் நரேந்திரனிடம் எதுவம் சொல்லவில்லை. வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றிய பிறகு ஜான்வியை சாகேத் அறைக்கு செல்ல சொல்லிவிட்டார் ராஜம்.
அவளது ஆடைகள் அடங்கிய சூட்கேஸ் ஏற்கனவே மண்டபத்திலிருந்து சாகேத் அறைக்கு சென்று விட்டது. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை.ஜான்வியுடன் வந்திருந்த அவளது உறவினர்கள் காபி சாப்பிட்டுவிட்டு கிளம்பிப்போய் விட்டார்கள். இங்கே சாகேத் வீட்டினரின் நெருங்கிய உறவினர்கள்தான்.
அவர்களும் நாளை கிளம்பி விடுவார்கள். துரையின் வீடு மடிப்பாக்கத்தில் இருக்கிறது. நரேந்திரன் வீடும் அங்கேதான்.ஒரு ஹால் ,பெரிய அடுக்களை ,பூஜை அறை கீழே இரண்டு படுக்கை அறைகள்,மாடியில் ஒரு சிட் அவுட்டுடன் கூடிய இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட பங்களா தான். வீட்டின் காம்பவுண்ட் ஒட்டி துரை வகுப்புகள் எடுக்கவென்று தனியாக மூன்று அறைகள் கட்டி கொண்டார். அவரது பள்ளிக்கூடம் ஆதம்பாக்கத்தில் இருக்கிறது. ஆரம்பத்தில் கீழே இருக்கும் அறைகள் மட்டும் தான் இருந்தது .பிறகு ,வருமானம் கூடும்பொழுது துரை விஸ்தீரணம் செய்தார்.
இப்போது வந்திருக்கும் உறவுகளை கீழே இருக்கும் அறைகளில்தான் தங்க வைத்திருக்கிறார். மாடியில் புதுமண தம்பதி சென்று உடை மாற்றிக்கொண்டு வர, ராம் நகரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று வந்தார்கள்.
அன்று இரவு இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு ஆகியிருந்தது. சாகேத் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.
ஜான்வியும் இருந்த களைப்பில் எதையும் பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் தூங்கிப் போனாள் . சாகேத் தூங்கிக் கொண்டிருந்தவளை வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தவன் எப்போது என்று தெரியாமல் அவனும் உறங்கிப் போனான்.
திருமகள் அன்றுக் காலையில் தன் அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்ததே நிவாஸின் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது. அவன் மனதில் இவள் என்னை விரும்பி கல்யாணம் செய்துக்கொள்ளவில்லை. என்னிடம் இருக்கும் பணமும்,புற அந்தஸ்தும் இல்லை என்றால் சாகேத்தை ஒதுக்கியது போல தானே என்னையும் ஒதுக்கியிருப்பாள்?என்று தோன்றவே திருமகள் மீது கோவம் கூடியது.
நிவாஸ் சில விஷயங்களை மறந்து விட்டான். யாரென்றே முன்பின் தெரியாத ஒருவருக்கு பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணைத் தரும்பொழுது தன் பெண் நன்றாக வாழ மாப்பிள்ளை வீட்டில் வசதி வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்றுதானே பார்ப்பார்கள்? மணப் பெண்ணும் கூட தன் பெற்றோர் கூறுவனவற்றோடு தனது கனவுகளையும் இணைத்துத் தானே திருமணத்திற்கு சம்மதம் தருவாள்?
இதில் தவறு என்ன..பல காலங்கள் வாழ்ந்த பிறகுதான் புரிதல் வரும்.சில சமயங்களில் அதுவும் கூட கட்டாயம் இல்லை. இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டது.அவர்களது எதிர்காலம் என்று யோசித்து பிரிவை நாடாமல் அனுசரித்து வாழும் தம்பதியர் அதிகம் உண்டு நம் தேசத்தில்.
நிவாஸ் வீட்டில் மட்டும் என்ன,சாதாரண வீட்டு பிள்ளையை மாப்பிள்ளையாக தெரிவு செய்தார்களா..இல்லையே.. “என்கிட்ட பணத்துக்கு இப்போ பிரச்சனை இல்ல. அக்காவுக்கு நல்ல பெரிய இடமா பாருங்க. பின்னாடி பிரச்சனைன்னு அவ நம்ம வீட்டுக்கு வந்து அழக்கூடாது” என்று தன் ஆரம்பகால சேமிப்பை தமக்கையின் கல்யாணத்திற்கு என்று செலவழித்தவன் தான் நிவாஸும். அக்கா கல்யாணத்திற்கு நான் நிறைய செலவு செய்கிறேன் என்று கர்வம் கொண்டான்.
இன்று மனைவி என வரும்பொழுது நிறம் மாறித் தெரிவது ஏன்? பொதுவாகவே ஆண்கள் இப்படி இருக்கிறானா என்று தெரியவில்லை.இருப்பார்களா.இல்லை நம் நிவாஸ் தான்
இரவு வெளியில் உணவை முடித்துக்கொண்டு வீடு வந்தவனை சாப்பிடாமல் டைனிங் டேபிளில் கவிழ்ந்து படுத்து விசும்பிக் கொண்டிருந்த திருமகள் தான் வரவேற்றாள்.வாசல் க்ரில் கதெ மட்டும் பூட்டியிருந்தது. காலிங் பெல் சப்தத்தில் எழுந்து வந்தவளின் கண்கள் லேசாக சிவந்திருக்க நிவாஸுக்கு எரிச்சல் அதிகமானதுதான் மிச்சம்.
அவளிடம் எதுவும் பேசாமல் தங்கள் அறைக்கு சென்றுவிட்டான். அவனிடம் பேசும் தைரியம் திருவுக்கு இல்லை.உணவு சாப்பிட பிடிக்காமல் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு தானும் தங்கள் அறைக்கு சென்று படுத்துக்கொண்டாள்.
ஆனால் ,நிவாஸின் மனம் ஒரு நிலையில் இல்லை.அதற்கு திருமகள் அன்று இறையாகிப்போனாள் . ஆரம்பத்தில் திமிறியவள் பின்னர் அடங்கினாள் .அவள் அறியாமலேயே அவளது மொத்த சக்தியையும் ஒரே நாளில் உறிஞ்சி எடுத்துவிட்டான் நிவாஸ். ஆரம்பிக்கும் பொழுது அவள் மனதில் கொஞ்சம் பயமும்,நிவாஸுடனான மன வருத்தமும் `பெண்ணை சஞ்சலப் படுத்தினாலும், திருமணத்திற்கு பின்னான உறவை அவள் வெகுவாக எதிர்பார்த்திருந்தாள்தான்.
அதில் தவறு ஒன்றும் இல்லையே.. அவளது உடல் மொழியை புரிந்து கொண்ட நிவாஸிற்கு அவள் மீதான கோவம் எல்லை மீறியது. அவளை நேரடியாக வார்த்தைகளால் காயம் கொள்ளச் செய்யவில்லை. முதல் உறவில் அவள் உணர்ந்த வலி விடிகாலையில் முடியும் பொழுது அவள் உடல் முழுவதும் புணர்ச்சி விதியால் வரும் பரவசத்திற்கு பதிலாக நிவாஸ் மீதும், அந்த உறவின் மீதும் பயம் மிச்சமானது.
இரண்டு நாட்களுக்கு அவளால் எழ முடியவில்லை. லேசாக ஜுரம் வந்தது. நிவாஸ் முதலில் அலட்சியம் காண்பித்தாலும்,பிறகு அவளை நல்லவிதமாகவே நடத்தினான். அவளுக்கு நிவாஸை புரிந்து கொள்ளமுடியவில்லை.
நிவாஸின் கோவம் எப்படி இருக்கும் என்று புரிந்து கொண்டாள் . அவன் அவளிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. தண்டனை இதுதான் என்று நிர்ணயம் செய்து ,அதைக் கொடுத்தும் விட்டான்.
எவ்வளவோ யோசித்தும் திருமகளால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை .இந்த வாழ்க்கை தேவையா..இவனுடன் இருந்தால் நான் சந்தோஷமாக இருப்பேனா..என்ற கேள்வி அவள் மனதில் மீண்டும் மீண்டும் எதிரொலிக்க தன் மாமனாரிடம் அம்மா வீட்டுக்கு சென்று இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு நிவாஸ் வெளியே சென்றிருக்கும் நேரம் கிளம்பிவிட்டாள்.
அவருக்கும் நிலைமை சரியில்லை என்று புரிந்தது. அதனாலேயே “போயிட்டு வா..முடிஞ்சா நிவாசுகிட்ட சொல்லிடு“என்று முடித்து விட்டார். இரண்டு நாட்களாய் சாப்பிடக் கூட திருவால் ஹாலுக்கு வரமுடியாமல் அவர்கள் அறையில் இருப்பதை பார்த்தார்தானே!
திருவின் உடல் கொஞ்சம் சரியாகி விட்டது.அதனாலேயே அவள் பெற்றோரால் ஒண்ணும் கண்டுபிடிக்க முடியவில்லை.அவளும் வாயை திறந்து ஒன்றும் சொல்லவில்லை.அம்மாவிடம் “ரெண்டு மூணு நாள் இங்கேதான் மா இருப்பேன்” என்று சொன்னதை மாதத்தின் மூன்று நாட்களா ..என்று அமைதியாகிவிட்டார் கண்மணி.
தனது அறைக்குள் சென்று முடங்கிய திரு இரவு உணவுக்குத்தான் வெளியே வந்தாள் .நிவாஸ் அவளுக்கு இரண்டு முறை அழைத்தான் .அவள் எடுக்கவில்லை என்றதும் விட்டுவிட்டான். அவன் பெற்றோரும் அவனிடம் இதுபற்றி ஒன்றும் பேசவில்லை.
மாலையில் நரேந்திரனும் சாருவும் அன்யோன்யமாய் இருப்பதும், சாரு தன் அம்மா அப்பாவிடம் சகஜமாக பேசுவதும் திருவுக்கு நாராசமாக இருந்தது. நிவாஸ் பற்றி பெற்றவர்களிடம் பேசலாமா..என்று நினைத்திருந்தவள் வறட்டு ஈகோ காரணமாக அமைதியாக இருந்து விட்டாள் .
வீட்டில் எல்லோரும் இவளிடமும் சாஜமாகத்தான் இருந்தார்கள் .இவளுக்கு இதெல்லாம் நடிப்பாகத் தோன்றியது.
மூன்றாவது நாள் காலையில் குளித்துவிட்டு டிபன் சாப்பிட்டவள் தன் அப்பாவிடம் “இன்னிக்கு கிளம்பறேன்ப்பா..அவருக்கு என்னை விட்டு இருக்க முடியலையாம் ” என்றுவிட்டு சாருவின் முகத்தைப் பார்த்தாள் .சாரு கவனிக்கவில்லை தான்.ஆனால் நரேந்திரன் திருமகளை யோசனையுடன் பார்த்தான்.
அலுவலகம் கிளம்பும் முன் அவளது அறைக்குள் வந்தவன் “எல்லாம் ஓகேய் தானே திரு.ஏதோ சரியில்லாத மாதிரியே தோணுது. ஏதாவது பிரச்சனைன்னா நீ சொல்லாம எங்களுக்கு எப்படி தெரியும்?” என்ற அண்ணனை கண் இமைக்காமல் பார்த்தவள் “ம்ஹும்,ஒண்ணும் பிரச்சனை இல்ல.பரவாயில்ல.கல்யாணத்துக்கு அப்புறமாவும் நீ உன் தங்கையை பத்தி அக்கறையா பேசுறே “என்று முடித்துக் கொண்டாள் .
நரேந்திரனுக்கு ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது.“இவள் திருந்தாத ஜென்மம்.இவகிட்ட போய் கேட்டேன் பாரு“என்று மனதில் புலம்பியபடிக்கே சென்றுவிட்டான். ஆனாலும் அவன் மனம் எதுவோ சரியில்லை என்று அறுதியிட்டு சொன்னது.
மதியம் திரு நங்கநல்லுரில் சென்று சேரும்பொழுது நிவாஸ் வீட்டுக்கு அவனது அட்வகேட் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். நிவாஸ் இவள் உள்ளே நுழைந்ததை பார்த்தும் கண்டுகொள்ளவில்லை.
ஏதேதோ பேப்பர்களில் திருவின் கையெழுத்து வேண்டும் என்றுகொண்டிருந்தார் வந்தவர். அவர்கள் பேச்சின் சாராம்சத்தை கேட்டவள் உறைந்து போனாள் .
நிவாஸின் குரல் அவளை உலுக்கியது.
error: Content is protected !!