கற்பனை சுகமானதோ.! இல்லை, கற்பதுசுகமானதோ..32{நிறைவு பகுதி )
ராஜம் தனது வருங்காலமருமகளுக்கு தனது கழுத்தில் இருக்கும் தங்க செயினை எடுத்து போட்டு விட்டாள் . திருமகளை அழைத்துக்கொண்டு போய்தங்களது பங்களாவைசுற்றிக்காட்டினான்சாகேத்.கூடவே தங்களதுஅறையையும். உள்ளே நுழைந்தவளுக்கு தானாகவே முகம் விழுந்து விட்டது. அவள் மனதில் தானும்நிவாஸும் தனி தனிஅறைகளில் இருந்தது ஞாபகம் வந்தது.
Advertisement
அவளை புரிந்து கொண்டவன்,”இப்படி ஒவொருவிஷயத்துக்கும்நிவாஸைமனசுல கொண்டு வந்தா,காலம் முழுக்க நா ப்ரம்மச்சாரியா கழிக்க வேண்டியது தான். “என்று விளையாட்டு போல் சொன்னாலும் அவனது கண்களில் கண்டிப்பு இருந்தது. அதைப் புரிந்து கொண்டவளாக,”என்னோடவார்ட்ரோப் எங்கே?’என்று பேச்சை மாற்றினாள் .அவளை மெச்சுதலாகபார்த்தவன்அங்கே இருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் அவளுக்கு சொன்னான். ஷோ கேஸ் போல் இருந்த ஒரு அலமாரி முழுவதும் இவன் வேலைக்கு சென்று கொண்டிருந்த பொழுது வாங்கிய விருதுகளும்கோப்பைகளும் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அறை முழுவதும் சுகந்தமான நறுமணம். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு . படிக்கும் காலத்தில் நரேன்சாகேத்தை பற்றி புகழ்ந்து கொண்டே இருப்பான், தனது அறையையும்நரேன் நன்றாக வைத்திருக்க சாகேத்தும் ஒரு காரணம் தான்.
திருமகள் அவன்வாங்கியிருக்கும்விருதுகளை பார்த்தவாறே,” இப்போ எங்கே வேலை பாக்கறீங்கசாகேத்? நீங்க பெங்களூருலஇருந்தீங்க தெரியும்?இப்போ… நாம கல்யாணத்துக்கு பிறகு பெங்களூருபோகணுமா? இப்போது வீட்டுலேந்துலாகின்பண்றீங்களா?”என்று கேள்விகளை அவன் முன்னே அடுக்கினாள் . சாகேத்குழம்பித்தான் போனான்,இவள் தெரிந்து தான் கேட்கிறாளா..இல்லை இவளுக்கு என்னை பற்றி ஒன்றுமே தெரியாதா என்று?
Advertisement
Advertisement
அவன் மனதில் லேசாக ஒரு விளையாட்டு பாவம். “ம்ம் இங்கே சென்னைலயே வேலை பாக்குறேன்.ஒருபள்ளிக்கூடத்துலமேனேஜ்மெண்ட் ல . கொஞ்சம் ட்ரைனிங்கிடைச்சாஅப்பாவோடஸ்கூலை எடுத்து நடத்தவும்யோசனை இருக்கு“என்றவனின் குரலில் இருக்கும் கேலியை அவள் உணரவில்லை.
“ம்ம்,நல்ல ஐடியா தான். சாருக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ்ஸ்சா இருக்கும்“என்றுவிட்டாள் . சாகேத்துக்கு இன்னமும் உற்சாகம் கொண்டது மனது. திருவின் இந்த பரிமாணம் ஏதோ புரியாத சிறு குழந்தை போல் இருந்தது. இருவரும் மற்ற அறைகளையும் சுற்றி பார்த்தார்கள்.
Advertisement
நரேனிடம் , “நல்ல நாள் பார்த்து உங்க வீட்டுக்கு வரோம்நரேன்.பூவச்சுடலாம்.சீக்கிரம்கல்யாணத்தையும்வச்சுக்கலாம்.உங்கஅப்பாகிட்டசொல்லிடு.நாங்களும் போன் பண்றோம்என்றுவிட்டார்துரை. அவர் மனதில் வேறு தடங்கல்கள்வருவதற்குள் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்றுதோன்றியது.
திருமகள் கிளம்புவதற்கும் ,ஜான்வியிடமிருந்துஅலைபேசி அழைப்பு வருவதற்கும் சரியாக இருந்தது.மொபைல்போனின்திரையில்ஜான்வியின் பெயரை கண்டவளுக்கு மனது கஷ்டமாக இருந்தது. என்னதான்,அவளுக்கு திருமணம் முடிந்து விட்டது என்றாலும்,அவளுடன் இன்னமும் தொடர்பில்இருக்கிறாரா..என்று அவள் மனதில் சிறு கிலேசம்.
அவளை பார்த்துக்கொண்டே ஜான்வியிடம் பேசி முடித்த சாகேத்நரேந்திரனிடம்,”நரேன்,உன்னோட தங்கையைகூட்டிட்டு ஒரு ரவுண்டுபோய்ட்டு வர உன்னோட பெர்மிஷன்கிடைக்குமா..பத்திரமாவீட்டுலகூட்டிட்டு வந்து விட்டுடறேன்” என்றான்.வாயளவில் அவன் அனுமதி கேட்டிருந்தாலும்,இடது கையில் காரின் சாவியைஎடுத்துக்கொண்டவன்,வலது கையில் திருவின் கையை பிடித்திருந்தான்.சிரித்துக்கொண்டே நரேந்திரன்,”இப்போ நீ பர்மிஷன்கேக்கறியா..இல்லே தகவல் சொல்றியா மச்சான்..“என்று சிரித்து விட்டான்.
வெளியே காரின் அருகில் வரும்பொழுதுதான் அதை ஊன்றி கவனித்ததுபெண்..காரின் விலை அவளுக்கு நன்றாகத்தெரியும்.அதோடு அவளது கண்கள் காரின்எண்ணை பார்த்து திகைத்து விழித்தது.இதே எண் கொண்ட கார் தானே அவர்களது பள்ளியில்நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்? அப்படியென்றால் சாகேத் நம் பள்ளியிலா வேலை பார்க்கிறார்.?இந்தக் காரை வாங்கவேண்டுமென்றால் பள்ளியில் வேலை பார்த்தால் போதாதே! பள்ளியைநடத்துபவராக அல்லவா இருக்க வேண்டும்?என்று அவளுக்குள் எண்ணங்கள் அவளது முக பாவத்தை வைத்து அவள் என்ன நினைக்கிறாள் என்று தெரிந்து கொண்டவன் வாயை திறந்து ஒன்றும் சொன்னான் இல்லை.
சாகேத் பெண்ணை கூட்டிக்கொண்டு ஏர்போர்ட் அருகில் இருக்கும் மூன்று நட்சத்திர அந்தஸ்துள்ள ஒரு ஹோட்டலுக்குள்நுழைந்தான்.அங்கே இருந்த வரவேற்பாளரிடம்கேட்டுக்கொண்டு இருவரும்லிப்ட் வழியாக இரண்டாம் தளத்தில் வந்து சேர்ந்தார்கள் .கதவை லேசாக தட்டியவுடன் வந்து திறந்ததுவினீதன்தான். சாகேத்தைபார்த்தவுடன்தாவிக்கட்டிக்கொண்டான்.திருமகள்யாரென்றுதெரியாவிட்டாலும்சாகேத்தின்நண்பராக இருக்க கூடும் என்று நினைத்தாள் .
உள்ளறையில் பெண்ணின் குரல் கேட்டது. அந்த பெண் தனது குழந்தைகளுடன்மல்லுக்கட்டிக்கொண்டிருந்தாள் . விநீதன்இருவரையும் உட்கார வைத்துவிட்டு அலைபேசியில் அவர்களுக்கு சாப்பிட ஆர்டர் செய்துவிட்டு,குழந்தைகளை சமாளிக்க உள்ளே ஓடினான். சற்று நேரத்தில் குழந்தைகளுடன்ஜான்வியை அழைத்துக்கொண்டு அந்த அறையின் வரவேற்பு அறைக்குள் நுழைந்தான் விநீதன். இப்போது ஜான்விசாகேத்தைதாவி கட்டிக்கொண்டாள்.
திருமகளுக்குகண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. ஜான்விதான் விபரம் சொன்னாள் .“வினிக்கு அங்கே யூஎஸ் ல வேலை கன்போர்ம்ஆகிருச்சு. என்னோடபேரன்ட்ஸ் கொஞ்சம் மனஸு இறங்கி வந்திருக்காங்க. நா அங்கே போய் செட்டில்ஆகிட்டுஅவங்களை கூப்பிட்டு வச்சுக்கணும்.இவரோடவீட்டுல இன்னும் எங்களை ஏத்துக்கல.சாகேத் தான் எங்களுக்கு தைர்யம்கொடுத்திருக்காரு .அண்ட்யுஆர்லக்கி,இவ்ளோ வருஷமா காதலை மனசுலவச்சுக்கிட்டு காத்திருக்கும் நபர் வாழ்க்கை துணையா கிடைக்கிறது ..சொன்னா புரியாது திரு” என்றவளின் கண்களில் துளிகூடவெறுப்போகோவமோஇல்லை.சாகேத்துக்கு காதல் கைகூடி வருகிறது என்ற சந்தோசம் மட்டுமே” .
கொஞ்சநேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்து விட்டு இருவரும் கிளம்பினார்கள்.திருவின் மனதில் ஏதேதோ எண்ணங்கள்.சரியாக சொல்லவேண்டும் என்றால்,உணர்ச்சிக்குழம்பாக இருந்தாள் பெண். சாகேத் அவளிடம் எதுவும் பேசவில்லை. அவளை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போனான். இருவரும் ஒன்றாக கோவிலுக்கு செல்வதும் சாமி கும்பிடுவதும் திரு மனதில்,இவை வழக்கமாக நடப்பதுதான் என்பது போன்ற தோற்றத்தைகொடுத்தது. இயல்பாக பொருந்தி இருப்பதுபோல் உணர்ந்தாள்.
அவளுக்கானகுங்குமத்தைசாகேத் தானே அவளது நெற்றியில் இட்டுவிட்டான் .அவள் கண்களில் இருந்து இரண்டு நீர்மணிகள் கீழே விழுந்தது. இவ்வளவு காதலை தன்னால் தாங்க முடியுமா, தான் அதற்க்குதகுதியானவளா..என்று தன் முன்னே நின்று கொண்டிருந்த தெய்வத்திடமே கேட்டாள் . சாமி கும்பிட்டு அவளை பீச்சுக்கு கூட்டி சென்றான். இருவரும் கொஞ்ச நேரம் கடலை கண் மூடாமல்பார்த்துக்கொண்டிருந்தார்கள். உணர்வுகளின் தாக்கம் தாங்க முடியாமல் திருமகள் சாகேத்தின் நெஞ்சில் முகம் புதைத்தாள். அவன் சட்டை அவள் கண்ணீரில்ஈரமாவதை உணர்ந்து கொண்டவன் அவளிடம் வார்த்தைகள் எதுவும் பேசவில்லை.தலையைகோதிக்கொடுத்தான். வெகுநேரம்அழுதவள் தானே கொஞ்சம் சமாதானம் ஆனாள் . “வீட்டுல சீக்கிரம் கல்யாணத்துக்கு நாள் பாக்கசொல்லணும் திரு” என்றான் சாகேத்.அவளும்ஆமோதிப்பாக தலையை ஆட்டினாள்.
இரவு திருமகளை வீட்டில் விட்டு ,தானும் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்சாகேத்.அவன் மனம் முழுவதும் நிறைவு. ஆரம்பத்தில் வேறு யாரையோ திருமணம் செய்துகொண்டுவாழ்வதற்கு தெரிந்த சாகேத் பரவாயில்லை என்றுதான் திரு சம்மதம் சொல்லி இருந்தாள் .ஜான்வி பற்றிய எண்ணங்களும் அவளுக்குள் அரித்தது.வாய்விட்டு கேட்கவும் தயக்கம்.
அவளது ஒவொருஅசைவையும்படைத்தவனாகசாகேத் அவளது தயக்கங்களை விலக்கி ,மனப்பூர்வமாக அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தான். வீட்டுக்குள் செல்லும் முன் அவள் சாகேத்திடம், சீக்கிரம் என்னை உங்களோடகூட்டிட்டுபோய்டுங்கசாகேத்.நா யாருக்கும் பாரமா இருக்க விரும்பலஎன்றுவிட்டுதான்சென்றதே!
அந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று சாகேத் வீட்டிலிருந்து வந்து பூ வைத்துவிட்டு சென்றார்கள். அடுத்த வாரம் ஞாயிறு அன்று இருவருக்கும் திருமணம்முதலில் சங்கத்தின் வீட்டில் வைத்துக்கொள்ள விருப்பம் சொன்னவன்,பிறகு துரையிடம் ,”நம்மபள்ளிக்கூடத்துல கல்யாணத்தை வச்சுக்கலாம்ப்பா” என்றான்.
அவன் சொன்னபடிக்கு பள்ளியில் திருமணம் ஏற்பாடாகிஇருந்தது.திருமகளுக்குஆச்சர்யம்தான்.”இவங்கபர்சோனால்விஷயம்.அதுக்கு கூட பள்ளிக்கூடம் குடுப்பங்களா“என்று.திருமணநிகழ்வுக்குஇரண்டு வீட்டினரின் நெருங்கிய சொந்தங்களும், பள்ளியில் வேலை பார்ப்பவர்களும் கலந்து கொண்டார்கள். ஜான்வியின்பெற்றவர்களும்வந்திருந்தார்கள்.அவர்கள் மனதில் எந்த வேறுபாடும் இல்லை. ‘நல்ல பையன்,நல்லாவாழணும்‘ என்பது மட்டுமே! ஜான்விக்கு தங்க நெக்லஸ் பரிசாக கொடுத்துவிட்டு போனார்கள்.
சாகேத் தான் ஜான்வியின் தரப்பு நியாயங்களை அவர்களுக்கு எடுத்து சொன்னான். “அவளுக்கு இப்போ ரெண்டு குழந்தைகள் ஆகிடுச்சு.தப்பு சரி எல்லாம் பேச வேணாம்.அவளுக்குஏத்த ,பிடிச்ச வாழ்க்கையை தெரிவு செஞ்சுநல்லாவாழறா .உங்களுக்கும் பொண்ணு -மாப்பிள்ளை பேரபசங்கவேணும்.அவங்களுக்கும்பெத்தவங்கசப்போர்ட் வேணும் ” என்று அவர்களை நிதானமாய் கரைத்து ஜான்வியைஏற்றுக்கொள்ளவைத்திருக்கிறான். ஏதோ அவனால் முடிந்த பரிகாரம்(?).அவர்களும் வயதான காலத்தில் நிதர்சனத்தை ஒப்புக் கொண்டு விட்டார்கள். வேறு வழியும் இல்லை.
திருமணம் முடியும் பொழுது மற்றவர்கள் பேசியதை வைத்துதான்,இந்த பள்ளிகள்இவனுடையது என்று அவளுக்கு புரிந்தது. எப்போதுமே நம் திருமகள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள வெகு தாமதமாவதை நாமும் பார்த்துக்கொண்டே இருக்கிறோமே!
அருகே இருந்த கணவனிடம்,”எங்க..இது உங்கஸ்கூலா?என்று கேட்டுஉறுதி செய்து கொண்டாள் .கூடவே உங்கரூம்எங்கே இருக்கு ?என்று கேட்டவளிடம் ‘அதோ அங்கே ‘என்று காய் காட்டியவனிடம் “அப்போ,நா வெளியே வரும்பொழுது சில சமயம் யாரோ என்னையேபாக்குறபீல்வருமே! அந்த பார்வை பார்த்தது நீங்க தானா?என்றாள் மெல்லிய அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் .சாகேத்துக்குபுரையேற,அருகில் குறும்பு பார்வையுடன் தலையை தட்டி விட்டான் நரேந்திரன்.
வீட்டின் பெரியவர்களை விட நரேன்-சாருவுக்கு மனதில் அளவுக்குமீறிய சந்தோஷமும்நிறைவும் இருந்தது. சாம்பசிவம்திருவிடம் ,”நீ கல்யாணம் செஞ்சுநல்லாவாழணும்னு தான் அன்னிக்கு ரொம்ப பேசிட்டேன்திரு.மன்னிசுக்கோ ” என்றார் வருத்ததுடன். திருவுக்கும்புரிகிறது தான்.
“இல்லப்பா..அன்னிக்கு ரொம்ப கஷ்டமாஇருந்தது.பட் ,நீங்க சொன்னது நிஜம் தானே!எனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சுக்கறதுலதப்பில்லையேப்பா..அதுவும் வீட்டுல நீங்க எல்லோரும் சப்போர்ட்பண்ணும் பொழுது ..ப்ச்..விடுங்கப்பா“என்று அவரை தேற்றினாள். தனக்கு பிரச்சனை என்றவுடன் அப்பாவுக்கு லேசான மாரடைப்பு வருவது என்றால் அவருக்கு தன் மீதான பாசம் எவ்வளவு இருந்திருக்க வேண்டும்” என்று திருவுக்கும் புரிந்தது.
மதியம் இருவரும் சாகேத்தின் வீட்டுக்கு வந்து பால்பழம் சாப்பிட்டு ,திருவின் வீட்டுக்கு சென்றுவிட்டு வந்தது எண்டு அன்றைய தினம் வேகமாக சென்றது. இரவு நெருங்க திருவுக்குள்பயம்.நிவாஸுடனான நினைவுகளில் ஆக்கிரமிப்பு.வேறு வழியில்லை.சாகேத் மீது நம்பிக்கை வைத்து சென்று தானே ஆகவேண்டும் என்று தன்னை தேற்றிக்கொண்டாள். முதலிரவு சாகேத்தின் வீட்டில் என்று ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அவனது அறை ,அவனது வாசத்துடன்நிறைந்திருக்க,மெல்ல அவனது அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள் திரு. நேராகவேசாகேத் சொல்லிவிட்டான்,” நாமபண்ணிக்கிட்டது நிஜ கல்யாணம் திரு.இப்படியேஇருக்க முடியாது. நாமகொஞ்சமாவது பழைய விஷயங்களில் இருந்து வெளியே வந்துதான்ஆகணும்.அதுக்கு முயற்சி செய் “என்று . புரிந்தவளாக அவளும் சரி என்றாள் .
நாட்கள் நகர்ந்தது. சாகேத் மீது அளவு கடந்த நம்பிக்கை வந்து விட்டிருந்ததுபெண்ணுக்கு.இவனை முதலிலேயே திருமணம் செய்து கொண்டிருக்கலாம்என்றுகூட தோன்றியது. தன்னுடன் பள்ளிக்கு அழைத்து செல்வான்.மதியம் அவளே வீட்டுக்கு வந்துவிடுவாள்.வீட்டில்பெற்றவர்களுடனும்,திருவுடனும் மாலை நேரத்தை கழிப்பான்சாகேத். அவனுடனான பேச்சும் சிரிப்பும் அவளுக்குள் போதை கொடுத்தது. நிவாஸ் என்ற ஒருவனை அவள் மறந்து விட்டாள் . குழந்தைகளின் ஞாபகத்தை ,ஏக்கத்தை பள்ளியில் தீர்த்துக்கொள்வாள்.
திருமணம் முடிந்த இந்த இரண்டு வருஷங்களில்சாகேத் மீது பைத்தியம் ஆகிவிட்டாள் திரு. அவனில்லாமல் தன்னால் ஒரு பொழுதை கூட கழிக்க முடியாது என்னும் அளவிற்கு சாகேத் அவள் மனதில் நங்கூரம் இட்டிருந்தான் . நடுவில் ஜான்வியின் பெற்றவர்கள் வந்து போனார்கள்.இனிமேல்,பெண்ணுடன்அமெரிக்காவில்இருந்துவிடலாம் என்று யோசிப்பதாக சொல்லி சென்றார்கள்.
நடந்த நிகழ்வுகள்சாகேத் மீது திருவுக்கு அதீத நம்பிக்கையையும்,காதலையும் ஏற்படுத்தி இருக்க,அவளால் தனது காதலை மறைக்க முடியாமல்,அவனை பார்க்கும் பார்வை கூட அவன் மீதான காதலை சொல்லியது. அதே சமயம் ஏதோ வார்த்தைகளற்ற உணர்வும் ஏக்கமும் அவளை கொன்று தின்றது.அவளுக்கு அது என்ன என்று புரியவில்லை.
சாகேத்தின்நிலை..இன்னும்மோசம்.திரு தன்னை காதலிக்கிறாள் என்று தெரியும். இருவரும் வீட்டில் இருக்கும் சமயங்களில் ஓட்டிக்கொண்டேதிரிவது இரு வீட்டிலும் பிரசித்தி. அருகில் இருக்கும் பெற்றவர்கள் வீட்டுக்கு கூட திரு சாகேத் துணை இல்லாமல் செல்ல மாட்டாள்.இருவரும்ஒன்றாகத் தான் தூங்குகிறார்கள் நிறைய நேரங்களில் திரு சாகேத் மீது காலை போட்டுக்கொண்டும்அவனை இறுக்கிக்கொண்டும்தூங்குவாள்.சாகேத்தும்அவளிடம் முகம் புதைத்துக்கொண்டு தூங்குவான். காதலிக்கும் பெண்..தனக்கே சொந்தமாக கிடைத்தும் அவளிடம் நெருங்க அவனுக்கு தயக்கம்.தன்னை பற்றி எப்படி யோசிப்பாளோ..என்று.அவளது காதல் பார்வையில் அவனது நரம்புகளும் அவனை ஆட்டிப்படைக்கநொந்து போனான் ஹீரோ.
எப்படி நிகழ்ந்தது என்று இருவருக்கும்தெரியாது.திருமணம் முடிந்து மூன்று வருஷங்கள் ஆனது திருவுக்குதாம்பத்தியம் பற்றிய எண்ணங்கள் மாற. எந்த நிலையிலும் தன் நிலை இழக்காமல் பெண்ணை போற்றும் அந்த ஆணிடம் பெண்மை தன்னை சரணாகதி செய்து கொண்டது.’அவனை நம்பாமல் வேறு யாரை நம்ப போகிறேன் ‘என்ற அவளது கேள்விக்கும்., வார்த்தைகள் இல்லா தயக்கம் கொண்ட உணர்வுகளுக்கு இருவரும் வழி செய்து கொடுத்து விட்டார்கள்.
நிவாஸ் செய்த எந்த கொடுமைகளும்சாகேத்திடம் இல்லை. அவளது கண்ணசைவில் தனது காதலை அவளுக்கு புரிய செய்தான். கலவி மீதான வெறுப்பு மறைந்து,கணவனிடம் காதலை வெளிப்படுத்தும் வழியில் இதுவும் ஒன்று என புரிந்தவளாக அவனுடன் லயித்தாள் .
காதலின் பரிசாக திருமணம் முடிந்த நான்காம்ஆண்டில் ஒரு மகவும் ,ஏழாம்ஆண்டில் ஒரு மகவும் பிறந்து அவர்களின் காதலை சொன்னது. குழந்தை பேறுக்கென கூட திரு பிறந்தகம் செல்லவில்லை.அவளால்சாகேத் இல்லாமல் ஒரு நொடி கூட முடியாது.கண்மணிசாம்பசிவம் இருவரும்சாகேத்தின் வீட்டில் வந்து தங்கித்தான் பிரசவம் பார்த்தார்கள்.
நிவாஸ் தனது குழந்தைகளைகுன்னூரில் உள்ள பிரபல பள்ளியில் தான் படிக்க வைக்கிறான். குழந்தைகள் அமெரிக்கநாகரீகத்தில்வளர்வதில் அவனுக்கு விருப்பம் இல்லை.அதே போல் அங்கிருந்து இங்கே இந்தியா வரவும் அவனால் இயலாது.நிரூபன் ஒரு சாலை விபத்தில்கால்களை இழந்தவன், மன நிலை பாதிக்கப் பட்டு ,நிவாஸின் குழந்தைகள் பெயரில் சொத்துக்களையும் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டான்.
நிவாஸால் அவனது இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. வேறு யாரையும் தனது வாழ்க்கையில் அனுமதிக்கும் எண்ணமும் அவனிடம் இல்லை. தான் உண்டு, வேலை உண்டு என்று மாறிப்போனான்.எப்போதாவதுதிருவின்ஞாபகங்கள் வரும். நிவாஸ் தன் அக்கா மூலம் திருவின் இரண்டாம் திருமணம் பற்றியும் அவளுக்கு குழந்தைகள் இருப்பதை பற்றியும் தெரிந்துகொண்டான் .அந்த செய்திகள் அவனுக்குள் எந்த தாக்கத்தையும்கொடுக்கவில்லை.
திருவுக்கு தான் பெற்ற குழந்தைகள் நினைவு வந்தாலும்,கணவன் மீதான காதலும்,குழந்தைகள் மீதான பாசமும் அவளை நின்று யோசிக்க அனுமதிக்கவில்லை.
வாழ்க்கை வெறும் கற்பனை விளையாட்டு இல்லை. ஒவ்வொரு நிமிஷமும் நமக்கு நிறைய பாடங்களைகற்றுக்கொடுக்கிறது.பலபாடங்கள் வலியை கொடுத்தாலும்,அவை சுகமானது தான்.